கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி----+அது- அத்தியாயம் 17

sanchumahen

New member
அன்று

ஊரில் வந்து இறங்கியவனை ஏற்றிச் செல்ல காருடன் வந்திருந்தான் சின்னான்.

“என்ன சித்தப்பூ நலமா?” என்று கேட்டவன் “உங்களுக்கென்ன நீங்க அழகர் வீட்டு ஆனைக்குட்டி” என்று இவனது மெல்லிய தொப்பை போட்ட வயிற்றைப் பார்த்து முடிக்க “சீ போங்க சின்னவரே” என்று வெட்கப்பட்டான் சின்னான்.

“அட---அட---வெட்கம்” என்று இவன் மேலும் சீண்ட

“சின்னவரே! என்னய விட்டிருங்க. நான் பாவமுங்க” என்று நெளிய

“சித்தப்பூ----“

இவன் குஷியாக இருக்கும் தருணங்களில் மட்டுமே சின்னானை சித்தப்பூ என்று அழைப்பான்.

“என்ன சின்னவரே! சித்தப்பூ சொல்லுறீங்க? அப்போ மனசுக்குள்ள மத்தாப்பூ பூத்திருக்கு போல” என்று இவனை வார

ம்---- ம்- என்றபடி சின்னானை ஏற இறங்க பார்த்தவன்

“எது----கை----மோனை ம்---நடத்துங்க--- நடத்துங்க ஆனைக் குட்டியாரே!”

“என்ன சின்னவரே! நீங்களும் ஆர்ப்பாட்டம் பண்றீங்க---வீடும் ஒரே கொண்டாட்டமாக இருக்கு!” என்று வடிவேல் அழகர் சொல்லி கொடுத்தது போல பட்டும் படாமலும் இவனுக்கு கதையை மாற்றிச் சொல்ல

“ஏது--- ஏது கொண்டாட்டமா? என்ன கொண்டாட்டம்?”

“உங்க மாமா குடும்பம் சீமையில இருந்து வநதிருக்காங்க. அந்த புனிதா பொண்ணுக்கு நிச்சயதார்த்தமாம். மாப்பிள்ளை ஏதோ உங்க படிப்பும், பதவியும் தானாம். பாதிப் பயலுக விசயம் தெரியாம நீங்கதான் மாப்பிள்ளை என்று பேசுறாங்க“

ஓஹ்! எவன் எதை நினைச்சா தான் என்ன! என்று நினைத்தவன் மனதில் நிம்மதி நிறைந்திருந்தது.

அம்மா அப்பா எங்கே புனிதாவைத் திருமணம் செய்யச் சொல்லி கேட்டு விடுவார்களோ என்ற பயம் இவனுக்குள் இருந்தது.

இம்முறை தான் பவதியை விரும்புவதை தாயின் காதில் போட்டுவிட வேண்டும் என்ற நினைவுடன் தான் வந்திருந்தான்.

இருந்த ஒரு தடையும் நீங்கி விட்டதால் இப்போது மனம் அமைதியில் நிறைந்திருந்தது.

தாத்தனை அம்மாவை வைத்தே சமாளித்துவிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

இவன் புரியாத சில விசயங்களும் அங்கே இருந்தன. மகன் விரும்பும் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் வள்ளியம்மைக்கு மாமன் வடிவேல் அழகர் குலசாமி மாதிரி. அப்படியொரு பக்தி, மரியாதை. அது அவர் கணவரிடமிருந்து கற்றுக்கொண்டது.

அதே சமயம் வடிவேல் அழகர் தெய்வானைக்கு மருமகள் கிருகலக்ஷ்மி. அப்படி ஒரு பிடித்தம் மருமகள் மேல்.

அவள் மனம் வருந்த பேசியதில்லை இருவரும். மாமன் ஒரு விசயத்தில் வாக்கு கொடுத்தால் அதனை நிறைவேற்றுவதில் வள்ளியம்மை முன்னிற்பார்.

மகன் எண்ணமும் மாமன் எண்ணமும் வேறுபடும் போது வள்ளியம்மை யாரை ஆதரிப்பார்? அதுவும் மகனின் வாழ்க்கைப் பிரச்சினை. அந்த உத்தம பெண்ணிற்கு அப்படியொரு தர்ம சங்கடத்தை விதி எழுதி வைத்துள்ளதா?

பவதியை நினைத்த மாத்திரம் அழகனுக்கு மனதில் மழைச்சாரல் பொங்கியடிக்க உள்ளம் குளிர்ந்து போனது. அவளை எப்போ பார்ப்போம் என்று அது குதியாட்டம் போட்டு அவனிடம் வினாவியது.

அட! கொஞ்சம் இருப்பா. உடனே போக முடியுமா என்ன? அதுவும் விருந்தாளிங்க வந்திருக்கும் போது.

தனக்குத் தானே அணைபோட்டவன் இரண்டு மணி நேரத்துக்குள் அவளைப் பார்த்து விட வேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக் கொண்டான்.

அவன் கடிதத்தில் அப்படித்தான் எழுதியிருந்தான் மதிய நேரம் தான் அவளைச் சந்திப்பதற்கு வசதியான நேரம்.

பொன்னாங்காணி, வல்லாரை கீரைகள் பறிக்க வருபவர்களும் வந்து சென்றுவிடுவர். அந்த நேரத்தில் தென்னம் தோட்டத்தை அண்மித்த பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இருக்காது.

காதலர்களுக்கு அதுதான் சௌகரியம் ஆனால் கயவர்களுக்கும் அதுவே சௌகரியம் என்பதை காலம் கடந்துதான் உணர்ந்துகொண்டான் அழகன்.

வீட்டிற்குள் நுழைந்தவனை “வாங்க மாப்பிள்ளை!” என்று வரவேற்றது அவனது மாமா பரமுதான். இந்த “மாப்பிள்ளை” என்ற அழைப்பு அவரது வழமையான அழைப்பு என்பதால் அவனுக்கு எதுவும் வித்தியாசமாகப் படவில்லை.

தந்தைக்கு அருகில் நின்றிருந்த புனிதா மெல்லிய வெட்கப் புன்னகையுடன் செல்ல அவளை வாஞ்சையாகப் பார்த்திருந்தான் இவன்.

இவ்வளவு நாட்களும் என் காதலுக்கு எதிரியாகி விடுவாளோ என்று நினைத்து இவன் காய்ந்து கொண்டிருந்தவள் இன்றுதான் வேறொரு வீட்டிற்கு வாழப்போகிறாளே அதனால் வந்த திடீர் பாசம்தான் அது.

மகனையும் அவன் புனிதாவைப் பார்த்த பார்வையையும் பார்த்திருந்த வள்ளியம்மைக்கு மனம் நிறைந்து விட்டிருந்தது.

“தம்பி குளிச்சிட்டு வாய்யா பசியாறலாம்” என்றவரிடம் “இதோ அம்மா” என்று கூறியவன் அவனுக்கென்று என்று தாத்தா கட்டியிருக்கும் அறைக்குள் சென்று மறைந்தான்.

அறைக்குள் வந்ததும் மனம் மறுபடியும் பவதியிடம் சென்றுவிட்டது. என்ன சாட்டு சொல்லி வீட்டிலிருந்து வெளியேறலாம் என்று இருந்தவனுக்கு அழகர்புரம் பள்ளியின் குவார்ட்டஸ்க்கு தீற்றுவதற்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த வர்ணங்களைக் கொண்டு கொடுக்கும் வேலை தரப்பட அவசர அவசரமாக தனது பைக்கில் அவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பி சென்றுவிட்டான்.

இரவு பயணத்திற்காக இவன் அவ்வளவாக உண்ணவில்லை. வழமையாகவே பயணம் செல்லும்போது அதிகமாக உண்ணமாட்டான்.

இன்று காலையிலோ பவதியைப் பார்க்க வேண்டும் என்ற அவா விஞ்சியதால் அம்மா பரிமாறிய இட்லியைக்கூட பசிக்கு உண்ணவில்லை. ஒரு டம்ளர் பால் மட்டும் குடித்திருந்தான்.

குவாட்டர்ஸில் இவன் நின்று கொண்டிருக்க வர்ணம் பூசுபவர் வேறுசில பொருட்களையும் கேட்டு வைக்க பைக்கை எடுத்துக்கொண்டு பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலிருந்த கோயில்குளம் டவுணுக்கு சென்று விரைந்து வந்திருந்தான்.

இவன் வரவும் அங்கே திருந்த வேலைகளைச் செய்து கொண்டிருந்த மேஸ்திரியும் இவனை பலநாட்களின் பின் கண்ட சந்தோசத்தை பேசித் தீர்த்துக் கொண்டிருக்க நெருப்பில் நிற்பது போல கால் மாற்றி மாற்றி நின்று கொண்டிருந்தான்.

யாரையும் மதிக்காமல் நடப்பவன் இல்லை என்பதால் அவரை அவமரியாதை செய்வது போல பேச்சை இடையில் முறித்துக் கொண்டு செல்ல முடியாது தவித்துக் கொண்டிருந்தான்.

என் செல்லக்குட்டி எனக்காக காத்திருப்பாளே! காணாமல் திரும்பி போய்விடப்போகிறாளே! என்று இவன் நினைத்து வருந்திக்கொண்டிருக்க ஒருபடியாக மேஸ்திரி “சரிங்க சின்னவரே அப்டியே செஞ்சிடலாம் என்று தாத்தாட்ட சொல்லிடுங்க ----“ என்று கூறி வைக்க இவனுக்கு எதுவும் புரியவில்லை.

அவர் பேசியது எல்லாவற்றையும் இவன் எங்கே கேட்டான் அவன்தான் தென்னந்தோட்டத்தில் பவதி மடியில் கிடந்தானே!

பைக்கை விரட்டிக்கொண்டு காற்று வேகத்தில் வந்தவன் தென்னந் தோட்டத்தில் இருந்த சிறிய வீட்டுக்கு அருகில் அதனை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான்.

அப்பாடா! அவனது செல்லக்குட்டி வந்திருக்கவில்லை. சரியாப் போச்சு காத்திருப்பது காதலில் சுகம் என்று நினைத்தவன் அந்த சுகத்தை கண்மூடி அனுபவித்தான்.

தூரத்தே பவதி ஆடி அசைந்து வருவது தெரிந்தது. இன்றுதான் அவளைப் புதிதாகப் பார்ப்பதுபோல பார்த்தான்.

புதிதாகத் தான் பார்க்கிறான். மூர்த்திக்கும் விசயம் தெரிந்து விட்டது. இன்றோ அல்லது நாளையோ இவன் அம்மாவிடம் சொல்லப் போகிறான் இனி பவதி அவனது மனைவிதானே.

புதிதாகத் தான் தெரிந்தாள். தன்னை மினக்கெட்டு அலங்கரித்து வந்திருந்தாள்.

அவளது முதுகுவரை புரளும் அடர்ந்த முடியை இரட்டைப் பின்னலாகப் பின்னியிருந்தாள். இவன் வாங்கிக் கொடுத்த தாவணியைத்தான் அணிந்திருந்தாள்.

போனவருடம் கோயில் திருவிழாவில் வாங்கி கொடுத்த கண்ணாடி வளையல்களுடன் கழுத்தில் மெல்லிய முத்து மாலை அணிந்திருந்தாள்.

கையில் ஒரு தூக்குச் சட்டியுடன் அவள் அசைந்து அசைந்து நடந்துவர இவனது மொத்த உணர்வுகளும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்க இவனை ரட்சிக்க வந்த யட்சினியாகத் தெரிந்தாள்.

மூர்த்திக்கு தெரியாத வரையில் காதலி என்ற நிலையில் வைத்திருந்தவளை அவனிடம் என்று தன் காதலின் உறுதியைச் சொன்னானோ அன்றிலிருந்து மனைவியாகவே மனதால் பார்த்து சிலிர்த்துக் கொண்டிருக்கிறான்.

அவள் அந்த சிறிய வீட்டினுள் வந்ததும் வழமையாக அவள் செய்வதை இன்று இவன் செய்தான். அவளை இறுக கட்டியணைத்து தூக்கி ஒரு சுற்று சுற்றினான்

“விடுங்க அத்தான்----விடுங்க” என்று அவனிடமிருந்து விலகியவள் அவனாக அவளை அணைத்ததை மனதில் வைத்துக்கொண்டு “என்னத்தான் புதுசா இருக்கு?” என்று கேட்டுவைக்க உல்லாசமாக சிரித்தவன் “இனிமே எல்லாமே என்ர வாழ்க்கையில் புதுசுதான் கண்ணம்மா” என்றிருந்தான்.

ஆயிரம் ஒத்திகைகள் பார்த்துக் கொண்டு இவனைப் பார்க்க வந்தாலும் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று நினைத்திருந்தவளுக்கு இவனே பேச்சை ஆரம்பித்து கோட்டை போட்டு கொடுக்க அவள் றோட்டை போட தொடங்கினாள்.

“அத்தான் இன்னிக்கு எங்க வீட்டில அசைவ கூழ் செஞ்சோம். உங்களுக்கும் எடுத்திட்டு வந்திருக்கேன். ரொம்ப நல்லா இருக்கும் குடிங்க”என்றபடி தூக்குச் சட்டியைத் திறக்க போனவளது மனம் நிலையில்லாமல் தவிக்க எதற்கும் இவன் வாயால் கேட்டு விடுவோம் என்ற எண்ணத்துடன் “என்னத்தான் ஊரெல்லாம் உங்க வீட்டில விசேசம் வரப்போறதா பேசுறாங்க என்ன விசேசம்?” என்று கேட்க இவனுக்கு காலையில் சின்னான் சொன்னது நினைவுக்கு வந்தது.

ஊரில் இவனைத்தான் மாப்பிள்ளை என்று பேசிக்கொள்கிறார்களே அதைப்பற்றித்தான் அம்மணி கேட்கிறாங்க என்று நினைத்தவன் அவளை ஊடல் கொள்ள வைக்க எண்ணி “அதுவா செல்லக்குட்டி நிச்சயம் பண்ணப்போறாங்கடா அதுதான்” என்று மொட்டையாகச் சொல்லி வைக்க அவளது மனம் மெல்ல மெல்ல கொதிக்க தொடங்கியது.

பணக்காரன் புத்திய எங்கிட்டேயா காமிக்கிறியா நீ? “மாப்பிள்ளை யாரு சின்னவருதானே” என்று இவள் கேட்டுவிட அவள் கையைப் பற்றி இழுத்து மடியில் வைத்துக் கொண்டவன் “மாப்பிள்ளை நாந்தான் ஆனா பொண்ணு------நீ நெனக்கிற மாதிரியில்ல” என்றான் இரு பொருள்பட.

இவன் நீ நெனக்கிற மாதிரி இல்லை என்று சொன்னது நீயில்லை என்ற அர்த்தத்தில் அவளுக்குப்பட அவள் தன் ஆத்திரம் அத்தனையையும் அடக்கியபடி “நான் நெனச்சது நடக்காம போனா நீங்க நெனச்சதும் நடக்காது அத்தான்” என்றவள் “ஐயோ! கூழ் ஆறிடப்போகுதே முதல் குடிங்க” என்று அவனுக்கு கொடுக்க ஒரு வாய் குடித்தவன் இவளுக்கு மறுவாயைக் கொடுக்க

“இல்லத்தான் இது உங்களுக்கென்னே எடுத்து வெச்சது. எனக்கு அசைவ கூழ் ஒத்துக்காது வாந்தி வரும் நீங்க குடிங்க” என்று விட அவன் வீட்டில் செய்யும் அசைவ கூழைப்போல அல்லாது அந்தகூழ் வித்தியாசமாக இருந்தாலும் அவனது மனதுக்கினியவள் அவனுக்கென்றே பிரத்தியேகமாக கொண்டு வந்திருக்கிறாள் என்பதால் மிச்சம் மீதி வைக்காது அத்தனையையும் குடித்து முடித்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் அவனுக்கு காரணம் இன்றி சிரிப்பு சிரிப்பாக வந்தது. அவனை மீறி அவன் வாய் உளறத் தொடங்க வார்த்தைகள் தெளிவாக வர நாக்கு புரளமறுத்தது. வழமையில் வெகு நிதானமாக ஆளுமையுடன் பேசுபவன் இன்றோ அனைத்தையும் மறந்து நின்றிருந்தான். காற்றில் பறப்பது போல உணர அவனை அறியாத கிளர்ச்சி மனதில் தோன்ற "செல்லக்குட்டி" என்று அவளை அழைத்தான் அவன் வார்த்தைகள் அவனுக்கே கேட்கவில்லை.

போதை மெல்ல மெல்ல ஏறி அவனை மூழ்கடிக்கத் தொடங்கியது. பவதி அவனுக்குக் கொடுத்தது “சுண்டக்கஞ்சி” போன்ற ஒரு வகைப் போதைப் பொருள். இவனுக்கென கஞ்சா கலந்து பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருந்தது.

வாழ்க்கையில் ஒரு போதும் மதுவகைகளை அருந்தியறியாதவன். அவனுக்கு அவள் கொடுத்த அளவு மிக அதிகம். அவனைப் போதையில் தள்ள வேண்டும். அவள் நினைத்தது அத்தனையையும் செய்ய அது மட்டும்தான் வசதி என்பதை அவளுடன் சேர்ந்து திட்டம் போட்ட அனைவரும் அறிவர்.

சிலம்பு சுத்துவதில் மன்னன் அவன். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவன். ஆரோக்கியமான ஆண்மகன் அவனை சாதாரணமாக உடற் பலத்தால் வெல்ல முடியுமா?

போதையின் உச்சத்தில் மனக்கிளர்ச்சி அதிகமாக அவளைப் பற்றிப்பிடிக்க முற்பட அவள் அவனைத் தள்ளிவிட அப்படியே நிலத்தில் மல்லாந்து விழுந்தான்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஏதோதோ கோலங்கள் தோன்ற இன்னும் சிலர் அங்கு நிற்பது போல தோன்ற யார்டா அது? என்று கேட்க நினைத்தும் முடியவில்லை.

அவளுக்கு ஏதோ ஆபத்து அவர்களால் வரப்போகிறது என்று நினைத்த மாத்திரத்தில் தனது சக்தி எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு எழும்ப முற்பட்டவனின் கன்னத்தில் விழுந்த அறை மீண்டும் அவனை நிலத்தில் விழுத்தியது.

இம்முறை விழந்த இடத்தில் ஒரு மரக்குற்றியிருக்க அது தப்பாமல் அவனது தலையைப் பதம்பார்க்க இரத்தம் கசிய தொடங்கியது.

தனக்கு என்ன ஆயிற்று என்பதையே அவனால் இனம் பிரித்தறிய முடியாத நிலையில் இருந்தவன் மெல்ல மெல்ல போதையில் உணர்விழந்து கொண்டிருந்தான் .

மயக்கத்தின் பிடியில் சென்றவனது நெஞ்சில் யாரோ ஓங்கி மிதிக்க வலியில் மூச்சுவிட முடியாது தவித்தான்.

அவனது நெஞ்சில் மிதித்த கால்களில் இருந்த கொலுசு அவனுக்குப் பரீட்சியமானது. அது அவன் வாங்கிக் கொடுத்தது. உதைத்த கொலுசுப் பாதத்தை பிடிக்க முயன்று தோற்றுப் போனான்.

அவள் அவனது நேசத்தை மறுத்த போதும் அந்த கொலுசு அவனை விட மனமின்றி அவனது சட்டை பட்டனில் சிக்கிக் கொள்ள அதை இழுத்து பட்டனுடன் பிய்த்தவள் தனது காலினால் அவனது தலையை மிதித்து “செத்துப் போடா நாயே!உனக்கு கருமாதி செய்ற நாளில தான்டா என் மாமா மகன் சுந்தரத்துடன் எனக்கு கல்யாணம் நடக்கப்போகுது” என்று மயங்கும் அவன் மேல் காறி உமிழ்ந்தவளை

“வா தங்கைச்சி” என்று இழுத்துக் கொண்ட கணேசன் தனது கைகள் இரண்டையும் பார்த்துக் கொண்டான் . ஊரார் சூடு போட்ட தளும்புகள் புடைத்து தெரிய குரோதமாக அழகனைப் பார்த்தவன் “பசுமாட்டிற்காக சூடு போடவைத்த தாத்தன் உனக்காக என்ன செய்யப்போறான் என்று பார்ப்போம்டா” என்றபடி பவதியுடன் வெளியேறினான்.

அவள் சொன்னவைகளுக்கு எதிர்வினையாற்ற உடல் ஒத்துழைக்காத போதும் அவள் தன் அன்பைத் தப்பாகப் புரிந்து விட்டாள் தன்னை விட்டுப் போகிறாள் என்ற மட்டில் உணர்ந்தவன் மனதோ பவதி போகாதம்மா ---- நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேம்மா என்று அரற்றிக் கொண்டிருந்தது.

வெளியில் தங்கையுடன் வந்த கணேசன் முன்னே மண்ணெண்னை பாட்டிலுடன் நின்றிருந்த நாகராசன் அந்த கிடுகினால் வேயப்பட்ட வீட்டிற்கு நெருப்பு வைத்தபின்னர் தென்னந் தோட்டத்திற்குள் யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கராசனுடன் சேர்ந்து அனைவரும் வெளியேறினர். தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியிருந்தது.

இன்று

நேற்று முதல் அறையினுள் சென்று முடங்கியவள் வெளியில் வந்தாளில்லை. யாருடைய விசாரிப்புகளையும் அனுதாபத்தையும் விரும்பாது மொபைலை அணைத்து தூக்கிப் போட்டவள் கட்டிலில் சுருண்டு கிடந்தாள்.

பசி, தாகம் என்ற உணர்வுகள் அவளுக்கு மந்தித்துப் போயிருந்தன. இவள் ஒருபுறம் இவ்வாறு கிடக்க விஷ்ணுவும் தன்போக்கில் இருந்து கொண்டான்.

தனது இரவு உணவை மெஸ்ஸில் உண்டுவிட்டு தனது வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு இரவு 9 மணியளவில் வந்தவன் அறையினுள் சென்று தனது கைலியை எடுத்துக்கொண்டு குளிக்க செல்வதற்காக வந்தவன் கண்களுக்கு அவளது வீட்டில் இருந்து இரவு உணவு எதுவும் வந்திருக்காதது தெரிந்தது.

இவள் நேர்முகத் தேர்வுக்குச் சென்றதால் வரவில்லைப் போலும் என்று நினைத்தவன் தனது குளியலை முடித்துக் கொண்டு மீண்டும் மெஸ்சுக்குச் சென்று அவளுக்கு இரவு உணவை வாங்கி வந்து அறையிலிருந்த சிலப்பில் வைத்தவன் “சாப்பாடு வைச்சிருக்கு சாப்பிட்டிட்டு படு” என்றபடி வெளியில் வந்து படுத்துக் கொண்டான்.

அவன் செய்த வேலைக்கு சாதாரணமாக என்றால் அந்த சாப்பாட்டு பார்சலை அவனது முகத்திலேயே விட்டெறிந்திருப்பாள். இன்று இருவிதமான மனநிலையில் இருந்தாள்.

என்னைப் போல தானே அவனுக்கும் இருந்திருக்கும். எனது செய்கையால் அவன் ஆசைப்பட்ட தொழில் அவனது கையை விட்டுப் போயிருக்கிறது. தப்பு பண்ணிட்டேன் என்ற குற்ற உணர்வு.

இன்னொன்று அவன்மீது புதிதாக வந்திருக்கும் பயம். கமெராவை ஆஃப் பண்ணி வைத்து அவனது தொழில் கனவை இவள் இல்லாமல் செய்ததற்கு பசிகொண்ட வேங்கை தன் இரைக்காகக் காத்திருந்து வேட்டையாடுவது போன்று அவன் காத்திருந்து கொடுத்த தரமான பதிலடி.

தாத்தா ஆரம்பித்த தொழிற்சாலையைத் திறக்க முன் அனுபவம் தேவையாயிற்றே. அந்த தொழிற்சாலை வளாகத்தில் மீண்டும் காலூன்றி தொழிலைத் தொடங்க வேண்டும் என்பது அவளது அப்பாவின் கனவு.

இந்த தொழிற்சாலையைத் திறந்து இரண்டு தலைமுறைக் கனவை அவள் நனவாக்கப் பாத்திருக்க எல்லாமே முடிந்து போயிருந்தது.

தனது முட்டாள்தனமான முன் கோபத்தால் தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்த பின் தன்னை வெறுத்தவள் உணவைத் தவிர்த்தாள்.

மறுநாள் காலையும் அவளுக்கு வீட்டில் இருந்து உணவு வந்திருக்கவில்லை. இவனுக்கு காரணம் ஏதும் தெரியாது விட்டாலும் கடைக்கு வந்தபின் கமெராவை ஓடவிட்டுப் பார்த்ததில் மதிய உணவும் அவளுக்கு வந்திருக்கவில்லை என்பதைக் கண்டு கொண்டான்.

நேற்று தொடக்கம் பட்டினி இருக்கின்றாளே! எனக்கென்றே வந்திருக்கு இந்த தலைவலி. இவளை இவள் அம்மாவீட்டிற்கு துரத்திவிட்டால் என்ன? என்பதே அவனது இப்போதைய சிந்தனையாக இருந்தது.

மதிய உணவு பார்சலை விமலை கொண்டு போய் கொடுக்கச் சொன்னவன் வேலையின் நிமித்தம் வெவ்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்துவிட்டு தன் இரவு உணவையும் முடித்துக் கொண்டுதான் வீட்டிற்கு வந்திருந்தான்.

வந்தவன் கண்களில் மதியம் அவன் வாங்கி அனுப்பியருந்த உணவுப் பார்சல் பட்டுவிட எதற்கு என்வீட்டில் இருந்து கொண்டு பட்டினி கிடந்து என் உயிரை வாங்குகிறாள் என்று எரிச்சல் வர இரவு உணவை வாங்க அவன் போகவில்லை. அவளும் கட்டிலிலிருந்து எழுந்து வரவில்லை.

அவள் பசிதாங்க மாட்டாள் என்பதை அறிந்திருந்தாலும் அது என்ன உணவை வீணடிக்கும் பழக்கம். எத்தனையோ பேர் ஒரு வாய் சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கும் போது இந்த காளி சாப்பாட்டை வீணடிக்கிறாள்.

இவளின் உணவு தவிர்ப்பு அவனுக்கு கொழுப்பாக பட்டதனால் அவனும் இவளைக் கண்டு கொள்ளவில்லை.

மூன்றாவது நாள் காலையில் அவன் கடைக்குப் புறப்பட்டு வந்த பின்பும் கூட அவள் வெளியில் நடமாடாதததை கமெராவில் பார்த்துக் கண்டு கொண்டவன் சிந்தனை மேலிட கடையிலிருந்து திரும்பி வீட்டிற்கு உணவுடன் வந்திருந்தான்.

"சாப்பாடு வெச்சிருக்கு சாப்பிடு" என்றபடி அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் இருந்த சிறிய பிளாஸ்டிக் டீபோவில் வைத்துவிட்டு வெளியில் வந்து அவள் உணவு உண்கிறாளா? இல்லை இப்போதும் உணவை வீணடிக்கப்போகிறாளா? என்று பார்த்திருக்க அவள் எழுந்து வரவில்லை.

சினம் துளிர்க்க “ஏய்! உன்னைத்தான் சாப்பிடு” என்றவன் பேச்சுக்கு அவளிடம் பிரதிபலிப்பு எதுவும் இல்லாதிருக்க “திமிராடி உனக்கு?”

“தப்பு பண்ணிட்டேன்டி நான். கிணற்றுக்குள் குதிச்சு செத்து ஒழி என்று விட்டிருக்கணும் உன்னை” என்று பல்லை கடித்துக் கொண்டு பேசியவன்

மீண்டும் கட்டிலுக்கு அருகில் வந்து பார்க்க அவள் உணர்வற்றிருந்தாள்.

தங்களது புரஜெக்ட் ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. நேர்முகத் தேர்விற்கு போக வேண்டும் என்று கேள்விப் பட்ட நாள் முதல் சந்தோசத்தில் வயிறு நிரம்பியிருந்ததால் சாப்பாட்டைக் குறைத்திருந்தவளுக்கு கடந்த மூன்று நாட்களாக சாப்பாடும் தண்ணீரும் உட்கொள்ளாது விட்டது மயக்கத்தைக் கொண்டு வந்திருந்தது.

விமல் முதல் நாள் மதியம் பார்சலைக் கொண்டுவந்து அழைத்தபோதுகூட கட்டிலிலிருந்து எழுந்தவளுக்கு தலை சுற்ற சற்று நேரம் கட்டிலிலேயே இருந்து தன்னைச் சமநிலைப்படுத்திய பின்னரே வந்து அவனிடம் பார்சலை வாங்கியிருந்தாள்.

அவளது மயக்க நிலையைப் பார்க்க பழயன எல்லாம் வரிசை கட்டிக்கொண்டு நினைவிற்கு வந்தது அவனுக்கு.

அன்றும் அப்படித்தானே! ஜெயானந்தம் ஐயா வந்தபோது இவனும் பசியில் இதே வீட்டில்தானே மயங்கிக் கிடந்திருந்தான்.

அன்று அவன் மயக்கத்தில் இருந்தது போல் இன்று பசியில் இவள் மயங்கியிருக்க அதைப்பார்த்தவன் துடித்துத்தான் போனான்.

அன்று இவன் தனக்கென்று இருந்த ஒரே உறவான தாயையும் பறி கொடுத்து அநாதையாக நின்றிருந்தான்.

சாப்பிட்டியா? என்று கேட்பார் யாரும் இருக்கவில்லை. உணவு தருவாரும் யாரும் இல்லை.

இன்று அவளை உறவாக தெய்வத்தின் முன் ஏற்றும் அவள் அநாதரவாக விடப்பட்ட குழந்தைபோல் பசியில் மயங்கிக் கிடக்க இவன் கண்டு கொள்ளாது கடமை தவறியவனாக நின்றிருந்தது அவனைச் சுட்டது.

அவளது உடல்நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்வதற்காக அம்புலன்சுக்கு அறிவித்து விட்டு ப்ரியா எழும்பு ---- ப்ரியா எழும்புடா என்று அசைத்துக ;கொண்டிருக்க அவளோ எழுந்தாளில்லை.

உடனே எழுந்தவன் தண்ணீர் எடுத்து வந்து அவளது முகத்தில் தெளிக்கவும் எந்த அசைவும் இன்றி உணர்வற்று இருந்தவள் கோலம் பயத்தை தோற்றுவிக்க

தனது கையை அவளது மூக்கின் அருகில் வைத்துப் பார்க்க அவள் சுவாசிப்பது தெரிந்தாலும் அது தெளிவாக இல்லை.

இது அவளின் சுவாசமா? அல்லது அடிக்கும் காற்றுத்தானா? என்று அறியாது தவித்துப்போனான்.

அவனது தவிப்பிற்கோ இல்லை அவன் அவளை உலுக்கியதற்கோ அவளது உடலில் எந்தவிதமான மாற்றமும்; வராதிருக்க அம்புலன்ஸிலிருந்து வந்த நர்ஸ் “சார்” என்று அழைக்கும் சத்தம் கேட்டவன் அவர்கள் ஸரெட்ஸரைக் கொண்டு வருவதற்கு முன்னரே அவளை அள்ளிக் கொண்டு வெளியில் ஓடி வந்தான்.

அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் இதயத்துடிப்பை அதிகரிக்க அவனது இதயம் துடிக்கும் சத்தம் அவனுக்கே கேட்டது.

அம்புலன்ஸ் உள்ளே ஏறிய பின்னரும் அவளது கையை அவன் விட்டானில்லை. பசி மயக்கத்திற்கு இத்தளவு அக்கப்போர் தேவையா? என்று யாராவது கேட்டிருந்தால் அவனிடம் பதில் இல்லை.

அவள் உடனடியாக அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட இவனிடம் வந்த அட்மின் ஆபீஸர் அட்மிஷன் போர்ம் பில் பண்ண பேஷண்ட் பற்றிய விபரங்களைக் கேட்கத் தொடங்கி நீங்க பேஷண்டுக்கு என்ன வேணும் சார்? என்று கேட்ட மௌனமாக அவளைப் பார்த்தவன் கண்களில் அவன் கட்டியதாலி அவள் போட்டிருந்த உடையினுள் இருந்து வெளியில் தெரிய என்ன சொல்வது என்று ஒருகணம் தயங்கிய போதும்; “ஹஸ்n;பண்ட்” என்று சொல்ல அதைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இயந்திர கதியில் பதில் சொல்லி முடித்தவன் சைன் பண்ணுங்க சார் என்று காட்டிய இடத்தில் அதனைப் போட்டு விட்டு அவசர சிகிச்சைப் பிரிவின் உள்ளே அதிக நேரம் நிற்க முடியாதென்பதால் வெளியில் வந்து தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

இவனைக் கலங்கடித்தவளோ மேலும் அரைமணி நேரம் அவனுக்குப் பயம் காட்டிவிட்டு கண்விழிக்க அதைப் பார்த்து நிம்மதியடைந்தவனது நிம்மதிக்கு வேட்டு வைத்தார் டாக்டர்.

டாக்டர் அழைப்பதாக சொல்ல அவரது அறைக்குள் சென்றவனிடம் மத்திம வயதில் இருந்த லேடி டாக்டர் எந்த விசாரணையும் இல்லாது பொரியத் தொடங்கினார்.

“ஏம்பா நீ தானா அந்த பட்டினி கேஸோட புருஷன்?

“நல்ல புருஷன்தான் நீ போ”.

“வைஃப்க்கு என்ன பிரச்சினை? அவள் சாப்பிட்டாளா? இல்லையா?? எதுவுமே தெரியாத நல்லவன் நீ!!

“உன்ரை அம்மாவுக்கும் அவளுக்கும் என்ன பிரச்சினை?” என்ற அவரது கேள்வியில் நெற்றியைச் சுருக்கியவன் “என்ன பிரச்சினை” என்று டாக்டரிடமே கேட்டு வைக்க

“என்ன மேன் விளையாடுறியா?” என்று சுருதியை ஏற்றிய டாக்டரிடம்

“என்ரை அம்மாவுக்கும் இவளுக்கும் என்ன பிரச்சினை இருக்கப்போகுது? இவளிட்டை இம்சைபடாமல் அம்மா எப்பவோ எஸ்கேப்பாயிட்டுது” என்றவனது பதிலில்

“அப்போ நீதான் பிரச்சினையா? ஆமா! நீ இன்றைக்கு சாப்பிட்டியா மேன்?”என்று கேட்க டாக்டரின் கேள்வியின் அர்த்தம் புரியாதவன்

“ம்” என்று பதில் தர “என்ன மனிஷனய்யா நீங்க எல்லாம்? உங்களுக்கு விழுந்து விழுந்து சேவை செய்யுற வைஃப் சாப்பிடாமல் இருக்க பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாய் நீ!!”

“பகல் முழுவதும் உங்களுக்கு எடுபிடி வேலை பார்க்க வேணும் இராத்திரியான உங்க கெடுபிடிகளை தாங்க வேணும்.

அவளுக்கென்று சொந்த விருப்பு வெறுப்பு எதுவும் இருக்கக்கூடாது அப்டி தானே!” என்று ஏதேதோ புலம்ப டாக்டர் சொந்தப் பிரச்சனையால் தான் தன்னைப் போட்டுத் தாக்குகிறார் என்று புரிந்து கொண்டவனுக்கு அவனையறியாமல் சிரிப்புத்தான் வந்திருந்தது.

இவ எனக்கு இராப்பகலா சேவை செய்யுறாளா? இரவில நான் கெடுபிடி பண்றேனா? சுத்தம் என்று நினைத்தவன் மௌனமாக நின்று கொண்டான். தனது கதாகாலஷேபத்தை முடித்துக் கொண்ட டாக்டர் இன்றைக்கு அவள் வார்ட்டில் இருக்கட்டும். “நாளைக்கு நீ கூட்டிட்டு போ மேன்”

“வைஃபை கவனமா பார். அவள்தான் உன்னோட கடைசி வரைக்கும் வரப்போற உறவு” என்று சொல்லி இவனை அனுப்பிவிட மறுபடியும் வந்து வெளியில் அமர்ந்து கொண்டான்.

அறையினுள் சென்று அவளைப் பார்க்க முற்படவில்லை. டாக்டர் போட்டு கடித்துக் குதறியதில் அவ்வளவு ஏத்தத்தில் இருந்தான்.

இவளால இன்னமும் என்ன பார்க்கவும் கேட்கவும் இருக்குதோ என்பதே அவனது கேள்வியாக இருந்தது.

காலையில் இவளை ஹாஸ்பிட்டலில் இருந்து அழைத்துப்போக அறையினுள் வந்தவன் ப்ரியா ரொடியா? போகலாம் வா என்று அழைக்க ப்ரியாவா யாரது? என்ற எண்ணம் தான் அவள் மனதில்.

அவளுக்கு எங்கே தெரியப்போகிறது அவன் சின்ன வயதில் அவளை அப்டித்தான் அழைத்துக் கொண்டிருந்;தான் என்பது.

லக்ஷ்மி ப்ரியா என்ற அவளது பெயரை அவளது வீட்டினர் லயா என்று சுருக்கி அழைக்க இவன் அவளை ப்ரியா என்றே அழைப்பான். ப்ரியாவும் அந்த வீடும் அந்நியமாகப் போனதில் அனைத்தையும் அவன் விட்டிருந்தான்.

இவளை வீட்டில் விட்டவன் மெஸ்ஸில் இவளுக்கான உணவை வாங்கி வந்து கையில் கொடுத்து சாப்பிடு என்று கொடுக்க மெதுவாக உண்ணத் தொடங்கினாள்.

மொபைலில் விமலை அழைத்தவன் அவனை இவளுக்குத் துணையாக விட்டு விட்டு கடைக்குச் சென்றான்.

இவன் விமலை அழைத்ததும் தகவல் குருவப்பாவுக்கு போக இவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அவர் இங்கு வந்து சேர்ந்திருந்தார்.

அவருக்கு பாமதி ஊருக்குச் சென்றது முதல் அத்தனை விசயங்களும் சக்தி மூலம் தெரிய வந்திருந்தது.

வந்தவர் எந்தவித சுத்திவளைப்புகளும் இன்றி நேரடியாகவே விசயத்திற்கு வந்தார்.

“இங்க பாரம்மா! படிச்சவள் தானே நீ. நிலமைய புரிஞ்சுகொள். இந்த கல்யாணம் உனக்குச் சரிவராது நீ விஷ்ணுவிற்கு டைவர்ஸ் கொடுத்து விடு” என்றவரை திகைத்தபடி பார்த்திருந்தாள் லயா என்கின்ற லக்ஷ்மி ப்ரியா.
 
Last edited:
Top