sanchumahen
New member
அத்தியாயம் 20
இரண்டு வயது சுயனை இடுப்பில் வைத்தபடி இங்க பார்! செல்லக்குட்டி குருவி. அங்க பார்! மைனா என்று சூழலில் உள்ள அத்தனை விலங்குகள் பறவைகள் எல்லாவற்றையும் அவனுக்குக் காட்டி உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள் பூரணி.
அவளது பாவாடையைப் பிடித்தபடி இரண்டு வயதான மற்றும் மூன்று வயதான பிள்ளைகள் நின்று கொண்டிருந்தனர்.
மற்ற இரு பிள்ளைகளும் வேறு யாரும் இல்லை. காவேரி பெற்ற மகளும் செந்தாமரையின் மகனும் தான் அவர்கள்.
இருவரது கணவன்மார்களும் சிறையில் அடைபட்டுவிட செந்தாமரைதான் வீட்டின் தலைமைப் பொறுப்பை கையில் எடுத்திருந்தாள்.
அவள் வழி நேர் வழி. கணேசனுக்கு முற்றிலும் நேர்மாறானவள். காவேரி ஒரு மாதிரியாக கடைசி பிரசவத்தில் செத்து பிழைத்து வந்திருக்க இருவரும் சேர்ந்து குடும்ப பாரத்தை சுமக்க ஆரம்பித்திருந்தனர்.
"அந்த அண்ணா எத்தினை நாளுக்குத்தான் துட்டு அனுப்புமோ யாருக்குத் தெரியும்!" என்று சொல்லியே காவேரியைத் தனது பாதைக்குக் கொண்டு வந்திருந்தாள்.
நேர்மையாகச் செய்யும் எல்லா வேலையும் நல்ல வேலைதான் என்று சொல்லிச் சொல்லியே கிடைக்கும் எல்லா கூலி வேலைக்கும் மாமியாரையும் கூட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தாள்.
மூர்த்தி அனுப்பும் பணம் ஓரளவிற்குப் போதும் என்றாலும் உழைக்காமல் இருப்பது தப்பென்று உணர வைத்த செந்தாமரை மாமியாரையும் அழைத்துக் கொண்டு இடையிடையே கிடைக்கும் இந்த மில் வேலைக்கும் போய் வந்து கொண்டிருந்தாள்.
அவர்கள் வரும்வரையில் அந்த பிள்ளைகள் இருவரையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் பூரணிக்கு வந்திருந்தது.
சுயனின் வாயில் ஒரு வாய் கேப்பை களியை வைப்பவள் அடுத்த வாயை மற்ற இரு பிள்ளைகளுக்கும் வைப்பாள்.
பிள்ளைகளுக்கு ஊட்டும் உணவில் அவள் ஏதாவது வாயில் வைத்துவிடுவாளோ என்று பார்க்க அங்கே கண்காணிபோல மாணிக்கராசன் நின்றிருப்பான்.
ஆனாலும் இப்போது பூரணியின் வாழ்வில் தாயாக லக்ஷ்மி அக்கறை காட்டத் தொடங்கியிருந்தாள்.
மெல்ல மெல்ல தன் மௌனத்தைக் கலைத்தவள் மகளை நெருங்கி வர தொடங்கி மாணிக்கராசன் அறியாமல் அவளுக்கும் தாம் உண்ணும் உணவில் பங்கு கிடைக்க செய்து விடுவாள்.
மகள் தாயை “அக்கா” என்று அழைக்க தாயோ மகளை “ஏம்மா” என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள். பூரா என்ற அழைப்பு காணாமல் போயிருந்தது.
மாணிக்கராசன் எப்போதடா இவள் மேஜர் ஆவாள் என்று பார்த்துக் கொண்டிருக்க தாயோ மகளின் திருமணத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தாள். பதினாறு வயசாகிடிச்சே என்று அங்கலாய்துக் கொண்டாள்.
அவளின் பதினாறாவது வயதில் தான் அவளுக்குத் திருமணம் நடந்தது. இப்போது மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினால் தான் இன்னும் இரண்டு மூன்று வருடத்தில் இடம் தகையும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தாலும் மாணிக்கராசன் மாப்பிள்ளை பார்ப்பான் என்ற எண்ணம் கிஞ்சித்தும் அவளிடம் இல்லை.
இவர்களின் நெருங்கிய சொந்த பந்தங்களில் மாப்பிள்ளைகள் யாரும் இல்லை என்பதால் வெளியில் தான் பார்க்க வேணும் என்ற நினைப்பு உள்ளூர ஓடினாலும் யாரிடம் கேட்டுப் பார்ப்பது என்று தெரியவில்லை. இவள் கேட்டு அது அந்த சண்டாளனின் காதில் விழுந்துவிட்டால் அவ்வளவுதான்.
