கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள் முகிழ் 3

வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்தவள், கண்களில் கண்ணீர் வர அதை துடைக்காமல் கூட தன் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது என்று வேதனை அடைந்தாள்.....

குழந்தை பால் பத்தாமல் அழுதது, அவளிடம் இருந்தால் தானே கொடுக்க முடியும், சாப்பிடாமல் இருந்தவளிடம் குழந்தைக்கான பாலும் சுரக்கவில்லை.... தன் பசியைதான் ஆற்றமுடியவில்லை குழந்தையின் பசியைவாவது தன் மூலம் ஆற்றலாம் என்று நினைத்து நிம்மதி அடைந்திருந்தவள் இப்போது அதற்கும் முடியாமல் போனதும். தன் வயிற்றில் வந்து பிறந்ததனால் தான் இந்த பச்சைகுழந்தையும் கஷ்டபடுது என்று கண்ணீர் விட்டாள்...

குழந்தையின் அழுகை அதிகமாக என்ன செய்வது தெரியாமல் முழித்தவளுக்கு தொழுவத்தில் இருக்கும் மாட்டின் நினைவு வர குழந்தையை கீழே பாயில் போட்டுவிட்டு டம்பளரை எடுத்துக்கொண்டு பால் கறக்க போனாள்

அரைடம்பளர் கூட கறந்திருக்க மாட்டாள் அதற்குள் அங்கு வந்த சொர்ணம் வேணியை ஒரு உதை விட்டார்...

அதில் கையில் இருந்த பாலும் கீழே கொட்டியது... அம்மா என்று மெதுவாக எழுந்தவள் குழந்தை பால் இல்லாம அழுவுதும்மா...அதற்கு தான் கொஞ்சமா பால் எடுக்க வந்தேன் என்றாள் தன்னை எட்டி உதைத்தைகூட பெரியதாக எடுத்துக்கொள்ளாமல், பெரியதாக எடுத்துக்கொண்டாலும் அவர்களிடம் கேள்வி கேக்க முடியுமா???

எவன் பிள்ளைக்கு யார்விட்டு பால் கேக்குது.. அது கத்துனா என்ன செத்தா எனக்கு என்ன?? இவ்வளவு நாள் வேலை செஞ்ச பாவத்துக்கு உனக்கு வேணா சோறு போட முடியும் ஆனால் நீ பெத்து வெச்சிருக்க அந்த சனியன்னுக்குலாம் போட முடியாது என்றவர் இன்னொரு தடவை மாட்டு மேல கையை வெச்ச கையை வெட்டி போட்டுருவேன் என்றார்

அம்மா இந்த ஒருதடவை மட்டும் கொஞ்சமா குடுங்கம்மா பால் இல்லனா குழந்தைக்கு தொண்டை வறண்டு போய்டும் என்று கெஞ்சியவளை பார்த்து கொஞ்சம் கூட ஈவு இரக்கம் பார்க்காமல் வேணியின் முடியை பிடித்து இழுத்து வந்து தொழுவத்தில் இருந்து வெளியே விட்டார் சொர்ணம்

இதற்குமேல் எப்படி குழந்தையின் பசியை போக்குவது என்று கவலைபட்டுக்கொண்டே போனாள் வேணி... குழந்தையோ அழுது அழுது அப்படியே தூங்கி இருந்தது....

அதை நினைத்தவளுக்கு இப்போதும் அழுகை வர கண்களை துடைத்துகொண்டு தன் மேல் கோவமாக போன தன் மகள் மிருணாளினியை பார்க்க குடிசைக்குள் போனாள்

பாப்பாக்கு அம்மா மேல கோவமா

நீ பாப்பாவை அடிக்க வந்தில

பாப்பா நமக்கு கிடைக்கற இந்த சாப்பாடும் எத்தனையோ பேருக்கு கிடைக்காம இருக்கு, அப்படி இருக்கறப்ப நமக்கு கிடைக்கறதை வெச்சி கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு வேஸ்ட் பண்ணமா சாப்பிடணும் மிரு... நீ வேண்டாம்னு தட்டிவிட்டதும் அம்மாவுக்கு கோவம் வந்துருச்சி என்று மிருணாவின் தலையை தடவிகொடுத்தாள்....

இன்னிமேல் இப்படி செய்யமாட்டேன்ம்மா என்று வேணியின் மடியில் படுத்துகொண்டாள் மிருணா ....

மீண்டும் வேணிக்கு பழைய நினைவுகள் கண் முன் தோன்ற ஆரம்பித்தது .... அதன்பின் அவள் எவ்வளவு குழந்தை அழுதாலும் தன்னை கஷ்டப்படுத்திகொண்டு பால் கொடுக்க முயலுவாளே தவிர எவ்வளவு அழுதாலும் அங்கிருந்து ஒரு சொட்டு பால் வாங்கிகொடுக்க மாட்டாள்.

