கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 21

Rithi

Moderator
Staff member
அத்தியாயம் 21

"ம்மா! பாவம் மா அந்த பொண்ணு கிராமத்துல இருந்து வந்திருக்கும் போல" ஹோட்டல் வாசல் வந்தபின் யுவராஜ் ஜானகியிடம் சொல்ல,

"ஏன் கிராமத்துல இருந்து வந்தா தன் பக்கத்துல யாரு படுத்திருக்காங்கனு தெரியாதா? என்னை பேச வைக்காத யுவா! அங்கே யாரோ சொன்னங்களே! லோ கிளாஸ் பீப்புள்னா இப்படித் தான்னு அது உண்மையானு எனக்கு தெரியாது.. ஆனா அந்த பொண்ணு உண்மை இல்லை.. ஒன்னுமே தெரியாத மாதிரி முகத்தை வச்சுட்டு...தூங்கி எழுந்து எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லுது.. அதை என்னை நம்ப சொல்றியா?" ஜானகி கோபமாய் சொல்ல,

அதை தான் யுவாவும் யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு அவளின் அந்த முகத்துக்கு ஏமாற்றும் ரகம் சுத்தமாய் ஒட்டவில்லை என்றே தோன்றியது. பின் ஏன் இங்கே வந்திருக்க வேண்டும்? எவ்வளவு யோசித்தும் அவனுக்கு புரியவில்லை.

பாதி வழியில் மயங்கிய கல்பனாவை ஏதோ ஓர் அறைகதவை திறந்து உள்ளே விட்டு சென்றிட நினைத்த வசந்தாவிற்கு, ஓர் அறையை திறந்ததும் உள்ளே படுத்திருந்த யுவா இன்னும் வசதியாய் போக அருகே கல்பனாவை கிடைத்திவிட்டு சென்றிருந்ததற்கு சாட்சி தான் யாரோ? அந்த சாட்சி தான் பேசுமோ?

"இப்ப நீங்க வர போறீங்களா இல்லையா?" செல்லதுரையிடம் அதே ஹோட்டல் வாசலில் வைத்து கேட்டுக் கொண்டிருந்தார் வசந்தா.

ஒரு தகப்பனாய் அந்த இடத்தைவிட்டு ஒரு அடிகூட காலை நகற்ற முடியவில்லை அவருக்கு.

"தோ பாரு யா! இவனும் உன் புள்ள தான். இப்ப நீ எங்களோட வரல... என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" மிரட்டினார் என்றே சொல்லலாம்.

அதை கேட்டுக் கொண்டிருந்த யுவா மனம் அடித்துக் கொண்டது உண்மை தான். எப்படியாவது அந்த பெண்ணை இவர்கள் கூட்டிச் சென்றிட வேண்டும் என தான் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

செல்லதுரை எழுந்தவர் ஜீவியை அருகில் அழைத்தார். "ஜீவிதா! இந்தா காசு. நீ இங்கே தான் இருக்கனும். அவ மேலே தப்பு இருக்கா இல்லையானு எனக்கு தெரியாது. ஆனா அவளை நம்மளோட கூட்டிட்டு போனா என்ன நடக்கும்னு எனக்கு தெரியும். நீ சின்ன பையன் தான்.. உனக்கு இது பாரம் தான். ஆனா அவ இங்கே என்ன பண்ணுவானு தெரியாம அம்போனு என்னால விட்டுட்டு போக முடியாது. நீ இங்கேயே இரு. உனக்கு தான் சுதாகர் எல்லாம் சொல்லி தந்திருக்கானே.
பிரச்சனை எதுவும் இல்லைனா நீ மட்டும் வீட்டுக்கு வா" என்றவர் வசந்தா அடுத்து பேச வரும்முன் இது தான் என் முடிவு என்பதை போல நிற்க,

"டேய் அவ இன்னொருத்தன் கூட இருந்தவ... இந்த ஹோட்டலை விட்டு வெளில அவ போனதும் நீ கிளம்பி வந்துடு" என மகனிடம் விஷத்தை கக்கிவிட்டு சென்றுவிட்டார்.

"அவளுக்கு எதாவது வழி கிடைச்சதும் கிளம்பு டா ராசா!" என தனியாய் ஜீவியிடம் சொல்லிச் சென்றார் சிவலிங்கம் சுதாகர் தந்தை.

யுவாவிற்கு வண்டி இன்னும் வரவில்லை. கம்பெனி கார் வர இன்னும் நேரம் இருக்கிறது. வேறு கார் சொல்லி கிடைப்பது இங்கு சாத்தியம் இல்லை என்பதால் அங்கேயே நின்றனர்.

அவர்கள் சென்ற பின்னுமே யுவாவிற்கு கல்பனா பாவம் என்றும் அவள் என்ன செய்வாளோ என்றும் தான் தோன்றிக் கொண்டே இருந்தது.

ஹோட்டல் உள்ளேயே அவன் பார்வை இருக்க, "டேய்! அங்கே என்ன பார்வை? எல்லாரும் பேசுறத நீயே உண்மைனு ஆக்கிடாதே!" என்று ஜானகி சொல்ல, அப்போதும் அன்னையை எதிர்த்து பேசாமல் அமைதியாய் தான் நின்றான்.

"சரியான பட்டிக்காடுங்க அண்ணா! நீ அம்மா சொல்றதை கேளு!" சூர்யா சொல்வதை கேட்டுக்கொண்டு தான் அங்கே நின்றான் ஜீவி.

இதோ காரும் வந்துவிட்டது. ஜானகியும் ஏறிவிட்டார். உடன் சூர்யாவும். "யுவா ஏறு!" ஜானகி சொல்ல, ஒரு காலை வண்டியில் வைத்தவன் ஜீவியை திரும்பி பார்த்தான். அவன் அசைவதாய் இல்லை.

அவன் அவளை அழைத்து செல்வான் என்றும் தோன்றவில்லை யுவாவிற்கு. இரு நொடி கண்மூடி நின்றான். செல்லதுரை வசந்தாவின் பேச்சுக்கள் நியாபகம் வந்தது. அவர் மனைவி பேச்சை கேட்டு பின்னே சென்றதை போல தான் இப்போது அன்னை பேச்சைக் கேட்டு பின் சென்றால் தவறாகும் என்று தோன்றியது.

அடுத்த நொடியே காரில் இருந்து காலை எடுத்துவிட்டான்.

"என்னாச்சு யுவா?" ஜானகி கேட்க,

"ஒரு நிமிஷம் மா!" என்றவன் ஹோட்டல் உள்ளே ஓடினான் "யுவா! யுவா" என்ற அன்னை பேச்சையும் மீறி.

அறை வாசலில் சிப்பந்தி சாவியுடன் நிற்க, முன் நின்ற அதே இடத்தில் முழங்காலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் கல்பனா.

"சார் ரூம் கிளோஸ் பண்ணனும்" யுவாவிடம் வெளியில் நின்றவர் சொல்ல,

"ஜஸ்ட் அ மினிட்" என்றவன் அவளருகே சென்றான்.

"எக்ஸ்க்யூஸ் மீ!" அவன் அழைக்க, இதுவரை யாரும் இல்லாமல் அழுது கொண்டிருந்தவள், அதே அழுது வீங்கிய முகத்துடன் அவனைப் பார்த்தாள்.

அதிலேயே தோற்றுவிட்டான் யுவா. காலையில் இதே பாவாடை தாவணியில் இவன் மனதை குளிரவித்த முகம். அதை உணர நேரம் கொடுக்காமல் நேரத்தை எடுத்தும் கொள்ளாமல் இவன் தன் வேலையில் லயித்திருந்தான். இப்போது அதே முகம் அழுது கசங்கி அவன்முன்.

காதல் நட்பு உறவு எதுவும் இல்லை.. ஆனாலும் ஏதோ ஒன்று அவள் கண்ணீரை துடைக்க சொல்ல ஒரு விரலால் துடைத்து வெளியே அழைத்து வந்தான்.

"சாரி சார்! நான்.. வேணும்னு உங்க... ரூம்..." மேலும் அழுது அழுது அவள் சொல்ல, ஜானகி சூர்யாவுடன் வந்திருந்தார்.

"ஹேய் கூல்! கூல்! நான் எதுவும் நினைக்கல.. விடு! உனக்கு வேற யாராயாச்சும் தெரிஞ்சவங்க இருக்காங்களா?" யுவா கேட்க, என்ன சொல்லிடுவாள் அவள்.

அவள் முக பாவத்திலேயே கண்டு கொண்டான் இல்லையென.

"சரி கீழே வா" என ஹோட்டலை விட்டு அவளை வெளியே அழைத்து வர, இன்னமும் அதே இடத்தில் நின்றிருந்தான் ஜீவி.

"யுவா! என்ன பண்ணிட்டு இருக்குற நீ?" ஜானகி கோபமாய் கேட்க,

"ம்மா ப்ளீஸ்! இப்படியே விட்டுட்டு வந்தா எனக்கு கில்டி பீல் ஆகும்.. அண்ட் நானும் இப்படி இருந்திருக்க கூடாது.. எல்லாரும் அவளையே சொல்றிங்களே நான் அவ வந்தது கூட தெரியாம தானே தூங்கியிருக்கேன்... இப்ப அவ என் மேலே கேஸ் கூட போடலாம்" ஜீவி பார்த்துக் கொண்டிருக்க, கல்பனாவிற்காக வாதாடியவனை பார்க்க சுதாகர் ஞாபகம் வந்து போனது கல்பனாவிற்கு.

"ஜீவி!" அப்போது தான் ஜீவிதனை பார்த்த கல்பனா அவனருகில் வேகமாய் செல்ல,

"சீக்கிரம் எதாவது முடிவு பண்ணு! அப்ப தான் நான் வீட்டுக்க போக முடியும்" எங்கோ முகம் வைத்து அவன் சொல்லவும் சட்டென அவள் கால்கள் நின்று பட்டென கண்ணீர் மடைதிறந்தது.

"ண்ணா! என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இந்த ஹால்ஃப் சாரீக்காக இங்கேயே இன்னும் எவ்வளவு நேரம் நிற்க போறீங்க? ஆபீஸ்லேர்ந்து உங்களுக்கு கால் வந்துட்டே இருக்கு. கேஸ் போட நீங்களே பாயிண்ட் எடுத்து கொடுக்குறீங்களா?" சூர்யா சொல்ல, இம்முறையும் அவளைப் பார்த்தான் ஜீவி.

"ம்மா! இப்படியே எப்படி விட்டுட்டு போறது?" அவன் கேட்க,

"அதான் அந்த பையன் நிக்கிறானே! அவன் பார்த்துப்பான். நீ வா!" என ஜானகி சொல்ல, தம்பியின் வார்த்தைகளில் அவனும் இவள் பக்கம் இல்லை என்பது புரிந்திருந்த கல்பனா அடுத்த நொடி யோசிக்காது யுவா கைகளைப் பற்றியிருந்தாள்.

இதில் அவள்மேல் தவறில்லை. சிறுவயதில் இருந்தே இந்த பழக்கம் தான். யாரும் இல்லாமல் வசந்தாவின் சொற்களுக்கு நடுவே இவ்வளவு நாளை நகற்றியவளுக்கு நானிருக்கிறேன் என அவ்வப்போது அவளுக்கு கைகொடுத்து, அவளை வசந்தா திட்டும் போதெல்லாம் அருகில் இருக்கும் சுதாகர் தோள்களை பற்றியிருந்தவளுக்கு இது தற்செயலாய் வந்துவிட்ட ஒன்று தான்.

ஆனால் அங்கே தான் ஜீவி, சூர்யாவின் எண்ணங்களும் தவறாய் மாறியது. ஜானகியின் எண்ணமும் வன்மம் ஆகியது. யுவாவின் உணர்வுகளும் விழித்தது.

இங்கேயே விட்டு சென்றுவிட்டால் தன் நிலைமை என யோசித்தவள் மனம் அடுத்த நொடி தனக்காக பேசிய ஒருவனை அந்த நேர ஆதரவுக்காக நாடியது. அதில் யுவாவுமே நடக்க வேண்டியதை முடிவு செய்து கொண்டான்.

"ம்மா! பாவம்னு தான் எதாவது பண்ணலாம் நினச்சேன். ஆனா இப்ப அப்படி விட முடியலைம்மா!" சொல்லியவன் அவன் தோள்களை பிடித்திருந்த கல்பனாவின் கைகளை எடுத்து தன் விரல்களோடு பற்றிக் கொண்டான்.

"விளையாடுறியா யுவா? உனக்காக அங்கே சந்தியா காத்திட்டு இருக்கிறா? மறந்துட்டியா? அதுவும் இவளும் இவளோட..." அவர் கடும் கோபத்தில் கத்திட,

"ம்மா!" என்றவன் "நான் அவங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ணிக்குறேன். அண்ட் நான் முடிவு பண்ணிட்டேன்" இவ்வளவு பிடிவாதம் யுவாவிற்கு இருக்கும் என்பதே அன்று தான் ஜானகிக்கு தெரிந்திருக்கும்.

ஏனோ அவள் முகத்தில் தெரிந்த பயமும் இவன் தோள்களை அவள் பற்றியிருந்த இறுக்கமும் இவளை விட்டுவிடாதே என்று சொல்லத்தான் துடித்தது.

"இன்னும் என்ன டா? இவ சேஃப்னு போய் சொல்லு" யுவா ஜீவியிடம் சொல்ல,

"இந்த ஹோட்டலை விட்டு நீங்க எங்கே போறிங்கனு தெரியணும்.. இவளுக்கு என்ன முடிவுனு தெரியாமல் அப்பா என்னை வீட்டுக்குள்ள விடாது" எரிச்சலாய் கூறினான் தம்பியானவன்.

"ஓஹ்! சரி ஓகே வா வண்டில ஏறு!" - யுவா.

"எங்கே?" - ஜீவி.

"ஏறு டா... வயசுக்கு மீறி பேசிகிட்டு!"

"யுவா நீ பண்றது சுத்தமா நல்லா இல்ல" ஜானகிக்கு தெரிந்து விட்டது மகனின் உறுதி.

"ம்மா வாங்கமா" என்றவன் கூகிள் மாப் உதவியுடன் அருகில் இருந்த கோவிலை சேர்ச் செய்தான். அது செல்லதுரை குலதெய்வ கோவில்.

இது ஜீவியின் பேச்சுக்கு பின் எடுத்த முடிவு. திருமணம். ஆம் அந்த கோவிலில் தான் நடந்து முடிந்தது யுவா கல்பனாவின் திருமணம்.

"இப்ப போய் சொல்லு! காலம் முழுக்க இங்கே தான் என்கூட தான் இவ இருக்க போறா! இந்தா அட்ரஸ் இதை கொண்டு போய் குடு" யுவா ஜீவி கையில் அந்த கார்டை திணிக்க, அடுத்து ஒரு நிமிடமும் அங்கே நிற்கவில்லை ஜீவி. வழியிலேயே அந்த கார்டையும் கிழித்துப் போட்டிருந்தான்.

யுவாவின் கண்களும் விடியும் பொழுதில் தான் மூடியது தன் மனதின் நினைவுகளில்.

இப்படி இருந்த யுவா ஏன் கல்பனாவிடம் பேச மறுக்கிறான்??

அடுத்தநாள் யுவா கிளம்பி வெளிவந்த போது சூர்யா கிளம்பாமல் இருக்க, அவளிடம் எதுவும் கேட்காமலே கிளம்பி சென்றுவிட்டான் யுவா. சந்தியாவை அவன் தேட கூட இல்லை.

அடுத்ததாக உறங்கிக் கொண்டிருந்த சந்தியாவிடம் கூட சொல்லாமல் சுதாகர் வீட்டு கதவை தட்டிக் கொண்டிருந்தாள் அந்த காலை வேளையில் சூர்யா.

ஆசை தொடரும்..
 
Last edited:
Top