சென்னை ஏர்போர்ட். பலவித மனிதகர்களை முன்பின் தெரியாதவர்களை இணைக்கும் தளம்.
'உன் போட்டோவை அந்த தம்பிகிட்ட கொடுக்க சொல்லி அருண்கிட்ட சொல்லிட்டேன். அதனால நீ தேட வேண்டாம். அவனே உன்கிட்ட வருவான்' என்று சொல்லியிருந்தார் சுந்தரம்.
"இத்தனை பெரிய கூட்டத்துல யாருன்னே தெரியாத ஒருத்தரை எப்படி கண்டுக்குறதாம்? நாம கூட போட்டோ கேட்டிருக்கலாமோ!" யோசித்தவாறே ஓர் இடத்தில் நின்றிருந்தான் சுதாகர்.
"மிஸ்டர் சுதாகர்" என்ற குரலில் தான் தன் அருகே வந்தவனை பார்க்கவே செய்தான் அவன்.
"ஐம் யுவராஜ்" என்றவன் தன்னை அடையாளம் காட்ட வேண்டி சுதாகர் போட்டோவை போனில் காண்பித்தான்.
"ஓஹ் ஹாய்! வெல்கம் யுவராஜ். அங்கிள்கிட்ட உங்க போட்டோ வாங்க மறந்துட்டேன். எப்படி கண்டுபிடிக்க போறோம்னு நினைச்சுட்டு இருந்தேன். தேங்க் காட் நீங்களே வந்துட்டீங்க" என்றவன் யுவாவுடன் கைகுலுக்கிக் கொண்டான்.
"நீங்க மட்டும் தான் வந்திங்களா?" சுதாகர்.
"ஆமா. ஏன்!" புரியாமல் கேட்டான் யுவராஜ்.
"இல்லை! அங்கிளுக்கும் சரியா தெரியலை. அதனால தான் கேட்டேன். சரி வாங்க போலாம்" என்றவன் தன் காரில் அவனை ஏற்றிக் கொண்டு காலனி வந்து சேர்ந்தான்.
"அங்கிள் முக்கியமான வேலையா வெளில போயிருக்காங்க. மதியம் வந்திடுவாங்க. இது தான் உங்களுக்கான வீடு" என அவன் வீட்டின் மேல் தளத்திற்கு கூட்டிச் செல்ல யுவாவும் சம்மதமாய் தலையசைத்தான்.
'என்ன இவன் ஓவர் ரிசெர்வ்டு டைப்பா இருக்கான்' சுதாகர் நினைத்துக் கொண்டவன் "ஓகே யுவராஜ். ஏதாச்சும் வேணும்னா கீழ தான் என் வீடு கூப்பிடுங்க. அப்புறம் பார்க்கலாம்" என்று விடைபெற்று படியில் இறங்கினான்.
"மிஸ்டர் சுதாகர்" என்ற அழைப்பில் அவன் நிற்க,
"இன்னைக்கு ஒரு நாளுக்கு மட்டும் ரெண்ட்க்கு கால் டாக்ஸி கிடைக்குமா?" என்றான்.
"என்னோட கார் வீட்ல தான் இருக்கும். நான் பைக்ல போறேன். நீங்க வேணா அதை யூஸ் பண்ணிக்கோங்களேன்"
"இல்ல பரவால்ல உங்களுக்கு ஏன் சிரமம்"
"இட்ஸ் ஓகே சும்மா தானே நிக்குது. நோ ப்ரோப்லேம்" என்றவனுக்கு புன்னகையுடன் தலையசைக்க, அவனும் புன்னகையுடன் விடைபெற்றான்.
"என்ன சுதா! யாருன்னே தெரியாதவங்களை கார் எடுத்துட்டு போக சொல்றிங்க? எல்லாரையும் ஈஸியா நம்பிடுறீங்க" வீட்டிற்கு வந்தவனை கல்பனா கேட்க,
"பின்ன! உன்னை மாதிரி யாரையுமே நம்பக் கூடாதுன்னு சொல்றியா?" என்றவனை அவள் முறைக்க,
"சரி கூல் கூல்! இன்னைக்கு ஒரு நாள் தானே விடு. ஆமா அவன் மூஞ்சி பார்த்தியா? பார்க்க என் வயசு மாதிரி தான் இருக்கு ஆனா உர்ர்ருன்னு மூஞ்ச வச்சுட்டு அதையும் தாடிக்குள்ள ஒளிச்சு வச்சிட்ருக்கான். உம்முனா மூஞ்சியா இருப்பான் போல" சுதாகர்.
"ப்ச்! மத்தவங்களை பேசி என்ன ஆக போகுது? நீங்க பேசினது கேட்டுச்சு அந்த ஆளை பார்க்கல. நீங்க சாப்பிட்டு கிளம்புங்க"
"என்னடா உன் அம்மா இன்னைக்கு ஓவரா அட்வைஸ் எல்லாம் பன்றாங்க" என குழந்தையிடம் சொன்னவன் அவள் முறைப்பில் அமைதியானான்.
"அப்புறம் என்ன சொன்னான் உன் தம்பி?" சுதாகர்.
"அவனும் இங்க சென்னைல தான் இருக்கானாம். என்னை பார்க்க வரவானு கேட்டான்" கல்பனா.
"இதென்ன கேள்வி? வந்து பாக்குறத விட்டுட்டு கேள்வி வேற! வரட்டும் அவனுக்கு இருக்கு. ஆமா நீ என்ன சொன்ன?"
"உன் இஷ்டம்னு சொன்னேன்"
"அதானே அவன் அக்காவாச்சே நீ! உங்களையெல்லாம் வச்சுட்டு.. டேய் ஜீவா! நீ அப்பா மாதிரி சும்மா கலகலன்னு இருக்கனும் டா. அம்மா மாதிரியோ இல்ல இப்ப பார்த்தேனே மேலே ஒரு உம்முனாமூஞ்சி... அது மாதிரியோ இருக்க கூடாது சரியா?" என கேட்க புரியாமலே தலையசைத்து சிரித்தான் அந்த சுட்டி.
யுவா எதுவும் செய்யத் தோன்றாமல் கட்டிலில் விழுந்தான். மனம் மட்டும் ஏதேதோ கேள்விகளை அவன் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.
எதற்காக இந்த வாழ்வு? யாருக்காக இந்த ஓட்டம்? வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லை. எதற்காக என்று தெரியாமலே சுழன்று கொண்டிருக்கும் பெருங்கடலாய் அவன் மனம்.
எண்ணங்களின் அழுத்தம் தாங்காமல் எழுந்து தலையைத் தாங்கி பிடித்தபடி அமர்ந்து கொண்டான்.
சூர்யாவிற்கு அப்போது தான் அண்ணனின் லைன் கிடைத்தது போல. சரியாய் அந்த நேரம் அழைத்திருந்தாள்.
"சொல்லு டா"
அவன் கொஞ்சம் தணிவாய் பேசும் ஒரே ஆள் அவன் தங்கை. தன்னை புரிந்தவளும் கூட. ஆனால் அவளுக்குமே இன்னும் பல விஷயங்கள் தெரிந்திருக்கவில்லை.
"ண்ணா! எங்க இருக்குற? சென்னை போயாச்சா? உனக்கு அப்ப இருந்து கால் பண்றேன்"
"வந்துட்டேன் மா. சிக்னல் ப்ரோப்லேம் தான். நீ எப்படி இருக்க?"
"ம்ம் நல்லாருக்கேன். ண்ணா உனக்கு ஒன்னு தெரியுமா? சந்தியா அன்னிக்கு நீ சென்னை வர்றது தெரிஞ்சு போச்சி"
"வாட்? என்ன சூரி சொல்ற? அவளுக்கு யாரு சொன்னது நான் சென்னை வர்றதா?"
"அதான் எனக்கும் தெரில. வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட ஒரே அழுக. இன்னொரு ஷாக் நியூஸ் உனக்கு. இந்நேரம் அண்ணி கிளம்பி இருப்பாங்க. மேபீ இன்னைக்கு ஈவினிங்கே நீ இருக்குற இடத்துக்கு வந்து நின்னாலும் சொல்றதுக்கு இல்ல"
"வெயிட்! வெயிட்! நீ என்ன டா சொல்ற? அவ ஏன் இங்க வரணும்? அவளுக்கு எப்படி என்னோட அட்ரஸ் தெரியும்? நோ வே. அவங்க ரெண்டு பேரும் என்னை என்னனு நினைச்சுட்டு இருக்காங்க?"
"நிஜமாவே எனக்கும் தெரில. ஆனா உன்னை ஸ்பை வச்சு நோட் பண்ணிட்டு தான் இருக்காங்க அண்ணி. நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் கேட்க மாட்டுறாங்க அண்ணா"
"ப்ச்! எனக்கு வர்ற கோபத்துக்கு.. ஃபர்ஸ்ட் நீ அவளை அண்ணின்னு சொல்றத நிறுத்து. ஐ காண்ட் டு டைஜெஸ்ட்"
"அது அம்மாக்காக. அம்மாவும் பாவம்ல?"
"பாவம்?" என்றவன் வெளியிட்ட கசந்த புன்னகையை அவள் அறியவில்லை.
"சாரி ண்ணா. என்னால எதுவும் பண்ண முடியல"
"நீ என்னடா பண்ணுவ? எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி. இருக்குறவங்க ஒழுங்கா இருந்திருந்தா..." என்று பெருமூச்சு விட்டவன்
"சரி நான் பாத்துக்குறேன். உன் ஸ்டடிஸ் எப்படி போகுது"
"போகுது ண்ணா! இன்னும் டூ மந்த்ஸ் தான்"
"சரி மா. டேக் கேர். எதாவதுன்னா கால் பண்ணு" என்றவன் அடுத்து சந்தியாவை பற்றிய யோசனைக்கு சென்றான்.
அவளை ஒருமுறை நேரில் பார்த்த ஞாபகம். அதன்பின் நடந்த கூத்தில் அவள் ஞாபகமே இல்லை. இப்போது சில மாதங்களாக தங்கையின் மூலம் அன்னை பேசும் அனைத்தும் இவன் வசம்.
"இந்த பொண்ண அப்போ பாக்கும் போது அப்படி ஒன்னும் அடமெண்ட்டா தெரியலயே! இவ்வளவு தூரம் எதுக்காக சென்னை வரணும்? நிஜமாவே எனக்காகவா? மம்மி அப்படியா அவளை பைத்தியமா மாத்தி வச்சுருக்காங்க?" இந்த கேள்விகள் தான் அவனுள் முதலில் தோன்றியது.
அதற்கு மேல் எதுவும் யோசிக்காமல் ஆபீஸ்ஸை பார்க்க கிளம்பினான்.
அங்கே சூர்யாவை தேடி வந்தார் ஜானகி.
"அடியேய்! உன் அண்ணன்கிட்ட சந்தியாவ பிக்கப் பண்ண சொன்னியா? அவளுக்கு சென்னை புதுசு"
"அண்ணா இன்னைக்கு தான் போயிருக்காங்க. வேலையிருக்காம். இங்கிருந்து சென்னை வர தனியா போக தெரிஞ்சவங்களுக்கு அங்க வழி தெரியாதா?"
லேசாய் எரிச்சல் வந்தது சூர்யாவிற்கு முதல் முதலாய் அன்னை மேல். வேண்டாம் என்பவனை கட்டாயப்படுத்தி இதென்ன பிடிவாதம் என்று தான்.
"அவன்கூட சேர்ந்து நீயும் எதிர்த்து பேச படிச்சிட்டியா? போங்க! நான் எப்படி போனா உங்களுக்கு என்ன?"
கண்ணீர் பொங்க வெளியேறினார். ஜானகிக்கு தெரியும் தன் மகளை எப்படி வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று.
அதை போல தான் லேசாய் அன்னை முகம் வாடவும் தன்னையே திட்டிக் கொண்டாள் சூர்யா. இது தான் அவளின் சுபாவம். எளிதில் அடிமையாகி விடுவாள் பாசத்திற்கு மட்டும்.
அடுத்த நாளே அந்த ஐடி வேலையில் சேர்ந்து கொள்ள அனைத்து செயல்முறைகளையும் முடித்துவிட்டு தன் குழுவின் கீழ் வரும் நபர்களின் தகவல்களையும் சேகரித்துக் கொண்டான் யுவராஜ்.
லண்டனில் பணிபுரிந்தது போல இங்கு இல்லை. அதைவிட கடினம் தான். அவனுக்கே தெரியும். அதுவும் அவனுக்கு கீழ் இப்போது கொடுக்கப்பட்டிருப்பவர்கள் எல்லாம் புத்தம் புதிதாய் கல்லூரி முடித்து வரும் மொட்டுக்கள்.
அவனிடம் சொல்லி தான் அனுப்பி வைத்தார் அந்த தலைமை அதிகாரி. அங்கே வருபவர்களிடமும் இதேபோல கடுமையாய் நடந்து கொள்ளாதே என்று.
அதை இவனும் அப்போது காதில் வாங்கவில்லை. இப்போது தானாய் ஞாபகம் வந்தது. புதிதாக வருபவர்களிடம் அப்படி எளிதில் கோபத்தை காட்டிடக் கூடாதே!.
அன்று முழுதும் தனக்கு தேவையானவற்றை வாங்க நேரம் எடுத்துக் கொண்டான்.
பெரிதாக ஒன்றும் இல்லை. பிரட், ஜாம், பால், முட்டை என்ற பாஸ்ட்பூட் தான் அதிகம். பெரிதாய் நேரம் எடுத்துக் கொள்ளாத உணவு பொருட்கள்.
ரசித்து ருசித்து உண்டு எல்லாம் வருடங்கள் ஆகிற்று. இது வாழ்வதற்காக மட்டும்.
வாங்கிய பொருட்களுடன் வீடு வந்து சேர்ந்த போது மணி இரவு ஏழு.
சுதாகர் வீட்டு வாசலின் அழைப்பு மணியை தட்டிவிட்டு இவன் காத்திருக்க அவனும் வந்தான்.
"தேங்க் யூ சோ மச் ஃபார் தி டைம்லி ஹெல்ப்" என்று கார் சாவியை நீட்டினான் யுவா.
"தட்ஸ் ஓகே. அப்புறம் ஊர்லேர்ந்து உங்க வைஃப் வர்றதா சொல்லவே இல்லையே? நீங்க மறந்து வீட்டை பூட்டிட்டு போய்ட்டீங்க. இங்க தான் இருக்காங்க. இருங்க கூப்பிடுறேன்" என்று சுதாகர் சொல்ல கொஞ்சமும் யோசிக்க தேவையின்றி புரிந்து போனது யுவாவிற்கு அது சந்தியா தான் என்று.
ஆனால் உள்ளிருந்து வந்தவளை பார்த்தவன் கண்கள் நிச்சயம் அவளை எதிர்பார்க்கவில்லை என்கின்ற பாவம்.
ஏதேதோ எண்ணங்கள் சுனாமியாய் அவனை சுழற்ற ஒரு நிமிடம் தலை சுற்றி கண்கள் சொருக பார்க்க சில நொடிகளில் சமாளித்து நின்றான்.
அதிர்ச்சி எல்லாம் சில நொடிகள் தான். அனைத்து உணர்வுகளையும் மறைக்கும் வித்தையை தான் இந்த இரண்டு வருடங்களில் கற்று கொண்டானே!
"ஹாய் யுவா! ஹவ் ஆர் யூ? என்னோட சர்ப்ரைஸ் எப்படி?" பேசிக் கொண்டே துள்ளளுடன் சந்தியா அவன் அருகில் வர அவள்மேல் இருந்த முழுக் கோபத்தையும் கூட காட்டிட முடியாத நிலை அவனுக்கு.
சுதாகர் சந்தியாவையும் யுவாவையும் தான் மாறி மாறி பார்த்திருந்தான். வழக்கம் போல யுவாவின் தாடிக்குள் இருந்த முகத்தில் இருந்து அவனால் எதையும் கண்டு கொள்ள முடியவில்லை.
ஆனாலும் சந்தியாவின் பேச்சும் சுறுசுறுப்பும் என்று இந்த சிலமணி நேரத்தில் அவளிடம் நட்புடன் பழகி இருந்தவன் யுவாவின் அமைதியையும் கவனித்தான்.
'பொண்டாட்டிகிட்ட கூட இப்படி தான் இருப்பியா டா நீ?' என்று தான் தோன்றியது அவனுக்கு.
ஒரு நொடி சுதாகர் திரும்பி கல்பனாவை பார்த்திருந்தால் ஏதேனும் விளங்கியிருக்குமோ சுதாகருக்கு?
இரண்டு வருடங்களுக்கு பின் விதியின் விளையாட்டு மீண்டும் தொடர்கிறது...
காதல் தொடரும்...