வீட்டுக்கு வந்ததும் சாந்தி "என்னங்க? இப்படி ஒரு வாக்கு குடுத்துட்டீங்களே? ... உங்க அம்மா அப்பா இதுக்கு சம்மதிப்பாங்களா? அதும் நம்ப வீட்டுல வேலைக்கு இருக்க பொண்ணுனு அத்தை ஏற்கனவே அவளை எவ்வளவு கஷ்டபடுத்துறாங்க.... இப்படி இருக்கறப்ப இதுக்கு போய் சம்மதம் சொல்லுவாங்களா? " என்றாள் சாந்தி கவலையாக
"உனக்கு ஒன்னு தெரியுமா? ... வேணி நினைச்சிருந்தா? இந்நேரம் உன்னோட அண்ணனை அவ வசத்துக்கு கொண்டுவந்து உன்னோட அண்ணியை வெளியே அனுப்பியிருக்கலாம் ....அதுக்கு உங்க அண்ணாகிட்ட இருக்கற காசு, பணமே போதும் .."
"ஆனா அவ அப்படி எதுவும் பண்ணாம ... அவ வாழ்க்கையையே கெடுத்துகிட்டு இருக்கா, இதுக்கு அவ நல்ல மனசுதான் காரணம்"....
"அவ இப்படி ஆனதுக்கு நம்மளும் ஒரு காரணம் தானே, அதுக்கு நம்ப ஏதாவது செய்ய வேண்டாமா? சாந்தி" என்றான்
"செய்யணும், நானும் அதை தான் யோசிச்சேன், எனக்கு நீங்க சொன்னதுல எந்த பிரச்சனையும் இல்லை, சந்தோசம் தான், ஆனா இதுக்கு அத்தை மாமா எப்படி சம்மதம் சொல்லுவாங்க? என்றாள்
"அதுக்கு இன்னும் 20வருஷம் இருக்கு அப்போ பார்ப்போம் ... அதுக்குள்ள எவ்வளவோ மாறிடும், இவங்க மாற மாட்டாங்களா? " என்றான்
"நீங்க சொல்றதை பார்த்த டிக்கெட் வாங்கிடுவாங்கனு சொல்றிங்களோ"? என்றாள் புன்னகையுடன்
நீண்ட நாளுக்கு பின் கதிர் சிரித்தான்....
அதன்பிறகு வேணி பல கஷ்டங்களை அனுபவித்தாள், கதிர் உதவ போனாலும் அவன்தான் அவள் இப்படி ஆனதுக்கு காரணமோ? என்பது போல சொர்ணம் எல்லா வேலைக்காரங்க முன்னாடி பேசவும்.
அதை பொறுக்க முடியாமல் ... எனக்கு நீங்க எதுவுமே செய்ய வேண்டாம் , என்னோட பிள்ளையை எனக்கு வளர்க்க தெரியும் இவ்வளவு நாள் என்கிட்ட இருந்து உழைப்பை எடுத்துக்கிட்டு 3 நேரம் சோறு போட்ட மாதிரியே இப்பவும் செய்ங்க போதும்" என்றாள்
கதிர் நேரடியாக கொடுக்க முடியாமல் சாந்தியின் மூலம் உதவி செய்தான் ... ஆனால் வேணி அதையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் ....
வேணிக்கு பிரவசம் ஆனது வேணிக்கு பெண் குழந்தை பிறக்கவும் முதலில் சந்தோசபட்டது கதிர், சாந்தி தான். அந்த குழந்தை தங்கள் வீட்டு மகாலட்சுமி என்று நினைத்து சந்தோசப்பட்டனர்..
அடுத்த இரண்டு நாள் கதிர், சாந்தி போய் வேணியை பார்த்துவிட்டு வந்துகொண்டிருந்தனர்.
அடுத்த நாள், கதிர் உறவில் கல்யாணம் இருந்ததால் சொர்ணம். சொக்கலிங்கத்தை அங்கு போக சொன்னான்...
