கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அகநக நட்பது நட்பு - 4

" மஹல்சா " என அவள் தன் பெயரை உச்சரிக்க, மீன் வருவலை வாயில் வைத்திருந்தவன் அதை சாப்பிடிட்டபடியே

" பரவால்லயே .. உனக்கு பேச கூட வருமா.. "

அதற்குள் சுமதி " ராகவ் ..." என சற்று அதட்ட, தன் வேலையை தொடர்ந்தான், அதான் வருவல பிரிச்சு மேயுறது...

" எங்க இருக்க மா "

" மேட்டுத்தெருவில "

" யாரெல்லாம் இருக்கீங்க "

" நானும் , பாட்டியும் "

" அம்மா , அப்பாலாம் ?"

கேட்ட கேள்விக்கு பதிலாய் கண்ணீர் வர, தான் ஏதொ ஒன்றை தவறாக கேட்டுவிட்டோம் என்பதை புரிந்துகொண்ட சுமதி

" சரி தங்கோ. இந்தா சாப்டு " என அவளுக்கு ஒரு வருவலை டப்பாவின் மூடியில் வைத்து கொடுத்தார். அதையவள் பக்கமாக நகர்த்த, அவளோ கண்ணை மூடிய படி

" அம்மா, அப்பா ரெண்டு பேரும் சாமிகிட்ட போய்ட்டாங்கன்னு பாட்டி சொல்லிச்சு "

சாப்பிடுவதை நிறுத்திய ராகவ்
" அம்மா.. சாமிகிட்ட போறதுன்னா என்ன.. எங்க இருக்கு அந்த எடம் " என கேட்க

" அத அப்றம் சொல்றேன். நீ மொதல்ல சாப்பிடு ", மஹல்சாவிடம் திரும்பியவர், வாஞ்சையுடன் தலையை கோதியவர்
" சாப்டு மா "

" ம்ம்ம்ம்" என துளிர்த்த கண்ணீரை துடைத்துக்கொண்டு சாப்பிட்டாள். தன் அன்னையின் நினைவு வந்தது மீண்டும் நிமிர்ந்து சுமதியை பார்த்தவளுக்கு ஏதொ மனதில் சந்தோஷம் வர

" ஆன்டி "

" என்ன மா "

ஏதோ யோசித்தவள் ,
" ஒன்னும் இல்ல "

" சொல்லு மா "

" இல்ல ஒன்னும் இல்ல ஆன்டி "

" சரி சாப்டு ".. மதிய இடைவேளை முடிந்து சுமதி கிளம்ப , மஹல்சாவுடன் நடந்த ராகவ்

" ஓய்.."

" மஹல்சா.. அதான் என் பேரு .. ஓய் இல்ல "

" நீ இவ்ளோ பேசுவியா "

நின்று ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் நடந்தாள்.

" ஹே.. நில்லு " என ராகவ் கூறக்கூற முன்னேறி நடந்தாள். மதிய வகுப்பு முழுவதும் தன்னை அறியாமல் ஆடும் தன் கால்களை அவ்வப்போது அடக்கினான் ராகவ்.

" இது வேற ஸ்ப்ரிங்கு மாறி ஆடுது அப்பப்போ " என வாய்க்குள் அவன் முணுமுணுத்தது சரியாக விழுந்தது மஹல்சாவின் காதுகளில். லேசாக ஒரு மில்லிமீட்டர் அளவிற்கு வந்த முறுவலை பார்த்துவிட்டான் ராகவ்.
மாலை மணி அடிக்க பையை மாட்டிய ராகவ் விறுவிறுவென சென்றவன், திரும்பி வந்தான் அவளிடம்

"என்ன " என்பது போல் அவள் பார்க்க

" ஃப்ரெண்ட்ஸ் ??" என கை நீட்டினான். இதை எதிர்பார்த்தவள் போல் அவளும் கையை நீட்டி கை குலுக்க அங்கே அழகாய் ஆரம்பமானது ஓர் காவியம் நட்பிற்காக.

