கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 18

மிருணா மெதுவாக எழுந்து வீட்டிற்கு சென்றவள் ...வேணியோடு சேர்ந்து சாப்பாட்டிற்கு உதவி செய்துகொண்டிருந்தாள்...

அவர்களுடன் கருணாவும் வந்து சேர்ந்துகொள்ள "அத்தை என்ன சமையல் இன்னிக்கு" என்றான்

"உனக்கு என்ன? கருணா வேண்டும் சொல்லு செஞ்சிடலாம்" என்றார் வேணி

"அம்மா அப்படி அவன் கிட்ட கேக்காத அப்புறம் வீட்டுல இருக்கற எல்லாத்தையும் வெச்சி நீ செஞ்சிகுடுத்தாலும் முழுங்கி கடோத்கஜன் போல ஏப்பம் விட்டுடு கல்யாணம் சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்னு என்று பாட்டு பாடுவான் " என்றாள் மிருணா

"என்னை பார்த்தா அப்படியாடி தெரியுது குரங்கே, நீதான் இப்படி தின்னு தீர்ப்பனா என்னையும் உன் லிஸ்ட்ல சேர்த்தாத..நீதான் லேடி கடோத்கஜன்" என்றான்

"யாரை பார்த்துட்டா லேடி கடோத்கஜன் சொல்ற கருவாயா "என்றவள் வேணி தேய்த்து கொண்டிருந்த பூரி கட்டையை பிடுங்கி அவனை அடிக்க வந்தாள்

அதை பார்த்த கருணா "அத்தை இப்படி சொதப்பி அவகிட்ட வெப்பைனை குடுத்துட்டீங்களே இனி என்னோட மண்டையை உடைக்காமல் விடமாட்டாள்" என்று ஓட ஆரம்பித்தான் கருணா ஓட மிருணா துரத்த அதை பார்த்த வேணிக்கு சந்தோசமாக இருந்தது..

கருணா வீட்டுக்கு வெளியே ஓட அவனை விடக்கூடாது என்று வெளியையும் துரத்திகொண்டு வந்தாள் மிருணா

இருவரும் ஓடிபிடித்து விளையாடுவதை மேல அவன் ரூமின் பால்கனியில் இருந்து மித்ரன் பார்த்தான்...

"ஏய் நில்லுடா கருவாயா யாரை பார்த்து தின்னிபண்டாரம்னு சொன்ன" என்று கத்திகொண்டே அவனை துரத்த அங்கு போன் பேசிக்கொண்டிருந்த கதிர் போன்னை வைத்துவிட்டு இவர்களை பார்த்து "என்ன ஆச்சி மிரும்மா" என்றார்

"மாமா என்னை பார்த்து லேடி கடோத்கஜன் சொல்றான் என்னை பார்த்தா அப்படியா தெரியுது " என்றாள் சிணுங்கலுடன்

"ஏண்டா கண்ணு தெரியாதவனே பிள்ளையே இக்குமாறு குச்சி மாதிரி இருக்கு அதை போய் இப்படி சொல்றியே "என்றவர் "ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் இப்படிதான் இருப்பாங்கன்னு கேள்விபட்டுருக்கேன் மிரும்மா அதனால அவன் அப்படி சொல்லிருப்பானோ "என்று யோசிப்பது போல நடித்தார்

அதை கேட்டு கருணா சத்தமாக சிரிக்கவும்

"மாமா இதுக்கு இவனே பரவால்ல" என்றவள் காலை தரையில் உதைத்துவிட்டு கருணாவை பிடித்து நாலு மொத்து மொத்திவிட்டு சென்றாள்...

இதை எல்லாம் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த மித்ரனுக்கு உள்ளுக்குள் எரிய ஆரம்பித்தது... என்னை அனுப்பிவைச்சிட்டு இதுங்க எவ்வளவு சந்தோசமா இருந்துருக்காங்க என்று புகைந்தவன் "உன்னோட இந்த சிரிப்பு இனி உங்கிட்ட இருக்காதுடி".. "எவ்வளவு சிரிக்கணுமோ நல்லா சிரிச்சிக்கோ .... இனி உன்னோட உதட்டுல சிரிப்பே இல்லாத மாதிரி பண்றேன்" என்று வயிறு எரிந்தவன் இவர்கள் அடிக்கும் கூத்தை பார்க்கமுடியாமல் உள்ளே சென்றுவிட்டான்

இதை எதையும் அறியாமல் சந்தோசமாக விளையாண்டு கொண்டிருந்தனர் இருவரும்...

