sanchumahen
New member
அன்புவலி------+அது
அத்தியாயம் 7
அன்று
அழகர் ஐயா வீட்டில் வேலை செய்யும் காத்தாயி வந்து சொன்ன செய்தியைக் கேட்டு சந்தோஷப்படுவதா? அல்லது எந்த உணர்வினையும் வெளிக்காட்டாது முகத்தை வைத்திருப்பதா? என்று குழம்பித் தவித்தாள் லக்க்ஷ்மி.
என்ன லக்க்ஷ்மி மலைச்சுப்போய் நிற்கிறாய்? கிளம்பு--- கிளம்பு--- என்று அவசரப்படுத்தினாள் காத்தாயி. இந்த பூரணிப் பிள்ளை வேறு மூலையிலை குந்தியிட்டாள். கையுதவிக்குக் கூட ஆளில்லை. எத்தினை வேலை குவிஞ்சு கிடக்குது. உன்னைப் பார்த்துக் கொண்டு நின்றால் ஆகிடுமா? பிள்ளையாரப்பா எனக்கு இரண்டு கைபோதாது. இன்றைக்குச் ஜமம் ஆனாலும் வேலைமுடியாது போல. இந்த வள்ளியம்மா வேற அவளுக்கு தலைக்கு ஊத்த வேணும் என்று சொன்னாங்களே------
ஏய்! என்னம்மா நீ ------வர்ற எண்ணம் இல்லையா??? காத்தாயி அவசரப்படுத்தினாள். அவள் கவலை அவளுக்கு. இவளின்ரை பிரச்சினை அவளுக்கு எங்கே புரியப்போகுது.
இல்லை அக்கா நீங்க போங்க-----நான் பின்னாடி வாறன் என்றவளின் தயக்கமான பதில் அவள் வரப்போவதில்லை என்பதை உணர்த்த நீ என்ன தாயோ-----என்றபடி காத்தாயி நகர உணர்வு போ என்று உந்தினாலும் அறிவு பின்விளைவைப் பற்றி எச்சரித்தது. தான் அங்கு போனால் பூராவிற்கு சந்தோசமாக இருக்குமோ என்னமோ ஆனால் இருவருக்கும் துக்கம் நிச்சயம்.
நல்லாக இருக்கப் பிறந்தவள் என்றால் எதுக்கு என்ரை வயித்திலை பிறந்திருக்கப் போறாள்--------
வேலுமணியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இப்போ அந்த மனுஷன் மட்டும் உசிரோடை இருந்திருந்தால்----- இன்றைய நாள் திருவிழாவாகத்தான் இருந்திருக்கும்.
அவள் எதுக்கு அழகர் ஐயா வீட்டிற்கு வேலைக்குப் போகப்போறாள்???
அவளுக்கு தான் கருவுற்ற செய்தி தெரிந்த தினம் நினைவுக்கு வந்தது. மனதில் வெறுமை சூழ்ந்து கொண்டது
அவளை அறியாது பெருமூச்சு அடி நெஞ்சிலிருந்து கிளம்பியது. என்னடி பெருமூச்செல்லாம் விடுறாய்?? அவன்ரை நினைப்போ? என்றும் சரியாகப் பேசாதவன் இன்று சரியாகக் கேட்டான்.
வழமையைப்போல பதில் பேசாது வீட்டினுள்ளே சென்றவள் மகள் பெரியவளான செய்தியைக்கூட தெரிந்ததுபோல காட்டிக் கொள்ளவில்லை.
ஏன்டி ராசாத்தி! உன்ரை அம்மாகாரி அப்பிடி என்னத்தைதான் வெட்டி முறிக்கிறாள்? சேதி சொல்லியும் வரயில்லை என்ற வள்ளியம்மையைப் பரிதாபமாகப் பார்த்தவள் ஏதுவும் பேசவில்லை. யாரையும் குறைகூறி பேசும் வழக்கம் அவளுக்கு என்றுமில்லை. இது அவளின் தந்தைவழிச் சொத்து.
தாயாகி வேலைக்கார சிறுமிக்கு சடங்கு செய்தவர் புது துணி உடுக்க வைத்து களி மற்றும் புட்டு செய்து நல்லெண்ணையுடன் உண்ணத்தந்து பராமரித்ததுடன் ஆயிரம் புத்திமதி சொல்லி பூராவிற்குத் துணையாக காத்தாயியையும் சின்னானின் வில்லு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
மனம் ரொம்பவே கனத்திருந்தது வள்ளியம்மைக்கு. பாவம் பிள்ளை. தாயே கண்டு கொள்ளாத போது யார் இவளிற்கு நல்ல சத்தான ஆகாரம் தருவர்? சடங்குகள் சம்பிரதாயங்கள் அவசியம் இல்லை----ஆனால் சாப்பாடு.
இன்று அவரது அத்தை தெய்வானையின் நினைவு அவரை மட்டுமல்ல வடிவேல் அழகர் ஐயாவையும் ஆட்கொண்டிருந்தது. அவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் இந்த பிள்ளையை இந்த வீட்டிலேயே ஒரு பத்து நாட்களுக்காவது வைத்திருந்து நல்ல ஆகாரம் கிடைக்க வழி செய்திருக்கலாம்------என்ன செய்வது? அவரால் செய்ய முடிந்தது இவ்வளவுதான். நாளை ஊருக்குக் கிளம்பும் அவர் இதைவிட வேறெதுவும் செய்வதற்கு இல்லையே.
