கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி-----+ அது- அத்தியாயம் 10

sanchumahen

New member
அன்று

முற்றத்தில் ஒரு பாயை விரித்து செம்பருத்திப் பூக்களை ஒருபுறமாகவும் கறிவேப்பிலை மற்றும் மருதாணி இலைகளை இன்னொரு புறமாகவும் காயவைத்துக் கொண்டிருந்தாள் காத்தாயி.

எதுக்குக்கா இதையெல்லாம் காய வைக்கிறீங்க? என்று கேள்விக்கணைகளைத் தொடக்கி வைத்த பூரணியை இப்போ தெரிஞ்சு என்ன செய்யப்போறாய் ராசாத்தி? என்றவள் அவளுக்கான பதிலையும் தர மறுக்கவில்லை.

தலைக்கு வைக்கிற எண்ணெய் காய்ச்ச வேணும். வள்ளி அம்மா சித்திரா பௌர்ணமிக்கு வாறாங்களாம். எண்ணெய் காய்ச்ச சொன்னாங்க என்றவளிடம் இந்த எண்ணெய்யை வைச்சா முடி வளருமா அக்கா? என்றவள் தொடர்ந்து அதுதான் வள்ளி அம்மாவுக்கு அவ்ளோ நீட்டு முடியா? நானும் இந்த எண்ணெய்யை வைச்சா முடிவளருமா? என்று சந்தேகம் கேட்க

அடிபோடி இவளே! வண்டி(வயிறு) கூழுக்கு அழுகுதாம்! கொண்டை பூவுக்கு அழுகுதோ!! என்று நொடிந்து கொண்டவளுக்கு அந்த அப்பாவி முகத்தைப் பார்க்க பாசம் அவளை அறியாமலே பெருக ---

முதல்ல நல்ல சாப்பாடு வேணும்டி என்றவள் ஓடிப்போய் ஐயாவின்ரை தென்னந் தோட்டத்திலை பொன்னாங்காணிக் கீரை பறிச்சு வா எனச் சொல்ல அந்த மதிய வெய்யிலையும் பொருட்படுத்தாது அது அவளின் வள்ளியம்மாவிற்கு தேவையான பொருள் என்றது மட்டும் புத்தியில் உறைக்க தென்னந்தோட்டத்தை நோக்கிப் போனாள் பூரணி. அவளுக்கான கஸ்டகாலமும் அவளுடன் சேர்ந்தே புறப்பட்டுப் போனது.

சித்திரை வெய்யில் கொழுத்திப் போட்டுக் கொண்ருக்க செருப்புக்கூட அணியாத கால்கள் வெய்யில் சூட்டில் தகித்துக் கொண்டிருக்க அந்த ஒரு கிலோ மீற்றர் தூரத்தையும் ஓட்டமும் நடையுமாக கடந்து வந்தவள் தென்னந்தோட்டத்தில் போடப்பட்டிருந்த மண்குடிசையில் இளைப்பாறவென ஒதுங்க ஆணும் பெண்ணுமாகப் பேசும் குரல் கேட்க முதலில் பயந்தாலும் மெல்ல அந்த மண்குடிசையின் உள்ளே எட்டிப் பார்த்தவள் அப்படியே உறைந்து போனாள்.

அது யார் சின்னவரைக் கட்டிக்கொண்டு அவரது மடியில் படுத்திருப்பது?

கடவுளே! இதை நான் பார்த்தேன் என்றது மட்டும் யாருக்காவது தெரிந்தால் எனக்குத்தான் ஆபத்து வந்து சேரும் என்று நினைத்தவள் பயப்பீதியில் அந்த இடத்தைவிட்டு ஓட----

அங்கிருந்த தேங்காய் குவியலில் இவளின் கால் பட்டு தேங்காய்கள் சர சர வென சரியத் தொடங்கின.

அந்த சத்தத்தில் சுதாகரித்துக் கொண்ட அழகன் யாரோ நம்மை பாத்திட்டாங்க செல்லம் என்றபடி பவதியை மடியிலிருந்து நகர்த்தியவன் அவனைச் சுற்றி வளைத்திருந்து சொல்ல முடியாத அவஸ்த்தைகளைத் தந்து கொண்டிருந்த அவளது கரங்களை தன் மேனியிலிருந்து அகற்றியதுடன் விரைவாக எழுந்து வெளியில் வந்து பார்க்க அவன் கண்களில் ஓடிக்கொண்டிருக்கும் பூரணிபட அவனும் தனக்குக் காத்திருக்கும் சிக்கலை உணர்ந்து பூர்வா-----ஏய் நில்லு என்றபடி அவளைத் தொடர்ந்து ஓட---

எப்படியாகிலும் இன்று தன்னைப் பிரியும் எண்ணம் வராதபடி அழகனை மடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மண் விழுந்ததால் ஆத்திரம் அடைந்த அழகனின் பவதியும் அவனைத் தொடர்ந்து ஓடினாள்.

நிச்சயமாக இது வெளியாட்கள் யாரும் வரக்கூடிய இடம் அல்ல. அவளே மிகச் சாதுர்யமாகத்தான் வந்திருந்தாள். யாரோ வேலையாள் தான் என்று எண்ணியபடி வந்தவள் பார்வையில் அழகனிடம் பிடிபட்டு அழுது கொண்டிருக்கும் பூரணி தெரிந்தாள்.

இவளா??? பவதி அதிர்ந்து போனாள். இவளால் இந்த பூரானால்-----மாமன் சொல்லும் இந்த விசப்பூச்சியால்----எல்லாம் தலைகுப்புற கவிழ்ந்து தொலைந்து விடுமோ என்ற பதட்டம் ஏற்பட்டு அதுவே சற்று நேரத்தில் ஆங்காரமாக மாற இவள் எனக்கு ஆப்பு வைச்சிடுவாளா? கழுதையை விட்டிடுவேனா நான்? இவளை கொன்றுபோட்டால் என்ன?

ஆத்திரத்தில் மனம் உலைக்களமாகக் கொதித்தாலும் புத்தி விழித்துக் கொண்டு அடுத்த கட்ட நகர்வைப்பற்றிச் சிந்திக்க சொல்ல-----

இவள் தனது வீட்டில் போய் சொன்னாலும் பிரச்சினை அதைப்போல் இவள் அழகன் வீட்டில் சொன்னால் அத்தனையும் கேடாகப் போய்விடும்.

ம்க்கும் ----இவளை பேசவிடாது தடுத்தே ஆக வேண்டும்.

இவளை வாய் திறக்க விட்டுவிடுவாளா இந்த பெரியவீட்டின் எதிர்கால எஜமானி?

இங்கே பார் பூர்வா---எதுக்கு இங்கே வந்தாய்? என்று கேட்டவனுக்கு அது------- அது----- வந்து சின்னவரே ---என்று பயத்துடன் இழுத்தவளுக்கு நாக்கும் குரலும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால் பேச்சே எழவில்லை.

சும்மாவே பயந்த சுபாவம் கொண்டவள். இன்று இவனிடம் மாட்டுப்பட்டதனால் பீதியடைந்து எதற்கு தான் தென்னந் தோப்புப் பக்கம் வந்தாள் என்பதையே மறந்து போய் நின்றதுடன் அழுகையை அடக்கியதில் கேவலும் விக்கலுமாக பேசமுடியாது தவித்தவளிடம் தன்னைத் தென்னம் தோட்டத்தில் பார்த்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டலாக மொழிந்தவனுக்கு பதில் பேசாது தலையை எல்லாப்பக்கமும் ஆட்டியபடி நின்றவளைப் பார்க்க எரிச்சல் எரிச்சலாக வந்தது ஒரு புறம் என்றால் இவள் எப்போது வந்தாள் எதையெல்லாம் பார்த்தாள் என்பது புரியாததால் வந்த குழப்பம் அவனுக்கு இருந்த எரிச்சலை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.

தான் சொல்லும் சமாதானங்களை இவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ----எப்படி இவளுக்குப் புரிவது போல சொல்லுவது என்பதெல்லாம் குழப்பமாக இருக்க எதுவும் பேசாது அழுது கொண்டு நின்று கொண்டிருந்த பூரணியின் தலையில் ணங் என்ற ஒலியுடன் விழுந்த கொட்டு உச்சந்தலையில் இருக்கும் சாம்பல் நிற பொருளைக் கலக்கிவிட பதறித் திரும்பிய அழகனுக்கு ஐயோ இவள் இருப்பதையும் கெடுத்துவிடுவாள் போல இருக்கே என்று தோன்றினாலும் அவள் கொடுத்த கொட்டின் வீரியம் கலங்கடிக்க ---

பவதி என்னம்மா இப்டி பண்ணிட்டாய்? என்று பதறியவனுக்கு பவதி பூரணிக்குத் தந்த நியாயமற்ற தண்டனை பொறுக்காமல் போயிருந்தது.


தன் உறவினளே என்றபோதும் ஒரு வேலைக்காரியின் முன் தன்னவன் அதட்டியது பொறுக்கமாட்டாதவள் தனது சாகசங்கள் எல்லாவற்றையும் இன்றே கட்டவிழ்த்துவிட கங்கணம் கட்டிக் கொண்டவள் போல வலிந்து வருவித்த கண்ணீர் கண்களில் குளம்கட்ட அவனது முகத்தைப் பார்க்காது தன்முகத்தை திருப்பிக்கொள்ள அந்த முகம் திருப்பலில் காதல் கொண்டமனம் கலங்கிப்போக பூரணியை மறந்தவன் தன்னவளைச் சாமாதானப்படுத்துவதில் தனது கவனத்தை திருப்ப இப்போ அழுகையைத் தொடர்வதா??? இல்லை இந்த நாடகத்தை ரசிப்பதா??? என்று அழுகையில் சுழித்திருந்த வாய் அப்படியே சுழித்திருக்க இருக்க நடப்பதைப் பார்த்திருந்தாள் பூரணி.

இந்த அக்காவிற்கு பவதியா பெயர்-----இல்லை---- இல்லை--இது அவங்களின்ரை பெயரைச் சுருக்கி சின்னவர் வைச்சிருக்கின்ற செல்லப் பெயர் என்று புரிந்து கொண்டவள் பவதியின் தாக்குதல்கள் தொடரலாம் என்ற அபாயமணிக்குச் செவிசாய்த்து தன்னைப் பாதுகாக்கும் எண்ணம் தோன்ற அவர்கள் இருவரையும் தனிமையில் விட்டு விட்டுப் பாய்ந்து ஓடினாள்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதை பலதடவைகளில் அனுபவத்தில் அறிந்திருந்தவள் தான் கண்ட காட்சிகளை யாரிடமும் பகிர்ந்து கொண்டாளில்லை.

ஆனாலும் அவளுக்குத் தெரியும் சித்தப்பன் மட்டுமல்ல அவனது உறவினர்களும் கொடுமைக்கு அஞ்சாதவர்கள். எந்தவகையிலும் தன்னால் இவை எவையும் வெளிவரக்கூடாது என்பதில் தெளிவாயிருந்தவளுக்கு தெரியவில்லை தான் மறைக்கும் காரியம் தனது சின்னவரின் வாழ்க்கையைச் சின்னாபின்னப் படுத்தப்போகின்றது என்பது மட்டுமல்ல பிற்காலத்தில் அதன் தொடர்ச்சியாக தனது கணவனுக்கு தான் பிடித்தமானவாளாக இருந்தபோதிலும் அதை உணராது அவனுக்குப் பிடித்தவைகளைச் செய்கின்றேன் பேர்வழி என்று அனைத்து விசயங்களையும் சிக்கலாக்கப் போகிறாள் என்பதையும் அவள் அறிந்திருக்கவில்லை.

இன்று

அவளை குலதெய்வம் கோயிலுக்கு அழைத்துச் செல்ல சம்மதித்தவன் அந்த வார கடைசிநாள் தான் அது சாத்தியப்படும் என்று சொன்னதுடன் கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அவளைக்கூட்டிச் செல்லலாம் என்று முடிவிற்கு வந்திருந்தான்.

ஆனால் அவன் நினைத்ததுபோன்று பேராறு என்று அழைக்கப்படும் அந்த புண்ணியநதி நினைத்திருக்கவில்லை. பலகாலமாகச் செப்பனிடப்படாத பேராற்றுப்பாலம் அண்மையில் சீற்றம் கொண்ட பேராற்றின் ஆக்கிரோஷமான பாய்சலில் சிதைவடைந்து போயிருந்தது.

தொடங்கப்பட்ட திருத்த வேலைகள் அரசியல் தலையீடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன என்பதை பலரிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டவனுக்கு காரில் செல்ல முடியாது பைக்கில்தான் சுலபமாகச் செல்ல முடியும் என்பதை அவன் கேட்ட அனைவருமே விம் போட்டு விளக்கிச் சொல்ல அவளை எப்படித் தனது பைக்கில் அழைத்துச் செல்வது என்ற தயக்கம் அவனை வந்து சூழ்ந்து கொண்டது.

அவளுக்குத் தன்னைத் திருமணம் செய்வதில் விருப்பம் இல்லாதிருக்க வேறு ஒருவனை மணம் முடிக்கக் காத்திருந்தவளை தனக்கு அவள்மேலிருந்த கிரஷ்சை புரிந்து கொண்ட மாமா தனது கடைசி ஆசை என்று அவளிடம் சொல்லியே இந்த திருமணத்தை முடித்து வைத்திருப்பதை ஊகித்து அறிந்து கொண்டநாள் முதல் அவளிடமிருந்து முடிந்தவரைக்கும் விலகியிருக்கவும் தன்னை விட்டு விலகிச் செல்ல அவள் முடிவெடுத்தாளானால் அதற்கு எந்த வித எதிர்ப்பையும் காட்டுவதில்லை என்பதிலும் மிகத் தெளிவாக இருப்பவனுக்கு நூற்றில் ஒரு வாய்ப்பாக அவனுடன் இதே வீட்டில் வாழ அவள் விரும்பினால்கூட அவள் தெளிவுபடுத்த வேண்டிய பல விசயங்களிருக்கும் போது இந்த பைக் பயணம் அவனுக்குச் சங்கடத்தைக் கொடுத்ததுடன் அவனுக்கு அது உவப்பானதாக இருக்கவில்லை.

ஹாட்வெயர் ஸ்ரோஸிற்கு வந்தவன் நேராக போய் நின்றது கணக்கர் சோமு இருக்கும் அறைக்குள் தான். அண்ணா அழகர்புரம் போவதற்கு ஆற்றைக்கடக்காமல் போக முடியாதா என்று கேட்டவனை அர்த்தம் நிறைந்த புன்சிரிப்புடன் பார்த்தவர் என்ன திடீரென்று அழகர்புரம் போவதைப்பற்றிக் கேட்கிறீங்கள்? என்று கேள்வியாய் பார்த்து வைக்க இல்ல லயாதான் தேர்விற்கு முதல் அங்கேயிருக்கிற வரமுத்துமாரி அம்மன் கோயிலுக்குக் கூட்டிப்போகச் சொல்லிக் கேட்டாள் அது அவங்களோடை குலதெய்வமாமே என்றவனுக்கு -----

இங்கிருந்து போகும்போது எந்தப் பாதையால் போவதென்றாலும் ஆற்றைக் கடந்துதான் போக வேணும் என்றவர்

மேலிடத்து உத்தரவு என்றால் அப்பீல் ஏது போகத்தான் வேணும் என்று சொல்லி சிரித்தவரின் முகம் மட்டுமல்ல அகமும் மலர்ந்துதான் போயிருந்தது.

இவன் சொன்ன பாதைதான் குறைந்த தூரம் என்றதுடன் குரு அண்ணாவிடமும் ஒரு வார்த்தை சொல்லுங்கோ தம்பி என்றார் இவன் நிச்சயமாக அவரிடம் சொல்லமாட்டான் என்பதை அறிந்ததால்-----

அந்த இம்சைக்கு எதற்குச் சொல்ல வேணும் என்று நினைத்தவன் அவரைத் தவிர்க்க, தகவல் கணக்கர் சோமுவினூடாகச் சென்றிருந்த போதும் இவனிடம் தனக்கு அந்த விசயம் தெரியும் என்பது போல அவர் காட்டிக் கொள்ளவில்லை என்பதுடன் அவளுடன் ஊர் போகும் இவனது திட்டத்தை மறுத்துக்கூடப் பேசவில்லை.

அவருக்கு நிச்சயம் கணக்கர் சோமு மூலம் தகவல் போகும் என்பது தெரிந்திருந்தாலும் அவருக்கு எதிராக நடந்து காட்ட விருப்பம் இருந்தாலும் வயதிற்கு மதிப்புக் கொடுத்து இவன் அவரை விலத்தித்தான் போவான்.

அதுவும் மாமாவினது நண்பர். எப்படி தவிர்த்து நடப்பது என்ற தயக்கம் இன்னும் மனதுள் ஒட்டியிருந்தது.

இம்சையின்ரை குடும்பம் கனடாவில்தானே இருக்குது எதற்கு வந்து ஒருவருஷத்திற்கு மேல் ஆகப்போகுது இங்கேயே டேரா போட்டிருக்குது?

என்னை வதைக்கிறதற்காகவே இந்த ஊரிலை நிற்குது போல இதுதான் அவரைப் பற்றிய இவனது லேட்டஸ்ட் சிந்தனை.

அன்று இவன் தனது வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வர அன்பான மனைவி போல லயா இவனுக்காகக் காத்திருக்க காரியம் ஆக வேண்டும் என்றால் காலையும் பிடிப்பாள் இந்த காளி என்று நக்கலாக நினைத்தவன் வழமைபோல அவளைக் கண்டு கொள்ளாமல் தன் வேலைகளில் கவனமாக நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும்? என்று கேட்டவள் ஆட்டோவில் போக வேண்டாம், நாளை மறுநாள் என்ரை எக்ஸாம் தொடங்குது.

அந்த றோட்டே சரியில்லை. ஆட்டோவில் போகமுடியாது. ஆட்டோ குலுக்கும். உள்ளே இருக்க தலைசுற்றுவது போல இருக்கும். போய்வந்தால் எக்ஸாமிற்கு படிக்க முடியாது என்றவளிடம் காரிலும் போக முடியாது பேராற்று பாலம் உடைந்து திருத்த வேலை நடக்குது. பைக்கிலைதான் போக வேணும் என்றவனது பேச்சு அப்பாடா என்று அவளை எண்ண வைத்திருந்தது.

இவ்வளவு நாளும் காரில் கெத்தாக போய் இறங்கி பெரியவீட்டு எசமானின் மகளாக வலம் வந்தவள் வாடகைக் காரிலோ அன்றி ஆட்டோவிலோ போக விரும்பவில்லை.

அப்பாவுடன் செல்லும் போதெல்லாம் அவரே காரை ஓட்டிச் செல்வதால் ரொம்பவே மிதப்பாக முன் சீட்டில் அமர்ந்து கொண்டு அம்மாவை பின்னுக்கு இருக்க விட்டுவிடுவாள்.

இவளது சின்னச் சின்ன ஆசைகளைப் புரிந்து கொண்டு பாமதியும் மகளுக்காக எதையும் செய்பவராக இருந்தார் ஆனால் ஆனால் எல்லாமே அவளது திருமணம் என்பதில் மட்டும் விதிவிலக்காகிப் போயிருந்தது.

விஷ்ணுவிற்கோ நூறு கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கும் அழகர்புரம் புதிய ஊர். அவனுக்கு எதையும் திட்டமிட்டு நேர்த்தியாகச் செய்வதுதான் பிடிக்கும் என்பதால் சோமு தந்த தகவல்களுடன் திருப்திப்படாதவன் கூகுள் மைப்பை வைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் செல்லும் வழிகளை ஆராயந்;து கொண்டிருந்தான்.

அறிவியல் நகரிலிருந்து அந்த ஊருக்குள் செல்ல இருக்கும் ஒரே ஒரு பிரதான பாதையும் பேராறு எனப்படும் ஆறும் கடந்து தான் அங்கே செல்லவேண்டும் என்பதை இப்போது சந்தேகத்திற்கு இடமின்றிப் புரிந்து கொண்டவனுக்கு இவள் சொன்ன வரமுத்துமாரி அம்மன் ஆலயம் இந்த பேராற்றின் கிளை நதியான பொட்டாற்றங்கரையில் அமைந்திருப்பது தெரியவர அவ்வூரை மிக நுணுக்கமாக பார்க்க மேலும் சில கோயில்களும் குறிப்பாக ஒரு கந்தசுவாமி கோயிலும் இருப்பது தெரியவந்திருந்தது.

அந்த கோயிலை வரைபடத்தில் பார்த்தவன் கண்கள் ஏனோ தெரியவில்லை அவனையறியாமலே கலங்கின. தன்னையறியாத புளகாங்கிதம் ஏற்பட மீண்டும் மீண்டும் அக்கோயிலையே பார்த்திருந்தான்.

அது தவிரவும் அவ்வூரில் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒரு பள்ளி அழகர் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் இருக்க அதன் பெயரில் ஏற்பட்ட ஈர்ப்பினால் அதன் பக்கம் மைப்பின் புள்ளியை பெரிதாக்கியவன் கண்களுக்கு அப்பள்ளியின் பிரதான அலுவலகத்தின் முன்பு நிறுவப்பட்டிருந்த சிலை கண்களில்பட அதன் நிறுவுநர் பரிமேல்அழகரது சிலைதான் அது என்பது புரிந்துபோது அவனையறியாது மெய்சிலிர்க்க அமர்ந்திருந்தான்.

மொபைலை அணைத்து தூங்க முயன்றவனுக்கு ஏற்பட்ட இனம்புரியாத பரபரப்பு உறங்கவிடாது தடுக்க நானே அறிந்திராத ஊர் எதற்கு எனக்கு இவ்வளவு கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றது என்பது புரியாத புதிராக இருக்க இந்த ஊர்பற்றியோ அந்த ஊரிலிருக்கும் எதனையும் பற்றியோ அம்மா ஏதாவது சொன்னார்களா என்று சிந்தித்தவனது ஞாபக அடுக்குகளில் எவையும் சேமிப்பில் இருக்காததால் மீண்டும் மூளையைக் கசக்கி யோசிப்பதில் அர்த்தம் இல்லை என்பதைப் புரிந்தவன் உறக்கத்தை தழுவ முயற்சித்து வெற்றியும் கண்டான்.

வழமைபோல அதிகாலையில் எழுந்து தனது உடற்பயிற்சிகளுடன் வாசல் பெருக்கி பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சி சரியாக 5மணி 45 நிமிடத்திற்கு மெஸ்க்கு டீ குடிக்க வந்தவனது கண்களில் சுடச்சுட வந்திருந்த அன்றைய தினசரியும் அதனுடன் இணைப்பாக வெளியீடு செய்யப்பட்டிருந்த பக்திமலரும் கண்ணில்பட்டு கருத்தைக் கவந்திருக்க அதனைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினான்.

பக்தி மலரில் ஒரு விசேட கட்டுரை அழகர்புரம் கந்தசுவாமி கோயிலின் இன்றைய நிலையினை விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தது.

இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் கும்பாபிஷேகம் செய்யப்படாதிருந்த புகழ்பூத்த அக்கோயிலின் வரலாற்றினை அன்பர் ஒருவர் ஆதங்கத்துடன் எழுதியிருக்க அதைப்படித்தவனோ ஏதோ தப்பை செய்துவிட்டது போல் அவனையறியாது சங்கடப் பட்டு அந்த தினசரியை காசுகொடுத்து வாங்கிக் கொண்டான். அந்த கட்டுரையை வாசித்த நொடியிலிருந்து மனம் இனம் புரியாத கலக்கத்தில் தவிக்க ஆரம்பித்திருந்தது.

பொதுவாகவே அவனுக்கு இந்த சாமி பூதம் எதிலும் நம்பிக்கை இல்லை அதுவும் சின்னவயதில் கோயில் திருவிழாவிற்குச் சென்று அழுது கொண்டு நின்றது போல ஒரு நிழல் படம் தோன்றி மறைந்தாலும் அவனது அப்பாவோ அன்றி அம்மாவோ எந்த கோயிலுக்கும் அவனை அழைத்துச் சென்றதாக ஞாபகம் எதுவும் இல்லை.

இன்று அவளுக்காக கோயிலுக்குப் புறப்பட்டவன் வழமையைப் போல வேட்டி சட்டையை அணிந்து கொண்டு வெளியில் வந்து காத்திருக்க அவள் சேலையில் வந்திருந்தாள். தலையில் அவனது வீட்டு வாசலில் இருந்த செவ்வந்தி சிரித்துக் கொண்டிருந்தது.

அவனைமீறி கண்கள் அவள் அழகை ரசிக்க முற்பட அழுந்த விழிகளை மூடித்திறந்து அவற்றின் இயல்பான செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவன் மீண்டும் வீட்டினுள் சென்று கதவைப் பூட்டியதுடன் அவளிடம் ஒரு ஹெல்மெட்டை அணிய தந்தவன் அவளை பைக்கில் ஏற்றிக் கொண்டு அழகர்புரம் நோக்கிப் பயணத்தைத் தொடங்கினான்.

சுடியிலோ அல்லது ஜீன்சிலோ தோழிகளுடன் ஸ்கூட்டியில் இருபக்கமும் கால்போட்டு அமர்ந்து செல்பவளுக்கு பைக்கில் பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு ஒருபுறமாக அமர்ந்து செல்வது பழக்கமற்ற ஒன்று.

அடகடவுளே! இது போதாதென்று பைக்கில் ஏறி அமர்ந்தவளுக்கு கைகளை எங்கே பிடிப்பது என்பதில் பெரும் சந்தேகம் ஏற்பட்டாலும் தன்னை ஒரு ஜடப்பொருளைப் போல பார்த்து வைக்கும் இவனது தோளையோ அன்றி இடுப்பையோ பற்ற தயக்கமாக வேறு இருந்தது.

இவளும் அவனை கணவன் என்ற பாங்கில் பார்த்ததில்லை என்பது ஒருபுறம் என்றால் அவனும் மனைவி என்று எந்தஉரிமையையும் எடுக்க முயற்சித்ததில்லை.

பைக்கின் பின்புறமிருந்த கம்பியில் ஒரு கையும் சீட்றின் ஒரு பக்கத்தை மற்றைய கையாலும் பிடித்தபடி இருந்தவளுக்கு கட்டியிருந்த பட்டுச் சேலை அவளைச் சீட்டில் ஒழுங்காக இருக்கவிடாது வழுக்கித் தொலைத்து பயமுறுத்திக் கொண்டிருந்தது.

விரைவாக ஊர் போய்ச் சேர்ந்தால் பரவாயில்லை என்றிருந்தவள் வீதியில் அமைக்கப்பட்டிருந்த குறியீட்டுப் பலகையைப் பார்க்க இன்னும் 75 கிலோமீற்றர் தூரம் இருப்பதாக அது அறிவித்தது. ராமா இப்போதான் 25 கிலோமீற்றர் போயிருக்கா?

என்ன சோதனையடா இது? விழுந்து தொலைத்தேன் என்றால் நாளை எக்ஸாம் எப்படிச் செய்ய முடியும்?? கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு மெல்ல தனது இருக்கையை அட்ஜஸ்ட் செய்து கொண்டாள்.

கையை விட்டிடாதயடி லயா! என்று தனக்குத்தானே அறுவுறுத்திக் கொண்டவளுக்குத் தெரியவில்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனால் அவளாகவே கையைவிட்டு விழுந்து எழும்ப போகிறாள் என்பது.

அந்த நீண்ட பயணத்தில் வழுக்கும் சேலையுடன் அவள் சமாளித்து பயணம் போவது ஹைவேய்ஸ் டிபார்ட்மென்டுக்குக்கூட பொறுக்கவில்லை போலும் அடிக்கடி இருந்த ஸ்பீட் பிறேக்கர்கள் அவளைப் பந்தாட குன்றும் குழியுமாக இருந்த அழகர்புரம் செல்லும் கிளைப்பாதையில் அவன் பாம்புபோல வளைந்து நெளிந்து சர்கஸ் காட்டி பைக்கை ஓட்டிக் கொண்டிருக்க ஒரு கட்டத்திற்கு மேல் சமாளித்து அமர முடியாதவள் அவனை ஒட்டி அமர்ந்து அவனது இடுப்பில் கையைக் கொடுத்து அமர்ந்து கொண்டாள்.

இவள் தன்னைக் காக்க வைத்த கை அவனுக்கு மின்சாரத்தை பாய்ச்சி வைக்க ----

எங்கே அவளது பிடி தன்னை நிலைதடுமாறச் செய்துவிடுமோ என்று நினைத்தவன் சாலை ஓரமாக பைக்கை நிறுத்தி -----

“எதுக்கு இப்போ இடுப்பிலை கையைப் போடுறாய் சீட்டின் பின்புறமிருக்கும் கம்பியைப் பிடித்துக்கொள்” என்று இறுகிய குரலில் சொல்ல அவமானத்தில் சுருண்டுபோனாள் அவன் மனைவி.

தன்னைத் தொடவேண்டாம் என்று அவன் சொன்னது வெறுப்பில் என்று இவள் நினைக்க ‘அவளைத் தொட விடுவானேன் பின்பு அவஸ்தைப்படுவானேன்’ என்பது அவன் நினைப்பாக இருந்தது.

அவன் வார்த்தைகள் ஏற்படுத்திய அவமான உணர்வு அவளைக் கொன்று தின்றது. இந்த அவமானம் ஒரு நொடியில் குறையுமா என்ன? அது உள்ளிருந்து அவளை உருக்கி பெரு நெருப்பாக தகிக்க அவமானம் இருந்த இடத்தில் ஆத்திரம் சூழ்ந்து கொண்டது.

ஓஹ்! இவர் பெரிய மன்மதராசா நான் தொட்டால் இவர்ட கற்பு கரைந்து காணமல் போயிடுமாம்---டேய் இப்பிடியே சாமியாராய் போடா---- உருப்படுவியா நீ என்று சபித்தவள் அதன்பின் தவறிக்கூட அவனைமட்டுமல்ல கம்பியைக்கூட ஆதரவுக்காக பற்றாமலிருந்து அவன் பைக்கிலிருந்து கீழே விழுந்து தனது ரோசத்தின் அளவை அவனுக்குக் காட்டினாள்.

நல்ல நேரம் அவள் விழந்த இடத்தில் மணல் குவிக்கப்பட்டிருந்ததால் சிராய்பு காயங்களுடன் தப்பியவள் அவன் முகத்தை நிமிர்ந்தும்கூட பார்த்தாளில்லை.

அவள் கண்களிலிருந்து வழிந்த நீர் உடலில் ஏற்பட்ட காயத்தால் அன்றி உள்ளத்தில் ஏற்பட்ட காயத்தால் வந்தது என்பதை அறியாதவன் பலன்ஸ் தப்பினால் சொல்லமாட்டியா? என்று கேட்க எதுவும் பேசாது மீண்டும் பைக்கிற்கு அருகில் போய் நின்று கொள்ள தன்னைமீறி அவளது கையைப் பற்றி அவளது சிராய்பு காயத்தைப் பார்த்தான்.

அவை அவ்வளவு தூரம் பாரதூரமாக இல்லை என்பதைக் கண்டு கொண்டவன் எல்லாத்துக்கும் அழுகிறாய்!! உன்னை என்னதான் செய்யுறது? சின்னக் காயம்தான் வளர முன் ஆறிவிடும் என்று சின்ன வயதில் அவனது அப்பா அவன் விழும்போது சொன்ன வார்த்தைகளை அவளுக்குச் சொல்லி அவளது முறைப்பையும் பரிசாக பெற்றுக்கொண்டவனுக்கு அவனைமீறி புன்னகை அவளது முறைப்பினால் வந்திருந்து.

மீண்டும் பைக்கில் ஏறியவளுக்கு மீண்டும் பைக்கையோ அன்றி அவனையோ பிடிக்கும் நினைப்பு வரவேயில்லை.

கோபம் ---கோபம்---ஆற்றாமையால் வந்த கோபம் அடங்க மறுத்தது அதுவும் கோயிலுக்குப் போவதால் எதுவும் சாப்பிடாமல் வந்தவளுக்கு இருந்த பசி கோபத்தை இறங்கவிடாமல் தடுக்க எதனையும் பிடிக்காமல் இருக்கத்தான் தோன்றியது.

அவனுக்கு தன் ரோசத்தின் வீரியத்தை காட்ட நினைத்தவளுக்கு எக்ஸாம் இரண்டாம் பட்சமாகப் போயிருந்தது. கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து அவன் பார்க்க அவள் எதனையும் பிடிக்காது இருப்பது புரிய மீண்டும் பைக்கை சாலை ஓரமாக நிறுத்தியவன்

ஒழுங்காக ஊர்போய் சேருகின்ற எண்ணம் இல்லைப்போல இருக்கு. சரி என்னைப் பிடிச்சுக்கொண்டு இரு என்று பெரிய ஆபீசர் போல அனுமதிதர---

ஓஹ்! இவர் தொடதையென்றால் விலகி நிற்கவேணும் ---பிடி என்றால் பிடிக்க வேணுமோ என்று மனதோடு கறுவியவள் தனது பிடிவாதத்தை தொடர ---மீண்டும் பைக்கை நிறுத்தியவன்

இப்போ என்னைப் பிடிக்காமல் இருந்தாய் என்றால் கோயிலுக்குப் போக ஏலாது ஊருக்கத்தான் திரும்பி போக வேண்டிவரும் -----எது வசதி என்று மிரட்ட அவனில் படாமல் அவனது சேட்டை பிடித்துக் கொள்ள அவளது கையைப் பிடித்தவன் தனது இடுப்பைச்சுற்றி பிடித்துக் கொண்டு ஒரு கையால் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான்.

அந்த லாவகம் பேஸிக்கலி அவன் ஒரு மெக்கானிக் என்பதைக் காட்ட அந்த வலிமையான கரங்களின் தொடுகையால் மனம் சற்று தடுமாறித்தான் போனாள் விஷ்ணுவின் பாதி.

அவனது இந்த செய்கை வயிற்றில் பட்டாம்பூச்சிகளை பறக்க வைக்க இனம்புரியாத மயக்கம் சூழ்ந்து கொண்டு உலகை வர்ணமயமாகக் காட்ட அதில் லயித்துப் போயிருந்தவளை என்னுடன் கோபித்துக் கொண்டு ஸ்டன்ட் எல்லாம் செய்து பார்க்கிறாய் நாளைக்கு எக்ஸாம் இருக்கா? அல்லது இல்லையா? என்ற அவனது கேள்வி இந்த உலகிற்கு கொண்டு வந்தது.

தான் செய்த பைத்தியக்காரத்தனம் அவளுக்குப் புரியாமல் இல்லை. நாளைக்கு எக்ஸாமை வைத்துக்கொண்டு கிறுக்கி மாதிரி பைக்கிலிருந்து விழுந்திருக்கிறேனே----- என்ரை புத்திக்கு நோபல் பரிசுதான் தரவேணும்.

இது போதான்தென்று விஷ்ணுவுடன் அழகர்புரம் சென்று வந்து தனது தாயையும் பெரிய தாயையும் ஒன்ற சேர கலங்கடித்திருப்பது கூட அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

(தொடரும்)




 
Top