கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 13

மிருணா சொல்வதை மூவருமே பார்க்க, "என்ன அப்படி பார்க்கறீங்க? நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு? .... உழைப்பு விட,, பணம் பெரிசு இல்ல... பணம் எந்த வழில வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் உழைப்பு அதை எங்களை போல உழைப்பாளிங்களால தான் கொடுக்கணும்... அப்படி உண்மையா உழைக்கறவிங்களுக்கு, நீங்க எவ்வளவு செஞ்சாலும் தகும்.. செய்யறதுக்கு கணக்கு பார்க்க கூடாது"

"இங்க வேலை செய்யற பெண்களோட குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கறதுக்கு ஒரு பிலே ஸ்கூல் ஆரம்பிச்சிட்டா வேலை செய்யற பெண்களும் நிம்மதியா இருப்பாங்கள"...

"இப்படி ஒவ்வொரு விசயமும் நீங்களா பார்த்து, பார்த்து செய்யணும்" என்றாள் கருணாவையும், நேத்திரனையும் முறைத்தவாறு..

"நீ சொல்றதுலாம் செய்ய எவ்வளவு செலவு ஆகும்னு தெரியுமா? " என்றான் நேத்திரன்

"ஆகும் தான்... லாபம் வந்தா, அதை எங்களுக்கா கொடுக்கறீங்க, அதே மாதிரி செலவு ஆனாலும், நீங்க தான் பார்க்கணும் " என்றவள் "அது md யோட கவலை மிஸ்டர் நேத்திரன்... என்னமோ உங்க பணத்தை எடுத்து செலவு பண்றமாதிரி ரொம்பதான் பீல் பண்றீங்க? " என்றாள் வெடுக்கென்று

"என்னோட பணமா இருந்தா என்ன? md யோட பணமா இருந்தா என்ன"?என்றான் அவனும் வெடுக்கென்று

"அப்போ நீங்க தொழிலாளர் இல்லை... உங்களுக்கு இந்த சலுகைகள் எல்லாம் வேண்டாம் அப்படின்னுதானே சொல்றிங்க? "..

பதில் சொல்ல முடியாமல் மிருணாவை முறைத்தவன் "என்னமோ பண்ணுங்க" என்பது போல் அமைதி ஆகிவிட்டான்

"நீ சொல்றதும் சரிதான் மிருணா. சீக்கிரம் இதை பத்தி நம்ப யோசிக்கலாம்" என்றார் கதிர்

கருணாவிற்கோ மிருணா பேசாமல் இருக்கிறாளே என்ற கவலை, அதனால் அவள் பேசிய எதையும் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை விட்டால் அவன் இப்போதே எல்லாத்தையும் செய்து கொடுத்தாலும் கொடுத்துவிடுவான்...

சாயங்காலம் செல்லும் போது மிருணா எப்படி போவது என்று முழிக்க கருணாவோ " மிரு நானே உன்னை ட்ராப் பண்ணிட்றேன்" என்று என்றான்

"தேவை இல்லை மிஸ்டர் கருணா" என்றவள் பக்கதில் ஒரு ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்தாள்...

கருணா, மிருணா பேசாமல் போனதால் சோகமாக இருக்க, அதை பார்த்த நேத்திரன் "அவ்வளவு பாசமா" என்றான்

"அவ இதுவரைக்கும் பேசாம இருந்தது இல்லை அதான்" என்றவன்... "நான் கிளம்பறேன்" என்றவனிடம் கொஞ்சம் நேரம் நேத்திரன் பேசிக்கொண்டிருந்த இருவருமே தனி தனியாக கிளம்பினர்..

அடுத்து வந்த நாட்களில் யாரும், யாரையும் தொல்லை செய்யாமல் அவரவர் வேலையை செய்துகொண்டிருக்க, கருணா மட்டும் அடிக்கடி. மிருணாவின் முகம் பார்த்துக் கொண்டிருந்தான். அவளோ இவனை கண்டுகொள்ளவே இல்லை..

நேத்திரன் சதாசிவத்திடம் பேசி அப்படியே அவனுடைய வீக்பாயிண்டை கண்டுபிடித்துகொண்டான், அதான் மூலம் அவனை சிக்க வைக்க முயற்சி செய்ய ஆரம்பித்தான்.

