பிரச்சனைகள்
நம்மை சூழ்ந்திருக்கும் போது
சூழலை எதிர்கொள்ள..
பல சிந்தனைகளை
பரிசளிக்கும்
தனிமையும் ஒரு வரமே..
“எனக்காக பேசணும்னு உனக்கு தோணலேல!, அந்த பொண்ணு செஞ்ச காரியத்தால நான் எவ்வளோ கஷ்டப்பட்டேன்னு உனக்கு தெரியும், உன்கிட்ட ஷேர் பண்ணிருக்கேன், ஆனா நீ எனக்காக ஒரு வார்த்தை பேசல, சரியான சுயநலவாதி; உன் தேவைக்கு மட்டும் என்னை பயன்படுத்திக்கிட்டே,“ என்று கோபத்துடன் எதிரில் நின்றவள் மீது குற்றம்சாட்டிட… தன் நெருங்கிய தோழியின் கோபத்தை ஏற்க முடியாமல், “சிமி.. என் நிலைமை என்னன்னு உனக்கு நல்லாவே தெரியும்..? வேலை செய்யுற இடத்துல வேண்டாத பிரச்சனைக்கு போனா, என் வீட்டுல அடுத்து என்னைய வேலைக்கு அனுப்பவே மாட்டாங்க. அதுமட்டும் இல்ல, இது உன் ப்ராஜெக்ட் விசயமா நடந்த பிரச்சனை. இதுல நான் எப்படி தலையிட முடியும்?, உன் டீம் மெம்பர்ஸ் தான் உனக்கு சாதகமா இருக்காங்களே!” என்று தனது நியாயத்தை அடுக்கினாள் ரூபாலி.
“ஓ!.. போன தடவை உன் வேலையில ஒரு பிரச்சனை வந்தப்ப, நான் உனக்காக வந்தேனே.. அப்போ சொல்லிருக்கலாமே இது என் வேலை பிரச்சனை, நீ தலையிடாதன்னு,” என்று கோபமாய் வினவ.. “இதை இப்போ பேசினா உன் கோபம் இன்னும் அதிகமாகும். இருந்தாலும் சொல்லுறேன், எனக்கு பிரச்சனைன்னு மட்டும்தான் உன்கிட்ட ஷேர் பண்ணுனேனே தவிர, எனக்காக வந்து சண்ட போடுன்னு நான் உன்னை கூப்பிடல. அப்போ கூட நீ எனக்கு பின்னாடி இருந்து, உன் பேர் வெளிய தெரியாத மாதிரிதான் சப்போர்ட் பண்ணுன.. இப்பவும் சொல்லுறேன் நீ செஞ்ச உதவி அந்த நேரத்துக்கு பெருசுதான், நான் இல்லன்னு சொல்லல, அதுக்காக.. தேவையே இல்லாம நீ இழுத்துக்கிட்ட பிரச்சனையில நான் வந்து தலைய குடுக்க முடியாது..” என்று சற்று கோபமாகவே பதில் கூறி தன் செயலில் உள்ள நியாயத்தை உணராமல் பேசும் தன் ஆருயிர் தோழியிடம் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள விரும்பாமல் அங்கிருந்து விலகிச்சென்றாள் ரூபாலி.
எத்தனை அயர்வு என்றாலும், முகத்தில் புன்னகை மாறாமல் வீட்டிற்குள் நுழையும் மகளின் முகத்தில் படிந்திருந்த சோர்வை கண்ட தேவகி, “என்னாச்சு ரூபி, எதுவும் பிரச்சனையா? ஏன் முகம் சோர்வா இருக்கு. இதுக்கு தான் வெளிய வேலைக்கு எல்லாம் போகவேணாம், வீட்டுலயே இருன்னு சொன்னேன், என் பேச்சை எங்க கேட்குற?” என்று கடுகடுக்க.. “அம்மா, வந்ததும் ஆரம்பிக்காதீங்க, கொஞ்சம் தலைவலி, தனியா இருந்தா எல்லாம் சரியாகிடும்..“ என்று வெடுக்கென்று ரூபாலி பதில் தந்திட.., “என்ன குரலை உசத்துற.. எல்லாம் வேலைக்கு போய் நாலு காசு சம்பாத்க்கிற திமிரு. பொறு உங்க அப்பா வரட்டும், பேசிக்கிறேன்..” என்று பதிலுக்கு பொரிந்து தள்ளினார் தேவகி.
