கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பொம்மலாட்டம்...அத்தியாயம் 41

Latha S

Administrator
Staff member
41



சக்தி வேல் குடும்பத்திகுரிய திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது அன்று,,



வாசலில் ‘வெற்றிவேல் வெட்ஸ் தேவி..’ என்ற எழுத்துக்கள் ஜிகினா போர்டில் பளபளத்தது..



அனைத்து உறவினர்களும் குழுமி இருந்தனர்.. கண்ணாத்தா ஆச்சி இங்கும் அங்கும் பரபரப்புடன் பறந்தபடி இருந்தார்.. பின்னே இருக்காதா என்ன.. அவர் பேரன் திருமணமாயிற்றே..



வர வேண்டிய உறவினர் கூட்டம் அனைத்தும் வந்து இறங்கி இருந்தனர் முதல் நாளே.



ராஜ்குமாரும் ரேவதியும் இங்கும் இங்கும் ஓடி ஓடி அனைவரையும் வரவேற்று உபசரித்தபடி இருந்தனர்.. தங்கள் மகள் வீட்டுத் திருமணம் அல்லவா?.. சந்தோஷமாக எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு பார்த்துப் பார்த்து கல்யாண வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்..



கதிர்வேலை ஆளையே காணோம்.. சத்யாவும் புத்தம்புது அழகிய ஃபாண்டா வண்ண பட்டு சரசரக்க.. தேவதை போல் நின்றிருந்தாள்.



தாம்பாளத்தில் பூவை அனைவருக்கும் கொடுத்தபடி தன் தாயுடன் சிரித்தபடி நின்றிருந்தவளை,



திடீரென்று யாரோ ஒரு குட்டிப் பெண் வந்து சத்யாவை எங்கோ போகச் சொல்லிவிட்டுப் போனது..



அதற்குள் அங்கே வந்த கண்ணாத்தா, "ம்ம்.. என்னடி பேத்தி.. எங்க கிளம்பற.. யாரு கூப்பிட்டாங்க இப்போ.. இங்க ஆயிரம் சோலி காத்து கிடக்கு..", என்று விஷமமாய்க் கேட்டது.



முகம் விகசிக்க, "அதில்லை அப்பத்தா.. இருங்க நான் இப்போ வந்துடறேன்..", என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாய் மாடிப்படியேறி அவள் சொன்ன இடத்துக்குப் போனாள் சத்யா..



அவள் அந்த அறைக்குள் போகவும் யாரோ அவள் கையைப் பற்றி அறையில் இழுத்து கதவை சாற்றினார்கள்..



அனைத்தையும் கவனித்தபடி இருந்த கண்ணாத்தா ஆச்சியின் முகத்தில் வாய் கொள்ளா சிரிப்பு..



'கண்ணாத்தாவா கொக்கா.. எங்கிட்டேயா உங்க வேலையைக் காம்பிச்சீங்க..ஒரு போடு போடாத் தானே புத்தி வருது..இப்போ ரெண்டு வாரமா இதுங்க அடிக்கிற லூட்டி அப்பப்பா..”



“அந்தக் காலத்திலே என் புருஷன் கூட இப்படித்தான் நான் எங்க போனாலும் குட்டி போட்ட பூனைய மாதிரி சுத்தி சுத்தி வருவாறு.. ஆனா பேராண்டி.. எல்லாத்தையும்விட ஒரு படி மேலப் போயி.. கருவாட்டு கூடையை முகர்ந்த பூனையாயில்லை இருக்கான்.. தேறிடுவேடா ..', என்று மனதில் கர்வப்பட்டுக் கொண்டு விஷமமாய் ரேவதியைப் பார்த்து சிரித்து வேறு வைத்தார்.



ரேவதிக்கோ பெருமை பிடிபடவில்லை..



அறைக்குள் நுழைந்த சத்யாவை அப்படியே அலேக்காகத் தூக்கிய கதிர்.. "சூப்பர்டி என் பெண்டாட்டி.. அப்படியே அள்ளிக்கலாம் போலிருக்கு காலையிலேந்து எங்கேயோ வெளியே சுத்திட்டு இப்பத்தான மண்டபத்துக்கு வந்தேன்.. உன்னைய பார்க்கலையா.. அதான் ஆளை விட்டு அனுப்பிச்சேன்..” என்று அவளிடம் செல்லம் கொஞ்சினான்..



முகம் நிறைய நாணப் பூரிப்பு பொங்கி வழிய "அய்யே.. ஆளைப் பாரு.. திஸ் இஸ் டூ மச்.. இப்படி எல்லார் எதிரிலேயுமா மானத்தை வாங்குவீங்க.. அதுவும் உங்க அப்பத்தா ரொம்பத்தான் கிண்டல் பேசுது.... ஒண்ணும் விஷயமில்லேன்னா நான் போறேன்.. வெளியிலே ஆயிரம் வேலை இருக்கு..", என்று பிகு செய்துகொண்டே மேலும் அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.



மெல்ல தன் முத்திரைகளை அவள் முகத்தில் பதித்தவனைப் பார்த்து மேலும் மனம் பூரித்தது சத்யாவிற்கு..,' எப்பேர்ப்பட்ட சொர்கத்தைக் கை நழுவிப் போக விட இருந்தேன்.. நல்ல வேளையாக அன்று அப்பத்தா ஏதோ தடாலடியாகச் செய்தார்களோ என் வாழ்க்கை பிழைத்தது.. என்று, எண்ணியவள் நினைவு இரு வாரங்களுக்குப் பின்னோக்கி சென்றது..



அன்றைக்குக் கிளம்பத் தயாராய் இருந்த சத்யாவின் அறைக்குள் நுழைந்த கதிர் அறைக்கதவைச் சாத்தியவன், அதன் மேலேயே சாய்ந்தபடி ஒன்றும் பேசாமல் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்..



மெல்லச் சுதாரித்தாள், "கதிர் வந்துட்டிங்களா.. அதுவும் நல்லதுதான், இங்கே ஆஃபீஸ் சம்பந்தப்பட்ட ஃபைகளையெல்லாம் அந்த டேபிள் மேலே வைத்திருக்கேன்.. அப்புறம்.. கங்கிராஜுலேஷன்ஸ்.. இந்த முறையாவது உங்க மனசுப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்..”



“இனியும் உங்கள் வாழ்க்கையைக் குழப்பியடிக்க எனக்கு மனம் இல்லை.. ஆல் தி பெஸ்ட்.. நிறையப் பத்திரங்கள் சைன் செய்து வைத்திருக்கிறேன்.. நீங்கள் நம் விவாகரத்துக்கு அதையே யூஸ் செய்து கொள்ளுங்கள் என்னை இப்ப ஸ்டேஷனில் விடுட்டு வர முடியுமா?..”, என்று முடிந்தவரை தன் கலக்கத்தையும் கண்ணீரையும் வெளிக்காட்டாமல் சொல்லியவளை ஒன்றும் சொல்லாமல் நன்றாய் உறுத்துப் பார்த்தபடி இருந்தான் கதிர்.



பின் மெல்ல "ஏன் டி..என்னையப் பார்த்தா உனக்கு என்ன கேணக்கிறுக்கன்னு நெத்தியிலே எழுதி ஒட்டியிருக்குதா.. சரி தெரியாமத்தான் கேக்குறேன்.. உனக்கு வேணுமின்னா வறதுக்கும் வேண்டாம்னா போறதுக்கும் நான் என்ன ஹோட்டலா வச்சிருக்கேன்.. ஊரைக்கூட்டி கல்யாணம் நடந்துருக்கு நமக்கு..”



