அத்தியாயம் 15
யுவா சூர்யாவை யோசிக்கவே விடாமல் அழைத்து வந்து சாப்பிட வைத்து தூங்கவும் அனுப்பிவிட்டான். ஆனால் சூர்யாவோடு சந்தியாவும் ஒரே அறையில் தான் இருக்கிறாள் என்பதை மறந்து போனான்.
அண்ணனோடு இருந்தவரை அமைதியாய் இருந்த சூர்யாவும் அறைக்கு வந்து கட்டிலில் சாய்ந்தும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தாள்.
"ஏய் இப்ப ஏன் உருண்டுட்டு வர்ற?" சந்தியா கேட்க, யாரிடமாவது சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும் போல ஆனது சூர்யாவிற்கு.
"அண்ணி! நான் அவனை தான் பார்த்தேன். அவன் இங்கே தான் எங்கேயோ இருக்குறான்.. எனக்கு எதுவோ தப்பாபடுது. சம்திங் ராங் அண்ணி" படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து சொல்ல, இதை நல்ல வாய்ப்பாக, தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள ஆயத்தமானாள் சந்தியா.
"சூர்யா! திருப்பதி போய் மொட்டை அடிச்சவன் தான் என் புருஷன்ற மாதிரி அவன்.. அவன்னு சொன்னா நான் எவன்னு நினைக்குறது?" என்றவள் "ஒருவேளை உன் லவ்வரா? பிரேக்கப் பண்ணினவனை இங்கே பார்த்தியா?" ஹஸ்கி வாய்ஸில் சந்தியா கேட்க, தலையணையை தூக்கி அவள்மேல் எரிந்தாள் சூர்யா.
"என்னை என்னனு நினச்ச? அதுவும் போயும் போயும் அவனை போய் என் லவ்வர்னு" என்றவள் அடியை தொடர,
"ஏய் என்னனு சொல்லிட்டு அடி டி" என்றவளை விட்டு விலகிப் போனாள் சூர்யா.
"எம்மா! என்ன அடி அடிக்குறா. யோவ் அப்பா வித்தார்து இதுக்கா என்னை பெத்து வளர்த்து விட்ட? வர்றவன் போறவன்லாம் அவன் பிரச்சனைக்கு என்னை அடிக்குறானே!" புலம்பித் தள்ளினாள் சந்தியா.
"அண்ணி! அண்ணாக்கு மேரேஜ் ஆனது உனக்கு தெரியும்ல?"
"தெரிஞ்சதால தானடி இந்த பாடு படறேன்"
"அந்த அவளை உனக்கு தெரியுமா?"
"எந்த எவளை? தெளிவா சொல்லேன்"
"அதான்.. அண்ணா வாழ்க்கைய இப்படி தலைகீழா மாத்திட்டு போனாளே அவ தான்"
"ஓஹ்! அந்த பொண்ணா! அதான் அம்மாவும் மகளுமா சேர்ந்து அவளை வீட்டைவிட்டு விரட்டிட்டீங்களே? அப்புறம் என்ன?" சந்தியாவிற்கு தெரிந்துவிட்டது. சூர்யா இப்போது அனைத்தையும் சொல்ல தயாராகிவிட்டாள்.
"நாங்க ஒன்னும் விரட்டல.. அவ தான் என் அண்ணாவை விட்டுட்டு இன்னொருத்தன் கூட போய்ட்டா"
"அடிங்.. என்ன பேச்சு டி பேசுற? நீயெல்லாம் படிச்ச பொண்ணா? வீணா இன்னொரு பொண்ணு மேலே பழி போடாத! ச்ச! நீ இவ்வளவு மோசமா இருப்பனு நான் எதிர்பார்க்கவே இல்லை சூர்யா" என்று பொரிந்து தள்ளிய சந்தியா அவளை கையெடுத்துக் கும்பிட்டாள்.
"போதும் உன்கிட்ட நான் எதுவும் கேட்கல.. பேசாமல் படுத்துடு... என் வாயை கிளறி வாங்கிக் கட்டிக்காத" என்றவள் இவளுக்கு எதிர்புறமாய் சென்று படுத்துக் கொண்டாள்.
