அத்தியாயம் 6
"உங்களுக்கு உதவி தேவைப்பட்ட நேரம் நான் உங்ககிட்ட இல்லாமல் போய்ட்டேனே க்கா. அப்படி இருந்த போதும் உங்களை தனியா விட்டுட்டேன்.. என்னை எப்படி உங்களால மன்னிக்க முடிஞ்சது? எனக்கு உங்க வீட்டுக்கு வரவே அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு. எந்த முகத்தை வச்சுட்டு உங்க முகத்துலயும் மாமா முகத்துலயும் முழிக்குறதுன்னு தான் அக்கா வராம இருந்தேன்"
சுதாகர் கோர்ட்டிற்கு சென்றிருந்த நேரம் கல்பனாவிடம் தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தான் ஜீவிதன்.
"விடு ஜீவி. நடந்து முடிஞ்சத பேசி என்னாக போகுது. எனக்கு இதெல்லாம் நடக்கணும்னு இருந்தால் அதை யாரால தான் மாத்திட முடியும்?"
"அம்மா அப்படியே தான் இருக்காங்க.. சிலரை எல்லாம் மாத்தவே முடியாது இல்ல? அம்மாவும் அப்படிதான்" ஜீவி.
"எனக்கு அவங்க எப்படி இருந்தாலும் உனக்கு நல்ல அம்மாவா தானே இருக்காங்க. நீ ஏன் பழசை எல்லாம் நினைக்குற?" கல்பனா.
"ஆனால் உனக்கு எல்லாம் அப்படியே தானேக்கா இருக்கு?"
மனதுக்குள் பலநாளாய் அவள் நினைத்துக் கொண்டிருப்பதை அவன் சொல்லவும் அவளிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே!.
"நீ வேணா என்கூட வந்துடுறியா அக்கா? மாமா... மாமா பாவம்.. உனக்காக அவங்களும் அவங்க அம்மாவை எதிர்த்து இங்கே வந்துட்டாங்க. எவ்வளவு நாள் அவங்களும் இப்படியே இருப்பாங்க.. அவங்களுக்குன்னு ஒரு லைஃப் இருக்குல்ல?"
"சுதா எனக்காக நிறைய தியாகம் பண்ணியிருக்காங்க ஜீவி. அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு. எனக்காக இவ்வளவு பண்ணினவரை நான் எப்படி தனியா விட்டுட்டு வர முடியும்? எல்லாம் கொஞ்ச நாள் தான்....."
"ஆஹான்! அப்புறம்?" என்ற கேள்வியில் கல்பனா, ஜீவிதன் இருவரும் திரும்பி பார்க்க அங்கே சுதாகர்.
"மாமா..."
"மாமா தான்டா. உங்களுக்கு மாமாவா பொறந்ததுக்கு என்னை..." கோபத்தில் அவன் சொல்ல,
"ஆமா மாமா எங்களால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்?" என்று ஜீவிதன் தீவிரமாக சொல்ல, கல்பனாவிற்கு சுதாகர் சொல்வதன் அர்த்தம் புரிந்து ஒரு புன்னகை வந்தது.
"ஏன்டா! ஏன் சொல்றாங்க? எதுக்கு சொல்றாங்கனு யோசிக்கவே மாட்டியா? உங்களுக்குலாம் எங்கிருந்து தான் இவ்வளவு அறிவு வந்ததோ? நீ உன் அக்காவையே மிஞ்சிடுவ! அவளுக்கு நல்லது பண்ணனும் நினச்சா பரவாயில்ல... அதென்ன டா உன்கூட கூட்டிட்டு போறேன்னு சொல்ற? அப்ப நீயும் அவளுக்கு துணையா இப்படியே இருந்துடலாம்னு நினைச்சியா? இதுல மேடம் என்ன சொன்னிங்க? என்னை வாழ வைக்க போறாங்களாம்.. போ போய் நல்ல பொண்ணா பாரு.. என்னை வாழ வைக்குற மூஞ்சிங்கள பாரு" என்றவன் மறந்து சென்ற ஃபைலை எடுத்துக் கொண்டு சென்றுவிட, கல்பனா சிரிப்புடன் நின்றாள்.
