கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 6

Aathirai

Active member
அத்தியாயம் 6

ஒரு வழியாக நடராஜன் தனது மனைவி திலகாவை இனியன் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்தார். மனதே இல்லாமல் சம்மதித்தார் திலகா. எப்படியோ இந்தத் திருமணம் நடந்தால் போதும் என்று இருந்தது இனியனுக்கு.

இந்த விஷயத்தை முதலில் அஞ்சலியிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தான் இனியன். போனில் சொன்னால் அவளின் பாவனைகளை ரசிக்க முடியாது என்று எண்ணி, அவளை நேரில் சந்திக்க முடிவு செய்தான். ஆனால், அவனுடைய நேரம் அவனால் சிறிது நேரம் கூட அவளுக்காக ஒதுக்க முடியவில்லை. அதனால், பணி நேரத்திலேயே அவளை நேரில் சந்திக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

கமிஷனர் அவனை அழைப்பதாக கான்ஸ்டபிள் வந்து சொன்னார். உள்ளே சென்றவன், “மே ஐ கம் இன் சார்.?” என்று கேட்க, “யெஸ்.” என்று கமிஷனர் வேதாச்சலம் அவனை அழைத்தார்.

“சார். ஏதோ முக்கியமான விஷயமா கூப்பிட்டிங்கன்னு சொன்னாங்க.” என்று இனியன் சொல்ல.

“ஆமா, இனியன். நீங்க ஒரு ஃபேவர் பண்ணனும். சப் கலெக்டர் அஞ்சலி தேவிய நீங்க மீட் பண்ணனும். அவங்க சம் டீட்டைல்ஸ் நம்ம டிபார்ட்மெண்ட்கிட்ட கேட்டிருக்காங்க. இந்த கேஸ் டீடெய்ல்ஸ் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால தான், நான் உங்களப் போகச் சொல்றேன்.” என்று அவர் சொல்ல, இனியனின் இதயம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததென்று சொல்வார்கள். அதுபோல், அஞ்சலியை எப்படி சந்திப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், இவர் அவளைச் சந்திக்க ஒரு ஏற்பாடு செய்து கொடுத்ததைப் போல் இருந்தது. சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தவனை கமிஷனர் தட்டினார்.

“இனியன்.. இனியன்.. என்னாச்சு.? ஏதாவது பிராப்ளமா.? எதுவும் சொல்லாம ஏதோ யோசனைல இருக்கீங்க. சப்போஸ் உங்களால முடியாதுன்னா சொல்லுங்க, நான் வேற யாரையாவது அனுப்ப முடியுமான்னு பார்க்கறேன்.” என்றார்.

“சார்.. இல்ல, இல்ல. கண்டிப்பா நான் போறேன் சார். இத விட முக்கியமான வேலை எனக்கு இல்ல. இதோ இப்போவே கிளம்பறேன் சார்.” என்று அவன் உற்சாகத்தில் அவர் கொடுத்த ஃபைலோடு ஜீப்பில் பறந்தான்.

கலெக்டர் அலுவலகம் அந்த மதிய வேளையில் கூட மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. இதுவே முதன் முறை அவன் இங்கே வருவது. அதுவும் அஞ்சலியை அவளின் ஆட்சியர் தோற்றத்தை முதன் முறை காணப் போகிறான். அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு உருவானது. அனைத்தையும் மனதில் அடக்கிக் கொண்டு அவள் இருக்கும் அறையை அலுவலகத்தில் கேட்டு அங்கே சென்றான்.

உள்ளே அவள் எவருடனோ பேசிக்கொண்டிருந்தாள். சிறிது நேர காத்திருப்புக்குப் பிறகு உள்ளே இருந்தவர்கள் வெளியே வர, அவன் உள்ளே சென்றான். சென்றவர்கள் அவளை ஜாடையாய் திட்டிக்கொண்டே செல்வதைப் பார்த்தான்.