என்ன சொல்லிவிட்டாள்? வாயிலிருந்து வரும் வார்த்தை தானே மனதின் முகம்? இவள் கல்பனா அக்காவை அப்படியா நினைத்துக் கொண்டிருக்கிறாள்? என நினைத்த சந்தியாவின் மனம் ஆறவே இல்லை.
"அண்ணி! இப்ப ஏன் என்மேல இவ்வளவு கோபப்படுற? உனக்கு உண்மை தெரியாது. அவ நிஜமாவே யுவா அண்ணாவை ஏமாத்திட்டு போய்ட்டா.. நான் அன்னைக்கு எப்படி அழுதேன் தெரியுமா? என் அம்மா எப்படி அழுதுட்டே என்கிட்ட சொன்னாங்க தெரியுமா? அன்னைக்கு இருந்து தான் அண்ணா வீட்டுக்கு வர்றதையே நிறுத்திடுச்சு. வீட்டுக்கு வந்தால் அவ ஞாபகம் வரும்னு தான் அண்ணா வீட்டுக்கே வர்றத்தில"
சந்தியாவின் வார்த்தைகளில் அதிர்ந்துவிட்டாள் சூர்யா. எப்போதும் கோபமாய் பேசுவாள் தான் என்றாலும் இன்று அவளின் வார்த்தைகள் சூர்யாவின் மனதை தாக்கியது. அதனாலோ என்னவோ தனக்கு தெரிந்ததுடன் அன்னை சொல்லியதையும் முழுதாய் ஒப்பித்து விட்டாள் சூர்யா.
சூர்யாவின் அந்த அமைதியான பேச்சில் சந்தியாவும் நிதானமடைந்தாள். இதற்கு முழு காரணம் இவள் அன்னை எனும்போது இவளிடம் கோபம் கொண்டு தான் என்ன பலன்? ஜானகி தான் ஏதோ தவறாய் சொல்லி வைத்திருக்கிறார் என்பதும் புரிந்து எழுந்து அமர்ந்தாள்.
"தோ பாரு சூர்யா! நீ ரொம்ப புத்தகப் பூச்சியா இருக்குற. யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுற. உனக்குன்னு கடவுள் மூளை கொடுத்திருக்கான். நீ யோசிச்சு நீயே முடிவெடுத்துப் பழகு. அது உன் அம்மாவாவே இருந்தாலும் கொஞ்சமாச்சும் உன் புத்தியை யூஸ் பண்ணு"
"அண்ணி! என் அம்மா ஒன்னும் பொய் சொல்ல மாட்டாங்க. சும்மா நீங்க என்கிட்ட ஒரு பேச்சும் அம்மாகிட்ட ஒரு பேச்சும் பேசாதிங்க"
"ஏய் லூசு! உன் நல்லதுக்கு தான் சொல்றேன். இப்பவும் சொல்றேன். ஜானகியை நம்பாதே! இவ்வளவு
பேசறியே நான் ஒரு கேள்வி கேட்கவா? ஏன் உன் அண்ணா யுவா உன் அம்மாகிட்ட பேச மாட்றாங்க?" சந்தியா கேட்க,
"அது.. அதான் சொன்னேனே! அவ மேலே இருக்குற கோபத்துல தான்"
"உன் லாஜிக்கே தப்பா இருக்கு சூர்யா. அந்த பொண்ணு மேலே தான் கோபம்னா ஏன் உன் அண்ணா உன்னோட பூர்வீக வீட்டுக்கு வர மாட்டேன்னு ரெண்டு வருஷமா இருக்கனும்? ஏன் உன் அம்மாகிட்ட பேசாமல் இருக்கனும்? இதைவிட முக்கியமா... உன்னோட பாயிண்ட்லேயே சொல்றேன். யுவாவை நான் கட்டிக்க சம்மதம் உன் அம்மாகிட்ட சொன்னேன்ல? உன் அண்ணா மனசுல அந்த பொண்ணு இல்லைனா ஏன் யுவா வேற பொண்ண கட்டிக்காமல் இருக்கனும்? சொல்லு? யோசி... உனக்கும் மூளை இருக்குல்ல... அதை வச்சு கொஞ்சமாச்சும் யோசி" என்றவள் அவளை தனியே விட்டு ஹாலிற்கு சென்றுவிட்டாள்.
நீ என்ன சொன்னாலும் நான் நம்பமாட்டேன் என்பவளை என்ன செய்ய முடியும்? அவள் ஏற்படுத்தி போன காயம் ஆறாமல் இருக்கும் போது எப்படி அண்ணாவால் இன்னொரு பெண்ணை ஏற்று கொள்ள முடியும்? என தான் தோன்றியது சூர்யாவிற்கு. அதைவிடவும் தன் அன்னை தன்னிடம் சொல்லியது பொய்யாய் இருக்க வாய்ப்பே இல்லை என்றே நம்பினாள்.
அத்தனை கோபமாய் பேசிவிட்டு வந்த சந்தியா தண்ணீரை பருகிவிட்டு சோஃபாவில் விழுந்த அடுத்த நொடி உறங்கிவிட்டாள்.
தான் பேசியதில் நிச்சயம் சூர்யா யோசிப்பாள் என்ற எண்ணத்தில், ஏதோ பெரிய ஒரு நல்ல காரியத்தை சுதாகர் துணை இல்லாமலே சாதித்த எண்ணத்தில் நிம்மதி தோன்ற படுத்ததும் உறங்கிப் போனாள்.
தங்கை ஜீவிதனை தான் பார்திருப்பாள் என புரிந்து கொண்டான் யுவா. கடந்து போ என்றால் சரி என்றிடுவாளா? இல்லையே முதல் வேளையாய் அன்னைக்கு தானே அழைப்பாள். இரண்டு நாட்களில் சூர்யாவிடம் பேசி தெளிவு செய்ய வேண்டும் என நினைத்த யுவா கண்களில் கல்பனா முகம்.
திருமணமாகி மூன்று மாதம் தன்னோடு இருந்தபோது பயம் கலந்த அமைதியாய் இருந்த கல்பனாவின் முகம் மூடிய கண்களில் தெரியவும் சட்டென கண்களை திறந்து கொண்டான்.
விழித்த அவன் கண்களில் தற்போது இருக்கும் சோர்ந்து களைத்த அமைதியான அவள் முகம் தெரிந்தது.
அந்தளவுக்கு எப்போது அவளை உற்று நோக்கினான்? அவனுக்கே தெரியவில்லை. தலையை குலுக்கியவன் தண்ணீர் பருக வர, ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தாள் சந்தியா.
கேள்வியாய் அவளைப் பார்த்தவன் அடுத்த அறையை மெலிதாய் திறக்க, அங்கே சூர்யாவும் அப்போது தான் தூங்கி இருந்தாள்.
'ரெண்டும் ஏதாவது சண்டை போட்டிருக்கும்' தனக்குள் நினைத்துக் கொண்டவன் அறைக்குள் சென்று தூங்க முயன்றான்.
மூளையில் எண்ணங்களின் ஓட்டம் அதிகமாய் இருந்ததால் தூக்கம் வரவில்லை.
திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் ஒருநாள்...
"கல்கோனா!"
"ம்ம் சொல்லுங்க"
"ப்ச்! கூப்பிடுறேன்ல"
"கேட்டுட்டு தான் இருக்கேன் சொல்லுங்க"
"இங்கே வந்தா தான் சொல்லுவேன்"
"உங்களோட...." என்றவள் தலையணை உறையை கீழே வைத்துவிட்டு அவன்முன் சென்று நின்றாள்.
"இப்ப சொல்லுங்க"
"ஹ்ம்ம் குட். நான் சொல்றதை முழுசா கேளு அப்புறம் பதில் சொல்லு" என்றவன் அவளை அருகில் அமர வைத்து அவள் கையில் ஒரு பேப்பரை கொடுத்துவிட்டு மடியில் படுத்துக் கொண்டான்.
"என்னங்க இது?"
"ஓபன் பண்ணி பாரு டா" என்றதும் பிரித்துப் படித்தவள் முகம் அஷ்டக்கோணலாய் மாறியது.
"என்ன ஃப்யூஸ் போயிடுச்சு" என்று அவன் சிரிக்க, முறைத்துப் பார்த்தாள்.
"கண்டிப்பா போயே ஆகணுமா?" முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே அவள் கேட்க,
"அவ்ளோ கண்டிப்பா போகனும்னு இல்லை. ஆனாலும் போய் தான் ஆகணும்" என்றான் அவன்.
"அப்ப முடிவு பண்ணிட்டு தான் என்கிட்ட கேட்குறீங்க இல்ல?" கண்ணீர் கட்டிவிட்டது கண்களில்.
"ப்ச்! அழக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல!. நல்ல சான்ஸ் டா. மூணு பேரை தான் லண்டன்க்கு செலக்ட் பண்ணியிருக்காங்க" அவன் பதிலில் அமைதியாய் இருந்தவள் முகம் அடுத்த நொடி பளிச்சிட்டது.
"அத்தை விட மாட்டாங்களே! அவங்களை மீறி நீங்களும் போக மாட்டிங்களே" குழந்தையாய் கண்களை ஆட்டி அவள் சொல்ல,
"அம்மாகிட்ட நான் பேசிக்குறேன். இப்ப நீ சொல்லு. நீ சொன்னா தான் நான் போவேன்"
"நான் என்ன சொல்வேன்னு தெரிஞ்சே நீங்க இப்படி சொல்றிங்க" என்றவள் மீண்டும் சோக மோடுக்கு சென்றுவிட்டாள்.
"டேய் ஆறு மாசம் தான் டா. அப்புறம் உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன். ப்ரோமிஸ். ப்ளீஸ் மா"
"நீங்க நான் இல்லாமல் இருந்துப்பீங்களா?" இல்லை என்று சொல்லிவிட வேண்டும் என அவள் வேண்டுவது கண்களிலேயே தெரிந்தது.
அவள் மடியில் முகம் புதைத்து இடுப்பை கைகளால் வளைத்துக் கொண்டான் யுவா.
"நான் எப்படி நீங்க இல்லாம இந்த வீட்ல.." என்றவளுக்கு அதற்குமேல் பேச முடியவில்லை. யுவா இருக்கும் போதே அந்த வீட்டில் நடக்கும் எதற்கும் சாட்சி இல்லை. இதில் இவனும் இங்கே இல்லையென்றால்??.
"எனக்கும் கஷ்டம் தான்டி. ஆனால் ஒரு சான்ஸ் கிடைக்கும்போது அதை விடவும் மனசு வர மாட்டுது.. உன்னை கூட்டிட்டு போகலாம்னா கண்டிப்பா பெர்மிஸ்ஸன் கிடைக்காது" அன்னையை பற்றி இந்தளவாவது தெரிகிறதே!
"சரி போய்ட்டு வாங்க" சிரிப்புடன் கூறினாள் கல்பனா.
"நிஜமாவா?" என்றவன் எழுந்து அமர்ந்தான்.
"நிஜமாவே தான். உங்களோட ட்ரீம் தானே அது? அப்புறம் எப்படி நான் தடுக்க முடியும்?" மனதை மறைத்து சிரித்தாள்.
"ஆனால் கல்கோனாவை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேனே!"
"ரொம்பவா?"
"ரொம்ப ரொம்ப டி.. நீ இல்லாமல் நான் இந்த மூணு மாசத்துல எப்பவாச்சும் தூங்கியிருக்கேனா?"
"ம்ம்ம்ம்"
"ஒன்லி த்ரீ மந்த்ஸ் டா. அப்புறம் ஐம் ஸுர் உன்னைவிட்டு எங்கேயும் போகவே மாட்டேன்" என்று சிரித்தவன் அவளை அணைத்துக் கொண்டான்.
அவளை தேடி தானே வந்தேன் முன்று மாத முடிவில்? என்னை தேடி வரவில்லையே அவள்! போய் விட்டாள் தானே? யுவா வேண்டாம்னு போய் விட்டாள் தானே? மனம் ரணத்தில் வலிக்க வலிக்க அதையே நினைத்துக் கொண்டிருந்தான் உறங்காமல்.
ஆசை தொடரும்...