வேணி 6 வருஷத்திற்கு முன்னால் நடந்த கொடுமையை நினைத்து பார்த்துக்கொண்டிருக்க....
ஏண்டி விளங்காம போனவளே என்னத்தை நினைச்சி பராக்கு பார்த்துட்டு உக்கார்ந்துருக்க வேலையை எல்லாதையும் முடிச்சிட்டியா என்று கேட்டுக்கொண்டே வந்தார் சொர்ணம்
வெளி வேலையை முடிச்சிட்டேன்ம்மா இனி உள்வேலை மட்டும் தான் இருக்கு, சின்னம்மா சாப்பாட்டு வேலையை முடிச்சிட்டா, வந்து என்னோட வேலையை முடிச்சிடுவேன் என்றாள் பணிவாக
இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. என்று நொடித்துக்கொண்டவர் .. சரி சரி நான் குளிக்கணும் தண்ணியை அடுப்புல போட்டு வையு... என்று கை காலை நெட்டி முறித்தவர் அங்கையே உக்கார்ந்தார்...
தண்ணி காய வைக்க அடுப்பு மூட்டிவிட்டு வந்தவளை கால் அமுக்க சொன்னார் சொர்ணம்...
அவர் சொன்னதும் கால் அமுக்க கீழ உக்கார்ந்தவளுக்கு வீடே அதிரும்படி கத்தும் சத்தம் கேட்டது...
அந்த சத்தத்தை
கேட்டதும் வேகமாக எழ முயன்ற சொர்ணத்தால் எந்திரிக்க முடியவில்லை, மெதுவாக எழுந்தவர் வேகமா உள்ளே செல்ல .. அதற்குள் சாந்தி சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று விடவும் இவர் பின்னால் போனார்...
போகும் சொர்ணத்தையே பார்த்தாள் வேணி..மீண்டும் பழைய நினைவுகள் வந்து ஆக்கிரமித்து கொண்டது . அன்று மருத்துவச்சி வந்து பார்த்து விட்டு இவள் கர்ப்பமாக இருப்பதை சொல்லிவிட்டு சென்றதும், அது காட்டு தீ போல் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரவியது அதை கேட்டு கோவமாக வந்த சொர்ணம் வேணியை அடி பின்னி எடுத்து விட்டார், தடுக்க போன சாந்திக்கும் கூட சில அடிகள் விழுந்தது...
சொல்லுடி எவன் கிட்ட கெட்டு போய் இப்படி பிள்ளையை வாங்கிட்டு வந்துருக்க என்று சொல்லி சொல்லியே அடித்தார்... ஆனாலும் வேணி அவ்வளவு அடி வாங்கியும் அவளின் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்று சொல்லவில்லை
அடித்து ஓய்ந்த சொர்ணம் சொல்லுடி யாரா இருந்தாலும் அவன்கிட்ட பேசி உனக்கே கல்யாணம் பண்ணி வைக்க பாக்கறேன்... இப்படி மானங்கேட்டு போய் நிக்க எவண்டி காரணம் என்றார்...
வேணி சாந்தியை பார்த்துவிட்டு திரும்பவும் சொர்ணத்தை பார்த்தவள் அம்மா நான் இப்படியே இருந்தறேன் இதுக்கு காரணம் யாருனு மட்டும் தயவு செஞ்சி கேக்காதீங்க... என்று மண்டியிட்டு அழுதவளை பார்த்த சாந்திக்கு வேதனையாக இருந்தது... சாந்திக்கு இதற்கு காரணம் யார் என்று ஓரளவுக்கு புரிந்துவிட்டது... ஆனால் அவளால் எதுவும் செய்யமுடியாத கையாளகத்தனத்துடன் நின்றாள்...
அப்போ இப்படியே வாழ்க்கை முழுக்க இருக்க போறியா??? இந்த கருமத்தை கலச்சி தொலைஞ்சிட்டு வா , உனக்கு எவனையாவது பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கறோம் என்று சொர்ணம் சொல்லவும்
இல்லம்மா நான் பண்ண தப்புக்கு அந்த உயிர் என்ன பாவம் பண்ணுச்சி... அதை அழிக்க வேண்டாம்... இனி என்னோட வாழ்க்கைக்கு இருக்கற ஒரே பிடிப்பு இதுதான் என்று கூறியவளை பார்த்து இதை மட்டும் வக்கணையா பேசு ஆனா எவன் கிட்டையோ இப்படி ஏமாந்துட்டு வந்து நிக்கற என்று கோவமாக அடிக்க போன சொர்ணத்தை தடுத்து நிறுத்தினார் சொக்கலிங்கம்...
விடு சொர்ணா அவ தான் அந்த குழந்தையை பெத்துக்கறேன்னு சொல்லறால... அவ பெத்துக்கட்டும்... இவ பண்ண தப்புக்கு அதுதான் தண்டனை என்றார் சொக்கலிங்கம்
என்னங்க நீங்களும் இப்படி பேசறீங்க... இவ குழந்தை பெத்துக்கிட்டாலும் பரவால ஆனா அதுக்கு காரணம் யாருனு சொல்ல சொல்லுங்க இல்லைனா காலம் முழுக்க இவளை கட்டிட்டு நம்பலால அழ முடியாது... எவன் தலையலையாவது இவளை கட்டிட்டு கொஞ்சம் நிம்மதி ஆகலாம்னு பார்த்தா இப்படி சொல்றிங்க என்றார்
நம்பள என்ன பண்ண சொல்ற சொல்லு....
அம்மா, ஐயா என்னை மன்னிச்சிருங்க நான் பெரிய தப்பை பண்ணிட்டேன் தான் ஆனா அதுக்கு இந்த உயிரை கலைக்க எனக்கு விரும்ப இல்ல அதே போல இதுக்கு காரணமானவிங்கள கேட்டீங்கனா கண்டிப்பா உயிரே போனாலும் நான் சொல்லமாட்டேன் என்றவளை எரிக்கும் பார்வை பார்த்தார் சொர்ணம்...
சரி கேடுகெட்டவளே நீ சொல்ல வேண்டாம்... ஆனா இனி இந்த வீட்டுல உனக்கு இடம் இல்லை எங்கையோ போய் பிச்சை எடுத்து உன் பிள்ளையை காப்பத்திக்கோ என்று வேணியின் முடியை பிடித்து இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளினார்...
செய்தி கேட்டு தோட்டத்திற்கு போயிருந்த கதிர்வேலன் வேகமாக வரவும் வேணி வெளியே வந்து விழவும் சரியாக இருக்க.... அவளை தூக்கி நிறுத்திய கதிர்... அம்மா நான் எல்லா விசியத்தையும் கேள்விபட்டுதான் வந்திருக்கேன்.... அவ இங்கதான் இருப்பா.... என்றான் உறுதியாக
எல்லோரும் அவனை சந்தேக கண்ணால் பார்க்கவும் நீங்க என்ன வேணா நினைச்சுக்கோங்க ஆனா... இவ இங்கதான் இருப்பா என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டான்
அவன் சொன்னாலும் இவளை நான் வீட்டுக்குள்ள விட மாட்டேன் வேணும்னா நம்ப தொழுவதுக்கு பக்கதுல ஒரு குடிசையை போட்டு குடுங்க ... இவ்வளவு கீழ்தரமானவள என்னோட வீட்டுக்குள்ள விட்டா என் வீட்டோட புனிதம் கெட்டு போயிரும் என்றார்...
அதன்பிறகு சொர்ணம் சொன்னது போல் ஒரு சிறிய குடிசை ஒன்றை போட்டு அதில் வேணியை தங்க வைத்தனர்....
ஆனால் அவளுக்கு கர்ப்பகாலத்தில் தேவையான எதையும் சொர்ணம் தரவிட்டது இல்லை... சாந்திதான் மெதுவாக கேட்டு பார்த்தாள் வேணி நான் உன்னோட தோழி மாதிரி தானே என்கிட்டையாவது இதற்கு காரணம் யார் என்று சொல்லேன் என்றாள் அவளின் சந்தேகத்ததை உறுதி செய்துகொள்ள...
உங்ககிட்டாதான் முதல சொல்ல கூடாது சின்னம்மா என்று நினைத்துகொண்டவள்...யார்கேட்டாலும் என்னோட வார்த்தை ஒன்றுதான் தெரியாது என்றவள் அதற்கு மேல கேக்காதீங்க என்று சொல்லிவிட்டாள்...
வேணி அப்படி சொன்னாலும் சாந்தி அவளுக்கு செய்ய வேண்டிய உதவியை யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக செய்து கொடுத்தாள்...
பிரசவ வலி எடுத்ததும் தனியாக இருந்த வேணி தட்டுதடுமாறி வெளியே வந்தாள்...
அப்போது பார்த்து கதிர்வேல் வெளியே வரவும் சின்னையா என்று கத்தி கொண்டே கீழே விழுந்தாள்
அவளின் சத்தம் கேட்டு ஓடி வந்தவன் அவளை தூக்கி கொண்டு போய் காரில் போட்டு ஹாஸ்பிடலுக்கு போனான்...
ஊரில் இருக்கும் அனைவருக்கும் விசியம் தெரிந்து எல்லோரும் வேணியின் கர்ப்பத்திற்கு காரணம் கதிர் தான் என்பது போல பேசினர்... இதை கேட்டதும் சொர்ணம் பத்திரகாளி போல ஹாஸ்பிடலுக்கு செல்ல அதுக்குள் வேணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது....
வேகமா போன சொர்ணம் ஹாஸ்பிடலில் எல்லோர் முன்னாடியும் கதிர்வேலனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டவர்... அந்த பிள்ளைக்கு நீதான் அப்பனா சொல்லுடா என்று கத்தினார்..
என்னம்மா லூசு மாதிரி பேசிட்டு இருக்க... நான் என்னோட சாந்திக்கு தூரோகம் செய்ய மாட்டேன்ம்மா என்றான் வேகமாக...
அவன் அப்படி சொன்னதும்தான் சொர்ணம் கொஞ்சம் ஆசுவாசம் ஆனார்... அதன்பின் யாரும் வேணிக்கு துணைக்கு இருக்கு ஹாஸ்பிடலில் இருக்காமல் போனதால் நர்ஸ் தான் வேணியையும் குழந்தையும் பார்த்துகொண்டார்கள்...
4நாள் முடிந்து வீட்டிற்கு போகும் போது கூட அவளை அழைத்துகொள்ள யாரும் வரவில்லை தன்னோட தலை எழுத்து அதுதான் என்று நினைத்தவள் குழந்தை தூக்கிகொண்டு மெதுவாக நடந்தே வீடு வந்து சேர்ந்தாள் வரும் வழி எங்கும் அவளை பார்த்தவர்கள் கேவலமாக பேச அதை அனைத்தயும் கேட்டுகொண்டே வீடு வந்து சேர்ந்திருந்தாள் வேணி, அவளை ஆரத்தி எடுத்து வரவேற்க்க வேலை ஆட்கள் கூட இல்லை பல வருடம் அந்த வீட்டுலையே இருந்தும் அவளுக்காக அங்கு யாரும் எதுவும் செய்ய விரும்பவில்லை.... என்று நினைக்கும் போது வேதனையாக இருந்தது.
மத்த வேலை ஆட்களிடம் சாந்தியை பத்தி விசாரிக்க... சின்னம்மாவும், சின்னையாவும் கல்யாணத்திற்கு போயிருக்காங்க என்றனர்...
அதற்குமேல் கேட்டாலும் அவர்களிடம் எதுவும் வெளியே வராது என்று தெரிந்து குழந்தைக்கு பால் கொடுக்க போனாள்.
ஹாஸ்பிடலில் இருந்த 3நாளும் அவர்களே சாப்பிட சாப்பாடு கொடுத்து விடுவார்கள் ஆனால் இங்கு வந்து 4மணி நேரம் ஆகியும் அவளை வந்து பார்க்கவே நாதி இல்லை. இதில் சாப்பிட சாப்பாடு எங்கே கேப்பது... பிள்ளை பெற்ற பச்சை உடம்பு என்பதால் பசி வயிற்றை கிள்ளியது...
அதே சமயம் குழந்தையும் அழுவ ஈர துணியை வயிற்றில் கட்டிகொண்டு குழந்தைக்கு பால் கொடுத்தாள் வேணி...