கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 3

Rithi

Moderator
Staff member
"சந்தியா கெட் ரெடி! நாம உடனே கிளம்பனும்" மேலே அவளை அழைத்து வந்தத யுவா கூறிய முதல் வார்த்தை இதுதான்.

சொன்னது மட்டும் அல்ல. அவன் கைகளும் பெட்டியை எடுத்து அவன் உடைமைகளை அதனுள்ளே திணித்துக் கொண்டிருந்தது.

வாழ்நாள் எவ்வளவு என தெரியாத இந்த வாழ்க்கையில் அவன் பார்க்கவே கூடாது என நினைத்த முகம் அவன் கண்முன். அதுவும் கணவன் குழந்தை என்ற விதத்தில்.

நிஜமாய் அவன் எதிர்பார்க்கவில்லை. அதுவும் இப்படி ஒரு சூழ்நிலை கனவில் கூட அவன் நினைத்திருப்பானா?

அவன் எவ்வளவு பெரிய அதிர்ச்சியில் இருந்திருந்தால் சந்தியாவை திட்டிவிட நினைத்ததையும் மறந்து தன்னுடன் கிளம்பு என்று கூறுவான்?

அதுதான் சந்தியாவிற்கு முதல் அதிர்ச்சி. அவளும் அப்படி எதிர்பார்த்து தானே வந்தாள். இவளை பார்த்ததும் அவன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வான். இவள் சூசைட் என மிரட்ட வேண்டும் என பல யுத்திகளுடன் இவள் வந்திருக்க, இவனென்றால் எளிதாய் என்னுடன் கிளம்பு என்கிறானே என்கிற அதிர்ச்சி.

"எங்க கிளம்பனும்?" அதிர்ச்சியுடன் அவள் கேட்க,

"எதாவது ஹோட்டல்.. இல்லை எங்கேயாவது.. இங்க வேண்டாம்.. கிளம்பு" அவளை பார்க்காமலே அவன் கூறிட இவள் விக்கித்து நின்றாள்.

"ஹோ.. ஹோட்டலா?" மனம் என்னென்னவோ கற்பனை செய்து விட்டது அவளுக்கு.

'ஹோட்டலா? எதற்காம்? நான் இவனை மிரட்ட வந்தாள் இவன் என்னை மிரட்டப் பார்க்கிறானா?' என எண்ணிக் கொண்டே அவனை கூர்ந்து கவனிக்க அவன் முகத்தில் இருந்து இவளுக்கு எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

"ஒய்.. யுவா? எனக்கு... இந்த பிளேஸ்... ரொம்ப... புடிச்சிருச்சி. நான்... வரமாட்டேன் பா" திக்கி திணறி அவள் சொல்ல,

ஒரு நொடி அவன் பார்த்துக் கொண்டிருந்த வேலையில் இருந்து அவன் கைகள் அப்படியே நின்றது.

பின் "நோ ப்ரோப்லேம்! உன் இஷ்டம்" என்றவன் வெளியேற போக, அப்போது தான் அவன் தன்னை பற்றி தவறாக எதுவும் சிந்திக்கவில்லை என புரிந்து சிறு நிம்மதி அவளுள்.

ஆனாலும் இந்த இடம் போல வெளியே எந்த ஹோட்டல் சென்றாலும் எங்கே தங்கினாலும் பாதுகாப்பு இல்லை என்பது வந்த சில மணி நேரங்களிலேயே தெரிந்துவிட்டது அவளுக்கு.

இவனை வைத்து தானே சென்னை வரை தனியாய் தன்னை அனுப்பியிருக்கிறார்கள் என நினைத்தவள் அவன் பின்னே ஓடினாள்.

"யுவா வெயிட்! என்ன ப்ரோப்லேம்"

"லுக்! தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ்" என்றவன் படிகளில் வேகமாக இறங்கிவர அவன்முன் வந்து நின்றான் சுதாகர்.

