வசந்தம் வீசுமா...( சிறுகதை )
கவிசெளமி.
காலையிலேயே வேகவேகமாக வேலைக்குப் புறப்பட்டு கொண்டிருந்தால் உமா.முழுவதுமாக மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தது உமாவிற்கு இங்கு வேலைக்கு சென்று... இந்த வருடம் வந்தால் உமாவிற்கு இருபத்தி ஏழு வயது முடிந்து விடும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவள் வேலை செய்வது அங்கிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் எப்போதுமே பரபரப்பாக இருப்பாள். உமா என்று சொன்னாலே அவள் வேலை செய்யும் இடத்தில் சிம்ம சொப்பனம் தான் செக்ஷன் இன்சார்ஜ் இவளுடைய வேலை…
எப்போதும் பிறரை அதட்டிக் கொண்டே வேலை வாங்குவது இவளுடைய முக்கிய கடமை என்று தான் சொல்ல வேண்டும்
இது எல்லாமே வேலை நேரத்தில் மட்டும் தான் அதை தாண்டி விட்டால் அவளைப் போல கலகலப்பாக வம்பிழுக்கும் பெண் அங்கே யாருமே இருக்க மாட்டார்கள்.
அங்கேவேலை செய்பவர்கள் கூட வேலைநேரத்தில் மட்டுமே சற்று பயத்தோடு வேலை செய்வதாக தோன்றும். அது தவிரவேலை முடிந்து விட்டால் அவர்களோடு ஒன்றி விடுவாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
உமாவின் வீட்டில் நீண்ட நாட்களாக மாப்பிள்ளை பார்க்கலாம் எனக் கூறிக் கொண்டிருக்க இன்றுவரை இவள் பிடி கொடுக்கவே இல்லை.
எதையாவது சொல்லி தட்டிக் கழித்து கொண்டிருந்தால் என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றும் பரபரப்பாக காலையிலேயே புறப்பட்டு கொண்டிருந்தால் வேலைக்கு... இத்தனை நாள் இல்லாமல் இன்று இவளுக்கு கிடைக்கப்போகும் அனுபவம் வேறு மாதிரி இருக்கப் போவதை அப்போது அவள் உணரவில்லை.
வழக்கம்போல அம்மாவிடம் திட்டு வாங்கி அரைகுறையாக சாப்பிட்டு தனது வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு புறப்பட்டாள் உமா.
எப்போதும் போல சரியாக ஒன்பது மணிக்கு அவளுடைய ஆபீசுக்குள் நுழைந்தாள். வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் அனைத்தையும் பேக்கிங் செய்வது தான் அவர்களுடைய கம்பெனியின் முக்கிய வேலை.
இவளுக்கு தனியாக அறை ஒதுக்கி இருந்தார்கள் ஆனால் வேலை முழுவதுமே பேக்கிங் பகுதியில் மட்டுமே.. அங்கே பெண்கள் ஐம்பது பேர் வேலைக்கு இருக்க அவர்கள் சரியாக,சுருசுருப்பாக வேலை செய்கிறார்களா...வேகமாக வேலை நடக்கிறதா என்பதை கவனிக்கும் வேலைதான் இவளுடையது.
காலையிலேயே அட்டடன்ஸ் நோட்டை எடுத்துக் கொண்டு வேலை செய்யும் பகுதிக்குள் நுழைந்தாள் உமா.
புன்னகையோடு நுழைந்தவள் வரிசையாக அனைவரது பெயருக்கு நேராக வந்ததிற்கான பதிவேட்டில் டிக் அடிந்தாள் அந்த காலை வேளையிலேயே ஃபேக்டரி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
ஒருபுறம் வேகமாக பேக்கிங் செய்து வைக்க இன்னொருபுறம் அதை ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்னொரு பக்கம் அதை அனைத்தையும புது அட்டை பெட்டியில் ஃபேக் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர் இன்னும் சில பெண்கள்.
பதினோரு மணியை தொடும்போது இவளுடைய நண்பனொருவன் திருமண பத்திரிகையை எடுத்துக் கொண்டு வந்திருந்தான். அவன் போனில் அழைத்து சொல்லவும் வேகமாக தான் இருந்த பகுதியில் இருந்து அவர்கள் இருந்த பகுதிக்கு நகர்ந்தால் உமா.
ஒரே காலேஜில் ஒன்றாக படித்தவர்கள். வேகமாக இவள் அங்கே செல்ல வந்திருந்தவனோடு நின்றிருந்தான் கதிர் பார்த்த நொடி அப்படியே அதிர்ச்சியாகி நின்றுவிட்டால் என்றுதான் சொல்ல வேண்டும்.
பழைய நினைவுகள் எல்லாம் வரிசையாக தாக்க அப்படியே தயங்கியபடி நிற்க அவளுக்கு அருகில் நெருங்கி இருந்தான் கதிர்.