அடுத்த நாள் மித்ரன் அமெரிக்கா கிளம்பவதற்கு தேவையான பர்ச்சேஸ் செய்ய ஷாப்பிங் கிளம்பிவிட்டான்

அப்போது மிருணா சொர்ணத்திடம் வந்தவள்" என்ன கிழவி உன் பேரன் திரும்பவும் அமெரிக்கா போறேன்னு சொல்றானே நீ போக வேண்டாம்னு எதுவும் சொல்லலையா" என்றாள்

"நான் சொன்னா அப்படியே கேட்டுட்டு தான் வேற வேலை பார்ப்பீங்க போடி" என்றார் சொர்ணம்

"நான் கேக்க மாட்டேன் அது வேற விசியம் ஆனால் உன்னோட பேரன் கேப்பான்ல "என்றவள் "நீ சொல்லித்தானே அங்க இருந்து வந்தான் "என்றாள்

"என்னது நான் சொல்லியா!.... யார்? சொன்னது அப்படினு "... "அவன் கிட்டா 1வருசமா நானும் கெஞ்சி கொஞ்சி அழுது பார்த்துட்டேன் அவன் கேக்கல இப்போ வந்து நான் சொன்னதுனாலதான் வந்தானு உளறிட்டு இருக்கீயா" என்றார்

"அவன் அப்படி தானே சொன்னான்... சரி கிழவி அதை விடு இப்போ உன் பேரன் திரும்ப போனா உனக்கு சந்தோசமா? "என்றாள்

"நான் எப்போடி அப்படி சொன்னேன் எனக்கு என் பேரன் என்னோடவே இருக்கனும்தான் கொள்ளை ஆசை ஆனால் அவன் சொன்னா கேக்க மாட்டேனே "என்றார் கவலையாக

"அதுக்கு நான் ஒரு ஐடியா சொல்றேன் செய்யறீயா "என்றாள் மிருணா மெதுவாக

அவள் மேல இருந்து கீழ் வரை பார்த்த சொர்ணம் "நீ அவ்வளவு நல்லவ இல்லையே " என்றார்

"எல்லாம் என் நேரம், உனக்கு போய் ஐடியா சொல்ல வந்தேன் பாரு என்னை சொல்லனும். வேண்டாம்னா போ" என்று கோவமாக போவது போல நடித்தாள்

"சரி சரி சொல்லு" , என்றவர் "இவ்வளவு நாள் என்மேல இருந்த கோவத்தை இதுல காட்டிடாதடி " என்றார் பாவமாக

"உன்மேல எனக்கு செம கோவம் இருக்கு அதுக்குனு போய் நீ பண்ண அதே ஈனதனத்தை நானும் பண்ணமாட்டேன் அப்புறம் உனக்கு எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கு" என்றவள்.... "சும்மா உனக்கு கையில அடிபட்ட மாதிரி ஒரு கட்டு போட்டுப்போம் அதை வெச்சி உன் பேரனை போகவிடாம பண்ணிடலாம் என்ன செய்யறீயா? "என்றாள் மிருணா.

"எனக்கு புரியலை புரியறமாதிரி சொல்லு"என்றார் சொர்ணம்

"ஆமா புரியறமாதிரி சொன்னா மட்டும் புரிஞ்சி கிழிச்சிடறத போல பேசுது பாரு" என்று தலையில் அடித்துக்கொண்டவள் , "இங்க பாரு "கிழவி உனக்கு கையில அடிபட்டுருச்சி, நான் தான் உனக்கு அடிபட்டப்ப பார்த்து ஹாஸ்பிடல் கூடிட்டு போய் கட்டு போட்டுட்டு கூட்டிட்டு வந்துருக்கேன்னு அப்படினு நீ எல்லார்கிட்டயும் சொல்லணும் "..."இதை பார்த்தது உன் பேரன் பீல் பண்ணுவான், அந்த கேப்பை நீ யூஸ் பண்ணி சந்தடி கேப்பல கெடாவே வெட்டற என்ன சரியா "என்றவள் "உனக்குலாம் நடிக்க கத்துகொடுத்தா அந்த சரோஜாதேவியே தோற்த்து போய்டுவாங்க நீ அந்த அளவுக்கு நடிப்பியே " என்றாள்..

"அது இருக்கட்டும் என் பேரன் ஊருக்கு போறதுக்கு என்னையவிட நீதான் ரொம்ப கவலை படற போல" என்றார் சொர்ணம்

"நினைப்புதான் பொழைப்பை கெடுக்குமாம் அது மாதிரி இருக்கு உன்னோட பேச்சி".... "நான் எனக்காகவோ இல்லை உனக்காகவோ செய்யலை சாந்தி அத்தைக்காக செய்யறேன் ".. "அவங்க எனக்காக தான் மித்ரனை மாமாவீட்டுக்கு அனுப்புனாங்க, அதனாலதான் மித்ரன் சாந்தி அத்தையை வெறுக்கிறான், இதனால இப்போ சாந்தி அத்தை பையனை பிரிஞ்சி இருக்காங்க, அதுக்காக மட்டும் தான் செய்யறேன் "என்று மூக்கு விடைக்க சொன்னவளை அதிசயமாக பார்த்தார் சொர்ணம்

"அவங்க பையனை நான் திரும்ப அவங்களுக்கு குடுக்கணும்னு நினைக்கறேன்". "அதும் இல்லாம அத்தை மித்ரனை இங்க இருந்து அனுப்ப நீதான் முழுகாரணமே அதனால தான் உன் கையை உடைக்க பார்த்தேன் எதோ வயசாய் போய்ச்சேனு பாவம் பார்த்து சும்மா கட்டுமட்டும் போடலாம்னு பார்த்தா நீ ரொம்ப ஓவரா பேசற அதனால உன்னோட கையை கொடு உடைச்சே கட்டு போட்டுடலாம் "என்றாள்

"அடிப்பாவி ஒரு பேச்சிக்கு கேட்டா இப்படி பொறும்பி தள்ளற... நான் பாவம்டி "என்றார் சொர்ணம்

"நீயா பாவம் நீ செஞ்ச வேலைக்கு உன்னை எல்லாம் ஆளே இல்லாத தனி காட்டுல கொண்டு போய் விட்டுருக்கணும் வயசாய் போய்டுச்சேன்னு ஒரே ஒரு காரணத்தால தப்பிச்ச கிழவி அதனால வாய் அதிகம் பேசாம அடங்கியே இரு" என்றாள்...

"ஐயோ ஐயோ என்னமா பேசறடி.... திமிருபிடிச்சவளே" என்றார்

"ஆமா என்னோட சொந்த உழைப்புல சாப்பிடறேன்ல அந்த திமிர் தான்" என்றவள் "இங்க பாரு உன்னோட பேரன் இங்க இருக்க வைக்க மட்டும்தான் நம்ப கூட்டணி , அதுக்கு அப்புறம் நீ யாரோ நான் யாரோ... இதையே காரணம் வெச்சிட்டு என்கிட்ட பேசவந்த உண்மையாலுமே உன் கையை உடைச்சிருவேன் "என்று மிரட்டினாள்

"என்னடி அப்போ காரியத்துக்கு மட்டும் என்னை யூஸ் பண்ணிக்கறியா??"

"இல்லைனு பொய்யலாம் சொல்லமாட்டேன்.... உங்கிட்ட எப்போமே நான் சுயநலவாதியா தான் இருப்பேன்" என்றாள் மிருணா

"ஏதோ அப்போ கொஞ்சம் திமிரா இருந்து தப்பு பண்ணிட்டேன், ஆனால் இப்போ திருந்திட்டேன் மிரும்மா நம்பு என்னோட பேரன் எப்போ அவனையே அவன் தனிமை படுத்திட்டு எங்களை பழிவாங்க ஆரம்பிச்சானோ அப்போ இந்த கிழவிக்கு உறைக்க ஆரம்பித்தது ... என்னை மன்னிக்கவே மாட்டியா? " என்றார்

"நீ எனக்கு ஒன்னும் சொல்ற அளவுக்கு எந்த கொடுமையும் செய்யல ஆனால் எங்க அம்மாக்கு சொல்லவே முடியாத அளவுக்கு கொடுமை செஞ்சிருக்க அதனால உன்னை மன்னிக்க வேண்டியது நான் இல்லை எங்க அம்மாவும், உன் பேரனும் தான்" என்றவள் "அதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ... நான் சொன்னதை செய்ய உனக்கு ஓகேவா? "என்றாள்

"ம்ம் ஓகே ஓகே எப்போ? கட்டு போட போலாம் "என்றார்

"இன்னிக்கு ஈவினிங் 5மணி, நல்லா நியாபகம் வெச்சிக்கோ 5மணி, சரியா நீயாதான் வெளிய வரணும் " என்றவள்
"கிழவி உனக்கு இந்த அப்பாவி ரோல் செட் ஆகல "... "அதனால இப்படி இருக்காம, பழையபடி திமிர்பிடிச்ச சொர்ணமாவே இரு "என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்...

போகும் அவளையே பார்த்தவண்ணம் இருந்தார் சொர்ணம்

ஆமா சொர்ணம் முன்ன இருந்தது போல் இப்போது இல்லை, அவர் மனதை அதிகம் பாதித்தது மித்தியின் பிரிவு.. ஒரு இரண்டு வருடம் சக்திவேலின் வீட்டில் இருந்துவிட்டு வந்துவிடுவான் என்றுதான் நினைத்தார், ஆனால் அதன்பிறகு டெல்லி போனதும் மித்தியின் பிரிவு அவரை வாட்ட தொடங்கியது... அதன்பிறகு அவன் வெளிநாடு போனதும் சாந்தியைவிட அதிகம் உடைந்து போனார் அவன் போனது என்னவோ படிக்கத்தான் இருந்தாலும் அதற்கு காரணம், தான் தான் என்று நினைத்து நினைத்தே ஒரு வழி ஆனார், வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் மனதளவில் விலகி இருப்பது போல் தோன்ற... கணவனிடம் கூட அந்த விலகலை கண்ட சொர்ணத்தால் தாங்க முடியவில்லை மனம் உடைந்து போயிருந்தார்...

வாழ்க்கையில் இவ்வளவு நான் வாழ்ந்து தனக்காக ஒரு மனிதனை சம்பாரிக்கவில்லையே... இதில் தான் வாழ்ந்து என்ன பயன் என்று தோன்ற... வேணிக்கு நான் அவ்வளவு கொடுமை செய்தாலும் அவள் நல்ல எண்ணத்துடன் இருந்ததால் நிறைய மனிதரைகளை சம்பாரித்து வைத்து இருக்கிறாள் என்றும் சேர்ந்தே தோன்றியது ...

இனியும் தான் திருந்தா விட்டால் தனக்கு நல்ல சாவே வராது என்று நினைத்து மனம் திருந்த நினைக்கும் போதுதான் அவருக்கு சில உண்மைகள் தெரியவந்தது....

அதை அறிந்த பிறகு மனம் இன்னும் வேதனை அடைய அவரால் சும்மா இருக்க முடியவில்லை... ஒரு முடிவு எடுத்தவர்... வேணியை கடைசி தடவையாக மிரட்டி மிருணாவை அங்கு வேலைக்கு அனுப்பினார்...

இவர் மிரட்டலுக்கு பயந்து ஒன்னும் மிருணா அங்கு வேலைக்கு போகவில்லை அவள் ஒரு திட்டம் போட்டு தான் அங்கு வேலைக்கு போனாள் என்பது வேற கதை...
 
Top