Yasmin Shabira Sukarno
New member
கத்திய குக்கரின் தலையை கரண்டியால் தட்டியபடி "செல்லமா ஏழரை மணியாச்சு எந்திரிக்க போறியா இல்லையா? முதல் நாளே லேட் பண்ணாத எந்திரிமா"
கண்களை சுருக்கியபடி புரண்டு படுத்தாள் ரதீமா
வகீதாவுக்குத் தெரியும் அவர் பெற்ற செல்வம் இதற்கெல்லாம் அசைபவளல்ல என்று. மகளின் அறைக்கு சென்றார். ஏசியை மிதமாய் இருபத்தைந்தில் வைத்து இழுத்துப் போர்த்திக்கொண்டு சுகமாய் தூங்கிக் கொண்டிருந்தாள் அவரது கார்பன் காப்பி.
ஏசியை நிறுத்தி ரிமோட்டை ஒளித்து விட்டு அவர் வேலையை பார்க்கச் சென்றார். இது வகீதாவின் வழக்கமான டெக்னிக். அடுத்த ஐந்தாம் நிமிடத்தில் கொட்டாவி விட்டவாறு பரட்டைத் தலையுடன் எழுந்து வந்தாள் நம் ஹீரோயின்.
"ம்மா ஆரம்பிச்சுட்டியா ஸ்கூல் போற வரை தான் இம்ச பண்ண காலேஜ்லயுமா நானே காலைல தொழுதுட்டு லேட்டா தான் தூங்குனேன் தெரியுமா"
"ஏண்டி பேசமாட்ட. கொஞ்ச நாளா தினம் காலைல உன்ன எழுப்பர வேலை இல்லாம
இருந்துச்சு. இனி தினமும் ஒன்னோட எனக்கு போராட்டந்தான். பெரும்பேச்சு பேசிட்டு நிக்காம சீக்கிரம் குளிச்சிட்டு வா. உன்ன காலேஜ்ல விட்டுட்டு நான் கல்யாணத்துக்கு போகணும். போ சீக்கிரம் ரெடியாகு" மகளை விரட்டினார்
நாற்பது நிமிடத்தில் ரெடியாகி தேவதையாய் வந்தாள் நம் நாயகி.
ரதீமா... வகீதாவுக்கு அவள் செல்லமா. வட்ட முகம். கோதுமை நிறம். படபடக்கும் பட்டாம்பூச்சி கண்கள். செய்து வைத்தது போன்ற மூக்கு. கச்சிதமான இதழ்கள். உயரம் சற்று குறைவுதான் ஐந்தடி இரண்டு அங்குலம். சாக்லேட்களின் தயவால் கொஞ்சம் பூசிய உடல்வாகு. இடுப்பு வரை நீண்டு அடர்ந்த சுருட்டை முடி. முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகையும் குழந்தைத்தனமும். அவளைப் பார்த்ததும் பிடித்துவிடும்.
பிறந்ததிலிருந்து கஷ்டம் என்ன என்பதையே அறியாதவள். தந்தை அப்துர்ரஹ்மான் சட்டம் படித்தவர். ஆனால் வியாபாரத்தில் கொண்ட ஆர்வத்தால் சூப்பர் மார்க்கெட் தொடங்கியவர். இறைவன் அருளால் அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். தாய் வகீதா இல்லத்தரசி. இரண்டு அண்ணன்கள். இருவரும் பள்ளிப்படிப்பு முடிந்ததும் மேற்படிப்பிற்காக ஜெர்மனி சென்றவர்கள் அங்கேயே வேலைப் பார்த்துக்கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டனர். வயதானாலும் ஸ்டைலும் அழகும் குறையாத அத்தம்மா. தந்தையின் தாய். அந்தக்காலத்திலேயே தனியொரு பெண்ணாக இரண்டு பிள்ளைகளை வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கிக் காட்டிய இரும்புமனுஷி.
