கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இதம் தரும் அனுராகமே - 15

Mrithula Ashwin

Moderator
Staff member
அத்தியாயம் - 15

ரிஷி, மதுகரன் அறைக்கதவைத் திறக்கப் போராடி, வெளியே கவலையோடுக் கத்தி அழைக்க, உள்ளே அசைவை உணர முடியவில்லை.

பலமுறை விளித்து, கடைசியில் உள்ளே அசைவுத் தெரிய, ரிஷி சற்றே கவலை அகன்று, அவன் நிமிரும் முன், கதவு படாரென்று திறக்கப்பட்டது.
திறந்த வேகத்தில், ரிஷி, எதிரே கண்ணை கசக்கிக் கொண்டு நின்ற மது மேல் மோதி, இருவரும் கீழே விழுந்தனர்.

"அம்மா" என்று ரிஷி மதுவின் காதருகே கத்த, "அடேய் நான் தான்டா அப்படி கத்தனும்.. சேஃப் லாண்டிங்கா, என் மேல விழுந்துட்டு, இடுப்பு ஓடிஞ்ச மாதிரி கூச்சல் போட்டுட்டு இருக்க?"

"இல்லடா ஒரு சவுண்ட் எபெக்ட் கொடுக்கலாமேன்னு.."

"எந்திரிடா.. பார்க்க தான் ஒல்லியா இருக்க... என்ன கனம்டா சாமி.." என்று இடுப்பைப் பிடித்துக் கொண்டு எழும்பி நின்றான் மதுகரன்.

மீண்டும் மது, "இப்ப என்ன அவசரத்துக்கு இப்படி கழுதை மாதிரி வந்து இடிச்சுட்டு என்னை விழ வெச்சடா?"

"எல்லாம் உன்னால தான் டா... என்னை உன் ஆஃபீஸ்க்கு வான்னு சொல்லிட்டு நீ ஹேயா வீட்டுல உட்கார்ந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு இருக்க..?"

"நான் உன்னை வர சொல்லலையே ரிஷி.. என்ன உளறிட்டு இருக்க? இப்ப நீ என் பேக்டரிலிருந்தா வர?"

'சே ரிஷி சொதப்பிட்டியே டா... அம்மாகிட்ட சொன்ன பொய்யை இவன் வரைக்கும் இழுத்துட்டு வந்திருக்க?' என ரிஷி தன்னைத் தானே கடிந்துக் கொள்ள,

மது, "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என் பி.ஏ அசோக்கிட்டப் பேசினேன். நீ வந்ததா சொல்லவே இல்ல. என்ன பொறுப்பில்லாதனம்..?"

"டேய் நான் சும்மா சொன்னேன் டா. ஆனா உன்னை பார்க்க பேக்டரிக்குப் போயிட்டு வந்ததா தான் அம்மாகிட்ட சொல்லிருக்கேன்"

"எதுக்கு இப்படி பொய் சொல்லிட்டு இருக்க? ஏதாவது காரணம் இருந்தா தான் என்னை சந்திக்க வருவியா என்ன?"

"ஆமா.. நான் நேத்து நடந்த விஷயத்தைப் பத்தித் தான் உன்கிட்ட பேச வந்திருக்கேன் ன்னு அம்மாகிட்ட சொல்ல முடியுமா..? அவங்க எவ்வளவு வருத்தப்டுகிட்டு இருக்காங்க ன்னு எனக்கு தெரியாதுப் பாரு?"

"என்ன விஷயம் நடந்துச்சு ரிஷி?"

"ஆஹா இப்படி ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்க எங்கடா கத்துகிட்ட? நண்பன்கிட்டயே இப்படிப்பட்ட நடிப்புக்கு, 'தி அவார்ட் கோஸ் டு ஒன் அண்ட் ஒன்லி மதுகரன்' என்று ரிஷி கடுப்பில் அவார்ட் நிகழ்ச்சி ஒன்றை வாயிலேயே பந்தல் கட்டி நடத்த, மது போய் கட்டிலில் அமர்ந்தான்.

"டேய் நீ பாட்டுக்கு போய் உட்கார்ந்துட்டு கலை நிகழ்ச்சி பார்க்கிற மாதிரி என்னை பார்த்துட்டு இருக்க? செம காண்டுல இருக்கேன்.. மவனே தொலைச்சிடுவேன்" என்று அப்போதும் ரிஷி ஓயாமல் எகிற,

"ஆமா நீ தொலைச்சா, நானும் தொலைஞ்சுப் போக சின்ன குழந்தை இல்ல.. வந்ததிலிருந்து நீ பேசற பேச்சு, எனக்கு, கே-ட்ராமாவை (korean series/soap operas) தமிழ் சப் டைட்டில்ல பார்க்கிற மாதிரி பீல் ஆகுது.." மதுகரன் இவ்வாறு கூற, ரிஷி காதில் புகை வராதக் குறை தான்.

பிறகு, ரிஷியை நோக்கி கை நீட்டி அழைத்த மது, "தம்பி இங்க வாப்பா.. என்ன பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்லு... என்னால முடிஞ்சதை நான் கண்டிப்பா செய்யறேன்" என்கவும், ரிஷி பின்னால் திரும்பிப் பார்த்தான்.

"உன்னை தான்ப்பா ரிஷி தம்பி.."

"நான் உனக்கு தம்பி...!!? ம்ம் சரி ரைட்டு விடு... என்ன பிரச்சனையா இருந்தாலும் தீர்த்து வெச்சிடுவ? அப்படித்தானே?"

"அதுக்காக, மெரினா கடற்கரையை அப்படியே தூக்கிட்டு வந்து திருச்சி மலைக்கோட்டையில் வைக்க சொன்னா, என்னால முடியாது.. " என்று மது நக்கல் செய்து சிரிக்கவும், ரிஷி முறைத்தான்.

அதே நேரம், ரிஷிக்கு அலைபேசி அழைப்பு வர, அறையை விட்டு வெளியேறிப் போனான்.

"இருடா மச்சி.. போன் பேசிட்டு வந்து பஞ்சாயத்தை வெச்சுக்கறேன்..."

"ஐம் ஆல் யூர்ஸ் (I'm all yours)" என்று இதழ் மலர்ந்தவன், ரிஷியின் கவனம் திரும்பியதும், மதுவின் முகம் இருளை தத்தெடுத்துக் கொண்டது. ஆனால் இதுவும் ரிஷியின் கண்களுக்கு தப்பவில்லை.

ரிஷி அழைப்பது யாரென அறிந்தவன், மனதுக்குள், 'இவ ஒருத்தி.. இம்சை தாங்கலை.. இதுங்க ரெண்டுத்துக்கும் நடுவுல நாம மீடியேட்டர் வேலை பார்க்க வேண்டியதா இருக்கு..'

"சொல்லு அனு.."

"ரிஷி என்னாச்சு.. நீங்க கால் பண்ணுவீங்கன்னு நான் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீங்க பொறுப்பே இல்லாம இருக்கீங்க.. அம்.. மது எப்படி இருக்காரு? ரொம்ப டல்லா இருக்காரா? நீங்க பேசுனீங்களா? ஏதாவது சொல்லுங்க ரிஷி!!?"

"எங்கிருந்து பேசறது? யம்மா மனசு டாக்குட்டரு.. நீ கேள்வியைக் கேட்டு நிறுத்தினா தான் நான் பதில் சொல்ல முடியும்?"

"ஈ.. சாரி கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்"

"சரி போனை கட் பண்ணு.. நான் அவன்கிட்ட பேசிட்டுச் சொல்றேன்" என்று வைத்துவிட்டான்.

கீழே அபிராமி ரிஷியை அழைத்து, "ரிஷி தம்பி.. நானும் கற்பகமும் வெளியே கிளம்புறோம்.. நீ அவனை எப்படியாவது பேசி சரி பண்ணிடுப்பா"

"நான் பார்த்துக்கறேன் ம்மா.. நீங்க கவலைப்படாதீங்க.. ஆனா கொஞ்ச நாளைக்கு கல்யாணப் பேச்சை அவன்கிட்ட எடுக்காதீங்க.."

"ஏன் ரிஷி.? ஏதாவது சிக்கலா? ப்ரியா பத்தி ஏதாவது சொன்னானா?"

"நான் இன்னும் அவன்கிட்ட அவளை பத்தி பேசலை.. நான் சொல்றேன் அப்புறமா... உங்களுக்கு நேரமாகப் போகுது.. நீங்க கிளம்புங்க"

அவர்கள் செல்லும் முன், கற்பகம் ரிஷியிடம் இரண்டு காபி கோப்பைகளை கொண்டு வந்துக் கொடுத்துச் சென்றார்.

அதையும் வாங்கிக் கொண்டு மேலேறி வந்தவன், மதுவின் அறைக்குள் நுழைந்து மேஜையில் வைத்தான்.

அதே நேரம், பால்கனியில், மது கைபேசியில் உரையாடிக் கொண்டிருக்க, அங்கே சென்று ரிஷி தனக்கு ஒரு காபி எடுத்துக் கொண்டு, மதுவின் கையில் ஒன்றை திணித்தான்.

சற்று நேரம் பொறுத்து, "அப்புறம் சொல்லுங்க சார்... நேத்து வீராவேசமா பேராசை பிடிச்ச ப்ரியாவை கத்திட்டு, மிரட்டிட்டு வந்தீங்கன்னு கேள்விப்பட்டேன்.." என்று ரிஷி ஆரம்பிக்க, மதுகரன் துணுகுற்றான்.

"உனக்கு எப்படித் தெரியும்? அம்மா சொன்னாங்களா?"

"ஒரு டீவீட்டி சொல்லிச்சு.. நீ ரொம்ப கோபமா கத்திட்டு போனன்னு.. அதான் உன்னை பார்க்க வந்தேன்.."

"ஓஹோ.. அந்த டீவீட்டி பட்சி அதுவான்னு பார்த்து சொல்லு.." என வெளியே தெருவில் நடந்து வந்த ஒரு பெண்ணை காண்பிக்கவும், ரிஷியால், அவனது புத்திக் கூர்மையை வியாக்காமல் இருக்க முடியவில்லை.. ஏனென்றால் அவன் கைக்காட்டியப் பெண் அனுராகா.

"எப்படிடா கண்டுபிடிச்ச?"

"சிம்பிள் டா மச்சான்... நேத்து அவளும் ப்ரியா வீட்டு விழாவுக்கு வந்திருந்தா.. அண்ட் இன்னிக்கு நீ என்னைத் தேடி வந்திருக்க.. அதுவும் நான் வீட்டுல இருக்கேன்னு அசோக் மூலமா தெரிஞ்சுகிட்டு வந்திருக்க.. அண்ட் அவ வரும் போது இங்க நம்மளையே பார்த்துட்டு இருந்தா.. எல்லாம் வெச்சு தான் கணக்குப் பண்ணேன்.. இரண்டும் இரெண்டும் நாலு ன்னு சொல்ல என்ன கஷ்டம் இருக்கு??"

"சரியான மூளைக்காரன் டா நீ" என்கவும், மது விரக்தியாக இதழ் வளைத்தான்.

"மூளை சரியா வேலை செஞ்சிருந்தா நான் ஏன்டா காதலிக்கப் போறேன்?" என்று கேட்கவும், ரிஷிக்கு அனுவிடம் இருந்து அழைப்பு வந்தது.

"அடேய் உன் தத்துவத்தை நிறுத்து டா.. இம்சை அரசனும் இம்சை அரசியும் சேர்ந்து கொலபரேஷன்ல என்னை இம்சை பண்றாங்களே.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா" என்றவாறே அலைபேசியை காதில் ஒற்றினான்..

"ரிஷி இப்படி என்னை பழிவாங்கக் கூடாது.. நான் வந்ததை ரெண்டு பேருமே பார்த்தீங்க ன்னு எனக்குத் தெரியும்.. ஆனாலும் கூப்பிட மாட்டேங்கறீங்க.. நான் தொந்தரவு செய்யறதா நினைச்சாலும் பரவாயில்ல.. எனக்கு அம்.. மது கூட பேசியே ஆகணும்.."

"சரி இரு.. அவனோட பேசிட்டு சொல்றேன்" என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

"மது அனு தான்டா போன்ல.. அவ உன்னோட ஏதோ பேசனுமாம்.."

"என்கிட்ட பேச அவளுக்கு என்ன விஷயம் இருக்கு?"

"அவளுக்கு ஏதோ பேசனுமாம் டா.. எனக்கென்ன தெரியும்?"

"இப்ப நீ தானே அவளுக்காக இங்க வந்து எடுபிடி வேலை பார்த்துட்டு இருக்க? உனக்கு தெரியாது ன்னு சொன்னா என்னால நம்ப முடியலையே!!" என்று மது தாடையை நீவியபடி, ரிஷியை மேலும் கீழும் பார்த்தான்.

"ஒரு பொண்ணு.." ரிஷி தொடங்க,

"ஒரு பொண்ணு தான்.... நான் என்ன பத்து, பதினஞ்சுன்னா சொன்னேன்..."

"டேய் கிராதகா.. முழுசா சொல்ல விடுடா... எழரையைக் கூட்டாதே... நாங்க ரெண்டு பேருமே தான் உன்கிட்ட பேச நினைச்சோம்.. முதல்ல இந்த ரூமை விட்டு வெளிய போய் வரெண்டால உட்கார்ந்து பேசலாம் வா.." என்று அழைத்து சென்றான் ரிஷி.

மாடிப்படியில் இறங்கும் போது, "டேய் என்ன லவ்வா.." என்று திடீரென்று கேட்டான்.

"உனக்கெப்படி தெரியும்?" என்று ஆச்சரியத்துடன் ரிஷி வினவ,

"அதான் மூஞ்சியில எழுதி ஒட்டியிருக்கே.. ரெண்டு பேரும் எத்தனை வருஷமா லவ் பண்றீங்க? உனக்கு ஒகேவா?"

"யாரு ரெண்டு பேர் லவ் பண்றாங்க..? எனக்கு எதுக்கு ஓகே?"

"என்னை பார்த்துக் கூடவா.. உனக்கு ஒரு பொண்ணை லவ் பண்ண மனசு வந்தது.. காதலுக்கு கண்ணு இல்லன்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன் ஆனா அறிவும் இல்ல ன்னு நாம ரெண்டுப் பேருமே நிரூபிச்சிருக்கோம்.."

"கஷ்டக்காலம் டா யப்பா!! மது.. அனு எனக்கு நல்ல தோழி மட்டும் தான்.. ஆனா அவ லவ் பண்றா!!" என்று இறங்கி வந்தவர்கள் பார்வையில் பட்டாள் அனுராகா.
அனுராகா அப்போது தான் காவலாளி திறந்து விட்ட கதவு வழியாக உள்ளே வந்துக் கொண்டிருந்தாள்.

"ரிஷி எனக்கு இன்னும் ஒரு கேள்வி இருக்கு டா.. அவ யாரை காதலிச்சா நமக்கு என்னடா? ஆனா பாவம் டா அந்த பையன்.. இப்பவே நான் பரிதாபம் பட்டுகிறேன்.. சண்டைப் போட்டே மேகி ஆக்கிடுவா" என்று காதைக் கடித்தான்.

அதை கேட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் ரிஷி. அவனைக் கண்டு மதுவும், அதே நேரம் உள்ளே வந்த அனுவும், காரணம் புரியாமல் விழித்தார்கள்.

பிறகு அவர்கள் முகத்தைப் பார்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், அனுவை தனியாக அழைத்துச் சென்று, மதுவின் கேள்விகளை ஒப்பித்தான்.

அதைக் கேட்டு, அவளும் சிரித்துவிட்டு, "ரிஷி எனக்கு ஒரு பக்கம் குழப்பமாவும் கவலையாவும் இருக்கு.. என்னையும் ப்ரியா மாதிரி நினைச்சிட்டு, என் பீலிங்க்ஸை புரிஞ்சுக்காம போனா?, நான் என்ன பண்றது?"

"உன் பயம் கரெக்ட் தான் அனு.. ஆனா அதை பத்தி இப்ப யோசிச்சு, நாம வெல் பிளான்ட் ன்னு எந்த ஸ்டெப்பும் யோசிக்க வேணாம்.. அவன் எப்படி ரியாக்ட் பண்றானோ அதுக்கேத்த மாதிரி, நாம மூவ் பண்ணலாம்.. ரொம்ப குழப்பிக்காத!.. இப்ப நாம அவன் பேக்டரி தொழிலார்களோட மன உணர்வுக்கான யோசனைகளை சொல்லுவோம்.. அப்புறம் உன் லவ் பத்தி பேசலாம்.. எனக்கு, அவன் உன்னோட சுமூகமா பழகினா நல்லது ன்னு தோணுது"

"ம்ம்ம் அதுவும் சரி தான் பார்ப்போம்.. வாங்கப் போகலாம்"

தங்களுக்குள், சில பல யோசனைகளை பேசி முடிவெடுத்துவிட்டு, மதுகரனை அணுகினார்கள்.

அங்கே, தன் போக்கில் கைப்பேசியை, யாழ் மீட்டுவதைப் போல, மென்மையாகவும், மௌனமாகவும், தொடுத்திரையோடுக் கதைத்துக் கொண்டிருந்தான்.

மதுகரன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்த விதம் அனுவை வெகுவாக கவர்ந்தது.

"ஹே அனு.. என்ன பிரீஸ் ஆகி நின்னுட்ட.. வா போகலாம்..?"

"ஒன்னுமில்ல.."

அவர்கள் அவனை நெருங்க, அப்போது, தன் கையில் இருந்த அலைபேசியை பட்டெனத் தரையில் தூக்கி எறிந்தான். அதில், திறன்பேசி (smart phone) சிதறி விழுந்து தன் உயிரை இழந்தது.


தொடரும்....
 

Padma

Active member
மதுவுக்கும் அனுவுக்கும் இடையிலே மாட்டிட்டு முழிக்கிற ரிஷியை பார்த்தா 😂 😂 😂 😂
போன் போச்சா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 

Deepa

Active member
அருமையான பதிவு
பாவம் போன். சில்லு சில்லா சிதறியது போனா இல்லை அனுவா
 
Top