அவள் இருக்கும் மனநிலையில் எதையும் பேச மனமின்றி பதில் ஏதும் சொல்லாமல் தனிமை தேடி தனது அறைக்குள் சென்றவள், இருளில் மூழ்கியிருந்த அறையை ஒளியூட்டி.. கலைந்து சோர்ந்திருந்த உடலுக்கு புத்துயிர் தரும் விதமாய், இதமான நீரில் குளியல் மேற்கொண்டு உடல் சோர்வை நீக்கியவள் கட்டிலில் சரிந்து, மனச்சோர்வை அகற்ற பிரச்சனையின் ஆழம் வரை சிந்திக்க துவங்கினாள்.
பிரச்சனை எனும் பெரும் சூழலில் சிக்கிக்கொண்டு அதற்கு மீட்சி தேடுவதென்பது இயலாத ஒன்று என்று புரிந்து, தன்னை அந்த பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்தி பார்க்காமல் மூன்றாம் நபராக சிந்திக்க தொடங்கினாள்.
ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிபவள் ரூபாலி. அதே அலுவலகத்தில் கணினித்துறையில் பணிபுரிபவள் சிமிர்தா. இருவருக்குமான கொள்கை கோட்பாடுகள், குடும்ப சூழல், வளர்ந்த விதம் எல்லாம் வேறு என்றாலும், காண்போர் பொறாமை கொள்ளும் அளவிற்கு இருவருக்குமிடையில் ஆழமான நட்பு இருந்தது.
ஒருநாளைக்கு ஒருதரமேனும் ஒருமணிநேரத்திற்கும் குறையாது இருவரும் அலைபேசியில் ஊர் கதையை அலசி ஆராய்வார்கள். பொதுவிஷயங்கள் என்று மட்டுமில்லாமல் சொந்தவிசயங்களையும் மூடி மறைக்காமல் பேசிக்கொள்வார்கள்.. இருவருக்கும் இடையில் நட்பையும் தாண்டிய ஆழமான பந்தம் இருந்தது. காதலர்கள் போல் கொஞ்சிக் குலாவிக்கொள்ளும் தங்கள் நட்பை எண்ணி அவர்களும் கேலி செய்து நகைத்துக் கொள்வார்கள்.
ரூபாலி எவரிடமும் நெருங்கி பழகும் ரகம் இல்லை, எல்லோரிடமும் பொதுப்படையாக பேசி பழகினாலும் ஒருவித ஒதுக்கத்தை கையாள்பவள். ஆனால் சிமிர்தா எல்லோரிடமும் இயல்பாக நெருங்கிப் பழகக்கூடியவள். யார் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் செய்யக்கூடியவள். அடுத்தவர் பிரச்சனையை தனதாய் யோசிக்கக்கூடியவள். அவளின் இந்த குணம்தான் இப்போதைய பிரச்சனைக்கு காரணமாக அமைந்தது.
புதிதாய் கட்டிடம் கட்டும் வேலையை நிறுவனம் கையில் எடுக்க, அதற்கு கணினியில் வரைபடம் வரையவேண்டிய முக்கிய பணி சிமிர்தா கையில் வந்து சேர்ந்தது. தனது வேலையில் முழு ஈடுபாட்டுடன் மூழ்கிப்போனள். புதிதாக கிடைத்த அலுவலில் ஈடுபட்ட குழுவிற்கு தனியாக ஒரு வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டது. வேலை குறித்த விபரங்கள் அங்கு ரகசியமாக பகிரப்பட்டது.