இரண்டு ஆண்குழந்தைகளுக்குப் பின் பதினாறு வருடங்கள் கழித்துப் பிறந்த ஒரே செல்ல மகள் ரதீமா. தாய், தந்தை, தந்தையின் தாய், தமையன்கள் என அனைவரும் அவளை இறைவன் தந்த அருட்கொடையாய் கருதி கண்இமைப் போல பாதுகாத்தனர்.
இன்று தான் ரதீமாவிற்கு முதல் நாள் கல்லூரி. முதல் நாள் என்பதால் பேரண்ட்ஸ் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தனர். அது அந்த நகரத்தில் இருக்கும் ஓரளவு வசதி படைத்தவர்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கும் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
காரில் ஏறிய சிறிது நேரத்தில் வகீதாவின் செல்போன் அடித்தது. வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருக்கு ரதீமாவின் தந்தைதான்.
"ஹலோ அஸ்ஸலாமு அலைக்கும். நல்லாருக்கிங்களா"
"வலைக்கும்ஸலாம். நல்லாருக்கேமா. நீங்க எல்லாரும் நல்லா இருக்கிங்களா. புள்ள என்ன பண்றா. காலேஜுக்கு கிளம்பியாச்சா"
"எல்லாரும் நல்லாருக்கோம். கிளம்பி போய்ட்டுருக்கோம் இந்தாங்க உங்க மககிட்ட பேசுங்க"
"ஹலோ அத்தா! எப்ப வருவீங்க. நீங்க இல்லாம எனக்கு ரொம்ப போர் அடிக்குது. இன்னக்கி ஃபர்ஸ்ட் டே காலேஜ் நீங்களும் இருந்துருந்தா நல்லாருந்திருக்கும். ஐ மிஸ் யூ ஸோ மச். சீக்கிரம் வாங்கத்தா"
படபடவென கொட்டிய மகளின் மேல் பாசம் பொத்துக்கொண்டு வந்தது.
" இன்ஷாஅல்லாஹ் ரெண்டு நாள்ள வந்துர்ரேன்டா செல்லம். நீ சாப்டியா. இன்னைக்கு முதல் நாள் காலேஜ் நெர்வஸா இருக்கா. பயப்டாம தைரியமா இருக்கனும் சரியா?"
" எனக்கு என்ன பயம். என்னப்பாத்து தான் காலேஜே பயப்பட போகுது." (உள்ளுக்குள் லேசாக உதறத்தான் செய்தது)
" ஹாஹாஹா தட்ஸ் மை ப்ரின்ஸஸ். சரி அம்மாட்ட போன குடுங்க"
"ஹலோ சொல்லுங்க"
" நான் முக்கியமான வேலையா சிலபேரை பாக்கப்போறேன் சாயங்காலம் வர எனக்கு போன் பண்ணாத."
"ம் சரி"
''ஷாகுல் வீட்டு கல்யாணத்துக்கு போறல்ல"
"ஆங் செல்லமா காலேஜ்ல விட்டுட்டு போறேன்"
"சரிமா அப்ப நான் வெக்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்"
"வலைக்கும்ஸலாம்"
போனை வைத்த சில நிமிடங்களில் கார் கல்லூரியின் வாயிலில் வந்து நின்றது.
உள்ளிருந்து இறங்கியவளின் கண்கள் சந்தித்தன மற்றொரு ஜோடிக் கண்களை.
ஒரு நொடி அனைத்தும் மறந்தது அவளுக்கு
தாயின் குரல் கேட்டுத் திரும்பியவள் தன்னிலை மறந்த பதுமையாய் நடந்து சென்றாள்.
.
.
.
.
அவன் கைகளில் சிக்கி படாதபாடு பட்டுக்கொண்டிருந்தது அந்த பாஸ்கட் பால். அவன் அதை கூடையில் போடுவதாகவும் இல்லை கீழே விடுவதாகவும் இல்லை. எத்தனை நேரம் இப்படியே அதை துவைத்து எடுத்தானோ தெரியாது...
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இம்ரான் அதற்கு மேல் தாங்க முடியாமல் "டேய் மச்சான்! போதுன்டா வா". பதிலில்லை.
"டேய் வாடா. சொன்னா கேழு வா வீட்டுக்கு போகலாம்".
ம்ஹூம்...
'தொண்ட தண்ணி வத்த இந்த கத்து கத்துரேன். அசையிரானா பாரு. கல்லுளி மங்கன்' என்று நினைத்து கொண்டான். பின்னே வாய்விட்டு சொல்லி பந்துக்கு பதில் அவன் வாங்கிக்கட்டி கொள்ளவா...
"டேய் ப்ளீஸ்டா சொல்றத கேழுடா. வாடா மச்சான் பதினொரு மணியாச்சுடா மாமி மூணு தடவை போன் பண்ணிட்டாங்க. டேய் நீ இப்போ வரியா இல்ல நான் வீட்டுக்கு போன் பண்ணி சொல்லவா" என்றதும் இவனின் தொணதொணப்பில் எரிச்சலுற்றவன் பந்தை பலம் கொண்ட மட்டும் ஓங்கி தரையில் எறிந்து விட்டு வேகமாய் கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்று ட்ரைவர் சீட்டில் அமர்ந்தான். அவன் பின்னால் அவசர அவசரமாக ஓடிச்சென்று அவனருகில் அமர்ந்தான் இம்ரான். மறுநொடி சீறிப்பாய்ந்தது கார்.
.
.
.
.
தன் காதலியின் மேல் மற்ற ஆடவரின் கண் பட்டதால் கோபம் கொண்டு வரும் காதலனைப் போல் தன் மலர் காதலிகளின் மேல் படர்ந்திருக்கும் பனித்துளிகளை விரட்டி அடிக்க கர்வம் கொண்டு உதித்தான் ஆதவன்.
நவம்பர் மாதத்தின் அதிகாலையில் இதமான தென்றல் மேனியைத் தழுவ அதை ரசித்து அனுபவித்த படி கூவியது ஒரு பெண் குயில்.
"மேனிக்குள் காற்று வந்து மெல்ல தான்
ஆட கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை
போல் ஓட கண்டேன்
இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே
அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே...
காலம் தோறும் கேட்க வேண்டும்
காலம் தோறும் கேட்க வேண்டும்
பருவம் என்னும் கீர்த்தனம்
பாட.. பாட பாட.. பாட..."
தனக்கு மட்டும் கேட்கும் குரலில் பாடியபடி தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தாள் ரதீமா... அவள் கல்லூரியில் செமஸ்டர் எக்ஸாமிற்காக பத்து நாட்கள் ஸ்டடி லீவ் விட்டிருந்தார்கள். இன்றுதான் மூன்றாவது நாள். அவளுக்கென்னவோ மூன்று வருடம் போலிருந்தது.
கல்லூரியில் அவளுக்கென தனி பட்டாளமே சேர்ந்திருந்தது. தோழிகளுடனான அரட்டை கச்சேரி, வகுப்பில் நடக்கும் கலாட்டா என கல்லூரியை மிகவும் நேசித்தாள். அத்துடன் எப்பொழுதாவது கல்லூரிக்கு தரிசனம் தரும் அந்தக் கண்களையும் தான். தன் மனதுடன் எவ்வளவோ போராடிப் பார்த்தும் தோல்வி தான் மிச்சம். அவன் நினைவுகளை ஒரு நொடியேனும் துரத்த முடியவில்லை அவளால். இரவின் கனவுகளில் அவனுடன் செல்லச் சண்டை போட்டாள். கோபித்து கொண்டவனை கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்தாள். மடியில் படுத்துக்கொண்டு எழ மறுப்பவனை தலைகோதி தூங்க வைத்தாள். பின்னிருந்து அவன் தன் இடை வளைப்பதாய் எண்ணி முகம் சிவந்தாள்.
அவள் கனவிலும் நினைவிலும் நிறைந்திருக்கும் அவனை காலம் அவளோடு சேர்க்குமா? வெறும் கானல் நீர் ஆக்குமா?....
பார்க்கலாம்...