கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 5

பல தடைகளை மீறி மிருணாவை ஸ்கூல்லிற்கு அனுப்பி வைத்தாள் வேணி...

சின்ன பிள்ளைதானே இன்னும் கொஞ்ச நாள் போனதும், தனது வேலையை காட்டலாம் என்று நினைத்தார் சொர்ணம்... அதற்காக இப்போ அவர் எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை... அவரால் முடிந்த சிறுசிறு வேலையை செய்துகொண்டு தான் இருந்தார்..

4வருடம் சென்றது, சொர்ணம் செய்த வேலைகளையும் மீறி மிருணா ஸ்கூல் போகவும் கடுப்பான சொர்ணம் தன்னால் செய்ய முடியாததை தன் பேரனை வைத்து செய்யலாம் என்று முடிவு செய்தார் .

தான் செய்ய நினைக்கும் இந்த வேலையை கண்டிப்பாக தனது 2வது பேரன் கர்ணனை வைத்து செய்யமுடியாது, அதனால் இந்த வேலைக்கு தனது முதல் பேரன் மித்திரன் தான் சரியாக வருவான் என்று நினைத்தவர் , மித்திரனிடம் மிருணாவை பற்றியும் அவளது பிறப்பை பற்றியும் கண்டதையும் தப்பாக சொல்லி அவன் மனதில் நஞ்சை வளர்த்தார் சொர்ணம்

அதன் விளைவு, மிருணா 4வது படிக்கும் போது ஒருநாள், சாந்தி மிருணாவை அழைத்து மித்திரனுக்கு பால் கொடுக்க சொல்லவும், பாலை கையில் வாங்கியவள் கிளாஸ் சூடாக இருக்கவும் ஆ என்றாள்... அவள் அப்படி சொன்னதும் சாந்தி ஒரு தட்டில் பால் கிளாஸை வைத்து கொடுத்தார்,அதை வாங்கிக்கொண்டு மித்திரன் ரூமிற்கு போனாள் மிருணா,

8வது படிக்கும் மித்திரனுக்கு மிருணாவை பார்க்கும் போது எல்லாம் ஏதோ ஒரு வெறுப்பு உள்ளுக்குள் கனன்று கொண்டே இருக்கும்.... அதனால் அவளை பார்க்கும் பார்வையில் எப்போதும் கடுமையை வைத்திருப்பான். மித்திரன்

மிருணா அவனது ரூமிற்கு வருவதை பார்த்தவன் ஏய் உன்னை யார்டி இங்க வர சொன்னது என்று கத்தினான்..

அத்தை தான் பால் குடுக்க சொன்னாங்க இந்தா என்றாள் இன்னும் மழலை குரல் மாறாமல்..

ஏய் உங்கிட்ட எவ்வளவு தடவை சொல்லிருக்கேன், என்னை மரியாதையா வாங்க போங்கன்னு கூப்பிடுனு....இந்தா, அந்தானு கொஞ்சம்கூட மரியாதை இல்லமா பேசற என்றான்

அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் அவள் கையில் இருந்த பால் கிளாஸை தொட்டவனுக்கு அது மிகவும் சூடாக இருக்கிறது என்று தெரிந்து அதை எடுத்தவன். அவளை பார்த்து ஒரு பாலை கூட உன்னால சூடா கொண்டு வர முடியலையா? ஆடி அசைஞ்சி வந்தா இப்படிதான் பால் ஆறி போகும் போய் வேற கொண்டு வா என்று அவள் முகத்திலையே பாலை ஊத்தினான்..

மிருணா கொஞ்சம் திரும்பி இருந்ததனால் அவள் முகத்தில் ஓரம் சாரமாக பட்டு சென்றது பால். அதற்கே மிருணா துடி துடித்து போனாள்.

ஐயோ எரியுதே எரியுதே என்று கத்தி கொண்டு போனவளை பார்க்க கொஞ்சம் கூட பாவமாக இல்லை அதற்க்கு பதிலாக .அவளை அழ வைத்த திருப்தி மனதுக்குள் இதமாக பரவியது அவனுக்கு.

சின்ன வயசுலயே இவ்வளவு கொடூர குணம் கொண்டவன், இன்னும் பெரியவனானால் மிருணாவின் நிலை?

அழுதுகொண்டே வந்த மிருணாவை பார்த்து பதறிய சாந்தி அவளிடம் சென்று எதற்கு அழுகிறாய் என்றாள்

மிருணா நடந்ததை சொல்லவும்... வேகமாக மித்திரன் ரூமிற்கு சென்றவர்.. அவனிடம் உனக்கு எதுக்கு மித்தி இவ்வளவு கோவம் அவ சின்ன பொண்ணு அவகிட்ட இப்படியா நடந்துப்ப....நீ இப்போல்லாம் சரியே இல்லை மித்தி என்றாள்.

அம்மா அவகிட்ட எதுக்கு பால் குடுத்து விடுறிங்க அவளை கண்டாலே எனக்கு சுத்தமா பிடிக்கல... இனி அவ என்னோட ரூம்க்கு வந்தானா கண்டிப்பா இப்படிதான் செய்வேன் என்றான் திமிராக...