கல்யாணத்திற்கு போயிருந்த சாந்தியும் வீட்டிற்கு வந்து இவர்களை பார்க்க ஆரம்பித்தாள்... அவள் பால் கொண்டு வந்து கொடுத்தாலும் வாங்க மாட்டாள் வேணி

அதன்பின் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் ஏதாவது பெயர் செலக்ட் பண்ணிருக்கியா என்று சாந்தி கேட்டதும் மிருணாளினி என்றாள்

இது சாந்தியின் முதல் மகன் மித்திரன் பெயரை போல இருக்கவும் அதற்கும் சொர்ணம் ஆடு ஆடு என்று ஆடிவிட்டார்...

யார் எவ்வளவு சொன்னாலும் வேணி முடிவாக பெயரை மாற்ற முடியாது இதுதான் என் விருப்பம் என்று சொல்லிவிட்டாள் அதற்காக 2நாள் சோறு கொடுக்காமல் பட்டினி போட்டார் சொர்ணம், சாந்தி எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டேன் என்று அவர் பிடித்த முயலுக்கு 3கால் என்று ஒரே பிடிவாதமாக இருந்தார்... சாந்தியையும் கொடுக்கவிடவில்லை சொர்ணம்

வேணிக்கு இது பழகியதால் பொறுத்து கொண்டாள் குழந்தைக்கு மட்டும் அங்கு வேலை செய்யும் ஒரு ஆயா பால் கொண்டு வந்து கொடுத்தார் அவர்க்கு கொடுக்க கூட பணம் இல்லாமல் முழித்தவளை உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் வேணி... என்னைய உன்னோட அம்மாவா நினைச்சிக்கோ என்றவர்... பணம்லாம் வேண்டாம் என்றார்...அவரை பார்த்து கை எடுத்து கும்பிடுவதை தவறிய வேணியால் வேற எதுவும் செய்யமுடியவில்லை


அந்தபின் வந்த நாட்களில் சாந்தியின் 2வது மகன் கர்ணன் மட்டும் பாப்பா, பாப்பா என்று மிருணாவின் பக்கத்திலையே இருப்பான் வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு சொல்லியும் கேக்காதவன் பிடிவாதமாக மிருணாவை தன் பக்கத்திலையே வைத்துகொள்ளவன், அவர்கள் வீட்டிற்கு உள்ளே போக வேணிக்கும், மிருணாவிற்கும் தடை விதிக்கபட்டிருப்பதால் கர்ணா எப்போதும் குடிசையிலையே இருப்பான்..

நாட்கள் வேகமாக போக ஒரு தடவை சொர்ணம் கீழே விழுந்து கால் உடைந்து விட்டது, அவருக்கு தினமும் சேவை செய்ய சாந்தியால் முடியாது என்பதால் வேணியை வீட்டிற்குள் வர அனுமதிக்கப்பட்டது.

எவ்வளவு கஷ்டம் சொர்ணம் கொடுத்தாலும் அதை ஒரு புன்னகையில் கடந்துவிடுவாள் வேணி, அப்படி கடந்து வந்துதான் இன்று மகளுக்கு 5முடிந்து 6வயசு ஆகும் வரைக்கும் வேற எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறாள் (மொத்த பிரச்சனையும் சொர்ணம் என்ற உருவத்தில் பக்கதில் இருக்கும் போது வேற பிரச்சனை வருமா )


நினைவு உலகத்திற்கு வந்த வேணி, சத்தம் கேட்டு உள்ளே போன சொர்ணம், சாந்தி நினைவுக்கு வர வேகமா பெரிய வீட்டை நோக்கி போனாள்

அங்கு ஒரு போர் நடந்ததிற்கான அடையாளம் தெரிந்தது

இதை பார்த்த வேணிக்கு கண் முன் வந்து நின்றான் அவன்...

ஏய் அங்க என்ன பார்த்துட்டு இருக்க கீழ கொட்டி கிடைக்கறதை சுத்தம் செய் அதை விட்டுடு வேடிக்கை பார்த்துட்டு இருக்க என்று சொன்னவனை...

மித்ரா... என்றாள்

.என்னோட பேரை சொல்லாத. உனக்கு நான் முக்கியம் இல்லை அந்த குட்டி பிசாசும், கர்ணாவுதான் முக்கியம்... ஒழுங்கா சுத்தம் செஞ்சிட்டு இங்க இருந்து போய்டு என்றான்

பெரியவிங்க கிட்ட மரியாதையா பேசணும்னு எத்தனை முறை சொல்லிருக்கேன், சொல் பேச்சை கேட்கறியா என்றாள் சாந்தி

நான் சொல் பேச்சி கேட்டுதான் இருக்கேன் பாட்டி இவளுக்குல்லா மரியாதை
குடுக்க தேவை இல்லைனு சொல்லிற்கு என்றவன் கிளீன் பண்ணிட்டு எனக்கு ஆப்பிள் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா என்று ஓடும் 12வயது பையனை கண் அகல பார்த்துகொண்டிருந்தாள் வேணி
 
Top