கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 14

Rithi

Moderator
Staff member
அத்தியாயம் 14

"
என் வீட்டுல நான் இருந்தேனே..
எதிர் வீட்டுல அவ இருந்தாளே..
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல?"

"என்ன மாமா! நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்.. நீங்க பாட்டு பாடிட்டு இருக்கீங்க" கல்பனா கேட்க, சுதாகர் பாட்டை நிறுத்தினான்.

"அத்தை எப்படி இருக்காங்க? மாமா என்ன சொன்னாங்க? இன்னும் ரெண்டு நாள் அத்தை கூட இருந்துட்டு வந்திருக்கலாம்ல?" மேலும் மேலும் கேட்டாள்.

"ப்ச்! கல்ப்... இந்த நல்ல பழக்கம் எல்லாம் உனக்கு எங்கேருந்து தான் வந்துதோ.. இப்படி னே பேசினாலே செம்ம கடுப்பாகுது" - சுதாகர்.

ஜீவி அனைத்தும் தந்தை மூலம் அறிந்தவன் அமைதியாய் நின்றான். காலையில் தான் சுதாகர் வந்திருக்க ஜீவி இன்னும் அங்கே தான் இருக்கிறான்.

"என்ன உளறுறீங்க? அங்கே என்ன நடந்துச்சு?"

"ம்ம் நிச்சயதார்த்தம் நடந்துச்சு"

"என்ன? யாருக்கு?"

"வேற யாருக்கு! மிஸ்டர் சிவலிங்கம் மிஸ்ஸஸ் பானுமதியோட ஒரே பையன் சுதாகருக்கு தான்"

"என்ன மாமா சொல்றிங்க? நிச்சயமா? யாரு கூட? சொல்லவே இல்ல? அதான் என்னை கூட்டிட்டு போகலையா நீங்க?"

"அடிங்... உன்னை கொன்னுடுவேன் கல்ப்... அவனவன் செம்ம காண்டுல இருக்கான்.. இதுல இவளை கூப்பிடலனு கவலையாம்"

"சும்மா சொல்றிங்களா? இப்ப விளையாடாமல் உண்மைய சொல்ல போறிங்களா இல்லையா?"

"வேற என்ன சொல்லுவேன்னு நினைக்குற? அம்மா பத்தி எனக்கு தெரியாதா? பொய் சொல்லி கூப்பிடுறாங்கனு தெரிஞ்சு தான் போனேன்" என்றவன் அங்கு நடந்ததை விரிவாய் கூறினான். பெண் பார்த்துவிட்டேன் என்பதை தவிர்த்து.

"அய்யோ சுதா! உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? ஒரு பொண்ணை ஏமாத்திட்டு வந்திருக்கிங்க... அத்தை பாவம் இல்லையா? இப்படி ஊரை கூட்டி..." ஏன் மாமா இப்படி பண்ணுணிங்க?"

"நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற.. விடு! இனி இப்படி பொய் சொல்லி யாரு முன்னாடியும் என்னை நிற்க வைக்கமாட்டாங்க இல்ல.. அது போதும் எனக்கு"

"அப்ப கடைசி வரை கல்யாணம் பண்ணாமல் இப்படியே இருந்திட போறிங்களா?" கோபமாய் கேட்டாள் கல்பனா.

"அதை நீ கேட்குறீயா? இதே கேள்விய உன்கிட்ட கேட்டால்???" அவ்வளவு தான் அதன்பின் அவள் வாயை திறக்கவே இல்லை. என்ன பதில் சொல்லிட முடியும்?.

"எல்லாமே மாறும் கல்ப். மாறாதது உலகத்துல எதுவுமே இல்ல... சரி நான் வெளில போய்ட்டு வரேன்" என்றவன் அவள் பதில் சொல்லாமல் இருக்கவும் யோசிக்கவிட்டு கிளம்பிவிட்டான்.

"மாமா! நான் ஈவ்னிங் ரூம்க்கு போயிடுறேன்" ஜீவி சொல்ல,

"இல்ல டா.. இன்னைக்கு மட்டும் வா.. நாளைக்கு போய்க்கலாம்" என்றதும் சரி என்றுவிட்டான்.

வீட்டைவிட்டு வாசலில் சுதாகர் இறங்கவும் மேலிருந்து இறங்கினர் யுவாவும் சூர்யாவும்.

பார்த்ததும் புரிந்து கொண்டான் சந்தியா கூறிய யுவாவின் தங்கை இவள் தான் என்பதை.

சூர்யாவும் இவனை தான் பார்திருந்தாள்.

அவள் பார்த்ததும் சுதாகர் சிநேகமாய் புன்னகைக்க, சூர்யாவும்கூட கீழ்வீட்டில் இருப்பவர்கள் போல என நினைத்துக் கொண்டு பதிலுக்கு புன்னகைத்தாள்.

யுவா எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சூர்யாவுடன் அவன் கிளம்பிவிட, சந்தியாவிற்கு அழைத்தான் சுதாகர்.

"வந்துட்டிங்களா லாயர்?"

"ஏன் ரொம்ப தேடுனியா என்ன?"

"பின்ன! நேத்து நீங்க பாட்டுக்கு பொண்ணு பார்த்திட்டு இருக்கேன்னு சொல்லிட்டு வச்சுட்டீங்க.. அந்த கதையை கேட்காமல் தலை வெடிச்சுடும் போலாம் ஆச்சு.. சரி சொல்லுங்க என்ன ஆச்சு"

"ம்ம் சொல்றேன்... அந்த காபி ஷாப் வந்துடு"

"அப்டியா? ம்ம்ம்ம்.. சரி ஓகே.. சூர்யா வந்துட்டா.. அவளை கூட்டிட்டு ஈவினிங் வரவா?"

"அதை ஈவினிங் பார்த்துக்கலாம் தியா.. இப்ப உடனே வா" என்றவன் வைத்துவிட்டான்.

"என்ன லாயர் ஆர்டர் போட ஆரம்பிச்சுட்டார். இங்கே வந்ததுல இருந்து யாரு பேச்சுக்காது நான் ஆடிட்டே இருக்க வேண்டியதாகிப் போச்சு.. என்ன பொழப்போ" புலம்பியபடியே கிளம்பிச் சென்றாள்.

சூர்யாவை அவள் ஆபீஸ் எங்கே என காட்டி அழைத்து சென்றுவிட்டு தனது அலுவலகம் கிளம்பினான் யுவராஜ்.

"மார்னிங் டெய்லி நானே உன்னை ட்ராப் பண்ணிடுறேன்.. ஈவினிங் நான் வர லேட் ஆகும். சோ நீ கேப்ல வந்திடு. சந்தியா சுத்துறானு நீயும் அவகூட சுத்த கூடாது சூரி.. அவளை சீக்கிரம் கிளப்பி விடணும்.. தேவையில்லாத வேலையெல்லாம் செய்யுறா"

சந்தியா செய்வதில் பாதி கூட தெரியாமல் இவ்வாறு சூர்யாவிடம் அறிவுரை கூறினான்.

முதலிலேயே அண்ணனுக்கு சந்தியாவை பிடிக்காது என தெரிந்த சூர்யாவும் இதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

"உனக்கு எதாவது வேணும்னா என்கிட்ட கேளு.. எனக்கு கால் பண்ணு.. தெரியாத இடத்துக்கு தனியா போக கூடாது. பீ சேஃப். மாக்ஸிமும் வீட்லயே இரு.. காலனிலையும் எங்கேயும் போகாத"

சுற்றி சுற்றி அவனுக்கு என்ன வேண்டுமோ அதை இறுதியாய் சொல்லி முடித்தான் யுவா.

"ண்ணா! இவ்வளவு நீங்க சொல்லனுமா? நான் பாத்துக்குறேன்" என்றவள் எப்போதும் போலவே இருந்தாள் ஜீவியை பார்க்கும்வரை.

"ஹாய் சங்தியா! அப்புறம் எப்படி போச்சு டூ டேஸ்?" ஆர்ப்பாட்டமாய் வரவேற்றான் சுதாகர்.

"ஹான் கரடிங்களுக்கு நடுவுல எப்பூடி போகணுமோ அப்படி போகுது.. ஆமா அதென்ன போன்ல தியா... நேர்ல சந்தியா?"

"நீ மட்டும் லாயர்ன்ற, அப்புறம் வக்கீலுன்ற... அந்த மாதிரி தான்"என்றவன்,

"இதுவா முக்கியம்? சரி சொல்லு சூர்யாகிட்ட ஏதாவது பேசினியா?" பேச்சை மாற்றினான் அந்த நல்லவன்.

"பச்சை பச்சையா கேட்காதது தான் குறை.. ஏன் வீடு சின்னதா இருக்குன்றா.. ஏன் ஃப்ளட் பார்க்கலன்றா.. முடியல வக்கீலு. இதுங்களை எப்படி சமாளிச்சு எப்படி சேர்த்து வச்சு..."

"ம்ம் ஆமா ஆமா.. அப்புறம் எப்படி சேர்ந்து.."

"என்ன?"

"இல்ல எப்படி சேர்ந்து சேர்த்து வைக்க போறோமோன்னு சொன்னேன்"

"சரி விடுங்க.. மெதுவா ஸ்டெப் ஸ்டெப்பா போலாம்.. இப்ப சொல்லுங்க பொண்ணு பார்த்தாச்சா? எல்லாம் ஓகேவா? எப்ப கல்யாணம்?" அவள் உற்சாகமாய் கேட்டதிலேயே அவனை பற்றிய இவள் பிம்பம் அறிந்து கொண்டான்.

"அது சும்மா... எங்கம்மாக்கு நேரம் போகலைனு கூட்டிட்டு போனாங்க.. எனக்கும் நேரம் போகல.. அதான் போய்ட்டு வந்தேன்"

"வாட்?"

"என்ன வாட்?"

"என்ன லாயர் குழைப்புறீங்க? பொண்ணு பார்த்திங்களா இல்லையா?"

"பார்த்தேன்"

"ஐயோ இப்படி சொன்னா எப்படி? பொண்ணு புடிச்சதா இல்லையா?"

"பொண்ணு நல்லா தான் இருந்துச்சு... ஆனால் வேண்டாம்னு சொல்லிட்டேன்"

"புஸ்ஸ்! அங்கேயும் ஊத்திக்குச்சா? நமக்குலாம் எப்ப தான் நல்லது நடக்குமோ.. சரி விடு வக்கீலு! நமக்குன்னு ஒரு நாள் வராமலா போகும்"

"ஏன் வேண்டாம்னு சொன்னேன் தெரியுமா?"

"அதான் புடிக்கலைனு சொன்னிங்களே?"

புடிக்கலனு எப்ப சொன்னேன்? வேற பொண்ண புடிச்சிருக்குன்னு சொன்னேன்"

"தெளிவா குழப்புற மேன்... ஏற்கனவே மண்ட காஞ்சு சூடாகித்தான் இருக்கேன்.. என்னை முழு பைத்தியம் ஆக்கீடாதீங்க"

"ஹ்ம்ம்! சரி விடு! அதுக்கான நேரம் வரும்போது பேசிக்கலாம்.. இப்ப சூர்யாகிட்ட எப்படி பேசலாம்னு சொல்லு"

"ம்ம் அதை தான் நைட் ஃபுல்லா யோசிச்சேன். யுவாகிட்ட நான் வாங்கி வச்சுருக்குற நல்ல பேருக்கு அவன் தங்கையை என்கூட வெளில அனுப்புவானானே டவுட்டு தான். அண்ட் நான் மட்டும் கேட்டால் கண்டிப்பா சொல்லமாட்டா. அவங்க அம்மா சொல்றது தான் அவளுக்கு வேதவாக்கு. நான் ஒரு ஐடியா சொல்றேன் ட்ரை பண்லாமா?"

"ஏதோ மாஸ்டர் பிளான் இருக்கு போலயே! ம்ம் சொல்லு"

"நாம ஏன்... ஜீவாவை வச்சு மூவ் பண்ண கூடாது?"

"ஜீவாவா?"

"ம்ம் ஆமாம்! அவனால மட்டும் தான் எல்லாரோட மனசும் மாறும். இன்க்ளுடிங் யுவா ஜானகி எல்லாருமே"

"சரி என்ன பண்ணனும் சொல்லு"

"அட என்ன எல்லாத்தையும் என்கிட்டயே கேட்குறீங்க.. அதான் நூல் குடுத்துட்டேன்ல அப்படியே அத புடிச்சி எதாவது பிளான் பண்ணுங்க.. இதுக்கு மேல யோசிச்சா மூளை கழண்டுக்கும் எனக்கு"

"அது சரி! பிளான் தானே.. பண்லாம்.. ஆனால் இப்ப வேண்டாம்.. இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டே. சோ சண்டே நம்ம மீட்டிங் வச்சுக்கலாம்.. ஜீவியும் வந்துடுவான் ஜாயின் பண்ணிக்க"

"ஏ அறிவுக் கொழுந்தே! அப்ப யுவாவும் ஜாயின் பண்ணிப்பான் பரவால்லையா?"

"ஸ்ஸ்! ஆமால்ல.. சரி ஃப்ரை டே வச்சுக்கலாம்.. என்ன கொஞ்சம் மரியாதையா சொல்லியிருக்கலாம்" கண்களை திருப்பி பார்த்து அவன் சொல்ல,

"சாரி லாயர்.. உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.. நாம பண்றது தெரிஞ்சி யுவா என்னை ஊரை விட்டு விரட்டிட்டா என்ன பண்றது அந்த பயம் தான்.."

"ம்ம் அதுவும் சரி தான்.. ஆமா உனக்கு இந்த ஊர் புடிச்சிருக்கா?"

"இது என்ன சந்தேகம்.. நான் இங்கே தான் சந்தோசமா சுதந்திரமா சுவாசிக்கிறேன்.. இங்கே வந்ததனாலே தானே நீங்க எல்லாம் எனக்கு கிடைச்சிருக்கீங்க.. இங்கேயே இருந்திட்டா கூட போதும். ஐம் வெரி ஹாப்பி" உணர்ந்தே கூறினாள் அவள்.

"ஆஹான்! இது போதும்" என்றவன் வேறெதுவும் சொல்லிடவில்லை.

மாலை வேலை முடிந்ததும் ஜீவி வீட்டிற்கு வர கல்பனா அவனை கடைக்கு அனுப்பிவிட்டாள்.

அவன் கடையில் இருந்து காய்கறிகளுடன் அந்த காலனி உள்ளே நுழைய கேப்பில் இருந்து இறங்கினாள் சூர்யா.

வளைவிலேயே அவனைக் கண்டவளுக்கு அது அவன் தான் என்றே தோன்றியது. இவன் ஏன் இங்கே வந்தான் என்ற கேள்வியுடன் காலனி உள்ளே வேகமாக வர, வளைவில் மறைந்திருந்தான் அவன்.

அவனை தேட அவளுக்கு வேறு எந்த காரணமும் இல்லை. அண்ணன் வாழ்வில் எதற்காகவும் அவள் வந்துவிடக் கூடாது என்பதே காரணம்.

சுற்றி சுற்றி பார்த்தாவரே படிகளில் ஏறியவள் அதேவீட்டின் கீழே அவன் இருந்ததை அறிந்திருக்கவில்லை.


"எப்ப வந்த சூரி?" மொட்டைமாடியில் இருந்த தங்கையிடம் வந்ததும் சென்றான் யுவா.

"சீக்கிரமே வந்துட்டேன் ணா" என்றவள் குரலே சோர்வாய் இருக்க, அது புதிதாய் இருந்தது அவனுக்கு. முதன் முதலாய் தனியாய் சென்றுவந்த பயணக் களைப்பு என நினைத்துக் கொண்டான்.

"ண்ணா! நான் இங்கே அவனை பார்த்தேன்ண்ணா. அவன்.. அவன் பேரு... ப்ச் அவன் பேரு ஞாபகம் இல்லை.. அவன் தான் அது.. அவன் ஏன் இங்கே வந்தான்? நீ பார்த்தியா? எதாவது பிரச்சனையா? எதுனாலும் சொல்லுண்ணா"

"ஏய் யாரப் பார்த்த நீ?" சந்தியாவும் வந்துவிட்டாள்.

சந்தியா, யுவா இருவருக்குமே யோசிக்க தேவையில்லை அவள் யாரை பார்த்திருப்பாள் என்று.

"சந்தியா நீ போ. சூரி நீ வா சாப்பிடலாம். லேட்டாச்சு. இங்கே நாம மட்டும் தான். நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கனும். வா! கமான் கெட்டப்" என்றவன் அவள் கைகளையும் விடவில்லை. அவளை யோசிக்கவும் விடவில்லை.

ஆசை தொடரும்..
 
Top