கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 44

மித்ரன் மிருணாவிடம் பேசவேண்டும் என்று அவள் எப்போது தனியா சிக்குவாள் என்று எதிர்பார்த்து இருந்தான் ...

அவளோ இவனிடம் மாட்டாமல் ஓடிக்கொண்டிருந்தாள்...

காலையில் பூஜைக்கு அப்புறம் சாப்பிடும்போது தான் அவன் பக்கதில் வந்தாள்....

அவன் பக்கதில் உக்கார்ந்தவள் இவனை பார்க்காமல் சாப்பிட்டாள். கருணாவும், கதிரும் குலதெய்வ கோவிலுக்கு போவதை பற்றிப் பேசிக்கொண்டிருக்க

மித்ரன் மிருணாவை பார்த்தவன் அவள் அவனை கண்டுக்காமல் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை பார்த்து காண்டானவன். அப்படிலாம் உன்னை விட மாட்டேன் என்று அவன் தட்டி இருக்கும் இட்லியை எடுத்து அவள் தட்டில் வைத்தான்

அதை பார்த்தவள் நிமிர்ந்து அவனை முறைக்கவும்

"என்ன முறைக்கற, நான் கேட்டதுக்கு பதில் சொல்லலைனா இப்படிதான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருப்பேன்" என்றான் கெத்தாக

அதை கேட்டவள் அவன் பார்க்கவே அவன் வைத்த இட்லியை புன்னகையுடன் சாப்பிட்டாள்... இதை சொர்ணமும் சாந்தியும் பார்த்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்...

"கிராதகி வாயை திறக்கறாளான்னு பாரு" என்று முனவியவன் சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்று விட்டான்

போகும் அவனையே பார்த்தவளின் இதழ்களில் புன்னகை வந்து அமர்ந்தது....

அதன்பிறகு அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்

வேணி சொல்லிக்கொடுக்க மிருணா பொங்கல் வைத்தாள்

சாந்தி பூஜைக்கு வேண்டியதை ஏற்பாடு செய்தார்

வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தனர்....

மிருணாவின் கண்கள் மித்ரனை அடிக்கடி தீண்டிக்கொண்டே இருந்தது... மித்ரனும் அதை கவனித்துக்கொண்டுதான் இருந்தான்

எல்லா வேலையையும் முடித்தவுடன் பூஜை செய்தனர்.....

மித்ரன் பக்கதில் நின்ற மிருணா சாமி கும்பிட்டதும் திருநீர் எடுத்து அவன் நெற்றில் இட்டாள்.... அதை அவள் சாதாரணமாக செய்ய...மித்ரனும் அவள் நெற்றில் குங்குமத்தை இட்டான்...

இருவருக்குமே சுற்றி இருப்பவர்களை பற்றி எந்த கவலையும் இருக்கவில்லை

பூஜை முடிந்ததும் மித்ரன் அவளை தனியாக தள்ளிக்கொண்டு வந்தவன்....

"ஏய் ஒழுங்கா சொல்லுடி , ஏண்டி? மனுஷனை அலைய வைக்கற" என்றான்

"என்ன சொல்லணும்?? " என்றாள் ஒன்றும் தெரியாதவள் போல

"உனக்கு நான் என்ன கேக்கறேன்னு புரியலை. நீ புரியலைனு சொன்னா நான் நம்பிடுவேன்" என்றான் அவனின் பார்வையை கிறக்கமாக மாற்றியப்படி

"எதுக்கு இப்போ இப்படி பார்க்கற? "...

!எனக்கு தேவையானதை நீ சொல்லிட்டா, நான் விட்டுடுவேன் இல்லனா கோவிலுனு கூட பார்க்க மாட்டேன்" என்று அவன் இழுக்கவும்

"சொல்றேன் " என்றவள் "நான் காலேஜ் படிக்கும் போது ஒரு நாள் அத்தை நீ இங்க வர மாட்டிங்கற, அவங்களோட போன் பேசமாட்டிங்கறனு , அம்மாகிட்ட சொல்லிட்டு ரொம்ப கவலைப்பட்டாங்க, அதும் இல்லாம அவங்க உன்னையே நினைச்சி சரியா சாப்பிடாம இருந்தாங்க"

அவங்க பிரச்சனையை யாரும் கவனிக்காம விட்டுட்டாங்க ...

எப்போமே சோகமாவே இருக்கற அத்தையை என்னால பார்க்க முடியலை என்றாள்.

"அதுக்கு"

"நான் அதை நினைச்சி பீல் பண்ணிட்டு இருக்கறப்போ தான் அபி என்னோட முகவாட்டதை பார்த்துட்டு என்னனு கேட்டான் "

"நான் விசியத்தை சொல்லவும் அவன் நான் பார்த்துக்கறேன்னு சொன்னான்.
ஏனே தெரியலை நீ அத்தையை கஷ்டப்படுத்த தான், இப்படி பண்றியோனு எனக்கு தோணிட்டே இருந்துது அதை அவன்கிட்டயும் சொன்னேன்... அப்போல இருந்து அவனுக்கு உன்னை பிடிக்காம போயிருச்சு "

"அவன் உன்னை இங்க வரவழைக்க எனக்கே தெரியாம செஞ்சதுதான் இது எல்லாம்... அதும் நீ சொல்லறப்பதான் எனக்கே தெரியும்" என்றாள்

"அப்போ நீ அவனை ஈவினிங் டைம்ல மீட் பண்ணது இதை பத்தி பேச இல்லை , அப்படிதானே?? " என்றான் கேள்வியாக

"நீ வந்ததுக்கு அப்புறமாவா? "....

"ம்ம்"

"அது உன்னை நான் சின்ன வயசுல பார்த்ததுதான் , அதுக்கு அப்புறம் பார்த்தது இல்லை .... ஆனால் உன்னோட இந்த மச்சம் மட்டும் எனக்கு எப்போமே நியாபகம் இருக்கும் அதை பார்த்ததும் நீதானு நான் கண்டுபிடிச்சிட்டேன், அதும் இல்லாம" என்று இழுத்தவளை

"என்ன" என்பது போல பார்வையால் அவன் கேட்கவும்

"அன்னிக்கு கை கிழிச்சப்ப நீ என்னோட பக்கதுல வந்தில அப்போ உன்மேல் அடிச்ச அந்த பர்பியும் வாசம். அதையும் வச்சுதான் எனக்கு உன்மேல் சந்தேகம் அதிகம் ஆனது அதை சொல்லத்தான் அன்னிக்கு அபியை பார்க்க போனேன்"

"அப்போ அம்மாக்காத்தான் நீயும், அவனும் இதை எல்லாம் செஞ்சிங்க"

"ம்ம்" என்றாள்

"ஓ அப்போ கல்யாணமும் அவங்களுக்காத் தான் பண்ணிக்கிட்ட'

"ம்ம்"

"உனக்கு நான்தான் குங்குமம் வைக்கணும் எதிர்ப்பார்த்தது , நீ எனக்கு திருநீறு வைச்சது, நான் வச்ச இட்லியை சாப்பிட்டது இதல்லாம் எதுக்குடி? என்றவன்... அவளை நெருங்கி இதுவும் அவங்களுக்காக தானா" ? என்று அவளின் இருபக்க தோளையும் பிடித்து உலுக்கியப்படியே கேக்க...

"ஆமா எல்லாம் அவங்களுக்காக தான், அவளுக்காகதான் நான் இதை எல்லாம் செஞ்சேன்... இல்லனா அவங்க மனசு கஷ்டப்படும் " என்றவள் அவன் கண்களை பார்க்க முடியாமல் தலை குனிந்து இருந்தாள்

அவளை வேகமாக தள்ளிவிட்டவன்..."இங்கப் பாரு என்மேல கோவம் இருந்தா அதை கோவமா காட்டிரு அடுத்தவிங்களுக்காக என்கிட்ட அன்பா இருக்கற மாதிரி நடிக்காத".... என்றவன்

"உன்னை போய் நம்புனேன் பாரு" என்று கோவத்தில் அங்கிருந்த மட்டையை எட்டி உதைத்துவிட்டு சென்றுவிட்டான்

மிருணாவின் மனம் கஷ்டப்பட்டாலும் அவன் சொன்ன வார்த்தைகள் அவள் காதில் கேட்டிக்கொண்டே இருந்தது...

