கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புள்ள அன்பே!!! அத்தியாயம் - 3

அஸருக்கு பாங்கு சொல்லும் சத்தம் கேட்டு அரக்க பறக்க எழுந்து உட்கார்ந்தாள் ரதீமா. அருகில் அமர்ந்து லேப்டாப் பார்த்து கொண்டிருந்த சமீரா “என்ன மேடம் செம்ம தூக்கமா” என்க
‛சே நான் என்ன இவ்ளோ நேரம் தூங்கிட்டேன். சீக்கிரம் தொழுதுட்டு ட்ரஸ் சேஞ்ச் பண்ணணும். சமீ அண்ணன் வந்துருவாங்க. சலீம் வரும்போது இப்புடி அழுக்கு நைட்டியோடயா இருக்குறது. பேசாம நம்மளே இன்னிக்கு சமைக்கலாமா. க்கும் நம்ம சமைக்கிறத நம்மளாளயே சாப்ட முடியாது அப்பறம் சலீம்க்கு நம்மல பிடிக்காம போய்டும்.’ என்றெல்லாம் பலவாறு யோசித்து கொண்டிருந்தவளை தலையில் விழுந்த கொட்டு சுயநினைவிற்கு கொண்டு வந்தது.

“ ஸ்ஸ்ஆஆஆ ஏன்டி கொட்டுன”

“ம் பின்ன கொட்டாம கொஞ்சுவாங்களா எந்திரிச்சு ஒது செஞ்சுட்டு தொழுவ வா.. எப்ப பாரு கனவு கண்டுட்டு” என்றவளை பார்த்து ‛க்கும்’ என்று வக்கனைத்துவிட்டுச் சென்றாள் ரதீமா... இருவரும் ஒன்றாக சேர்ந்து தொழுதனர்.

“சமீரா, ரதீமா டீ குடிக்க வாங்க” என்ற வகீதாவின் குரல் கேட்டு இதற்காகவே காத்துக்கொண்டிருந்தவள் போல வேகமாய் எழுந்தாள் ரதீமா. இருவரும் வந்து அமர்ந்ததும் ஆளுக்கொரு டீ கப்பை கொடுத்துவிட்டு வகீதா கிட்சனுக்குள் நுழையவும் ரதீமா ‛கைத்தவறி’ டீயை ட்ரஸில் ஊற்றிக்கொள்ளவும் சரியாக இருந்தது. “ஸ் ஆ” என்ற சத்தத்தில் திரும்பி பார்த்த வகீதா “ஏய் என்னாச்சு பார்த்து குடிக்க மாட்டியா” என்றபடி மகளின் அருகில் வந்தார்.

“ரதீமா என்னாச்சு சுட்டுருச்சா?" என்றாள் சமீரா.

“இல்ல சமீ... ஒன்னு இல்லம்மா கைத்தவறி ஊத்திருச்சு.”

“சரி போ போய் வாஷ் பண்ணிட்டு ட்ரஸ்ஸ மாத்திட்டு வா” என்றார் வகீதா.

“ம்” என்றபடி எழுந்து சென்றாள் நம் கள்ளகத்தரிக்கா... சாரி குள்ளகத்தரிக்கா ...

ரூமுக்குள் வந்து கதவை தாழிட்டு கொண்டவள் “அப்பாடா வேற ட்ரஸ் மாத்திட்டு இந்த மம்மிகிட்ட என்ன காரணம் சொல்லி சமாளிக்கிறதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். நல்ல வேல திட்டு வாங்காம எஸ்ஸாயிட்டோம்.” என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக்கொண்டவளை

“ ஏன்டி ரதீமா உன் சொந்த வீட்ல உன் இஷ்டத்துக்கு ஒரு ட்ரஸ் மாத்த கூட தைரியமில்லாம இப்டி திருட்டுதனம் பண்றியே, நீ எப்டி சலீம்கிட்ட உன் காதல சொல்லுவ” என்று அவள் மூளை கேட்டது. அவ்வளவு தான் அத்தனை நேரம் மலர்ந்திருந்த முகம் ஒரு நொடியில் வாடிவிட்டது.

“ஆமா சரிதான் என்னால முடியாது. அவன் முகத்த பாத்தா எனக்கு பேச்சே வராது நான் எப்டி அவன்கிட்ட என் காதல சொல்லுவேன்." என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் தன் ஆருயிர் காதலனின் புகைப்படத்துடன் படுக்கையில் சாய்ந்தாள்.

“சலீம்... நான் உன்ன நேசிக்கிறேன். உயிருக்குயிரா நேசிக்கிறேன். ஏன்னுலாம் எனக்கு தெரியல. ஆனா நீ தான் என் சந்தோஷம். நீ தான் என் உலகம். இதையெல்லாம் உன்ன பாத்து சொல்றதுக்கு எனக்கு தைரியம் இல்லடா. உன் முகத்த பாத்தா எனக்கு பேசே வரமாட்டேங்குதுடா. மூச்சு திணற்ற மாதிரி இருக்கு. என்னால முடிலடா. உன்கிட்ட வந்து உன் கண்ண பாத்து நான் உன்ன விரும்புறேன்னு சொல்ற தைரியம் எனக்கு வரவே வராது. ஆனா நான் சொல்லலன்னாலும் உனக்கு தெரியும்ல சலீம். உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும். என்னவிட்டு போய்டாதடா... ப்ளீஸ்”....


தூங்காத காற்றே துணை தேடி ஓடி
என் சார்பில் எந்தன் காதல்
சொல்வாயா....!!
நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல்
சொல்வாயா....
 
Top