sanchumahen
New member
அன்று
வீட்டின் பின்புறம் நாகராசன், கணேசன், மாணிக்கராசன் மூவரும் சேர்ந்து அசைவக்கூழ் என்று அவர்கள் சொல்லும் போதை வஸ்த்தை தயார் செய்வதில் முழுமூச்சாக இறங்கியிருந்தனர்.
கணேசனும் நாகராசனும் பல சமயங்களில் இதை தயாரித்து தமது திருட்டுத் தொழிலைச் சிறப்பாக செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் செய்வதில் காவேரிக்கு உடன்பாடில்லாத போதும் என்ன செய்வது வயிறு ஒன்று இருக்கே என்று ஏற்றுக் கொண்டிருப்பவளுக்கு இன்று குழுவில் மகளும் இருப்தைக் கண்டதும் மனம் வேதனை கொண்டது. என்ன பெண் இவள்?
மகளும் அவர்களுடன் சேர்ந்து நின்றதால் இது திருட்டுடன் சம்மந்தப்பட்டதல்ல என்பது மட்டும் அவளுக்குப் புரிந்திருந்தது.
சின்னவரை போதையில் மயக்கி கல்யாணம் கட்டி வைக்கப்போகிறார்கள் போல என்று அவள் தனக்கேற்ற வகையில் தனக்குத் தானே விளக்கம் கூறிக் கொண்டாலும் மகளின் முகத்தில் இருந்த இறுக்கம் குழப்பிவிட்டிருக்க இவர்கள் பேசுவதைக் கேட்பதற்காக அருகில் இருந்த மாட்டுக் கொட்டகைக்குள் நுழைந்தவளது காதில் இவர்கள் அழகனை உயிருடன் எரிப்பதற்கு போட்ட திட்டத்தைக் கேட்டதும் அதிர்ந்து போனாள்.
அவள் முதிர்வயதில் வந்த கர்ப்பத்தாலும் கர்ப்பகால மன அழுத்தத்தாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்க இவர்களின் பேச்சு நடுங்க வைத்தது.
அட பாவி மனுஷா! பொண்டாட்டி வாயும்வயிறுமா இருக்கிறச்சே பூச்சி புழுவைக் கூட கொல்ல மாட்டாங்களே! நீ சின்னவரையே உசிரோடை எரிக்கப்போறியோ!
இந்த பிரசவத்தில் தான் தப்பிப் பிழைப்பேனா? என்ற பயத்துடன் இருந்தவளுக்கு வயிற்றில் இருக்கும் பிள்ளை ஏதாவது குறைபாட்டுடன் பிறந்துவிட்டால் என்ன செய்வது? என்ற பயமும் சின்னவருக்கு ஏதாவது ஆகி இவர்கள்தான் செய்தார்கள் என்பது தெரியவந்தால் என்ன ஆகும்? என்ற பயமும் சேர்ந்து கொண்டது.
ஐய்யய்யோ அப்படி ஏதும் தெரிய வந்தால் எங்களை ஊர் மக்கள் ஒதுக்கி வைத்துவிடுவார்களே! என்ற அச்சமும் சேர இதை எப்படியாவது தடுத்தே ஆகவேண்டும்.
அழகனுக்கு ஏதேனும் ஆனால் தன்னைத் தாய் போல் தாங்கும் பெரிய மகன் நிச்சயமாக தாங்க மாட்டான்.
இந்த மூடர்களுக்குப் பேசி புரியவைக்க அவளுக்கு சக்தியோ புரிந்து கொள்ளும் அளவிற்கு இவர்களுக்குப் புத்தியோ இல்லை என்று உணர்ந்தவளுக்கு அதை தடுப்பது எவ்வாறு என்பதுதான் தெரியவில்லை.
பெரிய வீட்டில் யாருக்காவது சொல்லலாம் என்றால் அவளால் அவ்வளவு தூரம் நடக்க முடியும் என்று தோன்றவில்லை.
தன்னால் முடிந்த ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று நினைத்தவள் வீட்டைவிட்டு வெளியேறி பெரிய வீட்டிற்கு போகும் வழியில் மெல்ல மெல்ல நடக்க சின்னானது மாட்டு வண்டியின் சத்தம் காதில் விழுந்தது.
அவனது மாட்டு வண்டியும் அதில் பூட்டியிருக்கும் காங்கேயம் காளைகளின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சலங்கைகளும் யாருக்குமே அவனது வண்டியை இனம் காட்டிவிடும்.
மாரியாத்தா! என்று ஆசுவாசப்பட்டவள் பாதைக்கு குறுக்கே வர களைகளை இழுத்து வண்டியை நிறுத்தி “என்ன அக்கா?” என்றவனிடம் “தம்பி என் னைய காட்டிக்குடுத்திடாதையா” என்ற வேண்டு கோளுடன் நடக்கப்போவதை உரைக்க பதறியவன் காளைகளை விரட்டிக்கொண்டு தென்னந் தோட்டத்திற்கு கத்தியபடி வர இவனது சத்தம் கேட்டு பலரும் இவனைத் தொடர்ந்து ஓடிவந்தனர்.
வந்தவர்கள் கண்டதோ தீயில் சங்கமமாகிக் கொண்டிருக்கும் குடிசை வீட்டைத்தான்.
ஐயோ சின்னவரே! என்று கத்தியபடி தன்னுடைய உயிரைப்பற்றி சிந்திக்காது தீயுனுள் பாய்ந்த சின்னானை அங்கு நின்ற யாராலும் தடுக்க முடியாது போக பக்கத்திலிருந்த கேணியிலிருந்து நீரை அள்ளிக் கொண்டு வந்து உற்றத் தொடங்கினர் அங்கு ஓடிவந்திருந்த மக்கள்.
அவர்களது முயற்சிகள் எல்லாவற்றிற்கும் தடைபோல எரியும் குடிசைக்கு பக்கத்திலிருந்த அழகனின் பைக்கின் பெற்றோல் டேங் வெடித்துச் சிதற அருகில் யாரும் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
உள்ளே சென்ற சின்னானுக்கோ கொழுந்து விட்டு எரியும் தீயில் அழகன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போக தீ இவனது உடலிலும் பற்றிக் கொண்டது.
என்ன செய்வேன் சின்னவரே! என்று மனமோ அரற்றிக் கொண்டிருக்க அவன் முன்னே அந்த குடிசையின் உள்ளே இருந்த அறைக் கதவு எரிந்து கீழே விழ அவன் கண்கள் அழகனைக் கண்டுகொண்டன.
பாய்ந்து சென்று அழகனைப் தூக்கிக் கொண்டவனை நகர்ந்து செல்ல தீ விடாது தடுத்துக் கொண்டிருந்தது.
மயக்கத்தின் பிடியில் மீளாது இருந்தவனை மனவலிமை ஒன்றின் உதவியுடன் தனது தோளில் தூக்கிக் கொண்டு மெல்ல மெல்ல வந்து வெளியில் போட்டவன் அப்படியே மயங்கிச் சரிந்திருந்தான்.
இருவரது உடலிலும் பெருமளவுக்கு தீக்காயங்கள் இருக்க அருகில் நின்றிருந்த மக்கள் தண்ணீரை அள்ளி வந்து இருவர் மேலும் ஊற்றிக் கொண்டிருக்க இத்தனை அவலங்களுக்கிடையிலும் அழகர் வீட்டிற்கு தகவல் போய் சேர்ந்திருக்க யாரையும் எதிர்பாராது காரை எடுத்துக்கொண்டு ஓடிவந்த கந்தவேள் அழகரது கண்கள் தான் கண்ட காட்சியை சகிக்கமுடியாது கண்ணீரைப் பொழிய தனது வேட்டியை கழற்றி இரண்டாக கிழித்து இருவருக்கும் மேல் போர்த்தியவர் அங்கிருந்த ஆண்களின் உதவியுடன் இருவரையும் காரில் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தார். செல்லும் வழியெங்கும் வலியில் இருவரும் போட்ட ஓலம் அவரது நெஞ்சைப் பிளந்தது.
அத்தனை வலியிலும் “சின்னவரை காப்பாத்துங்க----எப்படியாச்சும் காப்பாந்துங்க” என்று அரற்றிக் கொண்டு இருந்த சின்னானின் குரல் ஹாஸ்பிட்டலில் சேர்த்த சில மணி நேரங்களில் அடங்கிப் போனது.
அழகனின் அழகு முகமும் உடம்பில் கணிசமான பகுதிகளும் தீயில் வெந்து போயிருந்தன.
ஏதோ தெய்வ சித்தமாக அந்த மண்வீட்டின் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அஸ்பெஸ்டஸ் சீற் ஒன்று அவன் மேல் விழுந்து தீயில் முழுவதும் எரிந்து போகமல் அவனை காப்பாற்றியிருந்தது.
சின்னான் தன்னால் முடிந்தவரை விரைவாக அவனை வெளியே இழுத்து வந்ததனால் அவன் உடலில் சின்னானைவிட குறைந்த தீக்காயங்களே ஏற்பட்டிருந்தன.
வைத்தியர்கள் கையை விரித்து விட மிக மோசமான நிலையில் முகமும் வெந்து உரித்த இறால் போன்ற நிலையில் இருந்தவனின் கொடுநிலையைப் பார்த்த வடிவேல் அழகர் மனம் பேதலித்து நெஞ்சைப் பிடித்தபடி மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரை விட்டிருந்தார்.
அழகனைப் பார்ப்பதற்கு சற்று முன்பு தான் மார்ச்சுவரியில் இருந்த சின்னானின் உடலைப் போய் பார்த்து வந்திருந்தவருக்கு தாங்க முடியாமல் போயிருந்தது.
ஒரு மகனைப் போல அல்லும் பகலும் அவருடனேயே ஒட்டிக் கொண்டு முப்பது வயதுகளின் கடைசிப் பகுதியில் இருந்தவன் படுத்திருந்த கோலம் மலை ஒன்று சரிந்ததைப் போலிருக்க; தவித்துப்போனவர் தள்ளாடிக்கொண்டே பேரனிடமும் வந்திருக்க; நெற்றினால் போடப்பட்ட வலையினுள் படுத்திருந்தவன் வலியில் அரற்றிக் கொண்டிருக்க; மகன் ஒருபுறம் குழந்தையைப் போல அழுதுகொண்டிருக்க; மருமகள் மயக்கத்தில் அதே ஹாஸ்பிட்டலில் இன்னொரு அறையில் அனுமதிக்கப்பட்டிருக்க; அதுவும் வைத்தியர்கள் எந்தவிதமான நம்பிக்கையையும் அளிக்கவில்லை என்பதை புனிதாவின் அப்பா பரமு மூலம் அறிந்து கொண்டவர் தான் உயிருடன் இருக்கும்போது தன் பேராண்டியின் உயிருக்கு ஆபத்தோ என்று எங்கியே உயிரை விட்டிருந்தார்.
தந்தையினதும் சகோதரனைப் போன்ற சின்னானினதும் இறுதிக் கிரியைகளை புனிதா குடும்பத்தின் உதவியுடன் செய்து முடித்தபின் ஹாஸ்பிட்டலே கதியாக இருந்து கொண்டார் கந்தவேள் அழகர்.
நாட்கள் சென்று கொண்டிருந்தன. அழகர்புரத்திற்கு பவதியின் திருமணத்திற்கு முதல் நாள் வந்திறங்கினான் மூர்த்தி. பாவம் அவனுக்கு தகவல் தெரிவிக்க யாரும் இருக்கவில்லை.
அவன் வரும்போது தாலி வாங்கிவருவதாக சொல்லிச் சென்றதாதாலும் சிறிய அளவில் கோயிலில் நடக்கும் திருமணம் என்பதாலும் ஆரவாரம் எதுவும் இன்றி திருமணத்திற்கு உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஊருக்கு வந்த பின்னரே அழகனுக்கு நடந்த தீ விபத்து; வடிவேல் அழகரும் சின்னானும் இறந்தது என்ற அனைத்தும் தெரிந்து பைத்தியம் பிடித்த நிலைக்கு ஆளானான் .
உடனடியாகப் புறப்பட்டு ஹாஸ்பிட்டலுக்கு வந்திருந்தவனால் அழகன் இருந்த கோலத்தைப் பார்க்க முடியவில்லை.
அழகன் தென்னந்தோட்ட வீட்டில் தீவிபத்து ஏற்பட்டே இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டது முதல் தனது வீட்டவர்கள் மீதே பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்க உண்மையறியாது எதையும் பேசவிரும்பாதவன் மறுநாள் காலை தங்கையின் திருமணம் என்பதாலும் தான் சந்தேகப்பட்டுக் கேட்கப்போய் அது வெளியில் பரவிவிட்டால் பல பிரச்சினைகளை அது உருவாக்கும் என்பதாலும் மௌனமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிப் போயிருந்தான்.
அதுவும் ஊர்முழுவதும் வடிவேல் அழகரது இழப்பைப்பற்றியே பேசிக்கொண்டிருக்க அழகனுக்கு நடந்த விபத்துப்பற்றியோ அல்லது தனக்கு செய்த துரோகத்தைப் பற்றியோ எதுவும் காட்டிக்கொள்ளாமல் அழகன் என்ற ஒருவனை தான் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை என்பது போல தங்கை நடந்து கொள்வதும் மிகவும் சந்தோஷமாக திருமணத்தில் இருப்பதும் அவனுக்கு மென்மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவளது சந்தோசத்தைப் பார்த்த அவனுக்கு அது ஒரு குரூர சந்தோசம்தான் என்பது புரிந்து போக நிச்சயமாக தனது தாய்க்கோ செந்தாமரைக்கோ இவைபற்றி தெரிய வாய்ப்புள்ளதாகவே தோன்றிவிட அவர்களிருவருடனும் பேசுவதற்கு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கத் தொடங்கினான்.
பவதியின் திருமணம் அவர்களது குலதெய்வம் கோயிலில் நடக்க ஏற்பாடாகியிருந்ததால் அவனும் வேறுவழியின்றி தனது குடும்பத்தாருடன் குலதெய்வம் கோயில் இருந்த ஊருக்கு சென்றான்.
திருமணம் முடிந்த கையோடு தங்கையை கணவன் வீட்டில் விட்டுவிட்டு காவேரி செந்தாமரையுடன் புறப்பட்ட மூர்த்தி மீண்டும் ஹாஸ்பிட்டலுக்கு வந்துவிட்டான். அவனுக்கு தாயுடனோ செந்தாமரையுடனோ கதைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அழகனின் நிலையைப் பார்த்த மாத்திரத்தில் மனம் நைந்து போக தனக்கு கல்விதந்த பெருமகன் பேரனின் நிலை கண்ட மாத்திரத்தில் உயிரைவிட்டது உயிரை உருக்க ஹாஸ்பிட்டல் வாசலில் தவம் இருக்கத் தொடங்கினான்.
எந்த நிமிஷம் தனது குடும்பத்தாருக்கு இதில் தொடர்பு இருக்கின்றது என்ற சந்தேகம் ஏற்பட்டதோ அந்த நேரத்திலிருந்து தன்னை ஒரு கொலைகாரன் போலவே வரித்துக் கொண்டான்.
தான் பேசாது விட்டிருந்தால் இந்த நிலை அழகனுக்கோ அன்றி வடிவேல் அழகருக்கோ ஏற்பட்டிருக்காது என்ற குற்றக் குறுகுறுப்பு அவனின் இதயத்தின் ஆழத்தில் பதிந்து அந்த இடத்தைவிட்டு அவனை நகரவிடவில்லை.
பெரிய வீடு அதன் பொலிவை இழந்து சுடுகாடுபோல் மாறி வாரம் இரண்டு ஆனபோதும்கூட தன்னைப்பற்றிய எந்த சிந்தனையும் இன்றி ஹாஸ்பிட்டலே கதியென இருந்த அழகனது பெற்றோருடன் இவனும் இருந்து கொண்டான்.
ஊண், உறக்கம், குளிப்பு ஏதும் இன்றி பைத்தியகாரனைப் போல மௌனமாகிப் போனவனை அவர்களுடன் சேர்த்து ஊரில் உள்ள பெரியவர்களும் பரமு குடும்பத்தினரும் கவனித்துக் கொண்டனர்.
பரமு நிலைமையைக் கையில் எடுத்து சிங்கப்பூரிலிருந்தும் லண்டனில் இருந்தும் புகழ் பெற்ற மருத்துவர்கள் வரவழைத்து அழகனுக்கு வைத்தியம் பார்க்க ஏற்பாடு செய்தார்.
அழகனது உடலில் மரணவலி இருந்தாலும் மனதில் விழுந்த அடியும் அதனால் ஏற்பட்ட ஏற்பட்ட வலியும் அவனது புறகாயங்களில் இருந்தும் அவனை மீளவிடாமல் தடுத்துவிட தன்னைப் பார்த்து உயிர்ப்பு தொலைந்து போயிருக்கும் பெற்றோரைப் பார்த்து தனது வலியை சிறிது சிறிதாக மறைக்கத் தொடங்கியிருந்தான்.
பரமு குடும்பம் சிங்கப்பூருக்கு கிளம்பும் நாளும் வந்தது. எவ்வளவு காலத்திற்குத்தான் இங்கேயே இருக்க முடியும்? அவர்களது தொழில் அங்கேயல்லவா இருந்தது.
அவர்களுக்கு நிச்சயம் தடைப்பட்டதால் இனிமேல் திருமணத்திற்கும் வாய்ப்பு இல்லை என்பது புரிந்திருந்தது. அத்துடன் தங்களது மகளை அதிஷ்டம் இல்லாதவள் என்று யாரும் சொல்லி விடுவார்களோ என்ற பயம் தொற்றிக் கொண்டதால் விரைவாக ஊரைவிட்டு செல்ல முடிவு செய்திருந்தனர்.
தங்களது நிலையை கந்தவேள் அழகரிடம் சொல்ல தன் வேதனைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்தவர் மீண்டும் அழகர்புரம் வந்து வீட்டிலிருந்த கால்நடைகளையும் தானியங்களையும் பிரித்து வேலை செய்பவர்களுக்கு வழங்கியவர் வீட்டைப் பூட்டிக்கொண்டு புறப்பட பல தலைமுறை தலைமுறைகளாக என்றும் பூட்டப்படாது வீடு தேடி வரும் ஏழைபாழைகளுக்கும் சுற்றத்தவருக்கும் உதவும் தலைவாசல் முதல் தடவையாக தன் சோபையை இழந்து மூடிக்கொண்டது.
இன்று பூட்டப்பட்ட தலைவாசலைத் திறந்து என்று இந்த குடும்பத்தவர் உள்ளே வருவர்? பதில் இறைவன் கையில்.
இன்று
ஹாஸ்பிட்டலுக்கு செல்லும் முன்பும் அங்கே இருந்தபோதும் தான் அழுவதாலோ அன்றி சண்டைபோடுவதாலோ எதுவும் நடக்கப் போவதில்லை என்று லயா புரிந்து கொண்டிருந்தாலும் இழப்பின் வலி உள்ளத்தை அரித்துக் கொண்டுதான் இருந்தது.
“நீ இதைவிட பெரிய வலிகளை அவனுக்குத் தந்திருக்கிறாய்” என்று மனச்சாட்சி குற்றம் சாட்டியபோது அவனது வலியை பூரணமாக உணர்ந்து கொண்டிருந்தவளுக்கு அன்று அவளது தோழி சொன்ன “இப்டியே தினமும் அவனுடன் சண்டைபோட்டு உன்ரை நிம்மதியை கெடுக்கப்போகிறாயா?” என்ற கேள்வி அந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வர அவன் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கினால் என்ன செய்வது என்பதும் தெரியவில்லை.
அவனை விட்டு போக வேண்டும் என்ற எண்ணம் இப்போது கொஞ்சம் கூட அவளின் மனதில் இல்லாதபோது குருவப்பா டைவர்ஸ் கொடு என்று சொன்னது ஆத்திரத்தை ஏற்படுத்த
“போதும் நிறுத்துங்கோ! என்ன ஆ---ஊ என்றா உடனேயே இந்த கல்யாணம் சரிவராது நிறுத்து என்கிறீங்க! இல்லை டைவர்ஸ் கொடு என்கிறீங்க!
உங்க கண்ணுக்கு நான் எந்த மாதிரி பெண்ணா தெரியுறன்? ஏன் இப்டி மனசாட்சியே இல்லாம பேசுறீங்க? இதுவே உங்க மகளா இருந்தா இப்டி எல்லாம் பேச மனம் வருமா?
வயசில பெரியவர் பேசுற பேச்சாங்க இது? நீங்க எப்டிங்க எங்க அப்பாக்கு ப்ரண்ட் ஆனீங்க? எங்க அப்பாவைவிட ரொம்பவே வயசில மூத்தவர் நீங்க.
பாவம் எங்க அப்பா தன்ரை வெல்விஷர் என்று உங்களை நம்பினாரே! அதுக்கு நீங்க இதுவும் செய்வீங்க! இன்னமும் செய்வீங்க!” சொன்னவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றிருந்தது.
இவருக்கு முன்னால் அழ அவளுக்கு மனம் இல்லாததால் கண்களை மூடித்திறந்து அழுகையை கட்டுப்படுத்தினாள்.
ஏன் அங்கிள் உங்களுக்கு நான் என்ன பாவம் செஞ்சிருக்கிறன்? ஏன் இப்டி செய்யுறீங்க?
அம்மாடி ஒரு நிமிஷம்! என்று அவளது தொடர் பேச்சை நிறுத்தியவர். எதுக்கம்மா மூச்சு விடாம தம்கட்டி பேசுறாய் நீ? நான் எதுவும் தப்பா பேசினமாதிரி எனக்கு தெரியவில்லை என்று சொல்லிவிட
ஓஹ்! நீங்க சரியா தான் பேசுறீங்களா அங்கிள்? மனச்சாட்சி தொட்டுச் சொல்லுங்க என்றவளிடம்
பொறுமையாக நான் சொல்வதைக் கேள் என்று தொடங்கியவர் அவளது திருமணம் தொடர்பான ப்ளாஷ் பேக்கை திரும்ப ஓட்ட
எத்தனை வாட்டி இதே கதைய சொல்லுவீங்க----எனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டம் இருக்கயில்ல என்றது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அப்பா சொத்து எல்லாம் விஷ்ணுவுக்கு எழுதிக் கொடுத்திட்டாங்க என்றதிற்காக நான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கயில்லை என்கிறதும்.
அப்பா கடைசி ஆசை என்று சொன்னதால தான் கட்டிகிட்டேன். அவர் கொடுத்த சொத்தை விஷ்ணுவே வெச்சுக்கட்டும். நான் என்ரை அப்பாக்கு வாக்கு கொடுத்திருக்கிறன் எந்த சந்தர்ப்பத்திலையும் நீங்களோ இல்லை வேறையாரோ சொல்லுறதுக்காக நான் இந்த கல்யாணத்தை முறிக்க மாட்டேன்.
என்ரை லைஃவ்ல ஒரு தடவைதான் கல்யாணம் அது முடிஞ்சுது அவ்வளவுதான். வாழ்றேனோ இல்லையோ அது என்ரை பிரச்சினை நீங்க உள்ள வந்து குட்டைய குளப்பாதீங்க என்று விட
அவர் முகத்தில் மென்நகை. அவரது புன்னகை முகம் இவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்க யோசனையுடனே அவரைப் பார்த்தவளிடம்
"சாரிம்மா உனக்கு இவ்வளவு சொத்தும் கைவிட்டுப்போச்சே என்ற கவலை இருக்கும். அதை தப்பு என்றும் சொல்ல முடியாது.
சொத்து வேணும் என்றா நீ இவன்கூட குப்பை கொட்டித்தானே ஆகணும். டைவோஸ் ஆனாலும் அவன் உன்னை சும்மா வெட்டிவிட முடியாது. கணிசமான சொத்து தந்துதான் உன்னை வெளியில அனுப்ப வேணும். சட்டம் அவ்வளவு இறுக்கம் அம்மா" என்றுவிட
சொத்து----- சொத்து---- சொத்து என்று வெடித்தவள்
"சொத்து என்ன பெரிய சொத்து. நான் படிச்சிருக்கிறேன். இப்பகூட ஸ்கில் மைக்றேசனுக்கு நான் தகுதியானவள் தான். அவுஸ்ரேலியா இல்லை கனடா எங்கேயும் போய் உழைக்க முடியும்.
எங்க பரம்பரையைப் பற்றி மறந்து அக்காக்கள் கேட்டாங்க என்றதிற்காக அந்த பத்திரத்தை வாசிச்சு பார்க்காமல் சைன் பண்ணிட்டேன்.
அவங்க போலீஸ்க்கு எல்லாம் போவாங்க என்று எனக்குத் தெரியாது. அவனுக்கு விழுந்த அடிக்காக நான் எவ்வளவு மனவருத்தப்பட்டேன் என்று உங்களுக்குத் தெரியுமா?
எனக்கு அப்பா எல்லா சொத்துக்களையும் கொடுத்ததில விஷ்ணு மேல கோபம் இருந்தது என்னமோ உண்மைதான். அவனுக்கு கொடுத்த சொத்து கொடுத்ததாகவே போகட்டும் எனக்கு எதுவும் வேண்டாம்" என்றாள்.
அவ்வளவு வெறுப்பு அப்பாவின் சொத்துக்கள் மீதும் அவை தரும் பிரச்சினைகள் மீதும். அவள் அவனுக்கு எதிராக ஒரு அடிவைக்க அவன் ஒரே போடாகப் போட!! போதுமே இந்த போராட்டம்.
“பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலைக்கு அவளைத் தள்ளி விட்டவன் இவளுக்கான மதிய உணவையும் விமலிடமே அனுப்பி விட்டான்.
அவள் ஹாஸ்பிட்டலில் இருந்த போதே அவள் பல முடிவுகளை எடுத்திருந்தாள். அவன் வழியில் குறுக்கிடுவதில்லை என்பது அதில் முக்கியமானது.
சொத்து என்ற சொல்லே அவளை அலற வைக்க போதுமானதாக இருக்க அப்பாவினது முடிவுகளை அப்படியே ஏற்றிருந்தால் இத்தனை துயரமும் வந்திருக்காது என்பது அவளுக்கு புரிந்திருந்தது.
அவன் சிறைவைத்த பின் வந்த ஞானம் தான் இது. சொத்தும் வேண்டாம் இவன் தர்ற குத்தும் வேண்டாம் என்ற முடிவிற்கு இவள் வந்திருக்க; இவளைக் ஹாஸ்பிட்டலுக்கு அள்ளிச் சென்ற நொடி அவன் நினைத்திருந்தான் இவள் எது செய்தாலும் செய்யட்டும் முன் எச்சரிக்கையாக தடுப்பது; இல்லை என்றால் அனுபவிப்பது என்று.
போலீசினது அடியைக்கூட தாங்கியவனுக்கு மயங்கி விழுந்து இவள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தைதான் தாள முடியவில்லை.
இப்போது நினைத்தாலும் மனசைப் பிசைந்தது. இவன் எடுத்த முடிவை தொடர்ந்து செயற்படுத்த இவளது குறளிப் புத்தி விடுமா?
அவனைப் பொறுத்தவரையில் அவனுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே பிறந்திருக்கும் ஜென்மம்தான் அவள்.
“அங்கிள்” என்று மீண்டும் தொடர்ந்தவளிடம் “மாமா என்று சொல்லம்மா அதுதான் கம்பர்ட்டபிளாக இருக்கு” என்றவரிடம் “உங்களுக்கு பரம்பரை பெருமை என்றால் என்ன என்று தெரியுமா? என் தாத்தாக்களது இரக்க குணம் தெரியுமா? அந்த ரத்தம் கொஞ்சமாவது என்ரை உடம்பில் ஓடும் தானே!” என்றவளை வேதனையுடன் பார்த்தவர் “அதனால் தான் எனக்கு பயமாக இருக்கும்மா” என்று சொல்லிவிட அவரது வார்த்தைகளின் அர்த்தம் புரியாது குழப்பமாக பார்த்வளிடம்
“என்னத்தம்மா சொல்ல? சொல்லி பெருமைப்படுற மாதிரியான பரம்பரையிலிருந்து நான் வரலையேம்மா” என்றவர் “ஆனாம்மா நீ சேற்றில் முளைச்ச செந்தாமரைதான்” என்றவர் “அம்மாடி உன்ரை மனநிம்மதிக்காக ஒன்று மட்டும் சொல்லுறன் கேட்டுக்கோ! நீயோ உன்ரை அக்காக்களோ நினைக்கிற மாதிரி உங்க அப்பா உங்களுக்கு துரோகம் எதுவும் செய்யல.
இந்த வீடிருக்கிற நிலம் விஷ்ணுவுக்கு அவன்ரை தாத்தா எழுதிக் கொடுத்தது. அதை யாரும் அவனிடமிருந்து பறிக்க முடியாது”.
“இல்லை மாமா இந்த நிலத்தை அப்பா பெரியத்தானுக்கும் சின்னத்தானுக்கும் ஹாஸ்பிட்டல் கட்ட தருவதாக சொன்னாரே!” என்று தயங்கியபடி சொல்ல
“உங்கப்பா என்ன நம்பிக்கையில சொன்னார் என்று எனக்கு தெரியாதம்மா. ஆனா இந்த நிலம் விஷ்ணுவிற்கு என்று அவன்ரை தாத்தா எழுதி வெச்சிருக்கிறார் என்பது தான் உண்மை என்றவர்” தொடர்ந்து பேச்சை வளர்க்காமல் அவளது சாப்பாடு பற்றி விசாரித்து அவளது அம்மா இப்போது வரமாட்டார் என்றதுடன் அவளையே சமைத்து சாப்பிட சொல்ல
தனக்கு சமையல் தெரியாது என்றவளிடம் “என்னம்மா இது இன்றைய நாளில் இது எல்லாம் பிரச்சினையே இல்லை.
யூடியூப்பை பார்த்து சமைத்துக் கொள்” என்று சொன்னதுடன் சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், குக்கர், மளிகைச் சாமான்கள், காய்கறி எல்லாமே வாங்கிவந்து தர அவற்றை ஏற்க மறுத்தவளுக்கு “என்னிடம் வாங்க நீ மறுக்க தேவையில்லை” என்று கூறியவர் சிரித்தபடியே உன் வீட்டுக்காரனிடம் இதற்கான பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என்றபடி மனநிறைவுடன் வெளியேறினார்.
இருந்தாலும் அவருக்கு சில விசயங்களில் தெளிவு வேண்டியிருந்ததால் இந்த குட்டையை இன்னொரு விதமாகக் குழப்ப வேண்டும் என்ற முடிவுக்கும் வந்திருந்தார்.
அவர் சிரித்துக் கொண்டு சென்றது இவளுக்கும் இனம் புரியாத இதத்தை தந்திருந்தது. இரவு சமையலைச் செய்வது என்ற முடிவிற்கு வந்தவள் வலைத்தளத்தில் இருந்த அத்தனை சேனல்களையும் பார்த்துப் பார்த்து குழம்பிப் போயிருந்தாள்.
ஒரு வெயிடபிள் பிரியாணியுடன் தனது கன்னி முயற்சியைத் தொடர நினைத்தவளுக்கு அப்படியொரு மலைப்பை யூடியூப் தந்திருந்தது.
ஒரு சாதாரண வெயிடபிள் பிரியாணி செய்வதற்கு இத்தனை றெசிப்பிகளா? அதில் ரொம்ப சுலபமாக இருந்த ஒன்றைத் தெரிவு செய்தவள்
ஹாலில் இருந்த டீவி யில் யூடியூபை செற்பண்ணி ஒவ்வொரு காயாக வெட்டிகொண்டு பிரியாணிக்குத் தேவையான ஆயத்தங்களில் இருந்தாள்.
அந்த வீட்டில் கிச்சன் என்ற ஒன்று இல்லாததால் ஹாலில் ஒரு மூலையில் தனது சமையலை ஆரம்பித்தவள் அவன் வீட்டிற்கு திரும்ப முன்னர் சமையலை முடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் வேலையில் இறங்கியிருந்தாள்.
அன்று வேளையுடன் வீடு திரும்பியிருந்தான் விஷ்ணு. தனது இரவு குளியலை முடித்துவிட்டு கயிற்றுக் கட்டிலை போட்டு படுக்கை விரிப்புகளை சரியாக்கிவிட்டு தனது லாப்டாப்பில் சில கணக்கு விபரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் டீவியில் கண்ணும் கையில் உப்பு பைக்கட் ஸ்பூன் சகிதம் கடுமையான யோசனையுடன் நின்றிருந்தவள்பட இவள் நின்றிருந்த நிலையையும் நெற்றியைச் சுருக்கி யோசிப்பதையும் பார்த்தவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்திருந்தது.
சுத்தம்------ சமையல் இந்த கோலத்திலையா போகுது! உருப்பட்டமாதிரித்தான்.
இனியும் அதே இடத்தில் தொடர்ந்து இருந்து இவள் சமைக்கும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தால் அடுத்த ஏழரை கன்போர்ம் என்று நினைத்தவன் ஓடிப்போய் படுத்து போர்வையால் தலைமுதல் பாதம் வரை மூடிக்கொண்டான்.
மனமோ நல்ல காலம் இவ கையால சாப்பிடுற நிலை வரலை என்று ஆசுவாசப்பட்டுக் கொண்டது.
அவளது கொடுமையான சமையலை சூப்பரா இருக்கு என்று சாப்பிடும் காலம் வரும் என்று அறியாதவனது விதியை என்ன சொல்வது.
அதுவும் உப்பு பைக்கட்டை வாங்கி வந்து “ஒரு வாரத்திற்காவது வெச்சு போடம்மா” என்று புன்னகையுடன் பக்குவமாக சொல்லும் அளவிற்கு அவன் மாறப்போவதை அறியாதிருந்தான் இன்று.
அவனுக்கு சமையல் பழக்கம் தான். அதுவும் அவன் சிவானந்தம் ஆசிரமத்தில் பழகிக்கொண்டது தான். டுபாயில் இருந்த காலத்திலும் இவனும் இவனது அறைத் தோழர்களும் சேர்ந்து சமைத்தே உண்டதால் சமையல் தெரிந்த ஒன்றுதான்.
அவன் விரைவாகச் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டு போர்வையால் போர்த்திக் கொண்டதும் அவனது உடல் மௌனச்சிரிப்பில் குலுங்குவதும் போர்வையை மீறித் தெரிய அவன் தன்னைப் பார்த்து நகைக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு எரிச்சலாகிப் போனாலும் சமையலை முடித்து உண்ணத் தொடங்க அது சுமார் மூஞ்சிக் குமாருக்கு அண்ணனாக இருக்க---- தான் சமைத்த கன்றாவிக்கும் படுகன்றாவிக்கும் இடையில் இருந்த சுவையான பிரியாணியை அவளால் உண்ணத்தான் முடியவில்லை.
அவள் வாயில் உணவை வைத்து கொண்டு பரிதாபமாக முழித்துக் கொண்டிருக்கும் நேரத்திலா அவன் போர்வையை விலக்கி அவளைப் பார்த்து வைக்க வேண்டும்?
அவளது முகபாவங்கள் அவளது சமையலின் நிலையைச் சொல்லிவிட சிரித்தபடி அவன் மறுபடியும் போர்வையால் தன்னை மூடிக் கொண்டான்.
என்ன இளிப்பு வேண்டியிருக்கு? நான் தான் சமைக்கப்போறேன் எனக்கு இரவு சாப்பாடு வாங்க வேண்டாம் என்று சொன்னால் இவன் வாங்காமல் விடுவானா?
இவனுக்கு ரொம்பத்தான் கொழுப்பு கூடிப்போச்சுது என்று நினைத்தவள் ஹாஸ்பிட்டலில் எடுத்த சத்தியபிரமாணத்தை காற்றில் பறக்க விட்ட நொடி ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வந்து அவனது போர்வையை இழுத்து விட்டு அவன் மேல் ஊற்றினாள்.
ஏய்! ப்ரியா லூசாடி நீ? என்றபடி அவன் விரைவாக எழுந்துவிட பாய்ந்து ஓடிப்போய் முற்றத்தில் நின்று கொண்டாள்.
அவள் ஓடியவேகம் சிரிப்பை வரவழைக்க “இப்டியே பண்ணிக் கொண்டிரு ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள் உன்னை தூக்கிக் கொண்டு போய் கிணத்துக்குள்ள போட்டிடுவேன் ” என்றபடி சட்டையை மாட்டிக் கொண்டு தவம் அண்ணாவின் மெஸ்ஸை நோக்கிப் போனான் இவளுக்கு இரவு உணவை வாங்க.
இவளது பட்டினி அந்தளவு தூரத்திற்கு அவனை மிரட்டியிருந்தது.
தண்ணீரை அவன் மேல் ஊற்றியதால் அடிபின்னப் போகிறான் என்று இவள் நினைத்திருக்க அவனோ சிரிப்புடன் எழுந்து போனது இவளுக்கும் புன்னகையை வரவழைக்க அவனைப்பார்த்து நாக்கை நீட்டி பழிப்பு காட்டியவள் பின்புற வாசல்வழியாக உள்ளே வந்து நின்று கொண்டாள்.

Last edited: