கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அகநக நட்பது நட்பு - 10

இதற்கு முடிவு கட்ட நினைத்து இருவரையும் அழைத்து பேச நினைத்தார். அன்று வீட்டிற்கு வரும்போதே அடுப்படியில் இருந்து வாசனை வந்தது. மஹியிடம் பேசிவிட்டு என்ன வாசனை என கேக்கலாம் என்றிருந்தவன் அதை மறந்துபோனான்.

" தங்கோ..."

" என்ன மா.."

" இங்க வா தங்கோ "
வந்தவனிடம் ஒரு தட்டை கொடுத்து ,

" இத எடுத்துகிட்டு எங்கூட வா " என முன்னால் சென்றார். மஹியின் அறையை அடைந்தவர்

" உள்ள வா தங்கோ "

" நா வரல.. அவ என்ன போன்னு சொல்றா "

" அம்மா சொல்றேன்ல. வா.."

" மஹி.."

" மா.."

" இந்தா இத சாப்டு. நல்லது " என உளுத்தங்களி உருண்டையை ராகவிடம் இருந்து வாங்கி கொடுத்தார்."

" தங்கோ நீயும் எடுத்துக்கோ "

இருவரும் சாப்பிட்டு முடித்ததும்

"சரி நா உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கதை சொல்ல போறேன் .கேப்பீங்களா "

" ம்ம்ம்ம் "

" இது ஒரு பையோட கதை "

" பைய்யா "

" ஆமா "

" இந்த பைக்கு ரெண்டு பாக்கேட் இருக்கு "

" ம்ம்ம் "

" இந்த ரெண்டு பாக்கெட்ல நிறைய முட்டை இருக்கு "

" முட்டையா "

" ஆமா. இந்த முட்டைகள்ல ஒரு முட்டை மட்டும் மத்த முட்டைகள விட்டுட்டு மாசாமாசம் பைக்குள்ள வருமாம். அப்டி வரும்போது அது பைக்குள்ள மாட்டிகிச்சுன்னா அது அங்கயே ஒட்டிகுமாம் "

" ம்ம்ம "

" அப்டி மாட்டிக்கலன்னா ஒடஞ்சி வெளிய வந்துடுமாம் "

" என்னமா கொழப்புற "

" கொழப்பல தங்கோ "

" சரி இந்த பை எங்க இருக்கு .அது என்ன விசித்திரமான பை "

சிரித்த சுமதி " இது எல்லா பெண்களுக்கு உள்ளயும் இருக்கு. இதுக்கு பேர் தான் கருப்பை.அதாவது பாப்பாலாம் அம்மா வயித்துல வளரர பை "

" ஓ.." என்றனர் இருவரும்

" நா சொன்ன மாறி அந்த முட்டை பாப்பாவா ஆகலன்னா அது உதிரமா வெளிய வந்துடும். சரியா .அதான் இப்போ மஹிக்கு நடந்திருக்கு. இதுல பயப்படவோ, அசிங்கம்னு நினைக்கவோ எதுமே இல்ல "

" ஏன் ஆண்களுக்கு இது மாறி ஆகாதா " - ராகவ்

" ஆகாது .ஏன்னா உங்களுக்கு அந்தப்பை இல்ல . அவ்ளோ தான். "

" ம்ம்ம் "

" அதுனால நா சொன்ன மாறி மஹி ராகவ் கிட்ட பேசாம இருக்குறதாலயோ , ராகவ் மஹிகிட்ட கோவிக்குறதுலயோ அர்த்தம் இல்ல . சரியா மஹி "

" ம்ம்ம் "

" இதுல ஆசிங்கப்பட ஒன்னுமில்ல. யூரின் , மோஷன்லாம் எப்படி நம்ம உடலோட கழிவுகளோ , அதே மாறி தான் இதுவும். சரியா "

" ம்ம்ம் "

" அப்றம் ராகவ். இந்த மாறி நேரங்கள்ல நிறைய சோர்வு வரும். அதுனால உன்னால முடிஞ்ச உதவிய நீ செய்யலாம். சரியா கண்ணா "

" ம்ம்ம் சரி மா "

" சரி இப்போ ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க நா போய் வேலைய பாக்கறேன் "

