கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அத்தியாயம்-15

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம் -15

காலையில் இருந்தே தன்யா முகம் கொஞ்சம் சோர்ந்தே காணப்பட்டது. எப்பவும் கிளம்புவதை விட இன்று கொஞ்சம் தாமதமானது.

அங்கு ராமோ என்றுமில்லாத வழக்கத்தில் துள்ளி குதித்தான். வீட்டு பெல் அடிக்க கதவை திறந்தவன் அந்த பேக் ஒன்றை வாங்கி நன்றி சொன்னான்.

ஜீன் டீஷிர்ட் என்று கிளம்பினான். தன்யா எப்பொழுதும் செல்லும் வழியில் தவம் கிடந்தான். அஸ்வின் அந்த நேரம் பார்த்து கால் செய்தான்.

''எங்க டா இருக்க?'' என்றான்.

''ராஜாஜி ஸ்ட்ரீட்ல''

''அங்கயே இரு வர்றேன்'' என்று துண்டித்து பத்து நிமிடத்தில் அவனின் இடத்தில் வந்து பைக் நிறுத்தினான்.

பார்த்த அடுத்த நொடி "டேய் ஆபிஸ் போகலையா? போர்மல் டிரஸ் இல்லாம ஜீன் டீஷிர்ட்ல இருக்க?'' என்று காரினை கவனிக்க காரின் பின் இருக்கையில் பூங்கொத்து ஒன்று ஒரு பேப்பர் பேக்கில் இருந்ததை கண்டான்.

''சிவ பூஜையில் கரடியா வந்துட்டேனோ?'' என்றான் அஸ்வின் தலை கோதினாள்.

''என்னனு சொல்லு டா?'' என்று சிரித்தான்.

''நிஷா ஜாப் கேட்கலை இருந்தும் அதே ஹாஸ்பிடலில் ஒர்க் இல்லை. இது வேற ஹாஸ்பிடல் அங்க போய் பார்க்க சொன்னாங்க. ஆன் தி வேல உங்கிட்ட கேட்க வந்தேன்''

''எனக்கு தெரிஞ்சு நிஷா வீட்ல இருக்கறது பெட்டர் அஸ்வின்'' என்றான்.

''ஹ்ம்ம்'' என்று தாடையில் கை வைத்து யோசித்தவன். ''சரி இது அவளுக்கு வேண்டுமா வேண்டாமா என்று அவளே டிசைட் பண்ணட்டும்'' என்று கொடுக்க வாங்கி கொண்டான் ராம்.

''பூ பார்க்க நம்ம ஏரியா மாதிரி இல்லையே'' என்று அஸ்வின் கேட்க,

''ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்து வாங்கி இருக்கேன் அவளுக்காக'' என்றவன் முகம் வெட்கத்தை பூசியது.

''சரி நீ நடத்து. நான் கரடியா இருக்க மாட்டேன்'' என கிளம்பினான் அஸ்வின்.

ராமிற்கு தனு வருவாளா இல்லையா என்ற குழம்பம். எப்பொழுது வரும் நேரம் ஓடிக் கொண்டிருந்தன.

ஒரு வேளை இன்னிக்கு லீவ் போட்டு இருப்பாளோ? என தவிப்போடு நிற்க தனு நடந்து வருவதை கண்டான். மெயின் ரோட்டுக்கு செல்ல மூன்று தெரு நடப்பது இன்று அவளுக்கு பேரும் அசதியாக போனது.

ராமின் காரினை கண்டதும் மேலும் சோர்ந்தாள். போச்சு நேற்று நான் அளவுக்கு மீறி திட்டிட்டேன் அங்க திட்ட முடியாது என்று இப்படி சந்து பொந்து தெருவா பார்த்து வந்து திட்டுவார். பேசாம காரினை கவனிக்காம போயிட வேண்டியது தான் என தன்யா நடையை தூரிதப்படுத்தினாள்.

காரின் அருகே வந்ததும் நடையை வேகமாக்க, ராமோ கதவை திறந்து ''ஏறு'' என்றான்.

