கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிரின் வ ( ழி) லி-11

Akila vaikundam

Moderator
Staff member
11


மீனா தனிமையில் அமர்ந்து பேசுவதை கண்ட அதிர்ச்சியுடன் விஜய் நேராக அவனின் படுக்கை அறைக்கு செல்ல அங்கு ஹேமா இல்லை


எங்கு சென்று இருப்பாள் என சமையலறை பால்கனி என ஒவ்வொரு இடமாக தேடிப்பார்த்தால் ஹேமாவை காணவில்லை சந்தேகத்துடன் தாயின் அறைக்கு சென்று பார்க்க


அங்குதான் தனது தாயாருடன் சேர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஹேமா.


அவளுக்கோ தனது தாய் ஆப்பிளை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுக்க சீரியல் பார்த்துக் கொண்டே அதை ஹேமா உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்


ஹேமா சாப்பிடுவதோ தனது தாய் அவளை கவனிப்பதோ இப்பொழுது பிரச்சினையில்லை

வீட்டில் இரு மருமகள்கள் இருக்கும்பொழுது ஒருவரை மட்டும் இப்படி தனிப்பட்ட முறையில் கவனிப்பது தவறு என விஜய்க்கு பட்டது


என்ன தான் தனது மனைவி தாய்மை அடைந்து இருந்தாலும் இவர்கள் இருவரும் சேர்ந்து பார்க்கும் அந்த டிவியை மூத்த மருமகளான மீனாவையும் அழைத்து பார்த்திருந்தால் இப்பொழுது அவள் தனிமையில் அமர்ந்து கொண்டு புலம்பிக் கொண்டிருக்க மாட்டாள் அல்லவா

என்று நினைத்தவன் எதுவும் பேசாமல் கதவை திறந்து கதவின் சட்டத்தில் கைகளை கட்டிய படி இருவரையும் அர்த்தத்துடன் ஒரு பார்வை பார்த்தான்.



அதன்பிறகு எதுவுமே கூறாமல் அவனின் படுக்கை அறைக்கு வர ஹேமாவும் அவன் பார்வையின் வித்தியாசத்தை அறிந்து கொண்டு பின்னாடியே வந்தாள்.


என்னாச்சு சீக்கிரமாவே ஆபீஸ்ல இருந்து வந்துட்டீங்க அதுவுமில்லாம ஏதோ முகமே சரியில்லை ஏதாவது பிரச்சினையா விஜய் என்று அவனின் தோளின் மீது ஒரு கையை வைத்து அழுத்தியபடி அன்பாக கேட்டாள்.


நாசுக்காக அவளின் கையை எடுத்து விட்டவன் இப்போ உடம்புக்கு எல்லாம் பரவால்லையா ஹேமா எதும் தொந்தரவு இல்லையே என்று இயல்பாக கேட்க


ரொம்ப நல்லா இருக்கேங்க இன் ஃபேக்ட் அத்தை என்னை உள்ளங்கைல வைச்சி தாங்கறாங்க


ம்ம்...பாத்தாலே தெரியுது...உனக்கு லீவு முடிஞ்சது நியாபகம் இருக்கா..
உடம்பு பரவால்லனா ஆஃபிஸ் வரலாமே…என்று மீனாவை மனதில் வைத்துக்கொண்டு கூறினான் ஹேமா வேலைக்கு வரும் பட்சத்தில் ஹேமாவின் இடம் காலியாகும் அப்பொழுது தனது தாய் தானாக மீனாவை தேடி செல்வார் என்பது அவனின் எண்ண ஓட்டம்

ம்ம்...இல்ல விஜய் நா பேப்பர் போடலாம்னு இருக்கேன் …என்றவளைப் பார்த்து அதிர்ச்சியில்

என்னது பேப்பர் போடப் போறியா கல்யாணத்துக்கு முன்னாடி நீதான ஹேமா சொன்ன கல்யாணத்துக்கு அப்புறம் உன் வேலையை யாருமே தடுக்கக்கூடாதுனு இப்போ இப்படி சொல்லற…

ம்ம்...அப்போ உன் குடுபத்தை பத்தி தெரியாது விஜய்...உன் அம்மா இவ்ளோ ஸ்வீட்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அப்பவே பேப்பர் போட்டிருப்பேன்,

ஆமா நா வேலைக்கு போனா தான் நீ எனக்கு சாப்பாடு போடுவியா என்ன


ஏய் லூசு மாதிரி உளறாதே நீதான் வேலைக்கு போவேன்னு சொன்ன
நான் உன்கிட்ட வேலையை பத்தி எந்த கண்டிஷனும் வைக்கல நீயா தான் கல்யாணத்துக்கு அப்புறம் யாரும் என்னை கண்ட்ரோல் பண்ண கூடாதுன்னு சொன்ன


சரி கிளம்பு உனக்கு ஏதோ ஷாப்பிங் பண்ணனும்னு சொன்னல…
கிளம்பினா போயிட்டு வந்திடலாம்.


