கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அத்தியாயம் 2

அர்பிதா

Moderator
Staff member
கனவு 2


இரு புறமும் தேயிலை தோட்டம் இருக்க... அதில் பெண்கள் பலர் தங்கள் வேளையில் மும்முரமாய் ஈடு பட்டு இருக்க...

தோட்டத்தை தாண்டிய பின் ஒரு நீண்ட குடி இருப்பு..... வாசல்களில் குழந்தைகள் பலர் விளையாடி கொண்டு இருக்க....

அந்த குடி இருப்பின் இறுதியில்.... இந்த வீடுகளை விட்டு கொஞ்சம் தொலைவில் ஒரு வீடு மட்டும் தனியாக இருப்பதை கண்டவன் கண்ணின் முன் எதோ ஒரு காட்சிகள் போல் வந்து செல்ல ... பல காட்சிகள் அவ்வாறு தோன்றி மறைய.... அவற்றை புதிதாக உணர்ந்தவன்.... விக்ரமை வண்டியை நிறுத்த சொல்லி...

அந்த வீட்டையே பார்த்து கொண்டு இருக்க...

"என்னடா..... கனவுல அந்த வீட்டை பார்த்தேன்னு சொல்லாத... இப்போ தான் இங்க வேலைக்கு வந்து இருக்க... வந்ததும் உன் கனவு புராணத்தை ஆரம்பிக்காத"

விக்ரமின் முதுகில் மெல்ல தட்டியவன்... "அந்த வீட்டோட அமைப்பு அழகா இருக்குடா... அதை தான் பார்த்தேன்", எதையோ மறைக்க எதையோ கூறிவிட்டு விக்ரமுடன் புறப்பட்டான் அருள்...

அடுத்த இரண்டு தினங்களும் வேளையில் சேருவது... மேல் அதிகாரிகளை சந்திப்பது என அருளுக்கு பரபரப்புடனே சென்றது....

அன்று வேலைகளை முடுத்தவன்... வீட்டிற்கு வந்து சீக்கிரமே உறங்கியும் போனான்....


இமை திறவா விழியில் பார்த்தவன்... எதோ ஒரு அடர்ந்த காட்டின் நடுவில் எதிலோ மாட்டி கொண்டு எழவும் தெம்பு இல்லாமல் தரையில் கிடந்தான் அருள்... தன் பார்வையை சுழற்றி பார்க்க... அடர்ந்த பொர்ணமி இரவும்... தூரத்தில் ஓநாயும் நாய்களின் ஓலமும் ஒளிக்க....

அங்கு இருந்து ஓட முயற்சித்த போது தான் கண்டான்... அவனின் கால்கள் எதாலேயோ எதிலோ கட்ட பட்டு இருக்க... என்ன என பார்த்தவனுக்கு....

தன் கால்கள் இரண்டும் அங்கு இருந்த ஆலமரத்தின் விழுதுகளால் அம்மரத்தில் கட்ட பட்டு இருக்க.... மரமோ "முடிந்தால் தப்பித்து பார்", என்று கண்களை உருட்டி ஏளன சிரிப்புடன் அவன் முன் நின்றது....

'எங்கோ மாட்டிக்கொண்டு ஆபத்தில் இருக்கிறோம்'என்பதை உணரும் முன்னே இலையின் சருகுகளின் சத்தம் எழ... சிறிது நேரத்தில் அந்த சத்தம் அதிகமாகவும்... அவனுக்கு மிக அருகிலும் கேட்க....

அவ்வழி திரும்பி பார்த்தவன்..... சருகுகள் அனைத்தும் அவன் முன் எழ... சிறுது நேரத்தில் அவற்றிற்கு முகம் தோன்ற... அது ஒரு பெண்ணின் முகம்....

அவளை உற்று பார்த்தவனுக்கு... அழகிய மை தீட்டிய கண்கள்... நல்ல கூர்மையான மூக்கு... வடிவான முகம்... சிகப்பு நிறம் பூசிய உதடுகள்.... உடல் எங்கும் வெள்ளை உடுப்பில் தேவதை போல் இருந்தவள்... அவனை நெருங்குயவள்...


அவன் இமைக்கும் நொடிகளில் அவனை நெருங்குயவள்... அவனை இழுத்து கொண்டு காற்றில் மாயமாய் மறைந்து விட்டாள்....

அவளையே ஆராய்ந்த படி... பார்வையை வேறு எங்கும் திருப்பாமல் அவளுடன் சென்றவன்... எதோ ஒரு இடத்தில் போய் நிற்க....

அவன் பார்வையை அகற்றி சுற்றி பார்க்க... அது ஒரு அருவி... இல்லை குளம்... இல்லை இல்லை ஏரி... இது எதோ அவனுக்கு பரிட்சயம் ஆன இடம் போல் தோன்ற... பார்த்து கொண்டு இருந்தவனுக்கு....

திடீரென இவன் கையை விட்டு.... அந்த ஏரிக்கு பறந்து சென்றவள்... அந்த ஏரியை இரண்டு முறை வட்டம் இட்டவள்... அவனை நோக்கி பறந்து வர...

கண்ணை சுற்றி கருவளையமாய் மாற... அதன் கீழ் மூக்கோ உடைந்ததை போய் பாதி தொங்கி கொண்டு இருக்க.... இதழ் முழுதும் கீறல்கள் இருந்து ரத்தம் வடிந்து கொண்டு இருக்க....உடலில் இருக்கும் வெள்ளை உடை மறைந்து ரத்த காயங்கள் அதிகமாய் இருக்க....

அதை பார்த்து அதிர்த்தவன் திகைத்து போய் நிற்க... அவன் அருகில் அருகில் வந்தவள்..... அவன் காது செவிடாகும் படி கத்தினாள்...

திடீரென அவ்விடம் கருத்து... ஒளி அற்று போக... பயந்து திகைப்புடன்... அவன் விழுந்தான்.......


தொடரும்...

-அர்பிதா💖

கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள் மக்களே
 
Top