''ப்ளீஸ் நானே ரொம்ப சோர்ந்து இருக்கேன். நீங்க வேற திட்டாதீங்க'' என்றாள்.

''கார்ல ஏறுனு சொன்னேன்'' என்றதும் 'போச்சு இவர் விட மாட்டார். என்னை திட்டினா தான் இவருக்கு ஹாப்பி' என ஏறி அமர்ந்தாள்.

வண்டியை கிளப்பி கொண்டு ரோட்டினை பார்த்து அவளையும் பார்க்க,

''அவளோ ப்ளீஸ் நானே இன்னிக்கு லேட்டா கிளம்பி இருக்கேன் நீங்க திட்டி, அதுக்கு பிறகு போறதுக்குள்ள பஸ்ட் ஹவர் போயிடும். நான் நேற்று நடந்துக்கிட்டது தப்பு தான். ஐ ரியலி சாரி'' என்று அழுதிட, ராம் அவளின் அழுகையை அப்படியே பார்த்திருந்தான்.

அவளின் அழுகை நிறுத்துவதாக இல்லை என்றதும் அவனே பேசினான்.

''கொஞ்சம் அழுவறதை நிறுத்தறியா தன்யா. நான் திட்ட உன்னை கூப்பிட்டு வரலை. பேச வந்திருக்கேன்''

''ப்ளீஸ் நீங்க என்ன பேசினாலும் நான் உங்களை விரும்புவேன். நீங்க தேவையில்லாம பிரைன் வாஷ் பண்ண வேண்டாம். இனி நிஷா அண்ணி வீட்டுக்கு கூட வரலை போதுமா'' என்று அழுதபடி பேசி முடிக்க,

''என்ன பேச விடறியா?'' என்றான்.

தன்யா அவனின் இந்த முறைப்பு இல்லாமல் பேசுவதை கண்டு அழுகை குறைத்து அமைதியானாள்.

எப்படி இவளிடம் பேச என்று யோசித்தவன் ஒன்றும் நினைவு வராமல் போக, பூங்கொத்து மட்டும் நினைவு வந்து.

ஆயிரம் பேசி புரிய வைப்பதை விட ஒரு பூ சொல்லி விடும் காதலை என்பதை அறிந்து அதனை எடுக்க நினைத்தான்.

தனுவின் புறம் திரும்பி பின் இருக்கையில் கையை நீட்டி பூங்கொத்து எடுத்தான். அவன் மீது வீசும் வாசனையில் அவனின் அருகாமையில் மெல்ல அவளாகவே பின் நகர்ந்தாள்.

தன்யா எதையும் கவனிக்காமல் விழித்து நிற்க, ''நான் டோட்டலா விழுந்துட்டேன். ஐ லவ் யூ டூ தன்யா'' என்றான்.

தனது காதினை நம்பாமல் விழிகளை விரித்து, ஆச்சரியம் காட்டியவளை கண்டு சிரித்து,

''உன்னோட தன்யாஸ்ரீராம் தான் உன்னை விரும்பறேன் போதுமா'' என்றான்.

குரலே வராமல் ''பொய் சொல்லாதீங்க'' என்று விசும்பினாள்.

''ஏய் என் கண்ணும், இந்த பூவும் உனக்கு பொய் சொல்ற மாதிரியா இருக்கு'' என்றான்.

''இ... இல்லை.. பட் ஒன் இயர்ரா வராத லவ் நேற்று நான் உங்களை திட்டுட்டு வந்ததும் வந்துடுச்சா?'' என்றாள்.

''ஹ்ம்'' என சிரித்து ராம் நிற்க, அதற்கு எதிர் மறையாக தனு அழுது கொண்டேயிருந்தாள்.

''ஏய் லவ் சொல்லியும் ஏன் அழுவுற?'' என்றான் ராம்.

''என் லவ் ட்ரு என்று இப்போ ஒப்புக்கோங்க? இது ஒன்னும் ஜஸ்ட் அபெக்ஷன் இல்லை என்று.'' என்றதும்

''கூல் அது எனக்கு முன்னவே தெரியும்மா. பட் அப்போ என் நிலைமை அப்படி. ரியலி சாரிம்மா'' என்றான்.

