கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2- அத்தியாயம் 20

Aathirai

Active member
அத்தியாயம் 20

அழுதுகொண்டிருந்த, மணிமேகலையையும், தெய்வானையையும் பார்த்து, பதட்டத்துடன் அவர்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள் அஞ்சலி. சில நிமிட அழுகைக்குப் பிறகு, சொல்ல ஆரம்பித்தார் மணிமேகலை.

திருமணமான நாளிலிருந்தே, கதிரேசனுக்கு மனைவியாய் வந்தவள் அவனிடம் சரியாக பேசவோ, நடந்துகொள்ளவோ இல்லை. கேட்டதற்க்கு பதில் சொல்வாளாம். “ஏன் இப்படி இருக்க.? ஏதாவது பேச மாட்டியா.?” என்று கதிரேசன் கேட்டால், உடனே அழுது எதையோ சொல்லி அவன் அடுத்து எதையும் கேட்காமல் பார்த்துக்கொள்வாளாம்.

அதே போல், அவர்களுக்கிடையில் எந்த ஒரு விஷயமும் நடக்காமல், ஒரு வருடமாய் சாமர்த்தியமாக எதை எதையோ சொல்லி தட்டிக் கழித்திருக்கிறாள். அதை இந்தக் கதிரேசனும் நம்பியது தான் முட்டாள்தனம். கூடவே பெரியவர்கள் இருந்திருந்தால் ஏதாவது சொல்லி அறிவுரை வழங்கியிருப்பார்கள். இவர்கள் தான் தனியாக அல்லவா இருந்தனர்.

ஒரு நாள் எப்பொழுதும் போல மில்லுக்குச் சென்றுவிட்டு வரும் போது, வீட்டில் இருந்தவளைக் காணவில்லை. என்னவென்று அவன் பார்த்தபோது, அவளின் கைப்பட எழுதிய கடிதத்தைப் பார்த்து அதிர்ந்தான் கதிரேசன். அவசரமாய் அதைப் பிரித்துப் படித்தவன் அசைவின்றி நின்றான்.

அதில் அவள் எழுதியிருந்ததாவது, “என்னை மன்னிச்சிடுங்க கதிர். உங்கள ஏமாத்தணுங்கறது என்னோட நோக்கமில்ல. ஆனா, வேற வழி தெரியாமத்தான் நான் உங்களைக் கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானேன். எங்க வீட்டுல என்னை ரொம்ப வற்புறுத்தித்தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சாங்க. என்னோட மனசுல வேற ஒருத்தர் இருக்காருன்னு தெரிஞ்சும் என்னைக் கல்யாணத்துக்காக வற்புறுத்துனாங்க. நான் ராஜன்னு ஒருத்தரை விரும்பறேன். நாங்க ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே காதலிக்கிறோம். அவங்க வீட்டுல ஒத்துக்கிட்டு சம்பந்தம் பேச வந்தாங்க. ஆனா, எங்க வீட்டுல உள்ளவங்க சாதி பெயரைச் சொல்லி, அவங்கள அவமானப்படுத்தி வெளிய அனுப்பிட்டாங்க. அதுக்கப்பறம் தான் அவசரமா எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ணி வைச்சாங்க. ஆனா, எனக்கு மனசுல ஒருத்தர வைச்சுட்டு, இன்னொருத்தரோட வாழ விருப்பம் இல்ல. அதனால தான் திரும்பவும் என்னோட காதலரை சந்திச்சுப் பேசினேன். அவரும் என்னை ஏத்துக்க ரெடியாதான் இருந்தார். ஆனா, அவர் வெளிநாட்டுல இருந்ததால என்னை உடனே கூட்டிட்டுப் போக முடியல. இன்னும் ரெண்டு மாசத்துல விசா அப்ளை பண்ணிட்டு வந்து என்னைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டுப் போறேன்னு சொன்னார். அதே மாதிரி ரெண்டு மாசம் கழிச்சு வந்தார். அதனால, நான் அவரோட போறேன். நீங்க என்னைத் தப்பா நினைச்சாலும் பரவாயில்ல. ஆனா, உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கைய அமைச்சுக்கோங்க. உங்கள ஏமாத்துனதுக்கு மன்னிச்சுக்கோங்க.” என்று அவள் எழுதியிருந்ததைப் பார்த்த போது, ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான் கதிரேசன்.

அதன் பிறகு இந்த விஷயம் இரண்டு வீட்டிற்க்கும் தெரிந்து பூதாகரமாக வெடித்தது.

