கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அகநக நட்பது நட்பு - 9

ரஞ்சனி அந்த வருடம் பத்தாவதுப் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்தினாள். ராகவ் , மஹியின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. பொது தேர்வு வர , ரஞ்சனியுடன் சுமதி உறுதுணையாக இருந்தார். பரிட்சையும் நல்ல முறையில் நடந்தேறியது. தேர்வு முடிவுகள் வெளியாக , ரஞ்சனி நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தது அனைவருக்குமே மகிழ்ச்சி அளித்தது. ராஜனிடம் வந்த ரஞ்சு

" அப்பா.. "

" சொல்லு ரஞ்சு "

" நா சையின்ஸ் க்ரூப் எடுக்கலான்னு இருக்கேன் "

" நல்ல விஷயம் தா மா. உனக்கு என்ன படிக்கனுமோ படி "

" தேங்க்ஸ் பா "

" என்னால காசு குடுத்துலாம் சீட் வாங்க முடியாது மா . ஃபீஸ் எவ்ளோன்னாலும் கட்டிடலாம். "

" புரியுது பா. மெடிக்கல் சீட் கவர்ம்வ்ன்ட் சீட் கிடைச்சா படிக்குறேன். இல்லைன்னா விட்டுடலாம் "

" சரி மா.. ஏன் சொல்றேன்னா இன்னைக்கி காசு குடுத்து சீட்டு வாங்கிடலாம்... ஆனா நாளைக்கு நீ படிச்சி வெளிய வந்த அப்றம் மக்களுக்கு சேவை பண்ற மனப்பான்மை வராது மா. போட்ட காச எடுக்கனும்னு தா தோனும். அதுவே குறிக்கோள் ஆகிடும் "

" சரிதான் பா " இதை ராகவ் , மஹியும் வாயில் ரசகுல்லாவை அமுக்கிய வண்ணம் கேட்டுக்கொண்டிருந்தனர்.

" உங்க மூணு பேருக்குமே சொல்றேன் கண்ணுங்களா . என்ன படிக்கனும்னு தோணுதோ படிங்க. என்ன செய்ய தோணுதோசெய்ங்க . அப்பா அம்மா இருக்கோம் உங்கள சப்போர்ட் பண்ண "

" தேங்க்ஸ் பா.." என்றனர் ராகவும் ரஞ்சுவும். மஹி சுமதியிடம் போய் ஒட்டிக்கொண்டாள். ராஜனிடம் ஓரளவு பேசினாலும் அப்பா என கூற மனம் வரவில்லை அவளுக்கு. வருடங்கள் உருண்டோட ஏழாம் வகுப்பில் இருவரும், பனிரெண்டாம் வகுப்பில் ரஞ்சுவும் கால் பதித்தனர். இவர்களது பழைய பள்ளியில் ஐந்தாவது வரை தான் இருந்ததால் ரஞ்சு படிக்கும் மேல்நிலை பள்ளியில் ஆறாவது முதல் படிக்கின்றனர். இப்போது ஏழாவது வந்துவிட்ட நிலையில் ராகவ் படு வாலாக மாறியிருந்தான். இங்கும் அவனுக்கென்று கூட்டாளிகள் அமைய , உண்மையாகவே தாதாவைபோல் கெத்து காட்டி திரிந்து கொண்டிருந்தான். அவன் பள்ளியில் தகவல் பலகையில் இவன் கூட்டத்திற்கு முக்கிய இடம் அளித்து அனைவரின் பெயரையும் கொட்டை எழுத்தில் எழுதியிருந்தனர்,
" அடங்காத எருமைகள் " என்னும் தலைப்பின் கீழ். அவ்வளவு சேட்டை , அவ்வளவு லூட்டி. காம்பஸ்ஸால் குத்துவது, மண்டையை உடைப்பது, முட்டியை உடைப்பது என சகஜமாகிப்போனது.
அப்படித்தான் ஒரு முறை சக மாணவன் ஒருவனுக்கு மண்டையில் அடிபட்டு ரத்தம் வர , இதற்கு மேல் பொருக்கமுடியாது என பள்ளியில் இருந்து ராஜனை வரச்சொல்லி அழைப்பு விடுத்தனர். அன்று மாலை

" ஹாய் பா..."

" ஹாய் ராகவ்.. "

" சாப்ட என்ன வாங்கிட்டு வந்த "

" இன்னிக்கு கார பொரி "

" ஹை.. குடுகுடு " என அனைவருடனும் அமர்ந்தான் ராகவ். மஹி ராகவிடம் எதோ அவ்வவப்போது சைகை காட்ட

" என்ன மஹி " - சுமதி

" ஒன்னும் இல்ல மா . ராகவே சொல்லுவான். "

" என்ன விஷயம் ராகவ் "

" இருமா. அப்பாவும் வந்துடட்டும் "

" என்ன என் பேரு வருது..."

" அப்பா.. நாளைக்கு உன்ன ஸ்சூல்ல வர சொல்லிருக்காங்க "

" என்ன விஷயம் "

" ஸ்கூல்ல சண்டை போடும் போது ஒரு பையனுக்கு தலைல அடி பட்டுடுச்சு. அதான் "

" நீ செஞ்சியா ராகவ் "

" ஆமாபா.. "

" சரி நா நாளைக்கு வரேன் "

ராகவிற்கு ஏனோ மனம் சங்கடமாக இருந்தது. அப்பா இரண்டு அடி அடித்திருந்தால் கூட தேவலாம் என மனம் கூறியது. அடுத்த நாள் தலைமை ஆசிரியர் முன்னால் அமர்ந்திருந்தார் ராஜன்.

" வணக்கம் சார் "

" வணக்கம் வணக்கம்.. சார் உங்க பையன்னுக்கு டிசி குடுக்குறோம். வாங்கிட்டு கூட்டிட்டு போங்க அவன "
" ஏன் சார் "

" அந்த பையன் மண்டைய ஒடச்சி நாலு தையல் போட்டுருக்கு "

" ஓ.. "


" அந்த பொண்ணு மஹல்சாயும் இவன் கூட தானே இருக்கா. அவ இந்த மாறி செய்யறாளா. "

" சார். நா சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. எதுக்கு பிள்ளைகள ஒப்பிடறீங்க. மஹி வேற , ராகவ் வேற. நீங்க இவன பத்தி மட்டும் பேசுங்க "

" என்ன சார் எனக்கே அட்வைசா "

" இது அட்வைஸ் இல்ல சார். அவரவர்க்குன்னு ஒரு தனித்துவம் இருக்கும். யாரும் யார மாறியும் இருக்க முடியாது. இப்போ நீங்க என்னய மாறியோ , இல்ல நா உங்களமாறியோ இருந்தா எப்டி இருக்கும். யோசிச்சு பாருங்க. அதுக்காக சொன்னேன் "

" சரி சார். இன்னொரு வாட்டி இந்த மாறி செஞ்சான்னா நிச்சயம் டீ சி தான் "

" சரி சார். நா அவனுக்கு புரிய வெக்குறேன் . வரேன் சார் " என விடை பெற்றார்.

மாலை ராஜன் வந்தும் ஏதோ ஒரு இறுக்கம் நிலவ , அது கலைக்க அவர்

" ராகவ் "

" என்ன பா "

" இன்னிக்கு என்ன வாங்கிட்டு வந்துருக்கேன்னு நீ கேக்கவே இல்லயே "

" ..."

" ராகவ்.. "

" சாரி பா.. ஆனா நானா சண்டைக்கு போகல பா "

" இங்க பாரு கண்ணா. நம்ம சண்டைய ஆரம்பிச்சோமா இல்லையாங்குறது முக்கியம் இல்ல. இப்போ உன் வயசுல இருக்குற ஒரு பையனுக்கு அடிபட்டுருக்கு , உனக்கு வலிக்குற மாறி தானே அனுக்கும் இருக்கும் "

" ம்ம்ம "

" நாம நம்ம மனசுல தோணுறத செய்ய எல்லா உரிமையும் நமக்கு இருக்கு. ஆனா அதால மத்தவங்களுக்கு எந்த வித பாதிப்பும் வர கூடாது. "

" சரி பா . நா இனி கவனமா இருக்கேன் "

" சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்." என அனைவரும் சாப்பிட்டு உறங்கினர்.
அடுத்த ஒரு வாரத்தில் ராகவ் லேசாக லேசாக மாறி இருந்தான். இருப்பினும் " அடங்காத எருமைகள் " அவனின் முதலிடத்தை வேறு எவராலும் பிடிக்க முடியவில்லை.

அன்று எப்போதும் போல் வகுப்பு நடந்துகொண்டிருக்க, இடைவேளையின் போது ரெஸ்ட் ரூம் சென்ற மஹி வெகு நேரம் ஆகியும் திரும்பாததால் ராகவிற்கு சற்று கலக்கமாக இருந்தது. அவன் வகுப்பில் மஹியை தவிர அவன் பேசம் ஓரே பெண்ணான பிரியாவை அணுகினான்.

" ஏய் பிரியா..."