அதை அவனிடம் கேட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனையும், இனி வர போற பிரச்சனையும் சரி செய்திருக்கலாம்... அவள் கேக்காமல் போனது அவள் பிழையோ?

அதன்பிறகு மித்ரன் , மிருணா இருந்த பக்கம் கூட திரும்பவில்லை

அவளும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை

வீடும் திரும்பும் போது மிருணாவிடம் வந்த கருணா "உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான்

"வீட்டுக்கு போனதும் பேசலாமா? " என்று அவள் கேட்கவும்

"ம்ம்" என்றவனின் வார்த்தை அவ்வளவு கடுமையாக இருந்தது

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக கருணாவை தேடிப் போனாள், அவன் தோட்டத்தில் இருக்கவும் பக்கதில் சென்றவள் ."பேசுனும் சொன்ன .. என்ன பேசணுமோ பேசு கருணா" என்றாள்

"ஓ மேடம்க்கு என்னோட பேர் கூட நியாபகம் இருக்கா?? ".... என்று நக்கலாக கேட்டுவிட்டு

"மறந்துப் போயிருப்பிங்களோனு நினைச்சேன்" என்றவன்
"நான் உன்கூட பேசாம இருக்கறது உனக்கு கொஞ்சம் கூட கவலையை கொடுக்கலைல.இவ்வளவு ஜாலியா இருக்க.... அப்ப இவ்வளவு நாளும் நீ இப்படிதான் இருந்துருக்க, நான்தான் அது எதுவும் தெரியாம நீதான் முக்கியம்னு உன் பின்னலையே சுத்திருக்கேன்" என்றான்

அப்போது கருணாவிடம் ஏதோ பேச வந்த மித்ரன் இவர்கள் பேசுவதை பார்த்ததும் திரும்பி போக, போக அவனை பார்த்துவிட்ட கருணா "அண்ணா ஏன் போறீங்க? வாங்க" என்றான்

கருணாவிடம் எதையோ சொல்ல வந்த மிருணா , மித்ரனை பார்த்ததும் வாயை மூடிக்கொண்டாள்

"இல்லை கருணா நீங்க பேசுங்க, நான் உங்கிட்ட மண்டப செலவு பத்தி கேக்கத்தான் வந்தேன்" என்று சொல்லிவிட்டு திரும்ப போனவனை

"நீங்களும் இருங்க அண்ணா இன்னிக்கு இவ என்கிட்ட மட்டும் இல்லை, உங்ககிட்டையும் மறச்ச எல்லா உண்மையும் சொல்லியே ஆகணும், இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்," என்றான் கருணா தீவிரமாக

"என்கிட்ட மறைக்க இவளுக்கு என்ன? இருக்கு கருணா, அவ என்கிட்ட கொஞ்சம் நல்லா பேசுனாலே நடிக்கறானுதான் அர்த்தம் " என்று சமயம் பார்த்து குத்திக் காட்டினான் மித்ரன்.. அவன் வார்த்தைகளில் ஏதோ ஒன்று இருந்தது

"இப்போ உங்க ரெண்டு பேருக்கும் என்ன தெரியணும்.... ஆமா நான் நடிக்கிறேன் தான் போதுமா ? உங்ககிட்ட இருக்கற மொத்த சொத்தையும் என்னோட பேர்ல எழுதிக்கணும்ல அதுக்குதான் , உங்க கிட்ட நடிக்கிறேன் , அதுக்காக தான் இவரை கல்யாணமும் பண்ணிக்கிட்டேன் "என்றவள் அங்கிருந்து போக போக அவளின் கையை பிடித்து நிறுத்திய கருணா

"உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் மிரு, நீ எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டனு, அண்ணாவுக்கு வேணா தெரியாம இருக்கலாம், ஆனா எனக்கு தெரியும், எனக்கு தெரியும்கறது உனக்கும் தெரியும்
ஒழுங்கா சொல்லு" என்றவன்

"நான் உன்கூட பேசாம இருக்கறதுக்கு இதுதான் காரணம்னு உனக்கு தெரியாத??? எதுக்கு என்கிட்ட மறைச்ச அந்த அளவுக்கு தான் நம்ப பழகிருக்கோம்மா" என்றான்

"இவகிட்ட எதைப்பத்தி கேட்டாலும் உண்மை வராது" என்ற மித்ரன்.... "டைம் தான் வெஸ்ட், நான் உள்ளே போறேன்" என்று போக போனவனை பார்த்து

"என்னை சொல்றிங்கள நடிக்கறேன்னு.... நீங்க நடிக்கலையா? ஒவ்வொரு விசியத்துலையும் நீங்க சொல்றது எல்லாமே பொய் தான், எல்லாமே நடிப்பு தான்". என்றாள் மிருணாவும் கோவமாக "

"நான் நடிக்கறனா?? ".... என்று கேட்டவன் சத்தமாக சிரிக்கவும்

மிருணாவிற்கு அதிகமாக கோவம் வர... அவள் மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கினாள்

அவள் முகமே அவள் எவ்வளவு கோவத்தில் இருக்கிறாள் என்று காட்டியது...

"ஓவரா சிரிக்காதிங்க,இவன் கோவப்படுறானா அதுல அர்த்தம் இருக்கு.... ஆனா நீங்க எல்லாம் என்னை கேள்வி கேக்கற அளவுக்கு உங்களுக்கு தகுதி இல்லை,
நீங்க எதுக்கு என்னை கேள்வி கேக்கறீங்க? நான் நடிக்கறேன்னு சொல்றிங்க,?"

"ஓ அப்டியா? நான் உங்கிட்ட பேசுன பேச்சு எல்லாம் நடிப்புதான், உன்னை கேள்வி கேக்க எனக்கு தகுதி இல்லை அப்படி தானே,? சரி சொல்லு அப்படி நான் என்ன கேவலமா போய்ட்டேனு" என்றவன் வார்த்தையில் அவ்வளவு கடுமை இருந்தது.

அவள் எதுவும் பேசாமல் இருக்கவும்

"ஏய்...... உன்னைத்தான் கேட்டேன்! என்று கத்தியவன்... "சொல்லு நான் என்ன நடிக்கறேன்னு" என்றான்

"நீங்களே தான், நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதே ஒரு நாடகம் தானே,.... அன்னிக்கு லாரா வந்தாளே?, அவ என்கிட்ட ஒரு பேப்பரை காட்டுனா, அது என்னனு தெரியுமா??என்றவள் குரல் நடுங்க கேட்கவும்

"தெரியாது... சொல்லு என்ன காட்டுனா "?

"ஐயோ !!சார்க்கு ஒன்னும் தெரியாதாம், அப்படியே நடிக்கறதை பாரு... சார்க்கு தெரியாமத்தான். அவ அவ்வளவு தைரியமா வந்து என்கிட்ட பேப்பரை காட்டுனாளா?? "

"ஓ ....... பேப்பர்ல என்ன இருந்தது"??

அவள் அமைதியாக இருக்கவும்

"அதான் அண்ணா கேக்கறாங்களா?? சொல்லு" என்று கருணாவும் கத்த

"நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்ட ரெஜிஸ்டர் பேப்பர் அதை தான் அவ காட்டுனா" என்றாள்

அவள் சொன்னதை கேட்டவன் சரி நீ சொல்றபடியே வரேன்... அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் எதுக்காக உன்னையும் கல்யாணம் பண்ணிக்கணும்.... என்றான்
 
Top