கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 38

மிருணா கோவமாக இருக்க.... அவள் மனம் ஏனோ மித்ரனை வறுத்து எடுத்துக்கொண்டிருந்தது.

ஆபிஸ் போயிருந்த மித்ரன் வந்ததூம் அவனிடம் கேக்கலாம் என்றிருந்தாள்

அவர் வர நைட் லேட்டானதால் மிரு கேக்க வேண்டும் என்பதை அப்போதைக்கு கேட்கவில்லை

அன்று இரவு அபி வந்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு ஆரூசாவை அழைத்துக்கொண்டு போனான்...ஆரூசாவிற்கு மிருணாவை விட்டு போவதை விட கருணாவை இனி அடிக்கடி பார்க்க முடியாதே என்ற எண்ணம் அவளை கவலை கொள்ளச்செய்தது

அந்த நாள் அப்படியே கடந்து போக அடுத்த நாள் காலைலையே நிவி , லாரா, லிசா மூவரையும் முதல் வேலையாக பிளைட் ஏத்திவிட்டிருந்தான் மித்ரன்... இப்போது போகும் பிரச்சனை திரும்பவருமா??? இதனால மித்ரன், மிருணா வாழ்க்கையில் பிரச்சனை வருமா ?? பொறுத்து இருந்து பார்க்கலாம்

கல்யாணம் வேலைகள் நடக்க பத்திரிகை மாடல் வந்திருப்பதாகவும், அதை செலக்ட் பண்ண சொல்லி மிருணாவை வீட்டிற்கு அழைத்தார் சாந்தி

அவளும் போய் மாடல் பார்த்துக்கொண்டிருந்தாள், அப்போது மித்ரன் கம்பெனியில் இருந்து வந்தவன் அவள் இருப்பதை பார்த்ததும் ஹாலிலையே உக்கார்ந்தான்

"அப்போது கண்ணனும் வர என்ன கண்ணா, அம்மா ஏதாவது சொல்லிவிட்டார்களா?? " என்றார் சாந்தி

"இல்லை அத்தை, நான் மித்தியை பார்க்க வந்தேன்"... என்றவன் மித்ரனிடம் பேசத்தொடங்கினான் ...

மிருணாவிற்கு அவள் பார்த்துக்கொண்டிருந்த மாடலில் எதை எடுப்பது என்று தெரியவில்லை, ஒரு அட்டைக்கு நூறு, இருநூறு செலவு செய்யவும் அவளுக்கு விருப்பம் இல்லை, அவளை பொறுத்த வரைக்கும் கல்யாணப்பத்திரக்கை வெறும் அட்டை தான்

மித்ரன் அவளையே பார்த்துகொண்டிருக்க, கண்ணன் பேசிக்கொண்டிருந்த எதையும் அவன் கவனிக்கவில்லை " மித்தி நான் சொன்னது ஓகே வா"?? என்றான்

"என்னடா சொன்ன?? "என்று
இவன் கேட்கவும் கண்ணன் தலையில் கை வைத்து "கிழிஞ்சிது போ ... அப்போ இவ்வளவு நேரம் என்ன கவனிச்ச"?? என்று மித்தியை ஒரு மாதிரி பார்க்கவும்

"சரிடா மச்சான் சொல்லு" என்றவன் அவன் அருகில் வந்து உன் தங்கச்சியை கொஞ்சம் டென்ஷன் பண்ணலாமா?? என்றான்

"அவளை தங்கச்சின்னு சொல்லாத எனக்கு செம கோவம் வரும்"

"கோவம் வந்தாலும் , அவ உன் தங்கச்சிதான் " என்றவன் "இப்போ அது பிரச்சனை இல்லை, அவளை டென்ஷன் பண்ணனும் வா" என்றவன் அவ்வளவு நேரம் அவர்களுக்கு மட்டும் கேக்கமாறு பேசிக்கொண்டிருந்தவன்
என்ன பண்ணலாம் என்று யோசிக்கவும் திடிரெண்டு ஒரு எண்ணம் தோன்ற கண்ணனிடம் சொன்னான்

"வேண்டா மாப்பிளை அப்புறம் அந்த லூசு, காளி அவதாரம் எடுத்துருவா"

"எனக்கு அதானே வேணும், மச்சான்" என்றவன் "தங்கச்சியா ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்போ நான் மாப்பிள்ளையா? என்றான் கிசுகிசுவென்று...

