1
"சக்தி ப்ளீஸ் ஏதாவது பேசு" என்று தனது இரு சக்கர வாகனத்தின் பின்னால் இரண்டு கால்களையும் தொங்க விட்டபடி அமர்ந்திருந்த காதல் மனைவியை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான் சிவா.
ஆனால் சக்தி மூக்கினை உறிஞ்சி அழுகையை கட்டுப்படுத்த முயன்றாள்.
"ஏய் அழறியா.."?.
என பதறியபடி வாகனத்தை நிறுத்தி ஒரு கால்லை தரையில் ஊன்றி தன்னை நிலைபடுத்திக் கொண்டு சக்தியை திருப்பிப் பார்த்தான்.
அவளோ அவனுக்கு முகத்தை காட்டா வண்ணம் சைடாக திருப்பிக் கொண்டாள்.
வாகனத்தை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவன் கீழே இறங்கவும் வாகன அசைவில் சற்று பயந்த சக்தி" சிவா" என பதறியபடி அவனின் பின்பக்க சட்டையை கொத்தாக பற்றிக் கொண்டாள்.
"பயப்படாத சக்தி…நான் இருக்கேன் உன்னை அப்படி விட்டிட மாட்டேன்"... என்று சொல்லும் பொழுது அவளும் வாகனத்தை விட்டு கீழே இறங்கியிருந்தாள்.
அவளிடம் பேச முயன்ற கணவனிடம் "வண்டியை எடுங்க எதுக்காக நிறுத்தினீங்க..?"என கோபப்பட்டாள்.
"நீ இப்படி பின்னாடி உக்காந்து அழுதுட்டே வந்தா எப்படி நான் வண்டி ஓட்டறது…நீ அழுது முடி அப்புறமா வண்டியை எடுக்கறேன்".
"ம்ப்ச்…எனக்கு அழ கூட உரிமை இல்லையா..?"…என ஆதங்கமாக கேட்டவளிடம்.
"அழறதுக்கு மட்டுமில்ல என்னை நிக்க வச்சு கேள்வி கேட்கிற உரிமையும் உனக்கு நிறையவே இருக்க… ஆனா அதுக்கெல்லாம் வேல்யூவான காரணம் இருக்கனும்".
"அப்போ என் குடும்பம் வேல்யூ இல்லனு சொல்ல வர்றீயா…"?.
"ஏய் எதுக்கும் எதுக்கும் முடி போடற.
எதுக்காக இப்போ உன் குடும்பத்தை நமக்குள்ள இழுக்கற..!"…என்றவனின் குரலில் அனல் அடித்தது.
"நான் எங்க இழுக்கறேன் நீங்கதான் இழுக்குறிங்க"…என்றவளின் குரலோ உடைந்திருந்தது.
"கடவுளே …சக்தி ஏன் இன்னைக்கு இப்படி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க… இப்போ என்ன உன் அம்மா அப்பாவோட அறுபதாவது கல்யாணத்துக்கு நீ போகணும் அவ்வளவுதானே தாராளமா போயிட்டு வா அதுக்காக தேவை இல்லாம இப்படி அழுது என்னை வம்புக்கு இழுக்காத…என்னால தாங்க முடியாது.."என்று கோபத்துடன் பற்களை கடித்துக் கூறியவன் மீண்டும் மனைவி அழுகைக்கு தயாராவதைப் பார்த்து…
"ம்ப்ச்"…என்று சலித்துக்கொண்டவன்…"இங்க பாரு சக்தி" என அழைத்தான்.
கண்களை துடைத்தபடி அவன் புறம் திரும்பாமல் கற்சிலையாக மனைவி நிற்க…சாலை என்பதையும் மறந்து அவளை சமாதானப்படுத்த ஆரம்பித்தான்.
"சக்தி எனக்கு வேலையில் எவ்வளவு பிரஷர் இருந்தாலும் என்னால தனி ஆளா சரி பண்ண முடியும் ஆனா நமக்குள்ள ஒரு பிரச்சனைனா கண்டிப்பா என்னால முடியாது.
ப்ளீஸ் புரிஞ்சுக்கோ சக்தி..
ஆபீஸ்ல ஒரு வாரமா ஆடிட்டிங் வொர்க் போயிட்டு இருக்கு ஹெட் ஆபீஸ்ல இருந்து வந்தவங்க எங்களை புழிஞ்சு எடுத்துக்கிட்டு இருக்காங்க
ஏற்கனவே வேலைல டென்ஷன்… வேலையை சரியா முடிக்கணுமேங்கற டென்ஷன்… இதுல நீ வேற இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் என்கிட்ட சண்டை போட்டுட்டு அழுதுட்டு இருந்தா என்னால சமாளிக்க முடியாது".
"எது சிவா சின்ன விஷயம்..? என் அப்பாவோட அறுபதாவது கல்யாணம் உனக்கு சின்ன விஷயமா..? நாம கல்யாணம் பண்ணி ஆறு மாசம் ஆச்சு…என்னைக்காவது என் பொறந்த வீட்டை பத்தி உன்கிட்ட பேசிருப்பேனா…இல்லை போகனும்னு கேட்டிருப்பேனா…
இத்தனை நாள் இல்லாமா இப்போ உன்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கேன் ஆனா நீ என்னை ரொம்ப அலட்சியப்படுத்தற…
என்னோடது எவ்வளவு பெரிய குடும்பம்…அதுவும் கூட்டுக்குடும்பம்… எல்லாரையும் விட்டுட்டு உன் பின்னாடி வந்தேன்..அவங்களோட கோபத்தையெல்லாம் சகிச்சிகிட்டு நீ தான் முக்கியம்னு இருக்கேன்…ஆனா நீ என் உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்கல…
அங்க போகனும்ங்கற நினைப்பை ஈஸியா விடவும் முடியல…
ஏன்னா அவங்களே இறங்கி வந்து அறுபதாம் கல்யாணத்துக்காக கூப்பிடுறாங்க…நான் முன்ன நின்னு செய்ய வேண்டிய காரியம்…ஆனா யாரோ மாதிரி இருக்கேன்..
பத்தாததுக்கு நீ வேற என்னை அனுப்ப மாட்டேங்குற"…என ஆதங்கப்பட்டாள்
"அனுப்ப மாட்டேன்னு சொல்லல போனா சரி வராதுன்னு சொல்றேன்… உன்னை ரொம்ப காயப்படுத்துவாங்க… உன் குடும்பத்தை பத்தி உனக்கு தெரியாதது கூட எனக்கு தெரியும்.. உன் அப்பாகிட்டேயும் சித்தப்பாகிட்டேயும் கிட்டத்தட்ட நாலு வருஷமா கூட இருந்து வேலை பார்த்திருக்கேன் அவங்க அந்தஸ்துக்கு தான் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க… உங்க அம்மாகிட்ட பேசும் போது கூட அதை அதிகமா உணர்ந்திருக்கேன்"…
"இருக்கலாம் சிவா…ஆனா என் விஷயத்துல அவங்க அப்படி நடந்துக்க மாட்டாங்க… நான் அவங்க சொந்த பொண்ணு… உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லையா …நீ எங்க ஆபீஸ்ல மேனேஜரா வேலை செஞ்ச… சோ அப்பா உன்கிட்ட அப்படி நடந்திருக்கலாம்…அம்மாவும் வேலைக்காரன்னு பாத்ததால அப்படி பேசிருக்கலாம்..
இப்போ நம்மளோட நிலைமை அப்படி இல்ல நீ என்ன கல்யாணம் பண்ணிருக்க…நீ இப்போ அந்த வீட்டோட மாப்பிள்ளை.. உனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கண்டிப்பா கொடுப்பாங்க… என்னைக்கோ நடந்ததையும் இனி நடக்கப் போறதையும் சேர்த்து பார்த்து குழப்பிக்காத சிவா ப்ளீஸ்"..
அவளின் பேச்சு கேட்டவன் கோபத்தையும் மறந்து புன் சிரிப்பை உதிர்த்தான்… "நான் உன்னையே போக வேணாம்னு சொல்லிட்டு இருக்கேன் நீ இது தான் சாக்குன்னு சைக்கிள் கேப்ல என்னையும் கூட்டிட்டு போலாம்னு பிளான் பண்ற பாத்தியா.." என்று சொல்லவும்..
"இங்க பார் சிவா நான் காலேஜ் படிக்கிற டைம்ல நீ என்னோட அப்பா கிட்ட வேலைக்கு சேர்ந்த…வேலைல நீ ரொம்ப சின்சீயர்… ஒரு நாள் எங்க வீட்டு டிரைவர் வரலைன்னு எமர்ஜென்சிக்காக உன்னை காலேஜ் கூட்டிட்டு போக சொன்னாங்க அதுக்கப்புறம் அந்த டிரைவரை விட நீ ரொம்ப நல்லா வண்டி ஓட்டுறேன்னு உன்னையே தினமும் காலேஜ் கூட்டிட்டு போக வர வச்சாங்க…
இந்த சமயத்துல உன்னோட அமைதியான குணம்.. ஆர்பாட்டம் இல்லாத எதார்த்தமான பேச்சு … கண்ணியமான பார்வை… பெண்களை மரியாதையா நடத்தறதுன்னு உன்னோட ஒவ்வொரு செயலையும் ரசிச்ச நான் என்னையும் அறியாம உன் மேல காதல்ல விழுந்துட்டேன்.
என் காதலை உன்கிட்ட நான் சொன்னப்போ நீ உடனே ஏத்துக்கல… அது இன்னமும் உன் மேல காதலை அதிகபடுத்திச்சி… ரொம்ப கஷ்டப்பட்டு என் காதலுக்கு உன்னை சம்மதிக்க வச்சேன் .
உன்ன சம்மதிக்க வச்ச கொஞ்ச நாளில்லேயே அரச புரசலா என் வீட்டுக்கு நம்ம காதல் தெரிஞ்சு போச்சு..
அதுக்கப்புறம் என்னை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி அவசர அவசரமா ஒரு பணக்கார பொறுக்கிக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தாங்க .
அந்த சமயத்துல துணிந்து வீட்டை விட்டு ஓடி வந்த நான் கெஞ்சி கூத்தாடி உன்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன் .
அதுக்கப்புறம் அந்த ஊரை விட்டு தள்ளி வந்து இன்னைக்கு இந்த ஊர்ல அமைதியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம்…
இது எல்லாமே உன் மேல நான் வச்ச காதல்னால செஞ்சது ஆனா அந்த காதல் சரியில்லையோனு தோன்ற மாதிரி இப்ப நீ பேசிட்டு இருக்க..".
"என்ன சக்தி இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க..? நீ பேசற ஒவ்வொரு வார்த்தையும் என் நெஞ்சில ஈட்டி எடுத்து இறக்குவது போல இருக்கு உனக்கு தெரியுதா இல்லையா..?.
சராசரி குடும்பத்தில் பிறந்தநான் ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சு ஒரு நல்ல சம்பளத்தில் உன்னோட அப்பா கிட்ட வேலைக்கு சேர்ந்தேன்…அங்க உன்னோட அப்பாவும் சித்தப்பாவும் வேலை விஷயமா எத்தனையோ கஷ்டங்களை கொடுத்தாலும் கூட என் குடும்பத்துக்காக எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன்…
அங்க வேலை பார்த்துக்கிட்டே வெளியே வேலையும் தேடிக்கிட்டு இருந்தேன் அந்த சமயத்துல தான் உன்னோட காதல் பார்வை என் மேல விழறது தெரிஞ்சது…அதிர்ச்சி ஆகி உனக்கு எவ்வளவோ புத்தி சொல்லி பார்த்தேன். ஆனா நீ கேட்கவே இல்லை…ஒரு கட்டத்துல சொல்லாம கொள்ளாம வேலையை விட்டுட்டு கிளம்பலாம்னு இருந்த சமயத்துல பெட்டியோட வந்து நிக்கற…நீ இல்லாம என்னால வாழ முடியாது…நானும் உன்னோடவே வர்றேன் இல்லனா சாகறேன்னு மிரட்டின
..வேற வழியில்லாம உன்னை என்னோட அழைச்சிட்டு வந்தேன்…
முறைக்காத நீ மிரட்டினதால மட்டும் உன்னை நான் கூட்டிட்டு வந்திடல…உன்னை எனக்கும் பிடித்து இருந்தது எப்போ நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சேன்னு எனக்கே தெரியல… ஆனா நீ உன் காதலை சொல்லும் போது நானும் உன்னை காதலிச்சிட்டு தான் இருந்தேன்…
நம்ம ரெண்டு பேர்த்துக்கும் நடுவுல இருந்த அந்தஸ்து தான் உன்கிட்ட இருந்து என்னை தள்ளி வச்சது.. ஆனா நீ உன் குடும்பத்தை எல்லாம் எதிர்த்துகிட்டு எப்போ என் பின்னாடி வரேன்னு கிளம்பிட்டியோ அப்போவே அதுவும் காணாம போயிடுச்சு .
துணிஞ்சு உன்னை இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்தேன்…உடனே என் அம்மா அப்பாகிட்ட சொல்லி சிம்பிளா ஒரு கோவில்ல வச்சி கல்யாணம் பண்ணிகிட்டோம்…ஆறு மாசம் வேகமா ஓடிடுச்சி…… இவ்வளவு நாளா நமக்குள்ள சின்னதா மனஸ்தாபம் கூட வந்ததில்லை… என் வருமானத்துக்குள்ள அழகா குடும்பம் நடத்துற …அப்பப்போ என் அம்மா அப்பாவையும் போய் பாத்துட்டு வர்ற… நெஜமாவே உன்னை என் மனைவியை அடைந்ததற்கு நான் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருக்கணும்"…என்றவன்.. அவளின் கண்களை பார்த்து
"அமைதியா தெரிந்த நீரோடை போல போய்கிட்டிருக்கற நம்ம குடும்ப வாழ்க்கைக்குள்ள இப்போ திடீர்னு உன் ஃபேமிலி உள்ள நுழையும் போது எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு… அதனால தான் உன்னை அங்க போக வேணாம்னு தடுக்கறேன் சக்தி.." என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
"எதுக்காக என் ஃபேமிலியை பார்த்து பயம்…?அவங்க எவ்ளோ நல்லவங்கன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல…அவங்க செயல்ல காமிச்சிட்டாங்க…நான் உன் பின்னாடி வந்துட்டேன்னு தெரிஞ்சதும் நம்மளை கொஞ்ச நாள் தேடினாங்க… எப்போ உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சதோ உடனே அவங்க நம்மளை விட்டுட்டாங்க…
இதுவரைக்கும் நம்மளை டிஸ்டர்ப் பண்ணல…
அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் நாம எங்க இருக்கோம்… என்ன பண்றோம்னு எதையுமே தெரிஞ்சுக்க விரும்பல …நமக்குள்ளயும் வரல… அவ்வளவு நல்ல மனுஷங்க என் வீட்டு ஆளுங்க …
அப்படிப்பட்டவங்க இன்னைக்கு தானா இறங்கி வந்து அறுபதாம் கல்யாணத்துக்கு வாங்கன்னு கூப்பிடுறாங்க போகலைன்னா எப்படி..?"என கேள்வி எழுப்பினாள்.
"அதான் எனக்கு பயமே சக்தி…அவங்களோட இந்த அமைதி தான் என்னை குழப்புது…
சாதாரண கூலித்தொழிலாளி வீட்டிலிருந்து பொண்ணு ஓடிப் போனா கூட என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டியேன்னு அப்பன்காரன் அந்த பையனை வெட்ட அருவாவை தூக்கிக்கிட்டு வருவான்…
ஆனா உன் வீட்ல இவ்ளோ சொத்து பத்து இருந்தும்… உன்னை ராணி மாதிரி வளர்த்தியும்… எப்படியோ போன்னு எதையுமே கண்டுக்காம விட்டதுதான் என் மனசுக்கு நெருடலா இருக்கு.. இப்போ அவங்க உன்னை கல்யாணத்துக்கு கூப்பிடும்போது உன்னை தனியா அனுப்ப பயமா இருக்கு.."என்றவனிடம்.
" நான் எப்போ தனியா போறேன்னு சொன்னேன்… உன்னை தானே கூட வர சொல்றேன்…நாம சேர்ந்து தான் போறோம் "என்றவளிடம்.
"ஆனா உன்னோட சித்தப்பா உன்னை மட்டும்தான் கூப்பிட்டாரு என்ன கூப்பிடல மறந்துடாத.."
"எப்படி…ஓரே வீட்ல இருக்கற உனக்கு தனியாவும் எனக்கு தனியாவுமா கூப்பிடுவாங்க ..?ரெண்டாவது சித்தப்பா ஃகால் பண்ணி ஸ்பீக்கர்ல போட சொல்லிதான் பேசினாங்க…கடைசியா இது முக்கியமான பங்க்ஷன் மறக்காம ரெண்டு பேரும் வந்துடுங்கன்னு சொன்னாங்க…".
"பொதுவா தான் சொன்னாங்க சக்தி தனிப்பட்ட முறையில் என்கிட்ட சொல்லல.. ஞாபகம் வச்சுக்கோ."
" சரி இப்ப முடிவா நீ என்னதான் சொல்ற.."
" இங்க பாரு சக்தி நீயும் போக வேண்டாம்.. நானும் போக வேண்டாம்' ஒதுங்கி இருக்கிறது.. ஒதுங்கி இருக்கிறதாக இருக்கட்டும்.. தயவு செஞ்சு இந்த பேச்சை இதோட விடு"என்றவனிடம் கோபமாக.
"அப்போ நானும் சொல்றேன் …நல்லா கேட்டுக்கோ ..நான் இப்படியே வீட்டுக்கு கிளம்பி போறேன்…இனிமே என்னை எங்கேயும் கூப்பிடாத… என் வீட்டு ஃபங்ஷனுக்கும் போகல.. இப்போ நாம போய்கிட்டு இருக்கறமோ உன் ஃபிரண்ட் குழந்தையோட பர்த்டே அதுக்கும் நான் வரல.."
" ஏய் எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற"?
"பின்ன நான் மட்டும் உன்னோட எல்லா இடத்துக்கும் வரனும்…எல்லா விஷேசத்துலேயும் கலந்துக்கணும்… ஆனா நீ எனக்காக எதுவும் செய்ய மாட்ட…எங்கேயும் வரமாட்ட..உன்னை மாதிரி ஒரு சுயநலவாதியை கல்யாணம் பண்ணினதற்காக எனக்கு இந்த நிலை தேவை தான் "என அழ ஆரம்பித்தாள்.
அவள் அழுகையை சகித்துக் கொள்ளாதவன் அவளது தோளில் கைவைத்து " சக்தி ப்ளீஸ்"என்று சொல்லவும் அவனது கைகளை தட்டிவிட்டவள்.
"ப்ளீஸ் சிவா என்கிட்ட எதும் பேசாத இனி உன்கிட்ட பேச ஒன்னும் இல்ல என்னை கொண்டு போய் வீட்ல விடு இல்லைன்னா நானே போய்கறேன்".
" சக்தி அங்க நமக்காக எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க இப்படி நடுரோட்டில் நின்னு பிரச்சினை பண்ணினா என்ன பண்ண முடியும்"
"அது உன் பிரச்சினை…நீ என்ன வேணா சொல்லிக்கோ நான் உன் பின்னாடி வர முடியாது". என்று உறுதியாக நின்றவளை பார்த்து சிறிது நேரம் தலையில் கை வைத்து நின்றவன்.
" சரி முடிவா என்ன சொல்ல வர்ற"
" என்னை அம்மா அப்பாவோட அறுபதாம் கல்யாணத்துக்கு அனுப்புறதா இருந்தா நான் இப்போ உன் கூட வரேன் இல்லனா இனிமே என்னை எங்கேயும் கூப்பிடாத நான் எங்கயும் வரமாட்டேன் இதுதான் என்னோட முடிவு.. உனக்கே தெரியும் என் பிடிவாதம் எந்த அளவுக்கு இருக்கும்னு" என்று சொல்லியபடி முகத்தை திருப்பிக் கொள்ளவும்.
"சரி வண்டியில ஏறு" என்றவனிடம்.
" எங்க போறோம்"? என புருவத்தை சுருக்கியபடி கேள்வி கேட்டாள்.
"பர்த்டே பார்ட்டிக்கு"என்றான்.
"நான் சொல்லிகிட்டே"… என்று கோபமாக ஆரம்பிக்கவுமே…
"உன் வீட்டு பங்க்ஷனுக்கும் போகலாம் ஆனா என்னை கூப்பிட கூடாது" என்று சொல்லிவிட்டு வாகனத்தை இயக்கினான் .
நெடு நாளைக்கு பிறகு தாய் வீட்டிற்கு செல்வதற்காக சந்தோஷப்படுவதா இல்லை கணவன் கூட வரவில்லையே என்பதற்காக கவலைப்படுவதா எனத் தெரியாமல் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.
கோபத்தை கட்டுக்குள் வைத்தபடி வாகனத்தை சீரான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்த சிவா அதற்கு மேல் சக்தியிடம் பேசவேயில்லை.
அவள் தாய்வீடு செல்வதற்கான நாள் வரவும் சக்தி சிவாவின் முகத்தையே பார்த்தாள்.
எதுவும் பேசாமல் அவளுக்கு தேவையானவற்றை பேக் செய்தபடி சிவா இருக்கவும் அவனது அருகில் வந்தவள் "சிவா நீயும் கூட வரலாம்ல" எனக்கேட்டாள்.
"இல்ல சக்தி நீ போய்ட்டு வா நான் அங்க வரலை"…
"ஏன் சிவா இவ்ளோ பிடிவாதம்..என்னை தனியா வேணாலும் அனுப்புவ நீ வரமாட்ட இல்லையா"..
*****"
"சிவா நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்"
"நீ ஒன்னும் தனியா போகலையே உன் வீட்டிலிருந்து கார் அனுப்பி வைக்கிறாங்க எப்படியும் யாராவது ஒருத்தர் அதுல வரதான போறாங்க…"
"இருந்தாலும் நீ என் கூட துணைக்கு வர்ற மாதிரி இருக்குமா..? ஒரு தடவை யோசிச்சு பாரு ப்ளீஸ்" என்றவளை திருப்பி முறைக்கவும் வெளியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
முறைக்கும் கணவனை விடுத்து வெளியில் பார்வையை செலுத்தினாள் சக்தி… புத்தம் புதிய சொகுசு கார் ஒன்று வாசலில் நிற்க உள்ளே இருந்து அவளின் சித்தப்பா மிக கம்பீரமாக இறங்கினார்.
டிரைவரை அனுப்பி வைப்பார்..துணைக்கு ஒன்று விட்ட தம்பியோ இல்லை அண்ணனோ வருவார்கள் என்று தான் நினைத்தாள்…இப்படி சித்தப்பாவே காரை ஒட்டிக்கொண்டு வருவார் என எதிர்பார்க்கவே இல்லை…
நொடியில் முகம் முழுவதும் மலர "சித்தப்பா "என கத்தியபடியே அவரிடம் ஓடினாள்.
சக்தியின் சித்தப்பாவை சிவாவுமே எதிர் பார்க்க வில்லை…வீட்டு வாசலுக்கு வந்தவரை…உள்ளே வாருங்கள் என அழைக்க வேண்டும் அல்லவா அதனால் மனைவியின் பின்னாலே சென்றான்.
வாங்க…சா..ர் என அழைத்தபடி அருகில் செல்லும் முன்னே அவரின் கோபப்பார்வையை தாங்கிக்கொள்ள முடியாமல் பாதியிலேயே நடை தடைபட்டது…சின்ன மாமனாரின் முகத்தில் துளியும் மகளை பார்க்க வந்த உணர்வு தெரியவில்லை…மாறாக அந்த முகத்திற்கு உள்ளே வன்மம் ஒளிந்திருந்து வெளிப்படையாகவே தெரிந்தது…அவரின் சுயரூபம் தெரியாமல் ஓடும் மனைவியை தடுக்க முடியாமல் தலைகுனிந்து நின்றான்.
சிவாவை முறைத்த கண்கள் ஓடிவரும் மகளை கண்டதும் அன்பு பொங்கியது.
வேகமாக அவரருகில் ஒடியவளால் அவரின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை…
அவரின் பார்வையில் அன்பு கரைபுரண்டு ஓடியது… அதைக் கண்டதும் சக்தியின் கண்களில் கண்ணீர் பெருகிதே தவிர வார்த்தை ஒன்றும் வரவில்லை.
" என்னை மன்னிச்சிடுங்க சித்தப்பா தெரியாம தப்பு பண்ணிட்டேன்.. நான் வேணும்னு ஓடிவரல..எங்களை பிரிச்சிடுவீங்களோங்கற பயத்தால வந்துட்டேன்…உங்க எல்லாரையும் ரொம்பவே வேதனை படுத்திட்டேன்…அப்படி இருந்தும் உங்க கோபத்தை மறந்து நம்ம வீட்டு ஃபங்ஷனுக்கு கூப்பிட்டதோட இல்லாம நீங்களே என்னை அழைச்சிட்டு போக வந்ததை பாக்கும் போது எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அந்த கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டார் என கூறியபடி அவரின் காலில் விழப்போனாள்.
பாதியிலேயே தாங்கிக்கொண்டவர்..
தப்பு சக்தி…நீ நம்ம வீட்டோட இளவரசி என் கால்ல மட்டும் இல்ல யார் காலிலேயும் நீ விழவும் கூடாது…உன் தலை குனியவும் கூடாது நிமிர்ந்து சித்தப்பா கண்ணை பார்த்து பேசுடா.
எனச் சொல்லவும்.
சித்தப்பா எனக் கதறியபடி அவரின் தோளில் சாய்ந்து அழுதாள்.
இப்போ எதுக்காக அழற..
நடந்ததை எல்லாம் கெட்ட கனவா நினைச்சி நாங்க எல்லாரும் மறந்துட்டோம்…நீயும் அதே போல எல்லாத்தையும் மறந்துட்டு என் கூட வா என்று சொல்லவும்…நொடியில் அதிர்ச்சி அடைந்தவள் பயத்துடன் கணவனை திருப்பி பார்த்தாள்.
அவனுமே அந்த வார்த்தையை கேட்டு சற்று பயந்து தான் போயிருந்தான்… பயத்தில் உதடுகள் தந்தி அடிக்க சித்தப்பா… என திக்கி திணற அவரோ இயல்பாக நான் ஒரு மடப்பய… எதை எப்படி சொல்லணும்ங்கற விவஸ்த்தை கூட தெரியாத ஒரு முட்டா பய என்று அவருக்கு அவராகவே திட்டியவர்…நான் என்ன சொல்ல வந்தேன்னா… உனக்குள்ள இருக்கிற இந்த குற்ற உணர்ச்சி எல்லாத்தையும் கெட்ட கனவா மறந்துட்டு சந்தோஷமா நம்ம வீட்டுக்கு வான்னு சொல்ல வந்தேன் அதை நீ தப்பா புரிஞ்சுகிட்ட என விளக்கினார்…
சித்தப்பாவின் பதிலில் சற்று ஆசுவாசமடைந்தவள்…நொடியில பயந்துட்டேன் சித்தப்பா…என சிறு புன்னகையுடன் கூறினாள்.
சரி கிளம்பலாமா..
நேரம் ஆகிட்டு இருக்கு என்று சொல்லவும்..சரி என தலையசைத்தவள் கணவனை பார்த்து கண்களால் அனுமதி கேட்டாள்.
ஏற்கனவே அவள் எடுத்த முடிவு இனி அவன் தடுத்தெல்லாம் நிற்கப்போவதில்லை அதனால் மனமேயில்லாமல் தலையசைத்தான்.
கணவனின் அனுமதி கிடைக்கவுமே மனதிற்குள் துள்ளி குதித்தவள் அடுத்த நொடியே அவளது உடைமைகளுடன் வாகனத்தின் உள்ளே ஏறிக்கொண்டாள்.
அவள் ஏறிய மறுநொடியே அந்த கார் மெதுவாக நகரத்தொடங்கியது…ஜன்னலில் வழியே மனைவி எட்டிப்பார்ப்பாள் என எதிர்பாத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
குளிர்சாதன வசதி கொண்டிருந்த சொகுசுக்கார் அது என்பதால் வாகனத்தின் ஜன்னல் கீழிறக்கப்படவில்லை …இது தெரிந்தும் சிவாவின் மனம் அவளைத் தேடியது.
ஏனோ மனதில் நிம்மதி என்பது துளிகூட இல்லை..அவளை போகாதே எனக்கூறி தடுக்க முடியாத தனது கையாலாகாத தனத்தை எண்ணி கோபம் கொண்டவனால் வாகனம் கண்களை விட்டு மறையும் வரை அங்கே நிற்க முடியவில்லை…வீட்டிற்குள் சென்றவனுக்கு கண்கள் கரித்தது..
அவனின் மனம் என்ன எதிர்பார்த்தது.. நான் உங்களுடன் வருவது கணவருக்கு பிடிக்கவில்லை என்பதை சித்தப்பாவிடம் சக்தி ஜாடையாகவாவது கூறியிருக்க வேண்டுமா..?
இல்லை மாப்பிள்ளை நீங்களும் என்னோடு வாருங்கள் என்று சித்தப்பா சம்பிரதாயத்திற்காவது அழைத்திருக்க வேண்டுமா…அவனுக்கே தெரியவில்லை.
வாசல் வரை வந்த சித்தப்பா வீட்டிற்குள் வரவில்லை சக்தியும் சரி சிவாவும் சரி அவரை உள்ளே வாருங்கள் என்று அழைக்கவில்லை.
ஒருவேளை அழைத்து இருந்தால் வந்திருப்பாரா? என யோசித்தவனுக்கு விடையும் தெரியவில்லை.. அவரின் பார்வையில் மட்டும் ஏதோ ஒன்று ஒளிந்திருந்தது.
தன்னைப் பார்த்த பொழுது இருந்த கடுமை , வன்மம்,சக்தியை கண்டவுடன் அப்படியே மாறியது எப்படி..?
அவருடன் பணிபுரிந்த காலங்களில் சில மனிதர்களை கையாளும் திறனைக் கண்டு வியந்திருக்கிறான்.
ஆனால் இன்று சொந்த பெண்ணின் முன்பு அவர் காட்டிய வேறுபாட்டை சற்று பயத்துடனே கவனித்தான்..இந்த பெண்ணும் சிறிய தந்தைக் கண்டதும் கணவன் ஓருவன் இருப்பதையே மறந்து விட்டாளே..ஒரு வாரம் கழித்து தானே அவர்கள் வீட்டு விசேஷம் அதற்குள் மாறிவிடுவாளா…இல்லை மாற்றி விடுவார்களா..? என்றெல்லாம் மனம் கண்டபடி யோசித்தது…அதை கட்டுக்குள் கொண்டு வர அரும்பாடு பட்டான்.
ஆனாலும் அவனின் ஆழ்மனம் அவனுக்கு அறிவுறுத்தியது… ஏதோ ஒன்று தவறாக தெரிகிறது என்ன என்று அப்பொழுது அவனால் உணர முடியவில்லை .
விஷேசம் முடிந்ததும் வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறாள்…அது வரை அவளின் நினைவாக காத்திருக்கலாம் என முடிவு செய்தான்.

Last edited: