கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அகநக நட்பது நட்பு - 12

" ராகவ் " என கத்தியபடி கீழே விழுந்தவள் மண்டையிலிருந்து ரத்தம் வெளியேற மூர்ச்சையாகி போனாள். அனைவரும் திடுதிடுவென கீழே இறங்க அங்கே கூட்டம் கூடியது.

மஹியின் தோழி
" யாராது பார்கிங்க் லாட் போய் செகேண்ட் இயர் ஜர்னலிசம் ராகவ கூப்பிடுங்க ". இதை கேட்டு இரு மாணவர்கள் பார்கிங்கிற்கு திசை நோக்கி ஓட , ராகவே எதிரில் வந்தான்.

" நீ.. ராகவ் தானே.. " இருவரில் ஒருவன் கேட்க

" ஆமா.. நீ யாரு "

" நா மஹி க்ளாஸ் மேட். சீக்கிரம் வா "

" இரு இரு நா அங்க தா வந்துட்டு இருக்கேன் "

" ஐயோ மஹி மாடிலேந்து விழுந்துட்டா . சீக்கிரம் வா " .அடுத்த வார்த்தை பேசுவதற்கு ராகவ் அங்கு இல்லை. ஃபைன் ஆர்ட்ஸ் ப்ளாக் நோக்கி தலை தெரிக்க ஓடினான்.கூட்டத்தை விலக்கி அவன் கண்டது அவனை முழுதுமாய் உடைத்தது

" மஹி... மஹி... என்ன பாரு டீ.. ஏன் டீ இப்டி பண்ண "

" ராகவ் . பேச நேரமில்ல.. மொதல்ல ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம் வாங்க " என்றாள் அவள் கண்களை துடைத்த வண்ணம். அவள் கூறுவதில் உள்ள நிதர்சனத்தை உணர்ந்தவன்,அப்படியே அவளை தூக்கினான். ஆட்டோ பிடித்து மருத்துவமனை நோக்கி சென்றனர்.வழி முழுவதும் ராகவ் மஹி மஹி என பிதற்றிக்கொண்டே வந்தான். ரஞ்சுவிற்கு தகவல் சொல்ல , அவள் கல்லூரியுடன் இருக்கும் மருத்துவமனைக்கே வர சொல்ல அங்கு விரைந்தனர். மஹி இருந்த நிலையில் அவள் முகத்தை பார்த்ததும் ஒரு வாரம் முன் அவர்கள் பேசியது நினைவு வந்தது.
அன்று வாட்சப்பில் எதயோ மஹி நோண்டிக்கொண்டிருக்க

" ஏண்டீ.. மொபைல் டேட்டாவ ஆஃப் பண்ணவே மாட்டியா "

" ஏன்.."

" மொபைல் வீணா போய்டும் டி "

" பாத்துக்கலாம். நா எனக்கு மெசேஜ் பண்றவங்கள காக்க வெக்க கூடாதுன்னு நினைக்குறேன்."

" ப்ப்ப்ப்பபா.....ஹ் .. என்ன ஒரு மனசு ... லூசு "

" சரி டி பி என்ன வெக்குறது. நீ எதா ஃபோட்டோ அனுப்பு "

" டி பிங்குறது அவங்கவங்க மென்டாலிடிய சொல்லும். அதுனால உனக்கு என்ன வெக்கனும்னு தோணுதோ அத வை "

" போடா லூசு.. உன்ன போய் கேட்டேன் பாரு.. இப்போ பாரு எல்லாத்துக்கும் லெக்சர் குடு " என தான் சுமாராக இருக்கும் ஒரு படத்தை டி பியாக வைத்தாள். அப்போது தான் மொபைலை எடுத்து டேட்டாவை ஆன் செய்தவன்

" பரவால்லயே... நீ கூட இதுல அழகா தான் இருக்க.. " என கூற அவன் கிண்டல் செய்ததாக நினைத்தவள்

" பே.. கிண்டல்லா "

" அப்டி தான் நினைக்குறேன் " என சிரித்தான். இன்று அதே உடையில் ரத்தக்கறையுடன் நினைவில்லாமல் மடியில் கிடப்பவளை பார்த்துக்கொண்டே வந்தான்.
மருத்துவமனையை அடைந்து ரஞ்சு ஓடிவர, மருத்துவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியில் அமர்ந்தவன், வெறுமையை உணர்ந்தான். ராஜனுக்கும் சுமதிக்கும் தகவல் சொல்ல , சுமதி முதலில் அடித்து பிடித்து வந்தார். ராஜன் அலுவலகம் சென்றிருந்ததால் வர சற்று தாமதமானது. ராஜன் வந்ததும் சுமதி

" பாத்தீங்களா.. நா சொன்னேன்ல அவை மூணு நாளா என்னவோ மாறி இருக்கான்னு. எனக்கு மனசு சரி இல்லன்னு சொன்னேனே." என அழுதார். எதற்கும் கலங்காத தன் தந்தையே கலங்குவதை பார்த்த ராகவிற்கு மனம் வருந்தியது.
அன்று தானும் மஹியும் பேசியது நினைவில் வந்தது..

எப்போதும் போல் அவன் ஏதோ படித்துக்கொண்டிருக்க , இவள் கதைத்து கொண்டிருந்தாள்.

" ராகவ்... இங்க பாரு டா..."

" என்ன டி... "

" நீ இப்பொலாம் ரொம்ப மாறிட்ட "

" புரியல .. என்ன மாறிட்டேன் "

" எப்போ பாரு உர்ர்ர்ர்ர்ருன்னு இருக்க..உராங்குட்டான் மாறி "

" ம்ம்ம்ம்"

" உனக்கு உராங்குட்டான்னு பேர் வெக்குறேன் "

" ம்ம்ம்ம்ம்"

" டேய்... என்ன காண்டாக்காத டா..ஏண்டா இப்டி ஆய்ட "

" இங்க பாரு மஹி.. நீ இன்னும் வளரனும். என்னேரமும் ஈஈஈஈஈன்னு இளிச்சிட்டு இருந்தா லூசுன்னு சொல்லுவாங்க. "

" உன்ன ஒன்னும் இளிக்க சொல்லல.. சாதாரண மனுஷனா கொஞ்சம் எமொஷன்ஸ் இருக்கனும்னு சொல்றேன்.. நீ ஜடம் மாறி இருக்க "

" என்னடி இப்டி சொல்லிட்ட "

" பின்ன என்ன சொல்றது "

" இங்க பாரு. செத்த வீட்ல ஒருத்தர் எல்லா வேலையும் செய்வார் பாத்துருக்கியா. அவர் அரக்க பறக்க ஆகவேண்டியத பாப்பாரு. அப்போ அழ மாட்டாரு. அதுக்காக அவருக்கு எமோஷன் இல்லைன்னு அர்த்தமா. எல்லாரும் அழுதுட்டே இருந்தா யாரு யார தேத்துறது. அதுனால ரொம்ப யோசிக்காத.நா ஒன்னும் ஜடம் இல்ல. எங்களுக்கும் ஃஃபீலிங்க்ஸ்லாம் இருக்கு .நாங்க தான் காமிச்சுக்கறது இல்ல "

" என்னவோ போ "

" ம்ம்ம்ம்"
அந்த பேச்சு அன்று முடிந்தாலும் இன்று ராஜனை பார்த்ததும் ஏனோ மனம் சஞ்சலம் அடைந்தது ராகவிற்கு.

சற்று நேரத்தில் வந்த ரஞ்சு , சுமதியிடம்

" மா..."

" என்ன மா .. அவ நல்லா இருக்கால்ல. ஒன்னும் இல்லயே "

" மொதல்ல அவளுக்கு சர்ஜரி பண்ணனும் மா.. நிறைய ப்ளட் லாஸ் ஆகி இருக்கு "

"..."

" ராகவ் , அப்பா , நீங்க ரெண்டு பேரும் ஓ பாசிடிவ் தான. ப்ளட் பேங்க் போய் ரத்தம் குடுத்துட்டு வாங்க "

" சரி " என இருவரும் செல்ல

" ஒரு நிமிஷம் இதுல சைன் பண்ணுங்க " என ஒரு கோப்பையை நீட்ட , ராஜன் கையெழுத்து போட்டு விட்டு , ரத்தம் கொடுக்க சென்றனர்.
இங்கே அறுவை சிகிச்சை ஆரம்பமானது. பல மணி நேரம் தொடர்ந்த அந்த ஆப்ரேஷன் முடிந்து வெளியே வந்த ரஞ்சு

" மா..." எனும் போதே குரல் தழுதழுத்தது.