புதுத்துணி உடுத்தியபடி வில்லு வண்டியில் வந்திறங்கிய பூராவை குரோதம் நிரம்பிய விழிகளால் உறுத்துப் பார்த்தான் மாணிக்கராசன். அவள் புதுத்துணி உடுத்தியிருப்பது பெரும் இராச துரோகமாக அவனுக்குப் பட்டது. அவன் பலதடவைகள் சொல்லிவிட்டான்.
அழகர் ஐயா வீட்டில் புது உடுப்பு தந்தாலும் அதை நீ உடுத்தக்கூடாது அதை பவதி மதினிக்குத்தான் கொடுக்க வேணும் என்று. என்ரை சொல்லை மீறி நடக்கும் இவளுக்கு இன்றைக்கு போடுற சூடு வாழ்க்கையில புது துணியைக்கண்டாலே கதற வைக்கும் என்று எண்ணியபடி இவன் இரும்புக்கம்பியை கொல்லையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் சூடாக்க இவளுடன் வந்த காத்தாயி அவள் பெரிய பெண் ஆன செய்தியை எல்லோருக்கும் சொல்ல அதுவும் வள்ளியம்மை அம்மா தலைக்கு தண்ணீர் ஊற்றிய பாங்கை வர்ணித்துச் சொல்ல கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு அவளுக்குச் சூடு போட முடியாது போக அப்போ மகனை இந்த விசப்பூச்சிக்கு கட்டி வைக்கப்போறாவோ பெரியவீட்டம்மா என்று நக்கலாக லக்க்ஷ்மியின் காதுகளில் மட்டும் கேட்கும்படி கேட்டவன் சின்னானைக் கண்டதும் வாங்க அண்ணாச்சி பிள்ளையை பத்திரமாக கூட்டிவந்திருக்கிறீங்கள் போல என்று பவ்வியமாகக் குழைந்தான். இந்த நடிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கும்???
இன்று
அவள் காலையிலேயே பூனைகுட்டியை வைச்சு சர்க்கஸ் காட்டினாள். வந்திருக்கிற போலிஸ்காரன் நாயை வைச்சுக் காட்டுறான். எப்பதான் இந்த கூத்து முடியுமோ தெரியவில்லையே.
இன்றைக்கு எனக்கு எல்லா கட்டத்திலையும் சனிதான் நிற்குதா? சாப்பாடு தண்ணிக்குகூட நகர முடியாமல் இருக்குது. ரொம்பவே ஆதங்கப்பட்டான் விஷ்ணு.
தவம் அண்ணாவிற்கு சொல்லிவிட்டால் டீ வந்திடும்தான் ஆனால் அதுக்கிடையில வந்த போலிஸ்காரரைச் சமாளிக்க யாரும் இல்லையே.
நாய்கள் திருடர்கள் போன திசையில் ஓட போலீஸ்காரர்கள் பின்னால் ஓட இவன் அவர்களுக்குப் பின்னால் ஓட ------
இப்போ மட்டும் அவள் என்ரை கையிலை சிக்கினால்---- மகளே உன்னையும் கூட்டிக்கொண்டு தான்டி நான் ஓடிவேன்-----இவன் மனதோடு கறுவிக்கொண்டான்.
இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு தேவைப்படுது-----அவளின்ரை கையைப் பிடிச்சுக்கொண்டு ஓடப்போறாராமே---நீ கைபிடிக்க அவள் விடுவாளா???
யோவ்! கொஞ்ச நேரம் பொத்திக் கொண்டிரு---- இந்த ரணகளத்திற்கு அவள்தான் காரணமாக இருப்பாள்-----எனக்குத் தெரியாதா?? என்னோடை சேர்ந்து ஓடினால் தெரியும் என்ரை வலி ---- நீ என்னமோ கிளுகிளுப்பு என்று சொல்லுறாய்----இவன் தன் மனதுடன் சண்டை போட்டுக் கொண்டான்------
போலீஸ் யாரிலை வேணும் என்றாலும் சந்தேகப்படட்டும். எனக்கு இந்த களேபரத்தின் தொடக்கப் புள்ளி நீ என்கிறது தெரியும் டி.
நாய்கள் மிளகாய் தூள் வாசத்தை தாண்டி மோப்பம் பிடிக்க முடியாது திரும்பி வர காவல்துறை தன் கடமையைச் செய்யட்டும் என்ற நினைப்புடன் மீண்டும் வந்து வீட்டு வாசலில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.
குருவப்பாவை இன்னமும் காணவில்லை. அவருக்குச் சொல்லவும் இவனுக்கு மனம் இல்லை.
இது நாள்வரை ஒரு தடவைகூட போலிஸ் ஸ்டேசனுக்கே போகாதவன் போலிஸ்காரன்களுக்கும் அவங்கள் கொண்டுவந்த நாய்களுக்கும் சாந்தி செய்து அலுத்துப்போயிருந்தான்.
அன்ராயிட் போனுக்கும் அதிலிருக்கிற ஆப்ஸ்கும் மயங்கி பழைய நோக்கியாவை விட்டது எவ்வளவு பெரிய பிசகு. நடுச்சந்தியிலை வைச்சிட்டுப் போனாலும் நாயும் தேடாது----- இவன் மனம் ஒரு புறம் நினைக்க உங்க ஊரிலை எந்த நாயடா மொபைல் பாவிக்குது? என்று மனசாட்சி வேறு கவுண்டவுண் கொடுத்தது.
