கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 34

🌺முகிழ் 34🌺

மித்ரன் கோவமாக அங்கிருந்து வந்து மற்றவர்களுடன் கலந்துகொண்டான்...

மிருணாவை கருணாவும் ஆருசாவும் அழைத்து வர.... அவளுடன் அபியும் வந்தான், கருணா எதுவும் மிருணாவிடம் கேட்கவில்லை ... மித்ரன் அபியை முறைத்து பார்க்க அவனோ மித்ரனை பார்த்து சிரித்து வைத்தான்....

எல்லோரும் கசகச வென்று பேசிக்கொண்டிருக்க .... மிருணா மட்டும் எதுவும் பேசாமல் கண்களில் கண்ணீருடன் நின்றிந்தாள்....

கருணாவிற்கு அபி இங்கிருப்பது சுத்தமா பிடிக்கவில்லை... மிருணாவிற்காக பொறுத்துகொண்டான்.... அவனை பிடிக்கவில்லை என்பதற்காகத்தான் ஆரூசாவை கூட ஏற்றுக்கொள்ளவில்லையோ?? (எனக்கு தெரியலைப்பா )

"இப்போ நடந்து முடிஞ்ச விசியம் என்ன பண்ணலாம்னு சொல்லுங்க? என்றார் சொர்ணம்

"என்ன பண்ணறது பெரியம்மா , இவர் எது பண்ணாலும் அவர் இஷ்டத்துக்கு பண்ணறாரு, அதனால பாதிக்கபடறது அன்னிக்கு நானுனா, இன்னிக்கு என்னோட சேர்ந்து மிருணாவும் தான் .... இப்போ நடந்த விஷயம் நமக்குள்ள மட்டும் இருக்கட்டும், நாங்க எப்பயும் போலவே இருந்துக்கறோம் " என்றார் வேணி

எல்லோரும் என்ன சொல்வது என்று யோசிக்க.... மித்ரன் உள்ளே சென்றுவிட்டான்..... மிருணா உள்ளே செல்லும் அவனையே கண்களில் கண்ணீருடன் பார்த்துகொண்டிருந்தாள்.......

"சரி வேணி நீயும், மிருணாவுமே இருங்க, ஆனா உங்களுக்கு செய்யவேண்டிய அவனுடைய பொறுப்பை மட்டும் அவனை செய்யவிடுங்க" என்றார் சொக்கலிங்கம்

"இல்லை ஐயா, அது சரி வராது" என்று வேணி பேச இடை புகுந்த கதிர் "நீ என்கிட்ட கொடுத்த வாக்கே அதான் வேணி பிறக்க குழந்தைக்கு அவங்க அப்பா யாருனு தெரிஞ்சிட்டா சொத்துல பாதி கொடுக்கனும்னு" ...

"ஆனா அது பையனா இருந்தாதானே ஐயா" என்றாள் வேணி

"பொண்ணுக்கு செய்யக்கூடாதுனு எதும் இல்லையே "என்றார் சக்திவேல்...

ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதிரி பேச...மிருணா " நான் கொஞ்சம் பேசிக்கட்டுமா" என்றாள்

அவள் பேசுவதை மேலே பால்கனியில் இருந்து மித்ரன் கேக்க ஆரம்பித்தான்

"இவர் என்ன நல்லது பண்ணாலும் நான் இவரை என்னோட அப்பாவா ஏத்துக்க மாட்டேன்..... எங்களுக்கு இவங்க சொத்தும் வேண்டாம் சொந்தமும் வேண்டாம்" என்றவள் .... 'இப்போ இவர் செய்திருக்க வேலை, இவர் யார் சொல்லி செஞ்சாரு, ஏன்? செஞ்சாருன்னு எல்லாமே தெரியும்" என்றவள் நிறுத்த

எல்லோரும் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்

"என்ன மிருணா சொல்ற??? இவன் செய்த வேலைக்கும், மற்றவர்களுக்கு என்ன சம்பந்தம் இருக்க போகுது....இவன் இப்படி பண்ணாதே நம்ப எல்லோருக்கும் அதிர்ச்சி !!தானே" என்றார் சொர்ணம்

"உனக்கு ஒன்னும் தெரியாது, கம்னு இரு" என்ற மிருணா... சக்திவேலை பார்த்து "நீங்க என்னதான் ட்ராமா போட்டாலும் நான் உங்களை மன்னிக்கமாட்டேன் " என்றவள்

"அம்மா நீ அவரை மன்னிக்கறதும், மன்னிக்காம போறதும் உன்னோட விருப்பம், அதே போல நீ இருந்த நிலையை நினைச்சி நான் ஒவ்வொரு நாளும் வேதனை பட்ருக்கேன், ஆனா இப்போ எனக்கு இந்த நிலைக்கு, அந்த நிலையே எவ்வளவோ பரவலானு தோணுது " என்றாள்

"என்னோட பொண்ணு விருப்பம் தான் என்னோடதும் " என்று வேணி சொல்லவும் ....

" சரி இப்போ இந்த விசியத்தை பத்தி பேசுனா எல்லோருக்கும் மனக்கஷ்டம் தான், அதனால அதை விடுங்க " என்ற சொர்ணம் .... " மித்ரன் , மிருணா கல்யாணத்தை பத்தி பேசுங்க" என்றார்

" கிழவி " என்றாள் மிருணா எல்லோரும் முன்னிலையிலும்

" மிருணா என்ன பழக்கம் இது.... என்ன இப்படி மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க "என்று கடிந்துக்கொண்டார் வேணி

"விடு வேணி, அவ என்ன புதுசாவா கூப்பிடற " என்ற சொர்ணம் .... "கல்யாணம் விசியத்தை பத்தி பேசுங்க" என்றார்

"அம்மா, இதுல மித்திக்கு சம்மதம்னு சொல்லிட்டான் , ஆனா மிரு தான்" என்று இழுத்த கதிர் மிருணாவை பார்க்க.

"எனக்கு இதுல விருப்பம் இல்லை" என்றாள்....

"காரணம் "என்று கதிர் கேட்டார்

இதில் எதிலும் சாந்தி எதையும் பேசமால் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்தார்...

"எனக்கு அவனை என்று வாயில் வந்ததும் வேணி அவளை தீ பார்வை பார்க்க ..... சாரி, அவரை பிடிக்கல" என்றாள்

"மிருணா உன்கிட்ட நாங்க இதை எதிர்பார்க்கலை " என்றார் கதிர் வேதனையுடன்

அதுவரை மேலிருந்து கேட்டுகொண்டிருந்த மித்ரன் கீழே இறங்கி வந்தான்

" இவனை பத்தி பேசுனா மட்டும் இவனுக்கு மூக்கு வேர்த்துட்டுமே?, எங்க இருந்து வரானே தெரியாது வந்து நின்னுடுவான்", என்று நினைத்தவள் ...... அவனை பார்த்து முறைத்தாள்

அவனோ கூலாக வந்து நின்றவன்..... "அப்பா அவளுக்கு என்னை கண்டாலே பயம்ப்பா, அதான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லறா, அதனால விட்டுடுங்கப்பா நம்ப வேற பொண்ணு பார்க்கலாம் இவ மட்டும் தான் ஊர்ல பொண்ணுணு இருக்காளா என்றான்

"யாருக்கு??, யார் மேல பயம் , நான் உன்னை கண்டு பயந்த காலம்லா மலையேறி போயிடுச்சி " என்றாள் வெடுக்கென்று

"அப்போ என் மேல உனக்கு பயம் இல்லை "என்று அவன் கேக்க

"இல்லை" என்றாள்

இவர்கள் இருவரும் வாதாடுவதை எல்லோரும் வேடிக்கை பார்க்க அபி கொஞ்சம் உஷாராகி மிருவிருக்கு எச்சரிக்கை செய்ய நினைத்தான் ஆனால் அங்கோ மிருணாவை சுற்றி இருக்க, அவனால் எதுவும் சொல்ல முடியாமல் போனது.

