மிருணா கோவத்தில் பக்கெட்டை உதைத்து எறிந்துவிட்டு உள்ளே சென்றாள்,
உள்ளே சென்றால் அப்போது தான் ஆரூஷா எழுந்து உட்கார்ந்திருந்தாள்
மிருணாவை பார்த்தவள் "காலைலையே உனக்கு என்னடி கோபம்?? "என்று கேட்க
"உன் அண்ணனுக்கு போன் போட்டுடுடி ,, அவன் இப்ப எனக்கு இங்க வரணும்"
"கூப்பிடு டி அவனை"
"ஏன் உன் கிட்ட போன் இல்லையா?? நீ கூப்பிட்டு பேசு"
"அதானே" என்று போனை எடுத்தவள் அவனுக்கு அழைத்தாள்
அந்தப்பக்கம் அபி தூக்கத்தில் இருந்ததால் அவளின் முதல் போனை எடுக்கவில்லை, அவள் கோபத்தில் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருக்க சத்தம் கேட்டு மெதுவாக கண் விழித்தவன் போனை தேடி எடுத்து காதில் வைத்தான்
"சொல்லு மிரும்மா"
"டேய் வீணாபோனவனே, என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?? "
"ஏன் பேபி? காலைல இவ்வளவு கோவமா இருக்க??? "
"நீ பண்ணி வச்சிருக்க வேலை அப்படி இருக்குது, ஒழுங்கு மரியாதையா கிளம்பி வீட்டுக்கு வந்துரு"
"நான் என்ன பண்ணி வச்சேன்?? "
"அந்த மித்ரனை பத்தி விசாரிக்கச் சொல்லி உன் கிட்ட சொன்னேன் இல்ல, நீ என்னத்த விசாரிச்சு கிழிச்ச"
"ஏன் என்ன ஆச்சு, நான் விசாரிச்ச வரைக்கும் நல்லவன் தானே சொன்னாங்க," என்று யோசிக்கவும்
"நீ சொன்னதை நம்பித்தானேடா, நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்" என்றவளின் குரல் கம்ம
"வந்தேன்னு வைச்சிக்க உன்னை கொன்னேடுவேன், நீ அதுக்காக மட்டும் தான் சம்மதம் சொன்னேன் சொன்னினா??? " என்றவன் 'இதுங்க 2கிட்டையும் மாட்டிகிட்டு நான்தான் முழிக்கறேன் அந்த கருணா அப்படியே நழுவிட்டான் "என்று முனவினான்..
"வீட்டுக்கு வரியா?? இல்லையா??"
"என்ன இன்னிக்கு ஸ்பெஷல்னு சொல்லு டைம் இருந்தா வரேன்"
"டேய் நான் என்ன கேட்டுட்டு இருக்கேன், நீ திங்கறதிலையே குறியா இருக்க??? "
"ஏய் லூசு, நான் விசாரிச்சா வரைக்கும் அவன் நல்லவன், அதிகம் பொண்ணுங்க பக்கம் போகமாட்டானுதான் சொன்னாங்க ...
!யார்கிட்ட விசாரிச்சா நீ??
"அங்க இருக்கற டிடக்ட்டிவ் வெச்சுதான்," என்றவன் டிடக்ட்டிவ் சொன்னதை நினைத்தவன், பேச்சை மாற்றுவதற்காக
"இன்னிக்கு என்ன ஸ்பெஷல்னு சொல்லவே இல்லையே மிரு "
"இன்னிக்கு கோவில கெடாவெட்டு, நம்ப அதை செய்யலானும், நான்வெஜி எடுப்போம் வா வந்து கொட்டிட்டு போ" என்றாள்
"இல்லை மிரும்மா, இன்னிக்கு ஒரு மீட்டிங் இருக்கு , ஈவினிங் முடிஞ்சா வரேன் "என்றவன் போன்னை வைத்தான்
மிருணாவிற்கு அவனிடம் சண்டை போட்ட பின் மனம் என்னவோ போல இருக்க... "நான் கருணாவை மிஸ் பண்ணறேன், அவன்கிட்ட எவ்வளவு சண்டை போட்டுருப்பேன், இப்போ அவன் யாரோ மாதிரி தள்ளி இருக்கறது கஷ்டமா இருக்கு, அவன் பேசலனா என்ன? நான் போய் பேசறேன், " என்று நினைத்தவள் , வெளியே போக
"ஏய் இருடி, நானும் வரேன் "என்றாள் ஆரூ
"எங்கடி போறீங்க, ரெண்டு பேரும் இன்னும் எழுந்ததுல இருந்து பல்லுகூட விளக்கமா?? "
"இரும்மா வரோம் "என்ற மிருணா ஆரூவையும் அழைத்துகொண்டு கருணா வீட்டுக்கு சென்றாள்
கருணா என்று கத்திக்கொண்டே மிருணா உள்ளே போக....
ஹாலில் அந்த பெண்கள் இருவரும் குழந்தையுடன் உக்கார்த்திருந்தனர், மித்ரன் இவளை பார்த்ததும் "மிரு இங்க வா " என்று அவளை அழைக்கவும் அவள் அவனை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே அவன் அருகில் சென்றாள்
"இவங்க நிவேதிதா, இது குட்டி அவங்க பொண்ணு லிசா "என்று இருவரையும் அறிமுகப்படுத்தி வைக்கவும் அவள் அவர்களை பார்த்து புன்னகைத்தாள்
அந்த குட்டி வந்து மிரு என்று கட்டிக்கொள்ளவும் மிருணாவிற்கு ஆச்சரியமாக இருந்தது...
"என்ன முழிக்கற?? இவங்க கிட்ட இப்போதான் உன்னை பத்தி சொன்னேன்""என்றான்
அவள் எதுவும் பேசாமல் அந்த குழந்தையை தூக்கி முத்தம் கொடுத்தாள்...
"உங்க பேர் லிசா வா ... கியூட் " என்று குட்டியின் கன்னத்தை கிள்ளி ஆட்டவும்
"உன் பேர் கூட விட்டு தான்" என்றது மழலை மொழியில்
அதைக் கேட்ட மிருணாவிற்கு அவ்வளவு நேரம் இருந்த கோவம் எல்லாம் விலகி மனம் சாந்தமடைந்தது போல இருந்தது...
மிருணா நிவேதிதா பக்கதில் இருந்த இளம்பெண் மேல் பார்வை போக அவளோ இவளை முறைத்தவண்ணம் இருந்தாள்...
மிருணா பார்ப்பதை பார்த்த மித்ரன் "இவ என்னோட பிரண்ட் லாரா" என்று அவளையும் அறிமுகப்படுத்த மிருணாவிற்கு அந்த லாராவை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை, இருந்தும் சிநேகமாக புன்னகைக்க அந்த லாரா வோ இவளை அப்பட்டமாக முறைத்தாள்
'இவ என்ன இப்படி முறைக்கறா?? , ஏதோ சரி இல்லையே'?? என்று மித்ரனை பார்க்க அவனோ என்ன சொல்வது என்று தெரியமால் முழிக்க ஆரம்பித்தான்
லிசாவை இறக்கிவிட்டவள் "நான் கருணாவை பார்க்கத்தான் வந்தேன் , வா ஆரூ" என்றவள்... "கருணா, கருணா "என்று கத்தினாள்
இவள் சத்தம் கேட்டு கருணா வெளியே வந்து பார்க்க, கருணா மட்டும் இல்லாமல் மொத்த குடும்பமே வந்து நின்றது
"என்ன மிரு, ஏதாவது பிரச்சனையா?? என்றார் சாந்தி
"அத்தை நீங்க இங்கதான் இருக்கீங்களா?? , நேத்துல இருந்து நீங்க எதுமே பேசாம அமைதியா இருந்திங்களா?? அதான் நீங்க ஊருக்கு போய்ட்டீங்களோனு நினைச்சிட்டேன்" என்றவள்... நான் கருணாவைத்தான் கூப்பிட்டேன் என்று கருணாவை பார்க்க
அவனோ "உனக்கு என்ன பிரச்சனை?? எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க?? " என்றான் கூலாக
"உன்கிட்ட பேசணும் "
"எனக்கு வேலை இருக்கு "
"இல்லை, இப்போவே பேசணும் உன் மண்ணாக்கட்டி வேலை எல்லாம் தூக்கி போட்டுட்டு என்னோட பேசவா " என்றாள்
"முடியாது, நான் முன்னாடி மாதிரி நீ என்ன சொன்னாலும் பரவலா என்னோட மிரு தானே சொன்னான்னு அதை விட்டு தள்ளிட்டு, நாய் மாதிரி உன் பின்னாலையே சுத்த கருணா இல்லை, இப்போ எனக்கும் கொஞ்சம் சூடு சுரணை வந்துருச்சு அதனால இனி உன்னோட வழில நான் வரமாட்டேன்! என்றவன் அங்கு யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் கத்திவிட்டு சென்றுவிட்டான்
மிருவிற்கு கருணா அடித்திருந்தால் கூட இவ்வளவு வலி ஏற்பட்டிருக்காது ... அவ்வளவு வலி ஏற்பட்டது
மிருவின் முகம் வாடி இருக்க அவள் தோளை தொட்டாள் ஆரூசா
மிருணா அவளின் கையை தட்டிவிட்டு வெளியே செல்லவும் .... மித்ரனுக்கு கூட கருணா பேசியது அதிர்ச்சியாக இருந்தது... இவன் இப்படி பேசற ஆள் இல்லியே என்று யோசித்தவனுக்கு கருணாவிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தான்
கருணாவின் இந்த கோவம் எதனால் என்று இனி வரும் ud ல பார்க்கலாம்