" ரஞ்சு ..என்னடி.. நீயே இப்டி செஞ்சா என்ன நினைக்குறது "- ராகவ்

" அவளுக்கு நினைவு வந்து வந்து போகுது டா.. இப்டியே ஆச்சுன்னா கோமாக்கு போக வாய்ப்பு இருக்கு "

" அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அவ தைரியமானவ. வந்துடுவா .."

" ராகவ்.நீ சொல்றது..." என கூறிக்கொண்டிருக்கும் போதே
செவிலி வந்து

" இங்க ராகவ் யாரு "

" நா தா "

" உள்ள வாங்க. பேஷன்ட் கூப்பிடறாங்க . " ரஞ்சுவிடம் " மேடம் டாக்டர் உங்களையும் கூப்பிடறாரு "
இருவரும் உள்ளே செல்ல , மஹியின் கண்கள் ராகவை தேடின.

" ராகவ்..."

" மஹி... என்னடி இது.. "

" ராகவ்... நா உன்ன தங்கோன்னு கூப்டு நாள் ஆச்சு.. ஒரு வாட்டி கூப்பிட்டுக்கவா " கூறுவதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.

" என்னடீ.. கேள்வி இது "

" இங்க வா தங்கோ "
அருகில் வந்தவனின் கையை பிடிக்க,

" தங்கோ.. என்ன கண்ணெல்லாம் கலங்கி இருக்கு. என் ராகவ் எப்போவும் அதே திமிரோட , அதே கெத்தோட இருக்கனும்.."

" ம்ம்ம்ம் "

" ம்ம்ம்ம்மானந்தா. கண்ண தொட. தைரியமா இரு. இது நீ சொல்லி குடுத்தது தா. அன்னைக்கு சண்டை போட்டதுக்கு சாரி " என கூறி தன் நினைவை தவரவிட்டாள்.

" மஹி...." என ரஞ்சு கத்த, ராகவ் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

நான்கு நாட்கள் கழிந்த நிலையில் ரவுண்ட்ஸ் வந்த செவிலி மானிடரில் காட்டிய மாற்றங்களை பார்த்துவிட்டு , டாக்டரை அழைக்க ஓடினார். சற்று நேரத்தில் அவளை பரிசோதித்துவிட்டு வந்த டாக்டர்

" மஹல்சா பேரன்ட்ஸ் யாரு "

" நாங்க தா டாக்டர் "

" கொஞ்சம் வாங்க " ராகவும் அவர்களுடன் வர

" இவர் யாரு"

" எங்க பையன் தான் "

" ஓகே.. "

" சொல்லுங்க டாக்டர் "

" இங்க பாருங்க.. ரெண்டு விஷயம். ஒன் செகேண்ட். ரஞ்சனியும் வந்துடட்டும் "

" எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர் " என ரங்சனி உள்ளே நுழைய

" வாங்க டாக்டர். ப்ளீஸ் டேக் யுவர் சீட் "

" தேங்க் யூ டாக்டர் "

" த குட் நியூஸ் இஸ் ஷீ இஸ் ஔட் ஆஃப் கோமா "

" ரொம்ப நல்லது டாக்டர் " - சுமதி. ராஜனும் ராகவும் , டாக்டர் தான் சொல்லவந்ததை இன்னும் முடிக்கவில்லை என உணர்ந்து அவரையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

" பட்... ஷீ.. ஹாஸ் கான் இன்டு அ வெஜிடேட்டிவ் ஸ்டேட் "

" வாட் " என ரஞ்சு கத்த.

" அதுக்கு தான் உங்கள வர சொன்னேன் ரஞ்சனி. அவங்க இப்போ கோமாலேந்து வந்துட்டாங்க. பட் அவ்ளோ ரெஸ்பான்ஸ் இல்ல. "

" யூ மீன் ஷீ இஸ் இன் போஸ்ட் கோமா அன்ரெஸ்பான்சிவ் ஸ்டேட் " என மீண்டும் அதிர்ச்சி மாறாமல் கேட்டாள் ரஞ்சு.

" எக்சாக்ட்லி "

" கொஞ்சம் எல்லாருக்கும் புரியற மாறி பேசினீங்கன்னா நல்லா இருக்கும் " என பொரிந்தான் ராகவ்.

" ஆங்க்ரி யங்க் மேன் .. அவங்க இப்போ ஒரு வெஜிடபிள் மாறி. ஒரு வெஜிடபில்ல ஒரு எடத்துல வெச்சா அது அங்கயே அப்டியே இருக்கும் இல்லயா. அந்த மாறி..."

" ஓ..."

" பட் ஷீ கேன் ஹியர் வாட் வீ டாக்.. அவங்களால ரெஸ்பாண்ட் பண்ண முடியாது. நீங்க பேசுறது எல்லாமே அவங்களுக்கு கேக்கும் , சில நேரம் கண் சிமிட்டலாம், கண்ணுல தண்ணி வரலாம். பட் நம்மள மாறி ரெஸ்பாண்ட் பண்ண முடியாது."

" எவ்ளோ நாள் இப்படி இருப்பா ??? "

" அது ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். சில பேர் ஒரு வாரம், ஒரு வருஷம் , இல்ல வருஷங்கள் கூட ஆகலாம். ஆனா இவங்களுக்கு யங்க் ஏஜ்ங்குறதால சீக்கிரம் ரிகவர் ஆக வாய்ப்புகள் அதிகம் "

" ம்ம்ம்ம்"

" வசூல் ராஜா படம் பாத்துருக்கீங்களா "

" மம்ம்ம்ம் "

" அதுல அந்த ஆனந்த்னு ஒரு கேரக்டர் வரும் இல்லயா. தட் இஸ் எக்சாக்ட்லி மஹல்சாஸ் ஸ்டேட் நௌ "

" ம்ம்ம்ம்ம்" என சற்று அமைதியாக இருந்தவன்

" எப்போ டிஸ்சார்ஜ் பண்றீங்க "

" என்ன விளையாடறீங்க "

" இல்ல. உண்மையா தான். என் மஹி நிச்சயம் நார்மல் ஆவா.. அதுக்கு தேவையானத நாங்க செஞ்சிக்குறோம் "

" அது அவ்ளோ ஈசி இல்ல மிஸ்டர் "

" நா எதையும் முடியாதுன்னு சொல்ல மாட்டேன். நீங்களே அது ஈசி இல்லன்னு தா சொல்றீங்க. முடியாததுன்னு சொல்லல ..."

டாக்டர் அவனது திடத்தில் சற்று ஆடித்தான் போனார்.

" ஓகே.. ஒரு வாரம் இங்க இருக்கட்டும். அப்றம் நீங்க கூட்டிட்டு போகலாம் "

" ம்ம்ம். தேங்க் யூ " என எழுந்து சென்றுவிட்டான் ராகவ்.

" டேக் கேர் சார். ரஞ்சனி உங்க வீட்ல இருக்குறதால தான் நான் டிஸ்சார்ஜ் பண்ண ஒத்துகிட்டேன் "

" நாங்க பாத்துகுறோம் டாக்டர் "

" ஓகே "

இவ்வாறு ஒரு வாரம் கழிந்ததும் மஹியை வீட்டிற்கு கூட்டி வந்து பார்த்துக்கொள்ள தேவையான அனைத்தையும் செய்ய வீட்டிற்கு விரைந்தான் ராஜனுடன்.

" அப்பா மேஸ்திரிய வர சொல்லுங்க "

" எதுக்கு ராகவ் "

" செவுத்த இடிக்க "

" எந்த செவுத்த "

" எங்க ரூமுக்கு நடுல இருக்குற செவுத்த "

ஒரு வாரத்தில் அங்கிருந்த சுவர் கண்ணாடியாக மாறி இருந்தது , அழகான வண்ணங்களுடன்.
அன்று காலையிலேயே வீடு பரபரப்பாக இருந்தது , மஹி வீட்டிற்கு வரப்போவதால்.
ஜடமாய் இருப்பவளை திரும்பவும் பட்டாம்பூச்சியாய் ஆக்க தன் முயற்சிகளை தொடங்க தயாராய் இருந்தான் மஹியின் ராகவ்....


( வளரும்....)
 
Top