sanchumahen
New member
அவளது வீட்டிலிருந்து வெளியே வந்தவன் காலினால் எத்தி தான் கட்டியிருந்த பட்டு வேட்டியின் முனையினைப் பிடித்து அதனை முட்டிக்கு நேரே மடித்துக் கட்டிக்கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினான். மனம் ரணமாக வலித்தது. இன்று காலையிலிருந்தே அவளது தாய் முதல் அந்த குரு அண்ணாவரை அவனை நடத்திய விதம் வருத்தப்பட வைத்திருந்தது.
நட்பு உறவு என்று யாருமற்றவன். கராஜ்ஜில் உடன் வேலை செய்பவர்களையும் நெருங்கிய நட்பு வட்டத்தில் சேர்த்து வைத்துப் பழகியதில்லை உடன் வேலை செய்பவர்கள் என்பதனால் சுமூக உறவு இருந்தது ஆனால் தனது சுகதுக்கங்களை யாருடனும் பகிர்ந்து கொண்டதில்லை.
எதையாவது அடித்து நொருக்கினால் தேவலாம் போல இருந்தது. அத்தனை ஆத்திரத்தினையும் நடையில் காட்டி ஜெட் வேகத்தில் நடக்கத் தொடங்கினான்.
பார்வதி அம்மாவின் அதிரடி நடவடிக்கைகளால் பயந்து போன லயா அவர் தாலியில் கைவைத்ததும் அப்பாவிற்கு தான் செய்து கொடுத்துள்ள சத்தியத்தினாலோ இல்லை சத்தியத்தை மறுதலிப்பது பாவம் என்று எண்ணியதாலோ அல்லது இயல்பாகவே தமிழ் பெண்களுக்கு வரும் தாலி சென்டிமென்ட் காரணமாகவோ அவரது கையை தட்டிவிட்டவள் பெரியம்மா தயவு பண்ணி விளையாடதையுங்கோ என்றபடி திரும்பிப் பார்க்க அங்கு விஷ்ணு இருக்கவில்லை.
தன் மனப்போராட்டங்கள் தந்த அழுத்தத்தில் அவன் வீட்டை விட்டு வெளியேறியதைக்கூட அவள் அவதானித்தாளில்லை. ஆனால் மரணத்தின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு புனர்ஜென்மத்திற்காக காத்திருக்கும் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியம் முன்வந்து தான் போகவேண்டிய பாதையை தெளிவாக்க தனது விருப்பு வெறுப்புக்களை உதறித் தள்ளியவள் அவன்போன பாதையை நோக்கி விரைந்தாள்.
ஆனால் அவனைப் பிடிக்கத்தான் முடியவில்லை. அவ்வளவு விரைவாக அவன் போய்க் கொண்டிருந்தான். தன் காலம் முழுமைக்கும் இப்படித்தான் அவனைப் பிடிக்க முடியாமல் தவிக்கப் போவதற்கான ஒத்திகைதான் அது என்பதை அறியாதவள் அவனது வேகத்திற்கு ஓரளவிற்காவது ஈடுகொடுத்து ஓடமுனைந்தாள் அவனைப் பிடித்துவிடும் நோக்கில்.
கடந்த மூன்று மாதமாகப் அந்த நகரில் இருக்கும் வர்த்தக சமூகத்தில் பேசுபொருளாக ஆகியிருந்தவன்------அன்று அவனுக்குத் திருமணம் என்ற செய்தி ஓரளவிற்கேனும் பலருக்கும் தெரிந்திருக்க அவன் இதுவரை அணிந்திராத பட்டு வேட்டி சட்டையுடன் காலில் செருப்புக்கூட அணியாமல் தகிக்கும் மதிய வெய்யிலில் அந்த தார் றோட்டில் நடக்க அவனுக்குப் பின் பட்டுப்புடவையும் புதிய தாலியுமாக அவள் பின் ஓடிவர சென்றது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
முதலில் அவனை பிடித்துவிட வேண்டும் என்று ஓடிவந்தாலும் அந்த பிரதான வீதியில் பாதணிகூட அணியாது பாதங்கள் வெய்யிலில் பொசுங்க நடப்பது அவளுக்கு தாங்கொணா துக்கத்தையும் அவமானத்தையும் வேதனையையும் தந்திருந்தது.
வீட்டிற்குள்ளேயே பாதணியுடன் நடக்கும் அவளுக்கு தெருவில் இறங்கினால் காரிலும் ஸ்கூட்டியிலும் மட்டுமே பயணப்பட்டுப் பழக்கப்பட்ட அவளுக்கு இந்த நிலையைச் சமாளிக்கும் வகைதான் தெரியவில்லை.
அவனுக்கும் அவளுக்கும் இடையிலான தூரத்தை முடிந்தளவு குறுக்கிக் கொண்டு வேகமாக ஓடியும் நடந்தும் வந்தவள் நகரத்தின் எல்லைதாண்டி அந்த தோட்ட வெளியை ஊடறுத்துச் சென்ற பிரதான வீதியூடாக வந்த அவனைக் காணாது திருவிழாவில் பெற்றோரைத் தவறவிட்ட குழந்தை போல ஒருகணம் தவித்தாலும் கண்களை நான்கு புறமும் சுழற்றி அவன் போகும் வழியைக் கண்டவள் அவனைப் பின்தொடர்ந்து வந்தாள்.
அவளுக்கு அடுத்த கட்ட அதிர்ச்சியைத் தருவது போல வேலியோ அல்லது மதிலோ ஏதுமற்ற வீடு என்று சொன்னாலும் நம்ப முடியாத ஒரு சீமெந்து கட்டிடத்தினுள் அவன் நுழைவதைக் கண்டவள் அதனூடே புகுந்து அவன் மறுபுறமாக தனது நடையைத் தொடரப்போகிறான் என்றே நம்பினாள். அவன் உட்புகுந்த சில நிமிடங்களின் பின்னே அந்த கட்டிடத்தின் வாசலுக்கு வந்தவள் நிலைகுலைந்து தான் போனாள்.
பத்துக்கு பதினொன்று என்ற கணக்கில் நீள அகலமான ஒரு அறையும் மூன்றடி உயரமான சுவரில் இரும்பு நெற் அடித்திருந்த எல் வடிவமான ஒரு ஹாலும் உள்ள ஒரு கட்டிடம் அது. அந்த ஹாலின் கதவுகூட அதே நெற்றினால் அடிபட்டிருக்க ஒரு இரும்புச் சங்கிலியும் அதில் தொங்கிக் கொண்டிருந்த பட்லாக்கும் அதை திறந்து அவன் உள்ளே வந்திருக்கின்றான் என்பதைக் காட்ட உள்ளிருந்த அறையின் திறந்திருந்த மரக் கதவு அவன் அறையின் உள்ளே இருக்கின்றான் என்பதைக் காட்டியது.அந்த வீட்டின் உயரம் பத்து அடிகள் இருக்கக்கூடும். சமையல் அறை என்ற ஒன்றே அங்கு இல்லை.
இது ----வீடா? இங்குதான் அவன் இருக்கின்றானா??? இவன் இருக்கும் இடத்தில்தான் நான் இருக்க வேண்டும் என்று அப்பா சொன்னாரே--------இதெல்லாம் அப்பாவிற்குத் தெரியாதா????
இரண்டு பிளாஸ்டிக் கதிரைகள் அந்த ஹாலில் இருக்க அவன் வாழும் இடத்தைப் பார்த்தவள் திகைத்துப்போய் வீடு என்று அவளால் கனவில்கூட நினைக்கமுடியாத அந்தக் கட்டிடத்தின் முன் நின்றிருந்தாள். அவளுடைய வீட்டில் சமையல், தோட்டவேலை செய்பவர்களுக்கு அவளுடைய தாத்தா கட்டிக்கொடுத்த அவுட் கவுஸ் இதைவிட பன்மடங்கு பெரியது.
அவளுடைய தாத்தா அவ்வளவு வசதியானவராக இருக்க அவரது மகள் ----இவனது அம்மா ------ஏன் இப்படி?????
பெரியம்மா தான் சொன்னாவே இவனது அம்மா நடத்தை சரியில்லாத பெண் என்று------அப்பாவும் அப்படித்தானே ஏதோ சொன்னார். பிறகு எதற்கு என்னை இவனுக்குக் கட்டிக் கொடுத்தார்??
இப்படி ஆயிரம் கேள்விகள் அவள் மனதில். அவனைப் பிடிக்கவில்லை. அவனது தொழிலைப் பிடிக்கவில்லை. அவன் இருக்கும் வீட்டை பார்க்கவே பிடிக்கவில்லை----இன்னும் ஏதேதோ-------------ஆனால் அப்பா ------அப்பா சொல்கிறாரே!! என் அப்பா சொல்லி இதுவரை எதையுமே நான் தட்டியதில்லையே----
அப்பா-------- ஏன் அப்பா எனக்கு இப்படி ஒரு வாழ்க்கையைத் தந்திருக்கிறியள்--------தாங்க முடியாமல் இருக்குதே அப்பா-------- நான் உங்களின்ரை செல்ல மகள் லயா இல்லையா??? ஏன் அப்பா இப்படி???? மனதால் ஹாஸ்பிட்டலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அப்பாவுடன் இவள் பேசிக்கொண்டிருக்க--------
உள்ளே சென்றவன் தனது பட்டு வேட்டி சேட்டினைக் மாற்றிவிட்டு கைலி ஒன்றைக் அணிந்து கொண்டு வந்தான். வாசலில் நிழல் ஆடியதால் திரும்பிப் பார்த்தவன் கண்களில் எதுவும் செய்யத் தோன்றாது விறைத்துப்போய் நின்றவள் பட்டாள்.
ஒரு தடவை தனக்குப் பின்னே அவள் வந்தது மனதில் சிறு மகிழ்ச்சிப் பொறியை ஏற்படுத்தினாலும்-----காத்திருந்தவன் பெண்டாட்டி ------நினைவில் வந்து கதவடைப்புச் செய்ததால் பொங்கியெழுந்த ஈகோ அவளை வா----என்று அவனை அழைக்க விடாதது மட்டுமல்ல----கண்டுகொண்டதாகக் காட்டிக் கொள்ளவும் விடவில்லை.
இவனுக்குத் திருமணம் என்று மெஸ் வைத்திருக்கும் தவம் அண்ணாவிற்கும் தெரிந்ததால் காலை நேர உணவிற்கு மெஸ்க்குச் செல்ல சங்கடப்பட்டவன் அங்கு செல்லவில்லை என்பதுடன் ரீ கூட குடிக்கவில்லை. பசி வயிற்றைக் கிள்ள தாகம் தொண்டையை வறட்ட மீண்டும் வீட்டினுள்ளே சென்றவன் வாளியையும் கயிற்றையும் எடுத்துக் கொண்டு கிணற்றை நோக்கிப் போனான். வாளியால் தண்ணீரை அள்ளி எடுத்து ஒரு கையால் அந்த நீர் நிரம்பிய வாளியை உயரத்தூக்கிப் பிடித்துச் சரித்து மறு கையை வாயருகே கொண்டு சென்று நீரைக் குடித்து முடித்ததுடன் வாளியுடன் கொண்டு சென்ற சொம்பில் நீரை மொண்டு வந்து அந்த ஹாலில் இருந்த பிளாஸ்டிக் கதிரையில் வைத்தான்.
அந்த தோட்டத்துக் கிணற்றினது குளிர்ந்த நீர் தொண்டை வழியே இறக்கி எரிந்து கொண்டிருந்த வயிறை மட்டுமல்ல நெஞ்சின் வெம்மையையும் குறைக்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவளது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் மட்டுமல்ல அவளது களைப்பையும் புரிந்து கொண்டான்.
இப்போதும் உள்ளே வராது வெளியில் அவள் நிற்பதைக் கண்டு முதல் தடவையாக வாயைத் திறந்து “ உங்களது வீட்டிற்குப் போகப் போகிறாயா? ஆட்டோ பிடிச்சு வரவா?” என்று கேட்டான். அப்போதும் அவளை உள்ளே வா என்றானில்லை. இந்த கேள்வியில் திடுக்கிட்டவள் எதுவும் பேசாது தன்னையறியாமலே வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தாள்.
தயங்கித் தயங்கி உள்ளே வந்தவள் அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டதுமல்லாது அவன் கொண்டு வந்து சொம்புடன் வைத்திருந்த நீரைத் தாகம் தீர கடகட வென்று குடித்து முடித்தாள். அவள் தண்ணீரை அருந்தி முடித்த வேகம் அவளுக்கிருந்த தாகத்தின் அளவைக்காட்ட அவளது வாடிய முகமும் உலர்ந்து போன உதடுகளும் அவளுக்கிருந்த பசியின் அளவைக் கோடிட்டுக்காட்ட ஒரு சேட்டை எடுத்து அணிந்து கொண்டவன் “ஒரு நிமிஷம் இருந்துகொள் வருகிறேன்” என்றபடி வீட்டின் உள்ளே நின்று கொண்டிருந்த அவனது சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு பையில் வழமையாக அவன் ரீ வாங்கும் ப்ளாஸ்க்கையும் எடுத்துக்கொண்டு வெளியில் போனான்.
பிரதான வீதிக்கு அருகில் இருந்ததால் போவோர் வருவோர் எல்லோரும் தன்னைப் பரிதாபத்துடன் பார்ப்பதாக தோன்ற என்ன செய்வதென்று அறியாது தவித்தவளை அந்த மனித சஞ்சாரமற்று இருந்த தோட்டவெளியோ மிரட்டியது. யாருமற்ற அந்த தோட்ட வெளியில் தனித்து இருக்கப் பயந்தவள் வீட்டின் பின்புறம் வந்து நின்று கொண்டாள். அந்த பகுதியில் நின்றிருந்த வாழைமரங்கள் ஓரளவிற்கு மறைப்பை தர அடுத்து என்ன செய்வது என்று தெரியாது மருண்டு நின்றவளுக்கு அதிகரித்துக்கொண்டு சென்ற தன்னிரக்கம் அடக்க முடியாத அழுகை தர கேவிக் கேவி அழுதாள்.

அப்பாவைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று படித்தது------ இன்ஜினியரிங்கிற்கு அனுமதி பெற்றது------- அப்பாவின் மோட்டார் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை தெரிவு செய்தது---- அப்பா பார்த்து தரும் வாழ்க்கையை வாழவேண்டும் என்று நினைத்து தனது வாழ்க்கைப் பாதையைக் கொண்டு சென்றது----- எல்லாவற்றிற்கும் எந்த அர்த்தமும் இல்லாது செய்த இந்த திருமணம் அவள் கனவில்கூட நினைத்துப் பார்க்காதது. இது ஒரு கனவாக இருந்துவிடக்கூடாதா என்று மனம் ஏங்கியது.
தவம் அண்ணாவின் மெஸ்க்கு வந்தவன் வழமைபோல தனக்கான உணவுப் பார்சலையும் அவளுக்கானதையும் வாங்கிக்கொண்டு தான் கொண்டு வந்த ப்ளாஸ்க்கில் ரீயையும் நிரப்பிக்கொண்டு வந்தான்.
வந்தவனை வரவேற்றது அவளது வீறிட்டுக் கத்திய சத்தம் தான். அந்த சத்தம் அவனைப் பதட்டத்திற்கு உள்ளாக்க யாரோ தனியே இருந்த அவளிடம் அத்துமீறி விட்டனரோ என்ற எண்ணத்துடன் பாய்ந்து ஓடி வீட்டின் பின்புறம் வர அவள் கத்தி அழுது கொண்டு ஓடிவந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டாள்.
ஒரு பெண்ணின் முதல் தொடுகை அதுவும் அவனின் மனைவியின் முதற்தொடுகை மின் அதிர்வை உடலில் தோற்றுவித்தாலும் பயந்து வெளுத்திருந்த அவளது முகமும் அவளது பதட்டமும் வேறு எதனையும் விட அவற்றைத் தீர்க்க வேண்டிய அவசியத்தை உணர்த்த “என்னடா? “ என்றான்.
பிடித்திருந்த அவனது கையைவிடாது மறு கையால் அவள் டாய்லட்டைக் காட்ட “என்னம்மா” என்றான் மீண்டும் அவளிடம். ஓவராகத் துடிக்கும் இதயம் நின்றுவிடுமோ என்று அஞ்சியவள் விம்மலின் ஊடே அங்கே----அங்கே வார்த்தை குழற நின்றிருந்தாள்
அந்தச்சூழலில் மனிதர் யாரையும் காணாதவன் பாம்பு எதாவது டாய்லட்டினுள் போய்விட்டதோ என்ற எண்ணத்துடன் பாம்பு நிற்கிறதா? என்றான்.
விம்மிக் கொண்டே இல்லை என தலையசைத்தவளிடம் சினிமாவில் காட்டுவது போல கரப்பான் பூச்சியைக் கண்டு கத்துகிறாளோ என்று நினைத்துக் கரப்பான் பூச்சியா? என்று கேட்க
மீண்டும் இல்லை என தலையை அசைத்தவளிடமிருந்து தனது கையைவிடுவிக்க அவன் முயற்சி செய்ய பயத்தில் முகம் வெளுக்க நின்றிருந்தவள் அப்போதுதான் அவனது கையைப் பிடித்திருக்கின்றேன் என்ற உணர்வுவரப் பெற்று சட்டென்று அவனது கையை விட விரைந்து சென்று பார்த்தவனுக்கு அடக்க முடியாத சிரிப்பு வாழ்க்கையில் முதற்தடவையாக வந்தது.
காலையில் நடந்த கல்யாணமோ கோயிலில் பாடப்பட்ட தேவாரமோ அன்றி திருக்குறளோ இல்லை அவளது அப்பாவின் வேண்டுகோளோ அவனைத் தொட வைக்கவோ அன்றி அவனுடன் பேசவைக்கவோ முடியாத நிலையில் இருக்க "எங்களது ஆளுமையைப் பார் "என்று கெத்துக் காட்டியபடி அந்த டாய்லெட்டின் சுவரில் நின்றிருந்தன இரண்டு கம்பளிப் பூச்சிகள்.
கம்பளிப் பூச்சிகளுக்கா இத்தனை கலாட்டா??? அவனுக்கு அடக்கமுடியாத வியப்பாக இருந்தது. ஆனால் லயா இந்த டாய்லட்டையா நான் இனிமேல் பாவிக்க வேண்டும்? என்ற அச்சத்தில் மீண்டும் அழுகையைத் தொடர டாய்லட்டின் உள்ளே போனவன் ஒரு வாழை இலையைக் கிழித்து அவைகளைப் பிடித்து வெளியில் கொண்டு வந்து எறிந்தான்.
அது சரி! கம்பளிப்பூச்சியைப் பார்த்து ஊரிலை இருக்கிற கிணறு குளத்தை எல்லாம் நிரப்புகின்றாயே இரவில் இந்தப் பக்கமாக வரும் பேய் பிசாசுகளைப் பார்த்தால் என்ன செய்வாய்? என்றான் சிரிக்காமலே.
பேய்------ பிசாசா???? என்று ஒரு கணம் துணுக்குற்றவள் விம்மியபடியே அவன் முகத்தைச் சட்டென்று நிமிர்ந்து பார்க்க அவன் சிரிக்கும் விழிகளுடன் தோளைக் குலுக்கியபடி விலகிச் சென்று அவள் என்ன செய்யப்போகிறாள் பார்த்தபடி நின்றிருந்தான்.
கம்பளிப் பூச்சியைப் பார்த்து அழுததிற்காக அவன் தன்னைக் கலாய்கிறான் என்பது புரிந்தவள் இந்த கிண்டலுக்கு பதில் சொல்ல விரும்பாது முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் கதிரையில் அமர----------
அந்த முகம் திருப்பலில் “காத்திருந்தவன் பெண்டாட்டி---- “ ஒடி வந்து அவனைக் கிள்ளிவிட்டுப் போக அந்த உசுப்பிவிடலில் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி இருந்து கொண்டான்.
சாப்பாட்டுப் பார்சலை அவளின் முகத்தைப் பாராது கொண்டு வந்து அவளுக்கு முன்னே வைத்தவன் சாப்பிடு என்று ஒரு வார்த்தை சொல்லாது நிலத்தில் பாயை விரித்து அமர்ந்து கொண்டு தனது உணவை உண்ணத் தொடங்கினான்.
தன்னை நம்பி வந்தவளை சாப்பிட அழைக்காது சாப்பிடுவது மனதைப் பிசைய கடைச்சாப்பாடு சாப்பிட்டு பழக்கம் இல்லையா? வீட்டிற்குப் போகப்போகிறாயா? என்று மீண்டும் கேட்க அதில் ஆத்திரம் கொண்டவள்-----இப்படிக் கேட்டால் நான் வீட்டிற்குள்ளே வந்தது போல சாப்பிட்டு விடுவேன் என்ற நினைப்பா? மரியாதை தராத வீடுகளில் சாப்பிட்டு எனக்குப் பழக்கம் இல்லை என்று காட்டமாகச் சொல்ல
அப்படியா? என்று பார்வையால் கேட்டவன் உனக்கு மரியாதை தராத வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டுப் பழக்கம் இல்லை எனக்கு என்ரை பத்துவயதில் இருந்து வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டே பழக்கம் இல்லை என்றான் சாதாரணமாக.
சுருக்கென்று வலித்தது அவளுக்கு----வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டுப் பழக்கம் இல்லையாமே--------இவனது அம்மா எப்போ இறந்து போனா? -----பத்தாவது வயதிலா??? அப்போதிருந்தே இந்த வீட்டில் தனியத்தான் இருக்கின்றானா??? பயமாக இருந்திருக்காதா?? மனம் அவன் பற்றிய சிந்தனையில் உழல வாய் உணவை உண்டு முடித்திருந்தது.
அவன் சிவானந்தம் ஆசிரமத்தில் இருந்ததோ இடையில் சில வருடங்கள் டுபாயில் வேலை செய்ததோ எதுவும் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
வீட்டு வாசலில் வந்து ஆட்டோ நிற்க அதிலிருந்து இறங்கிய குருவப்பா அவளது உடைகளை ஒரு றவலிங் பேக்கில் கொண்டு வந்து வைத்ததுடன் "விஷ்ணு கடையை ஒழுங்காகப் போய் பார்க்க வேணும் நீ. பாக்டரி விசயம் இடையிலை நிற்குது ---அது அவன்ரை எத்தனை நாள் கனவு------சுப்புவும் ஹாஸ்பிட்டலில் இருக்கிறான் நீயும் போகாமல் விட்டால் சரிவராது. நாளையில் இருந்து தொழிலைப் பார்" என்று கட்டளையிட--------
நாளைக்கு மாமாவுக்கு ஆப்பிரேஷன் என்று இவன் தொடங்க
போதும் விஷ்ணு. நீ என்ன டாக்டரா? சுப்புவினது குடும்பத்தவர்கள் நிற்பார்கள் தானே நீ எதற்கு? அவன்கூட சுப்புவின் குடும்பம்தான். அதைச் சிறு சொல்லில் கூட ஏற்க மனம் வராதவர் --------
மூத்தமருமகன்கள் இரண்டு பேருமே டாக்டர்கள். அவன்கள் பார்ப்பான்கள். நீ உன்ரை வேலையைப் பார். இது பரம்பரைத் தொழில். இப்படியே சீரழிய விட இயலாது. கூட இருந்து உழைச்சிருந்தால் உனக்குத் தெரிஞ்சிருக்கும் உன்ரை கையில் வந்திருக்கிறதின்ரை பெருமை. தெரியாததாலை இப்படி மாமாவுக்கு ஆப்பிரேஷன் -----மாமிக்கு கோப்பிரேஷன் மற்றவர்கள் எல்லோருக்கும் லிபரேஷன் ------எனக்கு வைபிரேஷன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய்.
நீ கராஜ்ஜிலை எடுபிடிக்கு நிற்கத்தான் சரிப்படுவாய்--------முதலாளி என்றால் ஒரு பொறுப்பு வேண்டாம்? ----எல்லாம் அவனைச் சொல்ல வேணும்----யாரை பக்கத்திலை வைச்சிருக்கிறது யாரை விலத்தி வைக்க வேணும் என்று தெரியாத முட்டாள் பயல்----- எத்தனை தடவை சொல்லியிருப்பேன்---- நீ பாம்பிற்குத்தான் பால் வார்க்கிறாய் என்று------ கேட்டானா அவன்??? என்று உணர்ச்சி வசப்பட்டுக் கத்தியவர் மேல் உன்ரை கண்ணுக்கு நான் பாம்பாகத் தெரிகிறேனா? என்று பதிலுக்குக் கத்த வேண்டும் என்ற ஆத்திரம் வந்தாலும் அவர் சொன்ன சொற்கள் அளவுக்கு அதிகமாக அவனைக் காயப்படுத்தி இருந்த போதும் மாமாவே பயபக்தியுடன் மதிக்கும் ஒருவரை மரியாதை குறைவாக பேச முடியாமல்---- நான் பார்க்கிறன்---------
நீங்கள் சொல்லாவிட்டாலும் பொறுப்பெடுத்த ஒன்றை இடை நடுவில் கைவிடுறதை ஒரு நாளும் நான் செய்ய மாட்டேன். நான் அப்படிச் செய்தால் ஜெயானந்தம் ஐயாவின் ஆத்மா என்னை மன்னிக்காது என்றவனை-------
“அதைச் செயலிலை காட்டு” என்று இடைநடுவில் வெட்டியவர்------என்னம்மா நீ புத்தியில்லாதவளா? தனியே எப்படி இந்த தோட்ட வெளியிலை இருக்கப் போகிறாய்??? இதெல்லாம் உனக்கு சரிவராது நீ அந்த வீட்டிலை போய் இரு----- என்று அவளை கன்வின்ஸ் பண்ணி அங்கிருந்து அகற்ற முயல-----அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்டவள்------குருவப்பா-----இதைத்தானே என்ரை வீடு என்று அப்பா சொல்லியிருக்கிறார் என்றாள் தயங்கியபடி.
அந்த தயக்கம் ஏதாவது ஒரு அதிசயம் நடந்து என்னை இங்கிருந்து அனுப்பிவிடாதா என்ற ஏக்கத்தைப் பிரதிபலிக்க------ அவளது முகத்தைப் பார்த்து அகத்தைப் படித்தவனுக்கு-------
இவளுக்கு விருப்பமில்லை ------மாமாவுக்காகத்தான் என்னைத் திருமணம் செய்து இங்கே வந்து நிற்கிறாள் என்ற கசப்பான உண்மை சந்தேகத்திற்கு இடமின்றிப் புரிந்தது. அவர்கள் இருவரும் அவனது வீட்டிலேயே அவனை அந்நியனாக்கிப் பேசிக்கொண்டிருக்க---வர்றேன் என்று பொதுவாகச் சொன்னபடி மாமாவின் ஹாட்வெயர் கடையை நோக்கிப் போனான்.
அவன் சட்டென்று வெளிக்கிட்டுப் போனது குருவுக்கு சங்கடத்தைத் தந்தாலும் சில புரையோடிய புண்களுக்கு கத்திவிட்டுத் துளாவுவது அவசியம் என்றுணர்ந்தவர் லயாம்மா நீ சின்னப்பிள்ளையடா ---இன்னும் உனக்கு ஒரு வருஷ படிப்பு இருக்கு. அதைவிட இன்ரேர்ண்ஷிப் றெயினிங் இருக்கு. இந்த கோமாளித்தனமான கல்யாணத்திற்காக படிப்பை இடைநடுவில் விட்டு விடாதை பிள்ளை-----நாளைக்கு சுப்புவின்ரை ஆப்பிரேஷன் முடிய நீ உன்ரை ஹாஸ்டலுக்குக் கிளம்பிப்போ என்றார் ஜதார்த்தம் உணர்ந்தவராக. ஆனால் நாளை விடியும் பொழுது அவளது வாழ்க்கையைப் புரட்டிப் போடப் போகின்றது என்பதை அவரோ அன்றி அவளோ அறிந்திருக்கவில்லை.
(தொடரும்)
Last edited: