மித்ரன் ரூமில் இருந்து மிருணா ஓடி வந்தது மூச்சு வாங்குவதை பார்த்த சாந்தி "என்ன மிரு என்னாச்சி? , ஏன்? இப்படி ஓடி வர" என்று பார்வையை மாடியை பார்த்தவாறே கேட்டார்...
'உங்க பிள்ளைதான் காரணம் ' என்று முனவியவள் " ஹீஹீ சும்மா அத்தை" என்றாள்
"உன்னோட பிரண்ட் எங்க? மிரு"
'அதானே ஐயோ !நான் அவளை மறந்துட்டேனே' என்று நினைத்தவள்
"அவ மேல இருக்கா போல அத்தை , என்னை துரத்திட்டு வந்தா ஆளை காணல, நான் போய் பார்த்துட்டு வந்துறேன் " என்றாள்
சாந்தி எதுவும்சொல்லாமல் உள்ளே செல்லவும், மறுபடியும் மேலே ஓடினாள்
இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை மேலிருந்து மித்ரன் பார்த்துகொண்டிருந்தான்
'இன்னிக்கு அந்த எருமையை கடுப்பேத்தறேன்னு, நான் பண்ண வேலை எல்லாம் எனக்கே திரும்பிடுச்சி' என்று புலம்பி கொண்டே போனவளின் எதிரே வந்து நின்றான் மித்ரன்
அவனை பார்த்ததும் மிருணாவின் உடல் நடுங்க , "
என்ன கீழே போனவ மறுபடியும் மேல் வந்துருக்க? "என்றான் மித்ரன்
"அது ஆரூவ கூப்பிடாம போய்ட்டேன்" என்றவளிடம் "அவ அப்போவே போய்ட்டா மிரு" என்றான் கருணா மித்ரனின் பின்னால் இருந்து
"எப்போ போனா? ஏன் என்னை கூப்பிடாம போனா? அப்படி போறவ இல்லையே, நீ என்ன சொன்ன? அவளை" என்று கேள்வி கணையை மிருணா, கருணாவின் பக்கம் வீச
"இவன் என்ன சொல்ல போறான் அந்த பொண்ணை . ஏன் கருணா உனக்கு முன்னவே அந்த பொண்ணை தெரியுமா? "என்ற மித்ரன் இருவரையும் சந்தேகமாக பார்க்க
"தெரியும் அண்ணா , நம்ப மிரு பிரண்ட் அந்த பொண்ணு ,அப்படி தெரியும் "
"அந்த அளவுக்கு தான் தெரியுமா?" என்று மித்ரன் கருணாவை உற்று பார்த்துகொண்டே கேட்கவும் கருணா தடுமாறினான்
அவன் தடுமாறுவதை பார்த்த மிரு, "அது உங்களுக்கு தேவை இல்லாதது" என்றவள் கருணாவிடம் ... "உனக்கு அறிவே இல்லையா? வீட்டுக்கு வந்தவிங்க கிட்ட எப்படி நடந்துகணும்னு உனக்கு தெரியுமா? தெரியாதா? ... இவ்வளவு நாள் நல்லாதானே இருந்தா இப்போ சிலரோட சேர்க்கை சேர்ந்தோன அவங்களை மாதிரியே அடுத்தவிங்கள எடுத்து எறிஞ்சி பேச ஆரம்பிச்சிட்டியா? " என்று மித்ரனை பார்த்து கொண்டே கருணாவிடம் கத்தியவள் ," உன்கிட்ட போய் கேக்கறேன் பாரு என்னை சொல்லணும் "என்று திரும்பவும் கீழே சென்றவள், சாந்தியிடம் "அத்தை நான் வரேன்" என்று நிக்காமல் சொல்லிவிட்டு வேகமாக அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்
"அண்ணா சாரி அவ ஏதோ கோவத்துல" .. என்று கருணா சொல்லி முடிப்பதற்குள்... மித்ரன் கை காட்டி நிறுத்த சொன்னவன்
"போதும், எனக்கு தெரியும் விடு" என்றவன் ரூமிற்கு சென்று விட்டான்.
வீட்டிற்கு போனா மிருணா ஆரூசா எங்கே என்று பார்க்க அவளோ பெட்டில் உக்கார்ந்து பாட்டு கேட்டு கொண்டிருந்தாள்.
கோவமாக அவளிடம் சென்றவள் "ஏண்டி வரேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வர மாட்டியா? "என்றாள்
"இல்லை மிரு, அவர் எதுவும் பேசாம முறைச்சிட்டே இருந்தார் அதான் வந்துட்டேன்"
"பொய் சொல்லாத "
"உண்மையா தான்"
"இல்லை அவன் ஏதோ சொல்லிருக்கான், அதான் நீ இப்படி சொல்லாம கூட வந்துருக்க"..
"அவர் எதுமே சொல்லல "என்றவள்.. "ஆண்ட்டி கிட்ட சொல்லிட்டு வரலானு தான் பார்த்தேன், அவங்க கிச்சன்ல இல்லை பின்னாடி இருந்தாங்க போல அதான் நான் வந்துட்டேன்" என்றாள்
ஆரூ சொன்ன எதையும் மிருணா நம்பவில்லை என்றாலும் , அவர்கள் இருவருக்கும் இடையில் போகவும் இவளுக்கு பிடிக்கவில்லை.... அதனால் அந்த பேச்சை அதோடு விட்டுவிட்டாள்...
"மிரு இன்னிக்கு ஈவினிங் கோவிலுக்கு என்ன? டிரஸ் போட போற "
"சேலை கட்ட சொல்லி அம்மா சொன்னாங்க, ஆனா எனக்கு அதுலாம் வராது அதனால தாவணி காட்டலாம்னு இருக்கேன், நீ"?
"நானும் தாவணி, புடவை, சூடினு நிறைய எடுத்து வந்துருக்கேன் நீ என்ன கட்டறியோ? அதுவே நானும் கட்டறேன்" என்றாள் ஆரூசா
"ஏண்டி ஒரு நாள் கூத்துக்கா இவ்வளவும் தூக்கிட்டு வந்த? "
"ஆமா உன் கிட்ட கேட்டேன் , நீ தான் எதுவுமே சொல்லவே இல்ல, அதனால தான் நான் எதை எடுத்துகிட்டு வரதுன்னு தெரியாம எல்லாத்தையும் தூக்கி வந்துட்டேன்"
"சரி போ போயி ரெடி ஆகுற வழியை பாரு"
"ஈவ்னிங் தானடி போகணும், அதுக்கு எதுக்கு இப்பவே ரெடியாக சொல்ற? "
"நீ போடுற மேக்கப்புக்கு இப்ப இருந்து ரெடியானா தான் பூஜைக்கு முன்னாடி ரெடியாவ, இல்ல அப்படினா அவ்வளவுதான் பூஜையே முடிஞ்சதுக்கு அப்புறம் தான் கோயிலுக்கு போவோம், இப்போவே போய் ரெடியாகி தொலை" என்றாள் மிருணா
"எதுக்குடி கோவப்படுற".....
"சரி கோவப்படல" என்றவள் அமைதியாக உக்கார்ந்தவள் கொஞ்சம் நேரம் கண் மூடினாள்
அவளை தொந்தரவு செய்யாமல் ஆரூசா குளிக்க போனாள்....
ஆரூசா பணக்காரப் பெண்ணாக இருந்தாலும் பந்தா எதுவும் காட்டாமல் எல்லோரிடமும் நன்றாக பழகுபவள்,
மிருணாவுடன் காலேஜ் படிக்கும் போது பிரண்ட் ஆனாள், போக போக இருவரும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள், மிருணாவிடம் கூட ஆரூசாவிடம் சொல்லாத ரகசியம் இருக்கும், ஆனால் ஆரூசாவிடம் அப்படி எதுவும் இருந்ததில்லை, காலேஜ் படிக்கும் போது தான் மிருணாவோடு கருணாவை பார்த்தாள் ஆரூசா . பார்த்தவுடன் காதல் என்பது போல கருணாவை பார்த்தவுடன் ஆரூசாவிற்கு பிடித்துவிடவும் .... அதை கருணாவிடம் தைரியமாக சொல்லிவிட்டாள் ஆரூசா. ஆனால் கருணாவிற்கு தான் ஆரூசாவின் மீது ஈர்ப்பு எதுவும் ஏற்படவில்லை இதை அவனும் ஆரூசாவிடம் சொல்ல ஆரூசா தான் நான் எவ்வளவு நாள் என்றாலும் காத்திருக்கிறேன் என்றாள்
அப்போது இருந்து அவர்கள் இருவருக்கும் இடையில் மிருணா ஒரு பாலமாக இருந்தாலும் அதில் ஒரு எல்லையை வகுத்து வைத்திருந்தாள் மிருணா, அந்த எல்லை எதுவரை இருந்தது என்றால், கருணாவிடம் ஆருசாவை காதலிக்க சொல்லி வற்புறுத்தவும் மாட்டாள் அதே போல் ஆரூசாவிடம் கருணாவை மறந்துவிடு என்றும் சொல்லவும் மாட்டாள்...