இவர்கள் இருவரும் ஏதோ தன்னை பற்றிதான் பேசுக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களை நிமிர்ந்துக்கூட பார்க்காமல் பத்திரிகையே பார்த்துக்கொண்டிருந்தாள் மிருணா.

மித்தி ஹெட்போன்னை காதில் மாட்டிக்கொண்டு மிருணாவின் பக்கத்து சோபாவில் வந்து உக்கார அவன் பின்னாலையே கண்ணனும் வந்து உக்கார்ந்தான்...

மித்ரன் மிருணாவை பார்த்துக்கொண்டே பாட்டைப்பாடினான்

இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

என்று அவன் பாடவும், "இவனை என்ன பண்றது??... . இவன்கூட டூயட் பாடிட்டாலும் அப்படியே விளங்கிடும்...இதுல சிரிச்சி பேசணுமா?" . என்று அவனை முறைத்தாள் மிருணா

செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்மா

"சுட்டு தள்ளத்தான் போறேன் டா இன்னும் கொஞ்சநேரம் நீ இப்படியே பாடிட்டு இரு அப்புறம் அப்படிதான் பண்ணுவேன்" என்று நினைத்தவள் "ஊரு உலகத்துல எவ்வளவு பாட்டு இருக்கு... இந்த எருமை பாடற பாட்டை பாரு" என்று பத்திரிகை எடுத்து டீப்பாய் மேல போட்டவள்

"அத்தை ஏதாவது ஒன்னை செலக்ட் பண்ணுங்க நான் போறேன்" என்று எழுந்தவளை

"இரு மிரு போலாம், அதுக்குள்ள என்ன அவசரம் நீதானே கல்யாணம் பொண்ணு உனக்கு பிடிக்கணும்ல" என்று அவளை உக்காரவைத்த சாந்தி அவளுக்கு குடிக்க ஜூஸ் கொண்டுவர போனார்

"இவங்க ஒன்னு, நேரம் காலம் தெரியாம பாசத்தை பொழிஞ்சிட்டு" என்று அவள் முனவ...


"மெழுகு டால்லு நீ, அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி

கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா

என்று பாடியவன் இந்த முறை மிருணாவை கை காட்டியே பாடினான்...

"உனக்கு ஏத்தவ நானா டா? ஏண்டா இவளை கல்யாணம் பண்ணோம்னு நீ நொந்து சாகாலை அப்புறம் நான் மிருணா இல்லை" என்றாள் மனதுக்குள்

அவள் கொதிநிலையில் இருக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட மித்தி ஹெட்போன்னை கழட்டி வைத்துவிட்டு ... கண்ணனை பார்த்து புருவத்தை உயர்த்தினான்....

அவன் நக்கலாக சிரிக்கவும் "அப்புறம் கண்ணா நீ ஏதோ சொல்லிட்டு இருந்தியே என்ன??? " என்றான்

"உன் கல்யாணத்துக்கு தாம்பூல பை போடணும்னுல அதுக்கு வெள்ளி குங்கும சிமிழ் கொடுக்கலாம்னு அப்பா சொல்லிட்டு வர சொன்னார்" என்றான்

"ஒ கொடுக்கலாமே" என்ற மித்ரனை இடை மறைத்து " அதுலாம் ஒன்னும் வேண்டாம்" ..... என்றாள் மிருணா

"இவளுக்கு ஏத்திருக்க டென்ஷன்னுக்கு இப்போதைக்கு வாயை திறக்க மாட்டான்னு" நினைச்சேன் என்று மித்ரன் அவளை பார்த்துக்கொண்டே "அப்போ என்ன கொடுக்கலாம்னு நீயே சொல்லு" என்றான்

"வர எல்லோருக்கும் 2 பனைக்கன்னு கொடுக்கலாம்" என்று அவள் சொல்லவும் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்...

"எதுக்கு மிஸ்டர்ஸ் சிரிக்கறீங்க??? "

"நீ லூசுங்கறது எனக்கு தெரியும் ஆனா இந்த அளவுக்கு அரைலூசா இருப்பனு தெரியாது... யாராவது கல்யாணத்துக்கு வரவின்களுக்கு பனை மரத்தை கொடுப்பாங்களா??? " என்றான் கண்ணன்

"ஏய் யாருடா லூசு.... நீயும் உன்னோட பிரண்ட் இவனும் தான் லூசு... காசு பணத்தை கொடுக்கறதை விட அடுத்த சந்ததிக்கு பயன் கொடுக்கற மரத்தை கொடுக்கறது எவ்வளவு நல்லது தெரியுமா??? அதுலாம் உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எப்படி தெரியும் என்றாள் நக்கலாக

!அதுக்கு பனை மரத்தை தான் கொடுக்கணுமா?? வேற ஏதாவது பழமரத்தை கொடுக்கலாமல்ல"என்ற மித்ரனிடம்

"பனை மரம் என்ன உன்னக்கு அவ்வளவு கேவலமானத போயிருச்சா?? அதை பத்தி உன்னக்கு என்ன தெரியும் "மரங்களின் கற்பகவிருட்சம்" பனை மரம், நம்ப தமிழ்நாட்டின் தேசிய மரம் பனைமரம் , தெரியுமா??? இந்த மரம் உனக்கு கேவலமா?? என்றாள் கோவமாக

"நான் கேவலம்னு சொன்னனா? ... அது ஈஸியா கிடைக்கறது தானே, அதுக்கு பதில் பழம் கொடுக்க மரத்தை கொடுக்கலாம்" என்றான் மித்ரன் வேகமாக

நீங்க சொல்றதும் சரிதான் , ஆனா பனைமரம் எதுக்கு கொடுக்கணும்னு சொல்றேன்னா அது நிலத்தடி நீரை இழுத்து தக்க வைச்சிக்கும்.. ஒரு கிணறை சுத்தி 5, 6 பனை மரம் நட்டா அந்த கிணறு எப்போதும் வத்தாம இருக்கும் , அதும் இல்லமா அதுக்கு நம்ப தண்ணி ஊத்தணும்னு அவசியம் இல்லை".... என்றவள்...

"எந்த ஒரு பராமரிப்பும் செய்யாம அது நமக்கு அடி முதல் நுனி வரைக்கும் பலன் கொடுக்கும்.. பனைமரத்து குருத்துல சில்வர் நைட்ரேட் வேதிவினை நடக்கிறதால மழை பொழிவை பூமியை நோக்கி இழுக்க சக்தி பனை மரத்துக்கு இருக்கு ,
இப்படி பட்ட மரம் மாதிரி நீ சொன்ன பழம் மரத்தால கொடுக்க முடியுமா??

இந்த காலத்துல மழை இல்லாம நிலத்தடி நீரும் வத்தி போய் தண்ணிக்கு எவ்வளவு கஷ்டப்படறோம்.... அதுக்கு வீட்டுக்கு ஒரு பனைமரம் வளர்த்துனோம்னா நம்ப நிலத்தடி நீரும் குறையாமல் இருக்கும்".... என்றவள்.... நிறுத்தவும் இருவரும் அவள் வாயை ஆ என்று பார்த்துக்கொண்டிருந்தனர்...

"இது மட்டும் இல்லை கல்யாணத்துக்கு வரவிங்களுக்கு இதை கொடுத்து இதோட பயனையும் எடுத்து சொன்னா கண்டிப்பா எல்லோரும் செய்யலைனாலும் வர பாதி பேர் செய்வாங்க அது நல்லது தானே" என்றாள்....

!ம்ம் சரி செஞ்சிடுவோம், போதுமா?" என்றான் மித்ரன்

"வரவிங்களுக்கு பெண்பனையா பார்த்துக்கொடுக்கனும் ",

என்னது பனைல, பெண் பனையா???என்றான் மித்ரன்

"விளங்குச்சி போ, நீ என்னத்தை படிச்சி கிழிச்ச" என்று முனவியவள்

அவன் அவளை முறைக்கவும்

"உன்னை சொல்லியும் குத்தம் இல்லை , இதோ இங்க படிச்சதே முழிக்குது, இதுல நீ பாரின்ல இருந்தவன் உங்கிட்ட இதல்லாம் எதிர்ப்பார்க்க முடியுமா??? "என்று கண்ணனை பார்த்துக்கொண்டே மித்ரனுக்கு பதில் சொன்னவள்

சாந்தி ஜூஸ் கொண்டு வரவும் இருங்க அத்தை என்றவள்

தென்னையை விட பனை மரத்தில் அதிக வகைகள் இருக்கு.
1 ஆண் பனை
2 பெண் பனை
3 தாளிப்பனை
4 கூந்தப்பனை
5 சாற்றுப்பனை
6 ஈச்சம்பனை
7 குமுதிப்பனை
8  ஆதம்பனை
9  திப்பிலிப்பனை
10 ஈழப்பனை
11 சீமைப்பனை
12 உடலற்பனை
13 கிச்சிலிப்பனை
14 குடைப்பனை
15 இளம்பனை
16 கூரைப்பனை
17 இடுக்குப்பனை
18 தாதம்பனை
19 காந்தம்பனை
20 பாக்குப்பனை
21 ஈரம்பனை
22 சீனப்பனை
23 குண்டுப்பனை
24 அலாம்பனை
25 கொண்டைப்பனை
26 ஏரிலைப்பனை
27 ஏசறுப்பனை
28 காட்டுப்பனை
29 கதலிப்பனை
30 வலியப்பனை
31 வாதப்பனை
32 அலகுப்பனை
33 நிலப்பனை
34 சனம்பனை

"34வகை பனை இருக்கு..... இதுல பெண்பனை மட்டும்தான் பொருளாதார பயன் கொடுக்கும் அதுக்குன்னு மற்றது எதுவும் தராதுனு சொல்லமாட்டேன் .... இயற்கை காக்கறதுல பனை மரம் முக்கிய பங்கை வகிக்குது, இப்போ இருக்கற சூழ்நிலையில பனைமரம் அழிஞ்சிட்டு வருது, இது நமக்கு நாமே வெச்சிக்கற ஆப்பு அதனால இயற்கையை பாதுகாக்க நம்பளால முடிஞ்சது"....

"இவ்வளவு இருக்குனு எனக்கு தெரியாது அமலு "என்று மிருணாவின் பக்கம் மித்ரன் சாய.... கண்ணன் அவனை முறைத்தான்

"அப்போ மகாராணி கல்யாணத்தை எப்படி நடத்தணும்னு முடிவு பண்ணிருப்பீங்களே அதையும் சொல்லிடுங்க" என்றான் கண்ணன்

"தலைவாழை இலை போட்டு , தான் சாப்பாடு போடணும்"

"அப்போ நாங்க மட்டும் என்ன கீழே சோறு போட்டா, சாப்பிட சொல்லுவோம்"

"அப்படி சொல்லல பஃபே சிஸ்டம் இருக்க கூடாது. பாஸ்ட்புஃட் ஐட்டம் எதுவும் இருக்க கூடாது"...

