கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அகநக நட்பது நட்பு - 3

மூன்றாவது நாள், காலை எழுந்ததுமே ராகவிற்கு அவள் நினைவு வர,

" இன்னிக்கு அவ வரமாட்டா.. நீ தேவை இல்லாம எதிர்பாக்காத. உங்கெத்த உட்டுடாத. அவலாம் அவ்ளோ வர்த்தே இல்ல. " என பல் தேய்த்துக்கொண்டே கண்ணாடியை பார்த்து கூறிக்கொண்டிருந்தான்.

குளித்து முடித்து கிளம்பியவனின் ரிக்ஷா அன்று என்றும் இல்லாமல் சீக்கிரமாக வர ,

" என்ன அங்கிள் இன்னைக்கு சீக்கிரம் வந்துடீங்க . இவ்ளோ சீக்கிரம் போய் நா செய்ய"

" தம்பி. கொஞ்சம் வெளி வேலை இருக்குப்பா."

" சரி ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க " என காலை உணவை முடித்துக்கொண்டு அனைவருக்கும் டாட்டா காட்டிவிட்டு பள்ளி நோக்கி நகர்ந்தான் ரிக்ஷாவில்.

" எனக்கு போர் அடிக்க போவுது. என் கூட்டாளிக யாரும் வந்துருக்க மாட்டானுங்க " என ரிஷாகாரரிடன் கூறிக்கொண்டே வந்தான்.

" கூட்டாளிகளா... " என்றார் ஆச்சரியமாக அதே நேரம் சிரித்துக்கொண்டே கேட்டார்.

" ஆமா.. என்னய என்ன நினைச்சீங்க.. நா பெரிய தாதா.. தெரியும்ல..." என இல்லாத மீசையை முறுக்கியபடி கூறினான்.

" சரிதான் தம்பி. பொய்ட்டு வாங்க. நல்லா படிங்க " என பள்ளியில் இறக்கிவிட்டு சென்றார்.

கீழே இறங்கியவன் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என வண்டி ஓட்டியபடி சென்றான். நடுவில் ஒரு கல் தெரிய , வண்டியை நிருத்திவிட்டு அந்த கல்லை காலால் தள்ளியவண்ணம் வகுப்பை அடைந்தான். அந்த சிரிய கூர்மையான கண்ணின் கறுவிழிகள் வெளியே வந்து விழுந்துவிடும் அளவிற்கு அவன் கண்கள் விரிந்தன , அவள் அங்கு அவளிடத்தில் அமர்ந்திருந்ததை பார்த்து.

" ஓய்ய்ய்ய்.. வந்துட்டியா. " பதிலில்லை.

" போச்சு டா .." பதில் இல்லை. நடந்து வந்தவன் தன் இருக்கைக்கு வர அப்போது தான் அதை கவனித்தான்.
அதை எடுத்து படித்தவனின் சொப்பு வாய் புன்னகை பூத்தது..

" ஏன். வாயால சாரி சொல்ல மாட்டீங்களோ. எழுதி தான் தருவீங்களோ " என கேட்க பதில் இல்லை. அவன் அருகில் அமர தலையை நிமிர்த்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

" இன்னிக்கு எங்க அம்மா வராங்க மதியம் .இரு உன்ன அப்போ கவனிச்சுக்குறேன் " .அவள் தன் தலையை தாழ்த்திக்கொள்வாள் என நினைத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அசராத அவளின் தீர்கமான பார்வை அவனுக்குள் சற்று கிலியை வரவைத்தது என்னவோ உண்மைதான்.

" என்ன அப்டி பாக்குற " பதில் இல்லை. அதற்குள் மாணவர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். ராகவ் " சாரி " என எழுதியிருந்த அந்த துண்டு காகிதத்தை தன் சட்டைப்பையில் பத்திரப்படுத்தினான். காலை வகுப்புகளுக்கு நடுவில் வரும் சிறிய இடைவேளையின் போது மாணவர்கள் அங்கும் இங்கும் ஓட , அப்போ வெளியே செல்ல எழுந்தாள் அவள். சரியாக ராகவ் தன் நண்பர்களுடன் விளையாடும் ஜோரில் பென்ச்சை தள்ள அது சரியாக அவளின் காலில் இடித்தது.