“உனக்கு வேணுமின்னா அது கட்டாயக் கல்யாணமா இருந்துருக்கலாம்.. என்னயப் பொருத்தவரை அதுதான் எனக்கு ஓரே கல்யாணம்.. இந்த ஜென்மத்தில் இதுவரைக்கும் நீ மட்டும் தான் எனக்குப் பெண்டாட்டி.. உனக்கு வேறு மாதிரி வேணுமின்னா இந்தக் கல்யாணம் நடக்கையில் இருந்த அத்தனை பேரையும் கூப்பிடு.. அவங்க முன்னாடியே என்னை அத்துவிட்டு போயிடு..", என்றான் கல் போல் இறுகிய முகத்துடன்..



மனதுள் ஏதோ இனம் புரியா கலக்கம் சூழ, 'ஐய்யோ இவன் என்ன சொல்கிறான்.. இதுவரைக்கும் நான் மட்டும் தான் பெண்டாட்டின்ன அப்போ அவன் கையில் இருக்கிற கவரில் இருக்கும் பெண்.. இந்த அப்பத்தா வேறு கல்யாணம் நிச்சயம் செஞ்சிடுச்சே.. அப்போ அது?..’, என்று குழப்பம் தலை தூக்க..



"நீங்க என்ன சொல்லறீங்க.. அப்போ அந்தப் பொண்ணு.. அப்பத்தா வாக்கு கொடுத்துட்டாங்க அவங்களுக்கு..", என்றாள் மொட்டையாய்..



"சரி.. குடுக்கட்டுமே.. அவளையும் தான் இங்கே மருமகளா கூட்டிகிட்டா போச்சு.. ஒன்னோட ரெண்டு ஏன் இன்னும் நாலு பேத்தை பார்த்துக்க முடியும்", என்றான் அலட்சியமாய்..



"கதிர்.. திஸ் இஸ் நாட் அ ஜோக்.. ஒரு பொண்ணோட வாழ்க்கை.. பாவம் அந்தப் பொண்ணு.. ஏதோ பிராப்ளம் போலே.. அதான் உங்களுக்குக் கல்யாணம் பண்ண அப்பத்தா டிசைட் செஞ்சாங்க.. இப்போ ஒத்துகிட்ட பின்னாடி மாத்தி பேசுரது கொஞ்சம் கூட நல்லாயில்லை..", என்றாள் சத்யா.



"சரி.. இப்போ யோசிச்சு சொல்லு.. நீ கூடத்தான் அத்தனை பேர் எதிரிலேயும் என் சுக துக்கங்கள் இவனோடன்னு என் கையால தாலி கட்டிகிட்டு என்னோட வாழறதா வாக்கு கொடுத்தே.. அதை நீ காப்பத்தினியா.. சொல்லுடி.. உன்னோட இந்த நிமிஷம் வாழறதுக்கு நான் தயார்.. நீ தயாரா?..", என்றான் உறுமலாய்..



கைகால் நடுங்கத் தொடங்கியது சத்யாவிற்கு.. கதிருக்கு இவ்வளவு கோபம் வருகிறது.. எப்போதும் இவன் தன்மையாய் தானே பேசுவான்.. நான் செஞ்ச காரியம் அப்படிப் போல.. சாதுவை சேதுவாக்கிடுச்சு.. இப்போ என்ன செய்வது என்று யோசித்தபடி



என்ன சொல்வது என்ன செய்வது என்று புரியாமல், "அது வந்து.. அது..", என்று திக்கித் திணறினாள்.



"என்னடி வந்து போயின்னு.. இழுக்கறே.. சொல்லுடி என் பொண்டாட்டி.. எனக்குத் தெரியும்டி.. உனக்கு இன்னமும் கூட உள் மனசிலே தான்கிற அகந்தை இன்னமும் இருக்கு.. அதைத் தாண்டி நீ வெளியே இந்த ஜென்மத்தில் வருவியான்னு எனக்குத் தெரியாது.. நானும் தான் நினைச்சேன்.. நீயா அந்த மாய வட்டத்திலேந்து வெளியே வருவேன்னு தான் காத்திருந்தேன்.. ஆனால் எல்லாம் வேஸ்ட்.. உன் திமிரும் அடமும் அப்படியே தான் இருக்கு..”



“சரி இனி பேசி பயன் இல்லை.. நீ தயார்னா சொல்லு நான் வெளியே இருக்கேன்.. உன்னை இப்பவே உன் அப்பன் வீட்டில் கொண்டு விடுகிறேன்.. என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ.. அடுத்து உனக்கு இங்கேயிருந்து என்னென்ன வேணுமோ எடுத்துக்கோ.. உனக்கு நிச்சயம் வேண்டியிருக்கும்..", என்று சொல்லியபடி கதவைத் திறக்கத் திரும்பினான்..



அடுத்த நொடியே அவளைச் சுற்றியிருந்த மாய வலை அறுந்தது.. இனி தாமதித்தால் இந்த வாழ்வு நம் கை விட்டுப் போய்விடும் என்பது மட்டும் தான் அவள் மனதில் எதிரொலிக்கத் துவங்கியது.. எவ்வளவு அழகாய் புட்டு புட்டு வைத்துவிட்டான் என்னைப் பற்றி..



ஒரு கணம் யோசித்தவள்.. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவள், அடுத்தக் கணம் தாமதிக்காமல் வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாய் நின்றிருந்த தன் கணவன் அருகில் சென்று அவன் தோளைத் தொட்டுத் அவனைத் தன் பக்கம் திருப்பியவள்..,



"கதிர், இப்போ நீங்க சொன்னது நிஜம் தானே.. நான் இங்கேயிருந்து எதை வேணா எடுத்துப் போகலாம் தானே.. அப்புறம் வாக்கு மாறக் கூடாது", என்று கம்பீரமாய்க் கேட்டாள்..



கதிரும் இவள் அப்படி என்ன கேட்கப் போகிறாள்.. காலேஜை தன் பேரில் எழுதிகொடுன்னு கேட்பாளாயிருக்கும் என்று அலட்சியமா,



"எங்க பரம்பரையில் நாங்க சொன்ன சொல் தவறுவது இல்லை.. உனக்கு என்ன வேணுமோ கேளு எழுதித் தருகிறேன்", என்றான் அசால்ட்டாய் சொல்லிவிட்டு மனம் முழுக்க வேதனையோடு வேறு புறம் பார்த்தபடி நின்றவன், மனதுள்..



'சே இவள் என்னை ஒருபோதும் புரிந்து கொள்ளப் போவதே இல்லை.. இவளுக்கு இன்னமும் கூட நான் அவளுக்கு ஏற்றவன் இல்லை என்ற நினைப்புதான் மேலோங்கி இருக்கு.. இதில் என் காதலை இவளிடம் சொல்லுவது.. பாலைவனத்தில் கொட்டிய நீர் தான்.. எல்லாம் வேஸ்ட்.. இதில் இந்த அப்பத்தா வேறு என்ன திரிசமன் செய்ய நினைத்து என்னை இங்கே அனுப்பியதோ..', என்று யோசித்தபடி நின்றவனை,



சட்டென்று அவனைக் குனிந்து அவன் இடுப்பை பிடித்துத் தூக்கிக் கொள்ள முயற்சி செய்தாள்.. அவ்வளவுதான் கதிர் பயந்துவிட்டான்..



"அடியேய் என்னாடி பண்ணுறே.. என்னைத் தள்ளி விட்டுடாதேடி.. சொல்லுடி உனக்கு என்ன வேணும்டி சொல்லித் தொலையேன், வேட்டி அவுந்துடும்டி..", என்று கத்திவிட்டான்.



"அது.. அந்தப் பயம் எப்பவும் இந்தச் சத்யாமேல் இருக்கணும் கதிர்.. உனக்கு..இப்பசொல்லுறேன் கேட்டுக்கோ.. எனக்கு இந்த வீடோ சொத்தோ எதுவும் வேண்டாம்.. இந்தக் கதிர் சிக்ஸ்ஸ் ஃபீட் டூ இன்சஸ். எண்பத்தஞ்சு கிலோ எடையுள்ள ஸ்வீட்டான இந்த மனுஷன் தான் தேவை.. இவனை நான் யாருக்கும் எதுக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. ஐ பிராமிஸ்..”



“நான் உண்மையா சொல்லறேன்.. ஐ..லவ் யூ ..ஃப்ரம் தி பாட்டம் ஆஃப் மை ஹார்ட்.. நீங்க இல்லாம என்னால இனி ஒரு செகண்ட் கூட இருக்கமுடியாது.. எப்படியாவது நான் இந்த வீட்டில் தான் இருப்பேன்..”



“உங்களுக்கு அந்த ரெண்டாம் கல்யாணம் சந்தோசம் கொடுக்கும்னா.. அதுக்கும் நான் தயார்.. இந்த வீட்டில் உங்க எல்லாரோடையும் சந்தோஷமா இருக்க எனக்கு ஒரே ஒரு கடைசி வாய்ப்பைக் கொடுங்க..", என்று கம்பீரமாய் ஆரம்பித்துக் கண்ணிரில் முடித்தாள் சத்யா..



கண்களை மூடிக் கொண்டு அவன் பதிலுக்காகக் கண்ணீர் பெருகக் காத்திருந்தாள் சத்யா..



அவளைக் குனிந்து பார்த்தவன் மனது பொங்கியது.. 'என்ன இருந்தாலும் சத்யாவை யாராலும் எதிலும் ஜெயிக்க முடியாது.. பொல்லாதவ.. ஒரே அடியில் அப்படியே கவுத்துட்டாளே..', என்று நினைத்தவன், அடுத்த நொடி அவளைத் தன்னுடன் அப்படியே சேர்த்தணைத்துக் கொண்டு எலும்பு நொறுங்கும் அளவுக்குப் பிடியை இறுக்கியவன் அவள் முகத்தை நோக்கிக் குனிந்து முத்தமழை பொழிய ஆரம்பித்தான்..



கண்களைச் சட்டென்று திறந்தவளுக்குச் சட்டென்று புரிந்துபோனது கை நழுவிப் போக இருந்த சொர்க்கம் கை சேர்ந்து விட்டது என்று.



"ம்க்கூம். என்னங்க மேடம் ரீவைண்டா.", என்ற கனைப்பில் நினைவுக்கு வந்தவள்.. சட்டென்று தான் எங்கிருக்கிறோம் என்பது புரிய.. கதிரின் நெஞ்சில் கையை வைத்து அவனை விலக்கித் தள்ளியவள்,



"ச்சு.. போங்க மாமா.. புடவையெல்லாம் கசங்கிப் போச்சு.. எல்லாரும் என்ன நினைப்பாங்க..", என்று செல்லமாய்ச் சிணுங்கினாள்.



அவளை வாசம்பிடித்தபடியே, "ம்ம்.. நினைப்பாங்க நினைப்பாங்க.. சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு.. போடிங்க.. எல்லாம் இந்த வயசை தாண்டி வந்தவங்கத்தான்..எல்லாத்துக்கும் தெரியும்..அதுவும் அப்பத்தாத்தா எல்லாத்தையும் சமாளிக்கும்.. நீ சும்மா ராங்கி செய்யதடி.. ரங்கம்மா..", என்று அவள் இடுப்பைத் தடவ ஆரம்பித்தவனின் கையைப் பிடித்து நிறுத்தியவள்,



"கதிர் மாமா.. என்ன நாம சொன்னதெல்லாம் நியாபகம் இல்லையா.. வேதாக்காவும் பிரகாஷ் மாமாவும் மொதல்ல சரியாகட்டும்.. அப்புறம் பாருங்க.. இந்தச் சத்யா யாருன்னு புரியும்.. பத்தாம் மாசம் ரெட்டை பிள்ளைய பெத்து அப்பத்தா கையிலே கொடுக்கலையின்னா கேளுங்க..", என்று சவால் விட்டவளிடம்,



"செஞ்சாலும் செய்வேடி நீ.. எங்கப்பத்தா இல்ல டிரெயினிங் கொடுத்து இருக்கு.. அன்னிக்கு அது ரெண்டாம் கல்யாணமின்னு ஒரு குண்டைப் போடலென்னா நீ மாறியிருப்பியா.", என்று கேட்டவனைப் பார்த்து முறைத்தவள்..



"மாமா.. எப்படி இருந்தாலும் நான் உங்களை விட்டிருக்க மாட்டேன்.. என் மனசு உங்ககிட்டே போயிடுச்சுன்னு எப்பவோ எனக்குத் தெரிஞ்சிடுச்சு.. ஜஸ்ட் அப்பத்தா போட்ட வெடி அதை டிரிகர் செஞ்சிடுச்சு அவ்வளவுதான்.. ஆனாலும் கூட நான் இப்படி அப்பத்தா டூப் விடும்னு நினைக்கலை.. வெற்றிக்குக் கலாணத்தை நிச்சயம் செஞ்சிட்டு..அதை எங்கிட்டே சொல்லாம.. எப்படிக் கேம் ஆடிட்டாங்க.. டூ மச்", என்று தலையை ஆட்டியபடி செல்லமாய்க் கோபித்துக் கொள்ள..



அவள் தலை ஆட்டிய விதத்தில் துள்ளி குதித்த ஜிமிக்கியைத் தட்டியவாறு, "பின்னே யாருன்னு நினைச்சே அப்பத்தாவை.. உப்பு விக்கச் சொன்னா ஊரையில்ல வித்துடும் என் அப்பத்தா.. அவங்ககிட்ட உன் பாச்சால்லாம் பலிக்குமா என்ன.. ", என்று முகம் விகசிக்கச் சொன்னான்..



"அப்பத்தா மாதிரி ஒரு மனுசியைப் பார்க்க முடியாது.. ரொம்ப நல்லவங்க.. பாரு இப்போ கூடத் தேவி.. அதான் அந்தக் கல்யாணப் பொண்ணு வீட்டிலே ஏதோ அவளுக்கு வேறு இடத்தில் நிச்சயம் செஞ்சு அது சரிபடலைன்ன உடனே.. தன்னோட உதவிக்கரத்தை நீட்டிட்டாங்க பாரு.. யாருக்கு வரும் அந்த மனசு..", என்று பெருமைப்பட்டான்..



“மாமா.. நான் ஒண்ணு கேட்பேன்.. உண்மையா பதில் சொல்லணும்..” என்று கேட்டவளை..



“ம்.. எதுக்குடி இத்தனை பீடிகை.. சொல்லேன்.. என்னிக்கும் இந்தக் கதிர் உண்மையைத்தான் பேசுவான்..” என்றான் கதிர் தன் மீசையை முறுக்கியபடி.



“உங்களுக்கு என் மேல் கோபம் இல்லையே?.. நான் பிரகாஷை விரும்பினேன்னு.. நமக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்னாலே சரி.. அப்புறமும் நான் உங்களை ஒதுக்கிட்டு, பிராகாஷ் பின்னால் சுற்றி.. உங்களை அவமானப்படுத்தி..”



அவளுக்கு மீண்டும் கண்கள் கரித்ததோ..தலையைக் குனிந்து கொண்டாள் சத்யா.



மனைவியின் மனனிலையை நன்றாக அறிதிருந்த கதிர்.. இதை இப்படியே விடக்கூடாது.. இன்று பேசி தீர்த்து விட வேண்டும் என முடிவு செய்து கொண்டவன்., அவளைத் தன் கை வளைவுக்குள் மீண்டும் கொண்டு வந்தவன், அவள் முகம் நிமிர்த்தினான்.



“ஷ்.. ஃபீல் பண்ணாதே.. இப்படிப் பேசி முதலில் உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளாதே.. முடிஞ்சது முடிஞ்சதாக இருக்கட்டும்..”



“நீ கேட்டியே எனக்குக் கோபம் வரலையான்னு?.. வராமல் இருக்குமா சொல்லு.. எந்த ஒரு ஆம்பளைக்கும் இப்படிப் பெண்டாட்டி நடந்து கொண்டா வெட்டிப் போடலாம்னு ஆத்திரம் வரத்தான் செய்யும்.. அதுக்கு நானும் விதிவிலக்கு இல்லை..”



“என்ன ஒண்ணு.. முதல்ல எனக்குக் கோபம் வந்தாலும், கொஞ்சம் யோசித்துப் பார்த்துப் போது, உன்னோடு மனசு புரிஞ்சது..”



“நீ குழந்தை மனசுக்காரிடி.. உன் கையில இருக்கிற பொம்மை பிடிங்கிட்டா மாதிரி நடந்திட்டே.. அதில எந்தத் தப்பும் இல்லை.. என்ன? உனக்குக் கொஞ்சம் வீம்பு பிடிவாதம் அதிகம்..



“அந்தப் பிடிவாதம் தான் உன்னால பிரகாஷை வேதாவுக்குப் பெண்டாட்டியா ஏத்துக்க முடியாமல் விட்டுக் கொடுக்க மனசில்லாமல் அப்படியெல்லாம் நடந்துகிட்ட.. அது ஒருவிதமான பொறாமை உணர்வு டி..”



“நான் உன்னைச் சரியா புரிஞ்சிக்கிட்டேன்.. அதுக்குக் காரணம் நான் உன் மேல் வைச்ச காதல்னு சொல்லலாம்..கட்டாயம் நீ எனக்குக் கிடைபேன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது.. அப்படியே எனக்கு நீ கிடைக்கலைன்னாலும், உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்னு நினைச்சி வாழ்திருப்பேன்..”



“இனி இதெல்லாம் பேசக் கூடாது.. சரியா.. அதான் நீ உணர்ந்து என்கிட்ட திரும்பி வந்திட்டியே.. எனக்கு அதுவே போதும்..” என அவளை இறுக்கிக் கொண்டான்.



அவன் அணைப்பில் மெய் மறந்து நின்றிருந்தவள்..



“தாங்க்ஸ் மாமா.. என்னைச் சரியா புரிஞ்சி வச்சிருக்கீங்க..நீங்க கொடுக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும்.. ஐ லவ் யூ..” என அவன் அணைப்பில் தன்னைத் தொலைத்தவள்.. பின்னர்..



"அதெல்லாம் சரிதான் கதிர் மாமா.. இந்தக் கல்யாணம் முடியறதுக்குள்ளே எப்படியாவது வேதாக்காவையும் பிரகாஷ் மாமாவையும் சேர்த்து வச்சிடணும்.. அப்போதான் என்னால் நிம்மதியா இருக்க முடியும்.. வேதா பிரகாஷோடு சந்தோஷமாக இருக்கணும்.. சரியா.. அப்புறம் தான் நமக்கு மத்தபடி சமாச்சாரமெல்லாம்.. நீங்க பிராமிஸ் செஞ்சிருக்கீங்க நியாபகம் இருக்கட்டும்..”



என்று சொல்லிவிட்டு கதவைத் திறந்தவளின் தோள்களில் கையைப் போட்டபடி மாடியிலிருந்து படியிறங்க.. அப்போது தான் பிரகாஷும் வேதாவும் மண்டபத்தினுள் நுழையக் கண்டார்கள்..



இரண்டு ஜோடிகளும் மற்றவரை நேரடியாய் பார்த்தவுடனேயே தெரிந்து போனது.. இனி இருவருக்கும் ரூட் கிளியர்.. க்ரீன் சிக்னல் என்று..



பிரகாஷின் கை வளைவில் நின்றிருந்த வேதாவைப் பார்த்ததுமே கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..



மெல்ல சத்யாவிடம் மென் குரலில், "சது குட்டி பார்த்தியா.. புருஷன் பெண்டாட்டி நடுவில் யாராக இருந்தாளும் எந்தச் சிபாரிசும் எடுபடாதுங்கிறதை.. என் மச்சினிச்சி சாமர்த்தியசாலிடி.. புரிஞ்சிதா.. இனி நம்ம கச்சேரிதான்..", என்றவனின் வார்த்தைகளில் குங்குமமாய் முகம் சிவந்தாள் சத்யா..





‘கடவுள் அமைத்து வைத்த மேடை--- இனிக்கும்

கல்யாண மாலை

இன்னார்க்கு இன்னாரென்று

எழுதி வைத்தானே தேவன் அன்று.



இனி இவர்கள் நால்வர் வாழ்க்கையிலும் ஆட்டம் களை கட்டும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை..



இரண்டு தம்பதியரும் இனி வாழட்டும் வளமுடன் என வாழ்த்தி நாமும் இவர்களிடமிருந்து விடை பெறுவோம்.



சுபம்.



**************************************************************



பொம்மலாட்டம் கதையோடு பயணித்து கதையை வாசித்து எங்களை ஊக்குவித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. மீண்டும் அடுத்த கதையோடு விரைவில் சந்திப்போம்.


 

Kothaisuresh

Well-known member
இன்னார்க்கு இன்னாரென்று கடவுள் போட்ட முடிச்சு.

இரண்டு ஜோடிகளும் நிதர்சனத்தை உணர்ந்து வாழ்க்கையை
வாழத் தொடங்கி விட்டார்கள் வாழ்க வளமுடன்👌👌👌👌💝💝💝💝❤❤❤❤
 

Mohanapriya M

Well-known member
Vera level story 👌🏻👌🏻👌🏻 புரியாத இரு மனங்களை சேர வச்சு அவங்க மனசையும் புரிஞ்சுக்க வச்சு காதல் அஹ வெளி படுத்தி supero super 👌🏻👌🏻👌🏻👌🏻 Inths story la elame iruthuthu kadhal, sandai, purithal, misunderstanding elame elarukum pudichamari solitanga 😍😍😍😍😍
 

Jothiramar

Moderator
Staff member
செம்ம ஸ்டோரி 😍😍😍 இருவேறு துருவங்களை ஒன்றிணைத்து அதிலும் கூட இரு ஜோடிகளுக்கும் இடையே ஏற்ற தாழ்வு அவர்களின் மனப்போராட்டம் திடிரென ஏற்பட்ட உறவை ஏற்றுக்கொள்ள முடியாத இருவர். கிடைத்த வாழ்க்கையை வாழ நினைக்கும் இருவர் என்று அவர்களின் வாழ்க்கை எவ்விதம் நேராகும்னு அருமையான சொல்லிட்டிங்கக்கா 😍😍😍 ஆட்டிவைப்பவன் மேல இருப்பவன் நாம எல்லாம் பொம்மைகள் தான்னு இருஜோடிகளும் உணர்ந்து கிடைத்த வாழ்க்கையை அழகாக தங்கள் துணைக்காக அவர்களின் விருப்பத்திற்காக மாற்றிக் கொண்டு சரிபாதியின் அன்பையும் காதலையும் பெற்று தங்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறாங்கன்னு விருவிருப்பு குறையாமல் சொல்லிட்டிங்க... செம்ம ஸ்டோரி ஒவ்வொரு அப்டேட்டையும் காத்திருந்து படிச்சேன் ரொம்ப நாளைக்கு அப்புறம் படிச்ச கதை இது தான் 😍😍😍
சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 😍😍😍
 
Top