பணி சிறப்பாக சென்று கொண்டிருந்த நேரம் உடன் பணிபுரியும் பெண்ணொருத்தி சிமிர்தாவை தனியே தொடர்புகொண்டு, அவள் பணியில் உள்ள நிறை குறைகளை விவாதிக்க துவங்கினாள். நிறைகளை விட குறைகள் அதிகமாய்... அதுவும் அவர்களுக்கு முன் பணியாற்றிய குழுவினருடன் ஒப்பிட்டு பேசிட, கோபமான சிமிர்தா அந்த பெண்ணின் செயல் குறித்து புகார் அளித்தாள். சிமிர்தாவின் புகாரை ஏற்ற நிறுவனம், குறை கூறிய பெண்ணை வேலையில் இருந்து நீக்கியது.
சிமிர்தாவால் வேலையிழந்த பெண்ணுக்கு சாதகமாக ஒரு சிலர் கோபம் கொண்டு அவள் செயலையும் குணத்தையும் தனிபட்ட முறையில் தாக்கி பேசிட.. அவர்களின் நடவடிக்கையில் மனமுடைந்தவள், பணி நிமித்தமாக உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் அந்த பெண் அனுப்பிய செய்தியை பகிர்ந்து.. அவள் செய்த செயலுக்கு தண்டனை வழங்கப்பட்டது, இதில் என் தவறு என்ன என்று நியாயம் கேட்டாள். அந்த பிரச்சனையை முடிக்க விரும்பாமல் மேலும் மேலும் சிலர் வாதம் செய்ய, பிரச்சனை தலைமையிடம் சென்றது. அங்கு பிரச்சனை குறித்து தெளிவான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கும்படி நிறுவனம் கூறிட.. இருபக்க சாதக பாதகங்கள் அலசி ஆராயப்பட்டது.
அறிக்கையின்படி குறை கூறிய பெண்ணின் செயலில் தவறு இருந்தாலும், சிமிர்தா பிரச்சனையை கையாண்ட விதமும் தவறு என்று மேலிடம் சிமிர்தாவை கண்டித்தது.
சிமிர்தா குறித்து பிரச்சனை எழும்போது, என் தோழி நல்லவள். அவள் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்று சிமிர்தாவிற்கு சாதகமாக குரல் கொடுக்காமல் போனது தான் ரூபாலி செய்த பெரும் தவறு.
சிமிர்தா சிக்கியிருக்கும் சிக்கலுக்கு என்ன விதத்தில் உதவுவது என்று தெரியாமல் குழப்பி நின்ற ரூபாலியைத்தான், சுயநலவாதி எனும் பட்டம் கொடுத்து புகழ்ந்திருந்தாள் அவள் ஆருயிர் தோழி.
பிரச்சனையின் ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்தவள், இருவரின் செயலையும் அலசிடத்துவங்கினாள். தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கைநழுவி, சிமிர்தா கையில் சேர்ந்ததை பொறுக்க முடியாமல், தண்டனை பெற்ற பெண்ணிற்கு சாதகமாக பேசுவது போல, சிமிர்தா செயலை விமர்சித்தனர் சில வஞ்சகர்கள். இது போன்ற செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது, அதனால் எந்த பிரச்சனை வந்தாலும் பொறுமையாக கையாள வேண்டும் என்று தோழிகள் இருவரும் ஏற்கனவே பேசி வைத்துதான். அதன்படியே தன் பணியை குறைகூறிய பெண்ணின் மீது சிமிர்தா புகார் கொடுத்தது வரை சரி, அதன் பிறகு அவள் நடந்துகொண்ட முறையில் ரூபாலிக்கே சிறு வருத்தம் தான்.
அந்த பெண் எந்த எண்ணத்தில் பேசியிருந்தாலும், சிமிர்தாவை நம்பி தனிப்பட்டு பேசிய விஷயத்தை பொதுவெளியில் பகிர்ந்தது தவறு. அவளை கோபப்படுத்தி அதில் குளிர்காய நினைத்தவர்கள் எண்ணத்திற்கு தீனி போடுவது போல, பிரச்சனையை ஒருநிலையில் முடிக்காமல் தொடர்ந்து இழுத்து சென்றதும் தவறு என்று தோழியின் செயலை யோசித்தாள்..
தோழியின் மீது ஒருவர் குற்றம் சுமத்தும்போது அமைதியாய் நின்றது, ரூபாலி செய்த தவறு.. அந்த தவறை தெரிந்து செய்யவில்லை தான், இருந்தும் தோழிக்கு ஒரு உதவி என்றதும் எவ்வாறு உதவலாம் என்று தயங்கி நின்றது தவறு தானே!.. என்று தன்னிலையில் நின்று யோசித்தாள் உதவி செய்ய தயக்கம் எதற்கு வந்தது என்று யோசிக்க துவங்கினாள்.
தயக்கத்தின் முதல் காரணம், இது சிமிர்தா செய்துகொண்டிருக்கும் வேலை குறித்து எழுந்த பிரச்சனை. இதில் தோழி என்கிற உரிமை தவிர, தலையிட வேறு எந்த தகுதியும் இல்லை. எங்கள் துறை சம்ந்தப்பட்ட இடத்தில் உனக்கு என்ன வேலை என்று கேள்வி எழுந்தால், தோழிக்காக வந்தேன் என்று காரணம் சொல்ல முடியாது. இரண்டாவது, புகார் செய்ததோடு பிரச்சனையை முடிக்காமல், மேலும் வளர்த்தது குறித்து தோழி மீது ரூபாலிக்கே சிறு வருத்தம் உண்டு. தவறு செய்வது தோழி என்றாலும், அதை சரியென்று ஏற்கும் ரகம் இல்லை ரூபாலி. தனக்கே தவறென்று தோன்றும் ஒரு செயலுக்கு பரிந்து பேச எப்படி முடியும்?.
இருபக்க நியாய அநியாயங்களை ஆராய்ந்தவள், இருவர் செயலிலும் சரியும் தவறும் கலந்திருப்பது புரிந்தது. பிரச்சனையில் தோழி நிற்க, உதவாதது தவறு என்றால், அந்த பிரச்சனைக்குள் வழிய சென்று விழுந்ததும் தவறுதான்.
கோபம் தான் மனித உணர்வுகளை கொள்ளும் ஆயுதம். தன்னிலை புரிந்தும் கோபம் காட்டிய தோழியின் செயலும் சிமிர்தா உதிர்த்த சுயநலவாதி, பொய் நட்பு எனும் வார்த்தை ரூபாலிக்குள்ளிருந்த நட்பின் உணர்வை கொன்றிருந்தது. தனிமையில் அமர்ந்து வெகுநேரம் யோசித்து முடித்தவள், தனது அலைபேசியை எடுத்து..
உன் பிரச்சனையை என்றும் நீ தான் சுமக்கவேண்டும். நட்பு என்ற ரீதியில், நான் உறுதுணையாய் இருக்க முடியமே தவிர உன் சுமையை சுமக்கமுடியாது. உன்னால் இயலுமென்றால் பிரச்சனையில் தலையிடு, இல்லை ஒதுங்கிவிடு. அடுத்தவர்கள் உனக்காக வருவார்கள் என்று என்றும் காத்திருக்காதே. எந்த நேரமும் எல்லோரும் உனக்கு உதவ வரமாட்டார்கள். காத்திருக்கும் காலம் ஏமாற்றமாய் மாறினால் உன் நிலை தான் மோசமாகும். இதை மனதில் கொள்.
நட்பு என்று பொய்யாய் நடித்து உன் தன்னம்பிக்கையை சிதைக்கும் எண்ணம் இனியும் எனக்கு இல்லை.. இன்றிலிருந்து என் நட்பெனும் கைவிலங்கிலிருந்து உனக்கு விடுதலை தருகிறேன், நீ வேண்டிய தனிமையை உனக்கு தருகிறேன்.
தனித்திரு விழித்திரு..
இப்படிக்கு,
சுயநலவாதி..
என்று குறுஞ்செய்தி ஒன்று அனுப்பிவிட்டு தன் தனிமையில் இனிமை காணத்துவங்கினாள்.