"என்னக்கா மாமா இப்படி திட்றாங்க" ஜீவி.
"மாமா எப்பவும் இப்படி தான் ஜீவி. ஏதாச்சும் காமெடி பண்ணிட்டு இருப்பாரு.. நீ ரெடியாகு நான் டிபன் தர்றேன்" இதெல்லாம் சகஜம் என்பதை போல சென்றுவிட்டாள் அவள்.
ஜீவிதன் ஆபீஸ் கிளம்பி சென்ற சில நிமிடங்களில் யுவாவும் கிளம்பி சென்றிருக்க, மெதுவாய் படி இறங்கி வந்தாள் சந்தியா.
"நான் இல்லாத நேரம் அங்கே போனதா கேள்வி பட்டேன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று அவளிடம் யுவா சொல்லிவிட்டு தான் சென்றிருந்தான்.
அவன் சொல்லும் போதே 'தெரியாட்டி போ டா. புது பொண்டாட்டிய மிரட்டுற மாதிரி மிரட்டுற' என்று தான் நினைத்திருந்தாள். இப்போது அவன் பேச்சையும் மீறி கிளம்பிவிட்டாள்.
ஹாலில் ஜீவா அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்க, முதலில் உள்ளே செல்ல தயங்கியவள் பின் 'நான் தப்பு பண்ணினாலே வெட்கப்படமாட்டேன்.. இவன் பண்ணின தப்புக்கு நான் ஏன் தயங்கி நிற்கணும்' என்று எண்ணி உள்ளே சென்று ஜீவாவை தூக்கிக் கொண்டாள்.
"ஹாய் குட்டி!" அவள் சொல்ல, ஜீவாவும் அவளை போலவே "ஹாய் குட்டி" என்றான்.
சத்தம் கேட்டு வெளிவந்த கல்பனாவும் சந்தியாவை பார்த்துவிட்டு பேசாமல் நின்றாள்.
"சாரி க்கா! யுவாக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. கம்ப்யூட்டர் முன்னாடி வேலை பார்த்து கம்ப்யூட்டராவே மாறிட்டான் போல. யுவா என்ன சொல்லி இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். ப்ளீஸ் சாரி க்கா" என்று கெஞ்ச, அவள் சாதாரணமாய் யுவா என்றதே கல்பனாவிற்கு உரிமையாய் அழைப்பதை போலத் தான் தோன்றியது.
ஏற்கனவே கல்பனா சந்தியாவிடம் அதிகம் பேசியது இல்லை என்பதால் இந்த அமைதியே சந்தியாவிற்கு கொஞ்சம் நிம்மதியாய் தான் இருந்தது.
"நான் இனி ஜீவாவை எடுத்துட்டு போக மாட்டேன் க்கா. கொஞ்சம் சிரிங்களேன் இல்லைனா எனக்கு கஷ்டமா இருக்கும்" என்று சொல்ல, கல்பனாவுமே நிம்மதியில் லேசாய் இதழ் விரிக்க,
"தேங்க் யூ! இனி நான் ஜீவா கூட இங்கிருந்தே விளையாடுறேன்" என்று சொல்ல, கல்பனா உதடுகள் மீண்டும் சுருங்கிக் கொண்டது.
இவர்களிடம் இருந்து தள்ளிப் போகும் வழி தெரியாமல் மனதுள் கரைந்துக் கொண்டிருந்தாள்.
ஜீவிதன் ஆபீஸ் உள்ளே நுழைந்து தனது இடத்திற்கு செல்ல, அவனுக்கு முன்பே அவனது குழுவில் உள்ள நால்வரும் வந்திருந்தனர்.
ப்ரியா, மது, ஜீவிதன், அகில், ரமேஷ் இந்த ஐவரும் ஒன்றாய் பணியாற்ற போவதாக முதல் நாளே அறிவிப்பு வந்துவிட, அவர்களின் டிஎல் இன்னும் இரு வாரத்தில் லண்டனில் இருந்து வந்தபின் ப்ராஜெக்ட் பற்றிய விவரம் கூறப்படும் என கூறி இப்போது அடிப்படைகளை தெரிந்து கொள்ளவும் சொல்லியிருந்தனர்.
இந்த ஒரு வாரத்தில் ஐவரிடமும் ஒரு நட்பு தோன்றியிருக்க புன்னகையோடு கையசைத்தான் அவர்களை நோக்கி.
"என்னடா ஒரே பரபரப்பா இருக்கீங்க?" ஜீவி கேட்க,
"அடுத்த வாரம் வர்றதா இருந்த டிஎல் இப்பவே வந்துட்டாராம் டா. ரெண்டு நாளா ஏதோ ஒர்க்ல இருந்தாராம். இன்னைக்கு அவரோட மீட்டிங் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க நமக்கு" என்றான் அகில்.
"அதை ஏன் டா எம்டன் வந்துட்டாராம் ரேஞ்ச்சுக்கு சொல்ற?" மது சிரித்துக் கொண்டே கேட்க,
"அவரை பத்தி விசாரிச்சோம் மது. ஆள் ரொம்ப டெரர்ராம். உம்முன்னு தான் எப்பவும் இருப்பாராம்" என்றான் ரமேஷ்.
"நீயே இங்கே புதுசு. யாருகிட்ட டா கேட்ட?" அகில் கேட்க,
"ரேசெப்ஷன்ல ஒரு பொண்ணு இருக்கே அதை வந்த அன்னைக்கே கரெக்ட் பண்ணியாச்சு. அது சொன்ன டீடெயில்ஸ் தான் இது" ரமேஷ் கண்ணடித்து கூறினான்.
"அதுனால தான் அடிக்கடி வாட்டர் வேணும்னு ரேசெப்ஷன் போறியா? உன்னை எல்லாம்..." ப்ரியா அவன் முதுகில் அடிக்க, அனைவரும் சிரிக்க அந்த நேரம் என்ட்ரி கொடுத்தான் இவர்களின் டிஎல் யுவராஜ்.
கண்களில் கண்ணாடியுடன் இவர்களை கடந்து சென்றவனை பார்த்த ஜீவி அதிர்ந்து நின்றுவிட, அங்கிருந்த இன்னொருவர் வந்து இவர்களிடம் "சார் தான் உங்க டீம் லீடர்" என்று சொல்லிச் சென்றார்.
தன் அறைக்கு வந்த யுவராஜ் கண்ணாடியை கழற்றி ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்தான்.
உள்ளே நுழைந்ததும் கேட்ட சிரிப்பு சத்தத்தில் தற்செயலாய் திரும்பியவனும் ஜீவியை கண்டு கொண்டான்.
அக்காவின் மேல் உள்ள கோபம். அவளே வேண்டாம் என்றான பின் இவனிடம் என்னவென்று பேச எனும் எண்ணம்.
பெரிதாய் பேசி பழக்கம் இல்லை என்றாலும் அவனை நன்கு தெரியுமே! முக்கியமான அந்த நாளில் அவளுக்கு நடந்த திருமணத்தின் சாட்சிக்கு அவள் வீட்டு உறவு என்று இருந்த ஒருவன் இவன் தானே!.
யாருமே... எதுவுமே வேண்டாம் என்று இருக்கும் வாழ்வில் புதிதாய் ஒவ்வொருவராய் மீண்டும் ஏன் வர வேண்டும்? தேவையில்லை. யாரும் எதுவும். நினைத்துக் கொண்டவன் மீட்டிங்கிற்கு தயாரானான்.
இவனிடம் தான் தனக்கு வேலையா? என்று நினைத்த ஜீவியும் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.
கல்பனாவின் வாழ்க்கை கேள்விகுறி ஆனதற்கு அன்னை ஒரு விதத்தில் காரணம் என்றால் மூலக் காரணம் இவன் தானே என்ற திடமான எண்ணம் ஜீவியுடையது.
ஆனால் டெல்லியில் நடந்ததை இவன் முழுதாய் அறியானே! நடந்ததற்கு யார் பொறுப்பு என்பது கல்பனாவை தவிர யாரும் அறியார். ஏன் யுவாவிற்கு கூட தெரியாது என்று தானே கல்பனாவும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
யுவாவின் கோபத்தை அவளும் தானே வேறு கோணத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறாள்! அவளுக்கு அவன் எண்ணம் தெரிய வருமா என்பதும் கேள்விக்குறியே!
மீட்டிங் அறைக்கு அனைவரும் செல்ல அவர்களுக்கு முன்பே வந்திருந்தான் யுவராஜ்.
அவனிடம் ஜீவியை தெரிந்ததற்கான எந்த ஒரு சின்ன அசைவுகளும் இல்லை. அனைவரையும் ஒரே போல தான் பார்த்தான்... பேசினான்... அவர்களின் அனைவரை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டான்.
"ஓகே கைஸ்! ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் என்னோட கைக்கு வந்து ரெண்டு நாள் ஆச்சு. அதை கொஞ்சம் அனலைஸ் பண்ண தான் சின்ன கேப் எடுத்துட்டேன். இன்னைக்கு ஓவர்ஆல் பார்த்துட்டு நாளைக்கு ஒர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்" யுவா சொல்ல, அனைவருமே சரி என கேட்டுக் கொண்டனர்.
அந்த மீட்டிங் அறையில் இருந்து வெளிவரும் போது இறுதியாய் வெளியே சென்ற ஜீவி மட்டும் அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான்.
கேட்டு விடுவோமா? என்பது தான் ஜீவியின் எண்ணம். ஆனால் அதற்கு பின் அக்காவிற்கு ஏதேனும் தொந்தரவு வந்துவிடுமோ என்று நினைத்து அப்படியே வெளியேறிவிட்டான்.
யுவா அதை கண்டு கொண்டவனும் அமைதியாய் தான் பார்திருந்தான். உதட்டில் மட்டும் கசந்த புன்னகை.
"ஏய்! நீ என்ன பண்ற இங்கே?" வந்ததும் சந்தியாவிடம் கத்தினான் சுதாகர்.
"மாமா ஏன் இப்படி சத்தம் போடறீங்க?" கல்பனா.
"நீ பேசாமல் இரு கல்ப். நீ கிளம்பு. இனி இங்கே வர வேண்டாம். ஏற்கனவே என்ன நடந்துச்சுன்னு தெரியாமல் நான் கோபத்துல இருக்கேன். திரும்ப உன்னால அவன் ஏதாச்சும் பிரச்சனை பண்ணினா நானும் சும்மா இருக்க மாட்டேன்" வேண்டும் என்றே சுதாகர் கோபமாக பேசி கல்பனா அறியாமல் சந்தியாவிற்கு கண்ணடிக்க அதிர்ச்சியானாள் அவள்.
கல்பனா சொல்வதாய் இல்லை எனும்போது யாரிடம் கேட்க முடியும். ஒரு வக்கீலாய் இவன் அறிந்த வரையில் யுவாவை பற்றி சந்தியாவிற்கும் தெரியாதோ என்று தான் தோன்றியது.
ஆனாலும் சந்தியாவிடம் தனியாக பேச வேண்டும் என குறித்துக் கொண்டவன் அதை காட்டிக் கொள்ளாமல் இருக்கவே கல்பனாமுன் அவளை இவ்வாறு பேசினான்.
அதேபோல கிடைத்த தனிமையில் சந்தியாவிடம் பேசியவனுக்கு அவன் வேண்டிய விவரமும் கிடைத்தது..
அதில் சந்தியா அறியாதது 'அது கல்பனாவின் கடந்த காலமும் கூட'...
காதல் தொடரும்..