"யுவராஜ்! சுந்தரம் அங்கிள் ஹாஸ்பிடல்ல இருக்காங்களாம். லோ பிரஷர்னு சொல்றாங்க. அவங்க பையன் அருண் போன் நம்பர் கொஞ்சம் கொடுங்களேன்"

சுதாகர் பதட்டத்தில் வேகமாக பேசியவன் அதன் பின் தான் யுவராஜ் பெட்டியுடன் இருப்பதையே கண்டான்.

"லோ பிரஷர்ரா? ஒரே நிமிஷம்" என்ற யுவா உடனே அருணுக்கு அழைத்தான்.

நடப்பது என்ன என்றே புரியாமல் பார்த்து நின்றாள் சந்தியா.

சில நிமிடத்தில் அருணிடம் பேசிவிட்டு திரும்பி சுதாகரிடம் வந்தவன் "அருண் முக்கியமான வேலைல மாட்டிகிட்டான். இப்ப அவனால வர முடியாத சிட்டுவேஷன். எந்த ஹாஸ்பிடல்னு சொல்லுங்க நான் பாத்துக்குறேன்" என்று சொல்ல,

தானும் அங்கே தான் செல்வதாக சொல்லி அழைத்து சென்றான். உடன் சந்தியாவும் சென்றாள்.

அங்கே அரை மயக்க நிலையில் இருந்தார் சுந்தரம். டாக்டர் இரண்டு நாட்கள் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய சொல்லிவிட,

"சாரி யுவா! நானே அங்கிள பாத்துக்குவேன். பட் அர்ஜென்ட் ஒர்க்கா பெங்களூர் வர போக வேண்டியதாகிட்டு. சோ ப்ளீஸ்.." என்றான் சுதாகர்.

சரி என்று கேட்டுக் கொண்டவன் என்ன மனநிலையில் இருந்தான் என்று அவனே அறியான்.

"கல்பனாவை சாப்பாடு கொண்டு வர சொல்றேன்... " என்று சொல்ல வந்த சுதாகரை "நோ நீட். நாங்க பாத்துக்குறோம்" என்று பட்டென தடுத்துவிட்டான் யுவராஜ்.

அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் சுதாகர் கிளம்பிவிட சந்தியாவோ தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.

'பெரிய வில்லி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து கிளம்பி வந்தா இப்படி என்னை ஹாஸ்பிடல்ல உக்கார வச்சிட்டானுங்களே!' என்பது தான் அவளின் கவலை.

தனியாய் குழந்தையுடன் அமர்ந்திருந்த கல்பனாவின் கண்களில் இருந்து எவ்வளவு நேரம் கண்ணீர் வடிந்ததோ ஜீவா அதை துடைத்து விடும்வரை அவளே அறியாள்.

இதயத்தில் பெரும் கணம் ஒன்று ஏறியது போல இருந்தது. சுதாகர் செல்லும்வரை அவனிடம் கண்ணீரை மறைக்க பெரும்பாடு பட்டிருந்தாள் அவள்.

இதோ என் கண்ணீரை தடுக்க யாருமில்லை என்று நினைத்தவளுக்கு ஜீவனாய் ஜீவா!

"உனக்கு ஏன்டா அடிக்கடி அழுகை வருது? இனி உனக்கு நான் மட்டும் தான்" என்றும் "எனக்கும் தான் உன்னை பிடிக்கல.... என் நிம்மதியே போச்சு" என்றும்

ஒரே குரலின் பல சொற்கள் பல விதமாய் அவள் மனதுள் நாட்டியமாட கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

இரண்டு நாட்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை யுவாவிற்கு. நண்பன் அருண் தன்னிடம் கொடுத்திருக்கும் பொறுப்பு அவன் அப்பாவை பார்த்துக் கொள்வது.

வேறு வழியில்லை அங்கே தான் தங்க வேண்டிய சூழ்நிலை. பெங்களூரு சென்றிருந்த சுதாகரும் இன்னும் வந்திருக்கவில்லை.

இந்த இரு நாட்களில் சந்தியா முழுதும் கல்பனா வீட்டிலேயே தான் இருந்தாள். அவளை போ என்றோ அங்கே போகாதே என்றோ யுவா சொல்லவே இல்லை.

அவனை பொறுத்தவரை இரு பெண்களுமே அவனுக்கு வேண்டாதவர்கள் தான்.

