கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் 6

Mrithula Ashwin

Moderator
Staff member



அத்தியாயம் - 6

அவர்கள் ஆடர் செய்த உணவுகள் மேஜையில் வரிசைப்படுத்தி வைத்து விட்டு, அவன் கையில் இருந்த மீதி உணவுகளோடு, அடுத்த மேஜைக்கு நகர்ந்து சென்றான் பரிசாரகன்.

யாழினியன் தனக்கு வேண்டிய உணவுகளை சுவைப் பார்க்க, அனு தான் ஆர்டர் செய்த தந்தூரி சிக்கனை வாயில் வைத்த சில வினாடிகளில், 'உஸ்', 'உஸ்' என்று வாயை குவித்து, ஊத, யாழினியன், அவளுக்கு காரம் தாங்கவில்லை என்று உணர்ந்து, அவனும் அதனை எடுத்து வாயில் போட்டான்.

போட்டதில், காரத்தை உணர்ந்து அவன் தண்ணியை குடித்து நாக்கை குளிர வைக்க, அப்போது பக்கத்து மேஜையில் சத்தம் ஓங்கி கேட்டது.

அவர்கள் உணவில் உரைப்பு மிகவும் கம்மியாக இருப்பதாக புகார் தெரிவிக்க, பரிசாரகனை அழைத்தான் யாழினியன்.

உணவு தட்டு மாறிவிட்டதாகக் கூறி, அவர்களை சாந்தப்படுத்த விழைந்தான்.

இங்கே அனுவோ, மொடாக் மொடாக் என, தண்ணீரை குவளை குவளையாக, தொண்டைக்குள் இறக்கினாள் ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான்.

அவளை பார்ப்பதற்கே பாவமாக தோன்றியது அவனுக்கு. உதடு சிவக்க, கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

உணவை பார்சல் செய்து தருமாறு கேட்டவன், பில்லை செலுத்தி விட்டு, அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினான். கார் கதவைத் திறந்து, அவளை அமர வைத்து, கதவை அறைந்து சாத்தியவன், அடுத்த அரைமணி நேரத்தில், வீட்டில் இருந்தார்கள். வழியில், டேஷ்போர்டை திறந்துக் காட்டி, அதில் இருந்த கேண்டிகளை கொடுத்தான்.

அவளும் அரக்கப்பறக்க, அவைகளை பிரித்து வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

அறையில் வந்துப் படுத்தவள், வாய் எரிச்சல் சற்றே மட்டுப்பட்டதுப் போலவும் உணர்ந்தாள்.

"இப்ப உனக்கு பரவாயில்லை தானே?" என்று அக்கறையுடன் வினவினான் அவன்.

"பெட்டர் ஹார்ப்.. தேங்க்ஸ்" என்று கண் மூடியவளிடம்,

"நான் என்ன பண்ணேன்? தேங்க்ஸ் சொல்லிட்டு இருக்க!! அண்ட் நீ அங்கிருந்து எழுந்து, பெட்ல படுத்துக்கோ.. நான் இன்னிக்கு ஒரு நாள், அந்த திவான்ல படுத்துக்கறேன்" என்று கூறி, அவளை மாற்றி படுக்க வைத்துவிட்டு, விளைக்கை அணைத்தவன், அடுத்த நிமிடம் உறங்கியும் போனான்.

படுத்ததும் உறங்குவது என்றால், அது எத்தனைப் பெரிய வரம்!!

அனுவுக்கோ, கண்டதையும் யோசித்து, புரண்டபடி படுத்திருந்தாள். அன்று மாலை, அவள் கால் இடறி விழும்போது அவன் பிடித்து நிறுத்தியதும், கடிந்ததையும் நினைத்தவளுக்கு, குறுகுறுத்தது.. கூடவே, தங்களை பின்தொடர்ந்து வருவதுப் போல தோன்றியக் காரையும், ஆட்களையும் நினைத்து யோசித்தாள்.

'யாரது?? எதுக்கு பின் தொடர்ந்துட்டு இருக்காங்க.. அந்தமான்லயும், நமக்கு இதே உணர்வு தான வந்துச்சு..? சம்திங் ஃபிஷி' என்று தனக்குள் நினைத்தவளுக்கு, திடீரென, வயிறு, அபாய சங்கு ஒலிக்க வைத்தது..

"அம்மா.... பசிக்குதே... காரம்ன்னு சொல்லி... சாப்பிடாம கூட்டிட்டு வந்துட்டானே... இவனை... சரியான இம்சை... இப்ப பசில, பெருங்குடல் சிறுகுடல் போட்டிப் போட்டு துவம்சம் பண்ணிடும் போல இருக்கு" என்று முணுமுணுத்து எழுந்தவள், வெளியே சென்றாள்.

பிரிட்ஜிருந்து பாலை எடுத்தவள், நேரே கிச்சனுக்கு சென்று காய்ச்சி, கூடவே பிராய்ந்து நான்கு பிஸ்கட் துண்டுகளை வாயில் போட்டுக் கொண்டாள். வயிற்றை சற்றே நிரப்பி பசியைப் போக்கி, நித்திரையில் ஆழ்ந்தாள்.

மறுநாள் காலையில் தாமதமாக எழுந்தவளுக்கு, பாதி திறந்திருந்த கதவின் உபயத்தால், சில பேச்சுக்குரல்கள் கேட்க, யாரென ஆவல் மேம்பட, வெளியே வந்தவளை, "ஹே ப(ம்)ப்ளிமாஸ் நான் வந்துட்டேன்.." என்று அவள் முன்னே குதித்தவனை, ஆச்சரியம் கலந்த ஆனந்தத்துடன் நோக்கினாள்.

"சின்ன மங்கி... நீ எப்ப வந்த? எப்படி இருக்க?.. வாட் ஏ ஸ்வீட் சப்ரைஸ்.." என்று அவளும் மகிழ்ந்தாள்.

"ம்ம்ம்... இன்னிக்கு காலைல தான் ஊருக்கு வந்தேன்... வந்ததும் இங்க வந்து குதிச்சிட்டேன்.. அப்புறம் நெக்ஸ்ட் குலஸ்டின் க்கு நீ தான் பதில் சொல்லணும்.. நீ சொல்லு நான் எப்படி இருக்கேன்...?"

"பார்க்க நல்லா ஹேண்ட்சமா தான் இருக்க... ஆனா இன்னும் உன் குரங்கு புத்தி எங்கேயும் போகலை.. ஆர்ப்பரிக்கிற மங்கியா தான் இருக்க..!" என்று அவன் தலையில் தட்டினாள்.

"ஆ வலிக்குது... ஆனா நீ ரொம்ப மாறிட்டே பி.எம் (ப(ம்)ப்ளிமாஸ்).. அழுமூஞ்சி அனுலேகாவா இது??!!"

"மாற்றம் ஒன்றே மாறாதது சி.எம்..(சின்ன மங்கி).. உலகத்தை மாத்த முடியல... அதான் நான் மாறிட்டேன்" என்று புன்னகையித்தாள்.

"நல்லா பேசற.. சூப்பர்" என்று பாராட்டவும் செய்தான் அவன்; ஹரிஷ்.
இங்கே இவர்களின் உரையாடல்களை கண்டும் கேட்டும், யாழினியனுக்கு, தந்தூரி அடுப்பு மேல் உட்கார்ந்ததுப் போல, எரிச்சலாகவும்.. சூடாகவும், மனநிலை இருந்தது.

இவர்கள் இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து வாயடிக்க, கூடவே சாரதாவும் பேச்சில் கலந்துக் கொள்ள, அந்த கண்கொள்ளா காட்சி, இனியனுக்கு பெரும் அவஸ்தையாக இருந்தது.

அனு, "நீ என்ன பண்ணிட்டு இருக்க?.. கல்யாணம் ஆயிடுச்சா?" என்று விசாரித்தாள்.

"நான் ஒரு ப்ரொஃபெஷனல் ஆர்ட் டீலர் அண்ட் ப்ரோக்கர். அப்பப்ப பொழுதுபோக்கா, ஓவியனா என்னோட தூரிகையை காதலிச்சு, இப்போதைக்கு கண்ணிலும் கருத்திலும் தோன்றுவதை எல்லாம் வரைஞ்சுட்டு இருக்கேன்.. "

"எது இந்த காலேண்டுருக்கு வரைவாங்களே.. அதுவா?"

"ம்ம்ம் அதுவும் வரைகலை தானே... தப்பில்லை.. அப்படியும் சில காலங்கள் வரைஞ்சு.. வாழ்க்கையை ஓட்டியிருக்கேன்.."

"சாரி டா... உன்னை ஹர்ட் பண்ண அப்படி சொல்லலை... சும்மா ஒரு விளையாட்டுக்கு..."

"சே. சே.. நான் யதார்த்தமா தான் சொன்னேன்.. " என்று அவனும் கூறினான்..

சாரதா, "அனு.. அவனோட வேலைக்கும், கருத்துக்கும், விமர்சனத்துக்கும், இந்தியால மட்டுமில்ல, வெளிநாட்டுல கூட அவ்வளவு மதிப்பு இருக்கு.. பாதி நாள் ஐயா, வெளிநாட்டுல தான் சுத்திட்டு இருப்பார்.. அது மட்டுமில்லை.... ஆர்ட் ஸ்கூல் ஒன்னு நடத்திட்டு வரான்..." என்று பெருமிதமாக கூறவும், அவளும் அவனை பெருமையாக நோக்கினாள்.

"பெரியம்மா அதிகமா சொல்றாங்க பி.எம்.."

அவர்களின் பேச்சு நீண்டுகொண்டே இருக்க, அந்த சம்பாஷனைகளை கேட்டு, இனியனுக்கு காதில் புகை வராதக் குறை தான்..

"இந்த ஒரு வாரத்துல என்கிட்ட சிரிச்சு பேசியிருக்காளா இவ? என்கிட்ட மட்டும் சண்டைப்போட்டு, வெறுப்பேத்தி, என்னை கோபப்படுத்த வேண்டியது.. அவனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா??

இந்த ஒரு மணிநேரத்துல வாய் ஓயாம சிரிச்சுச் சிரிச்சு பேசற இவ, என்கிட்ட எப்படி வாய் தகராறு பண்ணலாம் ன்னு யோசிப்பா போல.. நானும் தானே ஹரிஷ் போல, பால்ய நண்பன்..." என்று அவன் குமுறலையோ, பொங்கலையோ கேட்க ஆளில்லாமல் சத்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், அவனும் உணவு மேஜைக்கு சென்று, அவர்கள் எதிரே அமர்ந்து, அவர்கள் பேச்சில், தன்னையும் உள்ளே இழுத்துக் கொள்வார்கள் எனக் காத்திருந்தான்.. ஆனால் அது நடந்த பாடில்லை..!!

"ஹலோ பிரதர்... இந்த அண்ணனையும் உங்க வட்டதுக்குள்ள சேர்த்துக்கலாமே.. நீங்களே பேசினா எப்படி??" என்று வினவ, இருவரும் அவனை பார்த்தார்கள்.


"டேய் ஒரு மாசம் முன்னாடி பொறந்துட்டு... அண்ணன் சொன்னா எப்படி டா... போடா போ.. உனக்கு வேலை வெட்டி இல்ல?" என்று ஹரிஷ் கேட்க,

"ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி பிறந்தாலும், அண்ணன் ன்னு தான் சொல்லணும்... இப்படி ஒரு அண்ணன் உனக்கு கிடைக்க, நீ புண்ணியம் பண்ணிருக்கணும்" என்று அவன் கூற,

ஹரிஷ், மேலே இரு கைகளை தூக்கி, "தேவுடா..." என்று கத்த, அனுவோ காதை குடைந்தாள்.

"ஆமா என்ன பேசிட்டு இருந்தீங்க?"

"நாங்க என்ன பேசினா உனக்கென்ன ஹார்ப்?" என்று அவள் கன்னத்தில் கை வைத்துக் கேட்க,

உடனே ஹரிஷும், "உனக்கு பிடிக்காத சப்ஜெக்ட்.. பெயிண்டிங் அண்ட் ஆர்ட்ஸ்... வரியா பேசலாம்" என்று கிண்டலும் கேலியுமாக வினவ, அவனோ "ம்ம்க்கும்" என்று கமறினான்.

"ஓ ப்ரதருக்கு பிடிக்காதா? அப்ப நாம அந்த டாபிக் மட்டும் தான் பேசணும்" என்று அனுவும் கேலியாக கூற, யாழ் கண்டமேனிக்கு முறைத்து தள்ளினான்.

"டேய்... உனக்கு தான் வேலை இருக்குன்னு நான் வந்ததும் சொன்னல்ல!? கிளம்பு காத்து வரட்டும்... ஆஃபீஸ் க்கு போய் நாலு பேரை வேலை வாங்கு போ. போடா.. என்ன லுக்கு" என்றான் ஹரிஷ்..

அப்போதும் போகாமல், இடுப்பில் கை வைத்து முறைக்க, அனு, "ஹே.. போய்க்கோ டா..." என்க, ஹரிஷ், "வெல்லு அண்ணையா" என்க, விருட்டென நகர்ந்தான் ஹார்ப் என்னும் யாழினியன். அவன் பின்னே, அவர்கள் சிரிக்கும் ஒலியும் கேட்க, யாழினியன் இதழ்களும் சற்றே வளைந்தன.

"அனு... நீ எப்ப ஃபிரீ சொல்லு... நான் என்னோட ஆர்ட் ஒர்க் சம்பந்தமா, சில இடத்துக்கு உன்னை கூட்டிட்டுப் போறேன்.." என்று ஆவலாக வினவினான்.

அவன் கேள்வி, யாழினியன் காதிலும் தெளிவாக ஒலித்தது. அதை கேட்டு, அதிர்ந்து நின்றான். 'அவ அவனோட வெளியே போவாளா... மாட்டாளா....? என்ன பதில் சொல்லுவா?' என்று மனதுள் கேள்வி கணைகள் அலை மோத...

அனு, "நான் இன்னிக்கு என் வேலை விஷயமா ஒரு சில இடத்துக்கு எல்லாம் போகணும்... நாம இரண்டு நாள் கழிச்சுப் போகலாமா??" என்று கேட்டு, ஹரிஷின் பதிலையும் பெற்றுக் கொண்டாள்.

அன்றைய காலைப் பொழுது கலகலப்பாக சென்றது.. அனைவரும் அவரவர் வேலையை பார்க்க விரைந்தனர்.

*************************
அது ஒரு தரைத்தளத்திற்கும் கீழ் மட்டத்தில் இருக்கும் அடிநிலை இருப்பபாதை. அதில், இருவர் நடந்து சென்றார்கள்.

அதன் கடைக்கோடியில் அமைக்கப்பெற்ற, ஒரு அறையின் கதவை இருமுறை 'டொக்.. டொக்' என தட்ட, பக்கத்து பகுதியிலிருந்து ஒருவன், ரிமோட் ஒன்றை எடுத்து அந்த அறையை திறந்து விட்டான். மரத்தால் ஆன கதவு சட்டென திறக்க, அதன் பின்னே, இரும்பு திரை ஒன்று ஷட்டர் அமைப்பில் தெரிந்தது. ஷட்டர் திரையின் மேல் பயோ மெட்ரிக் முறை பொத்தான்களை ஒருவன் தட்ட, சரேலென்று திரை வழி விட்டது..

உள்ளே சென்றவர்கள், மேஜைக்கு பின்னால் தெரிந்த, ரோலிங் சேரில் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்த உருவத்தை வணங்கி நிமிர்ந்தார்கள்.

"ம்ம்ம்"

"பாஸ்" என்றவன் தன் அலைபேசியை அந்த உருவத்திற்கு முன்னே தள்ளி வைத்தான்.

"பேரு அனுலேகா.. புதுசா கல்யாணம் ஆயிருக்குப் போல பாஸ்.. அவ புருஷனோட பீச்சுக்கு போனா... "

"அடச்சீ மாங்கா மடையனுங்களா... அவளுக்கு கல்யாணம் ஆனா என்ன ஆகலைன்னா எனக்கென்ன டா தடி தாண்டவராயனுங்களா... அவ யாரு.. அவளுக்கு பின்னாடி உறுத்துணையா நிக்கறது யாரு... அவளுக்கு எப்படி நம்ம கருப்பு பக்கமெல்லாம் தெரிஞ்சுது... இதை கண்டுப்பிடிச்சுட்டு வாங்கன்னு சொன்னா, அவ புருஷனோட குஜாலா ஊர் சுத்தினதை வந்து சொல்லிட்டு இருக்கீங்க.. ******"

"பாஸ் இந்த ஒரு வாரத்துல இது மட்டும் தான் எங்களுக்கு தெரிஞ்சுது... கூடிய சீக்கிரம் எல்லாம் கண்டுபிடிச்சு சொல்றோம் பாஸ்..." ,என்று பதவிசாக கூறினார்கள்.

"பிளாக் ஓல்ஃப் (black wolf) இவனுங்களை நம்பி பிரயோஜனம் இல்ல.. நாம் நேரா அவ கதையை முடிச்சிடலாம்.. அப்புறம் யாரு நம்மளை வேவு பார்க்க ஆளு இருப்பாங்க.." என்றது இன்னொரு குரல்.

"வெள்ளை பூனை,... இது நவீன யுகம்... கொசு கடிச்ச பிளட் வெச்சு DNA டெஸ்ட் பண்ணி திருடனைக் கண்டுப்பிடிச்சக் காலம் இது.. அதனால ஏடாகூடமா ஏதாவது செஞ்சு, நம்ம மேல இருக்கும் சந்தேகத்தை நாமளே உறுதிப் படுத்திடக் கூடாது... முதல்ல அவளை யாருன்னு தெரிஞ்சுகிட்டு களத்துல இறங்குவோம்.. எவ்வளவு தைரியம் இருந்தா, பத்திரிக்கையில் எழுதி, பிரச்சனை உண்டு பண்ணியிருப்பா? அவளுக்கு கொடிய தண்டனை சத்தமே இல்லாம நாம கொடுக்கணும்... அதுக்கு சரியான நேரம் வரணும்..." என்றது பிளாக் ஒல்ஃப்.
 
Top