Kanchana G. Kannan
New member
அரவிந்தனுக்கு அழகிய காந்தக்கண்கள். அவன் பேசும்போதே கண்களும் பேசும்.. சிரித்தால் கண்களும் சிரிக்கும்.. அதுவும் காவ்யாவை எதாவது சீண்ட வேண்டுமென்றால் அந்த குறும்புப்பார்வையை குத்தகைக்கு எடுத்துவிடுவான்.. அந்த கண்களின் பார்வையிலேயே என் காலம் முழுக்க கிடக்க வேண்டும்.. அந்த வரத்தை எனக்கு தருவீர்களா அத்தான் என்று அவனை அணைப்பதாக நினைத்து அவளது போனை அணைத்துக்கொண்டாள் காவ்யா.
சட்டென்று வாசலில் கார் ஹார்ன் சத்தம் கேட்கவும் இதயம் வேகமாக துடிக்க, துள்ளியெழுந்து அவளது அறையின் ஜன்னலோரம் நின்று வாசலை எட்டி பார்த்தாள்.
முகமெல்லாம் சிரிப்பாக வசந்தா முதலில் இறங்க சுகுமாரன் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கினார். மொத்த குடும்பமும் வாசலில் வந்து நிற்க சிவகாமியும் அருணாவும் ஆரத்தி தட்டுடன் தயாராக நின்றனர்.
ஆறடி உயரத்தில் அமெரிக்கா தட்பவெப்பம் கூட்டிய மெருகுடன் வசீகர சிரிப்புடன் காரின் பின் சீட்டிலிருந்து இறங்கினான் அரவிந்த். கோவிலுக்கு செல்வதால் மெல்லிய மஞ்சள் நிறத்தில் காட்டன் ஷர்ட்டும் வெளிர் சாம்பல் நிற ஜீன்சும் அணிந்திருந்தான். கையில் அணிந்திருந்த பிளாட்டினம் காப்பு அவனுக்கு இன்னும் அழகூட்ட நெற்றியில் கற்றையாய் விழுந்த முடியை கைகளால் கோதிவிட்டுக்கொண்டே "பாட்டீ.." என்று அமிர்தம் அம்மாளை அலேக்காய் தூக்கியவன் மெதுவாய் இறக்கிவிட்டு தாத்தா பாட்டியின் கால்களை தொட்டு வணங்கினான்.
"எப்படி இருக்கீங்க ரெண்டு பெரும் " என்றவனை பாட்டி " வாடா என் ராஜா.. பார்த்து எத்தனை நாளாச்சு என் கண்ணு" என்று கண் கலங்கினாள்.
"அதான் வந்துட்டனே பாட்டி டோன்ட் ஒர்ரி " என்றபடி சிரிக்க அதற்குள் ஆரத்தி எடுக்க வந்த அத்தைகளை "அத்தை எதுக்கு இதெல்லாம்?" என்று வெட்கப்பட்டான்.
"இருக்கட்டும் பா.. ஊரு கண்ணு உறவு கண்ணு எல்லாம் ஒன் மேலதான். திருஷ்டி சுத்தி போட்டாதான் எங்களுக்கு நிம்மதி " என்றாள் சிவகாமி.
"வாப்பா அரவிந்த்" என்று மாமாக்கள் இருவரும் அவனை அணைத்துக்கொள்ள " எப்படி இருக்கீங்க மாமா?" என்றவன் ஓடிவந்த கட்டிக்கொண்ட பிரவீனை "ஹே ப்ரவீண் நல்லா வளர்ந்துட்டடா" என்றான்.
ஓரமாய் நின்று "வாங்க அத்தான்" என்ற மித்ராவை "ஹே மித்ரா!! என்னது இது புதுசா வெட்கம் எல்லாம் ? அதெல்லாம் உனக்கு செட்டே ஆகல " என்று பெரிதாய் சிரித்தான். பேச்சும் சிரிப்புமாக அனைவரும் உள்ளே செல்ல எத்தனிக்க அரவிந்தனின் பார்வை காவ்யாவை தேடியது.
தன் அறையிலிருந்து அவனை ரசித்தவள் அவன் கண்கள் தன்னை தேடுவதை பார்த்ததும் காதல் மிகுதியில் கண்களில் கண்ணீர் பெருக தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள். தான் நினைத்து பயந்த மாதிரி இல்லை.. என்னை போலத்தான் அத்தானும்..சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் என்மீதுள்ள காதலும் பாசமும் கொஞ்சமும் குறையவில்லை. இந்த நினைப்பே அவளுக்கு புது தெம்பைத் தர, மாடியிலிருந்து வேகமாக கீழிறங்கி வந்தாள்.
பேசிக்கொண்டே அனைவரும் முற்றத்தில் இருந்த பெரிய சோபாக்களில் உட்கார அருணா வந்த அனைவருக்கும் குடிக்க கொடுக்க வேகமாக சமையலறைக்கு வந்தாள். அதற்குள் சமைலயல்கார லட்சுமி அம்மா தயாராக வைத்திருந்த காபி டிரேயை எடுத்துக்கொண்ட காவ்யா "நான் கொண்டு வரேன் சித்தி.." என்றபடியே முற்றத்திற்கு எடுத்துவந்தாள்.
"வாங்க மாமா!! வாங்க அத்தை!! ஹாய்..அத்தான்..!! காபி எடுத்துக்கோங்க " என்றபடியே அனைவருக்கும் கொடுத்தாள்.
"காவ்யா எப்படி இருக்க.. ஸ்டடிஸ் எப்படி போகுது " என்று கேட்ட அரவிந்தனை
பார்த்து சிரித்தபடி "கிளாசஸ் எல்லாம் முடிஞ்சது அத்தான். வைவா மட்டும் தான் இருக்கு" என்று மற்றவர்களுக்காக ஒப்புக்கு எதோ பதில் சொன்னாலும் தன் மொத்த காதலையும் கண்ணில் வைத்து அவனைப்பார்த்தது அவனுக்கு மட்டுமே புரிந்தது.
அரைமணி நேரம் ஏதேதோ அனைவரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்க காவ்யா சித்தியின் பின்னே நின்றுகொண்டு தன்னயே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்த அரவிந்தன் ஒப்புக்கு சிரித்து பேசினாலும் உள்ளுக்குள் நொறுங்கிக்கொண்டிருந்தான்.
சிவகாமி மெதுவாய் ஆரம்பித்தாள். " சரி.. இப்பவே மணி ஒன்பது ஆய்டிச்சி.. டிபன் எல்லாம் ரெடியா இருக்கு.. வாங்க சாப்பிடலாம்.. வா அரவிந்த்! இன்னைக்கு எல்லாமே உனக்கு பிடிச்ச ஐட்டங்கள் தான்.. ஆப்பமும் தேங்காப்பாலும் கூட பண்ணிருக்கேன் "
"அண்ணி.. உங்க மருமகன் வந்துட்டா போதுமே.. உங்கள புடிக்க முடியாதே " என்றபடியே வசந்தா பெருமை பொங்க சொல்ல அனைவரும் டைனிங் ஹாலை நோக்கி சென்றனர்.
அமிர்தம் அம்மாள் மனநிறைவுடன் கணவரிடம் சொல்லிக்கொண்டார்,
"என்னங்க, சீக்கிரமா ஒரு நல்லா நாளா பார்த்து புள்ளைங்களுக்கு நிச்சயம் மட்டும் பண்ணிடுவோம்.. கல்யாணம் மெதுவாக்கூட வச்சிக்கலாம்.. என் உடல்நிலை பத்திதான் உங்களுக்கு தெரியுமே.. என் கண்ணை மூடுறதுக்குள்ள என் பேரப்பிள்ளைங்கள மணக்கோலத்தில பாக்கணும்ங்க" என்றாள்.
"அட யாருடி இவ.. வீடே சந்தோசமா இருக்கிறப்போ சங்கடமா பேசிகிட்டு.. அதெல்லாம் நீயும் நானும் ப்ரவீண் கல்யாணம் வரைக்கும் இருந்து வாழ்த்திட்டுதான் போவோம்.. கவலைய விட்டு புள்ளைங்களோட சந்தோசமா இருப்பியா. இப்போ வா சாப்பிடலாம்." என்று மனைவியை அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றார்.
பெரிய டேபிளில் அனைவரும் சுற்றி உட்கார சிவகாமியும் அருணாவும் அனைவருக்கும் பறிமாறினர். காவ்யாவும் அம்மாவுடன் சேர்ந்து பரிமாற வசந்தா பெருமை பொங்க சொன்னாள்.
"என் மருமகளை பார்த்தீங்களா.. எவ்ளோ பொறுப்பா இருக்கா.. இப்பவே பெரிய மனுஷியாட்டம் பரிமாற ஆரம்பிச்சிட்டா" என்றாள்.
அமிர்தம் அம்மாள் "என்ன வசு அப்படி சொல்லிட்டே.. பரிமாறது மட்டும் இல்ல. நேத்துலேருந்து அத்தானுக்கு அது பிடிக்கும் அத்தானுக்கு இது பிடிக்கும்னு லிஸ்ட் போட்டதே அவதான்.. அவ சொன்ன லிஸ்ட் தான் இன்னைக்கு செஞ்சிருக்கு" என்று ரகசியங்களை எடுத்து விட்டாள்.
"ஐயோ பாட்டி சும்மா இரு" என்றவள் வெட்கம் தாங்காமல் கிச்சனுக்குள் ஓடினாள்.
அரவிந்தன் தனது இலையில் வைக்கப்பட்ட ஏகப்பட்ட பதார்த்தங்களை அதுவும் அத்தனை காதலோடு அவள் திட்டமிட்ட பதார்த்தங்களை வேறொரு சமயமாக இருந்தால் ஒரு பிடி பிடித்திருப்பான். ஆனால் இன்று அத்தனையும் அவனுக்கு வேம்பாய் கசந்தது.
"அடி காதல் ராட்சசியே.. இப்படியுமா என்னை நேசிப்பாய்.. உன் காதலுக்கும் பாசத்திற்கும் நான் சரியானவன் இல்லை என்று தெரிந்தால் நீ எப்படி தாங்குவாய்?”.