சொர்ணம் வேணியை மனதில் வைத்துக்கொண்டு "நாங்க போனா, நீங்க அவளோட சேர்ந்து கொட்டம் அடிக்கலாம்னு பார்க்கறீங்களா"? என்றார்
"என்னம்மா எப்போ பாரு அந்த பிள்ளையை ஒன்னு குறை சொல்ற, இல்லையா? பழிவாங்கறதுலையே குறியா இருக்க".... என்று தலையில் அடித்து நொந்துகொண்டான்
"இவ்வளவு பேசறவன், கல்யாணத்துக்கு நீயும் உன் பொண்டாட்டியும் போக வேண்டிதானே? " என்றார் சொர்ணம்
"அம்மா நாங்க போய்ட்டா , வேணியை எப்படிம்மா? ஹாஸ்பிடல இருந்து கூட்டிட்டு வரது " என்றான்
"அதுலாம் வேலை செய்யவரங்களை வெச்சி கூட்டிட்டு வந்துக்கறோம் " என்றார்
இதற்கு மேல் பேசினால் கண்டிப்பாக சண்டை பெரிதாக முடியும் என்று கதிர், சாந்திக்கு கண்ணை காட்டவும் அவள் சென்று கிளம்பினாள்.
அவர்கள் சென்றதும் வேணியை அழைக்க போன, ஆளையும் வேண்டாம் என்று விட்டார் சொர்ணம்.
கையில் குழந்தையுடம் நடந்தே வந்த வேணியை பார்த்த சக்திவேல், "வா வீட்டுல விடறேன்" என்று சொன்னவனின் கண் முழுக்க குழந்தையின் மேலேயையே இருந்தது ... அதை பார்த்த வேணி குழந்தையின் துண்டை இழுத்து மூடியவள் சக்திவேலின் எதிர்பக்கம் திரும்பி கொண்டாள்
"வேணி "என்ற சக்திவேலிடம்
"தயவுசெஞ்சு உங்க கால கூட விழறேன்" ... "என்கிட்ட பேசவோ எனக்கு பாவம் பாக்கறேன்னு ஏதாவது செய்யவோ வேண்டாம்...எனக்கு ஏதாவது செய்யணும் ஆசை இருந்தா? என்னோட முஞ்சிலையே முழிக்காம இருங்க அதுதான் நீங்க எனக்கு செய்யற மிக பெரிய உதவி" என்று குழந்தையுடன் கை எடுத்து கும்பிடுபவளை பார்க்க மனம் அனலில் இட்ட புழுவாக துடித்தது
இருந்தாலும் மனதை அடக்கி கொண்டு சென்றுவிட்டான்
வேணி வீட்டிற்கு சென்றதும் சொர்ணம் அவளுக்கு சாப்பாடு போடாமலும், குழந்தைக்கு பாலும் கொடுக்காமலும் கொடுமை செய்ய அப்போதில் இருந்து வேணி குழந்தைக்கு அவள் பால் இருந்தால் தருவாள் ஆனால் அவர்களிடம் இருந்து ஒரு சொட்டுகூட வாங்கமாட்டாள்...
மித்ரனை வேணிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தான் , வேணி அவனை மனதில் வைத்து மிருணாளினி என்று பெயர் வைத்தாள் ... அதற்கும் பிரச்சனை வந்த போது யாருக்காவும் நான் பெயரை மாற்றமாட்டேன் என்று சொல்லிவிட்டாள் வேணி
குழந்தை வளர வளர அவளுக்கு தேவையான பொருள்களை எல்லாம் சாந்தி சொர்ணத்திற்கு தெரியாமல் செய்யவும் வேணி ஒரே முடிவாக என்னோட பொண்ணுக்கு இது மாதிரி ஆடம்பரம் வேண்டாம் சின்னமா . அவளை ஏழையாவே வளர்த்திக்கறேன் தயவு செஞ்சி என்னோட விஷயத்துல இனி நானே பார்த்துக்கறேன் என்றாள்
அதன்பிறகு அனைவருமே வெளியே ஒரு ஆளாக நின்று வேணியை காட்சிபொருளாக வேடிக்கை மட்டுமே பார்க்க ஆரம்பித்தனர்..