''நிஜமாவே என்னை விரும்பறீங்களா?'' என விசும்பல் குறைந்து கேட்டாள்.

''நிஜமா டா'' என்றான்.

''நேற்றே சொல்லி இருக்கலாம் இல்லை. நான் எப்படி அழுதேன் தெரியுமா?'' என்று அழுதாள்‌

''ஹ்ம் தெரியுது. அழுதழுது உன் கண்கள் சிவந்திருக்கு'' என்றான். தனுவிற்கு வேறு என்ன பேச வேண்டும் என அறியாது அமைதியாக இருந்தாள்.

''உனக்கு என்ன தைரியம் எனக்கு கீழே எத்தனை பேர் வேலை செய்யறாங்க ஆனா நீ என்னையே சட்டை பிடிச்சு கேள்வி கேட்கற?''‌‌ என்று சரளமாக பேசினான்.

''நீங்க தானே என்னை கழுதைனு பேசினிங்க. அப்டி பேசினா.'' என‌ மூக்குறிந்தாள்.

''நான் நடைமுறையை சொன்னேன் உன்னையில்லை... சரி அதை விடு'' என பூங்கொத்தினை வாங்க சொன்னான்.

''ரொம்ப அழகாயிருக்கு எங்க வாங்கினிங்க?''‌என்றாள்.

''ஆர்டர் கொடுத்தா தான் ரெடி பண்ணி தருவாங்க சம்திங் ஸ்பெஷல்'' என்றான்.

''ஹ்ம்ம் புரியலை ''

''இது ரொம்ப சீக்கிரத்துல வாடாது'' என்றான்.

''அப்படினா..?''

''ஹ்ம் இந்த தன்யாவுக்காக ஸ்பெஷல்லா வாங்கியது. இந்த பூ வாடறதுக்கு வருஷங்கள் ஆகும்" என்றான்.

''நம்பவே முடியலை எனக்கு கனவு மாதிரி இருக்கு. யாராவது வந்து எழுப்பிட கூட வேண்டாம் இப்படியே கனவுலயே இருந்துடறேன். ஆனா இது கனவா? நிஜமா? நேற்று திட்டி அனுப்பிச்சுட்டு இப்போ பூங்கொத்து எடுத்து நீட்டினா? நிஜமா அப்போ இது கனவு தான்''

''ஏய் வாலு இது கனவு இல்லை. உன் மேல எனக்கு எப்பயோ லவ் வந்துடுச்சு. பட் வெளிப்படுத்தலை. நீ சின்ன பொண்ணு..'' என்றான்.

''ஹலோ நான் பஸ்ட் இயர் கம்ப்ளீட் பண்ணிட்டேன். நொவ் ஐ அம் செகண்ட் இயர். நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்லை." என்றாள் வீம்பாக.

''ஒன் இயர்ல பெரிய பொண்ணு ஆகிட்டியா? உனக்கும் எனக்கும் என்ன ஏஜ் வித்தியாசம் தெரியுமா?'' என்றான் இடையில் கை வைத்தபடி.

''ஹ்ம் தெரியும் அண்ணாவுக்கும் எனக்கும் அஞ்சு வருஷம் வித்தியாசம் அப்போ உங்களுக்கும் எனக்கும் அதே அஞ்சு வருஷம் தானே.'' என்று இயல்பாய் பேசினாள்.

''ஐந்து வருஷம் தானே இல்லை. ஐந்து வருஷம்.'' என்று இழுத்தான்.
அதனை தொடர்ந்து ''ஆகாஷ்-சுவாதிக்கு மூணு வயசு வித்தியாசமும். அஸ்வின்-பவித்ராவுக்கு இரண்டரை வயசு வித்தியாசம். ஆனா நமக்கு ஐந்து இல்லை ஐந்தரை '' என நிறுத்தினான்.

''எங்க அப்பா அம்மாவுக்கு எட்டு வயசு வித்தியாசம்... இதெல்லாம் சொல்லி தப்பிக்காதீங்க'' என்றாள் வாயாடி.

''ஓகே ஓகே இப்ப அதை எல்லாம் சொல்லலை போதுமா'' என்று சொன்னதும் அதன் பின் என்ன பேச என்று தன்யா தடுமாறினாள்.

''எனக்கு காலேஜ் லேட்டா ஆகிடுச்சு. நான் கிளம்பறேன்'' என்றாள்.

''நோ-வே தன்யா இன்னிக்கு நீ காலேஜ் போக வேண்டாம். நான் உங்கிட்ட நிறைய பேசணும்'' என்றான்.

''ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு. நான் கிளம்பறேன்'' என்று மீண்டும் ஆரம்பித்தாள்

''வெயிட்'' என்று ஒரு கிப்ட் பாக்ஸ் எடுத்து நீட்டி ''பிரி இது நமக்கு வந்த கிப்ட் சேர்ந்து பிரிக்கணும் என்றதால பிரிக்கலை'' என்றதும் புரியாமல் ''நமக்கு வந்ததா? என்றாள்.

நமக்கு எப்படி சேர்ந்து ஒரு கிப்ட் யாரு அனுப்பி இருப்பாங்க என்று தனு ராமை பார்த்தாள்.

''ஹ்ம் நீ ஸ்வீட் கடையில் நம்ம பேரை சேர்த்து என் வீட்டு அட்ரஸ் எழுதினியே அது'' என்றான்.

''அச்சச்சோ ஸ்வீட் கெட்டு போய் இருக்கும்'' என்று முகம் சுழித்தாள்‌

''ஸ்வீட் இல்லை வாட்ச். என்ன பரிசுனு கேட்டு தெரிஞ்சுகிட்டேன். பிரிக்கலை நாம சேர்ந்து பிரிச்சா மட்டும் ஓபன் பண்ணனும் என்று இருந்தேன்''

இவ்வளவு காதலித்தவன் ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்றே முழித்து நிற்க ''ஓபன் பண்ணு'' என்றான்.

பிரித்து பார்க்க அதில் ஜோடியாக இரண்டு வாட்ச் இருந்தன.

''வாவ் நல்லா தான் இருக்கு. நான் நம்ம பேரை சேர்ந்து எழுத கிடைச்ச வாய்ப்பா மட்டும் தான் அன்னிக்கு எழுதினேன். பட் நம்ம லக்'' என்றாள் குதுகலமாக.

''உங்களுக்கு வாட்ச் பிடிச்சிருக்கா?'' என்றாள். அவனின் கையை பார்த்துக்கொண்டே, அப்பொழுது தான் அவனின் கையில் மிடுக்காக மின்னியது அவனின் கைக்கடிகாரம். ராமிற்கு பரிசாக கிடைத்த கடிகாரம், சாதாரண கடிகாரம் என்று அவளுக்கு தோன்றியது. அவனின் சந்தோஷம் அவளின் சிரிப்பில் மட்டுமே என்பதையும் உணர்ந்தாள்.

விழிகள் இரண்டும் விருந்து படைக்கும் விதமாக காதலை பரிமாறியது.

''தன்யா உன் மடியில் படுத்துக்கவா?'' என்றான். தன்யா திணறிய பதில் சொல்வதற்குள் அவளின் மடியில் தலையை சாய்த்து இமையை மெல்ல மூடினான்.

சற்று நேரம் திருதிருவென விழித்து அக்கம் பக்கம் பார்த்தாள்.

காரின் கண்ணாடி வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பவர்களை காட்டாது என்ற நொடி அமைதியானாள். இருந்தும் அவனை எழுந்து கொள்ள சொல்லலாம் என்று அவனை கூப்பிட அவனோ உறக்கத்தின் பிடியில் இருந்தான்.

'என்ன இது அதுக்குள்ள தூங்கிட்டார்' என்று தனு என்ன செய்வது என்று புரியாமல் காரின் கண்ணாடி கதவில் சாய அவளை அறியாமல் அவளும் உறங்கிவிட்டாள்.

நேற்றைய அழுகையில் தனு உறங்காததும். ராமிற்கு சந்தோஷத்தால் உறங்காததும் சேர்த்து அப்பொழுது இருவருமே உறக்கத்தின் பிடியில் இருந்தார்கள்.

அஸ்வின் ராமின் வாட்சில் செட் செய்த லன்ச் நேரத்தின் போன் ஒலிக்கும் ரீமைண்டர் சத்தத்தில் தன்யா ராம் இருவருமே விழித்தார்கள்.

''சாரி தன்யா ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல, கால் வலிக்குதா?'' என்றான்.

அவனின் கரிசனையை கண்டு ''இல்லை'' என பொய் சொன்னாள்.

''இது என்ன சவுண்ட் யாரோ போன் செய்திருக்காங்க" என்றாள்.‌

''இல்லை நான் டைமுக்கு சாப்பிட மாட்டேன் என்று அஸ்வின் எனக்கு செட் செய்த ஒலி தன்யா பசிக்குது''

''இருங்க என்று லன்ச் பாக்ஸ் எடுத்து கொடுத்தாள். அதனை வாங்கி ஸ்பூனில் உண்டவன் அடுத்த உணவு கவளத்தை தனுவிற்கு ஊட்டி விட்டான். தனுவிற்கு மறுக்க தோன்றாமல் அவளும் வாங்கினாள்.

''சரி நான் கிளம்பறேன்'' என்று சொல்லிட,

''எப்பவும் எந்த டைம் போவியா அப்போ போ''

''அப்போ இன்னும் டூ ஹவர் என்ன செய்ய?''

''ஹ்ம் வாக் போகலாம்''

''வேண்டாம் யாராவது பார்ப்பாங்க. வீட்டுக்கே போறேனே'' என்று பயந்தாள்.

''இது பீச் ரோடு யாரும் வர மாட்டாங்க'' என்றே நடக்க அவனோடு சேர்ந்து நடந்தாள்.

ஒருவருடத்திற்கு மேலாக அழுத நாட்களை சேர்த்து இன்று அவளுக்கு ராமின் அருகாமை மொத்த சந்தோஷத்தை கொடுக்க நடந்தாள்.

''வாவ் கடல்ல நான் விளையாடவா?'' என்றதும் தலையை ஆட்டினான்.

''நீங்க?''

''நான் வரலை. நீ போ'' என்று மணலில் அமர்ந்தான். கொஞ்ச நேரம் பார்த்தான் பின்னர் மணி இருபது நிமிடம் கடக்க தன்யா போதும் வா'' என்றான்.

''இன்னும் நேரமிருகே விளையாடறேனே. நீங்களும் அஸ்வின் அண்ணா மாதிரியே நல்லா விளையாடும் பொழுது கூப்பிடறீங்க'' என்று அலுத்துக் கொண்டாள்.

''உனக்கு வீஸிங் இருக்கு தண்ணீரில் ரொம்ப நேரம் இருக்க வேண்டாம்'' என்றான்.

''உங்களுக்கு எப்படி தெரியும்'' என்றாள்.

''பிடிச்சவங்களை பற்றி தெரிஞ்சுக்கறது ரொம்ப சுலபம் தன்யா'' என்றதும் ஆச்சரியப்பட்டாள்.

வழியில் பேல் பூரி வாங்கி இருவரும் சுவைத்தார்கள்.

அதன் பிறகு வீட்டுக்கு சென்றார்கள். ராம் தனுவிட்டிற்கு முன்னதாகவே இருக்கு தெருவில் இறக்கி விட்டான்.

''பை'' என்று அவள் செல்ல,

''தன்யா இத மறந்துட்ட...'' என்று பூங்கொத்தினை கொடுத்தான்

''வீட்ல கேட்டா என்ன சொல்ல நீங்களே வச்சிக்கோங்க'' என்றாள்.

''ஒய் உனக்கு கொடுத்தது நீ தான் எடுத்துக் கொண்டு போகணும் வீட்ல கேட்டா நீயே சமாளி'' என்று பேப்பர் பையை நீட்ட, கொஞ்சம் கலக்கத்துடன் தான் வாங்கினாள்.

ஒரு தெரு நடந்து செல்லும் தூரமாக இருந்தாலும் அவளின் இன்றைய நாளின் துவக்கம் முதல் முடிவு வரை எண்ணாமல் இருக்க முடியவில்லை. அவளுக்கு இன்று நடந்த எல்லா நிகழ்வு அப்படியே மனதில் பதிவானது. ராமின் கண்ணியம் கூட அவளுக்கு பிடித்திருந்தது. எவ்வளவு பொறுமை, எவ்வளவு கனிவு, இவன் என் மனதில் எப்படி வந்தான் என்று அவளுக்கு இந்த நொடி வரை அவளே அறியவில்லை.

ஆனால் தன்யா எப்படி அவனின் மீது இந்தளவு காதலில் மூழ்கினாள் என்றும் அவளுக்கே புரியவில்லை. காதல் எந்த நொடி என்னிடம் வந்து ஒட்டி கொண்டது.

ராமின் ஒவ்வொரு செய்கை எண்ணி எண்ணி வர வீட்டில் நின்றாள்.

அந்த வாட்ச் பையில் எடுத்து கொண்டாள். அது சிறு உருவம் மறைக்க முடியும். ஆனால் இந்த பூங்கொத்து எப்படி என்றே வீட்டினை அடைந்தாள்.

வீட்டுனுள் வந்த அடுத்த நொடி அறைக்குள் புகுந்தவளை கண்டு ராதை ''அது என்ன பை தனு''

''அது பூ...பூங்கொத்து மா''

''ஏது?''

''அது என்... என் பிரெண்ட் ஒருத்திக்கு மேரேஜ்.''

''உன் பிரெண்ட்க்கா?''

''சே.. இல்லைம்மா அவங்க அக்காவுக்கு மேரேஜ். ப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து பூங்கொத்து வாங்கினோம் ஆனா அவங்க அக்காவுக்கு பூ அலர்ஜியாம் அதனால என்ன பண்றது என்று யோசிச்சாங்க. எனக்கு பிடிச்சது அதனால நான் வாங்கிட்டேன்'' என்றாள்.

''பூ அழகா இருக்கு. சரி போய் டிரஸ் மாற்றிட்டு வா பூஸ்ட் போட்டு வைக்கிறேன்'' என்றதும் அப்பாடி என்ற தனு மூச்சு விடுத்தாள்.

மாலை அஸ்வின் வந்து தனு அறையில் அந்த பூங்கொத்தினை கண்டு அது வந்த விதத்தினை ராதை சுவாதியிடம் சொல்லிய விளக்கமும் கண்டு சிரிப்பு வந்தது.

முதலில் தனு பொய் பேசுவதை கண்டு அதிசயித்தான். அவனுக்கு தன் குட்டி தங்கை நடவடிக்கை இன்னமும் நம்ப முடியவில்லை.

அதன் பின் கொஞ்சம் சக மனமாக யோசித்தபொழுது தான் பவித்ராவிடம் பழகிய பொழுது அவளை என்னவெல்லம் செய்தாலும் பவித்ரா யாரிடமும் இதே போல தானே அமைதியாக இருந்தாள். யாருக்கும் தெரியாமல் அவளை கவனித்து மறைமுகமாக காதலை சொல்லியதையும், ஏன் ஒரு முறை முத்தமிட்ட பொழுதும் பவித்ரா யாரிடமும் சொல்லவில்லையே?! ஆக காதலில் பொய் திருட்டுத்தனம் இரண்டும் இல்லாமல் இல்லை என்று அவனே அவனுக்கு ஆறுதல் சொல்லி கொண்டான்.

நாளை பவித்ரா வந்திடுவாள் என்ற ஒன்று அவனை உறக்கத்திற்கு செல்ல விடவில்லை.

-praveena thangaraj
 
Top