"உனக்கு எம்மேல பயம்தான், நான் அடிச்சி சொல்லுவேன் "என்று மிருணாவின் சுயமரியாதையை தூண்டி பார்க்க

"இல்லை உன்னை பார்த்து எனக்கு பயமா , நெவர் "

"பயம்தான் "

"இல்லை, இல்லை"

"கண்டிப்பா பயம் இல்லையா?? "

"இல்லை."

"அப்போ அதை வாழ்ந்து காட்டு".....

"என்ன !!!!"

"உனக்கு பயம் இல்லைனா??, என்னை கல்யாணம் பண்ணி என்னோட வாழ்ந்துகாட்டு, இல்லனா நான் பழிவாகிடுவேன்னு நீ பயப்படறனு ஒத்துக்கோ, என்றான் கெத்தாக

"உன்கிட்ட எனக்கு என்ன பயம்" ....

"அப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கோ
அப்போ நம்பறேன் , உனக்கு என்மேல பயம் இல்லனு " என்றான் பற்களில் வார்த்தைகளை கடித்து துப்பியபடி

"சரி ஒத்துக்கறேன் " என்றாள்

இதை கேட்ட எல்லோருக்கும் சந்தோசம் என்றால் அபி இவள் சொன்னதில் தலையில் கை வைத்து நின்றான்

"மித்ரனோ அபியை பார்த்து சிரித்துவிட்டு மிருணாவை பார்த்தவன் " இனிதான்டி உனக்கு இருக்கு" என்று நினைத்துக்கொண்டான்

எல்லோரும் சந்தோசத்தில் இருக்க.... சொர்ணம்தான் "எப்போ கல்யாணம் வெச்சுக்கலாம்னு சொல்லுங்க" என்றார்...

சொர்ணத்தை முறைத்த மிருணா.... "இப்போ பக்கமா வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும் "என்றாள்

"எதுக்கு இப்போ சரி சொல்லிட்டு அப்புறம் மனசு மாறி வேண்டாம்னு சொல்வா ... அடுத்த மூகூர்த்ததில் கல்யாணம் வெச்சுக்கலாம்" என்றான் மித்ரன்

"அந்த வேலைல்லாம் நீ செய்வ.... அடுத்த மூகூர்த்ததில் என்ன?, அடுத்த நாள் வெச்சாலும் எனக்கு ஓகே தான்" என்றவள் அங்கிருந்து செல்ல

"ஒரு நிமிஷம்" என்றவன் " அவளை நெருங்கி உன்கிட்ட தனியா பேசணும்" என்றான்...

அவன் சொன்னவிதமே சரி இல்லை என்பது புரிந்தாலும் மிருணா போகமால் இருந்தால் அவனுக்கு பயந்துதான் போகவில்லை என்று சொல்லுவான் என்று அவனுடன் தனியாக பேச சென்றாள்

ரூமிற்கு போனதும் கதவை மூடியவன் மெதுவாக அவளை நோக்கி நடந்தான்

மிருணாவின் உள் இடி இடித்தாலும் அதை முகத்தில் காட்டாமல் மறைத்தவள்.... அவன் முகத்தை பார்த்து நின்றாள்.

"மேடம் அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு நினைச்சேன்... நீ சம்மதம் சொன்னது , நான் சொன்னதுக்காகனு மட்டும் சொன்னா கண்டிப்பா நான் நம்ப மாட்டேன் , வேற என்ன காரணம்?? "என்றான் அவளை உற்று பார்த்துக்கொண்டே

அவன் நிற்கும் தோற்றம் ஒரு போர் வீரன் நிற்பது போல கம்பீரமாக இருக்க ....

அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள்.... "காரணம் இருக்கு ஆனா அதை உன்கிட்ட சொல்லணும்னு இல்லை" என்றாள் உள்ளுக்குள் பயத்தை மறைத்தவாறு

"ஓ அப்டி வரிங்களா?? " ... என்றவன் மேலும் முன்னேறி அவளை நெருங்கி நிற்க அவர்கள் இருவருக்கும் இடையில் நூல் இலை இடைவெளி தான் இருந்தது

"இப்போ எதுக்கு இவ்வளவு நெருக்கமா வந்து நிக்கற "என்றாள் மூச்சை இழுத்துபிடித்தபடி

"உனக்குதான் என் மேல பயமே இல்லையே...... கல்யாணம் ஆனா இதைவிட நெருக்கமா இருப்போம்ல அதான் இப்போவே" என்றவன் அவள் உதட்டை பிடிக்கவும்

மிருணாவின் மனதில் ட்ரெயின் ஓட ஆரம்பித்தது....

"என்ன அதுக்கும் தயாரா "??? என்றான்

"எதுக்கு" என்று மிருணா புரியமால் கேட்கவும்

"கல்யாணம் ஆனா நான் கட்டபிரம்மச்சாரியாலாம் இருக்க மாட்டேன்.... எனக்கு டைம் வேணும் அது, இதுனுலா என்கிட்ட கேக்க கூடாது " என்றான்

அவன் தன்னை பயமுறுத்தி பார்க்கிறேனோ என்ற எண்ணம் மிருணாவிற்க்கு தோன்றினாலும் "கல்யாணம் ஆனா அது எல்லாம் நடக்கத்தானே செய்யும் "என்றாள்

"அப்போ உனக்கு பயம் இல்லையா??? " என்றவன் அவள் காதோரம் இருந்த முடியை நீவி விட அவனை தள்ளிவிட்டு "என்னை கல்யாணம் பண்ணிக்க நீதான் பயப்படணும்" என்று அங்கிருந்து ஓடிவிட்டாள்...


🌺முகிழ் 35🌺


ரூமில் இருந்து வெளியே வந்த மிருணா , அவளுடைய வீட்டிற்கு செல்ல, அவள் போவதை பார்த்த மற்றவர்கள் எதுவும் பேசாமல் கல்யாண வேலையை பற்றி பேச ஆரம்பித்தனர்

ஆனால் அபியோ மிருணாவை பார்த்ததும் அவள் பின்னால் போனான்.... அவன் போவதை பார்த்த கருணாவிற்கு கோவம் வர அவனோ ஆருசாவை முறைத்தான்.

அபி வீட்டின் உள்ளே போனதும் "என்ன மிரு? இப்படி பண்ணிட்ட, நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவனு நான் நினைச்சி கூட பார்க்கல தெரியுமா?? "

"ஏன்?? நான் சம்மதம் சொன்னேன்னு உனக்கு தெரியாதா??

"தெரியும் ஆனா... அதுக்காக அவன் என்னை பழிவாங்க உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றான்? அவனை போய் எப்படி நீ கல்யாணம் பண்ணிக்க முடியும்" என்றான் அபி

"அதுலாம் நான் பார்த்துக்கறேன் விடு.... அவனால் மட்டும் எதுவா இருந்தாலும் செய்யமுடியுமா ?, ஏன் என்னால முடியாதா?? " என்றவள் "பிரீயாவிடு டா" என்றாள்

அபிக்கு இதில் துளிக்கூட விருப்பமில்லை என்பதால் அவன் "நான் கிளம்பறேன், எனக்கு வேலை இருக்கு "என்றான்

"கோவமா? அபி "

"இல்லைனு சொல்ல மாட்டேன், உனக்காக நான் ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யறப்போ , நீ எதுக்கு இப்படி பண்றனு இருக்கு , சரி விடு அதான் சொல்லிட்டியே நான் பார்த்துக்கறேன்னு அப்புறம் நான் எதுக்கு இங்க வேஸ்ட்டா "என்றவன் "நான் கிளம்பறேன், ஆரூவை நாளைக்கு வந்து கூட்டிட்டு போறேன்" என்றான்

"ம்ம் "

அதன்பிறகு அபி கிளம்பியதும் மிருணா ஒரு நிமிடம் அவசரப்பட்டுடோமோ என்று நினைக்க "பார்த்துக்கலாம் , சமாளிக்க முடியாத பிரச்சனை எதுவுமே இல்லை "என்று நினைத்தவள் வெளியே போய் எட்டி பார்த்தாள்.

அவளை பார்த்த கதிர் அவளை கூப்பிடவும்... அவரின் அருகில் சென்றவள்

"சொல்லுங்க மாமா" என்றாள்

"கல்யாணம் அடுத்த மூகூர்த்ததுல வெச்சிருக்கோம் , உனக்கு ஓகேவாம்மா"??

"ம்ம்"

"அடுத்த முகூர்த்துக்கு இன்னும் 2வாரம் இருக்கு , அதுக்குள்ள கல்யாண வேலையை முடிச்சிற முடியுமா? " என்றார் சொக்கலிங்கம்

"ஒரு நிமிசம்" என்ற மிருணா "எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு, இந்த கல்யாணம் நடக்கணும்னா அந்த கண்டிஷனை நீங்க எனக்கு செஞ்சி குடுக்கணும் "என்றாள்

"அதானே பார்த்தேன், இவ காரியம் இல்லமா ஒரு குச்சியை கூட நகர்த்தி போடமாட்டாளே?? இப்போ என்ன கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றானு " என்று மித்ரன் அவளை நக்கலாக பார்க்க....

"என்ன சொல்லும்மா?? " என்றார் கதிர்

"ஒன்னும் பெருசா இல்லை மாமா.. கம்பெனில தொழிலாளர்களுக்கு ஹாஸ்பிடல், ஸ்கூல், வீடு இதுலாம் கட்டி கொடுக்க சொல்லி உங்ககிட்ட கேட்டிருந்தேன்ல "

"அது எதுக்கும்மா இப்போ"?? என்றார் கதிர்

"இவ காரணம் இல்லாம சொல்ல மாட்டாப்பா, என்னோட கெஸ் கரைட்னா அவங்களுக்கு அதலாம் செஞ்சு கொடுத்ததா தான் கல்யாணம்னு சொல்லுவா? சரியா?? " என்றான் மித்ரன் மிருணாவை பார்த்து

"சரிதான், ஆனா அதை முழுசா செய்ஞ்சி கொடுத்தா தான் கல்யாணம்னு சொல்லற அளவுக்கு நான் கல்நெஞ்சக்காரி இல்லை, அதனால இப்போதைக்கு
அந்த ப்ராஜெக்ட்க்கு அடிக்கல் நட்டா போதும், அப்புறம் சீக்கிரம் கட்டி முடிச்சறலாம்" என்றாள்

"இப்போ கல்யாணம் செலவு இருக்கும்மா... அதுக்கான செலவை செஞ்சா, கல்யாணம் செலவுக்கு என்ன பண்றது ?? என்று கதிர் தயங்கவும்

"மாமா கல்யாணம் சிம்பலா கோவில வெச்சிக்கோங்க , அவங்களுக்கு வாழ்நாள் முழுக்க செய்யறதைவிட , நம்மளுக்கு ஒரு நாள் கூத்துக்கு எதுக்கு வீண் செலவு செய்யணும்" என்றாள்

அவளுக்கு கல்யாணத்தில் உடன்பாடு இல்லை என்பது அவள் உபயோகிக்கும் வார்த்ததைகளில் எல்லோருக்கும் புரிய .....

"அதுக்குன்னு வீட்டுல நடக்கற முதல் கல்யாணத்தை எப்படி யாரையும் கூப்பிடாம சிம்பிலா செய்ய முடியும்" என்றார் சொர்ணம்

"நம்ப எல்லோரையும் அழைச்சி கல்யாணம் பண்ணறது எதுக்கு??, வரவிங்க எல்லோரும், கல்யாணம் பண்ணிக்கறவிங்க சந்தோசமா வாழனும்னு வாழ்த்த தானே, இது மாதிரி நல்ல காரியம் செஞ்சாலும் வாழ்த்த தானே செய்வாங்க" என்றாள் மிருணா பிடிவாதமாக

"சரி மிரு பார்க்கலாம் " என்றார் கதிர்

"இல்லை மாமா, இதைதான் அன்னிக்கும் சொன்னிங்க , இந்த முறை நான் அசால்ட்டா விடற மாதிரி இல்லை, நீங்க செய்ங்க, அப்போ தான் கல்யாணம் நடக்கும் "என்றவள் தீர்மானமாக சொல்லவும்

"சரிப்பா பண்ணிடலாம் "என்றான் மித்ரன்

"எப்படிப்பா உடனே முடியும்"

"முடிச்சிடலாம்ப்பா" என்றவன்

"உன்னை கல்யாணம் பண்ண இதை செய்யறேன்னு நினைக்காத... நீ சொன்னதுல ஒரு நல்லது இருக்கு அதுக்காக செய்யறேன்னு சொன்னேன்" என்று விளக்கம் கொடுத்தவன் "2க்கும் ஆக வேண்டிய வேலையை நாளை மறுநாள்ல இருந்து ஆரம்பிங்க "என்றவன் உள்ளே சென்றுவிட்டான்

எல்லோரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு கலைந்து சென்றனர்

ஆரூசாவும் , மிருணாவும் சாப்பிட அமர அப்போது மிருணாவிடம் "எதுக்கு மிரு, இப்படிலாம் கண்டிஷன் போடற "?? ..

"நான் என்னம்மா தப்பா சொல்லிட்டேன் , 5கம்பெனி வெச்சிருக்காங்களா செய்யட்டுமே, எப்போமே தனக்கு தனக்குனு சுயநலமா பார்த்தா அப்பறம் கொஞ்சம் கூட நிம்மதியா வாழ முடியாதும்மா"

"அது அவங்க இஷ்டம் மிரு அதை நம்ப வற்புறுத்த கூடாது, இல்லையா??? "

"அம்மா , இது மாதிரி சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை யூஸ் பண்ணிக்கனும்மா, அவங்க என்ன? எனக்கா செய்யறாங்க, நம்பள மாதிரி தொழிலார்களுக்கு செய்யறாங்கம்மா , உழைப்பை சுரண்டி எடுக்க தெரிஞ்சவிங்களுக்கு அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு மட்டும் ஏன்ம்மா தெரியல??? "...

"நமக்கு இந்த வீடு கட்டி கொடுத்திருக்காங்கள மிரு"

"அம்மா நீ இவ்வளவு வெள்ளந்தியா இருக்க கூடாது, உன்னோட வாழ்க்கை கெடுத்துட்டு, உன்னோட 25வருஷ உழைப்பையும் சாப்பிட்டவீங்க, இதை கூட செஞ்சி தரலைனா என்னம்மா அர்த்தம் இருக்கு , இந்த வீடு என்னமோ உன் பேர்ல இருக்கற மாதிரி பேசற, அவங்க உனக்கு தங்க ஒரு இடம் கொடுத்துருக்காங்க அவ்வளவு தான், "என்றவள்

"தொழிலாளர்கள் ரொம்ப பாவம்ம்மா , இவங்களால அவங்க எந்த லாபம்மும் அடையறது இல்லை, ஒரு நாள் வேலைக்கு வரணாலும், வருஷ முழுக்க நம்ப கம்பெனியில வேலை செய்யறவிங்கதானேனு விடாம அந்த ஒரு நாளுக்கு சம்பளத்தை பிடிக்கதானே செய்யறாங்க" ...