" உன்ன எப்டி கூப்பிடறது " ராகவ்

" ம்ம்ம்ம். பேர் வெச்சுதான் "

" ஹா ஹா ஹா.. செம்ம கடி " என்று தன் தாடையில் கை வைத்து யோசித்துவிட்டு

" சரி ஓகே...உன் கூடவே தானே இருப்பேன். அதுனால பேர் தேவை படாது. இதுக்கெல்லாம் என் மூளைய நா வேஸ்ட் பண்ண மாட்டேன் " என கூறிவிட்டு இல்லாத காலரை தூக்கி விட்டு கெத்தாக பார்த்தான்.

" ம்ம்ம்ம்"

" போலாமா " என கேட்டுவிட்டு இருவரும் வெளியேரினர். கற்பகத்தை வெளியே பார்த்தவன்
அவரை ஒரு நிமிடம் குறுகுறுவென பார்த்துவிட்டு " ஹூம்ம்ம்" என திருப்பிக்கொண்டு தன் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டான்.

" ஓய்..." என ரிக்ஷாவில் இருந்து அழைத்தவன் " பாய் " என மஹல்சாவிற்கு கைகாட்டிவிட்டி வீட்டை நோக்கி நகர்ந்தான் ரிக்ஷாவில்.

வீட்டிற்கு வந்தவன் எப்போதும் போல் விளையாட சென்று , ராஜன் வரும் நேரம் தின்பண்டத்திற்காக காத்திருந்தான். ராஜன் வந்ததும் அனைவரும் சேர்ந்து உண்ண அமர்ந்தனர்.

" அப்பா இன்னிக்கு என்ன வாங்கிட்டு வந்த "

" தேங்காய் மிட்டாய் "

" ஹை " என ரஞ்சனியும் ராகவும் பகிர்ந்து உண்டனர். சாப்பிட்டு கொண்டிருந்தவன் ராஜனிடம்
" அப்பா.."

" என்ன ராகவ் "

" சாமி எங்க இருக்கு "

" எல்லா எடத்துலயும்தா இருக்கு . ஏன் "

" மஹல்சா அவங்க அப்பா அம்மா சாமிகிட்ட போயிருக்காங்கன்னு சொன்னா "

" யாரு மஹல்சா "

" என் ஃப்ரெண்டு பா.."

" புது ஃப்ரெண்டா டா "

"ஆமா பா " அவன் முகத்தில் இருந்த சந்தோஷம் அனைவருக்கும் புதிதாக இருந்தது.

" சரி நா கேட்டதுக்கு பதில் சொல்லு பா "

மனைவியை பார்த்தவருக்கு சுமதி பதில் கூறத்தொடங்கினார்.
" அதாங்க , அன்னைக்கு கால்ல பொண்ணு ஒன்னு குத்திடுச்சுன்னு சொன்னானே, அந்த பொண்ணு தா "

" ஓ.."

" மத்த விவரம்லாம் அப்றம் சொல்றேன். இப்போ சாப்டுங்க "
அனைவரும் சாப்பிட்டு முடித்து உறங்க , சுமதிக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.அவள் முழித்திருப்பதை பார்த்த ராஜன்
" என்ன யோசிச்சிட்டி இருக்க. தூங்கலயா "

" இல்ல.கொஞ்சம் தூக்கம் வரல "

" அப்போ நிறைய தூக்கம் வருதா " என கூறி தன் ஜோக்கை நினைத்து தானே சிரித்தார்.

" ஐயே.. ஜோக்கு அடிக்கிறீங்களாக்கும்.. சொல்லிட்டு செய்ங்க. தெரிய மாட்டேங்குது "

" ம்ம்ம். ம்ம்ம். சரி என்ன விஷயம் சொல்லு "

" எப்படி கண்டுபிடிச்சீங்க "

" என் மூஞ்சிய வெச்சு நீ எப்படி கண்டுபிடிப்பியோ அப்படித்தான்."
அதற்கு முறுவலே பதிலாக வந்தது.
சற்று யோசனைக்குப்பின் சுமதி தொடர்ந்தார்

" அந்த பொண்ணு மஹல்சா கண்ணுல அவ்ளோ சோகம். என்னய சின்ன வயசுல பாத்தமாறியே இருந்துச்சுங்க "

" ம்ம்ம்" அந்த ஒரு வரியில் ராஜனுக்கும் புரிந்துபோனது. சுமதியும் ராஜனும் ஒரே ஊர்தான். சுமதியின் தாய் இறந்த பின் அவளின் தந்தை வேறொரு திருமணம் செய்துகொள்ள, தாய்பாசத்திற்காக ஏங்கியது அந்த பிள்ளை மனம். பள்ளிக்கு மேல் படிப்பை தொடர அனுமதி கிடைக்காமல் போனது. அப்போது சுமதியை விட மூன்று வயது மூத்த ராஜன் , சுமதி படித்த அதே பள்ளியில் படித்தபோதே காதல் மலர்ந்து, அதை கூறாமல் இருந்து விட்டார். தனக்கு ஒரு வேலை கிடைத்ததும் சுமதியிடம் தன் காதலை தெரிவிக்க, பாசத்திற்கு ஏங்கிய மனம் அதை ஏற்றுக்கொண்டது. இருபக்க வீட்டிலும் எதிர்க்க, தங்கள் வாழ்வை தாங்களே முடிவு செய்தனர். தங்களது பூர்வீகமான கோயம்பத்தூரில் இருந்து நண்பர் ஒருவர் உதவியுடன் சென்னை வந்தனர். செங்கல்பட்டில் இருந்த அந்த நண்பருடன் சேர்ந்து ஒரு வீடு பார்த்து தங்கள் வாழ்வை துவக்கினர். ராஜனுக்கு பணி இடமோ அம்பத்தூரில். தினமும் செங்கல்பட்டிலிருந்து அம்பத்தூர், அம்பத்தூரிலிருந்து செங்கல்பட்டு பயணம் செய்வார். காலை ஏழு மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பினால் , இரவு வீடு திரும்ப ஏழறை அல்லது எட்டு மணியாகி விடும். அவரது உழைப்பு தான் இன்று இருக்கும் இந்த வீடு. நல்ல திருப்தியான வாழ்க்கை. அன்று முதல் இன்று வரை சுமதியின் மீதிருந்த காதல் கூடியதே தவிர , சற்றும் குறையவில்லை ராஜனுக்கு. சுமதியும் சளைக்காமல் ராஜனை காதலித்தார், காதலிக்கிறார்.

" என்ன அந்த பொண்ணுக்கு " என மீண்டும் கேள்வி எழுப்பினார்.

" அது மட்டும் தா அந்த பொண்ணு சொல்லிச்சு. "

"ம்ம்ம். விடு "

" எனக்கு என்னமோ அந்த பொண்ண நம்ம ரஞ்சனி மாறி ரொம்ப பிடிச்சிருக்கு "

" ஹ ஹ ஹ.. நல்லா இருக்கு.. விட்டா யாரும் இல்லைன்னு நம்மளே வளக்கலாம்ன்னு சொல்லுவ போல இருக்கே "

" ம்ம்ம்ம் ?? அவங்க பாட்டி இருக்காங்க.. அப்டியே பாத்துகிட்டாலும் ஒன்னும் தப்பில்ல "

" அமைச்சர் சொன்னா சரியா தா இருக்கும் " என அந்த நாளை நிறைவு செய்தனர். அடுத்த நாள் வாரக்கடைசியாய் இருக்க தாமதமாக எழுந்தான் ராகவ். அம்மாவிடம் பல முறை திட்டு வாங்கிக்கொண்டு குளித்து முடித்து கடைதெருவிற்கு கிளம்பினர் சுமதி , ராகவ் மற்றும் ரஞ்சனி.

" ஓய் ..." என்ற சத்தத்தில் தன் பாட்டியின் கையை விட்டுவிட்டு உதட்டில் முறுவலுடன் திரும்பினாள் மஹல்சா. தான் நின்றிருந்த இடத்திலிருந்து வேகமாக வந்தவள் தாங்கள் நிற்கும் இடம் நோக்கி வருவதை பார்த்து , தன்னிடம் பேச வருபவளை பார்த்தவன் சுமதியை சுரண்ட ,

" என்ன டா "

" அங்க பாரு " என்பது போல் அவன் கண்காட்ட , அதற்குள் அருகே வந்த மஹல்சா ராகவை பார்த்தவண்ணம் சுமதியை இடுப்போடு கட்டிக்கொண்டாள்...

" மொக்க வாங்கினியா ராகவ் , உனக்கு இது தேவையா " என தன் ஆட்காட்டி விரலை தன்முகத்தை நோக்கி காண்பித்து பேசிக்கொண்டான் தாதா ராகவ் க்ருஷ்ணா...

( வளரும்...)
 
Top