கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஈரம் - சிறுகதை

Rajasree Murali

Moderator
Staff member
ஈரம்

காலை ஏழு மணிக்கு அந்த வீட்டின் முன்பு அந்த தெருவை சேர்ந்தவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருக்க போலீஸ் ஜீப்பை பார்த்தவுடன் விலகி நின்றனர். ஜீப்பில் இருந்து நான்கு பேர் இறங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளை பார்த்து முதல்ல யார் பார்த்தாங்கன்னு விசாரிங்க, கும்பலை கலைந்து போக சொல்லுங்க ஆம்புலன்சுக்கு போன் பண்ணுங்க என்று மடமடவென உத்தரவு போட்டபடியே சுற்றி இருந்த கும்பலை பார்த்தவர் சார் இவன் தான் முதல்ல பார்த்தானாம் என்று இருபது வயது இளைஞரை அழைத்து வந்தார். யாருப்பா நீ எப்ப பார்த்தே சொல்லு என்றவுடன் அவன் பயந்தபடியே நடுங்கும் குரலில் சார் வழக்கமா இந்த ஏரியாவுல நிறைய வீட்டுக்கு பால் பாக்கெட் போடுறது என் வேலை. இன்னைக்கு காலைல வழக்கம் போல இந்த வீட்டுக்கு பால் போட வரும் போது பாதி கதவு திறந்தே இருந்துச்சு. பாப்பா வாசல்ல நின்னு அழுதுன்னு இருந்துச்சு. பால் போட்டுட்டு வெளியிலிருந்தே அக்கா அக்கான்னு கூப்பிட்டேன். பதிலே இல்லை. பாப்பாவை தனியா விட்டுட்டு போக மனசில்லை. சைக்கிளை விட்டு கீழே இறங்கி திரும்பவும் சார் சார்னு கூப்பிட்டு பார்த்தேன். அப்பவும் பதில் இல்லாததால் சாத்தியிந்த கதவை லைட்டா தள்ளினேன். அதிர்ச்சியில் எனக்கு குரலே வரல சார். ஆமாம் சார், அக்காவும் அய்யாவும் நடு வீட்டுல தூக்கில தொங்கிட்டு இருந்தாங்க. என்ன பண்றதுன்னு புரியாம அக்கம் பக்கம் குரல் கொடுத்து யாராவது வாங்கன்னு கத்தினேன் சார். ஓடி வந்தவங்க பார்த்துட்டு யாரோ போலீசுக்கு போன் பண்ணியிருக்காங்க சார். மத்தபடி எனக்கு ஒன்னும் தெரியாது சார் என்று நடுக்கத்துடன் சொன்னான்.

கான்ஸ்டபிள் உள்ள போய் பாருங்க என்றவரின் கண்களில் ஒன்றரை வயது குழந்தை விடாமல் அழுவதும் அருகில் நிற்கும் பெண் கான்ஸ்டபிள் பவித்ரா அந்த குழந்தையை தூக்கி சமாதானம் செய்வதும் தெரிந்து, பவித்ரா இங்க வாம்மா, இந்த குழந்தை? சார் இறந்து போன இரண்டு பேரோட குழந்தை, பாக்க பாவமா இருக்கு என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உள்ளே போன கான்ஸ்டபிள் அருகில் வந்து, சார் இந்த லெட்டர் இறந்து போன அந்த பெண்ணின் கையில் இருந்தது என்றார். நாங்க ஒருவரை ஒருவர் மனதார காதலிச்சு ரெண்டு பேர் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்துகிட்டோம். ஆனா தொடர்ந்து வறுமை, அவர் பார்த்துக்கிட்டிருந்த வேலையும் போனதால கடன் தொல்லை அதிகமாச்சு. வேறு வழி தெரியாம தான் ரெண்டு பேரும் இந்த முடிவுக்கு வந்தோம். இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. எங்க குழந்தையை விட்டு போக மனமில்லாமல் போகிறோம். படித்து முடித்தவுடன், இவங்க இரண்டு பேரோட பெற்றோர்களுக்கு தகவல் கொடுங்க என்றவுடன், சார் இந்த கும்பல்ல தான் இருக்காங்க என்று அந்த நால்வரையும் கான்ஸ்டபிள் அழைத்து வந்தார்.

வந்த அந்த நால்வரும் இன்ஸ்பெக்டரிடம், சார் எங்களை வேணாம்னு ஒதுக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிகிட்டாங்க. இவங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அனாதைங்க சொல்லி அடக்கம் பண்ணிடுங்க, குழந்தையை ஏதாவது அனாதை அசிரமத்தில் சேர்த்துடுங்க என்று கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் பேசிவிட்டு திரும்பி பார்க்காமல் நடையை கட்டினர். கான்ஸ்டபிளை அழைத்து இரண்டு பேரோட உடலையும் ஆம்புலன்ஸில் ஏற்றி பிரேத பரிசோதனைக்கு ஜி.எச்சுக்கு அனுப்பி கார்பொரேஷனுக்கு தகவல் சொல்லி அடக்கம் செய்ய ஏற்பாடு பண்ணிடுங்க. அப்புறம் இந்த குழந்தையை அரசாங்க அனாதை விடுதியில் கொண்டு விட்டுடுங்க. எல்லா பார்மாலிடீசையும் முடிச்சுட்டு எனக்கு தகவல் கொடுங்க என்று ஜீப்பில் ஏறிய இன்ஸ்பெக்டர் அங்கு கான்ஸ்டபிள் பவித்ரா அந்த குழந்தைக்கு பிஸ்கட் ஊட்டிக்கொண்டிருந்ததை பார்த்து, பவித்ரா குழந்தையை கீழே இறக்கி விடும்மா என்றார்.

சார் நீங்க சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். அப்பா அம்மா செய்த தப்புக்கு இந்த குழந்தை என்ன பண்ணும் சார். அதனால என்று நிறுத்தி விட்டு அவரை பார்த்தாள். என்னம்மா சொல்ல வரே என்றார் இன்ஸ்பெக்டர். சார் நானும் இதே போல அப்பா அம்மா யாருன்னு தெரியாம அனாதை ஆசிரமத்தில் தான் சார் வளர்ந்தேன். கஷ்டப்பட்டு படிச்சி இப்ப ஓரளவு நல்லா இருக்கேன் சார். ஆனா எனக்குன்னு யாரும் உறவு கிடையாது. நானும் என் கணவரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவருக்கும் உறவுன்னு சொல்லிக்கொள்ள என்னைத்தவிர யாரும் இல்லை. அதனால இந்த குழந்தையை நானே வளர்த்துகிறேன் சார் என்றாள். உடனே அவர், என்னம்மா உளர்றே, நாம போட்டுக்கிட்டு இருக்கிற யூனிபார்ம் மாதிரி தான் நம்ம மனசையும் வச்சுக்கனும். போகிற இடமெல்லாம் கஷ்டமும் சங்கடங்களும் இருக்கும் தான். நம்ம கடமையை செய்துட்டு போய்க்கிட்டே இருக்கணும் பவித்ரா. உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவுக்கும் வராதே. என்னை உன் அப்பா மாதிரி நினைச்சு நான் சொல்றதை கேளு என்றார். சார் இந்த குழந்தையை தத்து எடுத்துக்கிறேன்னு நான் சொன்ன நேரம் எனக்கு அப்பான்னு ஒரு புது உறவு கிடைச்சிடுச்சு பார்த்தீங்களா. சார் எனக்கு சில உடல் உபாதைகளால் இனிமேல் குழந்தை பெற்று கொள்ள முடியாதுன்னு டாக்டர்கள் கை விரித்த நிலையில் நானும் என் கணவரும் ஏதாவது ஒரு குழந்தையை தத்து எடுக்கும் முடிவு எடுத்து அடுத்த வாரம் நான் வளர்ந்த ஹோமுக்கு போகலாமுன்னு இருந்தோம். ஆனா இந்த குழந்தையை பார்த்த பிறகு என் மனதை மாற்றி கொண்டேன். சட்டப்படி இவளையே நான் தத்து எடுக்க நீங்க தான் சார் உதவி செய்ய வேண்டும். பவித்ரா உன்னை நினைச்சா எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கும்மா. கண்டிப்பா இந்த குட்டி பெண்ணையே நீ தத்து எடுத்துக்கொள்ள சட்டப்படி என்னுடைய உதவி உனக்கு உண்டும்மா என்றார். பவித்ரா சந்தோஷமாக குட்டி பெண்ணை கொஞ்சியபடி நம்ம வீட்டுக்கு போலாமா குட்டி என்று அவளை சேர்த்தணைத்தபடி முத்தமிட்டாள்.
 

Sethu

New member
ஆதரவற்றோர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் போது சில நல்லோர்களின் உறவும் தேடி வந்து விடுகிறது, தன்னை தந்தையாக நினைக்க சொன்ன மேலதிகாரிக்கு கான்ஸ்டபிள் மேடம் கொடுத்த பதில் ரசிக்க வைத்தது. தொடர்ந்து எழுதுங்கள் அம்மா.

அன்புடன்
சேது மாதவன்
 
Top