"அப்போ நைட் சாப்பாட்டு எல்லோரையும் பட்டினி தான் போடணும்" என்றான் கண்ணன் நக்கலாக

அவனை முறைத்தவள், "கம்பு இட்லி, சோளப்பணியாரம், ரவா தோசை, ராகி உத்தப்பாம், குதிரைவாலி கிச்சடி,தயிர் சாதம், கோதுமை சப்பாத்தி, கோதுமை அல்வா , சுக்குகாபி, பதனீர்,நொங்கு இதுலாம் கொடுக்கலாமே?? இது எல்லாம் அழிந்து வரும் இயற்கை உணவுகள்

"ஐயோ சாமி நீ ஒருத்தி இயற்கையை காப்பாத்தறேன்னு கிளம்பினா பத்தாது, எல்லோரும் நினைக்கனும், செய்யணும், அப்போதான் இயற்கையை காப்பாத்த முடியும்" என்றான் கண்ணன்

"நான் ஒருத்தி செய்யணும்னு சொல்லல , எங்க கல்யாணத்துல இப்படி செஞ்சா பார்க்கறவிங்க அவங்க கல்யாணத்துல செய்யலைனாலும் வீட்டுல செய்யனும்னு நினைப்பாங்களா??

"வாழ்க்கையில ஒரு முறை நடக்கற கல்யாணத்துக்கு பார்த்து பார்த்து செய்ய வேண்டாமா?? " என்றான் கண்ணன்

"என்னோட கல்யாணம் இப்படி தான் நடக்கணும் முடிவா சொல்லிட்டேன்... அப்புறம் எல்லாமே செம்பு பாத்திரமா இருக்கனும், எதும் பிளாஸ்டிக் இருக்க கூடாது.... என்றவள் மித்ரனை பார்க்க அவனோ " நல்லது யார் சொன்னாலும் எனக்கு ஓகே தான் நீ சொன்னகறதுக்காக நான் வேண்டாம்னு, சொல்ல மாட்டேன்" என்றான்

"சீக்கிரம் அடிக்கல் நடறதுக்கு நாள் பாருங்க, அதுக்கு அப்புறம் கல்யாணப்பத்திரிக்கை அடிக்க கொடுத்தா போதும்" என்றாள்

"ஏன் உன்னை ஏமாத்திடுவோமா?? அப்படி "

"என்னை ஏமாத்துனா பரவால்ல தொழிலாளர்களை ஏமாத்தக்கூடாதுல அதுக்கு தான் ... நீங்க செய்யலனா நான் கல்யாணத்தை நிறுத்திடுவேன் அதுக்கு முன்னாடி பத்திரிக்கை அடிச்சி அவமானபடக்கூடாதுல அதுக்கு தான் சொல்ல வந்தேன் அப்பறம் உங்க இஷ்டம் " என்றவள் சாந்தி கொடுத்த ஜூஸை வாங்கிகொண்டு "நான் வீட்டுக்கு போய் குடிச்சிக்கறேன்" அத்தை என்றவள் நடக்க ஆரம்பித்தாள் ..

போறவளை பார்த்த கண்ணன் "இவளுக்கு கொழுப்பு அதிகம் மித்தி. இவளை கட்டிக்கிட்டு எப்படி குடும்பம் நடத்த போறியோ?? "என்றான் பாவமாக

"அதுலாம் என்னோட பிரச்சனை மச்சான் நீ கவலைப்படாத" என்றான்

அடுத்த நாள் மிரு சொன்னது போல் அடிக்கல் நட இடம் பார்க்க சென்றனர் கதிரும் , கருணாவும்

அவர்களுக்கு இடம் கொடுக்க சக்திவேல் முன் வர மிருணாவிற்கு சங்கடமாக கூடாது என்று கதிர் யோசித்தவர் அவளிடம் கேட்கவும்

மாமா இது ஒன்னும் என்னோட பெயர்ல ஆரம்பிக்கலைல அதனால நீங்க தாராளமா இதை செய்யலாம் என்றாள்

அதன்பின் அந்தவார இறுதில் அடிக்கல் நட்டனர்.... ஒருபக்கம் ஹாஸ்பிடல், ஸ்கூல் மறுபக்கம் வீடு என்று அனைத்திற்க்கும் ஏற்பாடுகள் சிறப்பாக நடந்தது...
 
Top