கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இரட்டை எழுத்தாளர்கள் நாவல் போட்டி

siteadmin

Administrator
Staff member
சங்கமம் குழுமத்தின் அடுத்த அறிவிப்பு இதோ..

இரட்டை ரோஜாக்கள்

எங்களுடன் இணைந்து பயணிக்கும், எங்கள் தளத்தில் எழுதும் எழுத்தாள தோழமைகளுக்காக இந்த ‘இரட்டை ரோஜாக்கள்’ போட்டி நடத்த, சங்கமம் குழுமம் தீர்மானித்திருக்கிறது.

இரட்டை ரோஜாக்கள் போட்டியின் விதிமுறைகள் கீழே:


 1. நமது சங்கமம் நாவல்ஸ் தளத்தில் தற்போது தொடர்கதைகள்/ குறுநாவல்கள் எழுதிவரும் எழுத்தாளர்களுக்கு மட்டுமே இந்தப் போட்டி.(15.09.2020 க்குள்). தங்கள் படைப்புக்களை இங்கே தற்பொழுது எழுதி கொண்டிருக்கும் எழுத்தாள பெருமக்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். இது சங்கமம் எழுத்தாளார்களுக்கு மட்டுமே.
 2. எழுத்தாளர்கள் இருவர் இணைந்து எழுத வேண்டும். இரட்டை ரோஜாக்களாய் பூக்க வேண்டும்.
 3. கதையின் கரு உங்கள் இஷ்டம்.. அறிவியல், அமானுஷ்யம், குடும்பம், காதல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
 4. இருவரும் கலந்து ஒரு கதைதான் எழுத வேண்டும்... ஆனால், ஒருவர் ஒரு கதை மட்டுமே ஜோடியுடன் எழுத அனுமதி. எழுத்தாளர்களே, சரியாக கவனியுங்கள்.
 5. யார் யாருடன் சேருவது என்பது எழுத்தாளர்களின் தனிப்பட்ட விருப்பம். அதில் சங்கமம் குழுவின் தலையீடு நிச்சயம் இருக்காது.
 6. கதையின் வார்த்தைகளின் அளவீடு 30000-40000 க்குள் இருக்க வேண்டும். கதையின் தேவைக்காக, அதிகபட்சமாக இருநூறு வார்த்தைகள் கூடலாம். ஆனால், நிச்சயம் வார்த்தைகள் 30000 கீழே குறையக்கூடாது.
 7. பரிசு தொகை நிச்சயம் உண்டு. ரூ.5000 பரிசுத்தொகை..(மொத்தம் ரூ.5000+5000) இரு ஜோடிகளுக்கு. சிறந்த இரண்டு.. இரு குழுவுக்கும் தலா ரூ.5000. பரிசுத் தொகையை ஜோடிகள் தங்களுக்குள் பிரித்துக் கொள்ள வேண்டும்.
 8. இதைத்தவிர, கதை முடிந்தவுடன் அக்கதையை நம் அச்சகம், பதிப்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது.. புதுவருடத்தில் அக்கதை அச்சேறும்.
 9. புதுப்பிக்கப்படும் கதைகள் அனைத்திற்கும், நிச்சயம் எழுத்தாளர்களுக்கான சன்மானம் உண்டு. அதுவும் இரட்டை ரோஜாக்களுக்கும் பகிர்ந்துதான் அளிக்கப்படும். (ஃபாரம் ஒன்றுக்கு ரூ 200/-)
 10. உங்கள் ஜோடியைப்பற்றிய விவரங்களும், கதையின் தலைப்பையையும் செப்டம்பர் 15, 2020 க்குள் தகவல் சொல்ல வேண்டும். எங்கள் தனிப்பட்ட மெயில் ஐ.டியில் தெரிவிக்கவும். அல்லது வாட்சப்பில்.
 11. கதை தொடங்கும் நாள் அக்டோபர் 1 முதல்… ஜனவரி 15 வரையில் மட்டுமே..
 12. வாரம் ஒரு பதிவாவது அவசியம் இருத்தல் வேண்டும். மற்றபடி தினம் ஒரு பதிவு கொடுத்தாலும் சம்மதமே.
 13. உங்கள் கதைகளை நீங்களே தளத்தில் பதிவிடலாம்..
 14. Word Doc. ல் 10 புள்ளியில் கதைகளை எழுதி, நம் தளத்தில் தயவுசெய்து Font 18 அல்லது 22 ல் பதிவேற்ற வேண்டும்.
முடிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
 
Last edited:
Top