அவன் என்றைக்கு இவள் பெற்ற மகனை பூரணியை “அம்மா” என்றும் இவளை “ஆத்தா” என்றும் கூப்பிட பழக்கினானோ அன்றே புரிந்து கொண்டாள் இவன் ஏதோ வில்லங்கம் செய்யப் போகிறான் என்று.
அவள் பயம் பொய்யில்லை என்பதை அவனது வாயிலிருந்தே அறிந்து கொண்டாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு அழகனை தீயினுள் பொசுக்கிய நாள் அன்று என்றும் இல்லாதவாறு குதூகலத்துடன் வீட்டிற்கு வந்தவன் உற்சாகம் மேலிட உளறியவைதான் அவை.
வேலுமணியின் வீடு, வயல், பூரணி பெயரில் இருக்கும் சொற்ப பணம் இவைகளை எப்படி அவளிடமிருந்து பிடுங்கப் போகிறேன் என்பதை அவன் போதையில் சொல்லக் கேட்டு விக்கித்துப் போனாள்.
அதற்காகத்தான் அவளை அம்மா என்று தனது மகனை கூப்பிட பழக்கியதாக சொல்ல இவள் மகளையோ அவளது தகப்பனின் சொத்துக்களையோ காப்பாற்ற முடியாது என்பதைப் புரிந்து கொண்டாள்.
அவளுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தால் வரும் மாப்பிள்ளை இவை பற்றிக் கேட்பானே ஆக அவன் இவளை திருமணம் முடிக்க விடமாட்டான் என்பது தெளிவாக்கப்பட்டுவிட வரமுத்துமாரிதான் தன் மகளுக்கு நல்லவழி காட்ட வேண்டும் என்று உணர்ந்தவள் நாளும் பொழுதும் அந்த முத்துமாரியை வேண்டத் தொடங்கினாள்.
மாணிக்கராசனுக்கும் கடவுள் இடை இடையே சோதனை வைக்க தான் கடமைப் பட்டவர் என்பதைக் காட்ட அன்று அண்ணாமலையை அனுப்பி வைத்திருந்தார்.
அண்ணாமலை வேறு யாராகவோ இருந்திருந்தால் அவன் கதையே கந்தலாகிப் போயிருக்கும் ஆனால் இவனது கொடுமை இவன் வேலைக்குப்போகும் கம்மாலையின் உரிமையாளனாக இருந்தான்.
வெள்ளாடு எதற்கு வெத்தலை பெட்டியோட அலையுது என்று இவனுக்குத் தெரியாதா என்ன? அவன் தம்பிக்கு பெண் தேடுவதை இவன் அறிவான்.
அவன் பார்வை தன் வீட்டில் விழுந்ததற்கும் காரணம் இவனுக்கு தெரியும்.
எல்லாம் தெரிந்தும் வில்லங்கத்திற்கு மரியாதை தரவேண்டி இருக்கின்றதே! என்று இவன் மனம் வருந்த; வந்தவனோ தனது காரியம் முக்கியம் என்று பெண்கேட்டு தனது வீட்டிற்கு மருமகளாக வந்தால் அவள் ராணி மாதிரி இருப்பாள் என்றெல்லாம் விலாவாரியாக விளக்க; வந்திருப்பவன் தனது வீட்டிற்கு சம்பளம் இல்லா வேலைக்காரியைத் தேடி வந்திருக்கிறான் என்றளவிற்குக்கூட விளக்கம் இல்லாத கேனைக் கிறுக்கனா இவன்?
இவள் ராணியாக இருந்தால் என்ன! கோணியாக இருந்தால் அவனுக்கென்ன!
அவன் புதையலைக் காத்த பூதம் போல பூரணியை பவனத்துடன் அனுப்பாது வைத்திருப்பதற்கு காரணமே அவளது அப்பன் விட்டுப்போயிருக்கும் சொத்துக்கள் அல்லவா?
அப்போது என்று பார்த்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் இருந்து வெளியில் வந்தாள் பூரணி.
பூரணியையும் அவளது உடையில் இருக்கும் கிளிசல்களையும் பார்தவனுக்கு இவளது நிலைமை வீட்டில் எப்படி என்பது புரிந்து போக மாணிக் கத்திடம் இதுதானா “நம்ம பொண்ணு” என்று கேட்டு வைக்க அவனுக்கு அப்படி ஒரு எக்கலிப்பு.
“நம்ம பொண்ணு” என்பது ஒரு சாதாரண மரியாதைக்குரிய வார்த்தை. அவன் கேட்டவுடன் தன் மனதில் தோன்றிய பிடித்தமின்மையை அண்ணாமலைக்கு காட்டும் அதே சமயம் இவளது பிறப்பைப் பற்றி கேலி பேச கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த நினைத்தவன் “ஆமாங்கய்யா! ஊரிலை உள்ள எல்லா நாதாரியும் இந்த கெரகத்தை ஏம் பொண்ணு ஏம்பொண்ணு என்ணு தான் சொல்லுறான்” என்று சொல்லிவிட அண்ணாமலைக்கு முகம் கறுத்து விட்டிருந்தது.