சரி இரு என்று அறையை விட்டு வெளியே செல்ல கிளம்பிய ஹேமாவை எங்க ஹேமா போற என்று விஜய் கேட்க


உங்க அம்மாவையும் கிளம்பி சொல்றேன் அவங்களையும் கூட்டிட்டு போகலாம் சந்தோஷப் படுவாங்கல்ல..
கார்ல தான போறோம் என்று கேட்க

பல்லை கடித்து ஒரு நிமிடம் தனது கோபத்தை சமன் செய்தவள் அம்மா வேண்டாம் நான் மீனாவ கிளம்ப சொல்றேன் நீ நான் மீனா முனு பேரும் போயிட்டு வரலாம்


மீனா எதுக்கு அவளுக்கு என்ன தெரியும் மாசமா இருக்கறவங்களுக்கு என்னென்ன வேணுங்கறது ஏதோ பத்து புள்ள பெத்தவளாட்டம் அவளை கூட கூட்டிட்டு போகனும்கற

நொடியில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத விஜய்யோ சற்றென்று ஹேமா இடத்தில் வந்து இன்னொரு முறை இந்த மாதிரி வாய் பேசினேனு வைய்யேன் நான் மனுசனா இருக்க மாட்டேன்


அவளுக்கு இது வரை தெரிஞ்சுக்கலனா என்ன இப்போ

நாம கூட்டிட்டு போய் தெரிய வச்சுட்டா போச்சு என்ன அவ லைப்ல இனி குழந்தையே பிறக்காதா நல்லா கேட்டுக்கோ அவளும் ஒரு நாள் தாயாகத்தான் போறா அப்போ நீ என் அம்மா எல்லாருமே சேர்ந்து அவளை தாங்கதான் போறீங்க அதனால வார்த்தையை விடாத...என்று ஐந்து மாத கருவை சுமக்கும் ஹேமாவைப் பார்த்துக் கூறியவன்


மீனாவை அழைக்க அவளுடைய அறைக்கு செல்ல கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஹேமாவும் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அண்ணி பின்னாடி சுத்தறேனு நானும் பாக்கறேன் என்று இறுகிய முகத்துடன் கிளம்பத் தயாரானாள்.


மீனாவின் அறை வாசலுக்கு வந்த விஜய் மெதுவாக கதவை தட்ட மீனாவிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராததால் மீண்டும் கதவை தட்டியபடி கதவை திறந்தான்


இப்பொழுது மீனா படுத்து கிடந்தாள் கண்களை அங்கும் இங்கும் உருட்டிய படி இருக்க இவன் அருகில் சென்று அவள் தோளில் கை வைத்து தட்ட பயந்து வேகமாக எழுந்து அமர விஜயோ பயப்படாத நான் தான் எதுக்கு இப்படி பயப்படற என்று கேட்க அவளோ பதில் ஏதும் சொல்லாமல் மலங்க மலங்க விழித்தாள்.

நன்றாக தெரிகிறது மீனா கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இப்பொழுது மனச்சிதைவு நோயின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறாள் என்று


செல்வா வந்த பிறகு அவனிடம் மீனாவின் நிலைமையை எடுத்துரைத்து முதலில் நல்ல மருத்துவரிடம் சென்று காட்ட வேண்டும் இப்போதைக்கு அவளின் மனதை இலகுவாக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த விஜய்


மீனா கிளம்பி வெளியே வா ஷாப்பிங் போயிட்டு வரலாம் என்று பாதி சைகையாகவும் பாதி வாய் அசைப்பாலும் அவளுக்கு புரிய வைத்தான்


அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்டவள் நான் எதுக்கு என்று கேட்டாள்

நீ வந்தா ஹேமாக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்னு அவர் ஃபீல் பண்றா என்று மீண்டும் அதே போல் சைகையாலும் வார்த்தைகளாலும் புரியவைக்க


நான் வந்தா ஹேமாவுக்கு பிடிக்குமா என்று மீனா கேட்டாள்


ஏன் பிடிக்காது அவ தான் உன்னை கூட்டிட்டு வரச்சொன்னதே

அப்படியா...இல்ல சில நாளா அவ என்னோட சுத்தமா பேசறதில்ல என்னை பாத்தாலே ஒதுங்கிப் போயிடுவா இன்னைக்கு அவ கூப்பிட்டான்னு சொல்லும்போது நம்ப முடியல


இனி அவ உன்ன பார்த்தா ஒதுங்கி எல்லாம் போக மாட்டா , சரி இப்போ ஷாப்பிங் போகலாம் வா…



இல்ல நா வரல விஜய்… நீங்க ரெண்டு பேரும் போய்டு வாங்க நா வீட்ல இருக்கேன் உன் அண்ணா வர்ற நேரம் நா இல்லனா கோவிச்சிப்பாங்க