இதைத்தான் பெற்றோர்கள் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறிகின்றனர். மாதவிடாயை அசிங்கம் என்றோ, வெட்கப்படும் விஷயம் என்றோ நாம் விலக்கி வைத்தல் நன்மை தராது. பெண்ணை பெற்ற அனைவரும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பர். அது தன் பெண்ணின் வளர்ச்சியை பொருத்து ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
எல்லா பெண் பிள்ளைகளின் வாழ்வில் மிகவும் முக்கியமான நிகழ்வு அவர்கள் பெரிய பெண் ஆதல்.சராசரியாய புத்தகங்களின் படி 11- 14 வயதிற்குள் இந்த ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அவர்களை வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு தயார்படுத்துகிறது. இந்த வளர்ச்சி பெண் பிள்ளைகளின் உடலிலும் , மனதிலும் பல மாற்றங்களை கொண்டுவரும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இருப்பினும் முதல் முறை அதை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கு அது நிச்சயம் பயத்தை தரும்.அதை முறையாக பெற்றோர் அவர்களுக்கு முன்னமே அறிவுறுத்துதல் நல்லது. ஒரு அன்னைக்கு நிச்சயம் தன் பிள்ளைகளின் மாற்றங்கள் தெரிந்திருக்கும்.உடலில் மாற்றங்கள் தெரிய துவங்கியதுமே , அவர்களிடம் பொதுவாக இதை பற்றி பேசுவது நல்லது என கூறுகின்றனர்.
அதே போல் அந்த காலம் வந்ததும், கூடவே வரும், உடல் சோர்வு , வயிற்று வலி , உதிரபோக்கு பற்றியும் கூறவது , அவர்களை அந்நாளிற்கு தயார் படுத்தும்.
மிக முக்கியமாக, உணவுகளை ஆரோக்கியமாக கொடுப்பது நன்மை அளிக்கும். அதே போல் ஆண் பிள்ளைகளும் இதை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும் போது, அதை சரியான முறையில் கற்பிக்க வேண்டுமே தவிர, உனக்கு இது தேவை இல்லை என்று பேச்சை முறிப்பது , அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுமே தவிர குறைக்காது.அந்த அந்த வயது பிள்ளைகளை வயதிற்கு ஏற்றாற்போல் நடத்தும் கடமை பெற்றோரையே சேரும். அதைத்தான் சுமதி செவ்வனே செய்தார்.

அதுவரை ஒரே ரூமில் இருந்தவர்கள் மஹி பெரிய பெண் ஆனதும் , ரஞ்சனி , மஹி ஒரு அறையிலும் , ராகவ் இன்னொரு அறையிலும் இருக்க துவங்கினர். ரஞ்சனி தேர்வுகள் நல்ல முறையில் எழுதி, அவள் விரும்பியது போல் மருத்துவம் படிக்க அரசு மருத்துவ கல்லூரியிலேயே இடம் கிடைத்தது.

இப்போது வயது பதினைந்தை தொட, பத்தாம் வகுப்பில் அடி எடுத்து வைத்தனர். எப்போதும் போல் " அடங்காத எருமையாக " ராகவ் வலம் வர, மஹியுடனான நட்பு வலுவானது.

மஹிக்கு புத்தகங்கள் மீதி கொள்ளை ஆசை.கதை புத்தங்கள் நிறைய படிப்பாள் அருகே இருந்த நூலகத்தில். ராகவை வற்புறுத்தி அழைத்து செல்வாள் சில சமயங்களில். அவனும் மனமில்லாமல் போவான், அவளை படிக்க விடாமல் தொண தொணவென நச்சரித்துக்கொண்டே இருப்பான்.

ஒரு முறை இவன் நச்சரிப்பை பார்த்த நூலகத்தின் பொருப்பாளர்

" ஏன் தம்பி.. அந்த புள்ளய கொஞ்ச நேரம் படிக்க விட்டா என்ன. நீயும் எதா புக் எடுத்து படியேன் "

வேண்டா வெருப்பாக வேறு வழி இல்லாமல் அவன் எடுத்து படித்த அந்த புத்தகம், வாழ்க்கை , சமூகத்தை பற்றின அவன் சிந்தனை, எண்ணங்களை தெளிவாக்கி , விஸ்தாரமாக்கியது. அதிலிருந்து அடிக்கடி நூலகம் போக ஆரம்பித்தான். பெரியாரின் களஞ்சியத்தில் ஆரம்பித்தது மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ்,மாக்ஸிம் கார்கி, கலைஞர், அண்ணாதுரை, புலவர் குழந்தை, டி.செல்வராஜ், ஜெயகாந்தன், பூமணி, ஜி.நாகராஜன் என விசாலமாகி அறிவை வளர்த்தது. அந்த அறிவு அவனுக்கு ஒரு கெத்தையும், சுய மரியாதையையும் கூடவே கொஞ்சம் திமிரையும் அளித்தது என கூறலாம். அவனின் இந்த அறிவு , மேலும் கேமராவின் மேல் இருந்த ஈர்ப்பு அவன் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் என அவன் அப்போது நினைத்திருப்பானோ என்னவோ...

பத்தாம் வகுப்பில் இருவரும் தேர்ச்சிபெற , அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தது.எப்போதும் போல் ராஜன் பிள்ளைகளின் விருப்பத்திற்கு விட்டுவிட்டார்.

" பா... " - ராகவ்

" சொல்லு ராகவ். "

" நா காமர்ஸ் க்ரூப் தா எடுக்கலாம்னு இருக்கேன் பா "

" நல்லது ராகவ்.. மஹி நீ என்ன செய்ய போற "

" நா ஹோம் சைன்ஸ் க்ரூப் எடுக்கலாம்னு இருக்கேன் "

" ஓ வெரி குட்."

ஆக அவரவர் விருப்பப்படி பதினோராம் வகுப்பில் வெவ்வேறு பாடப்பிரிவுகளை எடுத்து வெவ்வேறு வகுப்பிற்கு சென்று தங்கள் முதல் பிரிவை எதிர்கொண்டனர்....


( வளரும்...)
 
Top