பச் ----என்று அலுத்தவன் முன் அந்த போலிஸ்காரர் வந்து நின்றார். மிஸ்டர் விஷ்ணு வந்த திருடன்களுக்கு கொஞ்சம் அதிஸ்டம் இருக்குப்போல.
அவங்கள் சீசீரீவீ கமெராவின் பவர் சப்ளையை நிறுத்துவதற்கு முன்பே மின்சாரசபை ஒரு மணிநேரம் பவர் கட் செய்திருக்கிறாங்கள். அதனாலை சீசீரீவீ பதிவில் பவர் சப்ளையை நிறுத்தியது நபர் தொடர்பான பதிவு எதுவும் இல்லை.
கறண்ட் கட்டான விசயம் இவனுக்கும் தெரியும் இவன் கடையில் போய் இருக்க திடீர் பவர் கட் ஆகியிருக்க இன்று மின் வெட்டு தொடர்பான அறிவித்தல் எதுவும் இல்லாததால் இது தற்காலிகமானது என்பதாலும் வீட்டில் சீசீரீவீ கமெராக்களுக்கு யூபீஎஸ் பொருத்தப்பட்டிருப்தாலும் பிரச்சினை ஏதும் வராது என்று எண்ணியவன் வீட்டிற்கு வரவில்லை.
உங்களுக்கு யாரிலையாவது சந்தேகமிருந்தால் சொல்லுங்கோ------ உங்களின்ரை ரெம்பிறரி குடோனின் கதவில் இருக்கிற கைரேகைகள் கிளியராக இருக்கு----- உங்களது லாப்டொப், மொபைல் வைத்திருந்த மேசையில் இருக்கிற கைரேகைகள் எல்லாம் அதனுடன் ஒத்துப் போகுது. பவர் சப்ளையிலும் யூபீஎஸிலும் உங்களின்ரை ரேகைதான் பதிவாயிருக்கு----
சார் அது நான் வீட்டிற்குள் வரும்போது குடோன் திறந்திருக்க-----உள்ளேயிருந்த முக்கியமான இன்ஜின்களைக் காணாததால் சீசீரீவீயை பதிவைப் பார்க்க ----அதிலை கையை வைச்சிட்டேன் என்று சொல்ல------
நீங்கள் வீட்டிற்கு திரும்பி வந்த பதிவுகூட இல்லை. நீங்கள் ஆடிட்டர் ஆபீஸ்க்கு போக முன்பு வீட்டிற்கு திரும்பவும் வந்திட்டு போனதாகச் சொல்லுறீங்கள். அப்போ தான் உங்க வைஃப் கிளம்பிப் போனாங்களா?
உங்க வைஃப் எத்தனை மணிக்கு வீட்டை விட்டுப் போனாங்க?
சார் அவளுக்கு இதுபற்றி தெரிய வாய்ப்பேதும் இல்லை. நான் வீட்டை விட்டு கிளம்ப முன்னமே அவள் போயிட்டாள்.
உங்களின்ரை அறைக்குள் வேறு யாருடைய கைரேகைகளும் இல்லை----இருக்கின்ற கைரேகை அடையாளம் உங்களினது வைஃப் உடையதாகத்தான் இருக்க வேணும். நீங்கள் சொல்லுறபடி பார்த்தால் பவர் சப்ளையை வேறு யாரோ புத்திசாலித்தனமாக நிறுத்தியிருக்கினம்------
போலீஸை ஏமாற்ற முடியுமா? ?? சரி என்னதான் நடக்குது என்று பார்ப்போம் என எண்ணிக்கொண்டான் விஷ்ணு
திருடன்கள் வருவதற்கு முன்னரே சீசீரீவீ கமெராவின் பவர் சப்ளையை யார் நிறுத்தியது என்று உங்களுக்கு ஊகம் ஏதுவும் இருக்கா மிஸ்டர் விஷ்ணு??? யோசிச்சு சொல்லுங்கோ---
அட போங்கோ ஆபீஸர் ---நீங்கள் வேறை ----இதிலை யோசிக்க எதுவும் இல்லை----எனக்கு சந்தேகமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை---- கன்போமாகவே தெரியும்------இந்த வீட்டிலை ஒரு மகாராணி இருக்கிறாள் அவளுக்கு அவளின்ரை அப்பா சொத்து எல்லாத்தையும் என் பெயரில் எழுதியதில் செம கடுப்பு----அவளைத் தவிர யாரும் இதைச் செய்ய வாய்ப்பில்லை.
வீட்டுக்கதவு, கேற் எல்லாத்தையும் அவள்தான் பூட்டாமல் போயிருப்பாள். நான் இருந்த கோபத்தில் என்ரை மொபைலை கொண்டு போகாமல் போயிட்டேன். அதையும் பார்த்திருப்பாள். லாப்டொப் வேறை மேசையிலை இருந்திருக்கும். எல்லாவற்றிற்கும் சேர்த்து ஆப்பு வைக்கிறதிற்காக ---திடீர் திட்டம் போட்டிருப்பாள்---இப்படி தன்மனதில் அந்த போலீஸ் அதிகாரியுடன் பேசியவன் வாய்திறந்து எதனையும் சொன்னானில்லை.
காரணம் அவள் ஒரு இளம் பெண் அவளின் பெயரைச் சொல்லி இந்த விசாரணை வட்டத்தில் அவளைக் கொண்டு வந்து பத்திரிகைகளுக்குத் தீனி போட அவன் தயாராக இல்லை.
அதுவும் அவன் ஏற்றுக்கொண்டானோ இல்லையோ மாமாவால்----மனைவி என்ற ஸ்தானத்தில் நியமிக்கப்பட்டவளை காட்டிக்கொடுத்து அவனது குடும்ப விவகாரத்தை சந்தி சிரிக்க வைக்க அவன் விரும்பவில்லை.
இவள் தரும் இம்சைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இது திட்டம் போட்டு நடந்த திருட்டு இல்லை. சந்தர்ப்பம் சரியாக அமைந்ததால் நடந்த திருட்டு. இவள் ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தியது யார்? அதனைக் கண்டுபிடிப்பது தான் இப்போ முக்கியம்.
இவள் சீசீரீவீ கமெராவின் பவர் சப்ளையை நிறுத்தியது அவனுக்கு எப்படித் தெரியும்? அவனுக்கு தகர கொட்டகையின் பாட்லொக் சாவி எப்படி கிடைத்தது? அதையும் இவள்தான் எடுத்து வெளியில் வைச்சிட்டுப் போயிட்டாளா?
இந்த கேடி ரொம்ப கெட்டிக்காரிதான் போல. நீ ரொம்ப உசாரா இருக்க வேணும்டா குமாரு. இல்லை நீ தூக்கிக்கொண்டு இருக்கும்போது அசால்டா அம்மியையே தூக்கி மண்டையில போட்டு உன்னை உன்ரை அப்பன் அம்மை இருக்கிற ஊருக்கு பார்சல் பண்ணிடுவாள்டா--- என்று மனதின் ஒரு புறம் எச்சரிக்கை செய்ய மறுபுறமோ ---
சீச்சீ---- தாலியெல்லாம் கட்டியிருக்கிறாய் --------நீ பொட்டென்று போயிட்டா அவ மூழியாயிடுவாளேடா----அப்பிடி எல்லாம் செய்ய மாட்டாள்----
அட போடா லூசா! உனக்கு இந்த மாதிரி எண்ணம் எல்லாம் கூட இருக்கா---
நீயே அவளைப் பெண்டாட்டியாய் ஏற்கயில்லை---- அவளுக்கு தாலி சென்டிமென்ட் எல்லாம் இருக்கும் என்று நம்புறாய் பார் ---இருந்தாலும் உனக்குப் பேராசை அதிகம்டா குமாரு-----
அப்பன் வீட்டு சொத்து கொள்ளை போனாலும் பரவாயில்லை உன்னை அலைய விடவேணும் என்று நினைச்சவளிட்டை தாலி---பொட்டு ----பூ-----புருஷன் சென்ரிமென்ட் எல்லாம் எடுபடுமா??
அட—போடா உசாரா இருக்கப் பார்டா ----இல்லை உயிரைவிட வேண்டியது தான்----
மனதுடனான வாத பிரதிவாதங்கள் அவனது மனதின் அடியில் உள்ள பரம்பரை போராட்ட குணத்தை வழமையைப்போல தட்டிவிட
அவனது ‘போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்ற சுபாவம் கருக்கொண்டு மீண்டும் உருக்கொண்டது---
சரிடி! நீ உனக்குத் தெரிஞ்சதைப் பார்! நான் எனக்குத் தெரிஞ்சதைப் பார்க்கிறேன் என்று மனதோடு சூழ் உரைத்தவன் இவளை ஆஃப் பண்ணும் வழி என்ன என்பதைக் கண்டு கொண்ட நிறைவோடு சமகால நடப்பின்மீது கரிசனை காட்டி----
பல லட்சம் ரூபா பெறுமதியான என்ஜின்கள் மற்றும் உதிரிப்பாகங்களை எடுத்துச் போனவனைப் பிடிக்க போலீஸை மட்டும் நம்பியிருப்பது வேலைக்கு ஆகுமா?-இல்லை------ என்ரை பர்ஷனல் நெற் வேர்க்கை கையில் எடுப்பதா?? அப்படி ஒரு நெற்வேர்க்கில் சிக்கினால் அவர்களுக்குக் காலம் முழுக்க கப்பம் கட்ட முடியுமா? என்று நினைக்க மைபைலும் தொலைந்து போன லிஸ்டில் இருப்பது மீண்டும் நினைவிற்கு வர-----யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது என்று புரிந்து கொண்டவன் புதிய பிரச்சனைகளில் சிக்க வேண்டாம் என்று முடிவு செய்து மொபைலில் ஜீபீஎஸ் சிப் இருப்பதால் அதனை எடுத்துச் சென்றவன் போனை ஆன் பண்ணுவதற்காக போலீசுடன் சேர்ந்து காத்திருக்கத் தொடங்கினான்.
நல்ல காலம் இவன் வைச்சிருக்கும் பாஸ்வேர்ட் ஒரு வெத்து வேட்டு அதை சின்னப்பையன்கூட கெஸ் பண்ணுவான். சிம்போலில் அது விஷ்ணுவின் முதல் ஆங்கில எழுத்தான வீ யில் இருந்தது.
இவனது வீட்டிற்கு கராஜ்ஜிலிருந்து பொருட்களைக் கொண்டுவந்த டிப்பர் வாகனத்தின் ஓட்டுநர் தொடக்கம் கராஜ்ஜில் வேலை செய்யும் பையன்கள் விசாரணை வட்டத்தில் வந்திருக்க கராஜில் வேலை செய்யும் பையன்களின் நேர்மைபற்றி சந்தேகப்படாதவன் மிகவும் சங்கடப்பட “விஷ்ணு அண்ணா எப்படியாவது திருடப்பட்ட பொருட்களைக் கண்டுபிடிக்க வேணும் இதெல்லாம் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. எங்களுக்குத் தெரியாதா உங்களுக்கு லட்சக்கணக்கில் லாஸ் ஆகப்போகுது என்று” அவர்கள் இவனுக்கு ஆறுதல் சொல்லும் நிலை ஏற்பட்டிருந்தது. இவன் காப்பீடு செய்யாது அசண்டையாக இருந்தது இப்போது மனக்கஷ்டத்தை அதிகரித்திருந்தது.