அப்படி எல்லாம் இல்ல அண்ணா கிட்ட நான் போன் பண்ணி சொல்லிடறேன் நீ கெளம்பு…


இல்ல விஜய்...அது வந்து... என்று மீனா இழுக்க

அவள் அருகில் அமர்ந்த விஜய் என்ன மீனா ஆப்ட்ர் ஆல் ஒரு ஷாப்பிங் அதுக்கே வர மாட்டேங்குற நாளைக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் எப்படி நீ பாப்பாவ பார்த்துப்ப நீ இருக்கிற தைரியத்துல தான ஹேமாவும் நானும் உடனே குழந்தை பெத்துக்கலாம்னு நினைச்சோம் நீ என்னடான்னா ஒரு ஷாப்பிங் வர்றதுக்கே இவ்ளோ பந்தா பண்ற குழந்தை எப்படி பார்த்துப்ப
இனி குழந்தையை பாத்துக்க வேற நாங்க ஆள் தேடனுமா...அம்மாக்கு வேற வயசாயிடுச்சி...அவங்களால பாத்துக்க முடியாது,சரி நீ இருக்கறீயேனு தைரியமா இருந்தா நீ இப்பவே இவ்ளோ பந்தா என்று போலியாக விஜய் சலித்துக் கொள்ள...


மீனாவோ பதட்டத்துடன் ஐயோ நான் பந்தா எல்லாம் பண்ணல இப்போ என்ன ஷாப்பிங் வரனும் அவ்வளவு தான இப்போவே கிளம்புறேன் ஆமா நிஜமாவே குழந்தை பிறந்ததும் என்கிட்டதான் பார்த்துக்க கொடுப்பியா



ஆமா நீதானே பெரியம்மா அப்போ நீ தான் பாப்பாவை பாத்துகனும் எங்க ரெண்டு பேருக்கும் வேலை இருக்கும் குழந்தை பிறந்ததும் உன் கிட்ட கொடுத்துட்டு நாங்க பாட்டுக்கு ஆபீஸ் கிளம்பிடுவோம்


நீதான் காலையில் எந்திரிச்சு குழந்தையை குளிக்க வைக்கனும் சாப்பாடு கொடுக்கணும் அப்புறம் பெரிய குழந்தையா ஆகும் போது ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகனும் சாயங்காலம் மறுபடியும் வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் பாடம் எல்லாம் சொல்லிக் கொடுக்கனும் புரிஞ்சுதா



நிஜமாவா சொல்ற அப்போ அந்த பாப்பா எனக்கே எனக்கா உங்களுக்கு வேணாமா …


வேணாம் மீனா….உனக்கு வேணும்னா இப்போ நீ எங்களோட கிளம்பனும் சீக்கிரம் வா நா வெளியே வெயிட் பண்ணறேன் என்று கூறியபடி வெளியே வர மீனாவும், விஜய்யும் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த ஹேமா கோபத்தில் விஜய்யை முறைத்த படி வெளியே நின்றுகொண்டிருந்தாள்.


ஹேமாவை பொருட்படுத்தாது சோபாவில் சென்று அமர அவன் அருகில் வந்து அமர்ந்தவள்

எதுக்காக அவகிட்ட தேவையில்லாதது எல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க இப்போ அவ நம்ம கூட வர்றதே பிடிக்கலைனு நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்


நீங்க என்னடானா குழந்தை பிறந்ததும் அவர் கைல கொடுப்பேன்னு பேசிகிட்டு இருக்கீங்க ஏன் இப்படி என்னை டென்ஷன் பண்றீங்க என்று கேட்க


அவன் பொறுமையாக ஹேமாவின் கையை எடுத்து தனது உள்ளங்கைக்குள் புதைத்துக் கொண்டு அவளின் முகம் பார்த்து ப்ளீஸ் ஹேமா அவகிட்ட கொஞ்சம் தன்மையா நடந்துக்க

தயவு செஞ்சு அவகிட்ட உன் வீராப்பை கிட்டாத அவ தாங்க மாட்டா...என்னைக்கோ தெரியாம சொன்ன விஷயத்தை மனசுல வெச்சுக்கிட்டு அவளை கார்னர் பண்ணாத


நீ போட்டி போடற அளவுக்கு எல்லாம் அவ வொர்த்தான பொண்ணு கிடையாது

உன் அளவுக்கு படிக்காதவ ஒரு கஷ்டப்பட்ட வீட்டில் இருந்து வந்தவ இந்த வீட்டுக்காக எத்தனையோ தியாகம் பண்ணியிருக்கறா அவளுக்குனு இதுவரைக்கும் எந்த ஒரு ஆசையும் கிடையாது அவளோட போதாத நேரம் என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்து கஷ்டப்படறா உன் பங்குக்கு நீயும் சேர்ந்து அவளை கஷ்டப் படுத்தாத


அவ பைத்தியம் மாதிரி தனி ரூம்ல உட்கார்ந்து பேசி அழுதுட்டு இருக்கா இதை பாத்ததுக்கு அப்புறம் என்னால எப்படி அவளை அப்படியே விட முடியும் சொல்லு ஒரு வீட்ல இருந்து கிட்டு எல்லாரும் சேர்ந்து ஒருத்தர ஒதுக்கி வைக்கும் போது அது அவளுக்கு எந்த அளவுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும்ங்கறது தெரியாதா
நீ படிச்ச பொண்ணுதானே என்ற விஜய்யை பார்த்து