சதாசிவம் பொறுக்க முடியாமல் பேசினார், “ஏய்யா.. உங்களுக்கு ஏமாத்துறதுக்கு என் பையன் தான் கிடைச்சானா.? எவ்வளவு பெரிய ஏமாத்துக்காரங்களா இருந்திருக்கீங்க. அதனால தான் உங்க பொண்ணும் அப்படி இருந்திருக்கா. அநியாயமா என் பையனோட வாழ்க்கையவே கெடுத்திட்டீங்களே..” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

குடும்பமே அவர்களை கரித்துக்கொட்டியது. தப்பு அவர்கள் மேல் தான் என்றாலும், தாங்கள் எந்தத் தப்பும் செய்யவில்லை என்றே அனைவரும் சாதித்தனர். இதற்க்கு மேல் இவர்களிடம் பேசிப் பயனில்லை என்று தெரிந்து கதிரேசனைத் தங்களோடு அழைத்துக்கொண்டு வந்துவிட்டனர்.

சதாசிவம் நெஞ்சு பொறுக்காமல் அழும் போது முருகப்பன் தான் பேசினார். “இப்போ புரியுதா உனக்கு. உன்னோட பேராசையால கதிரோட வாழ்க்கையையே கெடுத்துட்ட. பேசாம அவனுக்கு அஞ்சலியக் கல்யாணம் பண்ணி வைச்சிருந்தா சந்தோஷமா இருந்திருப்பாங்க. உன்னால தான் அவனுக்கு இப்படி ஒரு நிலைமை. இனிமேலாவது கொஞ்சம் திருந்தி மனுஷங்கள மதிக்கக் கத்துக்கோ.” என்றார்.

அதிலிருந்து மிகவும் மனம் நொந்து போய், அடியோடு மாறி விட்டிருந்தார் சதாசிவம். இவையனைத்தும் தன் தங்கை குடும்பத்திற்க்குத் தான் செய்த துரோகம் என்று நினைத்தார் அவர்.

அதே போல் தான் கதிரேசனும் நினைத்தான். அஞ்சலிக்கு தான் செய்த துரோகம் தான் தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியுள்ளது என்றே இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறான்.

அவனுக்கு வேறு ஒரு திருமணம் செய்யலாம் என்பதைப் பற்றி, இவர்கள் யோசித்த போது கதிரேசன் ஒரேயடியாக மறுத்து விட்டான். அதே போல் அஞ்சலியையே கேட்டுப் பார்க்கலாம் என்று கூட தெய்வானை பேசிய போது, மணிமேகலை வேண்டாமென்று மறுத்துவிட்டார்.

அவள் மனதை அவ்வளவு காயப்படுத்தி விட்டு, திரும்பவும் அவளையே கேட்பது நியாயமற்றது என்று சொல்லி மணிமேகலை தடுத்து விட்டார். இந்த தண்டனையை அவன் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று சொன்னார்.

அதன் பிறகு, அஞ்சலி கலெக்டராகி விட்டாள் என்று கேள்விப்பட்ட போது மிகவும் வெட்கமாக இருந்தது சதாசிவத்திற்க்கு. கதிரேசன் அந்த நிமிடம் சதாசிவம் அவளைப் பற்றி அன்று இளிவாய் சொன்னதை நினைவுபடுத்திப் பார்த்தான்.

“அவ என்ன பெரிய கலெக்டரா ஆகப் போறாளா.?” என்று செருக்கில் பேசிய வார்த்தைகள் இன்று உண்மையாகிப் போனது. இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளைப் பார்ப்பது என்று தோன்றியது இருவருக்கும்.

அதே போல், அவளது திருமணத்திற்க்கு அனைவருக்கும் இனியனும், அவனது அப்பா நடராஜனும் அழைப்பு விடுத்திருந்தாலும், அவர்கள் இருவருக்கும் போவதற்க்கு மனம் தடுத்தது. அதனால் தான் போகாமல் இருந்தனர்.

இன்று கூட அவர்கள் இருவரும் தாமதாய் வரக் காரணம், நான்கு வருடங்களாய்ப் போராடி இன்று தான் அவனுக்கு முறையான விவாகரத்தும் கிடைத்துள்ளது.

இதையெல்லாம் கேட்டு முடித்த அஞ்சலி உறைந்து நின்றாள். அவளால் அவள் காதுகளை நம்ப முடியவில்லை. தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், கதிரேசன் சந்தோஷமாக இருப்பான் என்றுதான் இதுவரை நினைத்திருந்தாள். ஆனால், கடவுள் அவன் செய்த தவறுக்கு இப்படி ஒரு தண்டனையை அளித்திருப்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை.

“என்ன அத்தை சொல்றீங்க.? அப்போ கதிர் மாமா சந்தோஷமா இல்லையா.? இப்படி ஒரு அதிர்ச்சிய நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னைக் கல்யாணம் பண்ணிக்கலன்னாலும், அவர் சந்தோஷமா இருப்பாருன்னு தான நினைச்சேன். இப்படி ஒரு நிலைமை கதிர் மாமாவுக்கு வரணுமா.?” என்று உணர்ச்சிவசப்பட்டு அழுதாள் அஞ்சலி.

“விடு, கண்ணு. அவனோட தலைல அதுதான் எழுதியிருக்கு. அதுக்கு நீ என்ன பண்ணுவ.? உன்னைக் கல்யாணம் பண்ணிருந்தா இந்தப் பிரச்சினையே இல்ல. ஆனா, அவன் அப்போ உங்க மாமா பேச்சைக் கேட்டு, சொத்துக்கு ஆசைப்பட்டு உன்னை வேணாம்னு சொல்லிட்டான். அதுக்கு நீ என்ன பண்ண முடியும்.? உன் நல்ல மனசுக்குத்தான் இனியன் தம்பி மாதிரி ஒரு பையன கடவுள் உனக்குக் கொடுத்திருக்கார். நீ இதை நினைச்சு தேவையில்லாம அழாத. தம்பி பார்த்தா என்ன நினைக்கும்.?” என்று சொல்லி அவளைத் தேற்ற முயன்றார் தெய்வானை.

“ஆமா, அஞ்சலி மா. அவனுக்கு இந்த தண்டனை தேவைதான். உண்மையான மனசு உள்ளவங்க மனச நோகடிச்சா இப்படித்தான் கடவுள் தண்டனை கொடுப்பார். அதை உங்க மாமாவும் புரிஞ்சுக்கிட்டார். கதிரும் புரிஞ்சுக்கிட்டான். அவங்களுக்கு உன்னைப் பார்க்க தர்மசங்கடமா இருந்ததால தான் உன்னோட கல்யாணத்துக்கு வராம இருந்தாங்க. அதுக்கு என்ன பண்ண முடியும்.? நீ தயவுசெய்து இதை நினைச்சு மனசப் போட்டு குழப்பிக்காத. நீ சந்தோஷமா இருக்கறதப் பார்த்து தான் நாங்க இங்க நிம்மதியா இருக்கோம். அதை தெரிஞ்சுக்கிட்டு எப்பவும் போல இரு.” என்றார் மணிமேகலை.

“ம்ம்ம்.. சரி அத்தை. ஆனா, கதிர் மாமாக்கு வேற கல்யாணம் பண்றதப் பத்தி யோசிக்கலையா.?” என்றாள் அஞ்சலி.

“ஹூம்ம். ஏன் இல்ல. நாங்க கேட்காத நாளே இல்ல. ஆனா, அவன் ஒரே பிடியா வேண்டவே வேண்டாம்னு இருக்கும் போது, நாங்க என்ன செய்ய முடியும்.? விடு அதுக்குன்னு ஒரு நேரம் வந்தா எல்லாமே தானா அமையும்.” என்றார் மணிமேகலை.

“சரி, நீ போ கண்ணு. உள்ள வந்து ரொம்ப நேரம் ஆச்சு. தம்பியும் எவ்வளவு நேரம் தாத்தா கூடவே பேசிக்கிட்டு இருப்பாரு.? இந்தா இந்த வடையும், பாயாசமும் கொண்டு போய்க் கொடு.” என்று தட்டை நீட்டினார் தெய்வானை.

தலையாட்டியவள் அதை வாங்கிக் கொண்டு போனாள். அவர்கள் சொன்னதைப் போலல்லாமல் இனியனோ, தாத்தாவிடம் மிக சுவாரஸ்யமாக உரையாடிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தான். அதைப் பார்க்கவே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

அதுவரை மனதில் இருந்த கவலையெல்லாம் எங்கு காணாமல் போயின என்று தெரியவில்லை. அவர்கள் பேச்சை ரசித்தபடியே, அவர்களுக்கு வடையும், பாயாசமும் கொண்டு வந்து வைத்தாள்.

அதை எடுத்தவன், கண நேரத்தில் தாத்தா பார்க்காத போது அவளைப் பார்த்து கண்ணடித்தான். அவளோ, அதைப் பார்த்து தனது விழியை அகல விரித்து கண்களாலேயே “சும்மா இரு.” என்று சொன்னாள்.

அனைத்தும் தயாராக இருக்க, “வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்.” என்று ஒரு சொம்பில் நீருடன் இனியனை மரியாதையாக அழைத்தார் மணிமேகலை.

“எதுக்கு மா இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம். நான் உங்களுக்கு மாப்பிள்ளை இல்ல, உங்களுக்குப் பையன் முறை வேணும். நீங்க என்னை பேர் சொல்லிகூட கூப்பிடலாம்.” என்று அவன் மிக எளிமையாகப் பேச,

“இல்ல, பரவால்ல இருக்கட்டும் தம்பி.” என்று மணிமேகலை கொஞ்சம் வெட்கப்பட்டார்.

அதைப் பார்த்த இனியன், “அம்மா, நீங்க வெட்கப்பட்டா அந்த காலத்து ஹீரோயின் மாதிரி இருக்கீங்க.” என்று சொல்லி சிரிக்க,

மணிமேகலைக்கு இன்னும் வெட்கமாக இருந்தது. “அடப் போங்க தம்பி, நீங்க வேற..” என்றார்.

அவன் இப்படி அவர்களுடன் மிக எளிமையாகவும், உற்சாகமாகவும் பழகுவதையும், பேசுவதையும் பார்க்க ஆன்ந்தத்தில் மிதந்தாள் அஞ்சலி.

அவர்களை சாப்பிட உட்காரச் சொன்னார்கள். அப்போது அஞ்சலி, “அத்தை, இருங்க மாமாவும் வந்திடட்டும். நாங்க அதுக்கப்பறம் சாப்பிடறோம்.” என்றாள்.

“இல்ல, அஞ்சலி மா. அவர் வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும்னு தான் சொன்னார். நீங்க மொதல்ல சாப்பிடுங்க.” என்று அவர்களை உட்காரச் சொல்லி ஒவ்வொன்றாக பரிமாற ஆரம்பித்தார் மணிமேகலை. அவர்களுடன் முருகப்பனும் சேர்ந்து சாப்பிட்டார்.

சாப்பிட்டு முடித்ததும், இனியனுக்கென்று ஸ்பெஷலாய் வாங்கி வைத்த பீடாவை மணிமேகலை அஞ்சலியிடம் கொடுத்து இனியனுக்கு தரச் சொன்னார்.

அதற்க்குள் இனியன் ஏதோ முக்கியமான விஷயமாய் வீட்டிற்க்கு வெளியே போர்ட்டிகோவில் நின்று போனில் பேசிக்கொண்டிருந்தான்.

அஞ்சலி அவனைத் தேடி வெளியே வந்தபடி, கையில் வைத்திருந்த பீடாவை நீட்டினாள். அவன் பேசிக்கொண்டே அதை வாங்க மறுத்தவாறு அவளிடம் விளையாடினான்.

“கையில் வாங்க மாட்டேன், வாயில் ஊட்டி விடு..” என்று சைகையில் சொன்னபடியே போன் பேசிக்கொண்டிருந்தான்.

“ஹூம்ம்.. உனக்கு இருக்கு லொள்ளு..” என்று இவளும், சைகையில் அவனை குத்துவது போல் பாவனை செய்துவிட்டு அவன் வாயில் திணிக்கப் போக, அவனோ அவள் விரலை லேசாகக் கடித்தான்.

“ஸ்ஸ்ஸ்... ஆஆஆ.. வேணும்னே பண்றியா.?” என்றபடி அவனைச் செல்லமாக அடிக்கப் போக, அவனோ குனிந்தவாறு அவள் கையைப் பிடித்தான்.

அவள் கையை விடும்படி கெஞ்ச, அதன் பிறகுதான் விட்டான் இனியன். இவர்களின் விளையாட்டை அப்போதுதான் வாசலில் நுழைந்த கதிரேசன் பார்த்தபடி நின்றிருந்தான். சட்டென திரும்பிய வேகத்தில் எதேச்சையாக அவனைப் பார்த்து அதிர்ந்து நின்றாள் அஞ்சலி.

(தொடரும்...)
 
Last edited:
Top