உள்ளே தலையில் கையை வைத்தபடி அமர்ந்திருந்தாள் அஞ்சலி. அவன் வெளியே நின்றபடி, “எக்ஸ்கியூஸ் மி மேம். மே ஐ கம் இன்.?” என்று கதவைத் தட்டிக்கொண்டு நிற்க, தனக்குப் பழக்கமான குரல் ஒன்று கேட்பதை நினைத்து நிமிர்ந்தவள் ஆச்சர்யப்பட்டாள். அங்கே இனியன், அழகான புன்னகை ஒன்றை உதிர்த்தபடி நின்றிருந்தான்.

“இவன் எப்படி இங்கே.?” என்று குழம்பியவள், “யெஸ் கம் இன்.” என்றாள்.

அவன், அவளையே விழுங்கும்படி பார்த்தவாறு வந்தான். அவன் அப்படிப் பார்க்கும் போது, அவளுக்கு அன்று அவன் முத்தம் தந்தது தான் ஞாபகம் வந்தது. வந்தவன், அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தவாறு, “ஹலோ மேம். ஐ ஆம் இனியன், அஸிஸ்டண்ட் கமிஷனர்.” என்று கையை அவளிடம் நீட்ட, வேண்டுமென்றே செய்கிறான் என்று நினைத்தவாறு, “ஹலோ” என்று கையைக் குலுக்க, அவனோ அவள் கையை வேண்டுமென்றே சுரண்டிவிட்டு விடுவித்தான்.

“சொல்லுங்க சார். என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க.?” என்று அவளும் வேண்டுமென்றே கேட்க,

அதைப் புரிந்தவன், “இல்ல மேடம் உங்களுக்கு அன்னைக்கு குடுத்த முத்தம் ஞாபகம் இருக்கா, இல்லையான்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்.” என்றான் கண்ணடித்துக்கொண்டே.

இவன் இதைக் கேட்பான் என்று எதிர்பாராதவள், “அஃபிஸியலா ஏதாவது பேசணும்னா பேசுங்க. இல்ல பெர்ஸனல் விஷயம்னா வீட்டுக்கு வந்து பேசுங்க.” என்றாள்.

“ஓ.. ஆமா, இது கலெக்டர் ஆஃபீஸ்னு மறந்துட்டேன் மேடம். சிசிடிவி கேமரா இருக்குன்னு நீங்க இவ்ளோ பயப்படக் கூடாது. கவலைப்படாதீங்க, அன்னைக்கு மாதிரி திடீர்னு இழுத்துப் புடிச்சு முத்தமெல்லாம் தர மாட்டேன். எதுவா இருந்தாலும் அது வீட்ல தான்.” என்று மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.

கடுப்பானவள், “உங்களுக்கு இப்போ என்னதான் வேணும் சார்.?” என்று கேட்க,

“நீங்க தான் மேடம் வேணும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களா.?” என்று திரும்பவும் வம்பிழுத்துக்கொண்டிருந்தான்.

“ஓ.. தாராளமா சார்.. ஆனா, அதுக்கு உங்க வீட்ல சம்மதம் சொல்லணுமே. என்ன ஆச்சுன்னு கேட்டாலும் திட்டறீங்க. அப்பறம் நான் மட்டும் என்ன பண்றது சார்.?”

“இல்ல மேடம். இப்போ எல்லா ரூட்டும் கிளியர் ஆயிடுச்சு. இனிமேல் எந்த பிராப்ளமும் இல்ல. என்னோட அம்மா உங்களக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டாங்க.” என்று அவன் சொன்னதும், அவள் ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

“லெட்ஸ் பீ சீரியஸ் இனி. போதும், நிஜமாலுமே நீ சொல்றது நிஜமா. இல்ல, வீணா என்னை வம்பிழுக்கணும்னு பேசிட்டிருக்கியா.?” என்று அவள் கேட்டாள்.