அப்போ அவ மட்டும் அன்னைக்கு பூஜை ரூம்ல அப்படி சொன்னது சரியா என்று ஹேமா கேட்க


அதை தான் அப்பவே வந்து என்கிட்ட சொன்னியே நானும் என்ன சொன்னேன் ஏதோ குழந்தை இல்லாத ஆதங்கத்தில் ஏதோ உளறி இருப்பா விட்டு தள்ளுனு சொன்னேன்ல அதை இன்னுமா புடிச்சிட்டு தொங்குவ சொல்லு


ஏதோ வீட்டுல மூணு பெண்கள் இருக்கீங்க உங்களுக்குள்ள பேசி ஒற்றுமையா இருப்பீங்கன்னு நினைச்சு தான் நாங்க மூணு பேரும் வெளியே போய்விட்டு வர்றோம்….என்று கூறிக் கொண்டிருக்கும் போதே
ராஜாத்தி விஜய்க்கு காபி கொண்டு வந்து கொடுத்தார்…


தாயின் கையிலிருந்து கோப்பையை வாங்கியவன் ராஜாத்தியை பார்த்து அம்மா நீங்களும் கொஞ்சம் மீனாவை கவனிக்கலாம், நீங்களும் அவளை கண்டுக்காமல் விடறீங்க என்று கூற ராஜாத்தி கோபமாக


உனக்கு வீட்டில என்ன நடந்தாலும் என்ன தாண்டா நீ குறை சொல்லவே மருமக மாசமா இருக்கும்போது அவளை நான் கவனிக்காமல் யாரு கவனிப்பா மீனாவை ஏழு வருஷமா பார்க்கிறோம் அவளால தான் ஒரு குழந்தை பெத்து குடுக்க முடியல,பெத்து குடுக்கற மருமகள கவனிச்சா அவளுக்கு பொறுக்கலையா உன் கிட்ட வந்து என்னை போட்டு குடுத்தாளா என்று மீனாவை தவறாக நினைத்துக்கொண்டு ராஜாத்தி பேச


மீனாவ பத்தி தெரிஞ்சும் இப்படி பேசாதீங்க மா, இந்த ஏழு வருஷத்தில் உங்கள பத்தி என்னைக்காவது என்கிட்டயோ அண்ணன்கிட்டயோ தப்பா ஏதாவது சொல்லி இருக்காளா சொல்லுங்க …

தெரிஞ்சிருந்தா எப்படிம்மா பட்டுனு மீனாவை பத்தி இப்படி பேச முடியுது


ஹேமாவுக்கு தான் மீனாவோட அருமை தெரியல உங்களுக்குமா தெரியல எப்படிமா இப்படி நன்றி இல்லாம இருக்கீங்க

உங்களுக்கு சின்ன மருமக வந்துட்டா
அதுக்காக பெரிய மருமக ஆகாதவளா போய்டுவாளா? ஹேமா மாசாமா இருக்கா நீங்கதான் அவளை பாத்துக்கனும் தப்பில்ல ... அதேசமயம் மீனாவையும் நீங்கதான பார்த்துக்கணும்
இவ மேல காட்டுற அக்கறையையும் பாசத்தையும் கொஞ்சம் அவ மேலேயும் காட்டுங்கம்மா அதுதான் நான் சொல்ல வரேன்


இப்படி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவளை கார்னர் பண்ணினா அவ என்ன செய்வா….


ரூம்ல உக்காந்து தனியா பைத்தியம் மாதிரி பேசிட்டு அழுதுட்டு இருக்கா பாக்கும் போது எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா

இது மட்டும் அண்ணனுக்கு தெரிஞ்சுது என்னைக்குமே உங்களை அவன் மன்னிக்க மாட்டான் அம்மா அது மட்டும் நிச்சயம்... கொஞ்சம் அவளையும் சக மனுஷியா பாருங்க என்று இருவருக்கும் பொதுவாக புத்தி கூறிக் கொண்டிருக்கும் பொழுது ஹேமா அழகாக ஒரு காட்டன் புடவை கட்டியபடி வெளியே வந்தாள்.


மூன்று பேரையும் பொதுவாக பார்த்து நான் கிளம்பிட்டேன் போகலாமா என்று கேட்க ஏனோ அவள் அப்படி கேட்கும் பொழுது ஹேமாவால் அவளிடம் கோபமாக நடந்து கொள்ள முடியவில்லை


இயல்பாக புடவை அழகா இருக்கே கா எப்போ எடுத்தீங்க என்று கேட்டாள்.


மீனாவோ சந்தோஷமாக நல்லா இருக்கா எப்பவோ எடுத்தது ஆனா இன்னைக்கு தான் கட்டிருக்கேன்
உனக்கு பிடிச்சிருக்கா நீ வேணா இத எடுத்துக்கறியா இரு வர்றேன் என்று புடவை மாற்ற உள் சென்றவளை பதறியபடி தடுத்து நிறுத்திய ஹேமா


இல்ல இல்ல எனக்கு வேண்டாம் நான் என்னைக்கு புடவை கட்டிருக்கேன் சுடிதார் இல்லனா ஜீன்ஸ் தான் போடறது


இந்த புடவை உங்களுக்கு அழகா இருக்குனு சொல்ல வந்தேன் வாங்க போகலாம் என்று அவளை முன்னால் அனுப்பி வைக்க பின் வந்த விஜய் ஹேமாவைப் பார்த்து பாத்தியா இதுதான் மீனா கட்டியிருக்கிற புடவைய உனக்காக கழட்டி தரேன்ங்கறா அவளைப் போய் தப்பா புரிஞ்சுகிட்டு…
என்றவன் மீனாவின் பின்னே வேகமாக சென்று காரின் கதவை திறந்து விட அமைதியாக பின் இருக்கையில் அமர்ந்தவள்


அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக விஜய் எப்படியும் உங்க அண்ணா இன்னைக்கு வர லேட்டாகும் மாமாவும் அப்படித்தான் அத்தை மட்டும் தனியாதான் இருப்பாங்கல நம்மளோட கூட்டிட்டு போகலாமே பாவம் அவங்களுக்கும் தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கும்ல என்று கூற



இதை கேட்ட ராஜாத்திவிற்கு முகத்தில் அடித்தது போல் இருந்தது தனது தனிமையை பற்றி யோசிக்கும் மருமகளைப் பற்றி இதுவரை தான் யோசித்தது கூட இல்லை நினைக்க கண் கலங்க ஆரம்பித்தது


காரை விட்டு இறங்கிய மீனாவும் அத்தை உங்க சாரி கூட நல்லாத்தான் இருக்கு நீங்க எதுக்கு தனியா வீட்ல இருக்கீங்க வாங்க எல்லாருமே சேர்ந்து போயிட்டு வரலாம் என்று வம்படியாக ராஜாத்தியையும் உடன் அழைத்துச் சென்றாள்.


ஹேமா அவளின் வீட்டில் ஒரே பெண் என்பதால் எப்பொழுதுமே எல்லா இடத்திலும் தனியாக சென்று வருவது தான் வழக்கம் இன்று அவளுடைய ஷாப்பிங் புதுவிதமான அனுபவமாக தான் இருந்தது இதுவும் அவளுக்கு பிடித்திருந்தது


முதலில் மீனா மாமியார் கூட வருவது அவளுக்கு ஒரு மாதிரியான சங்கடத்தை கொடுத்திருந்தாலும் கூட ஷாப்பிங் மாலில் இவளுக்காக அவர்கள் இருவரும் பார்த்து, பார்த்து வாங்கியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது இனிதான் எங்கேயுமே தனியாக செல்லக்கூடாது எங்கு சென்றாலும் குடும்பத்தினரை உடன் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாள்.


வீடு வந்ததும் முதல் வேலையாக விஜய் அவனது அண்ணனை தனியாக அழைத்து சில விஷயங்களை அவனுக்கு புரிய வைத்தான்


நான் உனக்கு புத்தி சொல்ற நிலைமையில நீங்க கிடையாது நீங்க என்ன விட பல வருடம் வயசுல பெரியவங்க


ஆனா நீங்க நடந்துக்கறது அதுபோல இல்லை மீனாவை ஏன் இவ்வளவு கஷ்டப் படுத்தறீங்க அவளை அப்பப்போ எங்காவது கூட்டிட்டு போங்க

உங்களுக்கு குழந்தை இல்லை அப்படிங்கற வருத்தம் உங்களுக்கு மட்டும் தான்னு நீங்க நினைக்கறீங்க

அது தப்பு நீங்க எந்த அளவு வருத்தபடறீங்களோ அதைவிட பல மடங்கு மீனா வருத்தப்பட்டுட்டு இருக்கா



அதும் ஹேமா தாய்மை அடைந்ததை அவளால ஏற்றுக்கொள்ளவே முடியல அதை எப்படி வெளிகாட்டறதுனு தெரியாமல் தனி அறையில் தனிமையில் பேசி அழுது கிட்டிருக்கா அவ கொஞ்சம் கொஞ்சமா பைத்தியமாயிட்டிருக்கா

அவ இப்படி ஆனதுக்கு காரணம் ஒரு பங்குதான் சுத்தி இருக்கிறவங்க காரணம் மீதி நீங்க மட்டும் தான் காரணம்... அவளுக்குப் புரிய வைங்க குழந்தை மட்டும் வாழ்க்கை இல்லை நீங்களும் அவ்வளவு சேர்ந்திருக்கிற தான் வாழ்க்கை என்கிற விஷயத்தை


அவளை அப்பப்போ எங்காவது கூட்டிட்டு போங்க.. அவளோட தனிமையை போக்குங்க அவ உங்க வாழ்க்கையோட பொக்கிஷம் அவளை தவற விட்டுடாதீங்க... இதுக்கு மேல ஒரு தம்பியா உன்கிட்ட என்னால வேற எதையும் பேச முடியாது உங்களோட மனைவி உங்களோட வாழ்க்கை முடிவெடுக்க வேண்டியது நீங்கதான் என்று கூறியவன் சென்றுவிட்டான்.


அதன்பிறகுதான் செல்வாவும் யோசிக்க ஆரம்பிக்கிறான் குழந்தை இல்லை என்று தான் கவலைப்பட்டு ஆபிஸிலேயே அடைந்து கிடக்கிறேன் ஆனால் இங்கு மனைவி அவளுக்கும் அதே கவலை இருக்கும் அல்லவா


அவளுக்காக நான் என்ன செய்தேன் அதிலிருந்து அவளை வெளியே கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்கவில்லை


இருவருக்கும் எந்த குறையும் இல்லை இது இறைவன் செய்த சதி இதற்கு இவளை தனிமைபடுத்துவதில் என்ன கிடைக்கிறது என்று யோசித்தவன் அன்றே முடிவெடுத்தான்


வாரம் ஒருமுறை மீனாவை எங்காவது அழைத்துச் சென்றான் உனக்கு நானும் எனக்கு நீயும் குழந்தைகள் நமக்கு எதற்காக ஒரு குழந்தை எனும் எண்ணத்தை அவள் அடிமனதில் வரை பதிய வைத்தான்


இப்பொழுது சரியான நேரத்திற்கு வேலை முடித்து வீட்டுக்கு வருகிறான் வந்தவள் தனது மனைவியுடன் நேரத்தை செலவு செய்கிறான் அவளுடன் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கிறான்

இதனால் மீனாவின் மன அழுத்தம் காணாமல் போய் மெல்ல மெல்ல இயல்பு எட்டிப் பார்க்க ஆரம்பிக்கிறது



விஜய்யின் அறிவுறைக்கு பின் வந்த நாட்களில் ஹேமாவும் அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள் விஜய் தான் அவளை வற்புறுத்தி வேலைக்கு உடன் அழைத்து சென்றான்.


அவனுக்கு ஹேமா வேலைக்குச் செல்வது எல்லாம் உடன்பாடு கிடையாது ஆனால் இங்கு மீனாவின் சந்தோஷமும் மிகவும் முக்கியம்

ஹேமா மிகவும் புத்திசாலியான பெண் அவள் தனிமையில் வளர்ந்ததால் அவள் தனியாகவே இருந்தாலும் கூட தனிமை என்ற எண்ணம் அவளுக்கு தோன்றாது


ஆனால் மீனா அப்படி இல்லை பிறந்த வீட்டிலும் வீடு நிறைய ஆட்களுடன் இருந்தவள் இங்கு வந்த பொழுதிலும் தங்களுடன் இருந்தவள் அதனால் அவளுக்கு தனிமை என்பது சாபமாக இருக்கும்


ஹேமா ஆஃபிஸ் வரும் பட்சத்தில் தனது தாய் மீண்டும் மீனாவுடன் நெருக்கம் காட்டுவார் என்று நினைத்தான்

மீனாவிற்கு ஏழாவது மாதம் வளைகாப்பு செய்து அவளின் தாய் வீட்டிற்கு அனுப்பினர்


ஹேமா சென்றதும் மீனா ராஜாத்தி இருவருக்குமே ஒரு கை உடைந்தது போல் இருந்தது


என்னதான் ஹேமா வேலைக்கு சென்றாலும் திரும்பி வந்தவுடன் மூவரும் ஒன்று சேர்ந்து டிவியில் ஏதாவது ஒரு சீரியல் பார்த்து அந்த சீரியல் கேரக்டராகவே மாறி அழுது கொண்டும் திட்டிக் கொண்டும் இருப்பார்கள்

இப்பொழுது ஒரு கை குறையவும் இருவருமே மிகவும் சோர்வாக உணர்ந்தனர்.


ஹேமாவிடம் தினமும் ராஜாத்திக்கு மீனாவுக்கும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் அன்பால் ஹேமாவால் வளைகாப்பு முடிந்து பத்து நாட்கள் கூட முழுதாக அவளின் தாய் வீட்டில் இருக்க முடியவில்லை தனது தாயிடம் கூறிக் கொண்டு நேராக விஜயின் வீட்டுக்கு வந்துவிட்டாள்


இப்பொழுது அவளுக்கு நிறைமாதம்,மீனா, ராஜாத்தி,ஹேமா ஆகிய மூவருமே இப்பொழுது மனதளவில் மிகவும் நெருங்கி விட்டனர்

ஒருவருக்கு ஒன்று என்றால் மற்றொருவரால் தாங்கிக்கொள்ள முடியாது அந்த அளவுக்கு மூவருக்குள்ளும் ஒரு பாசப் பிணைப்பு இருக்கிறது


மீனா ஒரு படி மேலே சென்று ஹேமாவின் வயிற்றில் இருக்கும் குழந்தையை கருவிலே தாங்கிக் கொள்வது போல நித்தம் நித்தம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்


அந்த பிள்ளை செல்வம் வெளியே வரும் நாளுக்காக எல்லோரும் எதிர்பார்த்தபடி இருக்க ஒரு நல்ல நாளில் அதிகாலை வேளையில் ஹேமா ஒரு அழகிய ஆண் குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுக்க வீடு திருவிழாக் கோலம் பூண்டது.

அதன் பிறகு தாயையும் சேயையும் வீட்டிற்கு அழைத்து வந்தவர்கள் குழந்தைக்கு சரண் என அழகாக பெயர் சூட்டுகின்றனர்.


இங்கு குழந்தை பிறந்த நாள் முதலே மீனா அந்த குழந்தைக்கு அடைக்கலம் கொடுக்க தொடங்கி விட்டாள்

தாய்பால் கொடுப்பதற்காக மட்டுமே ஹேமாவிடம் எடுத்துச் செல்வது அவள் பாலூட்டும் வரை பொறுமையாக வாசல் அருகிலேயே நின்று அதன் பின் கையோடு வாங்கி செல்வது ஆரம்பத்தில் ஹேமாவிற்கு இது பெரியதாக தெரியவில்லை
நாளாக நாளாக மீனாவின் இச்செயல் அவளுக்கும் சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது.


ராஜாத்தியும் நாசுக்காக சொல்லி பார்க்கிறாள் மீனாவிடம் இது தவறு இப்படி பண்ணாதே தாயையும் சேயையும் பிரிப்பது போல் நீ நடந்து கொள்கியாய் என்று ஆனால் மீனாவிற்கு புரியவே இல்லை


இப்படியாக குழந்தைக்கு ஆறு மாதம் முடியும் தருவாயில் மீனாவும் ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு என்னென்ன இணை ஆகாரங்கள் கொடுக்க வேண்டும் என்பதை பக்காவாக இணையத்தில் தேடி சேகரித்து வைத்துக் கொண்டு ஹேமாவின் குழந்தையை அவளிடமே வைத்துக் கொள்கிறாள்


ஆசைக்கு கூட கொஞ்ச ஹேமா விடம் தருவதில்லை இது ஹேமாவின் தாய் தந்தைக்கு சுத்தமாக பிடிப்பதில்லை ஹேமாவிடம் அவ்வப்போது இதை இப்படியே விடாதே நீ குழந்தையை முற்றிலும் இழந்து விடுவாய் என்று.


விஜய்யோ ஆரம்பத்திலேயே குழந்தை பிறந்தால் மீனாவிடம் கொடுக்கவேண்டும் என்று எண்ணியதால் குழந்தையிடம் பெரியதாக அவனுக்கு ஈர்ப்பு இல்லை

ஆனால் ஹேமாவின் நிலையோ வேறு என்ன இருந்தாலும் அவள் பெற்றவள் இல்லையா அவளுக்கும் அந்த குழந்தையின் மீது முழு உரிமை இருக்கிறது அல்லவா இங்கு மீனா செய்யும் அட்டகாசம் ஹேமாவிற்கு மீனாவின் மீது ஒரு வெறுப்பை உண்டு பண்ணுகிறது இதை விஜயிடம் கூறி சண்டையிட விஜய் அவளை சமாதானப்படுத்தி அவளை அலுவலகம் அழைத்துச் செல்கிறான் அலுவலகம் வரும் பொழுது அவளுக்கு குழந்தை பற்றிய எண்ணங்கள் குறைவதால் தற்காலிகமாக இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி. வைக்கப்படுகிறது.


மீனா குழந்தையை தன் குழந்தையாகவே என்ன தொடங்கிவிட்டாள் செல்வாவும் அப்படித்தான்


செல்வா இப்பொழுது சீக்கிரமாக வேலையை முடித்து வந்து விடுகிறான் வந்ததுமே குழந்தையுடன் விளையாட ஆரம்பித்து விடுவான் குழந்தைக்கு ஒன்று என்றால் அன்று கண்டிப்பாக செல்வா விடுமுறை எடுத்துக் கொள்வான்


குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது தடுப்பூசி போடுவது இப்படி எல்லாம் பார்த்து செய்ய ஆரம்பித்தான் செல்வா.

விதவிதமான ஆடைகளையும் குழந்தைக்கு தேவைப்பட்ட பொருட்களையும் வாங்கிக் குவிக்கின்றனர் அவர்களின் சேமிப்பு பணத்தில் இருந்து குழந்தை இல்லை என்ற எண்ணம் சரணின் மூலம் இருவருக்குமே தீர்கிறது



சரணும் முதல் முதலாக செல்வாவை தான் அப்பா என்று மழலை மொழியில் அழைக்கிறான் மீனாவை அம்மா என்றும் அழைக்கிறான்

இதை கவனிக்கும் ஹேமா விஜய்யிடம் பயங்கரமாக சண்டை இடத்தொடங்கினாள் தான் பெற்ற குழந்தையை தன்னிடம் கூட கொடுப்பதில்லை அவர்களே வைத்துக் கொள்கிறார்கள் சாயங்காலம் ஆபீஸ் முடிந்து வருவதற்கு முன்பாகவே குழந்தைக்கு சாதம் ஊட்டி தூங்க வைத்து விடுகிறாள் மீனா.


ஹேமாவின் பேச்சைப் பொறுக்க முடியாத விஜய் குழந்தையை வாங்க செல்லலாம் என்று அண்ணனின் படுக்கையறைக்கு சென்றால் அங்கோ மீனாவிற்கும் செல்வாவிற்கு நடுவில் சரணை உறங்க வைத்தபடி இருவரும் நன்கு உறங்கிக் கொண்டிருக்கின்றனர் இதைப் பார்க்கும் பொழுது விஜய்க்கு அவர்களின் சந்தோசத்தை கெடுக்க விரும்பாமல் திரும்பி விடுகிறான்.


இப்படியாக நாட்கள் செல்ல சரணின் முதல் வருட பிறந்தநாள் கொண்டாட்டம் வருகிறது ஊரில் இருந்து அனைவரையும் அழைத்து பார்ட்டி கொண்டாடப்பட

சரணோ ஹேமாவிடம் செல்லாமல் அழுது அடம்பிடித்து மீனாவிடமே இருக்கிறான் மீனாவிற்கும் செல்வாவிற்கு பெருமை தாங்கவில்லை ஆனால் ஹேமாவிற்கு அழுகை பொங்கிக் கொண்டு வருகிறது


விஜய்யை முறைத்தவள் ஒழுங்காக குழந்தை என் கிட்ட வாங்கி கொடு என்று அனைவரின் முன்பும் அவனிடம் கடிந்து கொள்கிறாள்


அவனோ மீனாவிடம் சென்று பிறந்தநாள் கொண்டாட்டம் முடியும் வரை குழந்தையை ஹேமாவிடம் கொடு என்று கூற


மீனாவோ இல்ல இல்ல நானே குழந்தையை கையில் வைத்திருக்கேன் நீங்க பார்ட்டி பண்ணுங்க என்று கூற வேறு வழியில்லாமல் மீனாவில் கையில் குழந்தையை வைத்தபடி விஜய் குழந்தையின் கைகளை பிடித்து கேக் கட் செய்ய ஹேமாவிற்கு கோபம் பற்றிக்கொண்டு வருகிறது


ஹேமாவின் தாயோ ஹேமாவை தனிமையில் அழைத்து அவளுக்கு புத்தி கூறுகிறார் இப்படியே விட்டுவிட்டு இருந்தால் கடைசியில் உனக்கு குழந்தை ஒன்று இருப்பதே மறந்துவிட வேண்டும் என்று…


குழந்தை எப்படியோ உறவினர் ஒருவரின் கைக்கு செல்ல திடீரென சரண் தாயை தேடி அழுகிறான்



உறவினர் ஹேமாவை அழைக்க குழந்தையின் அழுகை சத்தத்தில் ஹேமா பதறியபடி குழந்தையின் அருகே செல்லும்பொழுது ஹேமாவின் கையை தட்டிவிட்டு குழந்தை செல்வத்தையும் மீனாவையும் பார்த்து அழுகிறது அம்மா அம்மா என்று


அனைவருமே இப்பொழுது இது யாருடைய குழந்தை ஹேமாவுடையதா இல்லை என்றால் மீனா உடையதா என்று கேலி செய்ய மற்றொரு உறவினரோ ஹேமாவிடம் குழந்தையைப் பெற்று விட்டால் மட்டும் பத்தாது வேலை வேலைனு சுத்திக்கிட்டு இருந்தா இப்படித்தான் அடுத்தவங்கள பார்த்து அம்மானு கூப்பிடும் கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வச்சுட்டு குழந்தை மேலேயும் பாசத்தை காண்பி என்று ஹேமாவின் மீது பழியைப் போட உறவினர்களின் பேச்சை கேட்டு அதிர்ச்சியில் அங்கேயே நிற்கிறாள்

இது எதையும் கண்டுகொள்ளாத மீனா குழந்தையை கையில் வாங்கியவள் கூட்டம் இருக்கிறதால் குழந்தைக்கு கசகசனு இருக்கு அதனாலதான் அழறான் இருங்க அவனை குளிக்க வைத்து துணி மாற்றி கொண்டு வரேன் என்று கூறியவள் தனது கணவரை அழைத்துக்கொண்டு அவளுடைய அறைக்குள் செல்ல


மற்றொரு உறவினரோ பிள்ளை பெறாத மீனாவுக்கு புரியுது குழந்தை கூட்டத்துக்குள்ள இருக்கறதால அழறான்னு ஆனா பெற்ற தாயான ஹேமாவுக்கு புரியல அப்புறம் எப்படி குழந்தை அவ கிட்ட வரும் குழந்தையை பெற்றால் மட்டுமா போதுமா, அதை முறையா வளர்க்க தெரிய வேணாம்….


குழந்தை அருமை தெரியாதவர்களுக்கு ஆண்டவன் குழந்தையை கொடுக்கிறான் ஆனால் குழந்தை அருமை தெரிஞ்சவங்களுக்கு இன்னும் குழந்தையை கொடுக்கல என்ன கடவுளோ என்று காதுபடவே கூற யாரிடமும் தன் நிலையை கூற முடியாத தன்னிலையை எண்ணி கண்களில் கண்ணீருடன் அங்கேயே நிற்கிறாள் ஹேமா…

அந்த கண்ணீருடனே ஒரு முடிவையும் எடுக்கிறாள் இந்த விஷயத்தை இனி இப்படியே வளர விடக்கூடாது இந்த விழா சிறப்பாக முடிந்ததும் இங்கு நடந்த கூத்துக்கும் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணிக்கொண்டாள் ஹேமா .


தொடரும்....
 
Top