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....." என்றாள் அவள். அவளின் முதல் சத்தம் கேட்டு அனைவரும் ஒரு நொடி அமைதியாகிட விறுவிறுவென வெளியேறினாள். சற்று நேரம் கழித்து திரும்பி வந்தவள் தன் இருக்கையில் அமர காலை ஆட்டிக்கொண்டிருந்த ராகவ், தவறாக மீண்டும் அவள் காலில் இடிக்க, மீண்டும் "ஸ்ஸ்ஸ்" என்றாள்.

" என்ன நீ சும்மா கால் பட்டதுக்கு ரொம்ப தா பண்ற " என்றான்.
தலையை நிமிர்த்தி அவனை ஒரு லுக்கு விட்டுவிட்டு மீண்டும் திரும்பிக்கொண்டாள். மதிய உணவு இடைவேளையின் மணி அடிக்க, எப்போதும் போல் அனைவரும் வெளியே செல்ல, தன் டப்பாவை திறந்தாள். அதற்குள்

" அவ தா மா " என்ற ராகவின் குரலில் நிமிர்ந்தவள் அங்கு நின்றிருந்த சுமதியையும் , ராகவையும் பார்த்தாள். சுமதி அவளிடம்

" இங்க வா " என கூறிக்கொண்டே கை ஆட்டினார். பதில் பேசாமல் மாட்டேன் என்பது போல தலையட்ட , அவர் லேசாக சிரித்து மீண்டும் அழைக்க , ஏனோ அவளால் இம்முறை மறுக்க முடியவில்லை. தன் டப்பாவை எடுத்துக்கொண்டு அவர்கள் பின்னே அவளும் செல்லலானாள்.ஒரு மர நிழலை தேர்ந்தெடுத்த சுமதி, அவர் அமர்ந்து ராகவையும் அவளையும் அமர்ச்சொல்ல , ராகவ் மட்டும் அமர்ந்தான். அவள் அமராமல் நின்றபடி இருக்க

" உக்காரு தங்கோ " என்றார். சுமதியின் அந்த " தங்கோ " அவளை ஏதோ செய்ய முதல் முறையாக துளிர்த்த கண்ணீர் கரையை கடக்கும் முன் துடைத்துக்கொண்டாள். சுமதி கவனிக்காத அதையும் ராகவ் கவனித்து விட்டான். சுமதி சொல்ல, அவள் மிகவும் சிரமப்பட்டு அமர்ந்தாள்..

" என்ன மா இது " என அவள் காலை காட்டி சுமதி கேட்க, ராகவ் அப்போது தான் அதை பார்த்தான்.

" இதுல தான் என் கால் பட்டுச்சா "
பதில் இல்லை.

" என்ன செஞ்ச ராகவ் "

" நா கால் ஆட்டிட்டு இருந்தேனா, அப்போ இவ "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" அப்டீன்னா, ஆனா என்ன ஆசுன்னு ஒன்னுமே சொல்லல "

" என்ன தங்கோ. கவனமா இருக்குறது இல்லயா " என்றார் தன் மகனிடம்

"ம்ம்ம்ம்"

அவளிடம் திரும்பி " யார் சூடு வெச்சாங்க "

" அவ பாட்டி தா வெச்சிருப்பாங்க. அன்னைக்கு இங்கயே தலையில அடிச்சி தரதரன்னு இழுத்துட்டு போனாங்கம்மா " என்றான் தன் குட்டி கண்களையும் கையையும் விரித்து ஆட்டி ஆட்டி பதில் கூறினான்.

" அவள கொஞ்சம் பேச விடறியா நீ . இந்தா நீ சாப்டு என ராகவிற்கு பிடித்த மீன் வருவலையும் , குழம்பையும் பிசைந்து கொடுத்தார்.

" நீ கொஞ்சம் சாப்பட்ரியா மா "
இல்லை என்பது போல் தலை ஆட்டினாள்.

" பேச மாட்டியா.. உன் பேர் என்ன தங்கோ "

சுமதியை நிமிர்ந்து அவள் பார்க்க, அதுவரை தன் கருமமே கண்ணாக இருந்த ராகவ், வாய் நிறைய சாப்பாட்டுடன் "உப்ப்ப்ப்" என வாயை வைத்துக்கொண்டு, அவளை பார்த்துவிட்டு, எப்படியும் பதில் கூற மாட்டாள் என டப்பாவிற்குள் தலையை விட

" மஹல்சா " என்றாள் அவள்.


வளரும்....
 
Top