"கதிர் ஐயா, அப்படி இல்லை மிரு "

"நான் அவரை மட்டும் சொல்லல, ஒட்டு மொத்த முதலாளிவர்க்கத்தையும் தான் சொல்றேன்" என்று மிரு சொல்லவும் ஆரூசா முறைத்தாள்

"என்னடி முறைக்கற??? உன் அண்ணனையும் சேர்த்திதான் சொல்றேன், மொத்தமா நீங்களே சுருட்டிக்காம கொஞ்சம், கொஞ்சம் தொழிலாளர்க்கும் கொடுங்க அப்பதான் சாப்பிடற சாப்பாடு உடம்புல ஒட்டும்" என்றவள் சாப்பிட்டு எழுந்து செல்ல

"அவ ஏதோ உளறாம்மா, நீ ஏதும் தப்பா நினைச்சிக்காத என்று வேணி பாவமாக கேட்கவும்

"ஐயோ!! ஆண்ட்டி அவளை பத்தி எனக்கு தெரியாதா?? விடுங்க" என்றவள் சாப்பிட்டு எழுந்து சென்றாள்

இருவரும் ஒரே ரூமில் தூங்க செல்லவும் "ஏன் மிரு உனக்கு இவ்வளவு கோவம் வருது "நீ முன்னலாம் இப்படி இல்லையே??"

"தெரியலடி , என்னால முன்னாடி மாதிரி அமைதியா இருக்க முடியலடி"

"எதனாலனுதான் கேக்கறேன் "

"அதான் தெரியலடி, சில விசியங்கள் என்னை ரொம்ப கோவப்படுத்துது "

!அமைதியா இரு பேபி, எல்லாமே சரியா போகும்"

"கருணா கூட என் மேல செம கோவமா இருக்கான் தெரியுமா??"

"அவருக்கு என்ன உன் மேல கோபம்"

"தெரியல, என் உள் மனசு சொல்லுது அவன் என் மேல கோவமா இருக்கான் ஏனா எனக்கு ஏதோ ஒரு பிரச்சனைனா அவன் எப்படி தள்ளி நிக்கிறவன் இல்லை"

"அவர் கோவம், உங்கிட்ட எவ்வளவு நேரம் இருக்கும் சொல்லு"

"அவன் கோபம் இதுவரைக்கும் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் வரைக்கும் இருந்திருக்கு, ஆனால் இந்த கோபம் எனக்கு என்னமோ?? ரொம்ப நேரத்துக்கு இருக்கும்னு தோணுது

"அவர் அப்படித்தான் இருக்க மாட்டாரு, நீ தூங்கு காலைல பேசிக்கலாம்" என்றாள் ஆரூசா

இருவரும் தூங்க காலையில் மிருணாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது

அவள் காலையில் எழுந்து வெளியில் போக கார் ஒன்று வந்து நின்றது, அந்தக் காரில் இருந்து இரண்டு இளம்பெண்கள் இறங்கினர் இருவரையும் பார்க்க ஒருத்தி இந்தியாவை பூர்வீகமாக கொண்டவள் போல தெரிய, இன்னொருத்தியோ வெளிநாட்டை பூர்விகமா கொண்டவளாக இருந்தாள் அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு ஐந்து வயது குழந்தை இருந்தது,

அவர்களை எதிர்பார்த்து மித்ரன் வாசலிலே காத்திருந்தது போல் தெரியவும், மிருணா அவனை பார்த்தாள், அந்த குழந்தை மித்து என்று ஓடி சென்று அவன் காலை கட்டிகொண்டது

அந்த இளம்பெண்களில் ஒருத்தி "மித்ரா ஹொவ் ஆர் யூ பேபி" என்று அவனை ஹக் பண்ண, அவனும் பதிலுக்கு அவளை ஹக் பண்ணினான்...

இதை பார்த்த மிருணாவிற்கு கோவம் தலைக்கு ஏற.. அங்கிருந்த பக்கெட்டை எட்டி உதைத்தாள்....
 
Top