உன்னை எல்லாம் திருத்தவே முடியாது அப்படியே உங்க பாட்டி மாதிரி பொறந்து தொலைஞ்சிருக்க என்று கத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்..

வீட்டிற்கு போன மிருணா மித்திரன் செய்ததை சொல்ல... அதை கேட்ட வேணிக்கு மிருணாவிற்கு ஆறுதல் சொல்வதை விட வேற என்ன செய்வது என்று தெரியவில்லை

அடுத்த நாள் காலையில் மிருணா எழும்போதே அவள் முகத்தில் சில இடங்களில் சூடுபட்டதால் கொப்பளங்கள் வந்திருந்தது...

அதை பார்த்த வேணிக்கு உள்ளுக்குள் பயம் வந்தது எங்கே இதை காரணம் காட்டி பிள்ளை ஸ்கூல் போகமாட்டேன் என்று சொல்லிவிடுவாளோ என்று அதனால் அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்துபோய் அதற்காக டிரீட்மென்ட் செய்தாள்

மிருணாவின் மனதில் அதுவே ஒரு ஆறாத வடுவாக பதிந்தது.... காலம் அதன் வேகத்தில் செல்ல அதன்பின் மிருணா மித்திரன் இருந்த பக்கமே போகாமல் இருந்தாள்...

2வருடம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது.... மிருணாவும் 6வது வகுப்பிற்கு செல்ல பக்கதில் இருந்த உயர்நிலை பள்ளிக்கு போகவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் சொர்ணத்திற்கு அதில் ஏக புகைச்சல் ஏற்பட்டது. இவ்வளவு நாள் சும்மா இருந்தது போதும் இனியும் சும்மா இருந்தால் கண்டிப்பாக மிருணா படித்து விடுவாள் என்று நினைத்தவர்.. மித்திரனிடம் ஓதிக்கொண்டே அவரால் முடிந்த வேலையையும் செய்துக்கொண்டிருத்தார்.

இவ்வளவு நாள் அமைதியாக இருந்த மித்திரன். மிருணா கர்ணாவுடன் சேர்ந்து விளையாடுவதை பார்த்து கோவம் கொண்டான் குட்டி சாத்தான் என்னைக்காவது என்னோட விளையாட வந்துருப்பாளா? எப்போ பாரு கர்ணா, கர்ணா என்று அவன் பின்னாலையே சுத்திட்டு இருக்கா குட்டி சாத்தான் என்று நினைத்தவன் அவளை எதாவது செய்தே ஆகவேண்டும் என்று வஞ்சம் கொண்டான்...

அடுத்த நாள் அவனுடைய ஸ்கூல் ட்ரெஸ்ஸை எடுத்து அயர்ன் பண்ண டேபிள் மேல் வைத்தவன் குளிக்க போகும் முன் சாந்தியிடம் சென்றான் அம்மா என்னோட ரூம் ரொம்ப தூசியா இருக்கு வந்து கூட்டிவிடு என்றான்...

இப்போ எனக்கு வேலை இருக்குடா அப்புறம் பண்றேன் என்றார்

முடியாது எனக்கு இப்பவே பண்ணனும் இல்லனா நான் குளிக்க போகமாட்டேன் என்றான்

அப்போது கர்ணாவுடன் எதையோ பேசிக்கொண்டு சண்டையிட்டு வந்துகொண்டிருந்த மிருணாவை பார்த்த சாந்தி மிருணா எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணும்மா என்றார்

பாட்டி ஊருக்கு போனதும் இவளுக்கு திமிரு அதிகம் ஆயிடுச்சி வீட்டுக்குள்ளையே இவனோட சேர்ந்து கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டா என்று மனதுக்குள் பொறும்பி தள்ளினான் மித்திரன்

மித்திரனை பார்த்த மிருணா மீண்டும் சாந்தியை பார்த்து சொல்லுங்க அத்தை என்றாள்

கொஞ்சம் இவன் ரூமை சுத்தம் செஞ்சிடும்மா என்றார்

இல்லை அத்தை...வேற ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க செஞ்சிட்டு நான் ஸ்கூல் போறேன் ஆனா இது மட்டும் முடியாது என்றாள்

மித்தி முன்ன மாதிரி இல்ல மிரு நீ பயப்படாம போ என்றார்

தங்கி நின்றவளை பார்க்கும் போது மித்திரனுக்கு கோவம் வர... அம்மா எனக்கு நேரம் ஆயிடுச்சி ஏதாவது செய் என்றான்

கிச்சனில் வேலையாக இருந்த சாந்தி போ மிரு என்று மீண்டும் சொல்லவும் சரிபோறேன் அத்தை என்று மித்திரன் ரூமிற்கு போனாள்.

ஆனால் ரூமிற்கு போனவள் தன் வாழ்நாளில் இனி எப்போதும் மித்திரனை பார்க்கவே கூடாது என்றும், வாழ்நாள் முழுவதும் வெறுக்கும் ஒரு ஆளாக மித்திரன் மாறுவான் என்ற நிலை உருவாகும் என்று தெரிந்திருந்தால் எப்படியாவது அங்கு செல்லாமல் தவிர்த்திருப்பாள் மிருணா
 
Top