குழந்தையை வளர்க்கவும், படிக்க வைக்கவும் தான் வேணி கல்யாணமாகாமல் விதவை ஆனாள்... அதை பார்த்ததும் கதிர், சாந்தி என்ன சொல்வது, என்ன சொன்னாலும் அவள் தன்னை மாற்றிகொள்ள மாட்டாள் என்று அமைதியாகிவிட சக்திக்கு தான் , அவன் மனம் குற்றவுணர்ச்சியில் அவனை அனு அனுவாக கொன்னு தின்று கொண்டிருந்தது...
அதன்பின் வந்த நாட்களில் சக்திக்கு கண்ணன் ஒரே பையனாக இருந்தாலும் அவன் மீது கொள்ளை பாசம் வைத்திருந்தாலும் மனம் மிருணாவின் பிஞ்சு விரல்களை பிடிக்கத்தான் அதிகம் விரும்பியது,
அவன் மனம் மிருணாளினியை தொட்டு தூக்கி முத்தம் இட வேண்டும் போல உள்ளுக்குள் கொள்ளை ஆசை வர அதை அடக்கி கொண்டு மிருணாவை தூர இருந்து பார்த்துவிட்டு போவான் ....
காலம் ஓட , மித்ரன் மனம் மிருணாவை விரோதியாக பார்ப்பதை அறிந்தும் சக்திவேல் பயப்பட ஆரம்பிக்க, அதை கதிரிடம் சொல்லி ஆதங்கபட்டார்
அவரின் ஆதங்கம் போலவே மித்ரன் மிருணாவிற்கு சூடு வைத்து தவறு செய்யவும்.அதை கேள்வி பட்ட சக்திவேல் மனம் பதறியது
மிருணாவை எங்கும் அனுப்ப முடியாது என்பதால், மித்ரனை சக்திவேல் வீட்டிற்கு அனுப்பின சொல்லி கதிரிடம் கேட்டு கொள்ளவும் அவரும் அதுதான் சரி என்று மித்ரனை அங்கு அனுப்பிவைத்தார்..
மிருணா பெரியவள் ஆன போதும் ஒரு அப்பாவாக தன்னால் அவளுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே? , சூழ்நிலையில் தவறு செய்துவிட்டு வாழ்க்கை முழுக்க தண்டனை அவரும் அனுபவித்து வேணி, மிருணா இருவருக்குமே அதே தண்டனையை கொடுத்துகொண்டிருக்கிறேன் என்று நினைத்தவர்க்கு... உனக்குலாம் நல்ல சாவே வராதுடா... என்று 14 வருஷம் ஆகியும் இப்போதும் வேதனைப்பட்டார் சக்திவேல்...
வேணிக்கு அதுபோல் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை...அவர் முதலில் கஷ்டப்பட்டாலும் குழந்தை வளர வளர அவளின் அழகிய சிரிப்பும். மழைலை பேச்சும் அவள் கவலைகளை மறக்க செய்தது... குழந்தையை எப்படியாவது படிக்கவைத்துவிடணும் என்று நினைத்து அதை செய்தும் முடித்துவிட்டார்....
கதிரும் , சாந்தியும் மிருணாவை பற்றி பேசிக்கொண்டிருந்ததை ஒரு நாள் சொர்ணம் கேட்டுவிட அப்போதுதான் அவருக்கு புரிந்தது .. மிருணா சக்திவேலின் பொண்ணு என்று... அதன்பிறகு அவரால் எப்போதும் போல இருக்கமுடியவில்லை... மனம் மிகவும் வேதனை அடைந்திருந்தது...
இதை எல்லாம் சொல்லிமுடிக்கவும் மிருணா உக்கார்ந்தாவே எல்லோரையும் பார்த்தாள்...
மித்ரனுக்கு இதை கேட்டதும் அலுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
கருணாவிற்கு நேரடியாக தெரியவில்லை என்றாலும் இலை மறைகாயாக அவன் கண்டு வைத்திருந்தான்...
கண்ணனுக்கு உள்ளுக்குள் எரிச்சல் இருந்தாலும் வெளியே காட்டிகொள்ளவில்லை அவன்...
மிருணா அமைதியாக இருக்கவும் எல்லோரும் அவள் என்ன நினைக்கிறாள் என்று புரியாமல் பார்த்தனர்
"என்ன மிரும்மா எதுமே சொல்லமாட்டிக்கிற "? என்றார் கதிர்
"என்ன ? சொல்லணும் மாமா. எனக்கு புரியலை .... வேணி இப்படி நல்ல மனசோட இருக்கறனால அவங்க பொண்ணு மிருணாவும் அப்படிதான் இருப்பானு நினைக்கறீங்களோ? "
"நான் அப்படி சொல்லலம்மா, உனக்கு என்ன பேசணும்னு தோணுதோ? பேசு" என்றார்
"இங்க இருக்கற எல்லோரையும் விட இதோ இந்த கிழவி எவ்வளவுவோ பரவால, ஏன் தெரியுமா? ... அது தன்னை எப்போமே நல்லவனு காட்டிக்க நினைச்சது இல்லை ... அதுக்கு பண்ணையத்துல இருக்கற நாங்க படிக்கவோ. உங்க இடத்துக்கு வரவோதான் கூடாது.இது மட்டும்தான் . ஆனா நீங்க" என்றவள் "முதல இருந்து வரேன்" என்று பத்மாவிடம் சென்றாள்
"மிரு சும்மா இருக்க மாட்டியா? அதான் யார் அப்பான்னு தெரிஞ்சிக்கிட்டைல அப்புறம் என்ன ?? வா போலாம் " என்றார் வேணி
"முடியாதும்மா ... உங்கிட்ட கேட்கவும் எனக்கு கேள்வி இருக்கு.... லாஸ்ட்டா வரேன்", என்றவள் பத்மாவிடம் .... "ஏன்ங்க எங்கம்மாவுக்கு நடந்தது உங்களுக்கு நடந்துருந்தா? இப்படிதான் இருந்துருப்பீங்களா? " என்றாள்
அவர் அமைதியா இருக்கவும் , "ஏய் யாரை கேள்வி கேக்கற? .. உனக்கு கேள்விக்கனும்னா, உனக்கு அப்பான்னு சொல்லிட்டு இருக்காரே அவரை போய் கேளு, என்னோட அம்மாவை கேக்க உனக்கு உரிமை இல்லை சரியா? "என்றான் கண்ணன்
"உங்க அம்மாவை நான் கேள்வி கேக்கல கண்ணன் .. எங்க அம்மாவுக்கு அநீதி செஞ்ச எல்லோரையும்தான் கேக்கறேன்".... "அதனால் நீங்க அமைதியா இருங்க" என்றவள்.... "சொல்லுங்க ...எங்க அம்மா வயித்துல குழந்தையோட வந்தப்ப அவங்களுக்கு ஏதாவது நியாயம் செய்யணும் தோணலைல. உங்களுக்கு" .என்றவள் பத்மா அமைதியாக இருக்கவும் . உங்களை சொல்லி என்ன பண்றது என்றவள் கதிரிடம் சென்றவள்.... !என்னை அழிக்க சொன்னிங்கல மாமா , அது ரொம்ப நல்ல விசியம், அப்படி செஞ்சிருந்தா கண்டிப்பா எங்க அம்மாக்கு இப்போ ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கும்ல.... நான் பொறந்து எங்க அம்மாவோட வாழ்க்கையை கெடுத்துடேன்,"என்றாள்
அப்படி இல்லைடா மிரு என்று கதிர் சொல்ல வருவதற்குள்
ஆனா என்னோட வாழ்க்கை நீங்க, முடிவு பண்ணிருக்க கூடாதுனு நினைக்கிறேன், என்றாள்
"ஏய் யாரடி? எதிர்த்துபேசற" என்று அவளை அறைந்தார் வேணி.
"ஏன்? வேணி புள்ளையை அடிக்கற, அவ கேட்டதுல தப்பு இல்லை."என்ற கதிர்...
"நான் அப்போ முடிவு பண்றப்ப, நீ பிறக்கலியே மிரும்மா" என்றார் விளையாட்டாக...
கன்னத்தை துடைத்துகொண்டே மிரு சாந்தியை பார்க்க
"அடுத்து நானா? "என்று உள்ளுக்குள் பயந்தார் சாந்தி
"சாந்தி அத்தை... நீங்க தப்பு செஞ்சது உங்க அண்ணாங்கறதால போலீஸ்ல கம்பளைண்ட் குடுக்காம விட்டுட்டீங்கள ... அப்பகூட உங்க அண்ணா குடும்பத்தை பற்றி மட்டும்தான் யோசிச்சிருக்கீங்க"? இல்லையா? ... என்றாள்
"அப்படி எதுவும் இல்லை மிரும்மா "..... உங்க அம்மா தான் எது செஞ்சாலும் செத்துபோயிருவேன்னு பயமுறுத்திடே இருப்பாளே? அதான் எங்களால எதுமே செய்யமுடியாம போயிருச்சு" என்றார் சாந்தி
அவர் பதில் சொல்லியதும் வேணியிடம் வந்தவள் .... "அம்மா நீ அந்த மனுஷனோட குடும்பத்தை மட்டுமே , பார்த்து தண்டனையை நீ ஏத்துக்கிட்டையே ... உன்னை பத்தி கொஞ்சம்... வேண்டாம் உன்னை பத்திகூட வேண்டாம் கொஞ்சம் என்னை பத்தி யோசிச்சிருக்கலாம்ல அம்மா இவங்கலால நம்ப எவ்வளவு அவமானபட்டுருப்போம், அசிங்கப்பட்டுருப்போம் இந்த கிழவிகிட்ட . அதை பத்திலாம் உனக்கு கவலை இல்லைல... இதோ இங்க இருக்கிறானே, இந்த நெட்டை கொக்கு எத்தனை தடவை என்னை அப்பா பேர் தெரியாதவனு சொல்லி கேவலபடுத்திருப்பான் தெரியுமா? " என்றாள் கண்களில் கண்ணீருடன் மித்ரனை பார்த்து...
அவள் வேதனையை எல்லோரும் புரிந்துகொண்டு பேசாமல் அமைதியாக இருக்கவும் ....." சரி எவ்வளவோ கேக்கணும் நினைச்சிட்டு வந்தேன் ஆனா என்னால முடியலை .... என்றவள் ...". அங்கிருந்து போக போகவும்....
எல்லோரும் சக்தியை எதுவும் கேள்வி கேக்கவில்லையே? என்பது போல பார்த்தனர்....
"ஏன் மிரு என்கிட்ட நீ எதையும் கேட்கவில்லையே? " என்றார் சக்தி
கேக்காத வரைக்கும் பரவலா என்று விட வேண்டியது தானே எதுக்கு இவரா போய் தலையை கொடுக்கறாரு என்று கருணா நினைத்தான் . அவனுக்கு தான் மிருணாவை பற்றி தெரியுமே
எல்லோரும் மிருணாவையே பார்த்தனர்
நீங்களும் மிருனாவையே பாருங்க அவ என்ன சொல்றானு நாளைக்கு சொல்றேன்...