அத்தியாயம் - 9
“யாருப்பா??” என்றார் தான் அணிந்திருந்த கண்ணாடியைத் தூக்கி விட்டபடி மட்டுவார்குழலி.
“நான் தாங்கம்மா... உங்க வீட்டில் வேலை செய்யும் செங்கமலத்தின் உறவு முறை பையன்.. நீங்க சிபாரிசு பண்ணிதானம்மா எனக்கு பக்கத்து எஸ்டேட்டில் டிரைவர் வேலை கிடைத்தது” என்றான் மிகவும் பணிவாக.
இவனுக்காகத் தான் காத்திருந்தார் என்று டைனிங் டேபிளிலிருந்த இருவருக்கும் புரிய...
ஆனால் மட்டுவார் குழலி பாட்டியோ...
“ஆங்... இப்ப ஞாபகம் வருது... எப்படிப்பா இருக்க?” என்றார் ஐந்து வினாடி யோசிப்பது போல் பாவித்து.
காலையிலிருந்து குட்டி போட்ட பூனை மாதிரி நடந்தது என்ன?? இப்ப அவர் பேசும் விதம் என்ன?? எதுவுமே புரியாது மருமகளும் மாமனாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“உங்க புண்ணியத்தில் நல்லா இருக்கேன் மா என்று கூறியவன் இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் என் இரண்டாவது மகனுக்குக் காதுகுத்து வைத்திருக்கேன்மா... உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்றான் பம்பலாக.
“அப்படியாப்பா ரொம்ப சந்தோஷம்” என்று மொழிந்தவர் மல்லிகா என்று மருமகளை அழைத்தார்.
பாரம்பரியமாக அங்கே வாழ்ந்து வந்த மதிப்பு மரியாதை மிகுந்த குடும்பம் என்பதால் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது விஷயங்களுக்கு இப்படி சொல்வதும் ஆளுக்கு ஏற்றபடி பொருள் உதவி செய்வதும் வழக்கமாக நடக்கும் விஷயம் என்பதால்...
அந்த அழைப்பிற்குப் பொருள் என்ன என்று புரிந்த மல்லிகா... “இதோ வரேன் அத்தை” என்று கூறியபடி உள்ளே சென்றார்.
மகனின் பெயர் என்ன என்று ஆரம்பித்து மல்லிகா வரும் வரை ஏதேதோ குசலம் விசாரித்த மட்டுவார் குழலி... அப்படியே பேச்சுவாக்கில்...
“அப்புறம் நீ வேலை செய்யும் வீட்டில் இருக்கும் அந்த சின்ன பாப்பாவிற்கு காய்ச்சல் எப்படி இருக்கு?” என்று கேட்டுவைத்தார்.
புது தட்டில் பூ பழங்களுடன் பணத்தை வைத்து எடுத்து வந்த மல்லிகாவின் கால்கள் மாமியார் சென்ற பேச்சு போக்கை கேட்டுத் தயங்க... மெல்ல நடந்து அவர்கள் அருகில் சென்றாள்.
“ஆமாம்மா... பாப்பாவிற்கு நாலு நாளாகியும் ஜூரம் குறையாததால்... இன்று காலையில் நான் தான்ம்மா... ஹாஸ்பிட்டலில் போய் சேர்த்துவிட்டு அங்கிருந்து நேராக வருகிறேன்” என்றான் வருத்தமாக.
கொண்டு வந்த தட்டை அவனிடம் கொடுத்த மல்லிகாவிடம் பெரிய கும்பிடு போட்டு வாங்கியவனிடம்,
“எந்த ஹாஸ்பிட்டல்?” என்றார் அக்கறையாக...
“இந்த ஊரில் நம் ஹாஸ்பிட்டல் தவிர வேறு எதும்மா நல்லபடியா இருக்கு?” என்று சச்சிதேவ் கட்டிய பெரிய மருத்துவமனையைத் தான் “நம்ம” என்று மரியாதையாக சொன்னான் அவன்.
நாட் நாட் செவனின் ஏன் இவனின் வரவிற்காக காத்திருந்தார் என்று மல்லிகாவிற்கு அந்த நிமிஷம் நன்கு புரிந்துவிட... வந்தவனை சிரித்த முகமாக அனுப்பி வைத்தார்.
“மாலை சங்கி, மங்கியுடன் நான் சென்று நிரல்யாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்றார் மருமகளிடம் ஏதோ தீவிரமான யோசனையில் இருந்தபடியே..
“பார்க்க வேண்டியது தான்... ஆனால்...”
“என்ன ஆனால்...”
“நிரல்யா தங்கமான குழந்தை தான்.. ஆனால் அவளுடைய அம்மாவைப் பற்றித் தான் உங்களுக்குத் தெரியுமே… அவங்க மாமியார் இருந்த வரையாவது விசேஷத்தில் பார்த்தால் லேசாக சிரிப்பார்கள். இப்ப அவங்க போனபிறகு நாமாக பேசினால் கூட முகம் கொடுத்துப் பேச மாட்டறாங்களே... அதுவும் இப்படி திடுதிப்புன்னு போய் அங்க நின்னா என்ன நினைப்பாங்களோ?” என்றார் வருத்தத்துடன் மல்லிகா.
“பிறந்த இடமும்... புகுந்த இடமும் அளவிற்கு மீறி இடம் கொடுத்ததின் பலன்.” என்று பாட்டி பெருமூச்சு விட்டவர் “எல்லா சமயத்திலும் எல்லோருக்கும் பிடித்த மாதிரியே நடந்துக்கொள்ள முடியாது மல்லிகா” என்றார் தெளிவாக.
மாமியார் ஒன்றை முடிவு எடுத்துவிட்டால் அதை மாற்றுவது நடக்காத காரியம் என்பதால்...
“எத்தனை மணிக்குப் போறிங்க?” என்றார் மல்லிகா. நடக்க வேண்டிய காரியத்தில் கவனத்தை செலுத்தி.
அதுதான் மல்லிகா... அநாவசியமாக எதையும் அலட்டிக்கொள்ள மாட்டார். அதனால் தான் இத்தனை எளிதாக தன் மாமியாருடன் மட்டும் இல்லை மொத்த சச்சிதேவ் ஜீன்ஸ்சுடன் பொருந்திப் போக முடிந்தது. இல்லை என்றால் இவர்களின் செய்கையைப் பார்த்துக் குறைந்த பட்சம் இருபது தடவையாவது மாரடைப்பு வந்திருக்கும்!!
“பசங்க பள்ளியிலிருந்து வந்தவுடன் கிளம்புகிறேன்” என்றார் ஒரு முடிவோடு.
அவர் சொன்ன வாய் முகூர்த்தம்... மழை விடாது பொழிந்துக்கொண்டு இருந்ததால் பள்ளி இரண்டு மணிக்கே விட்டு விட... அதிசயத்தில் அதிசயமாக ஐவரும் ஒரே காரில் வீடு வந்தனர்.
வீட்டிற்கு வந்த இரட்டையர்களை மட்டும் அல்ல கார்த்திக், பத்ரி ஏன் ஆரி கூட உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை சேரும் சகதியும் பூசிக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
அவர்களை முதலில் கண்ட பாட்டி “என்னாச்சு?? என்பது தானே பொதுவான கேள்வியாக இருக்கும்??
ஆனால் பாட்டியோ “எந்த குரங்கு மரத்தை விட்டு இறங்க மறுத்தது... சங்கியா மங்கியா” என்றார் வினையமாக.
இரட்டையர்களில் யாரோ ஒருத்தியால் தான் எல்லோரும் இந்த அரிதாரத்தைப் பூசிக்கொண்டு வந்திருக்கிருக்கிறார்கள் என்பதை அறிந்த பாட்டி இப்படி கேட்டார்.
எந்த பதிலும் சொல்லாமல் ஆரி குளிப்பதற்காக தன் அறைக்கு விரைய... பத்ரியோ... “மங்கி குரங்கும் இல்லை சங்கி குரங்கும் இல்லை. நம் வீட்டிற்கு புதிதாக வந்திருக்கும் மற்றொரு குரங்கு” என்று கையைக் காட்ட... பின்னாடி மங்கியின் கையில் கண்களை மூடிப் படுத்திருந்த ஒரு குட்டி குரங்கை தங்க தாம்பாளத்தில் வைரத்தை நிரப்பி கீழே சிதற விடாது எடுத்து வருவது போல் ஏந்திக்கொண்டு அடிமேல் அடி எடுத்து உள்ளே மங்கி வர... அவளுக்குத் துணையாக சங்கியும் கீழே ஒரு கையைப் பிடித்துக்கொண்டு வந்தாள். அதற்கான பொருள் இரண்டாம் கட்ட பாதுகாப்பாம்!!!
அத்தோடு தன் கடமை முடிந்து விட்டது என்று பத்ரி சட்டையைக் கழுட்டியபடி குளிப்பதற்காக ஓடினான்!!!
ஆனால் கனல் பறக்கும் கண்களுடன் நின்ற கார்த்திக்...
மங்கியின் கையிலிருந்த குரங்கைக் காட்டி, “அடிப்பட்ட குரங்கைப் பிடிக்க இந்த குரங்கு மரத்தில் ஏற... இவளைப் பார்த்ததும் உயிருக்குப் பயந்து அந்த குரங்கு கீழே சமர்த்தா இறங்கி விட்டது. ஆனால் வீராவேசமாக காப்பாத்த போன குரங்கிற்கு மரத்தில் இருந்து கீழே இறங்க தெரியாது லபோ திபோன்னு கத்த... அப்புறம் நாங்க ஏறிப் போய் இந்த குரங்கை மீட்டு வந்தோம்” என்று கோபத்தில் மூச்சிற்கு முந்நூறு குரங்கு போட்டான் கார்த்திக்.
கார்த்திக் திட்டியது பற்றியோ இல்லை தலை முதல் பாதம்வரை சேறும் சகதியுமாக இருந்ததைப் பற்றியோ சிறிதும் அக்கறையின்றி தன் தலையிலிருந்த ரிப்பனால் அடிப்பட்ட இடத்தில் கட்டுப் போடப்பட்டிருந்த குரங்கின் தலையை வருடிக் கொடுத்தாள் மங்கி!!!
இந்த குரங்கு தான் பின்னாளில் “சிம்பியோடு ஐவரானோம்” என்று அவர்கள் வீட்டின் ஒரு வளர்ப்பு பிள்ளையாகப் போகிறது என்று தெரிந்திருந்தால் சிம்பியை என்ன மங்கியையும் அந்த மரத்திலேயே கிட என்று சகோதரர்கள் விட்டு வந்திருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஞான திருஷ்டி வாய்க்கப் பெறாததால் சேற்றில் குளித்து, சகதியில் முக்கி எழுந்து வீணாக வம்பை விலை கொடுத்து வாங்கி வந்தார்கள்!!!
“ரோடு வழியாக வராது காட்டு வழியாக வந்திங்களா??” என்றார் பாட்டி யூகித்து.
“ம்ம்... மழையால் வரும் வழி ரொம்ப டிராபிக்... வீடு வர தாமதமாகும் என்று காட்டுப் பக்கமாக வந்தோம். இப்படி இந்த குரங்கிடம் மாட்டி அங்கயே அரை மணி நேரம் நிற்க வேண்டி இருக்கும் என்று தெரிந்திருந்தால் நாங்கள் மெயின் ரோடு வழியாகவே வந்திருப்போம்” என்று காட்டமாகப் பதில் சொன்னவன் அதற்கு மேல் நிற்காது நகர...
“கார்த்திக்...” என்று அவனை அழைத்து நிறுத்திய பாட்டி... “தாத்தாவை அழைத்துக்கொண்டு மாலை நான்கு மணிக்கு மேல் மருத்துவமனை போகணும் துணைக்கு என்னோடு வா”
“சரி பாட்டி” என்று தலை மட்டும் அசைத்து விட்டு வேகமாக நகர்ந்தான் கார்த்திக்.
கையிலிருந்த குரங்கோடு கம்பிமேல் நடப்பது போல மிக பத்திரமாக அடி எடுத்து வைத்த மங்கி, “பாட்டி... தாத்தாவிற்கு உடம்பு சரியில்லாத மாதிரி இதுக்கும் உடம்பு சரியில்லை தானே?? நாம் இதையும் மருத்துவமனைக்குக் கூப்பிட்டு போகணும்” என்றாள் கெஞ்சலாக.
“கண்டிப்பாக போகலாம்” என்று பாட்டி கூறிக்கொண்டே அவள் கையிலிருந்ததை எட்டிப் பார்த்தவர் திடுக்கிட்டார். ஏன் என்றால் அவள் கையிலிருந்தது சாதாரண குரங்கு குட்டி அல்ல... சிம்பான்சியின் குட்டி!!!
பேத்தியின் குணத்தைப் பற்றி நன்கு அறிந்த பாட்டி ஒரு நிமிடம் வேகமாக யோசித்து, “டாக்டரிடம் காட்டி விட்டுத் திரும்பவும் காட்டிலேயே விட்டுவிட வேண்டும் இல்லை என்றால் இதோட அம்மா தன் குட்டியை காணவில்லை என்று அழும் சரியா??” என்றார் பாட்டி.
“அம்மா இல்லாது இதனால் இருக்க முடியாதா?? நான் இங்கேயே வளர்க்கலாம் என்று ஆசையோடு இருந்தேன் பாட்டி” என்று மிக வருத்தத்துடன் கூறியபடி அதன் தலையைத் தடவிக்கொடுத்தாள்.
“அப்பாடா” என்று தன் புத்திக் கூர்மையை மெச்சிக்கொண்டார் நாட் நாட் செவன்... “உன் அம்மாவை விட்டுப் பிரிந்தால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும், அதே மாதிரி இதுக்கு இருக்கும்...” என்று பேத்தியைச் சமாதானப்படுத்தினார்.
இப்போ அனுப்பி வைத்தாலும் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் வீட்டின் நிரந்தர உறுப்பினராகப் போகிறது என்ற உண்மை நிலவரத்தை உணராது அவசரப்பட்டு தன் புத்திக் கூர்மையை மெச்சிக்கொண்டார் நாட் நாட் செவன்!!!
மதியம் மருமகள் அவருக்காகவே பிரத்தியேகமாக சமைத்திருந்த கொள்ளு ரசத்தைச் சாப்பிட்டு விட்டு அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தவரை உலுக்கி எழுப்பி மருத்துவமனைக்கு அழைத்தார் பாட்டி!!!
தூக்கக் கலக்கத்தில் எழுந்த சங்கரன், “சாதாரண இருமல் சளிக்கு எல்லாம் எதுக்கு அலட்டிக்கிற??” என்று மறுத்த பிறகும் பாட்டி அடம் பிடிக்க...
“சரி போகலாம்” என்று வேறு வழி இல்லாது ஒப்புக்கொண்டவர் கிளம்பி அரை மணி நேரம் கழித்து வெளி வர... கூடத்தில் ஒரு பட்டாளமே தயாராக இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார் தாத்தா.
பின்னே சங்கி, மங்கி, கார்த்திக், பத்ரி மற்றும் ஆரியும் பெரிய பேக்கில் சாப்பிடுவதற்குத் தேவையான பழம் மற்றும் இதர பொருட்களும் இருக்க குழம்பிப் போனார் தாத்தா.
எப்பொழுதும் மருத்துவமனைக்குப் போகும் போது தெரிந்தவரைச் சந்திக்க நேரும் என்பதால் கையை வீசிக்கொண்டு சும்மா போகாது... சந்திக்கும் நபர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துப் போவது வழக்கம் என்றாலும்... இவர்கள் ஏன் கிளம்பி இருக்கிறார்கள் என்று குழம்பியவர்...
“நீங்க எங்க போக கிளம்பி தயாராக இருக்கிங்க? என்றார்.
“உங்களோட மருத்துவமனைக்குத்தான் தாத்தா” என்றாள் சங்கி சந்தோஷமாக.
மருத்துவமனைக்கு வருவதற்கு என்ன இத்தனை சந்தோஷம் என்று மனதில் நொந்துக்கொண்ட தாத்தா,
“நீங்க எல்லோரும் எனக்கு துணையாக வர்றிங்களா?” என்றார் தாத்தா குழம்பிப் போய்.
“இல்ல.. உங்களுக்குத் துணையாக பாட்டி வராங்க.. பாட்டிக்குத் துணைக்காக கார்த்திக் வருகிறான், நான் மங்கி துணைக்காக வரேன்” என்றாள் சங்கி விளக்கமாக.
“மருத்துவமனைக்கு சும்மா எல்லாம் வரக் கூடாது சங்கி. எனக்கு உடம்பிற்கு முடியில்லைன்னு நான் போகிறேன்... நீங்க எதற்கு வரணும்??”
“தாத்தா... நாங்க ஒன்றும் சும்மா வரவில்லை. உங்களுக்கு எப்படி உடம்பிற்கு முடியவில்லையோ அதேபோல் தான் இதற்கும் உடம்பிற்கு முடியில்லை. போன முறை தன் இறகில் அடிப்பட்ட குயிலுக்கு நான் மருந்து வைக்கப்போய் அது செத்து போச்சா... அப்பதான் நிரு சொன்னாள். இந்த மாதிரி அடிப்பட்ட விலங்குகளை டாக்டரிடம் காட்டணுமாம்.. அதனால தான் உங்களைக் காட்டி விட்டு இதற்கும் காட்ட வேண்டும்” என்று தன் கையில் மலங்க விழித்த குட்டி மனித குரங்கைக் காட்டினாள் மங்கி.
எப்பயுமே விலங்குகளின் மேல் தீராத பாசம் காட்டும் மங்கியின் குணத்தைப் புரிந்த தாத்தாவிற்கு... அது சிம்பான்சி வரை நீளும் என்பதை புரிந்துகொள்ளச் சற்று சிரமமாக இருந்தாலும்.... அதை அப்பட்டமாக வெளியே காட்டாது, இதை எங்கிருந்து பிடித்துக்கொண்டு வந்தாள் என்று தீவிரமாக யோசித்தவர்...
“இதற்கு நம்ம டாக்டர் பார்க்கக் கூடாது... வெட்டினரி டாக்டரிடம் காட்டணும்” என்று சொல்லி முடிக்கும் முன்...
“ஏன்... ஏன்... நம்ம டாக்டரிடம் காட்டக் கூடாது?? இதிலிருந்து தான் மனிதர்கள் வந்தார்கள் என்று நிரு சொன்னாளே... இந்த மனித குரங்கும் தான் நம் மூ...மூ….” என்று மூதாதையர்கள் என்று சொல்ல வந்தவள் அந்த வார்த்தையை மறந்து போய் தடுமாறிக்கொண்டு இருக்கும் போதே...
“முத்தாத்தா” என்று முடித்து வைத்து அங்கிருந்தவர்களுக்கு திகில் வைத்தியம் கொடுத்தாள் சங்கி.
அந்த பேச்சைக் கேட்டபடி வந்த மல்லிகாவும் பாட்டியும் அதிர்ச்சியில் நிற்க...
“என்னடி சொன்ன முத்தாத்தான்னா?? இத்தனை நேரம் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது அதை கிளியர் பண்ணிட்ட... கண்டிப்பாக உன்னுடைய முத்தாத்தா இந்த வம்சத்தை சேர்ந்தவங்க தான்” என்று கார்த்திக் சிரித்தபடி அவள் தலையில் ஒரு குட்டு வைத்தான்.
“ஸ்ஸ்ஆ..” என்று தலையைத் தேய்த்துக்கொண்டவள், “அம்மா பாரும்மா... கார்த்திக் அடிக்கிறான்” என்று வாய் பேசினாலும் அவள் கை கார்த்திக்கிடம் சண்டையிடத் தொடங்க... தங்கையின் எதிர்த் தாக்குதலை மிக எளிதாக சமாளித்து சண்டையை மேலும் வளர்த்துவிட்டான் கார்த்திக்.
“மருத்துவமனைக்குக் கிளம்பும் வேளையில் கூடவா சண்டை?” என்று அம்மாவின் குரல் கேட்டு கார்த்திக்கும் சங்கியும் நிறுத்த... “நீ சொன்னது தப்பு அது முத்தாத்தா இல்லை மூதாதையர்கள் ஒழுங்கா சொல்லு.. வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லக் கூடாது” என்றார் மல்லிக்கா கண்டிப்புடன்.
ஆனால் அது சங்கியின் வாயில் வந்தாதானே?? எத்தனை தரம் சொல்லியும் மூதாதையர்கள் முத்தாத்தா என்றே வந்து தொலைக்க... ஒவ்வொரு முறையும் சங்கி முத்தாத்தா என்று உளரும் போதும், சங்கரனின் முகம் போன போக்க பார்த்தால் நிஜமாகவே அவரின் முத்தாத்தா அந்த வம்சத்தைச் சேர்ந்தவர்களோ என்று நினைக்கும் படி தான் இருந்தது அந்தக் காட்சி!!!
அந்த தமிழ் வகுப்பைப் புறக்கணிக்க எண்ணிய பாட்டி...
“இருட்டும் முன் கிளம்பிப் போய்விட்டு சீக்கிரம் வரலாம்” என்று நாட் நாட் செவன் கூற… பத்ரி, ஆரி, மல்லிகாவைத் தவிர எல்லோரும் படை சூழ கிளம்பினர்.
மருத்துவமனை செல்லும் வரை சங்கியின் பேச்சு காதில் கொசுவின் ரீங்காரமாய்... எரிச்சல் படுத்த பத்து தடவை வாய் மூடுடீ என்று சொல்லிய பிறகும் சங்கி மூடியபாடில்லை.
கார் நின்றது தான் தாமதம் காரை விட்டுக் குதித்து இறங்கிய கார்த்திக், “பாட்டி நான் வரும்போது இவளுடன் காரில் வரமாட்டேன். இங்கிருந்து நடந்தே போனாலும் போவனே தவிர இந்த காரில் என்னால் நிச்சயம் வரமுடியாது” என்றான் கார்த்திக்.
“உங்க பஞ்சாயத்தை வீட்டிற்குப் போய் பார்க்கலாம்...” என்று கூறிய நாட் நாட் செவனின் விழிகளுக்குக் கையில் குரங்குடன் இறங்கிய மங்கியை காண... அவசரமாய் “அதை காரிலேயே விட்டு விட்டு வா மங்கி.. முதலில் நாம் தாத்தாவிற்கு காட்டி விட்டு பிறகு வேறு நல்ல டாக்டரிடம் அதைக் காட்டலாம்” என்றார் நயமாக.
“தனியாக இருக்குமே பயமா இருக்காதா?” என்றாள் கையிலிருந்த அதைப் பரிதாபமாக பார்த்து.
“அது துணைக்குத் தான் டிரைவர் மாமா இருக்கார் இல்லை” என்று சொல்லும் வேளையில் அந்த டிரைவர் மாமாவாகப்பட்டவர் அரண்டு போனார்!!
குரங்கை எல்லாம் “பேபி சிட்டிங்” பண்ணவா டிரைவராக இருக்கேன் என்ற கோபமும்.. அது எங்கு தன்னை கடித்துக் குதறி வைக்கப் போகிறதோ என்ற பயமும் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது!!!
உள்ளே நுழைந்ததும் தான் தாமதம் “நீங்களும் கார்த்திக்கும் போய் சீதா ராமனை பாருங்க... ஏற்கனவே அவரிடம் போனில் பேசிவிட்டேன். நாங்கள் இப்போ வந்து விடுகிறோம்” என்று அதிகாரமாக மொழிந்த நாட் நாட் செவனிடம் என்ன ஏது என்று விசாரிக்கும் முன் அவர் சங்கி மங்கியை அழைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக அடுத்த தளத்திற்குப் படியேற தொடங்கினார் பாட்டி.
“என்னடா நடக்கிறது இங்கே?? என்னைக் காட்ட என்று வந்துவிட்டு உன் பாட்டி எங்கடா போறாங்க??” என்று நடந்தபடி கேட்டார் தாத்தா.
“ம்கூம்” என்று தலையை ஆட்டிய கார்த்திக் திரும்பி யோசனையோடு பார்த்துவிட்டு பின் தாத்தாவுடன் நடந்து, அவர்கள் எப்பொழுது வந்தாலும் பார்க்கும் மருத்துவரான சீதா ராமனைப் பார்க்கச் சென்றனர்.
அரை மணி நேரம் கழித்து கார்த்திக் மட்டும் தனியாக வெளியே வந்தவனின் கையில் சளி ஜூரத்திற்கான மாத்திரைகள் பையுடன் அங்கே போடப்பட்ட நாற்காலியில் பாட்டியின் வரவிற்காக அமர்ந்திருக்க... படி இறங்கி ஓடி வந்த மங்கியைக் கண்டான் கார்த்திக்.
“ஏய்...” என்று அழைத்து மங்கியை தடுத்து நிறுத்தியவன், “எங்கடீ பாட்டி...??” என்றான் பின்னால் இருந்த மாடிப்படியைப் பார்த்தபடி.
“பாட்டி நிருவுடன் இருக்காங்க” என்றாள் மூச்சிறைக்க... “உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்.”
“நிருவை இங்க சேர்த்திருக்காங்களா?”
“ம்ம் ஜூரம் அதிகமாகி அட்மிட் பண்ணி இருக்காங்களாம்” என்று மிகுந்த சோகத்துடன் செப்பியவள், “இன்றைக்கு எனக்கு ரொம்ப பேட் டே இல்லடா... மதியானம் குரங்கிற்கு அடிப்பட்டது. இப்ப நிரு... எனக்குப் பிடித்த இருவரும் உடம்பு சரி இல்லாமல் இருக்காங்க” என்று மனித குலத்தையும் வானர குலத்தையும் ஒரே தராசில் வைத்துப் பேசினாள் மங்கி.
“இப்ப எப்படி இருக்கிறாள்?”
“இன்னும் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு தான் இருக்கு...”
“ஓ!!” என்றவன்... “ஏன் என்னைப் பார்க்க வந்த??” என்று முதலில் சொன்னதை இப்ப கேட்டான் கார்த்திக்.
“பாட்டிதான் உன்னை அழைத்து வரச் சொன்னார்” என்றாள் அவனின் கையைப் பிடித்துக்கொண்டு.
“சரி வா போகலாம்” என்று கூறியவனை மங்கி அழைத்த மூன்றாவது தளத்திலிருந்த அறைக்கு உள்ளே சென்றனர்.
சென்ற வாரம் பார்த்த அந்த நிரல்யா தானா இவள் என்று கேட்கும் படியாக ஜூரத்தால் துவண்டு வாடிப் போய் இருந்தாள். ஒரு புறம் சங்கி அவளின் கையைப் பிடித்துத் தடவிக்கொண்டு இருக்க... மங்கி அவளின் தலைமாட்டில் ஏறி அமர்ந்தாள்.
மங்கி தலையணைக்கு அருகில் அமர்ந்ததையோ இல்லை சங்கி தன் கையைத் தடவியபடி இருந்ததையோ உணராத நிரல்யா... இவனின் வரவை உணர்ந்தது போல் லேசாக கண் விழித்து அவன் நின்றிருந்த இடத்தை நேராக பார்த்தவள் பின் மெல்ல கண்களை மூடிக்கொண்டாள்.
சங்கி மங்கி மாதிரி துருதுருவென்று நிரல்யா இருந்தது இல்லை என்றாலும் பேரமைதியாக இருப்பது தான் அவளின் தனி சிறப்பு. ஆனால் இப்படி துவண்டு படுத்திருந்தவளைக் காணச் சகிக்காது விழியால் அந்த அறையை நோட்டம் விட்டான்.
பாட்டி, சங்கி, மங்கியை தவிர்த்து வீட்டு ஆட்கள் யாரும் இல்லாதது கண்களை உறுத்த... எப்படி அவளை மருத்துவமனையில் தனியாக விட்டார்கள் என்ற எண்ணம் அவன் மனதில் கட்டுக்கடங்காத கோபத்தைக் கிளப்ப...
“அவளுக்கு என்னாச்சு பாட்டி??” என்றான் பாட்டியின் அருகே வந்து நின்ற கார்த்திக்.
“டைப்பாயிட் மாதிரி இருக்கு... இன்று தான் ப்ளட் டெஸ்ட்டிற்கு அனுப்பி இருக்காங்க.. இரவு முடிவு வரும்” என்று டாக்டர் சொன்னதை விரிவாக விளக்கினார் பாட்டி.
“ஓ!!! ஆனா… ஏன் இங்க யாரும் இல்லை?”
“பாண்டியன் டெல்லி போய் இருக்காராம்... அக்கா மாமா இருவரும் ஒருவாரம் எங்கேயோ டூர் போய் இருக்காங்களாம்... அம்மாவால் வர முடியாது. அதனால் வேலை ஆட்கள் ஆள் மாற்றி ஆள் வந்து பார்த்துக்கொள்கிறார்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார் பாட்டி.
“ஊரிலிருந்தாலும் வந்து பார்த்து இருக்க போறாங்களா என்ன??” என்று பாட்டியிடம் கோபமாக கேட்டான் கார்த்திக்.
“ஷ்ஷ்…. உடம்பிற்கு முடியாமல் கண் மூடிப் படுத்து இருக்காளே தவிர... நிரல்யா தூங்க வில்லை.. .காதில் விழ போகிறது.” என்று பாட்டி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே...
“தெரியும் பாட்டி” என்றான் கார்த்திக் பொறுமை அற்று.
தலையைத் திருப்பி அவனை ஒரு மாதிரியாக பாட்டியை... கவனிக்கும் மனநிலையில் கார்த்திக் இல்லை.
“வேலை ஆட்கள் கூட இங்கே இல்லையே”
“நான் வரும்போது இங்க தான் இருந்தாங்க... நான் தான் போய் காபியாவது குடித்துவிட்டு வாங்கன்னு கீழே அனுப்பினேன்” என்றார் பாட்டி.
“ம்ம்...” என்று சொன்னதற்கு மேல் எதுவும் பேசவில்லை கார்த்திக்.
“உன் தாத்தாவிற்கு டாக்டரிடம் காட்டியாச்சாடா?”
“காட்டி விட்டு அங்கே உட்கார்ந்து கதை அடித்துக்கொண்டு இருக்கிறார் பாட்டி”
“அப்ப ஒன்று செய்வோம், உன் தாத்தா தன் பால்ய தோழர்களுடன் கதை அடிக்க ஆரம்பித்து விட்டால் நேரம் போவதே தெரியாது உட்கார்ந்திருப்பார். நான் மங்கியை அழைத்துக்கொண்டு வெட் டாக்டரைப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன், நீயும் சங்கியும் இங்கே இருங்கள்” என்று யோசனை கூற, தலை அசைத்து ஒப்புக்கொண்டான் கார்த்திக்.
பாட்டியும் மங்கியும் கிளம்பின பிறகு இரண்டு முறை புரண்டு படுத்த நிரல்யாவைப் பார்த்தவன் மனதில் அன்று எழும்பிய குற்ற குறுகுறுப்பு மீண்டும் தலை தூக்கி எழ... எதற்காக அப்படி உணர்கிறோம் என்று புரியாது அவன் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே... அவசரமாக எழுந்த சங்கி...
“கார்த்திக்.. என்னுடைய பேக் பேக்கில் இவளுக்காக ரசகுல்லா எடுத்து வந்தேன். அதை காரிலேயே மறந்து விட்டு விட்டேன். இங்கேயே இரு, நான் போய் எடுத்து வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறிய சங்கியின் காதில்,
“வேண்டாம் அவள் சாப்பிட மாட்டாள்...” என்று சொன்னதைக் காதிலே வாங்காது எழுந்து வெளியே ஓடினாள் சங்கி.
தங்கை கதவைச் சாத்திக்கொண்டு போனவுடன்... அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு மெல்ல சென்று நின்றான்.
அவனின் அருகாமையை உணர்ந்தவள் மீண்டும் மெல்ல கண்களைத் திறந்துப் பார்க்க...
“என்னப்பண்ணுகிறது?” என்றான் கார்த்திக் கட்டிலில் அருகில் நாற்காலியை இழுத்துப்போட்டப்படி.
“பயமாக இருக்கு”
“டைப்பாயிட்டாக இருந்தாலும் மாத்திரை சாப்பிடால் குணமாகி விடும் அதுக்கு எதுக்கு பயப்படற?”
அந்த பதிலை கேட்டு கண்களை மூட்டிக்கொண்டு ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக படுத்தி இருந்தவள்.. “எனக்கு… எனக்கு அப்பாவை பார்க்கவேண்டும்” என்றாள் மிக தீனமாக.
இந்த அப்பா பைத்தியங்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்று மனதில் பொருமினான் காரணம் சங்கியும் சரியான அப்பா பைத்தியம் என்பதால் அவனால் நிரல்யாவின் மன நிலையை உணர முடிந்தது.
“நீ இங்கே அனுமதிக்க பட்டு இருக்கும் தகவல் எப்படியும் அவருக்கு போய் இருக்கும்.. ஊரில் இருந்து சீக்கிரம் திரும்பி வந்தவுடன் உன்னை வந்து இங்க பார்ப்பார்” என்று அவளை சமாதானம் படுத்த முயன்றவன்.
அதை கேட்டவுடன் பட்டென்று கண்களை அகல விரித்தவள் “வேண்டாம் அப்பா என்னை பார்க்க இங்கே வர வேண்டாம்…. வர கூடாது” என்றாள் அவசரமாக.
சங்கி போல் அனாவசியமாக வார்த்தைகளை கொட்டுப்பவள் அல்ல இவள் என்பதை அறிந்திருந்த கார்த்திக்..
ஏதோ பெரிய காரணம் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து “ஏன்?” என்றான் கூர்மையாக அவளை பார்த்து.
“இது.. இந்த அறையில் தான் பாட்டியை அட்மிட் செய்து இருந்தார்கள். கடைசியாக என்னுடன் அவர் பேசியது இதே அறையில்” என்றாள் கண்கள் கலங்க.
அவளின் பாட்டி மறைந்து ஒருவருடம் மேல்லாகியும் மிக கசப்பான நிகழ் அரங்கேறிய இந்த அறையை துள்ளியமாக ஞாபகம் வைத்திருக்கிறாள் என்ற அதிர்ச்சி தான் அவனை முதலில் தாக்கியது.
வயோதிகம் காரணமாக உடம்பிற்கு முடியாது கொஞ்ச நாட்கள் மருந்துவமணையில் சேர்க்கப்பட்டு பின் உயிர் பிரிந்த அவரின் பாட்டி இந்த அறையில் தான் கண்களை மூடினார் என்பதை விட இந்த அறைக்கு அப்பா வந்தால் தன்னை போலவே அவருக்கும் அந்த பழைய நினைவுகள் வரும் என்று தந்தைக்காக தவிக்கும் அந்த எட்டு வயதி சிறுமியின் மன பக்குவத்தை நினைத்து அவன் நெஞ்சை பிசைந்தது.
“வேறு அறைக்கு உன்னை மாற்ற தாத்தாவிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்” என்று நிரல்யாவின் அப்பாவிற்காக அல்லாலது அவளுக்காக சொன்னான் கார்த்திக் அத்தாடு நிறுத்தாது.. “நிரல்யா… நான் உன் பாட்டியை மறக்க சொல்லவில்லை ஆனா இந்த மாதிரி மனதிற்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும் விஷயங்களை மறக்கலாம் இல்லையா?” என்றான் தயக்கமாக.
“ம்ம்… ஆனால் எப்படி மறப்பது?” என்றாள் அப்பாவியாக நிரல்யா.
தொடரும்…..
அடுத்த பதிவு - செவ்வாய்
DEAR READERS.....
இந்த பதிவு சங்கி, மங்கியின் கதைகளை முன்பே படித்திருப்பவர்களுக்கு மட்டுமே புரியும்...
ஆக இப்படி தான் சிம்பி அவங்கள் குடும்பத்தில் உள்ளே நுழைந்தது...
சங்கி மங்கியை பற்றி விசாரித்தவர்களை விட என்னிடம் சிம்பியை பற்றி விசாரித்தவர்கள் தான் மிக அதிகம்.... அவர்களுக்காகவே... இப்படிதான் முதன் முதலில் சிம்பி அவர்கள் வீட்டிற்குள் வந்ததது.... இத்தனை பாசமாக இருப்பதன் காரணம் ஒரு முறை அல்ல இருமுறை அதன் உயிரை காப்பாற்றியது சங்கி மங்கி மட்டும் அல்ல மொத்த சச்சிதேவ்வும் தான் ...
கதையை படித்து விட்டு அப்படியே போகாது... நல்லா இருந்தாலும்.... நல்லா இல்லை என்றாலும் உங்களின் கருத்தை கீழே தெரிவிக்கவும்.

Last edited: