கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆனந்த யாழை மீட்டுகிறாள் 6

ஆனந்த பாகம் 6
குணா வீட்டிற்குச் சென்றான்..... அவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.... மரகதமும், வேலாயுதமும் குணா வீட்டிற்கு வந்ததும், நிர்மலாவின் கல்யாண விஷயங்களைக் கூறினார்கள்....
அவனும் அக்காவை எங்கே?என்று கேட்டான்....அவள் பள்ளியில் இருக்கிறாள்....
"சரிப்பா,நான் போய் பார்த்துக் கொள்கிறேன்.... என்று கூறி கிளம்பினான்...
நிர்மலாவும் பள்ளியில் போன் பேசிக் கொண்டிருந்தாள்....
குணாவைப் பார்த்ததும், டேய் எப்போது வந்தாய், இப்போது தான் வந்தேன்.... இந்தா, சரவணன் மாமா உன்னிடம் பேசனும்மா,.... என்று குணாவிடம் கொடுத்தாள்... அவனும்பேசினான்...
பிறகு நிர்மலாவைக் கூப்பிட்டார்கள்.... அவளும் சென்றாள்.... அங்கே போன் அடித்துக் கொண்டிருந்தது.....
அதில் தலைமையாசிரியர் பேசினார்....
என்னம்மா!.... பள்ளிக்கூடம் எப்படி இருக்கிறது.... நல்லா இருக்கிறது...
ரொம்ப நல்லாவும் போய் கொண்டிருக்கிறது..... சார்.... நீங்கள் இல்லையே என்கிற ஒரு குறை மட்டும் தான்.... மற்றபடி எல்லாம் நன்றாக போகுது.... என்றாள் நிர்மலா.....
சரிம்மா!.... நான் இன்னும் வருகிறதுக்கு மூன்று நாட்கள் ஆகும்.... உன்னுடைய கல்யாணம் எப்போது?... என்னுடைய கல்யாணத்தை அடுத்த மாசம் வச்சுட்டாங்க,.. அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை.. நீங்க பொறுமையாக வேலையை முடித்து விட்டு வாருங்கள், என்றாள்....
...அவரும் சரி என்று கூறி போனை வைத்து விட்டார்.... இவளும் பேசிவிட்டு வெளியே சென்றாள்.... குணா வெளியே உட்கார்ந்து இருந்தான்....
என்னடா!... மாமாகிட்ட பேசிட்டியா?... என்று கேட்டாள்....
ம்ம்ம்.... பேசிவிட்டேன்..... சரி தம்பி கல்லூரி எப்படி போச்சு, exam எல்லாம் நன்றாக எழுதினாயா?...
நல்லா எழுதினேன்....
" என்னடா எதுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறாய்?.... '
அக்கா ராகிணியிடம் பேசினாயா?... என்று கேட்டான் குணா.....
அவளும் பேச வில்லை என்று கூறினாள்....
ஏன் அக்கா?.. உன்னை நம்பி தானே இருந்தேன்,... நீ என்னோட காதலை சேர்த்து வைப்பேன் என்று கூறினாய்?...முதலில் கடமையை நிறைவேற்று நானே அவளிடம் பேசுகிறேன் என்றாய்?....
டேய், தம்பி அவள் உனக்கு பொருத்தமானவள் இல்லை, அதை புரிந்துக்கொள் !....
இல்லை.,நான் உன் பேச்சைக் கேட்க மாட்டேன், நீ எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்ட இனிமேல் நான் உன்னுடைய முகத்தை கூட பார்க்க மாட்டேன்.....
என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்...
"பிறகு நிர்மலா அவனிடம் மெதுவாக சொல்லி தான் புரிய வைக்கனும்.'.... என்று நினைத்து கொண்டாள்.....
கோபத்துடன் சென்று கொண்டிருந்த குணா நேராக அவனுடைய நண்பர்களை சந்திக்கச் சென்றான்..... அவன் நண்பர்கள் அனைவரும் அவனை வரவேற்றனர்.... ஆனால் இவனோ அதை கண்டுகொள்ளாமல் சரக்கு அடித்தான்...
டேய்,. என்னடா, என்னாச்சு எதுக்காக இப்படி குடிக்கிறாய்....
எனக்கு எங்க அக்காவே துரோகம் பண்ணிட்டாங்க,
எங்க அக்கா என்னை முதலில் நன்றாக படித்து முடித்து விட்டு வா, , அதுக்குள்ளேயும் நான் ராகிணிகிட்ட போய் உன்னுடைய காதலை எடுத்து சொல்கிறேன்.. என்று கூறினாள்...
ஆனால் இப்போது அவள் உனக்கு பொருத்தமானவள் இல்லை என்று கூறுகின்றாள் ....
இனிமேல் நான் எங்க வீட்டுக்குப் போக மாட்டேன்.... எங்க அக்கா முகத்திலே முழிக்க மாட்டேன் என்றான் குணா,
உடனே அவன் நண்பன் ஜானி, நீ நினைக்கிற மாதிரி உங்க அக்கா உனக்கு துரோகம் பண்ணவில்லை..... உனக்கு நல்லது தான் பண்ணிருக்காங்க! நீ படிக்க கல்லூரிக்குச் சென்று விட்டாய்... நீ ஆசைப்பட்ட என்கிற ஒரே காரணத்துக்காக உங்க அக்கா அவளை தேடி அலைந்தார்கள்...
முதலில் உங்க அக்கா ராகிணியைப் பற்றி விசாரிக்கச் சொன்னார்கள்....
நாங்களும் விசாரித்தோம்... அவள் இருக்கிற வீடு,அவள் படிக்கிற கல்லூரி எல்லாத்தையும் விசாரித்தோம்....
ராகிணியைச் சந்திக்க முடிவு செய்தாள்... அப்போது கல்லூரியை விட்டு வரும் போது ராகிணியைப் பார்த்து பேசினார்கள்... .
"அதற்கு ராகிணி சாயங்காலம் பூங்காவிற்கு வாங்க அங்க பேசுவோம் என்றாள்..
உங்க அக்கா நிர்மலாவும், நானும் சென்றோம்.....
அப்போது ராகிணி உட்கார்ந்து இருந்தாள்....
" என்ன விஷயம் பேசனும் ,சீக்கிரம் பேசுங்கள், எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று திமிராக பேசினாள்....
ஏம்மா! உனக்கு குணாவை நினைவில் இருக்கிறதா!?என்று கேட்டாள் நிர்மலா...
யாரு? அந்த குணா, என்று கேட்டாள் ராகிணி....
உன்கூட 12ஆம் வகுப்பு படித்தானே! கடைசி நேரத்தில் உன்னை காதலிக்கிறேன் என்று கூறினான்..... நினைவில் இருக்கா!...
ஓ!....அந்த அழுக்கு சட்டையா!.... என்னவாம் அவனுக்கு, அவன் பெயரு கூட... குணா சொல்லுங்க...
நான் அவனோட அக்கா அவன் இப்ப வரைக்கும் உன்னை தான் காதலிக்கிறான்.... நீ அவனை காதலிக்கிறாயா?... என்று கேட்டாள் நிர்மலா...
அவனுக்கு வேற பொண்ணு கிடைக்கலையா!, ..
அவன் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறான்.... உன்னை மறக்கவும் முடியாமல் உன்னையே நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் ...
ஆனால் நான் அவனை காதலிக்கவில்லையே?.. அது படிக்கும் போது நான் சும்மா ஒரு பொழுதுபோக்கிற்காக தான் பேசினேன்.... பழகினேன்... அதை அந்த லூசு பையன் காதலாக நினைத்தாள்.. அதற்கு நான் பொறுப்பா!.. என்றாள் ராகிணி....
ஏம்மா! நீ பொழுதுபோக்காக பழகினா, வேற யாரிடமாவது பழகவேண்டியது தானே.... என்னோட தம்பி தான் உனக்கு கிடைச்சானா?.... என்று கோபமாக பேசினாள்.. அவன் உன்கிட்ட உண்மையாக பழகினான் அதை புரிந்து கொள்ளாமல் நீ இப்படி பேசிறீயே!..
ஹலோ, என்ன இங்க வந்து கோபப்படுறீங்க!.. என் பின்னால் சுத்தி சுத்தி வந்தானே! உங்க தம்பி குணா அவங்கிட்ட போய் சொல்லுங்க,
பேச வந்துட்டாங்க பாரு வெட்கமே இல்லாமா, அவன் தம்பிக்கு அக்கா, மாமா வேலை பார்க்கிறது கேவலமாக இல்ல, இதற்கு செத்துப் போகலாம்.... அவங்க தம்பியை சத்தம் போடுறத விட்டுட்டு என்னை வந்து சத்தம் போடுறாங்க? என்று திமிராக பேசி விட்டு கிளம்பி விட்டாள் ராகிணி...அந்த பூங்காவில்உள்ள அனைவரும் வேடிக்கை பார்த்தனர்....
ராகிணி பேசிய வார்த்தைகளைக் கேட்டு மிகவும் வேதனைப்பட்டாள்..ஜானி.... தம்பி .. இந்த விஷயத்தைத் தம்பியிடம் சொன்னால் அவன் படிக்காமல் வந்துவிடுவான்.... அவன் நல்லா படித்து நல்ல ஒரு வேலைக்குப் போகணும் அது தான் அப்பா, அம்மாவின் ஆசை, அதை அவன் நிறைவேற்றனும்.... அப்போம் தான் அவனுடைய எதிர்காலம் ரொம்ப நல்லா இருக்கும்.... அவன் படித்து முடித்து வீட்டிற்கு வந்த பிறகு தான் இந்த விஷயத்தைச் சொல்லனும் என்று கூறினாள்.... அதுவரைக்கும்,
ஜானி இப்போது நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறினாள் நிர்மலா..... எங்கள் அம்மா, அப்பாவிற்குத் தெரியக்கூடாது....
சரிக்கா !...நான் யாரிடமும் சொல்லமாட்டேன்.... இவ்வளவு சம்பவங்கள் நடந்தது...
இப்போது புரிந்ததா!..... உங்க அக்கா உனக்காக அவளிடம் போய் பேசினாங்க,உனக்காக தான் ராகினி பேசிய வார்த்தைகளைத் தாங்கிக் கொண்டு யாருக்கிட்டேயும் சொல்ல முடியாமல் மனசுக்குள்ளே வைத்திருக்கிறார்கள்.... இப்படிப்பட்ட ஒரு அக்கா யாருக்குமே கிடைக்க மாட்டாங்க!.....
ஆனால் நடந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் எங்க அக்கா துரோகம் பண்ணிட்டாங்க?.... என்று கூறுகிறாய்?... அவள் அக்காவைப் பற்றி சொல்லி முடித்தான் ஜானி....
அப்போது," குணா கதறி கதறி அழுதான்.'... அவனுடைய நண்பர்கள் ஆறுதல் கூறினார்கள்.... குணா ,உடனே அக்காவைப் பார்க்க கிளம்பினான்....
நிர்மலா பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது ,அவளை பின் தொடர்ந்தே ஒருவன் வந்து கொண்டிருந்தான்..
நிர்மலாவிற்கு ஒரு பயம் ஏற்பட்டது.... யாரோ நம் பின்னாலே வருகிறார்களே?... என்று திரும்பி பார்த்தாள்....
இவள் திரும்பியதும் ஓடி விட்டான்..
வேகமாக வீட்டிற்குச் சென்றாள் அங்கே வேலாயுதம், என்னம்மா! குணாவை எங்கே என்று கேட்டார்... அவன் பின்னால் வருகிறான் என்று கூறி சமாளித்து விட்டாள்...
ஆனால் அவன் எங்கே போனான் என்றுதெரியவில்லையே!.. அப்பாகிட்ட வேற பின்னால் வருகிறான் என்று பொய் சொல்லிவிட்டேன்.... அப்பாவிடம் உண்மையைச் சொன்னால் ரொம்ப பயப்படுவார்கள்....... யாருக்கிட்டேயும் சொல்ல
. வேண்டாம்,கொஞ்சம் நேரம் பார்ப்போம்....குணா வரவில்லை என்றால் நாம போய் தேடி பார்ப்போம் என்று நினைத்தாள்...
ஆனால் அதற்குள்ளும் வந்துவிட்டான்....
உடனே நிர்மலா நல்ல வேலை அவனே வந்துவிட்டான், இனி ஒரு பிரச்சினையும் இல்லை....
நிர்மலாவும் டீ குடித்து விட்டு வந்தாள்.... குணாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் ...
பிறகு நிர்மலா அறைக்குச் சென்றான்...
என்னடா!... உள்ளே வா என்றாள்... உடனே குணா, அக்கா என்னை "மன்னித்து விடுங்கள் 'என்று சொல்லிக் கொண்டே அழுதான்...நீங்கள் எனக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சீங்க, ஆனால் நான் உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன்.... என்னை மன்னித்து விடுங்கள், என்று கூறினான்.... சரி டா,,, அதுக்காக ஏன் இப்படி அழுகிறாய்?. ..
டேய் .......சொல்லுடா, அழாதே என்றாள்...
.அக்கா குணாவிற்கு எல்லாம் விஷயமும் தெரிந்து விட்டது.... என்றான் ஜானி அதனால் தான் அழுகிறான்..
ஏன்டா!, ஜானி பொறுமையாக நானே சொல்லனும்னு இருந்தேன்.... அதுக்குள்ளேயும் அவசரப்பட்டு சொல்லிட்டாயே!.... இவன் இப்படி அழுகிறான்.... என்னால் இதை பார்க்க முடிய வில்லை...
நீயே, சொல்லு ஜானி" அவனை அழவேண்டாம், என்று சொல்லு,டேய் குணா நீ அழுகிற சத்தம் கேட்டு அம்மா வந்திருவாங்க,அழாமல் இரு, ஏன் அழுகிறாய் என்று கேட்பார்கள், அம்மாகிட்டேயும் சொல்லக் கூடிய ஒரு சூழ்நிலை வந்திரும்.. என்றான் ஜானி....
உடனே அக்கா நான் அழுவல, போதும்மா,
ம்ம்ம்.... போதும்டா தம்பி இது தான் கடைசி இனிமேல் நீ அழக்கூடாது....
போய், முகத்தை கழுவிட்டு வா என்றாள் நிர்மலா..
குணா வேகமாக போய் முகத்தைக் கழுவி விட்டு வந்தான்....
சரிக்கா, நான் கிளம்புறேன்.... ரொம்ப லேட் ஆயிற்று....
சரி தம்பி பார்த்து போ, என்று கூறினாள்...
பிறகு குணா, அக்கா இவ்வளவு விஷயங்கள்நடந்திருக்கிறது.... ஏன்? என்னிடம் ஒன்னுமே சொல்லவில்லை...
நான் வருத்தப்படுவேன் என்று நினைத்தாயா? சொல்லுக்கா?...
ஆமாம்,தம்பி ரொம்ப கஷ்டப்படுவாய்? அதனால் தான் சொல்ல வில்லை.....
நீ அந்த பொண்ண ரொம்ப காதலித்தாய், ஆனால் அவளோ உன்னுடைய காதலை காலில் போட்டு மிதித்து விட்டாள்...
அப்படிப்பட்ட பொண்ணுக்காக நீ ஏன்? கவலைப்படனும்.... அதனால் தான் இந்த விஷயத்தை நான் சொல்ல வில்லை... நீ கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது உன்னிடம் சொன்னால் நீ படிக்கமாட்டாய்?... அப்படிபட்ட பொண்ணுக்காக கவலைப்பட்டு உன்னுடைய எதிர்கால வாழ்க்கையை இழந்து விடுவாய்.... அதனால் நான் சொல்ல வில்லை....
நீ, உண்மையாக காதலித்தாய் ,ஆனால் அவளோ உன்னை காதலிக்கவே இல்லை....
நான் ராகிணியைப் பற்றி விசாரித்ததில் அவள் மூன்று பசங்களை காதலித்து ஏமாற்றி இருக்கிறாள்...

அதைக் கேட்டதும் அதிர்ச்சியானான்.... குணா,
மீதியை அடுத்த பாகத்தில் பார்ப்போம்!




.




...






...

.
 
Top