"என்ன உமா இங்கே நீ என்ன எதிர்பார்க்கலை அப்படித்தானே என்று சொன்னவன் இன்னமும் நீ கல்யாணம் பண்ணிக்கல அப்படித்தானே" என நக்கலாக கேட்டான்.
"அது என்னோட சொந்த விஷயம் நீ தயவு செய்து தலையிடாத" என பற்களுக்கு இடையே கடித்தபடி கோபமாக பதில் சொன்னாள் உமா.
"இப்பவும் காலம் கடந்து போய்விடலை உமா இப்பவும் நான் வாழ்க்கை தர தயாராக இருக்கிறேன். எனக்கு இரண்டாவது மனைவியா நீ தாராளமா எப்ப வேணும்னாலும் வரலாம்" என இன்னும் நக்கலாக அவளுக்கு பதில் சொன்னான் கதிர்.
"நீ அசிங்கமா பேசாத உன்னோட முகத்தை பார்த்தாலே அருவருப்பா இருக்கு. நீ எல்லாம் என்ன மனுஷன்... இதுக்கு மேல ஏதாவது பேசினால் இது ஆபீஸ்ன்னு கூட பார்க்க மாட்டேன் அடிச்சு மூஞ்ச பேர்த்திடுவேன்" என கோபமாக அவளுக்கு பதில் சொன்னவள். பத்திரிக்கை கொண்டு வந்தவனை பார்த்து "என்ன உனக்கு தான் கல்யாணமா பத்திரிக்கையை கொடு ஏன் இந்த மாதிரி ஆளுங்கலையெல்லாம் கூட கூட்டிட்டு சுததற" எனக் கோபமாகக் கேட்டாள்.
"ஹே அவன் சொல்றதெல்லாம் கவனிக்காத அவன் எதையாவது உளருவான் இந்தா.. என்னோட கல்யாண பத்திரிக்கை இன்னும் பத்து நாள்ல கல்யாணம்.உன்னை கட்டாயமா எதிர்பார்ப்பேன். எல்லோருமே வராங்க நீயும் கட்டாயம் வரனும் என இவளுக்கு கொடுத்தவன்.
கதிரிடம் திரும்பி "அவகிட்ட என்னடா பேசிக்கிட்டு இருக்கிற ஏன் ரெண்டு பேரும் இப்படி முறைக்கறீங்க.. அதுதான் நீங்க நினைச்சது எதுவும் நடக்கலையே...அப்புறம் என்ன? உனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு குழந்தையும் பொறந்தாச்சு அப்புறம் என்ன இங்க வந்து இவ கிட்ட பேசற… வீட்ல சிஸ்டர் கிட்ட போட்டு கொடுத்துடுவேன் பார்த்துக்கோ" என கதிரிடம் சொன்னான்.
"இவள் கிட்ட வேற எதுவும் கேட்கலைடா ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கன்னு கேட்டேன் இது தப்பா இவளை நான் என்ன செய்ய போகிறேன்" என தன் பக்கத்து நியாயத்தை சொன்னான் கதிர்.
"மைண்ட் யுவர் ஓன் பிசினஸ் புரியுதா உன் வேலைய மட்டும் நீ பார்த்தா போதும் எனக்கு தெரியும் எப்ப கல்யாணம் பண்ணனும், யாரை கல்யாணம் பண்ணனும்னு உன்ன போல துரோகி எல்லாம் இந்த பூமியில் வாழும் போது ஏன் நான் வாழ மாட்டேனா" என அவனுக்கு கோபமாக சூடாக பதில் சொன்னாள் உமா.
"கல்யாணம் பண்ண வேண்டியதுதான யார் வேண்டாம்னு சொன்னாங்க பத்திரிகையைக் கொண்டு வந்து தைரியமா மூஞ்சிக்கு முன்னாடி வீசிட்டு பேசு... என்னோட கல்யாண பத்திரிகை வந்து சேருன்னு...அதை விட்டுட்ட... உன்ன நினைச்சுகிட்டு உனக்காக நான் இன்னும் காத்திருக்கறேன் அப்படின்னுக்கு சொல்லறமாதிரி தனியாக இருந்தா...இப்ப மட்டுமில்ல இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இதே கேள்வியை வந்து கேட்பேன்" என அவளுக்கு பதில் சொன்னாள் கதிர்.
அவனிடம் கோபமாக உமா" நல்லா எழுதி வச்சுக்கோங்க இன்னும் ஒரு வருஷம் வேண்டாம் ஆறுமாதம் என் கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துட்டு வந்து உன் மூஞ்சில தூக்கி வீசுவேன். ஒழுங்கா உன் பொண்டாட்டி, குழந்தையுடன் வந்து சாப்பிட்டுட்டு போ"என்று கோபமாக சொன்னாள்... கூட வந்தவனிடம் திரும்பி "சபா இவனை கூப்பிட்டுட்டு கிளம்பு இன்னொரு முறை என் கண்ணில் பட்டால் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது.எது கிடைக்குதோ அதை எடுத்து யோசிக்காமல் அடிச்சிடுவேன்" என பதில் சொன்னாள்.
வந்தவன் கதிரிடம் திரும்பி" டேய் நீ முதல்ல வாடா நான் அப்பவே சொன்னேன் நீ வேண்டாம் அங்கே வந்தா அவளை பார்க்கும் போது ரெண்டு பேத்துக்கும் சண்டைதான் வரும்ன்னு சொன்னேன்ல்ல நீ கேட்டியா" என இழுத்துக்கொண்டு நகர்ந்தான்.
வாசலை தாண்டவுமே கதிரிடம் "ஏண்டா அவ கிட்ட அப்படி பேசின" என கேட்டான் சபா.
கதிர், உமா படித்த கல்லூரி எந்த அளவுக்கு பிரபலமானதோ ஆனதோ அதே அளவுக்கு உமா,கதிரின் காதலும் பிரபலம் அங்கே கல்லூரியில் படிக்கும் அனேகம் பேருக்கு இவர்களது காதல் தெரியும்.ஆனால் நிறைவேறத்தான் இல்லை.
சமீபத்தில் தான் தெரிந்தது திருமணம் செய்யும் எண்ணமே உமாவிற்கு இல்லை என்று...வேறு ஒரு தோழியின் மூலம்...ஒருத்தி உனக்காக கல்யாணமே பண்ணாமல் கடைசி வரைக்கும் அப்படியே இருக்கட்டும் நீ சந்நோஷமாக வாழுடா போதும் என்று சொல்லி விட்டு வந்து இருந்தாள்.இன்று வந்தது கூட இவளுக்காக மட்டும் தான்.
கதிரில் குடும்பத்தில் இவனது விருப்பப்படி திருமணம் செய்து தர அவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் பிடிவாதமாக வேறு பெண்ணை மணமுடித்து வைத்திருந்தனர் .இவர்களுடைய காதல் அந்தக் கல்லூரியிலேயே முடிவடைந்திருந்தது.உமாவை பொறுத்த வரை இவன் துரோகி ஆனால் கதிரின் சூழ்நிலை வேறு அது கடைசி வரைக்குமே உமாவிடம் வந்து சொல்லவே இல்லை.
"சாரி டா இன்றைக்கு இவள் இப்படி இருக்க ஒரு வகையில் நானும் தானே காரணம் .வீட்ல இருக்கிற அம்மா, அப்பா யாரையுமே எதிர்க்கற சக்தி இல்லை அவங்க விருப்பப்படி இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணியாச்சு ஆனா என்ன நினைச்சுட்டு இவ தனிமையில் இருப்பது எனக்கு பிடிக்கல அதற்காக தான் இங்கே இன்னைக்கு உன் கூட வந்து அவளை தூண்டிவிட்டு இருக்கறேன் ."
"அவ பிடிவாதக்காரி டா ஒருவர் மேல அன்பு வச்சுட்டா அவள் கடைசிவரைக்கும் மாற்றிக்க மாட்டா... அவ என்ன சுத்தமா மறந்துட்டு இயல்பா வாழனும் அதற்கு தான் இந்த முயற்சி... அவ என்ன பத்தி தப்பா நினைச்சாலும் பரவாயில்லை நடந்ததை கனவா மறந்துட்டு கல்யாணம் பண்ணி நல்ல விதமா வாழனும் அதுதான் என்னோட ஆசை அதற்கான முயற்சிதான் இது பார்க்கலாம் என்ன முடிவு எடுக்கறான்னு…"என்றவனின் கண்கள் லேசாக கலங்கி இருந்தது.
உள்ளே உமாவோ பழைய நினைவில் இரண்டு நிமிடம் நின்றவள் இவன் பேசி விட்டுச் சென்றதை மறுபடியும் மனதிற்குள் ஒட்டிப் பார்த்தால்... கோபம் கண்மண் தெரியாத அளவிற்கு வந்து கொண்டிருந்தது .அதே கோபத்தோடு தனது தாயாரின் நம்பருக்கு அழைப்பு விடுத்தாள் உமா.
"அம்மா காலையில கேட்டீங்க இல்லையா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கவான்னு உங்களுக்கு பிடிச்ச மாதிரி நல்ல பையன பாருங்க மா நான் சம்மதிக்கறேன்" என பதில் சொல்லி விட்டு ஃபோனை கட் செய்தாள்.
நிறைவுற்றது.