இவனுடன் சேரவும் முடியாமல் இவனை விலக்கவும் முடியாமல் லயாவின் அம்மா தவித்துக்கொண்டிருந்தது ஒருபுறம் என்றால்
என்ன இந்தப் பையன் சொல் பேச்சு ஒன்றும் கேட்கிறான் இல்லை. இவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறான். அவள்மேல் இவ்வளவு மயக்கமா? இவனை எப்போது கவிழ்க்கலாம் என்று சுப்பிரமணியனின் குடும்பமே காத்திருக்க--- -
குருவப்பாவைப் பொறுத்தவரையில் இது அவரது நண்பனின் பணம். அதைப்போட்டு இவன் முதன் முதலில் தொடக்கிய தொழில். அதுவும் இவன் ஆசைப்பட்டு தொடங்கிய முதலாவது தொழில் அதில் இவ்வாறான ஒரு பின்னடைவு வந்தது அவருக்கு உறுத்தலாக இருந்தது.
ஒரு தாயாக பாமதியின் மனம் மகளின் வாழ்க்கை சுலபமாக அமையாதோ என்று சுணங்கிப் போயிருந்தது. அதுவும் திருமணம் முடித்த முதல்நாள் மகள் இவனது வீட்டிற்கு வாழ வர அடுத்தநாள் கடுமையான இதய நோயாளியான அவளது அப்பா இறந்து போனது ஒரு எதிர்பார்க்கக்கூடிய நிகழ்வு என்று ஏற்றுக்கொண்டாலும் இம்முறை ஒரு மாதத்திற்கு மேலாக அவள் தங்களுடன் இருந்துவிட்டு இங்குவர அடுத்தநாள் திருட்டு நடந்தது மகளினது அதிஸ்டத்தைப் பற்றி யாராவது எதனையாவது சொல்லிவிடுவார்களோ அதை விஷ்ணுவும் உண்மை என்று நம்பி மகளைப் புறக்கணித்து விடுவானோ என்ற கவலையைத் தர எப்படியாகிலும் விஷ்ணுவுடன் ஒரு தடவை பேசினால் பரவாயில்லை என்ற எண்ணம் தோன்றியிருந்தது.
இது தவிர சிந்தனையற்ற செயல்களால் மகள் தன் வாழ்க்கையைச் சிக்கலாக்கப் போகிறாள் என்ற எச்சரிக்கை மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது.
தானும் அவளது பெரியம்மாவும் இந்த வீட்டிற்கு வந்தபோது தங்களிடம் பேசாது விஷ்ணு சென்றதால் மகள் வீட்டைப் பூட்டாது சென்றிருப்பாளோ என்ற எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. நேரம் செல்லச் செல்ல அந்த எண்ணம் வலுப்பெறத் தொடங்கியது. அதுவும் நாங்கள் நிற்கும்போது வெளியில் போனவன் ஆடிட்டரைப் பார்க்கப் போகும் அவசரத்தில் தான் வீட்டை பூட்டாது சென்றதாக சொல்வது இடித்தது.
இல்லை---இவன் சொல்வது உண்மையில்லை----இவன்ரை முகம் இறுகிப்போய் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு இருப்பது போல இருக்கு. இவன் போனபின்பு நாங்கள்; அரை மணித்தியாலத்திற்கு மேல் இங்கு நின்றிருந்தோமே-------அப்போது தானே கறண்ட் கட்டானது------
நீங்கள் போங்கோ நான் எல்லாவற்றையும் சரிபடுத்துகின்றேன் என்று சொன்னவள் எதிர்மறையாகத் தான் ஏதோ செய்துவிட்டாள் என்பதை இப்போது உறுதியாக நம்பியவர் தயங்கித் தயங்கி இவன் அருகில் வந்து
“மருமகன் லயா எப்போது வருவாள்??” என்ற உலகத்திற்கு மிக அவசியமான கேள்வியை அவனுடன் பேச்சைத் தொடங்க வேண்டும் என்பதற்காகக் கேட்டு வைக்க -----
திரும்பிப் பார்த்தவனின் உணர்ச்சியற்ற முகம் பாமாவிற்குக் கிலியைக் கிளப்பியதென்றால்-----பாமாவின் பயந்த முகம் மகளின் சேஷ்டைகளைத் தாயும் ஊகித்திருப்பதைக் காட்ட
நானும் எப்படா எலிசபெத் மகாராணி வந்து இறங்குவா என்று தான் காத்துக் கொண்டுதான் இருக்கிறன் என்று சொல்ல—
மருமகன் -----அவள் சின்னப்பிள்ளை---நீங்கள்தான் ---என்று முடிக்கவும் தொடரவும் முடியாமல் தவிக்க----
அந்த தவிப்பைப் பார்த்து எரிச்சல் பட்டவன்---சத்தமாக பேசாதையுங்கோ--- சின்னப்பிள்ளை ஒன்றை நான் கல்யாணம் கட்டியிருக்கிறேன் என்று கேள்விப்பட்டால் வந்து நிற்கிற போலீஸ்காரன் கேஸை மாற்றி என்னை உள்ளே கொண்டு போய் போட்;டிடுவான்----
என்னமோ நான் போனால் மாமியார் வீட்டுக்குத்தான் போவேன் என்று ஒற்றைக் காலிலை நின்ற மாதிரி இருக்கு------நீங்கள் பேசுறதும் நீங்கள் பெத்து வைச்சிருக்கிற புண்ணாக்கு செய்யுறதும் என்றவனது ஆத்திரத்தை அடக்கிய பேச்சு வயிற்றில் புளியைக் கரைத்தது.
நான் உள்ளே போய் களி தின்றால் உங்களுக்குச் சந்தோஷமாக இருக்கும். ஆனால் எனக்கு அது தேவையா??
மனவளர்ச்சி இல்லாத ஹாஃப் போயில்ட் கேசுகளுக்கு கல்யாணம் எதுக்கு? கூட இருக்கிறவனுக்குக் குழிபறிக்கவா?? ;
என்னவாம் விஷ்ணு பாமா அம்மா சொல்லுறாங்க----மகள் பெரிய பாக்கியசாலியாமா? தொட்டது எல்லாம் துலங்கும் போல இருக்கு. குரு அண்ணா ப்ளீஸ்-----அவ வாழ்க்கையைக் கெடுத்திடாதையுங்கோ-----
சும்மாவே இந்த கல்யாணம் அவருக்குப் பிடிக்காத ஒன்று -----இவளின்ரை வேலைதான் இதற்கெல்லாம் தொடக்கமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தாலே போதும்----அவ்வளவுதான் அவளுக்குப் பிடிக்காத கல்யாணம் என்று தொடங்கி-------எல்லா அத்தியாயத்தையும் இந்த சம்பவத்தை வைத்தே முடிச்சிடுவார் இந்த ஆள்----கடவுளே என்ரை மகளின்ரை வாழ்க்கையைக் காப்பாற்று------
இந்த பேச்சில் கலந்து கொள்ள விரும்பாதவன் இவையனைத்தையும் தவிர்ப்பதற்காகவே அருகில் நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பேசத் தொடங்க-----
விஷ்ணு! என்று அழைத்த குருவப்பா அவனை அழைத்துக் கொண்டு வீட்டின் மறுபுறம் வந்தவர் ஆத்திரத்தில் பொரியத் தொடங்கினார்.
உன்ரை ஆசைக்கு தடைபோடக்கூடாது என்று நான் நினைக்க நீ------பொறுப்பில்லாமல் இருந்திருக்கிறாய்!! கொஞ்சம் வெள்ளைத் தோலோடை வந்து நின்றவுடனே வீட்டுச் சாவியைக்கூட விட்டு விட்டுப் போற அளவுக்குப் போய்விட்டாய் நீ-------என்ன காரணத்தால் அவள்மேல இவ்வளவு நம்பிக்கை? சொல்லப்பா நானும் தெரிஞ்சு கொள்ளுறன்-------
இதிலை நீ பொய் எல்லாம் சொல்லுறாய் ----நீ இன்றைக்கு காலை ஏழரைக்கே கடையைத் திறந்திருக்கிறாய்------ஆட்டோ ஓட்டுற மாதவன் சொல்லுறான்---------அவன் சவாரிக்கு போகும் போது இன்றைக்கு கடை திறந்திருந்தது என்று-----
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல்தான் பிறந்திருக்கிறாய்??? எல்லாம் தெரிஞ்சும் பெரு நெருப்பிலை போய் விழுந்து திருந்தினவன் அவன்---
நீ---கண்ணிலை கண்ட இரண்டு நாளுக்குள்ளேயே-----சீ என்ன சொல்லுறது என்று பேச------தனது கோபத்தைப் பற்றியோ அதனால் வந்த ஆற்றாமை பற்றியோ விஷ்ணுவால் அவரிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
அவர் மீது கோபம் வருவதற்குப் பதிலாக முட்டாள்தனமான தனது செயலால் அதுவும் கோபப்பட்டு தன்னிலை மறந்து வீட்டைவிட்டு வெளியேறியதற்காக தன்மீதே அவன் கோபம் கொண்டான்.
சொந்தமாகத் தொழில் செய்பவனுக்கு கோபமும் சோம்பேறித்தனமும் தான் முதல் எதிரிகள்.
கோபம் முதலில் கொண்டவனையே அழிக்கும் என்பதற்கு இந்த அனுபவம் எனக்குப் போதும் என்று நினைத்தவன் அவரது கோணத்திலிருந்து இன்றைய பிரச்சினையை அணுக முற்பட்டான்.
இவன் லயாவைத் திருமணம் செய்தது முதல் பல லட்சம் ரூபாவை தொழிலிலிருந்து எடுத்திருந்தான். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மாமாவின் தொழில்களுக்கு அப்பால் இவனும் இவனுக்குப் பிடித்த தொழிலில் கால் வைக்க விரும்பியதும் ஒன்று.
இவன் வேலை செய்த கராஜ் ஓனர் மகனுடன் லண்டன் சென்று வசிக்க முடிவு செய்து கராஜ்ஜையும் அவரது பெற்றோல் பங்க்கையும் விற்பனை செய்ய முடிவு செய்ய------ கோடிகளில் அவற்றின் பெறுமதியிருக்க -----இவனுக்கு மிகவும் பிடித்த தொழில் மட்டுமல்ல தெரிந்த தொழிலும்கூட என்பதனால் அதனை வாங்க ஆசையிருந்தும் அடுத்தவர் சொத்தை எப்படி தனது விருப்பப்படி கையாளுவது என்று தயங்கியவன் மௌனமாக இருந்து விட---
கராஜ் முதலாளி குருவப்பாவிடம் இவனது விருப்பத்தை நாசூக்காகத் தெரிவிக்க ஆச்சரியப்படத்தக்க வகையில் குருவப்பா மட்டுமல்லாது கணக்கர் சோமுவும்கூட பக்கபலமாக நின்று அவன் கராஜ்ஜையும் பெற்றோல் பங்க்கையும் வாங்க துணைநின்றனர்.
பணம் கையில் இருந்தால் மலையைக்கூட மணித்தியாலத்தில் சரிக்கலாம் என்பதை அனுபவத்தில் கண்டவனுக்கு பிடித்த வேலையை விரைவாக செய்து முடிக்க சரியாக திட்டம் வகுப்பது சுலபமாக இருந்தது.
கராஜ்ஜில் பல திருத்த வேலைகள் இருக்க அதனுடன் சேர்த்து ஒரு சேவீஸ் ஸ்ரேசனையும் போட முடிவு செய்தவன் அதற்கான வேலையில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு ஒரு தற்காலிக தகர கொட்டகையை வீட்டில் அமைத்து கராஜ்ஜின் முக்கிய பொருட்களை இங்கு மாற்றியதுடன் அதன் பாதுகாப்பிற்கு சீசீரீவீ கமெராவைப் பொருத்தி அதனைக் கண்காணிப்பதற்கான ஆப்பினை டவுண்லோட் செய்வதற்காக புதிய ஆன்றோயிட் போனையும் வாங்கி அதனை இன்ஸ்டால் செய்திருந்ததுடன் அதனை அடிக்கடி கண்காணித்துக் கொண்டும் இருந்தான்.
அண்மையில் பெய்த மழை வெள்ளத்தில் சிக்குப்பட்டு இரண்டு கஸ்டமர்களின் கார் என்ஜின் சீஸ்( Seize) ஆகியிருக்க அவற்றினை மாற்றுவதற்கென பழைய ஓனர் வாங்கிவைத்திருந்த என்ஜின்கள் கார் மற்றும் லாரிகளுக்கான உதிரிப்பாகங்கள் எல்லாமாகச் சேர்ந்து பல லட்சங்கள் பெறுமதியுடையவையாக இருக்க அவற்றைப் பொருத்தி முடிப்பதற்கு முதலில் கராஜ் மறுசீரமைப்பு அவசியம் எனக் கண்டவன் அவை அனைத்தையும் இங்கே கொண்டு வந்து வைத்திருக்க வந்த திருடர்களுக்கு அது நல்ல வாய்ப்பாகப் போயிருந்தது.
அவன் தொழிலிருந்து பணம் எடுக்க இன்னொரு காரணம் அவனுக்கும் லயாவிற்கும் நடந்து முடிந்த திருமணம். அவளுக்கென்றே ---அவளின் பாதுகாப்புக்கென்றே ----அவளின் வசதிக்கென்றே கட்டப்பட்ட புதிய பாத்றூம் முதல் வீட்டில் செய்யப்பட்ட திருத்தங்கள் சில லட்சங்களை விழுங்கியிருந்தது.
பாவம் லயா அவளுக்குப் பல விஷயங்கள் தெரியவில்லை. எல்லாம் தெரிந்திருந்த அவளது தாய் பாமதி பல விபரங்களை அவளிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. காரணம் லயா ஒரு நேர்மைப் பித்து. தனது பொருளை அடுத்தவருக்குக் கொடுக்கவும் மாட்டாள் அடுத்தவர் பொருட்களுக்கு ஆசைப்படவும் மாட்டாள்.
உண்மைகளைச் சொன்னால் அவள் எப்படி அதனை எடுப்பாள் என்பது பாமதிக்கும் தெரியும். இதனால் அப்பாவிற்கு செய்து கொடுத்த சத்தியம், அப்பாவின் கௌரவம் என்று சொல்லி சொல்லி எல்லாவற்றையும் தக்க வைக்க அவர் எடுக்கும் முயற்சிகள் திரௌபதையை பணயம் வைத்த பாண்டவர்களின் செயலுக்கு ஒப்பானதாக நிலைமையை மாறப்போவதை ஒரு சாணக்கியனாக வாழ்ந்த சுப்பிரமணியனின் மனைவி கணிக்க மறந்திருந்தார்.
விஷ்ணு என்ற பெருநெருப்பு எத்தகையது என்பதை துல்லியமாக மதிப்பிட அவர் மட்டுமல்ல குருவப்பாவும் தவறியிருந்ததை பட்டுத்தான் இருவரும் புரிந்து கொண்டனர்.
ஒருவர் அவனது விஸ்வரூபத்தில் புளகாங்கிதப்பட மற்றவர் புழுவாகிப்போனது காலத்தின் கோலம் என்று சொல்லாது வேறு என்னவென்று சொல்ல முடியும்?
லயாவைப் பொறுத்தவரை விஷ்ணு அவளுக்கும் அவளது அக்காக்களது குடும்பத்தினருக்கும் உரிமையான சொத்தை அவளது தந்தையை கையுக்குள் போட்டுக் கொண்டு அபகரித்தவன்.
அவளுக்கு இவன் கராஜ்ஜை வாங்கியதோ அந்த தகரக்கொட்டகை ஒரு தற்காலிக குடோன் என்பதோ தெரிந்திருக்கவில்லை. அவனது வீட்டிற்கு எதற்கு சீசீரீவீ கமெரா என்ற கேள்வியைக் கேட்கும் அளவிற்கு யோசிக்காதவளுக்கு அவனது வீடு இருக்கும் இரண்டு ஏக்கர் நிலமும் முட்கம்பி வேலியாலும் தகரத்தாலும் அடைக்கப்படவும் வீடு திருத்தப்பட்டதற்கும் புதிய பாத்றூம் கட்டப்பட்டதற்கும் புதிதாக இவன் பணக்காரன் ஆனது மட்டும்தான் காரணம்.
அவன்மீதான கோபம் ஆற்றாமை பெரிதாகப் படிக்காதவன் என்ற கீழான நினைப்பு அவனை மட்டுமல்ல அந்த வீட்டின் சூழல், அவனது முழுமையான ஆளுமைக்குள் தந்தையின் தொழில் வந்திருப்பது போன்ற எதனையும் அறியவிடவில்லை.
அதுவும் புதிதாக வந்த ஒருவன் அப்பா இறப்பதற்கு முன்னர் சில மாதங்கள் இறந்தபின் ஒரு மாதம் என்று குறுகிய காலப்பகுதியில் எப்படி அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தான்?
இவை அனைத்து தகவல்களையும் கேட்ட பாமதிக்கும் அவரின் மற்றைய இரு மகள்கள் மருமகன்கள் பார்வதி அம்மாள் எல்லோருக்கும் அவன் புதிராக இருக்க-----
கோபத்தையும் எரிச்சலையும் மட்டும் தலை நிறைய சுமந்து கொண்டிருப்பவள் அவன்முன் எதனைச் சாதித்துவிட முடியும்?
இது போதாதென்று திருமணம் நடந்த அன்று ஒரு அரைநாள் நேற்று ஒரு அரைநாள் என்று அவன் வீட்டில் கழித்த அந்த சொற்ப காலப்பகுதி அவளது குடும்பத்தார் அவனையும் அவனது தாயைப்பற்றியும் சொன்ன கதைகள் எல்லாம் சேர்ந்து அவளை அறிவுக்கண்கொண்டு எதனையும் பார்க்க விடவில்லை.
அவன் ஒருபக்கம் குருவப்பாவிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்க ----
அவனைப் பழிவாங்குவதாக நினைத்துப் பஸ்ஸில் ஏறிய லயாவிற்கு முதலில் திருப்தியாக இருந்தபோதும் நேரம் செல்லச் செல்ல தான் தப்பு செய்திட்டேனோ என்ற எண்ணம் தோன்றி அவளது மனதை அலைப்புறச் செய்து கொண்டிருந்தது.
அறிவியல் நகரிலிருந்து அவளது யூனிக்குப் போக மூன்று மணித்தியாலங்கள் எடுக்கும். வழமையில் அவள் திங்கட்கிழமை காலையில் புறப்பட்டு ஹாஸ்டலுக்கு வந்துவிடுவாள் மீண்டும் வெள்ளி மாலையில் அவள் ஊர்வருவது வழக்கம்.
கடந்த இரு வாரங்களாக அவள் தொடர்ந்து ஹாஸ்டலில் தங்கவில்லை. காரணம் அப்பாவினது முப்பத்தியோராம் நாள் காரியங்கள். இன்று அவள் மறுபடியும் ஹாஸ்டலுக்கு வருவதற்கு ஆயத்தமாகப் புறப்பட்டிருக்க விஷ்ணு அவளது அம்மாவிற்கு ஒரு மரியாதையும் தராதது ஆத்திரத்தை ஏற்படுத்த அவனுக்குப் பாடம் கற்பிப்பதற்;கென்றே அனைத்து வேலைகளையும் செய்திருந்தாள். ஆனால் அந்த சந்தோஷம் சில மணித்தியாலங்கள்கூட நிலைத்திருக்கவில்லை.
ஏதாவது தப்பாக நடந்திருக்குமா? திருட்டுப் போகும் அளவிற்கு அந்த வீட்டில் எதுவும் இல்லையே-----அப்போ அந்த தகர கொட்டகைக்குள் ஏதாவது பொருட்கள் இருந்திருக்குமா? அதனால்தான் சீசீரீவீ பொருத்தியிருக்கிறானா? என்று பலவாறாக எண்ணித் தவித்தவள் நஷ்டம் போனாலும் அவளது அப்பாவினது சொத்துக்கள் அல்லவா போகப்போகிறது. அப்போ நஷ்டம் உண்மையில் இவளது குடும்பத்திற்குத் தானே. இது அவளது அப்பா---- தாத்தா----அவர்களது உழைப்பல்லவா-----
நிச்சயமாக அப்பாவின் ஆத்மா என்னை மன்னிக்காது என்று குழம்பியவள் ஹாஸ்டலில் தங்காது மீண்டும் வீட்டிற்கு வர அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
இவள் செய்த எதனையும் தனக்குத் தெரியும் என்பது போல காட்டாதவன் இவளது கனவைச் சுக்குநூறாக உடைக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்தான். தவித்துத் தவித்து அழுதவள் முதற்தடவையாக அவனை அவனது அணுகுமுறைகளை அவன் பிரதிபலிப்புக் காட்டும் முறையைக் கண்டு பயந்து போயிருந்தாள்.
(தொடரும்)

Last edited: