கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி----+அது -அத்தியாயம் 19

sanchumahen

New member
அன்று

மாதங்கள் மூன்று கடந்திருந்தது அழகன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு ஆனாலும் தாய் தந்தையை தவிர வெளியாட்கள் யாரும் வந்து தன்னைப் பார்க்க அவன் அனுமதிக்கவில்லை.

அவனது தோற்றம் தலையில் இருந்து பாதம்வரை அத்தனையும் ஏதோ ஒரு விதத்தில் தீயினால் பாதிக்கப்பட்டிருக்க அவனது அழகன் என்ற பெயருக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் அவலட்சணமாகப் போயிருந்தான்.

தன்னை மற்றவர்கள் பரிதாபமாகப் பார்ப்பதை விரும்பாதவன் தனக்குள் அமிழ்ந்து இறுகத் தொடங்கியிருந்தான்.

சாதரணமாகவே யாருடனும் உடனடியாக சரளமாக பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவனுக்கு இப்புதிய தோற்றத்துடன் மற்றவர்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.

ஏனென்றே தெரியாது அவன் மனம் தினமும் சின்னானைத் தேடிக் கொண்டுதான் இருந்தது. அதுவும் அவன் இவ்வாறிருக்கும் போது அவனது சித்தப்பு வராதிருப்பான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்க அடிக்கடி சித்தப்பு எங்கே? என்று கேட்க ஏதோ ஒரு பதில் சமயத்திற்கு ஏற்ப அவனுக்கு சொல்லப்பட சரியென்று அரைமனதுடன் அதனை ஏற்றுக் கொண்டிருந்தான்.

இவன் அழகர்புரம் வந்தால் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ளும் சின்னான் மீது பாசம் இருந்தாலும் கடந்த சில மாதங்களாக தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குள் அத்துமீறி அவன் நுழைவது எரிச்சலை ஏற்படுத்தியிருந்ததும் உண்மைதான்.

ஆனாலும் இவன் ஊரில் வந்து நிற்கும் நாட்களில் குட்டி போட்ட பூனைபோல இவனையே சுற்றி வருபவனது வரவு இவனுக்கு அவசியமானதாகப்பட அவனைப் பற்றி அதிகம் கேட்கத் தொடங்கியிருந்தான். அவன் வர பிந்தும் ஒவ்வொரு நாளும் தாயைத் தேடும் கன்றுபோல மனம் காரணம் இன்றி தவித்துக் கொண்டிருந்தது.

இப்போது எரிகாயங்களின் வலிக்கு மேலாக மனக்காயங்கள் தரும் வேதனைகள் அதிகம்----மிக அதிகம்.

தன்னைப் பற்றிய சுயஅலசல் எந்தளவு தூரத்திற்கு தான் ஒரு படித்த முட்டாளாக இருந்திருக்கின்றேன் என்பதைக் காட்ட தொடக்கத்திலிருந்தே இந்த பொருந்தாத உறவிலிருந்து தன்னைக் காப்பாற்றத்தான் சின்னானும் தாத்தாவும் முன்றிருக்கின்றனர் என்பதும் புரிந்து போனது.

அவனுக்கு தாத்தாவும் சின்னானும் இறந்தது இன்னமும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

வைத்தியர்களும் அவனுக்கு மன உழைச்சலைக் கொடுக்கும் எந்த செய்தியையும் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்க இவனுக்கோ சின்னான் தீயினுள் புகுந்ததோ தன்னை மீட்டதோ எதுவும் நினைவில் இல்லை.

அவன்தான் சுயஉணர்வு இல்லாது அந்தரத்தில் மிதந்து கொண்ருந்தானே. அந்த மயக்கம் தானே தீ சுடும் போது கூட எழுந்து ஓடி வெளியில் வர விடவில்லை.

எழுந்திருந்தாலும் சுலபமாக வெளியில் வந்திருக்க முடியாதே! பவதியும் கணேசனும் இவனை அந்த அறையினுள் வைத்து பூட்டியிருந்தனர்.

அறையைப் பூட்டியது பவதியின் வேலை. அதில் கணேசனின் பங்கு எதுவும் இல்லை. இவன் தீயிலிருந்து தப்பிப் போக எந்த வகையிலும் இடம் அளித்துவிடக்கூடாது என்பதில் பவதி உறுதியாக இருந்தாள்.

தனது நிலையைப் பார்த்தால் தாத்தா தாங்கமாட்டார் என்பதை வலியுடன் உணர்ந்தவன் அவனாகவே அவரை ஹாஸ்பிட்டலுக்கு வர அனுமதிக்க வேண்டாம் என்றுவிட கந்தவேள் அழகருக்கு நிம்மதிக்குப் பதிலாக மனதில் பாரமே ஏறி அமர்ந்து கொண்டிருந்தது.

சின்னானுக்கு ஏதேனும் நிகழ்ந்திருக்குமோ என்ற சந்தேகம் கூட இந்த நிமிடம் வரையில் அழகனுக்கு வரவில்லை.

தீக் காயத்தால் அவனுக்கு பல பக்கவிளைவுகள் ஏற்பட்டிருக்க அவனை லண்டனுக்கு அழைத்துச் சென்று மருத்தும் பார்க்க முடிவு செய்த கந்தவேள் அழகர் மகனையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு லண்டன் புறப்பட்டுப் போனார்.

பலதடவை அவனைப் பார்க்க முயற்சி செய்தும் அவன் மறுத்து விட்டதால் ஹாஸ்பிட்டல் வாசலே கதியென இந்த மூன்று மாதமும் இருந்து கொண்டான் மூர்த்தி. அவன் வாழ்க்கையிலும் ஆயிரம் குளறுபடிகள்.

அழகன் லண்டன் போன பின்னரே தனக்கு வீடு என்ற ஒன்று இருக்கு. வேலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் வந்திருக்க வீட்டிற்கு வந்த மூர்த்தியிடம் செந்தாமரை அன்று அழகனுக்கு நடந்தவைகளைப் பற்றிச் சொல்லிவிட தனது தாய்தான் சின்னானுக்கு தகவல் சொல்லி அழகனைக் காப்பாற்ற உதவினாள் என்பதையும் அறிந்து கொண்டான்.

தங்கையை நினைக்க நினைக்க மனம் கொதித்துக் கொண்டு வந்தது. உண்மையில் அவள் அழகன் மேல் எந்தவித நேசமும் கொண்டிருக்கவில்லை என்பதும் அவனை மணந்து கொண்டால் வசதியான வாழ்வும் போனஸாக அழகான கணவனும் கிடைப்பான் என்பதும் தான் அவளது எண்ணமாக இருந்திருக்கிறது என்பதை சந்தேகம் இன்றிப் புரிந்து கொண்டான்.

பவதியும் மூர்த்திமேல் கொலைவெறியில் இருந்தாள். இவன் கடந்த மூன்று மாதமும் ஹாஸ்பிட்டல் வாசலில் தவம் இருந்தது ஊர் முழுவதும் பேச்சாக இருக்க அழகனைச் சாகவிடாது தடுத்தது இவன்தான் என்பது போல ஆத்திரத்துடன் தாய் வீட்டிற்கு வந்தாள்.

அவளிடமும் கணேசன் மற்றும் நாகராசனிடமும் வகையாக மாட்டிக் கொண்ட மூர்த்தி தாய்க்கு எந்த நேரமும் பிரசவம் ஆகலாம் என்ற நிலையில் இருந்தபோதும் இவர்கள் தரும் நச்சரிப்பு தாங்க முடியாமால் ஊரைவிட்டுக் கிளம்பிப் போனான்.

அதுவும் வெள்ளைக்காரியை கல்யாணம் முடித்ததும் அல்லாமல் அவளுடன் ஒழிச்சு ஒழிச்சு குடும்பம் நடத்துவதாக அபவாதம் சொல்ல இவன் திகைத்துப் போனான்.

எமிலியைப் பற்றி இவளுக்கு எப்படித் தெரியும் என்பதே இவனது சிந்தனையாக இருக்க எல்லா சந்தேகங்களுக்கும் விடை கணேசனிடமிருந்து வந்தது.

நான் திருடன், பொறுக்கி எல்லாம் சரிதான். நீ மட்டும் யோக்கியமோ? புள்ள இரண்டு வயசுக்கு வளர்ற வரைக்கும் எல்லாத்தையும் மூடிமறைச்சு இருந்த நீ ரொம்ப பெரிய ஆசாமி தான் என்றவனிடம் “உளறாதடா முட்டாள்!” என்று சீறியவனுக்கு “உன்ரை பெண்டாட்டிதான் இங்கின வந்தாளே புள்ளயோட” என்றுவிட தன்னுடைய நேர்மையை எமிலி சந்தேகப்பட்டுத்தான் வந்திருக்கிறாள் என்று தோன்ற பதறி போனான்.

இவர்களுக்கு பதில் சொல்லவும் தோன்றவில்லை அவனுக்கு. உண்மையைச் சொன்னாலும் இவர்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை என்பதால் மௌனமாகவே நின்றிருந்தான்.

எமிலியிடம் பணத்தை வாங்கியவன் திரும்பவும் வேலைக்குப் போகாமல் இருந்துவிட பலதடவை இவனுக்கு கடிதங்கள் எழுதியும் இவனிடமிருந்து பதில் வராததால் இவனுக்கு என்னதான் நடந்ததோ என்று பயந்தவள் தனது இரண்டு வயது மகன் வில்லியத்துடன் அழகர்புரம் வந்திருந்தாள்.

அவளையும் அவளது மகனையும் பார்த்த இவனது வீட்டினர் அவளை இவன் திருமணம் செய்து கொண்டிருக்கிறான் என்று நினைத்து விரட்டிவிட, யாரிடமும் பேசிப் புரியவைக்க அவள் அறிந்திருந்த தமிழ் போதுமானதாக இருக்காமலிருக்க, என்ன செய்வது என்று புரியாதவள் மனவருத்தத்துடன் சைட்க்கு திரும்பியிருந்தாள்.

ஊரைவிட்டு கிளம்பும்போதே இனிமேல் இந்த ஊர் எனக்கு வேண்டாம் என்ற முடிவுடனேயே புறப்பட்டவன் நேராக எமிலி தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்திருந்தான்.

வந்தவனின் தோற்றம் அவனது மனஉழைச்சலைச் சொல்லிவிட அவனுக்கு உணவைத் தந்தவளிடம் “மேடம்! சாரி” என்று தொடங்கியவன் ஆங்கிலத்தில் தான் பட்ட அவலங்களை அவளிடம் சொல்லி மன்னிப்பை மீண்டும் மீண்டும் யாசிக்க அவனைச் சந்தேகப்பட்டு பார்க்க வரவில்லை என்றவள், “நீ ஏதோ கஸ்டத்தில் இருக்கிறாய் என்பது புரிந்தது அதுதான் உன்னை பார்க்க வந்தேன். எனக்கு உனது குடும்பத்தினரிடம் பேசிப் புரிய வைக்க முடியவில்லை” என்றாள் வருத்தத்துடன்.

அவள் தன்மீது கொண்ட நம்பிக்கையைக்கூட தனது வீட்டவர்கள் வைக்கவில்லையே என்று வருத்தப்பட்டவன் தனக்கு மீண்டும் வேலை கிடைக்க உதவி செய்யமுடியுமா? எனக்கேட்க சற்றுத் தயங்கியவள் அவனது வேலைக்கு தன்னால் உதவ முடியாதென்றும் தனது ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதால் தான் ஊர் திரும்புவதாகவும் தெரிவித்ததுடன் தனக்கு தரவேண்டிய பணம் தொடர்பாக கவலைப்பட வேண்டாம் என்றவள் வில்லியத்தை தான் தத்து எடுக்கப்போவதைப் பற்றியும் தெரிவித்திருக்க அவளது பரந்த மனம் இவனை நெகிழச் செய்திருந்தது.

வில்லியம் இவளது தோழியின் மகன். விடுமுறையைக் கழிக்க வந்த இடத்தில் நேர்ந்த விபத்தில் இவளது தோழியும் அவளது கணவனும் இறந்துவிட காப்பாற்றப்பட்ட ஆறுமாத குழந்தை இவளின் பாதுகாப்பில் இன்று இரண்டு வயதில் இவளைத் தாயாக எண்ணியே வளர்ந்து வருகின்றான்.

பொதுவாக சுதந்திர வாழ்க்கையை விரும்பும் வெள்ளைக்காரர் மத்தியில் தோழியின் மகனுக்குத் தாயாக மாறியவள் வியப்பினை இவனுக்கு ஏற்படுத்தியிருந்தாள்.

தான் வசிக்கும் வீட்டிலேயே அவனுக்கு இடம் தந்தவள் தான் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னரும் அவன் தொடர்ந்து அதேவீட்டில் சில மாதங்களுக்குத் தங்கியிருப்பதற்கு தேவையான பணத்தை முன் பணமாக வீட்டு உரிமையாளரிடம் தந்து தான் அவனுக்கு ஒரு நல்ல தோழி என்பதையும் புரிய வைத்து விட்டே நாட்டிற்குத் திரும்பிச் சென்றாள்.

வீட்டை வெறுத்து, உறவுகளை வெறுத்து பணம் என்ற ஒன்றே குறியென்று உழைக்கத் தொடங்கியிருந்தான் அவன்.

அவனுக்கென்று சில கடமைகள் இருக்கின்றனவே. அம்மாவை அவன் கைவிட முடியுமா? அம்மாவையும் பிறக்கப்போகும் சிசுவையும் பராமரிக்க பணம் வேண்டுமே!

இவர்களது குடும்பத்தில் வந்து மாட்டிக்கொண்ட இன்னொரு ஜீவன் செந்தாமரை. இவனது உடன்பிறவா தங்கை, அவள் பெற்ற மகன் இவர்களுக்கும் அவன் பணம் அனுப்ப வேண்டுமே!

தனது சம்பள பணத்தில் கணிசமான தொகையை ஊரில் இருக்கும் தபால்காரரான மயிலனுக்கு மணி ஆர்டராக அனுப்பி வைத்துக் கொண்டிருந்தவன் தவறியும்கூட தனது புதிய முகவரி, வேலை செய்யும் இடம் இவைகளைப்பற்றி யாருக்கும் அறிவிக்கவில்லை. அந்தளவிற்கு மனம் வெறுத்துப் போயிருந்தான்.

அழகன் ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேறிய அன்று அவனை தூரத்திலிருந்து பார்த்தவன் மனதளவில் மரித்துப்போனான்.

தலையில் முடி எல்லாம் எரிந்து போயிருக்க முகம் ஒருபுறம் இழுத்தது போலிருக்க அவன் தோற்றம் இவனைப் பாடாய் படுத்தியது.

தன்னைப் போல் ஒருவனை நண்பனாகப் பெற்றதற்கு அவனுக்கு தானும் தன் குடும்பமும் செய்த கைமாறு பெரிதுதான் என்று மனம் வருந்தியவன் தன்னை அழகர்புரத்திலிருந்து வேரறுத்துக் கொண்டான்.

தான் மட்டும் நண்பனாக அவனது வாழ்வில் குறுக்கிடாது இருந்திருந்தால் இவனின் தங்கையை அவன் எங்கே பார்த்திருக்கப் போகிறான்?

அழகன் குடும்பத்திற்கு எப்படி நன்றிக் கடன் தீர்ப்பது என்பது பற்றியே நாளும் பொழுதும் அவன் சிந்தித்துக் கொண்டிருக்க விதி அவனுக்கான சந்தர்ப்பத்தை உடன் தரவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தபோது அவன் விட தயாராக இருக்கவில்லை.

சொந்த பந்தங்கள் அனைவரையும் எதிர்த்து பாசத்திற்காக தனது வாயை அடகு வைத்து நன்றிக்காக தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தே முடித்திருந்தான்.

பவதியோ தன் வாழ்க்கையை ஆர்ப்பாட்டமாக வாழ ஆரம்பித்திருந்தாள். சுந்தரம் தன்னை கஸ்டப்பட்டு உயர்த்திவிட்ட தாய் தந்தையையும் சகோதரர்களையும் மனைவிக்காக உதறியவன் பவதியே கதியென்று இருக்க மகனின் திருமணத்தைப் பற்றி பேச வந்த வடிவேல் அழகரும் இறந்து போனதால் நியாயம் கேட்பதற்கு ஆளில்லாமல் போயிருந்தனர் இரத்தினம் குடும்பத்தினர்.

திருமணம் முடித்த அடுத்த மாதமே சுந்தரத்துடன் தனிக்குடித்தனம் சென்றிருந்தவள் தாயின் பிரசவசெய்தியைக் கேட்டபின் தனக்கு பிடிக்காது விட்டாலும் தான் ஒரு அரச ஊழியனது மனைவி என்ற பெருமையைக் காட்ட ஊருக்கு வந்திருந்தாள்.

மூடப்பட்டிருந்த பெரியவீட்டை பார்த்த போது அளவில்லா திருப்தி அவளுக்கு ஏற்பட்டிருந்தது. அழகன் சாகாது பிழைத்துவிட்டான் என்று தெரிந்த நேரத்திலிருந்து மனதோடு புளுங்கியவள் மூர்த்தி ஊரில் இல்லாததால் தன் கோபங்களை எல்லாம் தாயிடம் காட்டிக் கொண்டாள்.

அவளை எரிச்சலடைய செய்யவென்றே திருடச் சென்ற இடத்தில் நாகராசனும் கணேசனும் வசமாக போலீஸாரிடம் மாட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டதும் அவர்கள்மீது இருந்த பழைய கேஸ்கள் எல்லாம் மீண்டும் விசாரணைக்கு வர பல வருடங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருந்தனர் இருவரும்.

அழகனைத் தனிமைச் சிறையில் வாட விட்டவர்கள் தாங்களாகவே தங்களுக்கான தீர்ப்பை தேடிக் கொண்டிருந்தனர்.

இன்று

லயா இரண்டு வாரத்திற்கு மேல் தனது மொபைலை ஆன் செய்யாதிருக்க அவளது நட்பு வட்டத்திற்கு அவளுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போயிருந்தது.

அதிலும் அவள் ஜப்பானிய நிறுவனம் நடத்திய நேர்முகத் தேர்விற்கு வராது விட்டது அவளது பேராசிரியர்கள் மட்டத்தில் பெரும் அதிருப்தியை தோற்றுவித்திருந்தது.

அவளது ப்ராஜெக்டிக்கு சூப்பவைஷராக இருந்த பேராசிரியர் பலதடவை இவளுக்கு அழைப்பை ஏற்படுத்தியும் இவள் போனை எடுக்காது விட்டதும், இவள் தனக்கு மீண்டும் அழைக்காததும் அவருக்கு கவலையை ஏற்படுத்தியிருந்தது.

அவருக்கு மட்டும்தான் இவள் அந்த ப்ரஜெக்ட்டிற்காக பட்ட கஸ்டங்கள் அத்தனையும் தெரியும் என்பதால் இவளுக்க ஏதோ ஒரு நெருக்கடி என்பதை உணர்ந்து கொண்டவர் பல வழிகளிலும் இவளைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் பயன்தான் பூச்சியமாகப் போயிருந்தது.

இவளது வீட்டு முகவரிக்கு பதிவுத் தாபால் ஒன்றை ஹெச். ஓ. .டீ அனுப்பியிருக்க இவளது அக்காக்கள் அதனை திறந்தும் பார்க்கவில்லை.

டிப்பார்ட்மென்டைப் பொறுத்தவரை இவள் ஒரு பொறுப்பற்ற மாணவி என்ற கருத்தே வந்திருந்தது. அதுவும் பிறசன்டேஷன் செய்யும் நேரத்தில் ஜப்பானிய நிறுவனத்தினைப் பிரதிநிதித்துவபடுத்திய குழுத்தலைவர் இவளைப் பற்றிக் கேட்டது ஹெச்.ஓ.டியை எரிச்சலூட்டியிருந்தது. டிபார்ட்மென்டின் நற்பெயருக்கு இவளால் களங்கம் ஏற்பட்டதாகவே அனைவரும் கருதினர்.

அவளுக்கு ஏதாவது வெளியில் சொல்ல முடியாத தடங்கல்கள் ஏதும் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இவளது சூப்பவைஷருக்கு வந்திருக்க இவளது தோழிகளிடம் விசாரித்து இவளுக்கத் திருமணம் ஆனது முதல் கணவன் சாதாரண மெக்கானிக் என்பது வரை அவர் அறிந்திருந்தார்.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல இவளிடம் எக்ஸ்பிலனேஷன் கேட்டு ஹெச். ஓ. டி ஈமெயில் அனுப்பியிருக்க கடந்த இரண்டு வாரமாக தனது மொபைல் லாப்டாப் எல்லாவற்றையும் ஆஃப் பண்ணி வைத்திருந்தவளுக்கு அவை தொடர்பாக எதுவும் தெரிய வரவில்லை.

இன்று தனது மொபைலை எடுத்து அதை ஆன் செய்ய அதில் நூற்றுக்கு மேற்பட்ட மெசேஜ்களும் மிஸ்ட் கால்களும் இருக்க தன்னை மீறி கண்ணீர் வழியத் தொடங்கியது. அவளுக்கு வந்திருந்த ஈமெயில்கள் வேதனையின் உச்சத்திற்கே அவளைக் கொண்டு சென்றன.

அதுவும் ஹெச். ஓ. டி அனுப்பிய விளக்கம் கோரும் கடிதம் இத்தனைநாள் உழைத்த அத்தனை நற்பெயரையும் தான் இழந்து விட்டேன் என்பதை அவளுக்குப் புரிய வைத்திருந்தது.

எல்லா துன்பத்தையும் கடந்து வந்துவிட்டேன் இனி ஒரு தடவை இதைப்பற்றி நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்று நினைத்திருந்தாலும் நல்ல மாணவி என்ற பெயர்கூட மறைந்து போய்விட்டதே என்று எண்ணி சத்தமின்றி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவள் தன்னைமீறி கேவி விட ஹாலில் தனது லாப்டாப்பில் ஆடிட்டரது றிப்போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவின் காதில் துல்லியமாக அது கேட்டிருக்க ‘இன்றைய நாளுக்கு என்ன ஏழரையை வெச்சிருக்கிறாளோ! என்று சலித்தவன் எழுந்து அவளிருந்த அறைக்குள் வர, மொபைலைப் பார்த்தபடி அழுது கொண்டிருக்கிறாள் என்பது புரிந்த கணம் மௌனமாக திரும்பி தானிருந்த இடத்திற்கு மீண்டும் வந்து அமர்ந்து கொண்டான்.

அவள் அழுகை அவனைக் கரைக்கத் தொடங்கியிருந்தது. அவன் அவளுக்குக் கொடுத்த தண்டனை அவனது கோபம் ஆற்றாமையின் விளைவு தான்.

சொத்தை சாக்காக வைத்து அவளது குடும்பம் அவனுக்குத் தந்த பல்வேறு குடைச்சல்களுக்கு அவன் கொடுத்த ஷாம்பிள் தண்டனைதான் அது. போராட வேண்டிய களத்தைவிட்டு தன்னிடம் அகந்தையைக் காட்டி மிரட்டியதற்கு அவன் கொடுத்த சாட்டை.

ஆனால் அழுகிறாளே-------நான் இவள் செய்த வேலைகளுக்கு எல்லாம் அழுவது என்றால் எங்குபோய் முடியும்?

அவன் பக்கம் இருந்த நியாயங்கள் மௌனமாக நின்று வேடிக்கை பார்க்க, அவள் தொடர்ந்து அழுது கொண்டிருப்பது மனதைப் பிசைய, அவளது நிலைமை இவனுக்குப் பாவமாக இருந்தது.

இப்போ போய் ஏதாவது சொன்னால் மீண்டும் சண்டைக்கோழிபோல சிலுப்பிக் கொண்டு சண்டைக்கு வந்துவிடுவாளோ என்ற பயமும் சேர்ந்தே அவனுக்கு வந்திருந்தது.

இந்த அழுமூஞ்சி சூழலைவிட்டு வெளியில் போனால் தேவலை என்று தோன்ற சட்டை அணிந்தவன் பைக்சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அந்த நிலைமையில் அவளைத் தனியே விட்டுச் செல்லவும் தயக்கமாகவே இருக்க பைக்கிற்கு பக்கத்தில் போய் நின்று கொண்டான்.

ஒரு தடவை இதே காரணத்திற்காக கிணற்றினுள் குதிக்க சென்றவளை எப்படி தனிமையில் விட்டுச் செல்வது? இந்த கிறுக்கச்சி அழுது முடித்து அடுத்த கட்டமாக கிணற்றுக்குள் குதிக்க மாட்டாள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாததால் வீட்டிற்கு வெளியில் வந்து நின்றவனுக்கு பொறுமை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

சாதாரணமாகவே அவனுக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம். இவள் அவனின் பொறுமையின் எல்லைகளைப் பலநாள் தொட்டதன் விளைவுதான் அவளை நேர்முகத் தேர்விற்குப் போகவிடாது அவன் வீட்டுக்குள் வைத்துப் பூட்டியது.

இரவு முழுவதும் அழுது கொண்டே இருப்பாளோ!!! ஐயோ ராமா!! என்ன இழவடா இது? பேசாமல் இவளைக் குண்டுக்கட்டா தூக்கிப்போய் இவள்ட அம்மாவீட்டில் போட்டிருவோமா?

அன்று வந்த அதே எண்ணம் மீண்டும் இன்று வர அவள் வீட்டில் இல்லாமல் மறுபடியும் தனிமையில் வாடுவதை மனதின் மறுபகுதி எதிர்க்க, தலையை அழுத்திக் கோதியவன் சட்டென அவள் இருந்த அறையின் உள்ளே வந்து “இப்போ யார் மண்டையை போட்டது? எதுக்கு றூமைக் கழுவுறாய் நீ?” என்று கேட்க இவன் குரலில் மண்டிக்கிடந்த எரிச்சலைப் பார்த்தவள் ஆ---என சத்தமாக அழத்தொடங்கினாள்.

“ஏய் ப்ரியா ரொம்ப ஓவராதான் போறாய்டி. அடிச்சு பல் எல்லாம் களட்டிடுவன் கம் என்று கிட” என்று உறும அவள் இன்னும் சத்தமாக அழ------கண்களை இறுக மூடி ஒரு கணம் தன்னைச் சமநிலைப்படுத்தியவன் என்னதான்டி உன்ரை பிரச்சினை? சொல்லிட்டு அழு! என்று வலிந்து வருவிக்கப்பட்ட நிதானத்துடன் கேட்க

“மொபைலிலை மெசேஜ் வந்திருக்கு என்று மொட்டையாகச் சொல்ல—

“இந்த சனியனாலதான் இவ்ளோ பிரச்சினையா?” என்றவன் சட்டென்று அவள் கையிலிருந்த போனை பறித்து நிலத்தில் சிதறு தேங்காய் உடைத்ததுபோல உடைத்தவன் “இனி மெசேஜ் எதுவும் வராது” என்றுபடி வெளியேறினான்.

அவளது ஆப்பிள் போன், அப்பா வாங்கிக் கொடுத்தது. ஓவர் சென்டிமென்ட் உடன் ஒட்டியபடியே இருக்கும் அதை அவன் உடைத்துவிட அழுவதை மறந்து அவனையே பார்த்தபடி இருந்தாள்.

அறையைவிட்டு வெளியில் வந்தவன் இன்னும் சில நிமிடங்களில் போனுக்காக தன்னுடன் அவள் சண்டைபோட வருவாள் என்று பார்த்திருக்க அவள் வரவும் இல்லை உடைந்து துண்டு துண்டாகப் போயிருக்கும் போனை எடுத்து பார்க்கவும் இல்லை.

விஷ்ணு மீண்டும் அந்த அறையினுள் வந்து அவளைப் பார்த்ததையோ தான் அடித்து நொருக்கிய போனை எடுத்துச் சென்றதையோ அவள் அறியாள்

போனினது நிலை படு மோசமாக இருக்க அவளது சிம்மை தனது போனுக்கு மாற்றியவன் மறுபடியும் தனது பழைய நோக்கியா போனுக்கு மாறியதோடல்லாது காலையில் அவள் எழுந்து வர தனது புதிய போனை அவளது கையில் வைத்தான்.

“யார் அழுதாலும் எனக்கு பிடிக்காது” சும்மா ஙொய் ஙொய் என்று உயிரை எடுக்காதை சரியா! என்றவன் இங்க இருக்க அழுகைவருது என்றால் உன்ரை வீட்டுக்குப் போகப்போறியா? என்று கேட்க

ஓஹ்! அந்தாள் என்னை டைவர்ஷ் பண்ணு என்று சொல்லுறார். நீ இன்னொரு டிசைனில உன்ரை வீட்டுக்குக் போ என்கிறாயோ என்று நினைத்தவள் எனக்கு புரியமாட்டேங்குது

எது என்ரை வீடு ?------இது தானே என்ரை வீடு. நான் எதுக்கு மற்றவங்க வீட்டுக்கு எல்லாம் போகணும்? என்றவள் வைஃபை அழாம வெச்சிருக்கிறவன் தான் நல்ல புருஷன். அழவெச்சிட்டு அம்மா வீட்டிற்கு அனுப்பி விடுறவனுக்கு பே - (டாஷ்)_ னி என்றுதான் பெயர் என்று ஒரே போடாக போட்டுவிட

பே - (டாஷ்)_ னி அப்டி என்றால்? என்றவனுக்கு பேமானி என்று விளக்கம் தந்தவள் நீ எல்லாம் எனக்கு புருஷோத்தமன் என்று வெளியில் சொல்லிடாதை!

அவள் சொன்ன புருஷோத்தமன் என்ற வார்த்தை அவனை அறியாது ஒரு இதத்தைத் தந்திருக்க இதழ்பிரியா புன்னகையுடன் அவள் நேற்றிரவு அழுததற்கான காரணத்தைக் கேட்டவனிடம் முறுக்கிக் கொண்டு போகாது உண்மையான காரணத்தை சொன்னவளிடம் முடிஞ்சு போன விசயத்தை திரும்பவும் தொடக்கி வைக்க வேணாம் என்றவன்

“உன்ரை படிப்பை பற்றி எனக்கு என்ன தெரியும்?” எக்பிலனேஷன் கேட்டா மெடிக்கல் றீசன் தான் சொல்ல வேணும் என்றபடி போக----இவனுக்கு இதெல்லாம் எப்டி தெரியும்? என்று மலைத்தவளுக்கு அவனும் வெளிநாட்டில் சில வருடங்கள் வேலை பார்த்தவன் என்பது தெரிந்திருக்கவில்லை.

அவன் என்ன படித்திருக்கிறான் என்பதில் மட்டுமே தெளிவுவாக இருந்தவள் பத்தாம் வகுப்பிற்கு பின்னர் ஏதாவது தொழில் நுட்ப கல்வி கற்றிருக்கின்றானா? எப்டி ஆடிட்டர் றிப்போட் எல்லாம் படிக்கிறான் ஏதாவதுபுரியுமா என்ன?

அவளின் பார்வையில் அவன் ஒரு புரியாத புதிர். மறுபடியும் அவன் அருகில் வந்தவள் விஷ்ணு! எனக்கு மெடிக்கல் சர்டிபிக்கட் எடுத்துத் தாரியா? என்றுவிட “சரி! பார்க்கிறேன்” என்றவன் கடைக்குச் சென்று சில மணி நேரத்தில் கர்மசிரத்தையாக இவனது கடைக்கு பக்கத்தில் கிளினிக் நடத்தும் டாக்டர் சத்தியமூர்த்தியிடம் சென்று இப்டி----இப்டி---அவள் நேர்முகத் தேர்வுக்கு போகமுடியாமல் போச்சுது டிபார்ட்மென்ட் ஹெச். ஓ.டீ எக்ஸ்பிலநேஷன் கேட்டிருக்கிறார் என்று சொல்ல அந்த விஷமம் பிடிச்ச மனிஷன் கொடுத்த மெடிக்கல் சர்ட்டிபிகேட் இருக்கும் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று பார்க்க அது இன்னொரு பிரச்சினைக்கு தொடக்கவிழா ஏற்படுத்தியிருந்தது.







 
Last edited:
Top