கல்பனாவிற்கு துருதுருவென எதாவது பேசிக் கொண்டே இருக்கும் சந்தியாவை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

சந்தியா யுவாவின் மனைவி இந்த ஒரு அடையாளம் கல்பனாவை அவளிடம் ஒன்ற விடவில்லை. அதைகூட அறியாமல் சந்தியா ஜீவாவுடன் அரட்டையடிப்பாள்.

சந்தியா ஜீவா இருவரையும் பார்த்தால் யுவா கல்பனா இருவருக்கும் தோன்றுவது ஒன்று தான்.

சில நேரங்களில் எதுவுமே தெரியாமல் இருந்துவிட்டால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும்? இதோ இந்த குழந்தை போன்று என்று கல்பனாவும் வாழ்க்கையின் பாதி பகுதி முடிந்தவிதம் தெரிந்தும் என்னை தேடி வந்து அவள் போக்கில் இருக்கும் இதோ இந்த பெண் சந்தியா போன்று என்று யுவாவும் நினைத்துக் கொண்டனர்.

பகலில் யுவா வேலைக்கு சென்றுவிட சந்தியா சுந்தரம் அருகில் மருத்துவமனையில் இருந்து பார்த்து கொள்வாள்.

கல்பனா ஒவ்வொரு நிமிடமும் பயந்து எப்போது வருவானோ என்ன கேள்வி கேட்பானோ என்ற பயத்துடன் வீட்டை பூட்டி வீட்டிற்குள் அமர்ந்து கொள்வாள்.

அவளுக்கு தெரியவில்லை. அவன் இவளை என்றோ இறந்ததாக எண்ணி அவனும் இறந்துவிட்டதை.

இரண்டு நாட்கள் கழித்து மாலை நேரம் சுந்தரம் வீட்டிற்கு அழைத்து வரப்பட அவரை அவர் வீட்டில்விட்டு தன் இடம் வந்தபின் உள்ளே நுழைந்த சந்தியாவை வாசலிலேயே தடுத்தான் யுவா.

"என்னாச்சு யுவா?"

"உண்மைய சொல்லு! எதுக்காக இங்க வந்த?"

"ஏன்? உங்களுக்கு தெரியாதா?"

"ம்ம் தெரியும். இந்த ரெண்டு நாள்ல நல்லா தெரிஞ்சுகிட்டேன். ஆமாம் அன்னைக்கு ஹோட்டல்க்கு கூப்பிட்டேனே ஏன் வர மாட்டேன்னு சொன்ன?"

"அது.. அது வந்து.. இங்க எல்லாரையும் எனக்கு புடிச்சிடுச்சு"

"வந்த டூ ஹவர்ஸ்லயா?" அவன் குரலில் அவ்வளவு நக்கல் தெரிந்தது.

"ப்ளீஸ் யுவா"

"உனக்கு சுத்தமா என் மேல இன்ட்ரெஸ்ட் இல்ல. என்கூட அஞ்சு நிமிஷம் தனியா இந்த வீட்ல இருக்க உனக்கு பயமா இருக்கு. அதுனால தான் ரெண்டு நாளா கீழயே இருக்க. சரியா?"

அவளை இந்த இரண்டு நாட்களில் ஓரளவு கண்டுகொண்டான். உண்மையை அவள் வாயால் வாங்கவே இந்த என்கொயரி.

"அப்படி இல்ல. கீழ அவங்க தனியா இருந்தாங்க அதான்..."

"ஓஹ்! ஓகே. எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம். வா டில்லி போய் ரெண்டு பேர் வீட்லயும் பேசலாம்" என்றவன் அவள் கைகளை பிடிக்க போக,

"ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்" என்று கண்களை மூடிக் கொண்டு பின்னால் நகர்ந்தவள்,

"வேண்டாம்! அப்படி எதுவும் பண்ணிடாதீங்க. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. அம்மாவும் ஆண்ட்டியும் ரொம்ப தீவிரமா இருக்காங்க நம்ம கல்யாணத்துக்கு. எப்படியும் நீங்க ஒத்துக்க மாட்டிங்கன்ற நம்பிக்கைல தான் அவ்வளவு நம்பிக்கையா உங்க வீட்லயும் எங்க வீட்லயும் சம்மதம் சொன்னேன். எனக்கு வேண்டாம். நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" கண்களை மூடிக் கொண்டே அவள் அனைத்தையும் ஒப்பித்துவிட அங்கிருந்த டேபிளில் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு அவளையே பார்த்து நின்றான் யுவராஜ்.

மெதுவாய் கண் திறந்தவள் பார்த்த காட்சி அதுதான்.

"எனக்கு ஃபிரீடம்மே கிடையாது. வீட்ல ஓவர் ரூல்ஸ். உங்களை வச்சு இங்க கொஞ்சநாள் ஜாலியா சுத்தி பார்க்கலாம்னு தான் வந்தேன். மத்தபடி எனக்கு எந்த எண்ணமும் இல்லை. ப்ளீஸ் அம்மாகிட்ட சொல்லிடாதீங்க"

அவள் கெஞ்சலில் யுவாவிற்கு இப்போது அவள் எண்ணம் தெளிவாய் புரிந்தது. சந்தேகத்தில் தான் அவன் போட்டு வாங்கினான்.

ஆனால் அவனுக்குமே அவளை வந்த அன்று நினைத்ததை போல அடுத்த இரண்டு நாட்களும் நினைக்க முடியவில்லை.

குழந்தை போல துள்ளிக் கொண்டு தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவளை கவனித்ததால் தான் இப்போது அவனுக்கு அனைத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

"சொல்ல மாட்டீங்க தானே? நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். ஜஸ்ட் இந்த ரூம்ல ஒரு ஓரமா இருந்துக்குறேன் ப்ளீஸ்" என்று பாவமாய் அவள் கேட்க, தன் தங்கை சூர்யாவின் ஞாபகம் தான் வந்தது.

அவளும் இப்படி தான் ப்ளீஸ் சொல்லியே அவளின் காரியத்தை சாதிப்பாள்.

அவன் இதழுக்கு இடையில் லேசாய் புன்னகை வந்ததோ? அது அவனுக்கு மட்டுமே தெரியும்.

அத்துடன் அவன் நகர்ந்துவிட "ஹப்பா! நல்லவன் தான். வந்த அன்னைக்கே உண்மையை சொல்லி ஊர் சுத்தியிருக்கலாம் போல" தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் கீழே கல்பனாவை பார்க்க சென்றாள்.

அப்போது தான் சுதாகரும் பெங்களூரில் இருந்து வந்தவன் வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.

"என்னாச்சு கல்ப்? ஏன் இப்படி டல்லா இருக்க?" என்று கேட்டுக் கொண்டிருக்க சந்தியாவும் உள்ளே நுழைந்தாள்.

"ஹாய் அக்கா! ஜீவா எங்கே?"

"ஹேய் வாலு! கல்பனாவை என்ன பண்ணின? ரெண்டு நாளுல அவ முகம் ஏன் இப்படி டல்லா மாறிட்டு?" சுதாகர் கிண்டலாய் கேட்க,

"ஹையையோ! லாயர் சார் நான் எதுமே பண்ணல" நிஜமாய் பயந்து கூறினாள் அவள்.

முதல் நாள் யுவா வருவதற்கு முன் கல்பனா வீட்டில் இருந்த அந்த சிறு இடைவெளியில் வாயாடியான சந்தியாவும் வாய் ஓயாமல் பேசும் சுதாகரும் எளிதில் பேசி பழகி இருந்தனர்.

"அப்ப உன் புருஷன் தான் அந்த உம்முனா மூஞ்சி தான் ஏதோ பண்ணியிருக்கான்" சுதாகர் விளையாட்டாய் மட்டுமே சொல்ல திடுக்கிட்டு விழித்தாள் கல்பனா.

அவளை கண்டு கொள்ளாத சந்தியாவும் "புருஷனா?" என்று இழுத்தவள் "ஆமா! ஆமா! புருஉஉஉஷன் தான்"என அதைவிட இழுத்து சொல்லி சிரித்தாள்.

காதல் தொடரும்...
 
Last edited:
Top