இப்போது வரைக்கும் கருணாவிற்கு ஆரூசாவின் மீது ஈர்ப்பு வரவில்லையா? என்றால் அது கேள்வி குறியே?
ஆரூசா குளித்து முடித்து வர மிருணா கண் மூடிய படியே உக்கார்ந்திருந்தவள் அப்படியே உறங்கியும் போயிருந்தாள்
அவளை எழுப்ப மனம் இல்லாமல் ஆரூ வெளியே போய் வேணியுடன் பேசிக்கொண்டிருக்க கருணா கோவமாக உள்ளே வந்தான்
அவன் ஆரூசாவை பார்க்காமல் உள்ளே வரும்போதே , "ஏய் எருமை எங்கடி இருக்க? என்று கத்திகொண்டே வந்தான்
"ஆண்ட்டி யாரோ கூப்பிடறாங்க" என்று வேணியிடம் சொன்னாள் யார் கூப்பிடுகிறார்கள் என்று தெரிந்துகொண்டே.
"அது கருணா வரான்னு நினைக்கறேன், அவன் சத்ததிலையே தெரியுது "என்றவர் "அவ ஏதாவது பண்ணிருப்பா அதான் இந்த சத்தம் வருது... நீ வேடிக்கை பாரு நல்லா வேடிக்கையா இருக்கும் "என்றார் வேணி
ஆரூ புன்னகைத்து விட்டு அவனை பார்க்க ஹாலுக்கு போனாள்
"உன்னோட பிரண்ட் எங்கடி" என்றான் கோவத்தில்
அவன் டி போட்டு கூப்பிட்டதும் ஆரூசாவிற்கு சந்தோசமாக இருக்க அவள் அவனையே பார்த்துகொண்டிருந்தாள்.
"ஏய் உன்னைத்தான் கேக்கறேன் அவ எங்க? " என்றான்
"அது அவ தூங்கறா".....
"நான் பார்த்துக்கறேன் என்றவன் மிருணாவின் ரூமிற்கு போய் ஏய் எருமை எந்திரிடி? என்று கத்தினான்
"ஏண்டா இப்படி கத்திட்டு இருக்க... என்ன? பிரச்சனைடா உனக்கு" என்றாள் தூக்க கலக்கத்தில்
"திருவிழா போட்டியில எதுக்குடி என்னோட பேரை குடுத்துட்டு வந்துருக்க ".....
"எதுக்கு குடுப்பாங்க, விளையாடதான்"
"எனக்கு அதுலைலாம் இன்ட்ரெஸ்ட் இல்லனு உனக்கு தெரியாதா? எருமை,
எனக்கு தெரியாது இப்போ என்னோட பேரை அதுல இருந்து எடுக்க வைக்கற" என்றான்
"சரி விடு, நீ இல்லனா எனக்கு ஆளா இல்லை , அபி இருக்கான் அவன் பேரை மாத்தி குடுத்துக்குவேன், என்றவள் இப்போ கிளம்பறியா? நான் கோவிலுக்கு கிளம்ப ரெடி ஆகணும்" என்றாள்
"ஓ உனக்கு புதுசா பிரண்ட் கிடைச்சிட்டாங்கள, அப்புறம் எப்படி? எங்களைலாம் உனக்கு கண்ணுக்க தெரியும், என்று அதுக்கும் திட்டிவிட்டு சென்றான்
மிருணா எதுவும் சொல்லாமல் தோளை மட்டும் குலுக்கிவிட்டு ரெடியாக சென்றுவிட்டான்
இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்துகொண்டு கதவின் மேல் சாய்ந்தவாறு நின்றிருந்தாள் ஆரூசா
அவளை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் கருணா
"ஏண்டி அவர்கிட்ட சண்டை போடற.. அவரை கேக்காம அவர் பேரை எதுக்கு கொடுக்கற அது தப்பு தானே"என்றாள் ஆரூசா
அவளை உற்றுபார்த்த மிருணா." சரி இனி கொடுக்கல " என்றவள் அவள் வேலையை பார்த்தாள்
"நான் சொன்னது ஏதாவது தப்பாடி"...
"அதுலாம் ஒன்னும் இல்லை , நீ போய் ரெடி ஆகு "என்றவள் அவளும் ரெடி ஆனாள்
கிளிபச்சை கலரில் பாவாடையும், அடர் சிவப்பு கலரில் தாவணியும் அணிந்தவள் , முன்னால் முடியை மட்டும் எடுத்து கிளிப் போட்டு வந்தவளை பார்க்க அழகாக இருந்தது
"ஏய் மிரு ஒரு மேக்கப்புமே போடாம எப்படிடி? இப்படி அழகா இருக்க" என்றாள் ஆரூசா
"மேக்கப் போட்டாதான் பொண்ணுங்க அழகுன்னு இல்லடி ... பொண்ணுங்க இயற்கையிலையே அழகுதான் , ஆனா நம்பத்தான் மேக்கப்புக்கு பின்னாடி அந்த அழகை மறைச்சி வெச்சுக்கறோம் ... நீயும் இன்னிக்கு எந்த பியூட்டி திங்க்ஸையும் யூஸ் பண்ணாம... வெறுமனே இருந்து பாரு" என்றாள் மிருணா
"ட்ரை பண்றேன்" என்று ஆரூசாவும் பச்சை கலரில் பாவாடை, இளமஞ்சள் கலர் தாவணி அணிந்து மிருணா போட்டது போல் முன்னால் முடியை எடுத்து கிளப் போட்டு மிருணாவை பார்க்க சூப்பர் என்று அவள் மூன்று விரலை காட்டினாள் மிருணா
இருவருக்கும் தலை நிறைய மல்லிகை பூவை வைத்துவிட்டார் வேணி
"அம்மா நாங்க ரெடி நீ வரல? ... ஏன்? நீ இன்னும் ரெடி ஆகம இருக்க "என்றாள் மிருணா
"இல்லை மிரு நான் அங்கலாம் வரல... நீங்க போய்ட்டு வாங்க "என்றார்
"ஏன் நீ? வர மாட்டிங்கற இந்த வருஷம் நீ வரணும்னுதானே ஆசையா நான் ட்ரெஸ் எடுத்து குடுத்தேன், இப்போ நீ வரலன்னு சொன்னா எப்படிம்மா? "
"இல்லை மிரு நீங்க எல்லோரும் போய்ட்டு வாங்க நான் வீட்டுலையே இருக்கேன் "என்றார்
"நீங்களும் வாங்க ஆண்ட்டி ப்ளீஸ் எங்களுக்காக" என்று ஆரூ கெஞ்சவும்
"வேண்டாம்மா "என்றார் வேணி
"நீ வந்தாதாம்மா நாங்க போவோம்" என்று சேரில் உக்கார்ந்தவள் தலையில் இருந்த பூவை எடுக்க போக
"என்னடி பண்ற "என்றார் வேணி
"நீ வரலைல அப்புறம் எதுக்கு இதுலாம் , அதான் எடுக்கறேன், என்றாள்
"சரிடி வரேன் , ரொம்ப பண்ணாத நான் கோவிலுக்கு உள்ளே எல்லாம் வரமாட்டேன் வெளியவே தான் இருப்பேன் சரியா ? "
"ம்ம் நீங்க வந்தா மட்டும் போதும்" என்றனர் இருவரும்
அதன்பின் எல்லோரும் கிளம்பினார்