அத்தியாயம் - 7
"சுட்ச் ஆப் என்று வருகிறது பாட்டி...” என்று தன் போனையே பார்த்தபடி யோசனையுடன் பதில் அளித்தவன், “நான் காலையில் ஆபிஸ் விட்டதோடு சரி, அதற்குப் பின் அவளை நான் பார்க்கவே இல்லை. மாலை நீயே வீட்டிற்குப் போ என்று முன்பே சொல்லிவிட்டேனே” என்றான் புருவத்தைச் சுருக்கியபடி மொழியும் போதே அவர்களின் ஆபிஸ் அறையைத் திறந்துக்கொண்டு பத்ரியும், அப்பாவும் வெளியே வந்தனர்.
“என்ன எல்லோரும் ஒன்று கூடி மாநாடு..” என்று விளையாட்டாக ஆரம்பித்தவன் கேள்வி அவர்களின் பதட்டமான முகத்தைப் பார்த்துப் பாதியிலேயே தொக்கி நிற்க.. “என்னாச்சு?” என்றான் பத்ரி அவசரமாக.
கார்த்திக் மிக தீவிர யோசனையுடன் “இன்னும் நிரல்யா வீடு வரவில்லையாம்”
“என்னது?? மணி பத்தாகிறது இன்னும் அங்க என்ன வேலை இருக்க போகிறது?? அதுவும் சேர்ந்த முதல் நாளே?” என்று கேட்டபடி அவர்களிடம் வந்த பத்ரி “மேலே இருக்கும் ரூம்மிற்கு போய் இருப்பாள் நீங்க யாரும் பார்த்திருக்க மாட்டிங்க” என்றான்.
“மாலை நான்கு மணியிலிருந்து ஆள் மாற்றி ஆள் இதோ இந்த ஹாலிலேயே தான் உட்கார்ந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரியாது எப்படி அவள் வீட்டிற்குள் வந்து மாடிக்குப் போய் இருக்க முடியும்?” என்று பாட்டி திருத்தமாக கூறிக்கொண்டு இருக்கும் போதே...
“அவள் இங்கே இல்லை” என்று புருவங்கள் நெரிய கூறிய கார்த்திக்கின் கவனம் தன் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு மெல்ல வெளியே வந்த அலக்நந்தாவின் மேல் தாவியது.
மாதமாக இருக்கும் சூழ்நிலையில் படி ஏறி இறங்குவது முடியாது என்ற காரணத்தினால் கீழ்தளத்திலேயே அறையை மாற்றிக்கொண்டு பாட்டியின் பக்கத்திலிருந்தனர் பத்ரி தம்பதியினர். தூக்கம் வராது தவித்துக்கொண்டு இருந்த அலக்நந்தா வீட்டு ஆட்களின் பேச்சு குரல் கேட்டு மெல்ல நடந்து வந்தவளைப் பார்த்த கார்த்திக்...
“பாபி... மாலை நேரத்தில் நிரல்யா ஏதாவது போன் பண்ணினாளா?” என்றான் நிதானமாக.
“ம்கூம்... ஒரு போனும் வரவில்லையே. இப்ப தான் உள்ளே போனேன். ஏன் என்னாச்சு??” என்றாள் சற்றே பதட்டமாக.
“நிரல்யா இன்னும் ஆபிஸ்சிலிருந்து வரவில்லை. அதுதான் உங்களுக்கு போன் பண்ணி இருக்கிறாளா...” என்று கார்த்திக் கேட்கும் போதே அவளின் முகத்தில் பரவிய பயத்தைக் கண்டு சுதாரித்தவன் “பாபி.. அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் எனக்குத் தான் முன்னாடி தெரியும்... அவள் நல்லாதான் இருக்கிறாள். அதனால் நீங்க பயப்படும் அளவு எதுவும் இல்லை. வேறு ஏதாவது வேலையாக இருப்பாள்” என்று தன் அண்ணியைச் சமாதானம் பண்ணினான்.
அவன் சொன்னதிலிருந்த உண்மையை உணர்ந்து சற்று நிம்மதி உற்றவள், “உங்களுக்கு கால் செய்து இருக்கிறாளா என்று பாருங்கள். மிஸ்ட் கால் ஏதும்...” என்று அவள் கேட்கும் போதே
“இன்று முழுவதும் மீட்டிங்கில் தான் இருப்பேன் என்பது அவளுக்குத் தெரியும். மீட்டிங் என்றால் என் போன் செக்ரட்டரியிடம் தான் கொடுத்து வைத்து இருப்பேன் அதனால் எனக்கு போன் பண்ணி இருந்தால் என் செக்ரட்டரி சொல்லி இருப்பாள்...” என்று தெளிவாக கூறினான்.
“இத்தனை நேரம் நிரல்யா வீட்டிற்கு வராததை ஏன் நீங்க முன்பே சொல்லவில்லை??” என்று முதல்முறையாக சிவ சச்சிதேவ் அழுத்தமாக கேட்டார்.
மல்லிகாவை முந்திக்கொண்ட நாட் நாட் செவன் “கார்த்திக்குடன் வருவாள் என்று நினைத்துக்கொண்டு தான் காத்திருந்தோமடா”.
“அம்மா...” என்று எதையோ பேச ஆரம்பித்த சிவ சச்சிதேவ்... பின் அதை நிறுத்திவிட்டு “டேய் கார்த்திக், டிரைவருக்கு போன் செய்து கேள்... பத்ரி ஆபிஸ்சில் எத்தனை மணிக்கு அவள் பஞ்ச் செய்துவிட்டு வெளியே வந்திருக்கிறாள் என்று பார்” என்று தெளிவாக அடுக்கடுக்காக ஆணை பிறப்பித்தார்.
ஐந்து நிமிடம் தன் போனை குடைந்த பத்ரி முகம் இறுக, “அவள் ஆறே காலுக்கு வெளியே வந்து விட்டதாக தெரிகிறது” என்றான்.
“ஐந்து மணிக்கு போன் செய்து கார் வேண்டாம் என்று மூர்த்தியிடம் கூறி இருக்கிறாள் அப்பா” என்றான் முகத்தில் யோசனை சூழ கார்த்திக்.
“என்ன?? என்ன??” என்று ஆளாளுக்கு படபடப்பாக என்ன போடும் போதே வீட்டின் வெளியே கார் நிற்கும் ஒளி கேட்க...
அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது!!!
கடந்த இருபது நிமிடமாக அவர்களைப் புரட்டிப் போட்ட நாயகி அங்கே மிகச் சோர்வாக பிரசன்னமாகினாள்.
யாரிடமும் சொல்லாமல் இத்தனை தாமதமாக வருவதைக் கண்டு கோபக்காரனான கார்த்திக் நிரல்யாவை சுள்ளென்று திட்டி விடப் போகிறான் என்று அவசரமாக களத்தில் குதித்த பாட்டி…
“முதல் நாள் வேலை எப்படி இருந்தது??” என்றார் பாட்டி சவாதானமாக.
களைப்பாக தன்னிலையில் உழன்றுக்கொண்டு இருந்தவள் புரியாத பார்வையைப் பாட்டியிடம் படர விட... அங்கே இருந்த இறுக்கமான சூழ்நிலையைக் கண்டு ஏதோ சரியில்ல என்று புரிய, பின் அவசர கதியில் அங்கே குழுமி இருந்தவர்களின் முகத்தில் பதியவிட்டவளுக்கு கால்கள் துவள, பதட்டமும்.. படபடப்பும் அதிகரிக்க...
“டெங்கு காய்ச்சலால் ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கும் வளவனை பார்த்துவிட்டு வருகிறேன் பாட்டி. மாலை ஐந்து மணிக்கு அக்கா போன் செய்து என்னை ஹாஸ்பிட்டலுக்கு அவசரமாக அழைத்தார் அதனால் வேலை முடிந்ததும் அங்கிருந்து அப்படியே போய் விட்டேன் பாட்டி. வீட்டிற்கு போன் செய்தேன், யாரும் எடுக்கவில்லை. அதனால் கார்த்திக்கின் செக்ரட்டரிக்கு போனில் விஷயத்தைச் சொல்லி வீட்டிற்கும் தெரிவித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு போனேன்” என்றாள் லேசாக தொண்டை கமற.
ஏற்கனவே இவளை நினைத்துப் பதட்டத்தோடு இருக்கும் நிலையில் கார்த்திக்கின் கோபத்தை இன்னும் அதிகப் படுத்தும் விதமாக அவளின் அக்காவின் பெயரும் வர... எப்படி வெடிக்கப் போகிறானோ என்று எல்லோருக்கும் இதயம் எகிறி துடிக்க...
“இப்ப குழந்தை எப்படிமா இருக்கிறான்?” என்றார் மல்லிகா, கார்த்திக் வாயைத் திறக்க இடமே கொடுக்காது.
அவரின் யுக்தியைப் புரிந்துக்கொண்ட வீட்டு ஆட்கள் ஆளாளுக்கு கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்து எடுக்க, அடுத்த பத்து நிமிடம் பல்லைக் கடித்துப் பொறுத்த கார்த்திக்...
அதற்குமேல் பொறுக்க முடியாது, சற்றே உரக்க குரலில்,“உங்க நேர்காணலை கொஞ்சம் பாஸ் பண்ணுங்க” என்று அறிவித்தவன்...
“ஏய்... உனக்கு என்ன பண்ணுது?” என்றான் மொட்டையாக.
என்ன கேள்வி கேட்கப் போகிறானோ என்று பாட்டி முதல் பத்ரி வரை சற்றே உள்ளே படபடப்பாக காத்திருந்தவர்களுக்கு சற்றும் எதிர்பார்க்காது இப்படி ஒரு கேள்வி கேட்க...
முதலில் அவன் என்ன கேட்கிறான் என்று யாருக்கும் புரிய கூட இல்லை. அக்கா மகனுக்குத் தானே உடம்பிற்கு முடியவில்லை என்று சொன்னாள்.. இப்ப ஏன் இவளைப் பார்த்து இப்படி கேட்கிறான்?? என்ற குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொள்ள...
எதைப் பற்றியும் கவலைப்படாத கார்த்திக்கோ, “என்ன??” என்று அதட்டலாக கேள்வி கேட்டபடி நிரல்யாவைப் பார்த்து முறைப்பாக நின்றான்.
குடும்ப அங்கத்தினர் முழுவதும் அவளை ஆராய்ச்சியுடன் பார்த்துக்கொண்டு இருக்க... கார்த்திக்கின் அதட்டலான கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லாது மெல்ல தன் விழியைக் கார்த்திக்கின் புறம் உயர்த்தி பார்த்துவிட்டுப் பின் தாழ்த்திக்கொண்டாள்.
அவர்கள் இருவருக்கும் நடந்த பரிபாஷை அது மட்டுமே!!!
அந்த ஒற்றை பார்வையின் பொருள் புரிந்த கார்த்திக்...“ஓ” என்றவன் வேறு எதுவும் சொல்லாது மல்லிகாவின் புறம் திரும்பி “அம்மா... இனி பத்து நிமிடத்திற்கு மேல் நின்றால் மயங்கி விழுந்துவிடுவாள்...”
“ஐய்யோ... இன்னும் சாப்பிடவில்லையா நிரல்யாம்மா??” என்று மல்லிகா பதறிக் கேட்கும் போதே...
“வேண்டாம் அம்மா, அவள் எதுவும் சாப்பிட மாட்டாள்.. தூங்கட்டும்மா... ஒரு கப்பில் சூடான பால் மட்டும் கொடுத்து அனுப்புங்க” என்று அம்மாவிடம் சொன்னவன், “பால் கொண்டு வருபவனிடம் நேற்று கொண்டு வந்த டிராலியில் ஒரு ப்ளூ கலர் ஃபைல் இருக்கும் கொடுத்து அனுப்பு” என்று மொழிந்ததோடு தன் கடமை முடிந்துவிட்டது என்னும் விதமாக தந்தையின் புறம் திரும்பி, “எனக்காக அவசரமாக வந்திங்களா பா?” என்றான் வீட்டிற்கு வந்ததிலிருந்து அப்பாவிடம் பேசாதவன்.
இடி, மின்னல், மழை என்று எதை எதையோ எதிர்பார்த்தவருக்குள் சம்பந்தம் இல்லாது அவன் கேட்டதும் இவள் எந்தப் பதிலும் சொல்லாது ஒற்றை பார்வையை பதிலாக தந்ததை கார்த்திக் புரிந்துக்கொண்டதையும் பார்த்து அலக்நந்தாவிற்கு தலை சுற்றியது.
ஏன் என்றால் மொத்த சச்சிதேவ் குடும்பத்தில் “நாசுக்கு” என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவன் யார் என்றால் அது கார்த்திக் தான்!!!
கார்த்திக் அவளை ரூம்மிற்கு போ என்று சொன்னவுடனே சோர்வாக அத்தையிடம் தலையை ஆட்டிவிட்டுப் படியேறியவளை யாரும் கவனிக்கவில்லை என்றாலும் கூட அலக்நந்தா நன்றாகவே கவனித்தாள்.
“பின்ன என்னைப் பார்க்கவா சேலத்திலிருந்து ஓடி வந்திருக்காங்க? நீ புது மிஷின் வாங்குவது தொடர்பாக பேச வேண்டும்....” என்று பத்ரி கதை அளந்துக்கொண்டு இருக்கும் போதே...
“அதெல்லாம் பொய் டா... நீ வந்திருக்கேன்னு சொன்னவுடன் உன் அம்மாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, போன இடத்தில் தலையைக் காட்டி விட்டு பறந்து அடித்து ஓடி வந்துவிட்டோம்” என்றார் அப்பா தெளிவாக.
“அதை நீங்களும் நம்பறிங்களாப்பா... என்னைப் பார்க்கவெல்லாம் அம்மா வந்திருக்க மாட்டாங்க... பேரப்பசங்க என்ன சொன்னாங்க என்று கேட்கும் ஆவலில் ஓடி வந்திருப்பாங்க இல்லையாம்மா?” என்று தலை திருப்பி அம்மாவைப் பார்த்துக் கேட்டான் கார்த்திக்.
எப்போ வேலை விஷயமாக மும்பைக்கு சென்றாலும் மூத்தவன் ஆரியா வீட்டில் தங்குவது தான் வழக்கம் அதுவும் இந்த முறை கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் அங்கு தங்க நேரிட, தினமும் பேஸ் டைமில் பாட்டி மற்றும் சித்திகளிடம் மணிக்கணக்காக பசங்க பேசியது தான் அதிகம்.
“நேற்று காலையில் பேசும்போதே நீ வருகிறாய் என்று சொல்லி இருந்தால் நான் சேலத்திற்கே போய் இருக்க மாட்டேனே” என்றார் மல்லிகா.
“திடீர் என்று எடுத்த முடிவும்மா. பகலில் கிளம்ப சின்னவன் ஒத்துக்கொள்ளவே இல்ல... நானும் வரேன் என்று ஒரே அழுது ஆர்ப்பாட்டம். அதனால் நான் இரவில் கிளம்பி வர வேண்டியதாகி விட்டது... என்று இரவோடு இரவாக கிளம்பி வந்ததற்கு காரணம் சொன்னவன், “இன்னும் கொஞ்ச நாள்தாம்மா... அப்புறம் இந்த வீட்டில் டிவின்ஸ் பிறக்கும் வரை வீடு ஜகஜகவென்று இருக்கும்” என்று மூத்த மருமகள் சௌவி குழந்தைகளோடு அலக்நந்தாவின் பிரசவத்திற்கு ஒத்தாசைக்காக இங்கே தான் வந்து தங்கப் போகிறாள் என்பதைக் கூற அனைவர் முகத்திலும் ஆனந்தம் பொங்கித் ததும்பியது.
பொதுவாக முதல் பிரவசத்திற்கு அம்மா வீடு போவது தான் வழக்கம் என்றாலும் அதை சச்சிதேவ் வீட்டில் கடைப்பிடிக்கும் வழக்கம் இல்லை. கல்யாண விஷயத்தில் எதைத் தான் உருப்படியாகச் செய்து இருக்கிறார்கள் இதைச் செய்வதற்கு??
அதிலும் அலக்நந்தாவிற்கு டிவின்ஸ் என்பதால் கண்டிப்பாக சிசேரியன் தான், அதிலும் எட்டு மாதத்தைக் கடந்த பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் ஆகலாம்... எத்தனை நாள் குழந்தை அம்மாவின் வயிற்றில் இருக்கிறதோ அத்தனை நல்லது என்று சொல்லி விட, அலக்நந்தாவை குடும்ப அங்கத்தினர் கையில் தாங்கிப் பிடித்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.
வளைகாப்பை ஊரைக் கூட்டி பெரிய விழாவாகக் கொண்டாடும் சச்சிதேவ் குடும்பத்தினர் அலக்நந்தாவின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அதைக் கூட வீட்டோடு முடித்துக்கொள்ள, அவளைச் சுற்றி அத்தையோ இல்லை பாட்டியோ இருந்த வண்ணம் இருந்தனர்.
அதுவும் ஒருவகையில் நல்லதாகத் தான் தோன்றியது. இல்லை என்றால் இரண்டு மகளை ஒரே சமயத்தில் திருமணம் செய்து அனுப்பியதில் மனம் சோர்ந்துப் போய் இருப்பார் மல்லிகா, அதிலும் குறிப்பாக சங்கியை. மங்கியாவது அடிக்கடி மெடிக்கல் கேம்ப் என்று வெளியூர் சென்று வரும் பழக்கம் உண்டு. சங்கியோ அம்மா, அப்பாவை விட்டுப் பிரிந்ததே இல்லை எனலாம்.
“ஆ.. சொல்ல மறந்தேன் பாபி, வரும் போதும் ஒரு பிசின்ஸ் மீட்டிங் விஷயமாக மும்பையில் தாஜ் போய் இருந்தபோது உங்கள் அக்காவைப் பார்த்தேன். குழந்தை பிறந்தவுடன் வந்து பார்ப்பதாக சொன்னார்கள்” என்றான் கார்த்திக்.
அலக்நந்தாவின் அக்காவும் நடிகை தான். இருவரும் ஒட்டி உறவாடிக்கொள்ளும் பழக்கம் இல்லை. அதைப் பற்றி வருத்தப்படும் அளவு புகுந்தகத்தில் விட்டதில்லை.
“டேய் நீ சாப்பிட்டியாடா?” என்றார் அம்மா கன அக்கறையாக.
“ப்பா.. என்ன அக்கறை பேரன் பேத்தியின் கதைகளைக் கேட்ட பிறகுதான் மகன் வயிற்றைப் பற்றி ஞாபகம் வருகிறதா?” என்று அம்மாவைக் கிண்டல் அடித்தவன் “வேண்டாமா... மீட்டிங்கில் ஸ்னாக்ஸ் சாப்பிட்டதே போதும்…” என்று மொழியும் போதே வேலை ஆள் அவன் சொன்ன ஃபைலை எடுத்து வந்து கொடுத்தான்.
“ஆங்.. இதைத் குட்டிஸ்... உங்கள் கையில் நான் நேரடியாக கொடுக்கனுமாம்.. அப்புறம் நீங்க தான் முதலில் பிரித்து பார்க்கனுன்னு சொன்னாங்க” என்றப்படி நீட்டினான்.
என்னவாக இருக்கும் என்று யூகித்திருந்த மல்லிகா ஆர்வமாக வாங்கி பிரித்துப் பார்த்த அடுத்த நொடி அதிர்ந்து போய் நிற்க...
அம்மா ஏன் இப்படி நிற்கிறார்கள் என்று யோசனையோடு பத்ரி அவரின் கையிலிருந்து ஏதோ பேப்பர் போல் இருந்ததை வாங்கிப் பார்த்தவன்…
அதில் வரைந்திருந்த படத்தைப் பார்த்துவிட்டு.. திடுக்கிட்டுப் போய்...
“வர வர இந்த ஆரி பையன் போக்கே சரியில்லை. பசங்களை இப்படி கெடுத்து வைத்திருக்கிறான்… பாரு” என்று கார்த்திக்கிடம் அதை நீட்டினான்.
“ஏன்டா??” என்று கேட்டபடி கார்த்திக் கையில் வாங்கிப் பார்க்க… அதனை அப்பாவும் எட்டிப் பார்க்க, அங்கே இருந்த படத்தை இருவருமே ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியாது கண்களை மூடிக்கொள்ளும்படியாக வரையப்பட்டு இருந்த அகோரமான படம்!!!
“ஏன்?? என்னாச்சு?” என்று அலக்நந்தா கேட்கும் போதே அவசரமாக அந்தப் படத்தை மறைக்க முனைந்த பத்ரி...
“ஒன்றுமில்லை... ஹாரர் படத்திற்கு போஸ்டர் அடிக்க வரைந்த மாதிரி பார்க்கவே பயங்கரமாக இருக்கு. சரியா சொல்லனும்னா.. கான்சரிங் அடுத்த பார்ட்டிற்கு போஸ்டர் வரைந்த மாதிரி இருக்கு. நீ பார்க்க வேண்டாம் பயப்படுவாய். இந்த மாதிரி ஹாரர் படத்தை சௌவி பார்க்க மாட்டா. ஆரிதான் பேய், பிசாசு எல்லாம் வேலை மெனக்கெட்டுப் பார்ப்பான். அவன் பார்த்ததோடு மட்டும் இல்லாது பசங்களையும் கெடுத்து வைத்திருக்கிறான் அதனால் தான்” என்று சொல்லும் போதே…
மல்லிகாவின் முகம் போன போக்கைப் பார்த்துவிட்டு நாட் நாட் செவன் அமைதியாக முன்னே வந்து பேரனின் கையிலிருந்த படத்தை வாங்கிப் பார்த்தவர்... ஒரு பெருமூச்சுடன் “நான் அப்பவே சொன்னேன் இல்லை...” என்றார் சமாதானமாக மல்லிகாவைப் பார்த்து.
பசங்க வரைந்த படத்தைப் பார்த்துவிட்டு அம்மா ஏன் இப்படி கலங்கிப்போய் இருக்கிறார்?? இதற்கு ஏன் பாட்டி சமாதானப்படுத்துகிறார்?? என்று புரியாது குழம்பிப் போன குடும்ப அங்கத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள…
“என்ன ஆச்சு பாட்டி?” என்றான் கார்த்திக்.
“நீ தங்கி இருந்த ஒரு வாரம் வீடியோ கால் பண்ணி உன் அம்மாவிடம் மணிக்கணக்காக பேசினாங்களே அது எதுக்குன்னு நினைக்கிற??”
“இதில் நான் என்ன நினைக்க?? பாட்டியும் பேரப்பசங்களும் பேசிக்கிறாங்கன்னு நினைச்சேன்”
“ம்க்கூம்… பேசல... வரைந்தாங்க… உங்களை வரைய போகிறோம், மாடலாக இருங்கன்னு உன் அம்மாவை உட்கார வைத்து வரைந்த படம் தான் இது” என்று பாட்டி, கையிலிருந்த படத்தை அசைத்து காட்டினார் சற்றும் சிரிக்காமல்.
அதைக் கேட்ட பிறகு அலக்நந்தா கூட அந்தப் படத்தை எட்டி பார்க்க… மயான அமைதி நிலவியது.
மயான அமைதிக்குக் காரணம் அதிர்ச்சியால் அல்ல, பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்த தெரியாததால் தான்!!!
பின்னே புடவையை தவிர எதையுமே கட்டாத மல்லிகாவிற்கு ஒரு கவுனை மாட்டி விட்டதோடு நிற்காது… அழகாக நெற்றியில் திலகமிட்டு, தன் நீளமான முடியை பின்னலிட்டு மங்கலகரமாக வளம் வரும் மல்லிகாவை தலைக்கு பதில் முகத்தில் முடியை வளர்ந்த மாதிரி அதுவும் முழங்கால் வரை வளர விட்டு கோரப்பற்களோடு அவரை இத்தனை கர்ண கொடூரமாக கற்பனைக்கும் எட்டாத வகையில் வரைந்த படத்தைப் பார்த்துச் சிரித்தால் ஏற்கனவே நொந்துபோய் இருக்கும் மல்லிகா வருத்தப் படுவார்களோ என்று அமைதியாக இருக்க...
“நிஜமாவா பாட்டி??” என்று நாட் நாட் செவனை வம்புக்கு இழுத்த கார்த்திக்... மீண்டும் ஒருமுறை படத்தை உற்றுக் கவனித்துவிட்டு... “ஸ்ஸ்.. உண்மையைச் சொல்லுங்க பாட்டி. இது உங்களை உட்கார வைத்து வரைந்த படம் தானே..?? பாருடா பத்ரி சாயல் கூட பாட்டி மாதிரியே தான் தெரியுது இல்லை??” என்றான் அவனின் முடி வளர்ந்த தாடியை தடவியபடி.
“இருடா... கொஞ்சம் கிட்ட வந்து என் நிஜ சொரூப்பத்தைக் காட்டறேன்…” என்று பாட்டி சொல்லியபடி ஒரு அடி எடுத்து வைக்க…
அவசரமாக தன் பாண்ட் பாக்கட்டில் எதையோ தேடியவன்.. “ஐய்யோ.. என் எல்லா வெள்ளை கொடியும் தாத்தாவிடம் கொடுத்து விட்டனேன் பாட்டி…. உங்க நிஜ சொரூபத்தை தாங்கும் சக்தி எனக்கு இல்லை”. என்று பாட்டியிடம் பொய்யாக வணங்கியவன் “அப்பா பிசினஸ் பேசணும்னு சொன்னிங்களே வாங்க போகலாம்” என்று பாட்டி பேச இடமே கொடுக்காது தந்தையிடம் திரும்பினான்.
தந்தையும் இரு மகன்களும் மிக தீவிரமாக எதையோ பேசியபடி ஆபிஸ் அறையை நோக்கிச் செல்ல பெண்கள் மூவரும் அமைதியாக பெருமூச்சுடன் அமர்ந்தனர்.
“அத்தை அந்தப் படம்...” என்று அலக்நந்தா ஆரம்பிக்கும் போதே...
“அந்தப் படத்தில் என்னை இப்படி வரைந்து வைத்திருக்காங்களேன்னு நான் அதிர்ச்சி அடையவில்லை. அவர்கள் ஊரிலிருந்து வரும்போது ஆள் உயரத்திற்கு ஃப்ரேம் பண்ணி நடுக்கூடத்தில் மாட்டி வைக்க வேண்டும் என்று அவர்கள் சொன்ன விஷயத்தை நினைத்துத்தான் நான் கலங்கிப் போனேன்” என்றார் மல்லிகா.
இந்த கான்சரிங் படத்தை நடு ஹாலில் வைத்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கும் போதே அலக்நந்தாவிற்கு கதி கலங்க…
“சச்சிதேவை வளர்ப்பது... ரொம்ப கஷ்டம் இல்லை அத்தை” என்றாள் தன் பெருத்த வயிற்றைத் தடவியபடி.
“பழகிடும்” என்றார் மல்லிகா மருமகளின் கையைப் பிடித்து.
“என்னை நினைத்தால் எனக்கே பாவமாக இருக்கு அத்தை.” என்று அவள் பெருமூச்சு விட்டபடியே “கார்த்திக்கும் நிரல்யாவும் சந்திக்கும் இடம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பூகம்பம் வரலாம் என்று சொல்லக்கூடிய ஆபாயப்பகுதி என்று போர்ட் வைக்கலாம் போல” என்றாள் பிரச்சனைக்கு திரும்பி.
“காலையில் பேசியது போல் எங்கே அவர்கள் வீட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவானோ என்று பயந்தே போனேன்” என்றார் பாட்டி.
“ஏன் காலையில் என்ன ஆச்சு?” என்றார் மல்லிகா.
விரிவாக காலை நடந்த சம்பவத்தை விளக்கிய அலக்நந்தாவிற்கு மல்லிகா அலுப்பாக...
“இவன் மாற மாட்டான். ஆனால் எத்தனை நாள் நிரல்யாவும் இதைப் பொறுத்துப் போவாள்??”
“பிள்ளைகளைப் பார்க்கப் போய் விட்டு வந்தேன் என்று சொன்னதும் போச்சுடா... காலையில் பேசியது போல் இப்பொழுதும் பேசி வைக்கப்போகிறார் என்று பார்த்தால்… அதைப் பற்றி வாயையே திறக்கவில்லையே?? ஒருவேளை ரூம்மிற்கு போய் சண்டை போடுவாரோ??” என்றாள் வருத்தமாக அலக்நந்தா.
“ம்கூம் அவனாவது அத்தனை நாசுக்காக பேசுவதாவது” என்று அலுத்துக்கொண்டவர், “நிஜமாகவே அதைப் பற்றி அவனுக்கு அக்கறை இல்லாது இருக்கனும், இல்லை அவளுக்கு ரொம்பவே உடம்பு முடியாது இருக்க வேண்டும். இதில் இரண்டாவது தான் இருக்க வேண்டும்” என்றார் பாட்டி தீர்மானமாக.
“ரொம்பவே சோர்வாக தெரிந்தாள். ஆனால் மயங்கி சரியும் அளவுக்கு உடம்புக்கு முடியாத மாதிரி ஒன்றும்…” என்று பாட்டி இழுக்கும்போதே காலி பால் டம்ளருடன் சென்ற வேலைக்காரம்மாள் கண்ணில் பட...
“அங்கே பார்” என்றார் ஆர்வ மிகுதியில் பாட்டி.
இதில் பார்ப்பதற்கு என்ன இருக்கு என்ற ரீதியில் பார்த்த அலக்நந்தா... “பால் குடித்து வந்த காலி டம்ளர்” என்றாள் புரியாது.
இந்த சச்சிதேவுடன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவர்களின் செய்கை புரியவே புரியாது என்று மனதில் நொந்துக்கொண்டபடி.
“நந்தாமா… உனக்கு காலி டம்ளர் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிகிறது, அதற்குப் பின்னால் இருப்பது தெரியவில்லை” என்றார் பாட்டி அதிக அக்கறையாக.
“ஏன் தெரியவில்லை பாட்டி, அந்த காலி டம்ளருக்கு பின்னாடி அதை தூக்கிக்கொண்டு வரும் செல்வி நன்றாகவே தெரிகிறாளே” என்று பாட்டியின் வார்த்தையை வேறு விதமாக அர்த்தம் பண்ணிக்கொண்டு பதில் சொன்னாள் அலக்நந்தா.
“சரியா போச்சு போ… உனக்கு தமிழ் புரிவதற்குள் எனக்கு நூறு வயது கடந்துவிடும் போல” என்று நொந்துக்கொண்ட பாட்டி “நான் அதைச் சொல்லவில்லை. பால் டம்ளருக்கு பின்னால் இருக்கும் பொருளைச் சொன்னேன். நீயே சொல்... நிரல்யா பால் குடிப்பாளா??”
“அட ஆமாமில்லை... நான் அதை எப்படி மறந்தே போனேன்??” என்றாள் தலையில் கை வைத்துக்கொண்டு.
“அப்ப அவளுக்குப் பால் அனுப்பச் சொன்னான் என்றால் என்னவாக இருக்கும் கண்டுபிடி???” என்று பாட்டி ஊக்கினார்.
“மாதவிடாய் காலத்தில் வரும் வலிக்காக சாப்பிடும் சித்த மருந்தைப் பாலில் கலந்து தான் சாப்பிட வேண்டும். அப்படி என்றால் அதைத் தெரிந்து தான் அவளைப் போய் ரெஸ்ட் எடுக்க சொன்னாரா?” என்று அலக்நந்தா முடிக்க பாட்டி வெற்றி புன்னகை பூத்தார்.
“ஓ.. இதுதான் காரணமா?” என்று சத்தம் போட்டு யோசித்தவள், “வாவ் பாட்டி நீங்க ஜீனியஸ்… அவளின் வார்த்தையே இல்லாத பாஷையை வெறும் ஒரு காலி டம்ளரை வைத்து எப்படி நீங்க கண்டுபிடித்திங்களோ?!!!” என்றாள் மனமார பாராட்டி
“அன்றே உன் வீட்டுக்காரன் சொன்னது தான், அவர்கள் பாஷையை வைத்து நம்மால் ஒன்றும் புரிந்துக்கொள்ள முடியாது. ஆனால் நடக்கும் வித்தையை வைத்து நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். இதை தான் பழக பழக புரியும் என்று உன் வீட்டுக்காரன் சொல்லி இருக்கான்” என்றார் அவளுக்கு விளக்கமாக.
அன்று அவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தான் போலவே என்று இத்தனை தாமதமாக புரிந்தது அவனின் சக தர்ம பத்தினிக்கு!!!
“வாய் விட்டுப் பேசாது... கண்ணோடு கண் நோக்காது ஒருத்தரை ஒருத்தர் துல்லியமாக எப்படி உணர்கிறார்கள்??” என்று பத்ரியிடம் கேட்டதற்கு எந்தப் பதிலும் வராது சின்ன புன்னகை மட்டும் வர…
“இந்தச் சிரிப்பிற்கு என்ன ஆர்த்தம்??
“சொன்னால் உனக்கு புரியாது??” என்று நமுட்டு சிரிப்புடன் பத்ரி கூறினான்.
“ஏன் புரியாது?”
“வார்த்தையால் சொன்னா புரியாது... பழக பழக உனக்கே புரியும் என்று அர்த்தம். இந்த சின்ன விஷயத்திற்கு எல்லாம் இத்தனை அதிர்ச்சியாகாதே.. உடம்பிற்கு ஆகாது” என்று அவளின் உப்பிய வயிற்றைத் தொட்டுக் காட்டி அந்தப் பேச்சை முடித்து விட்டான் அவன்.
“ம்கூம்…எனக்கு இந்த அர்த்தம் புரியவில்லை என்றால் என் மண்டையே வெடித்து விடும் போல் இருக்கே” என்றாள் விடாது.
“ம்ம்!!!” என்று இழுத்தபடி யோசித்தவன் “உனக்கு புரிகிற மாதிரி சினிமா தனமாக சொல்ல வேண்டும் என்றால் அவர்களை “ஸ்டார் கிராஸ்ட் லவ்வர்ஸ் என்று வைத்துக்கொள்ளேன்” என்று அந்தப் பேச்சை முடித்தான்.
அன்று பத்ரி சொன்னதை இன்று பாட்டி சுட்டிக்காட்டினார்.
“பாட்டி, இவர்கள் எப்பயும் இப்படிதானா?” என்றாள் அலுப்பாக அலக்நந்தா.
“ம்ம்... நான் அறிந்தவரையில் அவர்களுக்குள் மட்டும் ஒரு தனி ஆன்டனா அவளுக்காக மட்டுமே வேலை பண்ணுவது போல் தோன்றும்” என்றார் பாட்டி லேசாக சிரித்தபடி.
“காலையில் டைனிங் டேபிளில் பேசியது போல் அப்பா, அக்கா, மாமாவைப் பற்றி ஏதாவது பேசி வைக்க போகிறார் என்று நினைத்தேன் பாட்டி, நல்லவேளை எதுவும் பேசவில்லை” என்றார் ஆசுவாஸப்படுத்திக்கொண்டு.
“பேசி இருப்பான் தான். ஆனால் நிஜமாகவே நிரல்யாவிற்கும் உடம்பு முடியாத நிலை என்ற காரணம் தான் பேசவில்லை. இல்லை என்றால் அவனைத் தடுக்க யாரால் முடியும்??” என்றார் மல்லிகா.
“இவர்கள் உறவு ரொம்பவே விசித்திரமாகத் தெரிகிறது. ஒருத்தன் என்னடாவென்றால் அதீத வேகம் அவளோ அதீத அமைதி இருவருக்கும் எப்படி பாட்டி இப்படி ஒத்துப் போகும்?? வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவரின் அதீத வேகத்தையும் அவளின் அதீத அமைதியையும் வைத்துப் பார்த்தால் ஏதோ கார்த்திக்கின் வேகத்திற்குத் தடையாக இவள் குறுக்கே இருந்து தடுப்பது போல் தெரியவில்லையா பாட்டி?” என்றால் மனதில் பட்டதைக் கேட்டு.
“அலக்நந்தா... தடையில்லாத வேகம் ரொம்ப ரொம்ப ஆபயகரமானது. வண்டி அதிவேகமாக செல்லத் தான் ஐந்து கியர் தேவை. ஆனால் பின்னால் செல்ல ஒரு ரிவர்ஸ் கீர் போதும். அந்த ஒரு ரிவர்ஸ் கீர் இல்லாவிட்டால் வண்டியை ஓட்டவே முடியாது இல்லையா... அது மாதிரி தான் நிரல்யாவும். கண் மண் தெரியாது தலை தெரிக்க ஓடிக்கொண்டு இருக்கும் கார்த்திக்கின் ரிவர்ஸ் கீரும் அவள் தான் வேகத் தடையும் அவள் தான். அவள் இல்லாவிட்டால் இந்நேரம் கார்த்திக் என்னவாகி இருப்பானோ என்று கூட நான் யூகிக்க விரும்பவில்லை. அவன் நம்முடன் இன்று உயிருடன் நடமாடிக்கொண்டு இருப்பது அதே வேகத் தடையால் தான் இல்லை என்றால் அவன் தன் உயிரைப் பயணம் வைத்துச் செய்யும் அந்த அட்வன்சர் ஸ்போட்ஸ் எப்பொழுதோ அவனை ஆட்கொண்டு இருக்கும்” என்றார் மெல்ல ஆனால் அர்த்தமாக.
“அப்ப நிரல்யாவிற்கு கார்த்திக் என்ன ஆவார் பாட்டி??” என்றாள் ஆர்வம் பிடுங்கித் தின்ன...
“அவள் இவனுக்கு வேகத் தடை என்றால் இவன் அவளுக்கு வாழ்வின் உந்து சக்தி... கார்த்திக் இல்லாவிட்டால் அவள் வாழ்க்கை என்னவாகி இருக்கும் என்று கணிக்கக் கூட முடியாது. அவள் இன்று பேசுவதற்கும், சிரிப்பதற்கும், சகஜமாக பழகுவதற்கும் அத்தனைக்கும் அவள் உள்ளே எரிந்துக்கொண்டு இருக்கும் கார்த்திக் என்ற உந்து சக்தியால் மட்டும் தான்”.
“இத்தனை அன்பு வைத்திருப்பவர் கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன் ஏன் டைவர்ஸ் லாயரை பார்க்கப் போனதாக பத்ரி சொன்னார்??” என்றாள் குழப்பமாக.
“அலக்நந்தா…” என்று அன்புடன் அழைத்த மல்லிகா... “உனக்கும் பத்ரிக்கும் கல்யாணம் ஆவதற்கு முன்பு உங்கள் இருவருக்கும் தனி தனி வாழ்க்கை என்று ஒன்று இருந்தது. பகிர்வதற்கு சம்பவங்கள் இருந்தது. விருப்பு வெறுப்பு இருந்தது... ஆனால் அவர்களுக்கு இதுநாள் வரை தனி தனி வாழ்க்கை என்று இருந்ததே இல்லை. ஆரம்பம் முதல் இன்று வரை அவர்களுக்குள் இருப்பதை அன்பு என்று சொல்வதா... இல்லை நட்பு என்று சொல்வதா... இல்லை காதல் என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும், இருவரும் பிரிந்து வாழ்வதற்கு சாத்தியகூறே இல்லை” என்று மிக எளிதாக முடித்துவிட்டார் மல்லிகா.
“அதைத் தான் நானும் நினைக்கிறேன் அத்தை. அவர்கள் ஒருவரை ஒருவர் உணரும் விதம்... பேசும் மொழி, ஏன் பார்க்கும் விதம் என்று அவர்களுக்கு இருக்கும் அந்த கிரேசி கெமிஸ்ட்ரியை என்னால் பத்தடி தூரத்தில் உணர முடிகிறது. ஆனால் இந்த டைவர்ஸ் சமாச்சாரம் தான் என்னை வண்டாக குடைகிறது” என்றாள் அலக்நந்தா.
“வெளியே வரும்... அதுவும் மெல்ல வெளியே வரும். அதுவரை நாம் அமைதியாக காத்திருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யக் கூடியது இல்லை” என்றார் பாட்டி அமைதியாக எதையோ தீவிரமாக யோசித்தபடி.
ஆனால் மல்லிகாவின் நம்பிக்கையைப் குந்தகம் விளைவிக்கும் விதமாக அவர்கள் அன்றே ஏன் டைவர்ஸ் செய்துக்கொள்ளவில்லை என்று மனதால் ஏங்கும் நாளும் வரும் என்று மல்லிகா கனவிலும் நினைக்கவில்லை!!!
தொடரும்…
அடுத்த பதிவு - செவ்வாய் கிழமை
DEAR READERS…
இந்த இடத்தில் நான் CONJURING என்று டைப் செய்யும் போதே இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்…. இந்த படத்தை பார்த்திருந்தால் மட்டும் தான் நான் சொல்வது புரியும்...
ரொம்ப பாசமான தோழி ஒருத்தி படம் ரொம்ப சூப்பார இருக்கு… சுத்தமாக பயமே இல்லை தாராளமாக பார் என்று உறுதி அளிக்க..
நானும்... நம்பி பார்த்தேன்.. ப்பா…..
நான் எல்லாம் காஞ்சனாவை பார்த்தே கதிகலங்குபவள்..
டப்பிங் படம் ஜகன் மோகினியை பார்த்து ஜன்னி கண்டவள்…
குடும்ப ஆட்களின் தொல்லை தாங்காது அருந்ததீ பார்த்து விட்டு ஒரு வாரம் இரவில் பாத் ரூம் போவதற்கு வெளியே காவலுக்கு ஆள் போட்டவள்…
இப்படி என் வீர தீர பாராகரமத்தை அடிக்கொண்டே போகலாம்.. அப்படிப்பட்ட என்னை பார்த்து அது ரொம்ப நல்ல படம் என்று சொல்ல… நானும் காஞ்சனா லேவலில் இருக்குமாக்கும் என்று நம்பி பார்த்து தொலைக்க…
அடுத்த வந்த ஒரு மாதத்திற்கு வீட்டில் தனியாக இருக்கவே இல்லை… எந்த நேரத்தில் வீட்டில் விளக்கு எரிந்துக்கொண்டே தான் இருக்கும்… சொன்னா நம்ப மாட்டிங்க.. இன்று வரை.. இன்று வரை.. எங்கேயோ… யார் வீட்டிலாவது காற்றில் WIND CHIMES அடித்தாலும் அந்த படத்தில் பேய் வரும் சீன் தான் முதலில் கண்ணிற்கு முன்னாடி வந்து நிற்கும்..!!! என்ன படம்டா சாமி அது!! இன்றைய தேதி வரை நான் கடைசியாக பார்த்த பேய் படம்….அதுதான்!!!
நீங்கள் பேய் படத்தை வேண்டி விரும்பி பார்ப்பவராக இருந்தால்… எழுபதுகளில் வந்த OMEN படம் பாருங்கள்… ரொம்ப டெரராக இருக்குமாம்… அதுவும் குழந்தை மையமாக வைத்து வெளி வந்த படம் தான்.
அடுத்த படம் THE EXORCIST இதுவும் ஏழுபதுகளில் வந்த பழைய படம் தான்… இரண்டு பழைய படம் ஆச்சே என்று நினைக்காதிங்க.. இத்தனை TECHNOLOGY வந்த பிறகும் கூட இந்த இருபடங்களை அடித்துக்கொள்ளும் அளவு இல்லையாம்.. இந்த படத்தில் நடந்த விசித்திரம் என்னவென்றால்… இந்த படம் எடுக்கும் போதும் ஏகப்பட்ட விபத்து நடந்தது அந்தளவு சபிக்கப்பட்ட படம் என்று பரவலாக இந்த படத்தை பற்றி பேச்சு உண்டு!! இதை எல்லாம் நீ பார்த்த மாதியே சொல்ற என்று கேட்காதிங்க.. அந்த அளவு எல்லாம் நெஞ்சுரம் படைத்தவள் இல்லிங்க.. இந்த படத்தை பார்த்த ஆட்கள் சொன்ன செவி வழி செய்தி தான்..!!!
என் சொந்தகதையை விடுங்க… கார்த்திக்கின் கதை எப்படி இருக்கிறது என்ற உங்களின் கருத்தை கீழே தெரிவிக்கலாம்…