சிரித்தவன், “ஆமா, அஞ்சலி. நான் நிஜமாத்தான் சொல்றேன். அம்மா, ஓகே சொல்லிட்டாங்க. இனிமேல் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. அதை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு யோசிச்சுட்டிருந்தேன். நல்ல வேளையா கமிஷனர் உன்னப் பார்க்கறதுக்கு ஒரு சந்தர்ப்பத்த அவரே ஏற்படுத்திக் குடுத்துட்டார். அதான்.” என்று இனியன் சொல்ல, எதையோ யோசித்தவள்.

“ஏன், இத போன்ல கூட சொல்லலாமே.” என்றாள்.

“ப்ச்ச்.. ஏய்.. போன்ல சொன்னா, உன்னோட சந்தோஷத்த எப்படி நான் நேர்ல பார்க்க முடியும்.? அதனால தான் நேர்ல சொல்லணும்னு இருந்தேன். ஆனா, உன் கிட்ட ஒரு ரியாக்ஷனுமே இல்லையே. இதுக்கு தான் நான் கஷ்டப்பட்டு உன்னைப் பார்க்க வந்தேனா.?” என்று சலித்துக்கொண்டான்.

“என்னைத் தப்பா நினைக்காத இனி. நிஜமாலுமே நீ அன்னைக்கு கோபப்பட்டதுக்கு அப்பறம், இந்த விஷயமா எதுவுமே பேசக் கூடாதுன்னு இருந்தேன். ஏன், நமக்கு கல்யாணம் நடக்குமா, இல்லையான்னு கூட எனக்கு டவுட் வந்துடுச்சு. சரி, அப்படி ஒரு விஷயம் நடக்கலன்னா, கடைசி வரைக்கும் உன்னோட நினைப்புலயே வாழ்ந்துட்டு போயிடலாம்னு ஒரு எண்ணம் வந்துடுச்சு. அதனால தான், நீ இதை சொன்னதும் அதை நம்பலாமா, வேண்டாமான்னு கூட யோசிக்கத் தோணுது.” என்றாள்.

“அஞ்சலி.. நீ ஏன் இப்படியெல்லாம் பேசற.? என்னைப் பத்தி என்ன நினைச்ச.? அன்னைக்கு நான் கோபப்பட்டேன்னா, அது எங்கம்மா எதுவுமே பேசாம, ஏதோ ஒரு சாக்கு சொல்லி என்ன அவாய்ட் பண்ணிட்டிருந்தாங்க. நீ கேட்டதும், எனக்கு அந்த ஞாபகம் வந்துடுச்சு. அந்தக் கோபத்த நான் உன்மேல காட்டிட்டேன். மத்தபடி நான் எப்படி உன்னை விட்ருவேன்னு நினைச்ச.? அதுக்குத்தான் நான் இவ்ளோ வருஷமா காத்திட்டிருந்தேனா.? என் மேல நம்பிக்கையே இல்ல உனக்கு. என்ன அவ்வளவு கேவலமா எடை போட்டுட்ட இல்ல.?” என்று சற்று எரிந்து விழுந்தான்.

“எவ்வளவு ஆசையா இந்த விஷயத்த உன்கிட்ட சொல்லணும்னு ஓடி வந்தேன் தெரியுமா.? என்னை சொல்லணும். எனக்கு இதெல்லாம் தேவை தான்.” என்று தன்னைத் தானே நொந்துகொண்டான் இனியன்.

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.” என்று சொல்ல வரும் போது, அவளது அறைக் கதவைத் திறந்து கொண்டு அவளது பி.ஏ வந்தார்.

உடனே சுதாரித்தவள், “ஒரு நிமிஷம் சேகர்.” என்று அவள் பி.ஏவை காத்திருக்கச் சொல்லிவிட்டு, “சொல்லுங்க மிஸ்டர்.இனியன் என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க.?” என்று அப்படியே சமாளித்தாள்.

அவனும் அதைப் புரிந்து கொண்டு, “நீங்க சம் டீடெய்ல்ஸ் எங்க டிபார்ட்மெண்ட் கிட்ட கேட்டதா, கமிஷனர் சார் என்கிட்ட சொன்னார். அது விஷயமா தான் உங்களப் பார்க்க வந்தேன்.” என்றபடி அவன் அவளிடம் அந்த ஃபைலை நீட்ட, அவளும் வாங்கி அதை ஆராய்ந்தாள்.

“ஆங்க்.. மேடம் நீங்க கேட்டிருந்த டீடெய்ல்ஸ் அல்ரெடி குடுத்துவிட்டுட்டாங்கன்னு போலீஸ் ஆஃபீஸ்ல சொன்னாங்க.” என்றார் அவளின் பி.ஏ.

“ஆங்.. இதோ இவர் அஸிஸ்டண்ட் கமிஷனர் இனியன். அந்த விஷயமா தான் வந்திருக்கார். நான் இதோ ஃபைல் பாத்துட்டு சொல்றேன். நீங்க வெளில வெயிட் பண்ணுங்க.” என்று அவரிடம் சொல்ல, அவர் அங்கிருந்து சென்றார்.

“ஓகே இனியன். ரொம்ப தேங்க்ஸ். இவ்ளோ தூரம் எனக்காக வந்து இந்த டீடெய்ல்ஸ்ஸ குடுத்ததுக்கு.” என்றாள்.

இனியன் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அதைப் புரிந்தவள், “இனி, இப்போ எதுவும் இங்க பேச வேண்டாம். நைட் நீ என் வீட்டுக்கு வா. அப்போ பேசலாம்.” என்றாள்.

வேறு எதுவும் சொல்லத் தோன்றாதவன், “ஓகே மேடம். தேங்க் யூ..” என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.

இரவு 9 மணி. இனியன் இன்னும் கிளம்பவில்லை. அவளின் மேல் உள்ள கோபம் குறையவில்லை. அவள் வரச் சொன்னாலும், தான் அவசியம் போக வேண்டுமா என்று நினைத்தான். என்ன பெரிதாக சொல்லிவிடப் போகிறாள். மிஞ்சி மிஞ்சிப் போனாள் அழுவாள். அவ்வளவுதான். அதைப் போய் பார்க்க வேண்டுமா என்றிருந்தது. இருந்தாலும், வரச் சொன்னாளே. சதா அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவன், மனது கேளாமல் தன் வண்டியைக் கிளப்பினான்.

அஞ்சலியின் வீடு. அவன் சென்ற போது கதவு தாளிட்டிருந்தது. ஒருவேளை தான் வர மாட்டேன் என்று நினைத்து தாளிட்டு உறங்கிவிட்டாளோ.? என்று நினைத்த போது இன்னும் கோபம் அதிகமானது. அந்தக் கோபத்தில் கதவுக்கு அருகே இருந்த காலிங் பெல்லை அழுத்தியவன், திரும்பவும் வேண்டுமென்றே பலமுறை அழுத்திக்கொண்டே இருந்தான்.

சிறிது நேரம் கழித்து வந்து கதவைத் திறந்தாள் அஞ்சலி. திறந்தவளைப் பார்த்தவன் அப்படியே கிறங்கிப் போனான். வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அழகு மயிலாய் அலங்காரத்தில் மின்னினாள் அஞ்சலி. அது, அவனுக்கென்று அவள் செய்து கொண்ட ஒப்பனை. அவள் அணிந்திருந்த சிந்தடிக் புடவை அவள் அழகை மேலும் மெருகேற்றிக் காட்டியது. அந்த இடத்தில் யார் இருந்தாலும், அவள் அழகுக்கு அடிமையாகத் தான் வேண்டும். அப்படி இருந்தாள்.

“உள்ள வா இனி.” என்று அவள் சொன்னதும் தான், ஒருவாறாக சமாளித்தவன் மீண்டும் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டே உள்ளே வந்தான்.

அவன் உள்ளே வந்ததும் கதவைச் சாத்தியவள், அவன் எதிர்பாரத நேரம் ஓடி வந்து, அவனைப் பின்னாலிருந்து கட்டியணைத்துக் கொண்டாள் அஞ்சலி. அது, இனியனுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அஞ்சலியா தன்னை அணைத்துக் கொண்டிருக்கிறாள். இல்லை அவள் உருவத்தில் தன்னை மயக்கும் வேறொருத்தியா என்று சந்தேகம் வந்தது அவனுக்கு. அவள் பற்றியிருந்த கைகளை விடுவித்து முன்னால் அவளை இழுத்தவன்,

“அஞ்சலி நடக்கறது கனவா.? இல்ல நிஜமா.? என்னால சத்தியமா நம்ப முடியல. நீ தான் இதெல்லாம் பண்றியா.?” என்று அவன் நம்பமுடியாமல் கேட்க, அவளோ வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க, திரும்பவும் அவனை அணைத்துக்கொண்டாள்.

அப்போதுவரை அவள் மேல் உள்ள கோபம் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை அவனுக்கு. “அஞ்சலி, என்னாச்சு உனக்கு.? ஏதாவது ஆயிடுச்சா என்ன.? எப்பவும் நான் உன்ன உரசினாலே அவ்ளோ பிகு பண்ணுவ. இப்போ என்னடான்னா, பின்னாடி இருந்து கட்டிப்புடிக்கற, முன்னாடியும் கட்டிப்புடிக்கற. என்ன விஷயம்.?” என்றான் இன்னும் நம்பாமல்.

“நீ தான சொன்ன, என்னோட சந்தோஷத்த நேர்ல பார்க்கணும்னு ஆசைப்பட்ட, அது நடக்கவே இல்லன்னு ரொம்ப ஃபீல் பண்ண தானே. என்னோட சந்தோஷத்த நீ பார்க்க வேண்டாமா.? அதுக்கு தான் உன்னை இங்க வரச் சொன்னேன்.” என்றாள் அஞ்சலி இன்னும் அவனை இறுக அணைத்தவாறே.

“ஓ.. ஓ.. அப்படியா. பரவால்ல. நான் கோபப்பட்டதுக்கான பலன் இப்போ கிடைச்சிடுச்சு. இப்படி ஒரு விஷயம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா, நான் இன்னும் கோபப்படலாம் போலவே.” என்றவனின் தொண்டையை வேண்டுமென்றே பிடித்துக்கொண்டு, “ஏய்.. அப்படியெல்லாம் பண்ணனும்னு நினைச்ச, உன்னைக் கொன்னுடுவேன்.” என்று செல்லமாக மிரட்டினாள்.

“சரி, சரி. விடு.. இனிமேல் என்னைக்கும் தேவையில்லாம என்னைப் பத்தி தப்பா நினைக்காத. நீ அப்படிப் பேசும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா.? உன்னை ஏமாத்திட்டுப் போகவா இவ்வளவு வருஷம் வெயிட் பண்ணேன். எவ்வளவு ஈஸியா சொல்லிட்ட.” என்று அவன் மிகவும் வருத்தத்துடன் சொல்ல, அஞ்சலிக்கு ஏன் அப்படிப் பேசினோம் என்றிருந்தது.

“ஓகே இனி. நான் அப்படிப் பேசினது தப்புதான். இனிமேல் அப்படிப் பேச மாட்டேன். நினைக்கவும் மாட்டேன். சரியா.?” என்று குனிந்து கொண்டு அவனைப் பார்க்க, அந்த கெஞ்சும் முகம் பார்த்தவன் இப்போது அவளை ஆசை தீர அணைத்துக் கொண்டான்.

(தொடரும்...)
 
Top