கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிரின் வ(ழி)லி -1

Akila vaikundam

Moderator
Staff member
உயிரின் வ(ழி)லி

1

ஆண்டு 2013


கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதியான வடவள்ளியில் நடுத்தர வர்க்கம் அதிகளவில் குடியிருக்கும் ஒரு பகுதி…

ஒரு ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் அனைத்து குடும்பங்களும் வாரம் முழுவதும் உழைத்த களைப்பில் உறங்கிக் கொண்டிருக்க ஒரு குடும்பத்தில் மட்டும் அணைவருமே அந்த அதிகாலை வேளையில் பரபரப்பாக இருந்தனர்.

அந்த குடும்பத்தில் மொத்தமே நான்கு பேர்தான் குடும்பத்தலைவர்
கேசவன் வயது ஐம்பத்தி நான்கு ஒரு தனியார் கம்பெனியில் கணக்காளராக இருப்பவர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவருக்கு ரிட்டயர்மென்ட் அவரின் மனைவி ராஜாத்தி வயது ஐம்பது இல்லத்தரசி மூத்தவன் செல்வராகவன் வயது இருபத்தி எட்டு எம்.காம் வரை படித்தவன் தனியார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் மேனேஜராக பணிபுரிகிறான்,


ஐந்தரை அடியில் கம்பீரமான ஆண்மகன் மாநிறம், வட்டமுகம், சுருள் முடி கொண்டு வசிகரிப்பவன் சிகரெட் வாசம் அறியாத உதடுகள் கணிசமான சம்பளம் கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாதவன் சம்பளத்தை அப்படியே தாயிடம் கொடுத்துவிட்டு அன்றாட தேவைகளுக்கு வாங்கிச் செல்பவன், பொறுப்பானவன்,வெகுளிதனம் கொண்டவன்
அமைதியானவனும் கூட


இளையவன் விஜயராகவன் வயது இருபது அண்ணனை விட எட்டு ஆண்டுகள் இளையவன் , அவனின் அண்ணனை விட நன்கு உயரம் ஆறடிக்கு சற்று குறைவு ,நன்கு சிவந்த நிற மேனி ,விட்டிலேயே உடற்பயிற்சி செய்வதால் நன்கு உருண்டு திரண்ட மேனி ,நவீன பார்பர் ஷாப்பின் மகிமையால் புதிய ரக சிகையலங்காரத்திற்கு சொந்தக்காரன்,


வீட்டின் கடைக்குட்டி விளையாட்டு பிள்ளை தனியார் கல்லூரியில் நிர்வாக மேலாண்மை இரண்டாம் ஆண்டு படிப்பவன் படிப்பில் சுட்டி
நாளையை பற்றி கவலை கொள்ளாதவன் இன்றைய வாழ்க்கையை ரசித்து வாழ்பவன்
இயற்கையை நேசிப்பவன் குடும்ப கஷ்டம் அறியாதவன் , தாய்க்குத் தெரியாமல் அவ்வப்போது திருட்டு தம் , பீர் எல்லாம் உண்டு... நல்ல செலவாளி, தன்னை எப்பொழுதுமே ஆரம்பரமாக காட்டிக்கொள்வான்

அவ்வப்போது தந்தையிடம் திட்டு வாங்கும் போதெல்லாம் தாயால் காப்பாற்றப்படுவான்,ஆனால் நியாயவாதி தவறு ஏதும் செய்துவிட்டால் அதற்காக மன்னிப்பு கேட்க தயங்க மாட்டான் தனது தாயிடம் எதையும் மறைக்கவும் மாட்டான் அவனின் முதல் பெண் தோழி யார் என்று கேட்டால் அவனின் தாயை தான் கூறுவான் அந்தளவுக்கு தன் தாயிடம் மிக நெருக்கம் பெண் தோழிகள் அதிகம் அனைவரையும் ஒரு போல சமாளிப்பவன் ,அதேநேரம் பெண்களை மதிப்பவனும் கூட,எல்லை தெரிந்து பழகுவான், பொறுப்பற்றவன் என்று தந்தையால் பாராட்ட படுபவன்…

இப்பொழுது அவன் சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கும் தாயின் காதை நச்சரித்துக் கொண்டிருக்கிறான்.


அம்மா இவ்ளோ காலையில எங்கம்மா கிளம்பிடீங்க சொல்லுங்கம்மா சொன்னா நானும் கிளம்புவேன்ல

இங்க பாரு விஜய் நீ கிளம்ப கூடாதுன்னு தான் நான் உன்கிட்ட சொல்லவே இல்ல

இது அநியாயமா எங்கிட்ட சொல்லாம அப்படின்னு போடுவீங்களா சொல்லுங்க நீங்க சொல்லலைன்னா நான் விடமாட்டேன் என்று அடுப்பை அணைத்து விட்டு வெளியே செல்லும் ராஜாத்திக்கு இடையில் கை விட்டு மறித்தபடி நின்றான்

காலையிலேயே என்கூட விளையாடாத விஜய் முதல்ல தள்ளிப் போட இன்னைக்கு உன் அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம்….

எனது அண்ணனுக்கு பொண்ணு பாக்க போறீங்களா இதையே ஏன் முனாடியே என்கிட்ட சொல்லல நானும் இருங்க நானும் கிளம்பறேன்


ஒன்னும் வர வேண்டாம் நீயும் அப்பாவும் ஒழுங்கா வீட்டுல இருங்க உன் வண்டி சாவிய உன் அண்ணன் கையில குடு நானும் அண்ணனும் போய்ட்டு வந்திடறோம்.

வண்டி சாவி எல்லாம் தர முடியாது நான் கொஞ்ச நேரத்துல பிரண்டோட கிரிக்கெட் விளையாடப் போகனும் வண்டி இல்லனா போகமுடியாது அண்ணனை அவன் வண்டியில கூட்டிட்டு போக சொல்லு ‌…


வம்பு பண்ணாத விஜய் அந்த டிவிஎஸ் பிப்டில போனோ பார்க்க வந்த பொண்ணு வீட்டுக்காரங்க வண்டிய பார்த்துமே உன் அண்ணனுக்கு பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிடு வாங்க உன் வண்டினா கொஞ்சம் பெருசா கெத்தா இருக்கும் அதான் முதல்ல சாவிய குடு….


முடியாதுமா நா தரமாட்டேன் இன்னைக்கு எனக்கு வேணும்


அடிவாங்க போற விஜய்... ஆபீஸ் போறதுக்காக லோன் போட்டு அவன் வாங்கின வண்டியை காலேஜுக்கு வேணும்னு அவனை ஏமாத்தி வாங்கி ஓட்டிகிட்டு இருக்க பாவம் அவன் உங்கப்பா ஒட்டின டிவிஎஸ் பிப்டி ல ஆபிஸ் போறான்...உங்க அப்பா பஸ்ல போறாங்க எல்லாம் உன்னால தான்


ஒழுங்கா காலேஜ்க்கு பஸ்ல போனு சொன்னா கேட்காம உன் ஒருத்தனோட சந்தோஷத்துக்காக அத்தனை பேரும் கஷ்டப்பட்டு இருக்காங்க
இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ஒழுங்கா வண்டியை குடுத்திடு
இல்ல அவன் வண்டியை அவனுக்கு குடுத்துட்டு நீ காலேஜ்க்கு பஸ்ல போய்க்கோ என்று மிரட்டினார்.


என்ன
ராஜாத்தி ஏதோ சின்ன பையன் தெரியாம வண்டி சாவி தர மாட்டேன்னு சொன்னா உடனே கோபப்பட்டு வண்டியையே புடுங்க பாக்கறியே தப்பில்லையா இப்ப என்ன உன் பெரிய பையன் கோயில் வாசல்ல வந்து கெத்தா இறங்கணும் அவ்வளவுதானே இறங்குவான் என்று தாயை சமாதானம் செய்ய


அப்படி வா வழிக்கு கொஞ்சம் தள்ளு நான் போய் புடவை மாத்திட்டு கிளம்பனும் என்று அவரின் தாய் படுக்கை அறையின் உள்ளே செல்ல இவன் வெளியே காத்திருக்க வேண்டியதாகி விட்டது ஆம் அவர்களின் வீடு ஒற்றை படுக்கையறை,ஒரு சமையலறை,கொஞ்சம் பெரிய ஹால்,ஒரு பூஜை அறையை மட்டும் கொண்ட ஒரு சாதாரண நடுத்தர வர்கத்தின் வீடு


வெளிய நின்றபடியே பூட்டிய அறையின் உள்ளே நின்ற தாயிடம்


சரி அம்மா பொண்ணு பாக்கப் போறீங்க ளே பொண்ணோட பேரு, என்ன படிச்சிருக்காங்க, இதெல்லாம் என்கிட்ட சொல்ல மாட்டீங்களா என்று வெளியே இருந்தபடி தனது தாயிடம் கேட்க

மாட்டேன் என்று உள்ளிருந்து பதில் வந்தது‌.


அட்லீஸ்ட் பேரு மட்டும் சொல்லுங்க


அட்லீஸ்ட் அவங்க போட்டோ மட்டுமாவது ….அண்ணனோட வருங்கால மனைவி எப்படி இருக்கிறாங்கனு தெரிஞ்சிப்பேன்ல



அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற இத்தனை வருஷம் கழிச்சு அவனுக்கு இப்பதான் ஒரு வரன் தகிச்சி வர்ற மாதிரி இருக்கு
அதனால எல்லா பேச்சி வார்த்தையும் முடிஞ்சி கல்யாணம் ஆகி உன் அண்ணி வரும் போது தெரிஞ்சிக்கோ என்று பதில் வர



உங்ககிட்ட கேட்டா எல்லாம் பதில் வராது யார்கிட்ட பேசினா பதில் வருமோ அவங்க மூலமாவே நான் கேட்டுக்கறேன் என்றபடி அவனின் தந்தையைத் தேடிச் சென்றான்


கேசவன் வாசலில் அமர்ந்தபடி அன்றைய செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருக்க அவரின் அருகிலேயே நின்றபடி

அப்பா என்று கூப்பிட

சொல்லுடா சின்னவனே

வீட்ல அண்ணனுக்கு கல்யாணம் போல பொண்ண நீங்க பாக்க போகலையா என்று கேட்டான்.

நா எதுக்குடா அங்க கட்டிக்க போறவன் உன் அண்ணன் அவன் பார்த்தா பத்ததா?

பத்தாது பா இந்த வீட்டோட குடும்பத்தலைவன் நீங்க

நீங்க தான முதல்ல போகணும் நீங்க பார்க்க போகலைன்னா பொண்ணு வீட்ல என்ன நினைப்பாங்க தெரியுமா

அந்த வீட்டு ஆம்பள மிச்சர் சாப்பிடுற கேசுன்னு நினைப்பாங்க ,
இப்பவே தப்பா நினைச்சா வர்ற அண்ணி எப்படி உங்கள் மதிப்பாங்க

அதனால உங்க கெத்த மெயின்டன் பண்ணுங்க என்று கூறியபடி அவன் எந்திரிக்க

அவனின் தாய் பின் நின்று கொண்டிருந்தான் அவனின் காதை பிடித்து திருகி நீ அடங்கவே மாட்டியா டா எதுக்குடா உங்க அப்பாவ தூண்டி விடற என்று வலிப்பது போல் காதை திருகி விட

ஆஆஆ அம்மா வலிக்குது விடுங்க என்று அவரிடம் இருந்து விடுவித்தவன்

நான் என்ன கேட்டேன் உங்ககிட்ட அண்ணியோட போட்டோவ தானே கேட்டேன்
ஆனா நீங்க கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம்
மொத்தமா பாத்துக்க சொன்னா கோவம் வராதா அதான் அப்பாவ தூண்டிவிட்டேன் என்று பதிலுக்கு அவருடன் மல்லுகட்ட


உடனே கேசவனும் பேப்பரை மடித்து வைத்தவர் ராஜாத்தி நீ ஆயிரம் காரணம் சொன்னாலும் சின்னவன் சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது


பொண்ணு பார்க்க வரதுக்கே நான் வரலைன்னா அந்த குடும்பம் பின்னாடி என்னை எப்படி மதிக்கும் சொல்லு

அதனால நானும் வரதா முடிவு பண்ணிட்டேன் என்று கூறியபடி அவர் உள்ளே செல்ல

இவரோ கோபத்துடன் விஜயின் முதுகில் இரண்டு அடி வைத்தார்


ஏண்டா ஒரு போட்டோ காமிக்கலனு இத்தனை அக்கபோரா டா விட்டா எனக்கும் உங்க அப்பாவுக்கும் கோர்ட்டுக்கு போகாமலே விவாகரத்து வாங்கிக் கொடுத்திருவ போல இருக்கு


வாய்பேசாத மனுஷன வாய்ப் பேச வைச்சிட்டல்ல என்று அவனின் வாயிலே ஒன்று போட்டார்.


சரி அண்ணி பேராவது சொல்லுங்கம்மா பேர் பொருத்தம் எப்படியிருக்குனு சொல்லறேன்

அப்பப்பா... சொல்லலைன்னா விட மாட்டியே சரியான உடும்பு டா நீ அவ பேரு மீனா போதுமா போட்டோ எல்லாம் என்கிட்ட இல்ல அண்ணன் போன்ல இருக்கு அவன் கடைக்கு போயிருக்கான் வந்ததும் வாங்கி பாரு என்று அவர் உள்ளே சென்றுவிட


செல்வராகவன்,மீனா ம்ம்...ஒகேதான் நாட் பேட் என்று வாய்க்குள்ளாகவே சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் அவனின் அண்ணன் செல்வராகவன் தனது டிவிஎஸ் பைக்கில் இருந்து இறங்கினான்


அவன் உயரத்திற்கும் அவனின் உடல்வாகுக்கும் அந்த வண்டி மிகவும் சிறியதாக தெரிந்தது சாதாரண காட்டன் வேட்டியை மடித்து கட்டியிருந்தான் மேலே காலர் வைத்த ஒரு டீ சர்ட் அணிந்திருந்தான் பாக்கெட்டில் அவனின் சாம்சங் ஆன்ராய்டு ஃபோன் கச்சிதமாக இருந்தது.

டிவிஎஸ் பிப்டியினை ஸ்டேன்ட் போட்டவன் வேட்டியினை இறக்கி விட்டான் பிறகு வண்டியின் முன்புறம் மாட்டியிருந்த இரண்டு கேரி பேக்கை தூக்கிய படி உள்ளே வர

பார்த்துக்கொண்டிருந்த விஜயோ அவனின் கையில் இருந்த பையை வாங்கியபடி அண்ணா பொண்ணு போட்டோ பாக்கணும் அதனால ஃபோன் எடுத்துக்கறேன் என்று அவனின் பதிலை எதிர்பார்க்காமல் சட்டென்று அவனின் சட்டை பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தான்

அனிச்சை செயலாக செல்வராகவன் கைக்கொண்டு பாக்கெட்டை மூடும் முன் விஜய்யின் கையில் செல்வாவின் போன் இருந்தது இந்தா கவர் என்று சற்று முன் அவன் கையிலிருந்து வாங்கப்பட்ட கவரையும் செல்வாவின் கையில் திணித்துவிட்டு விஜய்
நகர

சமையலறையிலிருந்து சத்தம் கேட்டு முன்பு வந்த ராஜாத்தி விஜயை மறித்து நின்றவர் முதல்ல ஃபோனை அவன் கைல குடு என்று கூறினார்

உடனே விஜய்யோ போட்டோ பார்க்கணுமா ஃபோனை குடுத்தா எப்படி போட்டோ பார்க்கிறது என்று சண்டையிட


அதற்கு அவரோ உன்னோட ஃபோனை யார்கிட்டயாவது நீ குடுக்குறியா,ஒரு ஃகால் பண்ணறதுக்கு கூட தர்றதில்ல கேட்டா உன்னோட பிரைவ,சி உன்னோட பர்சனல்னு வாய் மட்டும் பேச தெரியுது இல்ல அதே போல தான் அவனுக்கும்


முதல்ல அவன் ஃபோனை கையில குடு என்று ராஜாத்தி மிரட்ட அதற்குள் செல்வா குறுக்கிட்டு அம்மா ஃபோன் தானே போட்டோ பாத்துட்டு தரபோறான் அதுல வேற ஒன்னும் இருக்காது என்று செல்வா கூற


உன் ஃபோனுல ஏதாவது இருந்தா தான் அதிசயம் இல்லனா அதிசயமே கிடையாது சரியான தயிர்சாதம்...என்று அவனின் அண்ணனை கேலி செய்தபடி உள்ளே செல்ல

பாரு எப்படி வாய் பேசிட்டு போறான்னு அவனுக்கு சப்போர்ட் பண்ணற நீ ...

சரி கவரை குடு சொன்னதெல்லாம் வாங்கிட்டு வந்தியா என்று கேட்டபடியே ராஜாத்தி கை நீட்ட


செல்வாவும் கையில் இருந்த கவரை தனது தாயிடம் கொடுத்தான்.


அம்மா நீங்க கேட்டது போல பூவும் ஸ்வீட்டும் வாங்கிட்டேன் வேற ஏதாவது வேணுமா என்று கேட்க


இதுவே போதும்டா மொதல்ல நீ உள்ள போய் குளிச்சிட்டு கிளம்பு நான் எல்லாருக்கும் டிஃபன் எடுத்து வைக்கிறேன் சாப்பிட்டு முடிச்சிட்டு நீயும் நானும் போயிட்டு வந்துடலாம்


உங்க அப்பா வேற வர்ற ன்னு சொல்லிட்டு இருக்காங்க அப்படி அப்பா வர்ற மாதிரி இருந்தா நானும் அப்பாவும் சின்ன வண்டில வரோம் நீ பெரிய வண்டியில வா என்று கூற


உடனே செல்வாவும் அம்மா அப்பா வர்ற மாதிரி இருந்தா விஜயையும் கூட கூட்டிட்டு போகலாம் மா எதுக்கு அவனை மட்டும் வீட்ல விட்டுட்டு போகணும் என்று செல்வா தம்பிக்காக வக்காலத்து வாங்க


அதற்கு ராஜாத்தி டேய் அவன் வாய் ஒயாம பேசிக்கிட்டே இருப்பான் நம்மளால ஃபிரியா பேசக்கூட முடியாது டா


எனக்கு உங்க அப்பா வர்றதே பிடிக்கல நீயும் நானும் மட்டும் போனோமா பார்த்தோமா பொண்ணு தலையில இந்த பூவை வைச்சிட்டு வந்தோமானு இருக்கலாம் எதுக்கு தேவை இல்லாம எல்லாரும் போகனும்


ஏற்கனவே உனக்கு வயசு ஏறிக்கிட்டே இருக்குது எனக்கு அந்த கவலை வேற என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே

சரி அம்மா உடனே உங்க புலம்பலை ஆரம்பிக்காதீங்க நான் போய் கிளம்புறேன் என்று அவன் உள்ளே போகவும்


விஜய்யோ அண்ணா இந்தா போன பிடிச்சுக்கோ என்று ஃபோனை தூக்கி வீச செல்வா கடினப்பட்டு அதை பிடித்தான்‌.


ராஜாத்தி விஜயிடம் அடங்கவே மாட்டியா டா நீ ஃபோனை வாங்கும் போதும் ஒரு முறையில்ல திருப்பி குடுக்கும் போதும் ஒரு முறையில்ல

அவனே பாவம் இப்பதான் செகண்ட்ஸ்ல அந்த மொபைல் வாங்கி வைச்சிருக்கான் அதையும் நீ கீழே தூக்கிப் போட்டு உடைச்சா அவன் வேற மொபைலுக்கு எங்க போவோம்


ஹான்...உன் பெரியபிள்ளை சம்பளம் வாங்குறான்ல அந்த சம்பளத்துல புதுசா போனை வாங்க சொல்லு என்று விஜய் நக்கலடிக்க


ஏன் பேச மாட்ட வாய் கூசாம மூன்றாயிரம் ரூபாய் வாங்கிட்டு போய் நல்லா இருந்த தலை முடியை தீச்சிட்டு வந்து நிக்கறல்ல பேச மாட்ட நீ…


அடுத்த முறை பணம் கேட்டு வருவல்ல அப்போ அந்த பணத்தை கட் பண்ணிட்டு நான் பெரியவனுக்கு புது போன் வாங்கி கொடுக்கிறேன் என்று ராஜாத்தி பேசியபடி உள்ளே வர உடனே அவனும் தாயின் தோள்களை பிடித்தபடியே


அம்மா... அம்மா…. என்னம்மா இருக்கீங்க உங்க கிட்ட ஏதுமே ஜாலியா பேச முடியல தெரியுமா என்று செல்லம் கொஞ்சியவன்


என்னடா ஜாலி எப்போ பாத்தாலும் பெரியவன நக்கல் பேசிக்கிட்டு
அவன் அப்படி இருக்கறதுனால தான் நீ இப்படி ஆடம்பரமா சுத்தற உனக்கு லேட்டஸ்ட் ஃபோன் வாங்கி தந்துட்டு அவன் செகண்ட் ஸ்ல ஃபோன் வாங்கிருக்கான்


நீ போற அதே பார்பர் ஷாப்புக்கு தான் அவனும் போறான் அவன் தலைமுடி வெட்டிக்க வெறும் நூறு ரூவாய் ஆனா நீ இந்த முடிய தீச்சிக்க மூன்றாயிரம் ரூபாய்

அவ்ளோ பெரிய கம்பெனியில் மேனேஜரா இருக்கான் ஆனால் அவன் எந்த மாதிரி வண்டில போறான் ஆனா நீ எந்த வண்டியில போயிட்டு இருக்கேன் போடா உனக்கு நான் சொன்னாலாம் அவன் அருமை தெரியாது உனக்கே ஒரு நாள் புரியும் என்று ராஜாத்தி கோபப்பட




சரி கோவிச்சிக்காத ராஜாத்தி நாம வேற பேசலாம் ஆமா பொண்ணு என்ன ரொம்ப சின்னதா இருக்கு படிச்சிட்டு இருக்கா என்ன??


இல்லனா பழைய போட்டோவா என்று கேட்க


படிச்சிட்டு தான் இருந்தா
போல ,முத வருஷம் மட்டும் கொஞ்ச நாள் காலேஜ் போனாளாம் இப்போ போறதில்லையாம்

அதிர்ச்சியில் விஜய் எனது காலேஜ் போற பொண்ணா அப்போ அவங்க வயசு என்ன என்று கேட்க

பதினெட்டு இப்போதான் முடிஞ்சதா புரோக்கர் சொன்னாரு

சொன்னாருன்னா??? அப்போ நீங்க ஜாதகமே பாக்கலையா ?
ஜாதகத்தில வயசு இருக்கும்ல


ஆமாடா இனி ஜாதகம் பார்த்து அது பொருந்தி அதுக்கப்புறம் உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணனும்னா அறுபதாம் கல்யாணம் தான் பண்ணனும் அதான் உங்க அண்ணனுக்கு ஜாதகம் இல்லைன்னு பொய் சொல்லியாச்சி


அதுமட்டுமில்லாம உங்க அண்ணனுக்கு இருபத்திஐஞ்சு வயசுனு தான் சொல்லி இருக்கு எங்காவது விளையாட்டா அங்க வந்து உளறி வைக்காதே என்று கூற



அம்மா இது அநியாயம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வைக்க போறிங்களா என்று விஜய் கேட்க


ஆயிரம் பொய்ய சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணலாம்னு பெரியவங்களே சொல்லிருக்காங்க நா ரெண்டு பொய் தான் சொல்லறேன் ஜாதகத்தையும் பையன் வயசையும் தான் அதனால இது பொய் கணக்குல சேராது போடா என்றார் ராஜாத்தி


இது பொய் கணக்குல வராதா ராஜாத்தி நம்ம
அண்ணனுக்கு அந்த பொண்ணுக்கு பத்து வயது வித்தியாசம் அது ரொம்ப சின்ன பொண்ணு மா வேற பாருங்க என்று இவன் ஆதங்கத்தில் கூற

சத்தம் போடாதடா கொஞ்சம் மெதுவா பேசு உன் அண்ணனுக்கு தெரிஞ்சிதுன்னா அப்புறம் பொண்ணு பார்க்க வரமாட்டான்.

அப்போ அண்ணன் கிட்ட என்ன பொய் சொல்லி வச்சிருக்கீங்க எப்படியும் காலேஜ் போய் டிஸ்கனெக்ட் பண்ணது தெரிஞ்சிருக்கும் இல்லை என்று இவன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு கூற


ரொம்ப புத்திசாலித்தனமா பேசாதடா உன் அண்ணன் உன்ன மாதிரி கிடையாது எல்லாத்துக்கும் கூட கூட பேச மாட்டான் நான் என்ன சொன்னாலும் மறுபேச்சு பேசாம வாய மூடிட்டு கேட்டுப்பார் போதுமா அதெல்லாம் நான் அவகிட்ட சொல்லி புரிய வெச்சுக்குவேன் தயவு செஞ்சு நீ எதுவும் குழப்பி விடாத அது போதும்


ஏன்மா இப்படி பேசறீங்க நீங்க சரியில்ல என்னவோ பண்ணுங்க போங்க...என்று விஜய் சலித்த படி கூற


டேய் புரிஞ்சிக்கோடா இதுவரைக்கும் அண்ணனுக்கு எத்தனை பொண்ணு பார்த்தோம் ஒருத்தராவது சரின்னு வந்தாங்களா சொல்லு


ஏன்னா நாம இருக்கிறது வாடகைவீடு உங்க அப்பாவும் பிரைவேட் கம்பெனியில் வேலை

பொண்ணு பாக்க போறதுக்கு முன்னாடியே நம்மல பத்தி வெளிய விசாரிச்சிடறாங்க


மாப்பிள்ளையோட அப்பாவுக்கு ரெண்டு வருஷத்துல ரிட்டயர்மென்ட் ஒரு சொந்த வீடு கிடையாது

அம்மா வீட்டில இருக்காங்க தம்பி படிச்சிட்டு இருக்கான் இத்தனையும் அந்தப் பையனோட சம்பளத்தில்தான் பார்க்கனும்னு அவங்களே யோசிச்சி ஒரு முடிவு பண்ணி பொண்ணு பாக்கவே வர வேணாம்னு சொல்லிடறாங்க

அப்படியே தப்பித்தவறி வீட்டுக்கு வந்தா கூட பையன் நல்ல பையன் தான் நல்ல சம்பளம் தான் ஆனா இந்த ஒத்த ரூம்ல எப்படி எங்க பொண்ணு வந்து குடும்பம் நடத்துவானு மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டு போயிடறாங்க


வேற வீடு பாத்துட்டு போகலாம்னு பாத்தா நம்மளால வாடகை கொடுக்க முடியாது

உன் அப்பா கொண்டு வர சம்பளமும் உன் அண்ணன் கொண்டு வர்ற சம்பளமும் உன் படிப்பு செலவுக்கும் வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே சரியா இருக்கு இதுல பெரிய வீடா பார்த்து போனா எப்படி நம்மளால சமாளிக்க முடியும் சொல்லு


நீ படிப்பை முடிச்சி நீயும் ஒரு நல்ல வேலைக்கு போனா கொஞ்சம் பெரிய வீடா பார்த்துட்டு போகலாம் அதுவரைக்கும் இந்த வீட்டில்தான் இருந்து தான் சமாளிக்கனும், அப்போ அதுக்கேத்த மாதிரி தான பொண்ணு பாக்க முடியும்



இந்த ஒரு குடும்பம்தான் பையன் எப்படி இருந்தாலும் பரவால்ல குடும்பம் எப்படி இருந்தாலும் பரவால்ல ,வீடு எப்படி இருந்தாலும் பரவால்ல எங்க பொண்ணை கட்டிகிட்டா போதும்னு
தேடி வர்றாங்க

அவங்கள வேணாம்னு திரும்பி அனுப்ப சொல்லறியா?என்று கேட்டார் ராஜாத்தி


மாப்பிள்ளை வீட்ல வசதியில்லனு தெரிஞ்சும் குடும்பம் எப்படி இருந்தாலும் பரவால்ல பொண்ணை கட்டிக்கிட்டா போதும்னு வர்றாங்கன்னா அந்த குடும்பத்தில் ஏதோ பிரச்சனை இருக்குன்னு தானே அர்த்தம்


அப்படி இல்லன்னா அந்த பொண்ணு கிட்ட எதாவது பிரச்சினை இருக்கலாம்ல அந்த பொண்ண பத்தி நல்லா விசாரிச்சீங்களா? என்று சந்தேகமாக கேட்டான் விஜய்



வாய்லேயே போட போறேன் விஜய் பொண்ணை ஏதாவது சொன்னா அந்த பொண்ணு தங்கமான பொண்ணுடா இப்பவே குடும்ப கஷ்டம் புரிஞ்சி நடந்துக்குது அதுமில்லாம தம்பி,தங்கச்சிகளுக்காக கல்யாணம் பண்ணிகிது,அவங்க வீட்டுல மூணு பொண்ணுக கடைசியா ஒரு குட்டி தம்பி இந்த பொண்ணு தான் மூத்த பொண்ணு


அவங்க அப்பாவும் எதோ சின்னதா ஒரு எலக்ட்ரிக்கல் கடை வச்சிருக்காரு போல வீடு மட்டும் சொந்தம் அதும் கடன்ல கிடக்குதாம்
அந்த கடையோட வருமானத்தில் தான் குடும்பம் நடத்திட்டு இருக்காங்க இப்போ அவங்க அப்பாக்கு லைட்டா அட்டாக்காம் அடுத்து எதுவும் அவர் உடம்புக்கு வர்றதுக்குள்ள பொண்ணுங்கள எல்லாம் கட்டி கொடுத்துட்டு கடமையை முடிச்சுட்டு போயிடலாம்னு பாக்குறாரு அதனாலதான் படிச்சிட்டு இருக்கிற பிள்ளையோட படிப்பை நிறுத்தி கல்யாணம் பண்ணி வைக்கிறாரு போதுமா

அவங்களை பொறுத்த வரைக்கும் பொண்ண கட்டிக் கொடுத்தா போதும் பொண்ணு வாழ போற இடம் எப்படி இருந்தாலும் பிரச்சினையில்லை


இங்க உன் அண்ணனுக்கு ஒரு பொண்ணு வேணும் அது ஏழையோ இல்லனா பணக்காரியோ எப்படி வந்தாலும் சரி உன் அண்ணனும் நானும் வெச்சுப் சமாளிப்போம்


அவங்களுக்கு வரதட்சணை இல்லாம ஏதாவது ஒரு இழிச்ச வாய் குடும்பத்துக்கு பொண்ணை தள்ளிவிட்டா போதும்

நமக்கு ஏதாவது ஒரு பொண்ணு நம்ம பையணுக்கு கிடைச்சா போதும்


இதுதான் இன்னைக்கு நம்ம நிலமை வாய் பேசாம நீயும் போய் கிளம்பு உன் அண்ணன் நீயும் வரணும் பிரியப் படறான் நீ வண்டி ஓட்டு அவன் பின்னாடி உட்கார்ந்து கிட்டும்
என்றவர்

சரி டிஃபன் எடுத்து வைக்கிறேன் முதல்ல வந்து சாப்பிடு என்றபடி அவர் சென்று விட


முதல்முறையாக முகம் தெரியாத அந்த மீனாவிற்காக மிகவும் கவலைப்பட்டான் விஜய் ராகவன்.


தொடரும்...
 
Last edited:
Top