"சதா அண்ணா, நீங்க பணம் எடுக்கறிங்கனு மேல் இடத்துல இருந்து தகவல் வந்தது, என்னையும் கொஞ்சம் அதில் சேர்த்துக்கறிங்களா?" என்று அவன் பக்கம் சேர்ந்தான் நேத்திரன்,

"பண்ணலாமே நேத்திரன் தம்பி, ஆனால் நீங்களும் கொஞ்சம் உதவியா இருக்கனும், அப்போதான் இவ்வளவு நாள் கொஞ்சம், கொஞ்சமா எடுத்துட்டு இருந்ததை, பெருசா எடுக்க முடியும்" என்றான் அவன். இன்னும் அதிகமாக எப்படி எல்லாம் கையாடல் செய்யலாம் என்று சதாசிவம் சொல்ல, சொல்ல
அதை எல்லாம் அவனுக்கே தெரியாமல் ரெகார்ட் பண்ணிக்கொண்டவன்... அதற்கு வேலை வைக்க, தக்க தருணத்தை எதிர்ப்பார்த்துகொண்டிருந்தான்...

அதற்கான நேரம் அவனுக்கு பக்கமாக கிடைக்காமலே போனது.

சதாசிவத்திடம் நேத்திரன் இலகுவாக பேசுவதால் அவன் எந்த பிரச்சனையும் கம்பெனியில் செய்யாமல் இருந்ததால் கருணாவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது..

ஒரு வாரம் போயிருக்கும் நேத்திரன் மிருணாவிடம் இருந்து தள்ளியே இருந்தான்... அவளுக்கும் வந்த நாள் அன்று தன்னிடம் வம்பு இழுத்தவன், அதன்பின் தினமும் வம்பு இழுப்பான் என்றுதான் எதிர்பார்த்தாள்... ஆனால் அவளின் நினைவை பொய்யாக்கும் படி மிருணா இருந்த இடமே அவன் தலை காட்டவில்லை....அவன் வம்பு இழுத்திருந்தால் கூட அவனை பிடிக்காமல் போயிருக்குமோ? என்னவோ? ஆனால் இப்போதோ அவன் தள்ளி, தள்ளி போகவும் மிருணாவிற்கு அவனை வம்பிழுக்க வேண்டும் என்று மனம் துடித்தது

அதே போல் கருணாவோ கெஞ்சி கொஞ்சி கடைசியில் மிருணாவை பேசவைத்துவிட்டான்... ஆனால் தன்னுடைய வண்டியில் தான் போவேன் என்பதில் உறுதியாக இருந்தாள் மிருணா

ஒரு நாள் மிருணாவிடம் வந்த ஒரு பெண்... அக்கா எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகட்டுமா என்றாள்

எடுத்துக்கோடா நான் கருணா கிட்ட சொல்லிடறேன்.. ரொம்ப முடியலைன்னா ஹாஸ்பிடல் போலாமா என்றாள்...

இல்லை அக்கா கொஞ்சம் நேரம் தூங்கி எழறேன்..மந்திலி ப்ரோப்லேம் தான் என்றவள்... நூல் முடிச்சிருச்சினா கோன் மாத்தணும் அக்கா.. எல்லோரும் சாப்பிட போய்ட்டாங்க கொஞ்சம் அதை பார்த்துக்கறிங்களா அக்கா என்றாள் அழுகையுடன் அந்த பெண்

சரிடா நீ அதை பத்திலாம் கவலை படாத நான் பார்த்துக்கறேன் நீ போய் ரெஸ்ட் எடு முதல என்று அனுப்பிவைத்தவள்...கோனை மாத்த போனாள்....

அங்கு இருந்த அனைவரும் சாப்பிட போயிருக்க 2பேர் மட்டும் ஒட்டு மொத்தமாக 5லைன்னையும் ஓடி ஓடி பார்த்துக் கொண்டிருந்தனர்

யாரவது பாதி பேரை மட்டும் சாப்பிட அனுப்பிருக்கலாமே பாவம் இவர்கள் இருவரும் என்று நினைத்தவள் ...அங்கு கோன் முடிந்து நூல் சுத்திகொண்டிருந்தது... அதை பியித்து எடுத்துவிட்டு வேற கோனை போட வேண்டும், முதல் தடவை செய்வதால் மிருணாவிற்கு அந்த நூலை பிய்க்க தெரியாமல் வேகமாக இழுக்கவும் நூல் கையை கிழித்துக்கொண்டு சென்றது... அதில் ரத்தம் வர அங்கு ரவுண்ட்ஸ் வந்த நேத்திரன் அதை பார்த்துவிட்டான்...

ஏய் யாழு கைல ரத்தம் பாரு.. அப்படி என்ன வேலை செஞ்ச... இப்படியா அஜாக்கிரதையா இருப்ப என்று அதட்டியவன் அங்கு இருந்த துணியை எடுத்து கையில் கட்டு போட்டு விட்டான்

ஒன்னும் இல்லை நேத்திரன் நூல் தான் கிழிச்சிருச்சி... என்றாள்

உன்னை யார் இதுலாம் பண்ண சொன்னாங்க என்றவன் வா போலாம் என்று அவள் கையை பிடித்து அழைத்து போனான்.. அவன் அருகாமையில் மிருணாவின் உடல் சிலிர்க்க அவளுக்குள் எதுவோ ஆவதுபோல் இருந்தது... அவன் மேல் வீசிய பர்ப்ஃயும் வாசனை அவளை வேறு உலகிற்கு அழைத்து போவது போல இருந்தது, அது உயர்ரக பாரின் சென்ட்டின் வாசமாக தான் இருக்கும் என்று அவளுக்கு புரிந்தது இருந்தும் முதல் நாள் ஆட்டோவில் வந்து இறங்கியவனுக்கும் இந்த பர்ப்ஃயும்க்கும் சமந்தமே இல்லையே என்று மூளை சொன்னாலும் மனமோ.. அதுலாம் இப்போ ரொம்ப முக்கியம்... அவன் பக்கத்துல வந்தா உனக்குள்ள எதுக்கு இந்த படபடப்பு, அடிவயிற்றுல ஏதோ சுள்ளு சுள்ளுனு இழுக்க மாதிரி இருக்கே என்று நினைத்தவள் முதன் முறையாக அவனின் அருகாமையில் தன்னை துளைத்துக்கொண்டிருந்தாள் ... அவளின் மூளை வேற ஒன்றை அறிவுறுத்த .. ஆமா என்னோட மனதை நான் அலைபாய விட மாட்டேன்.... என்று மனதை கட்டுக்குள் கொண்டு வந்தாள்

யாழு கேக்குதா நான் என்ன சொல்லிட்டு வறேன் நீ எதுவுமே பேசாம வர என்றான்

ஹாஆஆஆ என்ன கேட்டீங்க நேத்திரன் என்றாள்

உங்க கையில என்ன தழும்புனு கேட்டேன் என்றான்

அதை கேட்டதும் அவ்வளவு நேரம் அவன் அருகாமையில் மென்மையாக இருந்த முகம் இறுகி கறுத்தது

என்னாச்சி மிருணா நான் ஏதாவது தப்பா கேட்டுட்டனா என்றான்

இல்லை அப்படிலாம் இல்லை அது ஒரு ஆக்ஸிடன்ட் என்றவள்.... அதைவிடுங்க உங்கள பத்தி சொல்லுங்க நேத்திரன் அம்மா அப்பா எல்லாம் என்ன பன்றாங்க என்றாள்

அவங்க பிஸ்னஸ் பண்றாங்க எனக்கு அதுல சேர்ந்துக்க விருப்பம் இல்லை அதான் வேலைக்கு வரேன் என்றான்

ஓ சரி என்றவள் மனதை அடக்கிகொண்டாள்

அன்று முதல் நேத்திரனின் பார்வை மிருணாவின் மேல் இதமாக வந்து மோதி செல்லும்

நேத்திரன் வந்து ஒரு மாதம் ஆக போகிறது... அன்று கையில் பணம் வாங்குவதற்க்குள் எப்படியாவது சதாசிவத்தையும் அவனுடைய ஆட்களையும் வெளியேற்றி விடணும் என்று நினைத்தவன் அதற்கான ஒரு திட்டத்தை போட்டு அதை கருணாவிடம் சொல்லி செயல் படுத்த முடிவு செய்தான்.

திட்டம் எல்லாம் நல்லாபடியாக போட்டனர்.. அதன்படி 1லட்சம் பணம் காணவில்லை என்று அனைவரையும் அழைத்து சொல்லினர் கருணாவும் நேத்திரனும்..

நேத்திரன் தன் பக்கம் என்பதாலும் தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்பதாலும் சதாசிவம் கொஞ்சம் மெத்தனமாகவே இருந்தான்

அவன் ஒருவனால் இவ்வளவு பெரிய கம்பெனியையும் ஆட்டிவைக்க முடியாது என்று தெரிந்துகொண்ட நேத்திரன் அவன் பின்னால் இருக்கும் ஆட்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று போலீஸ் மூலமாக மூவ் பண்ண ஆரம்பித்தான்..

போலீஸ் வந்ததும் பல உண்மைகள் வெளிவரும் இதில் யார் அதிகம் பாதிக்கபடுவார்கள்
 
Top