வீட்டின் ஒருபுறம் நின்று இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மிக்கு இவன் பேசும் சாக்கடை வார்த்தைகள் புரியாமல் இல்லை. இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. அவள் அப்படி ஒரு பீதியில் இருந்தாள். பெண்கேட்டு வந்தவனும் சரியில்லை மாப்பிள்ளையானப்பட்டவன் பக்கா அயோக்கியன்.
அவனது வசதியைப் பார்த்து கட்டிக் கொடுக்கும் முடிவிற்கு இவன் வந்துவிடுவானோ என்ற பயம்தான் அவளுக்கு.
பாவம் அப்பாவி அவள். புகுந்த வீட்டில் மகள் வசதியாக வாழவேண்டும் என்று நினைக்க இவன் என்ன பெத்த அப்பனா?
இந்த அம்மையார் வசதியாக வாழபோயிடுவா! இவளது பெயரில் இருக்கும் சொத்தையெல்லாம் அவன் கல்யாணம் என்ற பெயரில் ஆட்டையைப் போட்டிடுவான் நான் புறங்கையை நக்கிக் கொண்டு பாத்துக்கொண்டிருக்கவா? கொதித்துப் போனான் மாணிக்கராசன்
அண்ணாமலைக்கும் இவன் பூடகமாகப் பேசியது புரியாமல் இல்லை.
பூரணியின் அப்பா வேலுமணியின் வீடு வயல் ப்ராவிடன்ட் ஃபண்ட் எல்லாம் இவள் பெயருக்கு வந்துவிடும் என்பதை அவனும் அறிவான்.
ஆக வாய்க்கு வழியில்லாமல் மாணிக்கராசனிடம் அவதிப்பட்டாலும் வருமானத்திற்கு வழியுள்ள பெண் என்பதாலும் கேட்க நாதியற்றவள் என்பதாலும் தான் அண்ணாமலையின் மூத்த தம்பி கதிரமலைக்கு பெண் கேட்டுத்தான் அவன் வந்திருந்தான்.
கதிரமலையின் மனைவி இறந்து ஒருவருடம் ஆகியிருக்க அவனது இரண்டு பெண் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியாது என்று இவனது மனைவி போர்க்கொடி தூக்கியிருக்க அதுவும் பன்னிரண்டு வயதில் பெரியவளும் பத்து வயதில் இளையவளும் இருக்க முப்பத்தாறு வயதில் இருக்கும் தம்பிக்கு பதினாறு வயதிலிருக்கும் இவளைப் பெண் கேட்டு வந்திருந்தான்.
முதலாளி உங்க குடும்பத்தில சம்மந்தம் பண்ண நாங்க குடுத்து வெச்சிருக் வேணும் என்றவன் பொறுப்பான அப்பனாக இவ்வளவு வயது வித்தியாசத்தில் மகளைக் கட்டிக்கொடுத்தால் காசுக்கு ஆசைப்பட்டு கட்டிக் கொடுத்ததாக ஊர் தன்னைத் தூற்றும் என்று மறுத்துவிட்டான்.
அதிலும் நான் பட்டினி கிடந்தாலும் அது வயிறு வாடவிட்டதில்ல என்று இவன் சொல்ல ஒட்டி உலர்ந்த கன்னங்களுடன் இருந்த பூரணியைப் பார்த்தவனுக்கு இவன் பட்டினி இருந்து மூத்தான் பிள்ளையை வளர்க்கும் இலட்சணம் புரியாமல் இல்லை.
என்வீட்டு காசிலை சோறு பார்க்கிற வெறும்பயல் வீட்டில் வந்து பெண்கேட்டது என்தப்புதான் என்று நினைத்துக் கொண்டவனுக்கு இவனது வாய்க்கொழுப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றிவிட அடுத்த திட்டத்தை தயார்படுத்திக் கொண்டு வெற்றிகரமாக இப்போது பின்வாங்கினான்.
அப்போ வாறன் மாணிக்கம் என்று அவன் கிளம்பிவிட “யாருகிட்ட! என்கிட்டேயா?? என ஏளனமாக மனதுக்குள் சிரித்தவனை பார்த்து இவன் எங்கே சரி என்று சொல்லிவிடுவானோ என்று பயந்து கொண்டு மூச்சுவிட மறந்து நின்றிருந்த லக்ஷ்மி மெல்ல மூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
மாணிக்கராசனின் நிம்மதிக்கு ஆயுசு குறைச்சல் போல. இவனிடம் புறமுதுகிட்டு ஓடிய அண்ணாமலை தனது மாமன் மூலம் அடுத்த ஆப்பை தயார்படுத்த; அத்தனை அஸ்திரங்களையும் தவிடு பொடியாக்கும் நாகாஸ்திரத்தை இவன் கையில் எடுத்தவன் தான் யமனுக்கு யமன் என்பதைக் காட்டிவிட்டிருந்தான்.
மாணிக்கத்தை வேலை இருப்பதால் கம்மாலைக்கு வரும்படி சொல்லி அனுப்பியிருந்தான் அண்ணாமலை. அவனுக்குத் தீர்க்க வேண்டிய பாக்கி இருக்கே.
“மாணிக்கம்! வாய்யா வா—“-என்று இவனை வரவேற்றவனிடம் "முதலாளி புதிசா வேலை ஏதும் வந்திருக்கோ? இல்ல பழைய வேலைக்குத்தானோ?" என்று இருபொருள்படக் கேட்க ----
இவனது நையாண்டியைப் புரிந்து கொள்ளாத அப்பாவி போல "நீ தான் பழசே வேணாம் என்னிட்டியே!" என்று பதில் தந்தபடி நமட்டுச் சிரிப்பு சிரித்தவன் "என்னமோ தெரியல உங்க வீட்டுப் பொண்ணுக்கு மவுசு கூடித்தான் போச்சுதப்பா" என்றவன்
பக்கத்திலிருந்த தன் மாமனைக் காட்டி அவரது மகன் அரசபள்ளி ஆசிரியர் என்றும் இருபத்திநாலு வயசுதான் என்றும் சொல்லி பெண் கேட்க---
இது என்ன இடி என்று ஒருகணம் அயர்ந்து போனவன்.
முதலாளி சாமி சத்தியமாக நான் சொல்லுறதை நம்புங்க. நீங்க எத்தினை மாப்பிள்ளையை வரிசையாக நிப்பாட்டினாலும் அந்த புள்ளைக்கு கல்யாணம் நடக்காது. அது ஒரு காக்கா வலிப்புகாரி என்றுவிட இவன் அவிழ்த்துக் கொட்டிய புழுகு மூட்டையில் அசந்து போயினர் இருவரும்
அவர்கள் இருவரும் இவனுக்கு தடம் போட அவனோ இருவரையும் சேர்த்து ஒரே வடத்தில் கட்டிவிட்டிருந்தான்..
மெய்யாலுமா? என்று இருவரும் ஒரே தடவையில் கேட்டுவிட தனது வாக்குச் சாதுரியத்தை அவர்கள் இருவரிடமும் காட்டத்தொடங்கினான் அவன்.
உங்க உப்பை தின்னுறவன் எப்டி துரோகம் செய்யுறது? சம்சாரம் வேற பக்கத்தில நின்னாளா அதான் மாத்தி பேசியிட்டேன் என்றுவிட
இவன் உண்மை சொல்லுகின்றானா? இல்லை பொய்தான் சொல்லுகின்றானா? என்று குழம்பிய அண்ணாமலைக்கு உண்மையாக இருக்குமோ என்று தோன்றிவிட பூரணியை தம்பிக்கு கட்டிக்கொடுக்கும் எண்ணம் மலையேறி விட்டிருந்தது.
இவன் அவிழ்த்துவிட்ட புழுகு மூட்டையை பக்கத்துவீட்டு சாமிக்கண்ணு கேட்டுக் கொண்டு நின்றது இவனுக்கு அஷ்ட லக்ஷ்மியையும் அலேக்கா அள்ளிக் கொண்டு வந்து தந்திருந்தது.
முட்டாள் சந்தர்ப்பத்தில் பிரச்சினையைக் காண்பான். புத்திசாலி பிரச்சனையில் தனக்கான சந்தர்ப்பத்தைக் கண்டு கொள்வான் என்று பெரியவர்கள் சொன்னதை மெய்யாக்கினான்.
சாமிக்கண்ணு கேட்டதை தன் மனைவியிடம் சொல்ல, அவள் லக்ஷ்மியிடம் சொல்ல தனது மகளைக் காக்கா வலிப்புக்காரி என்று சொல்லி இவன் அவளின் திருமணவாழ்க்கைக்குச் சமாதிகட்டியது தாயின் உள்ளத்தில் கனலை கிளப்ப சாந்த சொரூபியான லக்ஷ்மி காளியாக மாறி காத்திருந்தாள் இவன் வரவிற்காக.
வந்தவனிடம் இவள் கத்த “என்னடி சத்தம் வெளியல கேக்குது” என்று இவன் உறும
“ஏன் என்னை ஊமை என்ணு நெனச்சியோ” என்று இவள் பதிலுக்குக் கத்த
“கள்ளப் புருஷன் மகளுக்கு சீர் செய்ய என்ன வெச்சிருக்க?”என்றவனது பேச்சை ஒரு அசூயையுடன் காதில் வாங்கியவள்
சீ---- வாயைக் கழுவு! யார் கள்ளப் புருஷனுக்குப் பொறந்த மக?. இது ஊர் உலகம் அறிய தாலிகட்டின மகராசன் பெத்த மக!!
“அப்போ இப்பவும் அவனதான் நெனச்சிட்டு இருக்கே”
“ஆமா----அதுக்கென்ன இப்போ? உங்கூட குப்பைகொட்டுற வளப்பத்துக்கு அந்த மகராசன் நெனவில வராட்டித்தான்யா அதிசயம்------
என்ன கேட்டே நீ? என்ன சீர் வெச்சிருக்கிறே என்றா? அவ அப்பன் மவளுக்கு சீர் செஞ்சிட்டுத்தான்யா போயிருக்கார்.
உன்னைப் போல ஊரை அடிச்சு உலையில போட நெனக்கல” என்றுவிட ஆத்திரம் மேலிட அவன் விட்ட அறையில் உதடு கிழிந்து இரத்தம் பெருகியது.
எதுக்கு அக்கா இந்த சித்தப்பாகிட்ட வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்குது? எனக்காக எதுக்கு வீண் சண்டை? எனக்கு கல்யாண யோகம் இல்லாமல் போனா என்ன? நான் என் சுயன் குட்டியோட நிழலில இருந்துப்பேன் என்று அப்பாவியாகத் தான் நினைத்தாள் பூரணி.
இவர்கள் இருவரும் கத்திப்போட்ட சண்டையில் அயலவர்கள் கூடி நிற்க தனது திட்டங்களைப் புட்டு புட்டு வைக்கும் லக்ஷ்மியைக் கொன்றால் என்ன என்ற கொதி தோன்றினாலும் காரியம் பெரிசு என்று நினைத்தவன் வக்கீல் வீட்டை நோக்கிப் போனான்.
அந்த குறுக்குப்புத்தி படைத்த வக்கீல் கொடுத்து விட்ட சில தேதியிடப்படாத பத்திரங்களிலும் வெற்றுக் காகிதங்களிலும் பூரணியிடம் கைநாட்டு வாங்கினான். அந்தோ பரிதாபம் அவளுக்கு கையொப்பம் போட தெரியும் என்பதை இவன் அறிந்திருக்கவில்லை.
இன்று
இவன் தந்த மெடிக்கல் சர்ட்டிபிக்கட்டில் தேதி சரியாக இருக்கா என்று பார்த்தவள் அத்துடன் திருப்தி பட்டுக்கொண்டாள். ஹெச் ஓ.டீ கேட்ட விளக்கத்தையும் மெடிக்கல் சர்ட்டிபிக்கட்டுடன் இணைத்து கவரில் போட்டவள் மறுநாள் தனது டிபார்ட்மென்டிற்கு போனாள்.
அடுத்த வாரம் பல கம்பனிகள் கலந்தாய்விற்கு வருகின்றன என்பதால் முதலிலேயே டிபார்ட்மென்டில் பேசிவிடவேண்டும் என்று நினைத்தவள் சுதாயினியையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.
ஏன்டி! இவளே!! உயிரைக் கொடுத்து ப்ரஜெக்ட் செய்தியே ஏன்டி இன்டர்வியூக்கு வரவில்லை? என்று கேட்டவளிடம் விலாவாரியாக நடந்ததைச் சொன்னவள் வேதனை நிரம்பிய முகமும் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரும் அவளது துயரத்தைச் சொல்ல
எத்தனை தடவைடி சொன்னேன் அவன்கூட மல்லுக்கு நிற்காதை என்று சொல் பேச்சு கேட்டியா நீ?
இதில அவனை போலீசில மாட்டி விட்ருக்கிறீங்கள்!! ரொம்ப புத்திசாலி நீ! டாக்குமென்டில என்ன இருக்கு என்று வாசிக்காம எதுக்கடி சைன் பண்ணினனீ? அறிவுக் கொழுந்து!!! என்று திட்டியவளது ஏச்சுக்களை எதிர்ப்பு காட்டாமல் கேட்டுக் கொண்டவள்
என்னில நிறையவே தப்பு இருக்கடி ----பிடிக்காட்டி வேணாம் என்று சொல்லியிருக்க வேணும்----எல்லா தப்பும் என்பேரில்தான் என்று ஏற்றுவிட
சரி விடுடி! நடந்தது நடந்து போய்ச்சு! என்ன பண்ணுறது? என்ற சுதாயினி அந்த அண்ணாகூட சண்டை எல்லாம் இனி போடாதடி ---பாவம் இல்ல யாரும் இல்லாதவன் என்று தொடர
ஆனாலும் அவனுக்கு ரொம்ப கொழுப்பு. என் ஃபோனை வேறை உடைச்சுப் போட்டான்டி என்றுவிட
ஹா ஹா---என்று வாய்விட்டு சிரித்த சுதாயினி நல்ல ஜாடிக் கேற்ற மூடிதான் நீங்க இரண்டுபேரும். பார்த்து சூதானமாக இருடி ஏதாவது இன்னும் ஏடாகூடமாகப் ஏதேனும் பண்ணிடப்போறான்.
பேசிக்கொண்டே டிபார்ட்மென்ட்க்குள் வந்தவர்கள் பர்மிஷன் கேட்டு ஹெச் ஓ.டீ யைப் பார்க்கப் போயினர் .
ஹெச் ஓ.டீ யிடம் அனைத்து டாக்குமென்ட்ஸையும் கொடுக்க மெடிக்கல் சர்ட்டிபிக்கட்டை பார்த்தவர் “ஸோ சேட்” என்றபடி அருகில் நின்று கொண்டிருந்த இவளது சூப்பவைஷரிடம் கொடுக்க அவரும் அந்த மெடிக்கல் சர்ட்டிபிக்ட் பார்த்து வருத்தப்படுவது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவர்கள் இருவரையும் பார்த்த இவளும் சோகமாகவே தன் முகத்தை வைத்துக் கொண்டாள்.
இப்படி ஒரு சூழ்நிலையில் அவளை தண்டிக்கவோ அல்லது கண்டிக்கவோ முடியாதென்ற முடிவிற்கு வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்துக்கொண்டே எதற்கும் ஹெல்த் சென்டர் டாக்டரிடம் ஒரு ஒப்பீனியன் கேட்க அனுப்பலாம் என்ற முடிவிற்கும் வந்திருந்தனர்.
மாணவியாக இருந்தாலும் ஒரு எல்லைக்கு அப்பால் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கமுடியாது என்பதால் ஹஸ்பன்ட் மெக்கானிக் இல்லையா? என்று கேட்டவர்களின் முகத்தில் தோன்றிய அதிருப்தி இவளைச் சீண்டிவிட
“சார் அவர் ரொம்ப நல்லவர்” என்று சொல்லிவிட இவளின் பதிலில் இவளுடன் கூட வந்திருந்த சுதாயினி சட்டென்று தலையை நிமிர்த்தி இவளைப் பார்த்து வைக்க
என்ன லுக்கு? என்று வாயசைத்தவளிடம் “சும்மாதான்டி” என்று இவளைப் போலவே பதில் சொன்னவள் இவளை எட்டாவது அதிசயத்தைப் பார்த்தது போல் பார்த்து நின்றாள்.
எப்போதிலிருந்து அவன் இவளுக்கு நல்லவனாகப் போனான்? என்ற கேள்வி அவளைக் குடைந்து கொண்டிருந்தது.
டிபார்ட்மென்டை விட்டு வெளியேறிய இருவரும் ஹெல்த் சென்டரை நோக்கி நடக்கத் தொடங்கினர். ஹெல்த் சென்டர் இன்னொரு கட்டிடத்தில் இருக்க அதைநோக்கி எட்டி நடைபோட்ட இருவருக்கும் ஹெச் ஓ டீ சொன்ன கடைசி வசனம் புரியவில்லை.
“மிஸ். லக்ஷ்மிப்ரியா டோன்ட் ஸ்ரெயின். நடக்க வேண்டாம் லிப்ட்டில் போங்கோ” என்றுவிட அப்படி ஒரு குதூகலமாக இருந்தது லயாவிற்கு.
இன்று நல்ல மண்டகப்படிதான் காத்திருக்குது என்று வந்தவளுக்கு இந்த யோகத்திற்கான காரணம் புரியவில்லை.
எந்த டாக்டரின் கையெழுத்து சாமானியனுக்கு புரியும்படி இருந்தது. இவளும் அந்த சர்ட்டிபிக்கட் வந்த நேரத்திலிலிருந்து வாசிக்க ட்றை பண்ணினாள் தான் முயவில்லையே.
அப்டி என்ன நோயைத்தான் எழுதியிருப்பார் அந்த டாக்டர்?என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தாலும் எதுவும் புரியவில்லை.
டாக்டரின் அறையினுள் சென்றவளுக்கு டாக்டர் கேட்ட கேள்விகளுக்கு பதிலைச் சொல்ல முடியவில்லை.
இவளுக்கு எப்போது திருமணம் ஆனது என்பதிலிருந்து கணவனுக்கும் இவளுக்கும் உள்ள தாம்பத்திய உறவு, இவளுக்கு புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் இருக்கா என்பவை தொடர்பாக இருக்க ஒருவாறு சமாளித்தவளுக்கு மிஸ்கரீஜ் ஆனது இதுதான் முதல் தடவையா? என்றும் கேட்டுவிட மெடிக்கல் சர்டிபிக்கட்டில் என்ன எழுதப்பட்ருக்கின்றது என்பது தெரியவந்ததில் அவளைமீறி கலக்கம் சூழ்ந்தது கொண்டது.
அந்த கலக்கம் குழந்தை என்று இவள் கனவுகண்டதால் வந்ததல்ல. இப்படி பொய் சொல்வதால் குழந்தைப் பாக்கியம் தங்கள் குடும்பத்திற்கு மறுக்கப்பட்டஒன்றாகி விடுமோ என்ற பயத்தினால் வந்ததென்பதை யார் அறிவார்?
அவள்படும் அவஸ்த்தையை தப்பாகப் புரிந்து கொண்ட டாக்டர் அவள் கரு சிதைவிற்காகத்தான் வேதனைப்படுகிறாள் என்று நினைத்து “டோன்ட் வொறிம்மா!” என்றவர் இந்தமாதிரியான நேரத்தில் எல்லா டாக்டர்களும் சொல்லும் இப்போ உங்களுக்கு சின்ன வயது தானே! அடுத்த தடவை கன்ஸீவ் ஆனதும் முதலிலேயே ஒரு வீ.ஓ.ஜீ இடம் காட்டுங்க என்று சொல்லி அனுப்பிவிட மூஞ்சியைத் தூக்கிக் கொண்டு வந்தவள் சுதாயினியிடம் பொரியத் தொடங்கினாள்.
இப்போ கொஞ்ச நேரத்திற்கு முதல் தானேடி சொன்னேன் அவனுக்கு ரொம்ப கொழுப்பு என்று---- என்ன செஞ்சு வெச்சிருக்கிறான் தெரியுமா உனக்கு??
எனக்கு அபார்ஷன் ஆகியிட்டுது என்று மெடிக்கல் சார்ட்டிபிக்கட் வாங்கியிருக்கிறான்.
கருங்கல்லு---- கருங்கல்லு---- இவனுக்கு சென்ஸ் என்று ஏதாவது இருக்கா? எப்டி அபசகுனம் பிடிச்சமாதிரி மெடிக்கல் சர்ட்டிபிக்கட் வாங்கியிருப்பான்?? என்று இவள் கவலைப்பட
அடி பாவி! அவன் புருஷன் இல்லையாம்! அவன்கூட வாழ்ற எண்ணத்தையும் காணோம்! அவனைப் பிடிக்காது என்று வேறை அடிக்கடி சொல்லுறாள். இவள் குடும்பம் நடத்தி குப்பை கொட்டுற தினுசில பிள்ளை என்ற ஒன்று வந்திட்டாலும்!
இந்த நிமிஷம் வரை வருவதற்கே வாய்ப்பு இல்லாத பிள்ளை, அதை அபார்ஷன் ஆகிடிச்சு என்று மெடிக்கல் சர்ட்டிபிக்கட் எடுத்தது குத்தமாடி?
இந்த முரண்பாட்டுக்குப் பிறந்த முனியம்மாவை என்னதான் செய்வது? என்று பார்த்தவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் காட்டிக்கொள்ள முடியவில்லை.
இன்னொருபுறம் லயாவைப் பார்க்க பாவமாகவும் இருந்தது. இவளது அக்காக்கள் இருவருக்கும் குழந்தை இல்லாதிருப்பது இவளது இந்த மனவருத்தத்தை தூண்டிவிட்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு இவள் இரண்டு மாதங்களுக்கு முன் இருந்த லயா இல்லை என்பதும் புரிந்தது.
அதுவும் விஷ்ணு ஏதோஒரு வகையில் அவளை இம்பிரஷ் பண்ணியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு புத்திசாலி என்று தன்னைத்தானே பீத்திக் கொள்ளும் இவளுக்கு எப்படிப் புரியவைப்பது என்பது புரியவில்லை.
தான் இவளிடம் கண்ட மாற்றங்களைச் சொன்னாலும் இவள் ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்பதால் மௌனமாக இருந்து கொண்டாள்.
தனது கவலைகளில் உழன்றபடி சுதாயினியிடம் இருந்து விடைபெற்று பேருந்தில் ஏறியவள் வீடு வந்து சேர ஆச்சரியப்படத்தக்க விதமாக அன்றும் விஷ்ணு வீட்டில் இருந்தான்.
தனது டிறஸ்ஸை ஒரு ரவலிங் பேக்கில் அடுக்கிக்கொண்டு இருந்தவன் முன் வந்து நின்றவள் தனது வழமையான சடபுடாகுச்சி பேச்சை மறந்தவளாக ஏன் விஷ்ணு இப்டி செய்தாய்? என்று கேட்க
கை பேண்டை மடித்துக் கொண்டிருக்க தலையைத் திருப்பி அவளைப் பார்த்தவன் “எப்டி” என்று கேட்டான்?
