"ஒஹ்... கடல் மாதா இந்த அப்பாவியை ஏத்துக்க.. ஐயோ இல்லையே தப்பு தப்பு ஒஹ் மலைகளின் இளவரசியே இந்த அப்பாவியை ஏத்துக்க.." என மலை உச்சியில் நின்று சுறா பட வசனத்தைக் கூறி கீழே குதிக்க ஆயுத்தமானன்.
((அவன் முருகானந்தன்.. தந்தையில்லா தந்தையானவளின் வளர்ப்பில் வளர்ந்த முத்துகளில் ஒன்று. என்ஜினீயரிங் படித்து வீட்டில் குப்பைக் கொட்டப் பிடிக்காமல் தனக்கு தெரிந்த விவசாய வேலைகளை சிறப்பாக செய்யும் பொறுப்பான மகன் என வெளியில் சொல்லப்படும் இருபத்தி ஐந்து வயது ஆண் மகன். ஆனால் வீட்டில் அம்மாவிற்கு அடங்காதவன், அம்மாவின் சொல்லிற்கு கட்டுப்படாதப் பொறுப்பில்லா பிள்ளை.. தாயின் திட்டுக்காளால் மனமுடைந்து பத்து முறை தற்கொலைக்கு முயன்ற முதல் பத்து ஆட்களில் இவனும் ஒருவன்..)
குதிக்க ஆயத்தமாக இருந்தவனின் கண்கள் அவனை கேளாமலே கீழ் பார்வைப் பார்த்தது, ஏனோ மேலிருந்து கீழாகப் பார்க்க பயமாக இருந்தது. கூர் போன்ற பாறைகள் அதற்கு இடையில் முட்டி முட்டி மோதியப்படி வளர்ந்த கருவேல மரங்கள் அதையும் மீறி குதிக்க முடிவெடுத்தாலும் இந்த மலையின் ஆழம் அவனுக்கு பீதியை கிளப்பியது.
மீண்டுமொருமுறை தன் அன்னையின் வார்த்தைகளை மனதில் ஏற்றிக்கொண்டவன் குதிக்கலாம் என நினைக்க தீடிரென ஆதி படத்தில் விஜய் சொன்ன வசனங்கள் நினைவுக்கு வந்து படுத்தி எடுத்தது. அதையும் மீறி குதிக்க தயராகி கமல்ஹாசனை போல்
ஒன்....ன்..
ட்டு... டு...
திரி...த்ரீ....... சொல்லியும் அவனிற்கு தைரியம் வரவில்லை, தைரியம் வரும் வரை அங்கையே அமர்ந்திருந்திருக்கலாம் என முடிவு செய்ய அங்கயே அமர போனவனை ஒரு குரல் தடுத்தது.
"நீயும் என்னை மாதிரி தற்கொலை பண்ணிக்க வந்து இருக்கியா..." என தனக்கு பின்னால் குரல் வர அவன் திரும்பும் முன்பே
"ஏய் திரும்பி பார்க்காத.. நீ செத்ததுக்கு அப்பறம் நீயும்,நானும் பார்த்துக்கலாம் இப்போ திரும்ப வேண்டாம்.." என்ற பெண் குரலில் சற்றே பயந்த முருகனோ
"யார் நீ, எதுக்கு எங்கிட்ட பொய் சொல்ற.. ஒழுங்கா இங்க இருந்து போ.. நான் சாகணும்.. என்னை யாரும் தடுக்க நினைக்க வேண்டாம்..'
'யாரு உன்னை தடுத்தது.. நீ சாகு.. ஆனா நீ சாகற காரணத்தை சொல்லிட்டு சாகு..."
"உனக்கு எதுக்கு நான் சொல்லணும்.. யார் நீ..." என்றவன் பயத்தை வெளிக்காட்டாமல் அமர்ந்துக் கொண்டே கேட்க.
"நானும் இங்கே குதிச்சு செத்துப் போன பொண்ணுங்கள்ள நானும் ஒருத்தி.."
'ஒஹ்.. போதையில இருக்ககறவனுக்கு பேய் ,பிசாசு,பெண் எல்லாம் ஒன்னு தான்...” என கெத்தாக கூறினாலும் உள்ளுற உதறல் எடுக்க சட்டென்று எழுந்து நின்றவனைப் பார்த்து.
"ஐயோ இப்போ ஏன் குதிக்கப் போற.. என்ன காரணத்துக்காக குதிக்கறன்னு சொல்லு..”
"நான் ஏன் உன்கிட்ட சொல்லணும் மாட்டேன்.. நான் சாக போறேன்..."என்றவன் மேலும் ஓரடி எடுத்து வைக்க
"ஏய் நில்லு.. நீ காரணம் சொன்னா மட்டும் தான் என் சாபம் நீங்கும்.. நான் ஒரு லமியா அரக்கி, உன்னோட சேர்த்து நூத்தி எட்டு பேர் இங்க சாக வந்து காரணம் சொல்லி இருக்காங்க.. நீயும் சொன்னா என் சிங்கிள் சாபம் நீங்கி நான் மோட்சமடைஞ்சு. சாகறன்னு சொல்லிட்டு இருக்கற என் மாமங்கிட்ட, ரொம்ப நாளா நான் சொல்ல நினைச்ச என் காதலையும் சொல்லிருவேன்.." என இறைஞ்சி கேட்க மனம் மாறிய முருகானந்தோ
"சரி சொல்ற..கடைசியா சாகும் போது ஒரு நல்லது பண்ணதா இருக்கட்டும்.” என்றவன் தன் சுயவிவரத்தை கூறி இன்று நடந்த நிகழ்வுகளைக் கூற ஆரம்பித்தான்.
"இன்னைக்கு காட்டில ஒரே வேலை. ரொம்ப சலுப்பா இருந்துச்சுன்னு கொஞ்சமா சரக்கடிச்சேன்..அதுக்கு போயி என் அம்மா.. என்னை பெத்த தெய்வம்... என்ன வார்த்தை சொல்லிட்டாங்க தெரியுமா..." என்றவனின் அழுகை அவளிற்கு சிரிப்பை வரவழைக்க மேலும் அவன் கூறக் கூற உண்மையில் நடந்தது அவளிற்கு கண்முன்னே தோன்றியது.
"என்ன டா இந்த நாத்தம் நாறுது என்னத்த குடிச்சுட்டு வந்திருக்க."
"சரக்கு மாகி.. லைட்டா தான் அடிச்சேன்..வேணும்னா பாரு.. ஊப்" என ஊதி விட கடுப்பான அவனின் தங்கையோ அவனை அடிக்க எருமைக்கு இன்று ஏனோ தன் தங்கையின் அடிகள் வலிக்க திருப்பி அவளை அடிக்க இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்தது.. இதுவரை பொறுமைக் காத்த அவனின் தாய் பெண்ணை அடித்ததும் வெகுண்டார்
"டேய்.. குழந்தைய ஏண்டா அடிக்கற.. எங்களை ஏன் டா இப்படி கொடுமை பண்ற..இப்படி கொஞ்சம் கொஞ்சமா என் மானத்தை வாங்கறதுக்கு பதிலா ஓரடியா கொன்னு போட்று.. ஒரு பொம்பளை வளத்த பையனோட லட்சணம் இப்படி தான் இருக்கும்னு எல்லாரும் சொல்ற மாதிரி இருக்கும்..." என கத்தியவரை பார்த்தவன்
"மம்மி நோ டென்ஷன்,நோ பீபி மம்மி.. மம்மி நீங்க என் உயிர் மம்மி.. நீங்க என்னைப் பெத்த தெய்வம்,லவ் யூ மம்மி.." என உளறிக் கொட்டியவனை பார்த்தவருக்கு சிரிப்பு தான் வந்தது, இருந்தாலும் அதை வெளிக் காட்டி கொள்ளாமல்
"மகி... இனிமே அவனை குடிக்கக் கூடாதுன்னு சொல்லு இல்லை, அப்படி தான் குடிப்பேன்னு சொன்னா. இப்பவே வீட்டை விட்டுப் போக சொல்லு.."என்றார் கோபமாக "மம்மி.."என்றவன் சட்டென்று அவரின் காலில் விழுந்து
"மம்மி நான் அவ்ளோ பெரிய குடிகாரரா மம்மி..(குடிகாரரா..பாவி என்ன ஒரு மரியாதை) பாவம் மம்மி நான்.. நான் உங்க பையன் மம்மி.. தப்பு தான் மம்மி... நீங்க வேலைக்கு போக சொல்லி மாட்டேன்னு இருந்துட்டது தப்பு தான். நான் போயிட்டா உங்களை யாரு மம்மி பார்த்துப்பா.. என்னை மட்டும் அனுப்பிடாத நான் இங்கையே இருக்க மம்மி...." என பின்னால் இரண்டு கால்களையும் ஆட்டியபடியே மன்னிப்பு வேண்ட சிரிப்பு வந்தாலும் அதை வெளிக்காட்டாமல்
"இதோ பாரு.. நானு என் பையன் நல்ல வேலையில இருக்கான்னு சொல்லணும். அதே மாதிரி நீயும் நல்ல வேலைல இருக்கன்னு எல்லாருக்கிட்டடையும் சொல்ற மாதிரி நடந்துக்கணும்.." என்றார் பொறுமையாக
"எழுந்தவன் அப்போ நான் உங்களுக்கு முக்கியம் இல்லையா மம்மி.. வேலை தான் முக்கியமா..இந்த ஊர், சமுதாயம், இதெல்லாம் தான் முக்கியமா..."
"ஆமா..என்க.."
"அப்படி போடு அருவாள.. சாவு டா மவனே.. கிளம்பு தொல்லை ஒழியட்டும்..." என்ற தங்கையை மீண்டும் அடிக்க பாய்ந்தான்
"டேய் அவளை ஏன் டா அடிக்கற.. அறிவில்லையா உனக்கு... எங்காவது போ.. எங்களுக்கு தொல்லைக் கொடுக்கமா ஒழுங்கா எங்காவது போயிடு.."என்றவரிடம்
“அவ அடிக்கும் போது ஒரு வார்த்தை கேட்கல. என்மேல யாருக்குமே பாசம் இல்லல..நான் தனியாகிட்டேன். நான் போறேன்.. இனிமே வர மாட்டேன்..என கூறியவன் “விடுகதையா இந்த வாழ்க்கை."எனப் பாடியவாறே பத்தாவது முறையாக தற்கொலை செய்ய முடிவு செய்தான். என தற்கொலைக்கான காரணத்தைக் கூறி முடித்தான். தற்போது பேயிடம் இருந்த பயம் கொஞ்சம் விலகி இருக்க வழக்கம் போல் பேச ஆரம்பித்தான்.
"ஆனா இப்பக் கூட என்னைத் தேடி அம்மா வரல..எனக்கு தனிமை பிடிக்கல.. என் அம்மாக்கு என்னை பிடிக்கல, அதான் என்னை வேற இடத்துக்கு போக சொல்றாங்க..." என்றவன்
"தனிமையே தெரியுமா.. உன்னை முழுதும் வெறுக்கிறேனடி.." எனப் பாடிட
"ஆமா தனிமைனா என்ன...?? என பேய் கேட்க
"சிம்பிளா சொல்லணும்னா கொரோனா இருக்குன்னு தனியா இருக்க சொல்றங்களே அதுவும் தனிமை தான். இதோ இப்படி தனியா உட்கார்ந்துட்டு யார் கிட்டையும் பேசாம இருக்கனே இதுவும் தனிமை தான், எந்த லவ்வும் பண்ணாம சிங்கிளா இருக்கன்ல இது கூட தனிமை தான்..எனக்கு கூட்டமா இருக்க தான் பிடிக்கும். என் அம்மா, என் தங்கச்சி மட்டும் ஒன்னா ஜாலியா இருப்பாங்களாம் நான் மட்டும் தனியா இருக்கணுமா.." என்றவனை இடைமறைத்தது அந்த பேயின் குரல்
"இதுக்கு பேரு தனிமையா.."
"பின்ன இல்லையா..."
"இல்லை.. இதுக்கு பேர் தனிமை இல்லை.. உங்க அம்மா இருக்காங்களே அது தான் தனிமை..
"என்ன உளறல் இது.. என் அம்மாக்கூட நான், மகி, என் அக்கா, மாமா, எல்லாரும் இருக்கோம் அது எப்படி தனியா இருக்காங்கன்னு சொல்ற.." என்றவனிடம்
"அதெல்லாம் வெறும் பேச்சுக்கு சொல்லிக்கலாம் நாங்க இருக்கோம்னு.. ஒரு பொண்ணுக்கு முழுமையான தனிமை அப்படினா அது அவங்க வீட்டுக்காரர் இல்லாம இருக்கறது தான்.. உங்க மூணு பேரையும் ஒரு துணையும் இல்லாம பதினெட்டு வருசமா வளர்த்து இருக்காங்க. உங்களை வளர்க்கும் போது உன் அம்மா தனிமரமா நின்னு வளர்ந்தாங்க.. நீங்க வளந்துக்கு அப்பறமும் தனிமையா இருக்க போறாங்க.. இது தான் தனிமை.. அவங்களோட மனசுல எப்பவும் தனிமைக்காண ஏக்கம் இருக்கும்..தனிமையோட வாசம் அவங்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்போ சொல்லு யாரு தனியா இருக்கா. யாரு தனிமை வாசத்தை நுகர்ந்துட்டு இருக்கா.." என அழுத்தமாக வந்த வார்த்தையின் உண்மை புரிய.. "மம்மி மம்மி ஒஹ் மை மம்மி.." என பாடியவன் அங்கிருந்து நகர
"90 கிட்ஸ்ன்னு பூரூப் பண்றான் மக்கு மசாலா.." என கூறியவள் அவன் பின்னே சென்று அவனின் கையைப் பற்றிட..
“அதான் நானும் சொன்னனே.. என் மாமங்கிட்ட என் காதலை சொல்லி மோட்சம் அடையனும்னு..மக்கு மாமா எப்போ சரின்னு சொல்லுவ..”என்ற வார்த்தையில் அதிர்ச்சியடைந்து திரும்பி அவளை பார்த்தவன் கண்கள் சிரிக்க “முதல்லெல்லா உன்னைப் பார்க்கும் போது எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை.. ஆனா இப்போ பேயைப் போயி கல்யாணம் பண்ண வேணுமானு தோணுது..” என்றவனை செல்லமாக அடித்தவள் “உனக்கும் வேற வழி இல்லை..”என்றவள் அவன் கைகளில் அழுத்ததைக் கூட்டி
"நீ எனக்கு சத்தியம் பண்ணு மாமா தற்கொலை கோழைங்க பண்றது இனிமே தனிமை, தனிமரம்னு சொல்லி நீ சாக வர கூடாது.நான் உன் மேல உயிரா இருக்கேன், உன் அம்மாவோட வலியை வருங்காலத்தில எனக்கு கொடுத்துடாத..” என்றாள் அவனின் அத்தை மகள் ரம்யா.
அவளைப் பார்த்து சம்மதப் புன்னகையுடன் "நீ இன்னும் எனக்கு லவ் சொல்லல.." என்றவன் சிரிக்க அவளும் சிரிப்போடு தன் காதலை கூறினாள்.
தனிமை இருவர் வாழும் வாழ்க்கையில் ஒருவரின் முடிவில் ஆரம்பமாகிறது. ….