" என்ன.. காத்து இந்த பக்கலாம் வீசுது . என்ன விஷயம் "

" உங்கிட்ட போய் கேட்க வந்தேன் பாரு. திமிரு புடிச்சவளே "
ராகவ் மஹியுடன் அதீத நட்பில் இருப்பது பொருக்காத சில பேர்களில் இவளும் ஒருவள். வேறு யாருடனும் பேசுவதில்லாததால் அவளிடன் உதவி கேட்கலாம் என்றால் இவள் இப்படி பேசுகிறாளே என நினைத்து

" போ... போய் வேலய பாரு "

" ம்க்கும் " என திருப்பிக்கொண்டு போனாள். இரண்டு வருடங்களுக்கு முன் சுற்றுலா சென்ற இடத்தில் மஹியை காணாமல் பெண்கள் கழிவறைக்கு போனான். பின்னாளில் சுமதி அவ்வாறு செய்வது நன்றாக இராது என கூறியிருந்தார். ஆனால் இப்போது என்ன செய்வது . மஹி சென்று வெகு நேரம் ஆகிவிட , ஒரு வேளை அன்று போல் எதாவதோ என மனம் அடித்துக்கொண்டது. என்ன செய்வது என யோசிக்கையில் அவன் கண்ணில் பட்டாள் அவர்கள் வகுப்பில் அமைதியே உருவான ஷமீமா. தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவள் அவர்கள் வகுப்பில் அவள் ஒருவளே. வேறு வழி தெரியாமல் , அவளிடத்திற்கு சென்றான். போகும் போது

" ஐய்யயோ இவ பேரு என்னன்னு தெரிலயே " என யோசித்த வண்ணம் அவள் பென்ச்சை அடைந்ததும் அவளே நிமிர்ந்து பார்த்தது அவனுக்கு "அப்பாடா " என இருந்தது. பெரிய தாதாவான ராகவ் தன்னிடம் வந்து நிற்பதை பார்த்து அந்த பெண் மிரள , அதை பார்த்து சற்று மனம் " ஹையா " என குத்தாட்டம் போட்டாலும் , இப்பொது அதற்கு நேரமில்லை என நினைத்து

" அது .. ஒரு உதவி "

" என்ன.."

" அது மஹி ரெஸ்ட் ரூம் போய் ரொம்ப நேரம் ஆச்சு. கொஞ்சம் என்னன்னு.. அவளுக்கு தனியா இருக்குற பயம் உண்டு.. கொஞ்சம் என்ன ஆச்சுன்னு பாக்க முடியுமா "

" சரி " என அவனை ஆச்சரியமாய் பார்த்துவிட்டு சென்றாள். சற்று நேரத்தில் திரும்பியவள்

" அவங்க அங்க தான் இருக்காங்க. வர மாட்றாங்க "

" ஏன் "

" கேட்டேன் .. சொல்லல "

" சரி. தேங்க்ஸ் " என அங்கு சென்றான். இவன் வருவதை பார்த்தவள் , மீண்டும் உள்ளே செல்ல எத்தனிக்க , அதற்குள் அங்கு விரைந்தவன்

" மஹி..."

" ராகவ்.. இங்க வராத. அங்கயே இரு "

" என்னடீ உளரர .. என்ன ஆச்சு.. ஏன் க்ளாஸ்கு வராம இங்கயே இருக்க.. வா மொதல்ல "

" போன்னு சொல்றேன்ல " என கண்ணீர் வழிந்தது. ஏதோ யோசித்தவன் நேரே சென்றது ரஞ்சனியின் வகுப்பிற்கு. ஆசிரியரிடம் அனுமதி வாங்கி அவளை அழைத்தான்.

" ரஞ்சு .."

" என்னடா ராகவ் . க்ளாஸ் டைம் ல வந்துருக்க. என்ன ஆச்சு "

" . அந்த மஹி ரெஸ்ட் ரூம் கிட்டயே நின்னிட்டு வரமாட்றா.என்னயும் போன்னு சொல்றா. நீ வா எங்கூட . "
அவன் சொன்னதிலிருந்து புரிந்து கொண்டவள்

" நீ க்ளாஸ் போ. நா பாத்துக்குறேன் "

" சரி." என தன் வகுப்பிற்கு நடந்தான். சிறிது நேரத்தில் க்ளர்க் வந்து மஹியின் பையை கேட்க , ராகவிற்கு ஒன்றும் புரியவில்லை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவனுக்கோ புரிந்தும் புரியாமலும் இருந்தது. மஹியிடம் கேட்கலாம் என போனவனை

" ராகவ்.. நீ போ. " என பேச மறுத்தாள். ராகவிற்கு கோவம் கோவமாக வந்தது.

" போ..ரொம்ப தா பண்ற. " என கூறி சென்று விட்டாலும் மஹி இவ்வாறு தன்னை தவிர்ப்பது அவனுக்கு என்னவோ போல் இருந்தது. இவை அனைத்தையும் பார்த்து , இதை சரி செய்ய வேண்டி ஒரு முடிவு செய்தார் அம்மாவான சுமதி....


( வளரும்....)
 
Top