எனக்கு அபார்ஷன் ஆனதாக எதுக்கு மெடிக்கல் சர்ட்டிபிக்கட் வாங்கினாய்? என்று கேட்க
“அபார்ஷனா!!” என்று அதிர்ந்தவன் அடடா! டிபார்ட்மென்டில் நிரம்ப அவமானப் பட்டுவிட்டாள் போல என்று நினைத்து
சாரி ப்ரியா! டிபார்ட்மென்டில் நிரம்ப அவமானமாக போச்சுதா? என்று கேட்டான்
இதில அவமானப்பட என்ன இருக்கு? என்று பதில் கேள்வி கேட்டு அவனது தலையை கிறு கிறுக்க வைத்தவள் அப்டி அபசகுனமாக எழுதலாமா? என்றுவிட
அபசகுனமா? என்ன இவள் சொல்லுகின்றாள் என்பது அவனுக்குப் புரியவில்லை.
"எனக்கு இப்டி பொய்யான மெடிக்கல் றீசன் எழுதினால் அது நடந்திடும் தெரியுமா?" என்றுவிட
“ஓஹ்!” என்றான் அவன்
“என்ன ஓஹ்? எனக்கு எவ்வளவு கவலையாக இருக்கு. நீ என்னடா என்றால் சிம்பளா ஓஹ் என்கிறாய்” எகிறியவளை
இப்படியும் ஒரு லூசா என்பது போல பாத்திருந்தவனுக்கு
இவளின்ரை குடும்பமே லூசுக் குடும்பம் தான் போல என்ற முடிவிற்குத்தான் வரமுடிந்திருந்தது. இங்கே இருக்கும் பெரிய வீடு வாசல் எல்லாவற்றையும் விட்டு விட்டு இவளின்ரை அம்மா இவளுக்கு எதுவும் சொல்லாமல் ஊரில் போய் இருக்குது.
இவளின்ரை இரண்டு அக்காக்களும் அம்மாவை ஊருக்கு துரத்தி விட்டிட்டு இப்போ புகுந்த வீட்டில் போய் இருக்கிதுகள்.
இவ வேறை ஒரு மார்க்கமாகவே யோசிக்கிறாள். இது மனுஃபக்ஷரிங் ஃபோல்டா? இல்ல மாக்கட்டிங் ஃபோல்டா?? என்ற குழப்பம் தான் அவனுக்கு வந்திருந்தது.
குழப்பம் வரத்தானே செய்யும் அவனே அபார்ஷன் என்று எழுதியதை நினைத்து கூச்சப்பட இவள் அதை ஒரு பக்கம் வைத்துவிட்டு அபசகுனம் என்கிறாள். அவன் என்னதான் நினைப்பான்?
மெடிக்கல் வேணும் என்று நீ கேட்டாய். பக்கத்தில் கிளினிக் வெச்சிருக்கிற சத்தியமூர்த்தி டாக்டர்தான் மெடிக்கல் எழுதித் தந்தார் என்று பிடரியில் தட்டியபடி சொன்னவனுக்கு சத்தியமூர்த்தியின் குசும்பு புரியாமல் இல்லை.
இவளை அட்மிட் பண்ணிய ஹாஸ்பிட்டல் டாக்டர் ஒரு இம்சை. அட்வைஸ் பண்ணியே சாகடிச்சிடும் என்று இவரிட்டை போனால் இது இம்சைக்கு இம்சையான வேலை செய்திருக்கிது என்று நினைத்தவன்--
ஏன் ப்ரியா எல்லா விசயத்தையும் பிரச்சினையாகத்தான் பார்ப்பியா?
உனக்கு பனிஷ்மென்ட் கிடைக்காமல் இருக்கத்தானே மெடிக்கல் சர்ட்டிபிக்கட் தேவையாக இருந்தது----
இப்போ உனக்கு பிரச்சினை இல்லைத்தானே! அதிலை பிள்ளை அபார்ஷன் ஆயிடிச்சு என்று எழுதினால் என்ன? புருஷன் மண்டையைப் போட்டிட்டான் என்று எழுதினால் தான் என்ன? பிரச்சினை ஓவர் என்று போவியா? இல்லை புதிசா ஏதாவது கண்டுபிடிச்சு கவலைப்படுவியா? உனக்கு கவலைப்படறதே ஒரு பொழுது போக்கா போச்சுது என்று முடிக்க
“வாயிலை போடு” என்று சொன்னவள் அவனது வாயில் அடித்ததும் அல்லாது உனக்கு மனச்சாட்சியே இல்லையா? எப்டி என்ரை புருஷன் மண்டையைப் போட்டிட்டான் என்று சொல்லுவாய் நீ? என்று பொறுமை இழந்து கத்த----
அவனது அபசகுனமான வார்த்தைகளால் தன்னுடைய கணவனுக்கு ஆபத்து பிள்ளைக்கு ஆபத்து என்று பதறுபவள் யாருக்காக இவ்வளவு கவலையும் என்பதை அன்று போல இன்றும் உணரவில்லை.
அவளது துடிப்பு தன்னைப் பற்றியது என்பதை அவனும் புரிந்து கொள்ளவில்லை. அங்கே அரும்பத் தொடங்கிய நேசம் மொட்டவிழாது முழித்துக் கொண்டு நின்றிருந்தது.
.

Last edited: